22.3.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் : நெல்லைத்தமிழன்

 

சோழ அரசர்களுக்கு பல இடங்களில் அரண்மனைகள் இருந்தன. காஞ்சி பொன் மாளிகை துஞ்சிய தேவர் என்று ராஜராஜ சோழனின் தந்தை சுந்தரச் சோழனைச் சொல்லுவதால், காஞ்சீபுரத்தில் சோழ அரண்மனை இருந்தது என்பது தெரியும். அதுபோல தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ராஜராஜ சோழன் ஆண்டபோது அங்கும் ஒரு அரண்மனை இருந்தது. பழையாறை அப்போது மிகப் பெரிய இடம் (இப்போது பல்வேறு சிறிய சிறிய ஊர்களாகச் சிதைந்து போயிருக்கிறது அந்தச் சோழர்களின் தலைநகரம்). அங்கு பெரிய அரண்மனை இருந்தது. அதனைச் சுற்றி பல்வேறு படைப்பிரிவினரின் குடியிருப்புகளும் இருந்தன. பழையாறையில் நான்கு பெரிய சிவன் கோயில்கள் அமைந்திருந்தன. சாளுக்கியச் சோழர்கள் மற்றும் அதற்கு முந்தைய சோழ அரசர்களைப் பற்றிப் படிக்கும்போது அவர்கள் நந்திபுர விண்ணகரத்தில் இருந்த அரண்மனையில் சில முடிவுகள் எடுத்தார்கள் என்று படித்தேன்.

பழையாறையில் அமைந்திருந்த அரண்மனை முற்றிலும் பாண்டியனால் அழிக்கப்பட்டு, தற்போது மாளிகை மேடு எனப்படும் இடமாக  வயல்களின் நடுவே காணப்படுகிறது. பழையாறை நகரும், பட்டீச்வரம், திருச்சத்திமுற்றம் (நாராய் நாராய் செங்கால் நாராய் பாடல் நினைவுக்கு வருகிறதா), ஆரியப் படையூர், புதுப் படையூர், பம்பைப் படையூர், மணப்படையூர், தாராசுரம் என்று இன்னும் பல சிற்றூர்களாகப் பிரிந்துகிடக்கிறதுபழையாறைக்குத் தெற்கில் முடிகொண்டான் ஆறும், வடக்கில் திருமலைராயன் ஆறும் ஓடுகிறது. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால், அதன் கரையில் அமைந்த நகரம் பழையாறை எனப் பெயர் பெற்றது.

பழையாறைப் பகுதியில் வரும் நாதன் கோயில் எனப்படும்  நந்திபுரம் பல்லவர் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற இடம். அங்கு ஒரு வைணவக் கோயில் உள்ளது. அதைப் பற்றிக் குறிப்பிட இந்த இடம் சரியானது என்று தோன்றுகிறது.

ராஜேந்திரச் சோழனைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக, பல்லவ குலத்தின் ஒரு அரசனைப் பற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது.

 

நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) ஸ்ரீ ஜெகன்னாதப் பெருமாள் (21ம் திவ்யதேசம்). 

கோவில் ராஜகோபுரத்தின் அடிப்பாகத்தில் இருக்கும் சோழ மன்னர் சுந்தரச் சோழர், அநிருத்த பிரம்மராயரின் சிற்பங்கள். 

இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்டது. ஊரும் நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. அவனுக்கும் (இரு தேவியரோடு), குந்தவை நாச்சியாருக்கும் கோயிலில் சிலை உள்ளது.

குந்தவை நாச்சியார், ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கியிருக்கலாம். ஆனால் யார் இந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன்? அவனுடைய மனைவி கம்போடியாவைச் சேர்ந்த காம்போஜ வல்லியா? யார் ரேவா தேவி?

இவர் நந்திவர்ம பல்லவனாக இருக்கலாம் (காஞ்சி பரமேச்வர விண்ணகரத்தில் உள்ள சிற்பம்)

சிம்ம விஷ்ணு பல்லவனின் மகன் மகேந்திரவர்மன். அவனுடைய மகன் நரசிம்மவர்ம பல்லவன். இந்த இருவரையும் பற்றி, கல்கியின் புண்ணியத்தினால் நாம் அறிவோம்  (சிவகாமியின் சபதம், ஆயனர், நாகநந்தி). மாமல்லன் (நரசிம்மவர்ம பல்லவன்) சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் மற்றும் அதற்குப் பிறகு வந்த பரமேஸ்வர வர்மன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஓரிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். அதற்குப் பின், இரண்டாவது நரசிம்மவர்மன் (ராஜசிம்மன் என்று அழைப்பர்) சுமார் 35 ஆண்டுகளும், அதற்குப் பிறகு இரண்டாம் பரமேஸ்வர வர்மன், ஆறு ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். 731ம் ஆண்டில், வாரிசு இல்லாத இரண்டாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் இறக்கவும், பல்லவ தேசத்திற்குத் தகுந்த அரசன் வேண்டுமே என்று அமைச்சர்களும் தண்டநாயகர்களும், உறவின் வழியிலாவது ஏதேனும் வாரிசு இருக்கிறதா என்று தேட, அவர்கள் போய்ச்சேர்ந்த இடம் காம்போஜம் என்று சொல்லப்படும் இன்றைய கம்போடியா மற்றும் வியட்நாம். கல்கி புகழ் (ஹாஹா) மகேந்திரவர்மனுடைய தந்தையார் சிம்மவிஷ்ணு சுமார் 35 ஆண்டுகாலம் பல்லவ சாம்ராஜ்யத்தின் அதிபதியாக ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் அமர்ந்ததால், அவருடைய தம்பி பீமவர்மன், வேறு தேசத்தை நோக்கிச் சென்று, பிறகு அவன் வழிவந்த ஹரிவர்மா காம்போஜத்தை ஆண்டுகொண்டிருந்தான். அமைச்சர்கள், பல்லவ அரசுக்கு அரசனாக அவனுடைய மகனை அனுப்பித்தரவேண்டும் என்று கேட்க, மற்ற மூவரும் முன்வராதபோது, கடைசி இளவரசன் முன்வந்தான். 12 வயதான அந்தப் பாலகனையே இரண்டாம் நந்திவர்ம பல்லவனாக முடிசூட்டினர்சிறு வயதில் பட்டமேற்றுக்கொண்டதால்தான், 731லிருந்து 796வரை, சுமார் 65 ஆண்டுகள் அரசனாக இருந்தான் (அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். 77 வயது வரை உயிர் வாழ்ந்திருப்பான். இவனுடைய மகன் தந்திவர்மன் 777லிருந்து சுமார் 50 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அல்லது அரியணை ஏறுவதற்கு முன்பு 15 வருடங்கள் இளவரசனாக இருந்திருப்பான்)

இந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவன், காஞ்சி கைலாச நாதர் கோயிலையும், நந்திபுர விண்ணகரத்தையும் கட்டினான் என்று கொள்ளலாம். திருமங்கையாழ்வார், இவனுடைய மற்றும் இவனுடைய மகன் தந்திவர்மன் காலத்தவர். அதனால்தான் தன்னுடைய திவ்யப்பிரபந்த பாசுரங்களில் இந்த இருவரையும் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளார். (அதுக்கெல்லாம் போனோம்னா, ராஜேந்திர சோழன் சப்ஜெக்டுக்கு வருவதற்கே ஒரு சில வாரங்கள் ஆகிவிடும். இருந்தாலும் ஒரு பாசுரமாவது குறிப்பிடாவிட்டால் தவறாகிவிடும்)

 காம்போஜத்தை தன்னுடைய பிறந்த நாடாகக் கொண்டிருந்ததால், இவனுடைய மனைவியரில் ஒருவர் காம்போஜத்தைச் சேர்ந்தவர்.

எதனால் திருமங்கையாழ்வாரை, 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்கின்றனர்? இவர் தனது பெரிய திருமொழி பாசுரங்களில், பரமேச்வர விண்ணகரத்தைப் பற்றிப் பாடியுள்ளார்இதுபோல நந்திபுர விண்ணகரத்தையும் பத்துப் பாசுரங்களால் பாடியுள்ளார். அதனால், இவர், இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்துக்குப் பிற்பட்டவர் அல்லது அந்தக் காலத்தில் வாழ்ந்தவர் என்று கொள்ள இயலும்

தன்னுடைய பெரிய திருமொழி, 2ம் பத்து, 9ம் திருமொழியில் பத்து பாசுரங்களிலும் பரமேச்வர விண்ணகரத்தைப் பற்றிப் பாடும்போது அதில் பல்லவ மன்னனைக் குறிப்பிடுகிறார்.

சொல்லு, வன் சொல் பொருள் தானவையாய்ச்*

சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்*

நல்லரன் நாரணன் நான்முகனுக்கு *

இடந்தான்  தடம் சூழ்ந்து அழகாய கச்சி*

பல்லவன், வில்லவன் என்று உலகில்*

பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்

பல்லவன்* மல்லையர் கோன் பணிந்த*

பரமேச்சுர விண்ணகரமதுவே. 

பொருள்: சொல்லும் வேதமும், இவற்றின் பொருளும் தானேயாகி இருப்பவனும், ஐம்புலன்களும் தானேயாகி இருப்பவனும் (ஐம்புலன்கள்-சுவை, தொடுதல், சப்தம், வாசனை, ரூபம்), சிவனுக்கும் பிரமனுக்கும் உள்ளுறைபனவாக இருப்பவனும் ஆகிய நாராயணனுக்கு இருப்பிடமாகிய, அழகிய தடாகங்கள் சூழ்ந்த காஞ்சீபுரத்தில்பல்லவன், வில்லவன் என்று உலகில் பலவித பெயர்களாலே, பல அரசர்களால் வணங்கப்படும் பாதத்தை உடையவனும், திருக்கடல்மல்லைக்குத் தலைவனுமான பல்லவன் வணங்கியது இந்தப்  பரமேச்வரவிண்ணகரம்

பார்மன்னு பல்லவர்-கோன் பணிந்த, பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த, படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த  என்று ஒவ்வொரு பாசுரத்திலும் பல்லவ மன்னனின் வீரத்தைக் குறிப்பிடுகிறார், தன்னுடைய பாசுரங்களில்.

பெரிய திருமொழி, 5ம் பத்து, 10ம் திருமொழியில் பத்து பாசுரங்களிலும் நந்திபுர விண்ணகரத்தைப் பாடுகிறார்.

தீதறுநிலத்தொடு எரிகாலினொடு*

நீர்க்கெழுவிசும்பும் அவையாய்*

மாசறுமனத்தினொடு உறக்கமொடிறக்கை*

அவையாய பெருமான்*

தாய்செறஉளைந்து தயிருண்டு குடமாடு*

தடமார்வர் தகைசேர்*

நாதன்உறைகின்றநகர்*

நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே . 

பொருள்: ஐம்புலன்களாகவும், குற்றமற்ற மனத்தோடு, உறக்கம், கனவு, இறப்பு ஆகியவைகளுக்குக் காரணகர்த்தாவாக இருக்கும் பெருமான் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம். அதனை மனமே நீ அடைவாயாக 

இவற்றைப் பற்றிப் பாடியிருப்பதால், திருமங்கை மன்னன், அவர்கள் காலத்திலோ இல்லை அவர்கள் காலத்திற்குப் பிறகோ வாழ்ந்திருக்கவேண்டும். இப்படித்தான் இலக்கியங்களை வைத்து அரசர்கள் காலத்தை அறுதியிடுகிறார்கள்.

இந்த வாரம் ராஜேந்திர சோழனைப் பற்றி எழுத இடம் இல்லை. இனி கங்கைகொண்ட சோழபுரத்தின் படங்கள்.

 

முகப்புக் கதவைத் தாண்டி நுழைந்ததும் தெரியும் பெரிய மண்டபம்.

கோயிலில் மூலஸ்தானம் (கர்பக்கிரஹம்), அதற்கு முன் நடு மண்டபம், அதற்கு முன் முன்மண்டபம்’  நீண்ட செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளதுமேலே காட்டியுள்ளது அந்தச் செவ்வக மண்டபம்.

 

கர்பக்ரஹத்திற்குச் செல்லும் நுழைவாயிலுக்கு முன்பு, முன் மண்டபத்தின் கடைசியில் இருக்கும் துவாரபாலகர்கள். இதற்கு அருகே மேல் மண்டபம் செல்லப் படிக்கட்டுகள் இருக்கின்றன, தஞ்சைப் பெரிய கோயிலில் இருப்பது போலவே

நுழைவாயிலின் இரு புறமும் (கர்பக்கிரஹத்துக்கு முன் உள்ள நடு மண்டபத்திற்குச் செல்லும் வழி) இந்த மாதிரி பெரிய ஓட்டை இருக்கிறது. ஒருவேளை பக்தர்கள் (பொதுமக்கள்) அதனைத் தாண்டிச் செல்லக்கூடாது என்பதற்காக ஒரு மூங்கில் தடுப்பை வைப்பதற்காக இதனைச் செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது. கல்லில் எவ்வளவு தூரம் ஓட்டை போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

A stone carving of people

AI-generated content may be incorrect.

நடு மண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதிகள். 

 

 

 

கர்பக்ரஹத்துக்கு எதிரே சுவரில் சிற்பத் தொகுதி  மற்றும் துவாரபாலர்

 

கர்பக்ரஹத்துக்கு முன் உள்ள துவாரபாலகர்கள். மிகப் பெரிய உருவம். 

நடுமண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதிகள். 

 

 

சிவபெருமான் திருமணக் காட்சி மற்றும் பல தொகுதிச் சிற்பங்கள் வெளியில் தனித்தனியாகச் செதுக்கப்பட்டு பிறகு கர்பக்கிரஹத்துக்கு முன் உள்ள மண்டபத்தில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும்.

 

கருவறைக்கு வெளியே இருபுறமும். (நடுமண்டபம்)

கங்கைகொண்ட சோழீச்வரர் மூலவர்இந்தப் பதிவில் கொடுத்துள்ள சில படங்கள் மூலவரையும் சேர்த்து, இணையத்திலிருந்து எடுத்தது. அர்ச்சகரோ இல்லை கோயில் அதிகாரிகளோ சம்மதம் தெரிவித்தால் தவிர சன்னிதானத்துக்குள் படங்கள் எடுப்பதில்லை.

சிவலிங்கம் உயரம் 13 அடிகள். சுற்றளவு 33 அடிகள்மூலாஸ்தானத்தில் சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால், வெயில் காலத்தில் மூலஸ்தானம் மிகவும் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் சிறிது வெப்பமாகவும் இருக்கும் என்று அர்ச்சகர்கள் சொல்கின்றனர்.

 

முன் மண்டபத்தில் உள்ள உற்சவ சிலைகள்.

முன்மண்டபத்தில் இருக்கும் பல்வேறு சிலைகள். வராஹி, கணபதி முதலான தெய்வ மூர்த்தங்கள். இவைகளின் மீது மஞ்சள் பூசப்பட்டு இருந்தாலும், தினமும் ஆராதிக்கப்படும் மூர்த்தங்கள் இல்லை என்று தோன்றுகிறது. காரணம் ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் மற்றும் மூர்த்தங்கள்.

 

 

 

வட்டவடிவக் கல்லில் நவகிரஹங்கள் செதுக்கப்பட்டுள்ளன

 

முன் மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்கள் விசேஷமாக இல்லை.

என்னப்பா எனக்கு வந்த சோதனை. அழகான நந்தி நானிருக்க, எனக்குப் பின்னால் இன்னொரு பெரிய நந்தியாஒருவேளை பக்தர்கள் தங்கள் குறைகளை என் காதில் ரகசியமாகச் சொன்னால் நான் தலைவர் சிவனிடம் சொல்வேன் என்று நம்புகிறார்களே. பெரிய நந்தி இருந்தால் அதன் காதுகளை எப்படி எட்டுவது என்று கைக்கு அடக்கமாக என்னை பிற்காலத்தில் வைத்திருப்பார்களோ? என்னால் திரும்ப முடியாததால் பெரிய நந்தி எந்தக் காலத்தில் வைக்கப்பட்டது என்று சொல்லத் தெரியவில்லையே.

நிறைய படங்களை இன்று பார்த்தாகிவிட்டதா? அடுத்த வாரம் தொடர்வோமா?

(தொடரும்) 

73 கருத்துகள்:

  1. /அமைச்சர்கள், பல்லவ அரசுக்கு அரசனாக அவனுடைய மகனை அனுப்பித்தரவேண்டும் என்று கேட்க, மற்ற மூவரும் முன்வராதபோது, கடைசி இளவரசன் முன்வந்தான்/
    அதிசயமாய் உள்ளதே! வலிய வந்த சீதேவியை உதாசீனப்படுத்தியது போல், பல்லவ சாம்ராஜ்ய அரியணையை யாரேனும் மறுப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார். இருக்கும் தெரிந்த இடத்தை விட்டுவிட்டு கண் காணாத தேசத்துக்கு ஏன் செல்ல வேண்டும்? என எண்ணியிருந்திருப்பார்கள். அங்கு புதிதாக என்ன அரசியல் புதைகுழிகள் இருக்கலாம் எனத் தெரியாதில்லையா? ஆண்கள் என்ன பெண்களா? எந்த புதிய இடத்திலும் சென்று வாழ்ந்துவிட முடியும் என்ற தைரியமும் நம்பிக்கையும் கொண்டிருப்பதற்கு?

      நீக்கு
  2. சோழ அரசர்களின் அரண்மனைகள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க ஆசை. சினிமாவில் வருவது போல் இருந்திருக்குமா?!!!!! ஆங்காங்கே திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டு!! இல்லை சாதாரணமாக இருந்திருக்குமா?

    ஆனா நெல்லை, நீங்க முன்ன போட்ட படங்களை வைத்துப் பார்க்கும் போது, கொஞ்சம் புரிகிறது என்றாலும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். முஸ்லீம் அரசர்கள் அரண்மனையில் ஒவ்வொரு அறையும் திரைச் சீலைகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அறைகளுக்கு கதவுகள் பெரும்பாலும் இல்லை என்பதை அவர்களது அரண்மனையைப் பார்த்தாலே தெரியும். (கோல்கொண்டா, ஆக்ரா கோட்டை மற்றும் பல. இது வழிவழியாக வரும் முறை என நினைக்கிறேன்)

      நீக்கு
  3. /இந்த இரண்டாம் நந்திவர்ம பல்லவன், காஞ்சி கைலாச நாதர் கோயிலையும், நந்திபுர விண்ணகரத்தையும் கட்டினான்/
    காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் இதற்கு முன்னமே இருந்ததா? இரண்டாம் நந்திவர்ம பல்லவர் சைவத்தையும் வைணவத்தையும் சமமாகக் கருதினார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க காஞ்சி கைலாசநாதர் கோயில் பற்றிக் கேட்கறீங்க என நினைக்கிறேன். ந்ந்திபுர விண்ணகரம் வைணவம், கைலாசநாதர் கோயில் சிவனுக்கானது.

      காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலைப் பற்றி என்றால் அது வேறு கதை. மிகப் பெரிய அளவிலாலான கோயில், புராதானப் பெருமை மிக்கது. ஆனால் ஆழ்வார்களால் பாடப் பெறாதது. இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்தவர் தூப்புல் வேதாந்த தேசிகர். ஆச்சார்யர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த கோயில் இது.

      நீக்கு
    2. அவர் தலைநகர் காஞ்சி. சிவனுக்குக் கைலாசநாதர் கோவிலைத் தலைநகரிலேயே கட்டினார். விஷ்ணு கோவிலையும் அங்கேயே கட்டாமல் (வரதராஜப் பெருமாள் கோவில் இருந்ததால்??) தூரத்தில் நந்திபுரத்தில் கட்டினாரே என்றுதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

      நீக்கு
    3. என்னுடைய அனுமானம் இதுதான் சூர்யா சார். காஞ்சியில் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட வைகுண்டநாதர் கோயில் இருக்கிறது. பழையாறையில், இந்த விஷ்ணு கோயில் மிகச் சிறியதாக இருந்திருக்கவேண்டும். அதை விண்ணகரமாக ந ந்திவர்மன் மாற்றியிருப்பான். (அந்த இடமும் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட ஒன்றுதான்). அதனால் அந்த இடமும் கோயிலும் நந்திபுர விண்ணகரம் என்ற பெயர் பெற்றது. (சுற்றிலும் சிவன் கோயில்கள் இருந்த இடத்தில் விண்ணகரத்தைக் கட்டியதால்)

      நீக்கு
  4. ஏன் முந்தைய கேள்வி என்றால், வெங்கட்ஜி போட்ட பதிவுகளில் ராமர் சீதை வாழ்ந்த இடம் கனக்பவன் என்று போட்டிருந்த இடம் ஒரு அந்தாக்கால பெரிய வீடு போலதான் இருந்தது. ஒரு வேளை அது தற்போதைய தோற்றமோ என்னவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடபுலத்தில்்புராதான இடங்களில் உள்ளவை எல்லாமே 100-200 ஆண்டுகளில் கட்டப்பெற்றவை. அந்த இடங்களுக்குத்தான் மதிப்பு. என் யாத்திரையை எப்போ எழுப் போகிறேனோ. அதில் சீதை திருமணம் நடந்த இடம், ஜனகரின் அரண்மனை எல்லாப் படங்களும் வரும், ஆனால் தற்காலத் தோற்றத்தில்.

      நீக்கு
  5. படங்கள் வெகு அழகு. எப்படித்தான் கல்லில் இவ்வளவு கனகச்சிதமாக வட்ட வடிவில் துளை போட்டார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைக்கு வேறு ஒரு கோயிலைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். நான் செல்லாத கோயில். அதுபற்றியும் இந்தத் தொடரில் வரும். நம் முன்னோர்கள் மிகுந்த நாகரீகமும் கலாச்சாரமும் திறமையும் நிறைந்தவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதிஹாசங்கள் அவற்றில் சொல்லப்படுபவை உண்மை, அதீதமல்ல எனப் புரிய வைப்பவை.

      நீக்கு
  6. (நாராய் நாராய் செங்கால் நாராய் பாடல் நினைவுக்கு வருகிறதா)//

    யெஸ்ஸு. பழையாறை பெயர்க்காரணம் மட்டும் தெரிந்த தகவல்.

    அனிருத்தர், சுந்தரச் சோழர் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சுந்தர சோழர் கால் முட்டி போட்டு அமர்ந்திருக்கும் சிற்பமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்ச் சோழர் சிற்பத்தில் பெரிதாக இருப்பது. அனிருத்தர் இராஜராஜன் காலத்திலும் இருந்தவர் என்பதால் அப்போது வயது குறைந்தவராக இருந்திருக்க வேண்டும்.

      நீக்கு
  7. அரசன், மனைவியர், குந்தவை சிற்பங்கள் கோயில்களில் அந்தந்தக் கோயிலுகளுக்கு உரிய அரச, தேவியர் சிற்பங்கள் இருப்பது நமக்கு நிறைய தகவல்களைத் தெரிந்து கோள்ள உதவுகின்றன....ஆனால் ஏன் தெய்வமாக வழிபாடு?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிபாடு இல்லை. மரியாதை நிமித்தம் உடை அணிவித்திருக்கிறார்கள். பிரபந்தப் பாசுரம் ஒன்றில்,

      திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேன் என்ற பொருளில் வரிகள் உண்டு.

      நீக்கு
  8. யம்மாடியோவ் அந்த ஓட்டை வழியா எப்படிப் போயிருப்பாங்க அவங்க என்று தோன்றுகிறது இப்ப விடுங்க...அவங்களே எப்படிப் போயிருப்பாங்க? மூச்சு முட்டியிருக்காதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹல்லோ... நான் சரியா எழுதலைனு நினைக்கிறேன். இரண்டு பக்க கல் தூண்களில் இந்த ஓட்டை, மூங்கிலைக் குறுக்காகச் சொருக.. அதைத் தாண்டிச் செல்ல முடியாதபடி. ஓட்டையை ரொம்பவே க்ளோசப்பில் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  9. முதல்ல நடுமண்டபத்துக்கு நீங்களும் இந்த ஓட்டை வழியாவா போனீங்க!! என்று கேட்க நினைத்து அப்புறம் சைடில் படிக்கட்டுகள் என்று சொல்லியிருப்பதை வைத்து புரிந்து கொண்டேன்....ஹாஹாஹா

    நடுமண்டப சிற்பத் தொகுதிகள் பிரமாதமாக இருக்கின்றன. கர்பக்கிரகத்துக்கு எதிரே உள்ளவை....துவாரபாலகர் எல்லாம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எப்படி இம்புட்டுச் சின்ன சின்னதா செஞ்சு தொகுத்து வைச்சிருக்காங்கன்னு!

    அத்தனையும் அழகு

    மண்டபத்ட் தூண்கள் படம் சூப்பர். இப்படியான படங்கள் இடங்கள் மனதைக் கவரும்.

    என்னால் திரும்ப முடியாததால் பெரிய நந்தி எந்தக் காலத்தில் வைக்கப்பட்டது என்று சொல்லத் தெரியவில்லையே.///

    ஹாஹாஹா சிரித்துவிட்ட்டேன்!! உள் அர்த்தம் புரிந்து.

    எல்லாம் ரசித்தேன் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் சிற்பத் தொகுதிகள் மிகவும் அழகானவை. எப்படி அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்று வியந்தேன்.

      ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. //இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்டது. ஊரும் நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. அவனுக்கும் (இரு தேவியரோடு), குந்தவை நாச்சியாருக்கும் கோயிலில் சிலை உள்ளது.//

    படங்கள் தகவல்கள் அருமை.

    //குந்தவை நாச்சியார், ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கியிருக்கலாம். ஆனால் யார் இந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன்? அவனுடைய மனைவி கம்போடியாவைச் சேர்ந்த காம்போஜ வல்லியா? யார் ரேவா தேவி?//

    மன்னர்கள் காம்போஜ நாட்டுக்கு போனதாக வரலாறுகள் சொல்கிறது
    அங்கு மனந்து வந்து இருக்கலாம். நந்திபுரத்து நாயகி கதையில் இன்பவல்லி என்ற கதாபாத்திரம் வரும்.

    நந்திபுரத்து நாயகி என்ற நாவலில் உங்கள் கேள்விக்கு விடை இருக்குமோ! விக்கிரமன் அவர்கள் எழுதிய கதை கிடைத்தால் படித்து பாருங்கள்.
    அமேசான் கிண்டில் மூன்று பாகமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிலேயே விடையையும் தந்திருக்கிறேன் கோமதி அரசு மேடம்.நந்திபுரத்து நாயகி நாவல் என்னிடம் இருக்கிறது என்று நினைவு. இன்னும் படிக்கவில்லை. சரித்திர நாவல்களையெல்லாம் படித்திருந்தால் இன்னமுமே சிறப்பாக எழுத இயலும்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. சரணம் சண்முகா. சில தலங்களுக்கு பூர்வஜென்ம புண்ணியம் இருந்தால்தான் செல்ல இயலும். திருச்செந்தூர் அதில் ஒன்று எனப் படித்தேன்.

      நீக்கு
  13. தஞ்சை கோயிலை விட நளினம் மிக்கது
    கங்கை கொண்ட சோழபுரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடில்லை. தஞ்சைக் கோயில் மிக்க நளினம் என்பது என் எண்ணம். அதிலும் கல்வெட்டுகள் நம் தமிழ் மன்னர்கள் மாண்பைச் சொல்லும். தஞ்சை பெருவுடையார் கோயில் 100 மார்க் என்றால் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு என்னைப் பொறுத்தவரையில் 60 மதிப்பெண்கள்.

      நீக்கு
  14. தூண்களின் பொலிவு கவர்கின்றது...
    மஞ்சள் பிள்ளையார்கள் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன், பகிர்ந்தேன்.

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நலமா? ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  16. பழையாறையை மீறி தஞ்சை எழுந்தது..
    தஞ்சையை மீறி கங்கை கொண்ட சோழபுரம்
    எழுந்தது....

    பிற்காலச் சோழர்களால்
    தற்காத்துக் கொள்ள இயல வில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... எந்த டைனஸ்டியும் 100-300 வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது. 7 தலைமுறைகள் நல்லா வாழ்ந்தவரும் இல்லை, 7 தலைமுறைகள் தாழ்ந்தவர்களும் கிடையாது. ராஜேந்திரசோழன் மகன்களுடன் சோழ சாம்ராஜ்யம் முற்றுப்பெற்றது. அதற்கு அடுத்த 200 ஆண்டுகள் சாளுக்கியச் சோழர்கள், குலோத்துங்கச் சோழன் தொடங்கி. 500 ஆண்டுகாலப் பகைவர்கள் வலிமை பெறாமல் இருந்திருப்பார்களா?

      நீக்கு
  17. கூடுதலான நாதன் கோயில்
    செய்திகளும் அருமை..

    நெல்லை அவர்களது பதிவு
    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  18. நந்திபுர விண்ணகரம் அரண்மனை விவரங்கள் படிக்க வேண்டும் காலை நேர வேலைகள் பின்னர் வருகிறேன் அருமையான பதிவை படிக்க.

    திருச்சத்திமுற்றம் கோயில் நன்றாக இருக்கும் சக்தி முற்ற புலவர் பாடலை பகிர்ந்து கொண்டது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பின்னர் வருகிறேன் அருமையான பதிவை படிக்க. //

      ஆமாம்.  விவரமாகவும், தெளிவாகவும் மிகவும் சுவாரஸ்யமாகக் கொடுக்கிறார்.   

      நீக்கு
    2. வாங்க கோமதி அரசு மேடம்... நில பதிவுகளில் நிறைய தகவல்கள் அமைந்துவிடுகிறது. திருவலஞ்சுழி கோயிலும் சூப்பராக இருக்கும்.

      நீக்கு
    3. ஸ்ரீராம்... நன்றி. சில பதிவுகள் அமைந்துவிடுகின்றன. சில சொதப்புகிறது. என்ன பண்ண?

      நீக்கு
  19. // பொன் மாளிகை துஞ்சிய தேவர்//

    ஆதித்த கரிகாலன் தன் தந்தைக்காக கட்டிய மாளிகை.  ஆடம்பர மாளிகை.  ஆதித்தன் கொலையானதும்தான் சுந்தரச்சோழர் அங்கு வந்துதான் தன் இறுதி நாட்களை துயரத்துடன் கழித்தார் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரித்திர ஆசிரியர்கள் செய்யும் வேலை இது ஸ்ரீராம். அவன் ஏன் தன் தந்தைக்காக ஒரு மாளிகை, அதுவும் காஞ்சியில் கட்டவேண்டும்? ஏன் அவனுடைய பையன் அருண்மொழி (யும் உத்தமச் சோழனும்) தஞ்சையிலிருந்து ஆளவேண்டும்? ஏன் அருண்மொழியில் மகன், இந்த இடத்தைவிட்டு கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கவேண்டும்? நிறைய விடை தெரியாத கேள்விகள். ஆமாம் சுந்தரச் சோழர் தங்கிய பொன் மாளிகைதான் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்திருக்கும் பகுதியா?

      நீக்கு
    2. அரசன் சுந்தரச் சோழன் மீது மரியாதையும் அன்பும் இருந்தாலும், ஆதித்தனின் படபடப்பு கோபம் அளவுக்கு அதிகமான ஆளுமை காரணமாக சிற்றரசர்களுக்கு ஆதித்தன் மீது உள்ளூர கோபம் வெறுப்பு இருந்திருக்கலாம். அதற்கு ஏற்றபடி உத்தமச் சோழன் அமைதியானவனாக இருக்கலாம். எத்தனையோ அனுமானங்கள்.

      நீக்கு
  20. பாதுகாப்பு காரணங்கள் என்றாலும் ஆதித்தனை காஞ்சியில் வைத்து தன் தந்தை தாயையே பார்க்க முடியாமல் வைத்த விதி..  ஆதித்தன் அதற்கெல்லாம் எப்படி Feel ஆகி இருப்பான்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கெல்லாம் ஆதாரம் என்ன? கதாசிரியர்களில் நாவலைத் தவிர. இருந்தாலும், ஒரு இளவரசன், அரசனை சட் சட் என்று பார்த்துவிட முடியாது அதற்கென்று ப்ரோட்டாகால் உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.

      நீக்கு
  21. முன்னரே சொன்னபடி ஆரியப்படையார்களுக்கும், பம்பைப்படையூர்களுக்கும் நடந்த சண்டை, உள் கலகம்தான் நரசிம்மாவின் 'நவகண்டநாயகி' நாவல்.  அதை ஒரு வியாழன் பதிவிலும் கொடுத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவகண்ட நாயகி நாவலைப் படிக்கும் எண்ணம் வருகிறது. முந்தைய நாவலைப் போல் அல்லாமல், சரித்திர ஆதாரங்களுடன் எழுதப்பட்ட நாவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

      உண்மையில் அத்திமலைத் தேவனில் பல பகுதிகள் கொஞ்சம் (கொஞ்சமா) டுபாக்கூரா எனக்குத் தோன்றியது (சாணக்கியரின் பற்களை அவர் உடைத்துக்கொள்வதில் தொடங்கி). ஆனாலும் நிறைய தகவல்களுடன் அவர் எழுதுகிறார். பாராட்டப்படவேண்டியது.

      நீக்கு
  22. கும்பகோணம் சென்றபோது இந்த சிற்றூர்கள், மாளிகைமேடு, நாதன் கோவில் எல்லாம் மிஸ் ஆனது.  மறுபடி செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்..........டே இருக்கிறேன்!  "யோசிக்கக் கூடாது, சட்டென புறப்பட்டு விடவேண்டும்"  என்று நீங்கள் சொல்வீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் ஒரு நாள் இந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் ரசனைக்கு என்று ஒரு நாள் ஒதுக்குங்கள் கும்பகோணம் பயணத்தில். வாழ்க்கை அலைகள் என்றுமே ஓயாது ஶ்ரீராம். அக்கடா என இனி இருக்கலாம் என்பது வாழ்க்கைச் சுழலில் கிடைக்காது.

      ந்ந்திபுரவிண்ணகரம், பழையாறை வடதளி, திருச்சத்திமுற்றம், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வர்ர் கோயில், திருவலஞ்சுழி என காலைப் பொழுது ஓடும்.

      நீக்கு
  23. // ஆனால் யார் இந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன்? அவனுடைய மனைவி கம்போடியாவைச் சேர்ந்த காம்போஜ வல்லியா? யார் ரேவா தேவி?//

    உங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை நீங்களே கீழே கொடுத்திருக்கிறீர்கள் என்றாலும், கதை வடிவில் அந்த வரலாறு நரசிம்மாவின்  'அத்திமலை தேவனி'ல் இருக்கிறது.  எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம் அது என்பேன்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அத்திமலைத் தேவனில், சில நிகழ்வுகள் சரியாகக் கொண்டுவரப்படவில்லை என்று எண்ணம். படிக்கும்போது இப்படித்தான் தோன்றியது. பிறகு ஒரு நாள் எழுதுகிறேன்.

      நீக்கு
  24. இரண்டுமுறை அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியும் நான் மதியம் 12 மணிக்கு மேல் சென்றதால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.  ஒருமுறை ஒழுங்காக சென்றுவர வேண்டும்.  எவ்வளவு திட்டங்கள் வைத்திருக்கிறேன் பாருங்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் தரிசனம் கிடைக்கும் ஸ்ரீராம். அங்கு சென்றால், அதன் அருகிலேயே மூன்று அருமையான கோயில்கள் உள்ளன. பார்க்க மறக்கவேண்டாம்.

      நீக்கு
  25. அந்த ஓட்டைக் கல் அவ்வளவு க்ளோஸப்பில் இல்லாமல் சற்று தூரத்தில் வைத்தும் ஒரு ஸ்நாப் எடுத்து பகிர்ந்திருக்கலாம்.  எந்த இடத்தில எப்படி அமைந்திருக்கிறது என்று தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம். நான் அவசரமாக கோயிலுக்குள் (கருவறை முன் மண்டபம) சென்றுகொண்டிருந்தேன். அப்போது இருவர் இதனைப் படமெடுத்துக்கொண்டிருந்தனர். நான் என்ன, ஏன் என்று யோசிக்காமல் உடனே படமெடுத்துவிட்டேன். பிறகு பதிவு எழுதும்போதுதான் இதைப்பற்றி எழுதினேன். அப்போது நேரம் இருந்திருந்தால் முறையாக தூரத்திருந்து ஒரு படம் எடுத்திருப்பேன்.

      நீக்கு
  26. கீழிருந்து நான்காவது படம்..  அந்த மண்டபம்..  அதுபோல நிறைய பார்த்திருக்கிறேன்.  அந்த தூண் நிறைந்த மண்டபங்கள் அந்தக் காலத்தில் எதற்கு உபயோகப்பட்டிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சவரை வாகனத்துடன் அங்கு வைத்து பூசைகள் செய்ய, பக்தர்கள் பாராயணம் செய்ய, அவர்களுக்கு உணவளிக்க, ஆன்மீகப் பாடங்கள் நடத்த எனப் பலப்பல உபயோகங்கள் ஶ்ரீராம்.

      நீக்கு
  27. சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். தஞ்சாவூர் - கும்பகோணம் அருகே நிறையவே பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. பல வருடங்கள் தில்லியில் இருந்ததால் பார்க்க வேண்டிய இடங்கள் பார்க்க முடியாமலேயே இருந்திருக்கிறேன். இனிமேலாவது இங்கேயெல்லாம் சென்று வர வேண்டும் என்ற எண்ணம் உண்டு. வார நாட்களில் செல்ல முடியாவிட்டாலும், சனி - ஞாயிறுகளை இப்படியான இடங்கள் செல்வதற்கென ஒதுக்கி விட வேண்டும் என்று நினைப்பேன். ஆனாலும் எல்லா வாரமும் இப்படிச் செல்ல முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ். கும்பகோணம் உண்மையாகவே கோயில் நகரம். அங்கு ஏகப்பட்ட கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்க்ள் இருக்கின்றன. காலைல பஸ்ல போய்ச் சேர்ந்தால் இரவு பஸ்ஸில் திருச்சி திரும்பிடலாம். கண்டிப்பா முயற்சி பண்ணுங்க.

      நீக்கு
    2. மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி போய் வரும் கோயில்கள்.
      வீட்டுக்கு வரும் விருந்தினர்களை , அழைத்து கொண்டும் , நாங்களும் அடிக்கடி போய் வரும் கோயில்கள். மாயவரம் ஊரிலிருந்த காலம் இறைவனின் கருணை, மற்றும் அருட கொடை என்று நினைத்துக் கொள்வேன்.

      நீக்கு
    3. 'இறைவனின் கருணை' அதுதான் முக்கியம். சென்ற மாதம், மாயவரம் வழியாக இரு முறை சென்றேன். கோயில் தரிசனமும் வாய்க்கலை, காளியாகுடி உணவும் வாய்க்கலை. கோயில் தரிசனத்திற்கு அவன் கூப்பிடணும் என்பது முக்காலும் உண்மை கோமதி அரசு மேடம்

      நீக்கு
  28. கங்கை கொண்ட சோழபுரம் எப்படியோ பார்க்க விட்டுப் போயிருக்கு. எங்க அப்பா பள்ளிக்கூடம் விடுமுறை அறிவிச்சதும் அவங்க நாலைந்து நண்பர்களாக இம்மாதிரிப் பயணங்களுக்குக் கிளம்பி விடுவார்கள். சில/பல சமயங்களில் அண்ணா, தம்பியும் இடம் பெறுவார்கள். என்னை எங்கேயும் அப்படி எல்லாம் அழைத்துப் போனதில்லை. நான் தான் ஓர் புரட்சிக்காரப் பெண்ணாச்சே! சண்டை போட்டு அடம்பிடிப்பேன். அப்போ அப்பா நாளைக்குக் கல்யாணமாகிப் போனதும் உன்னோட கணவனை இப்படி எல்லாம் கூட்டிப் போகச் சொல்லிப் போய் ஊர் சுத்திட்டு வா. மாமியார் மெச்சிப்பாங்க என்பார். அவரது கருத்து பெண்களுக்கு இவை எல்லாம் பார்க்கவோ போகவோ அத்தனை தகுதி இல்லைனு நினைப்பு. எனக்கு உள்ளூரக் கோபம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... கொஞ்சம் நியாயமாக யோசித்துப் பார்த்தேன். என் வீட்டில் நடப்பது என்ன?

      நான் மனைவியை கண்டிப்பா தினமும் யோகா மற்றும் 10,000 ஸ்டெப்ஸ் நடை பண்ணணும்னு சொல்லியிருக்கேன் (விதிவிலக்கு தவிர). அதுக்கு ஏற்ற மாதிரி என் வேலைகளையெல்லாம் வச்சிருக்கேன். 11-12 மணிக்கு மேல் எனக்கு உணவு தயாரானால் போதும் என்று இருக்கிறேன். ஒருவேளை பசங்க இருந்தால், இது சாத்தியமா? காய் திருத்த, சமைக்க, மற்ற வீட்டு வேலையை நான் பார்க்க இயலுமா? வெளியில் பல இடங்களையும் கண்டு அசதில வீடு திரும்பும்போது, ஏதேனும் உணவு இருக்க வேண்டாமா?

      இந்த மாதிரி வீட்டு வேலைகள் நிறைய இருப்பதாலும், அதை முடிக்காவிட்டால் நமக்குத் தொந்தரவு என்பதாலும், ஆண்கள், பெண்களைக் கழற்றி விட்டுவிடுகிறார்கள். ஹா ஹா ஹா

      நீக்கு
    2. சரி.. கூட வரட்டும் என்றாலும், காலை 2 மணிக்கே எழுந்து அன்றைய பிரயாணத்துக்குத் தேவையான உணவை அவர்களைப் பண்ண வைத்துவிடுகிறார்கள். நிலைமை அப்படி இருக்கு.

      இதுல போன ஜெனெரேஷனுக்கு முந்தைய ஜெனெரேஷனில், சின்னப் பெண்களையும் ஊர் சுற்றக் கூட்டிப்போகணுமாம். இந்த மதுரை மீனாட்சியின் ஆசையைப் பாரு...

      நீக்கு
  29. உண்மையில் கல்யாணம் ஆனதும் தான் நம்மவர் என்னைப் பல இடங்களுக்குக் கூட்டிப் போயிருக்கார். நாங்க குழந்தைகள் சின்னவங்களா இருந்தாலும் கூடக்கூட்டிப் போவோம். அதிலும் சில ஊர்களுக்கு, கோயில்களுக்கு நாலைந்து முறை போக நேர்ந்திருக்கு. அவ்வகையில் திருச்செந்தூர் முதலில் குழந்தைகளோடும் பின்னர் நாங்க இருவர் மட்டும், அதன் பின்னர் மருமகள், பையர், நாங்க என சுமார் 3,4 தரம் போயிருக்கோம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சுசீந்திரம் எல்லாமும் அப்படியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணம் ஆனால் இருவரும் சேர்ந்து செல்லுதல் சரிதானே. பிறகு பசங்களோட. உங்களுக்கு அத்தகைய பயணங்கள் அமைந்தது சந்தோஷம். அதுவும் கயிலாயம்லாம் போயிட்டு வந்திருக்கீங்க. பிறகு என்ன?

      நீக்கு
  30. திருச்சத்திமுற்றம், பட்டீஸ்வரம் எல்லாமும் அடிக்கடி போயிருக்கோம். ஆனால் இந்த கங்கை கொண்ட சோழபுரம் மட்டும்! :( போகட்டும். மறுபடி வரேன். பதிவைப் படிச்சுட்டேன். ஆனால் இப்போக் கொஞ்சம் வேலை இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி நீங்க கங்கைகொண்ட சோழபுரத்தை மிஸ் பண்ணினீங்கன்னு தெரியலை (ஆனால் நானும் அப்படி மிஸ் செய்து, இறைவன் அருளால் அடுத்தடுத்து இரு முறை சென்றுவிட்டேன். இரண்டாம் முறை, பல அருகிலிருந்த கோயில்களை திருவரசுக்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது)

      நீக்கு
  31. நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) ஸ்ரீ ஜெகன்னாதப் பெருமாள் (21ம் திவ்யதேசம்). //

    ஸ்ரீ ஜெகன்னாதப்பெருமாள் நாதன் கோயில் கோபுர தரிசனம் கிடைத்தது உங்களால், நன்றி.
    பல வருடங்களுக்கு முன் காஞ்ச்சிபுரத்தில் தங்கி திவ்ய தேசங்கள், சிவதலங்கள் பார்த்தோம்.

    நந்திவர்ம பல்லவன் சிற்பம் முழுவதும் விபூதியை தடவி வைத்த மாதிரி இருக்கே!


    நந்திவர்ம பல்லவன் வரலாறு சொல்லி பாசுரமும் பகிர்ந்து அதற்கு அர்த்தமும் சொன்னது மகிழ்ச்சி.
    பதிவுக்கு நீங்கள் எடுத்து கொண்ட உழைப்பும், தேடலும் அதை விவரிக்கும் விதமும் அருமை.
    எடுத்து கொண்ட காரியத்தை சிறப்பாக செய்து வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிற்பம் முழுவதும் விபூதியை தடவி வைத்த மாதிரி// நம்ம ஊரில், எதையும் வீணாக்குவதில் நாம் சமர்த்தர்கள். குங்குமம் நெற்றியில் இட்டுக்கொள்ள ஒரு துளியில் நாலில் ஒரு பகுதி போதும். ஆனால் அர்ச்சகர் ஒரு சிட்டிகை அல்லது அதைவிட அதிகம் கொடுக்கிறார். விபூதியும் அப்படியே. மஞ்சளூம் அப்படியே. நாமென்ன உடம்பு முழுக்க பூசிக்கொள்ளப் போகிறோமா?

      பக்தர்கள் என்ன பண்ணறாங்க? கோயில்ல எல்லாத் தூண்கள் மற்றும் கிடைத்த இடங்களில் ஊதிவிட்டுப் போயிடறாங்க. இதற்குத் தீர்வு என்ன? ஒரு தட்டில் இவற்றை சன்னதிக்கு வெளியே வைத்துவிட்டு, தேவையானவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதான். சிலர், அவங்க வீட்டுக்கு, ஊரில் உள்ள எல்லோருக்கும் எடுத்துக்கொள்கிறேன் என்று பேப்பர்ல வழிப்பாங்க. என்ன செய்வது?

      நீக்கு
    2. //எடுத்து கொண்ட காரியத்தை சிறப்பாக செய்து வருகிறீர்கள்.// மிக்க நன்றி கோமதி அரசு மேடம். நிறைய நேரம் எடுக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகான பதிவுகள் எழுதணும். பயணம் மற்றும் அடுத்த வேலைகள் இருக்கின்றன. பார்ப்போம் எப்படிப் போகிறது என்று.

      நீக்கு
  32. கங்கைகொண்ட சோழபுரத்தின் படங்கள் அனைத்தும் அருமை. பதிவு எழுத ஆரம்பித்த போது நான் கோயிலின் வெளிபக்கம் மட்டும் எடுத்து இருக்கிறேன்.

    ஆல்பத்தில் பிலிம் ரோல் போட்ட காமிரவில் எடுத்த படங்களில்
    தான் உட்புறம் படிகள், மேல் தள படங்கள் எல்லாம் இருக்கும்.

    அப்படி எடுத்த படங்களிலும் கர்பக்கிரஹத்துக்கு முன் உள்ள மண்டபத்தில் உள்ள சிற்பங்களை எடுக்கவில்லை.
    நீங்கள் அனைத்தையும் அருமையாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    தூண் சிற்பங்கள் எல்லாம் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்வதற்கு மிக்க நன்றி. நான் நிறைய படங்கள் எடுத்த போதிலும், மனைவி என்னை எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தாள். எடுக்காதீங்க என்றெல்லாம். அப்போதிருந்த காலத்தைவிட இப்போது வசதிகள் அதிகம் இல்லையா கோமதி அரசு மேடம்? மொபைலில் சட் சட் என்று நிறைய படங்கள் எடுத்துவிடமுடியும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!