27.3.26

உனக்கு அதெல்லாம் சரிவராது

கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை

த்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , பேராசிரியர் கல்கி போன்றோர் ரசித்து, அந்த நடையிலேயே தொடர்ந்து எழுதச் சொன்னார்கள் என்பதை நாடு அறியும். அப்படிப்பட்ட மண்மணமும் , தமிழ்மரபின் வளமும்  சேர்ந்த கவிதைத் தொகுப்பே “மருக்கொழுந்து”.  இந்தத் தலைப்பைக் கவிஞர் அவர்களே பல வருடங்களுக்கு முன்பு தன் நூலுக்குத் தேர்ந்தெடுத்தார் என்பதும் தொகுப்புக்கு ஒரு தனிச் சுவையைச் சேர்க்கிறது. 

பல பிரபலமான பாடல்கள் இத்தொகுதிகளில் உள்ளன என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இவற்றுள் அவருடைய போர்சார்ந்த பாடல்கள் மிகப் பிரசித்தி பெற்றவை, அவற்றுள் , 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அவர் விகடன் தீபாவளி மலரில் எழுதிய ஒரு பாடல் எல்லோர் மனத்திலும் இன்றும் நிலைத்து உயர்ந்து நிற்கும்,  “ பொறந்த நாட்டை நினைச்சுப் பார்த்து புறப்பட்டு வாங்க” என்ற ஒரு ‘கோபுர’க் கவிதை. இரண்டாம் உலகப் போர் முடிந்துவிட்டது, பல வருடங்களாய் வெளிநாட்டில் இருந்த சிப்பாய்களை நாட்டுக்குத் திரும்பி வந்து நாட்டுக்கு உழைக்கச் சொல்லி வேண்டுவதுபோல் அமைந்த கவிதை இது.

இந்தியச் சிப்பாய்களின் வீரம், கடமை உணர்ச்சி இவற்றில் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் , சிப்பாயின் குடும்பத்தினரும், அண்டை அயலும் — ஏன், மாடு, கன்றுகளும் தாம் — அவனைப் பார்க்காமல் ஏங்கும் சித்திரம் நம்மை நெகிழவைக்கிறது. போருக்குப் போகும்போது தொட்டிலில் இருந்த குழந்தை –இப்போதோ பள்ளிக்குச் செல்லும் பிள்ளை — ‘அப்பன் எங்கே’ என்று அம்மாவைக் கேட்பது, தந்திதபால்காரன் வந்தால் ‘எங்கே துயரச் செய்தி வந்துவிடுமோ’ என்று தாலியைத் தொட்டுப் பயப்படும் மனைவி, சிப்பாய்க்குப் பேர் இட்ட கிழவி தன் கடைசிக் காலத்தில் அவனைப் பார்க்கத் துடிப்பது ..போன்ற பல மனமுருக்கும் காட்சிகள் நிறைந்த ‘நிறைகுடம்’ இந்தக் கவிதை.

பெத்துவளத்துப் பேருமிட்ட
   பெரிய நாச்சியா
பித்துப்பிடிச்சு ராப்பகலா
   பேத்தி நிக்கிறா
முத்தைஉதுத்துப் பேந்தபேந்த
   முளிச்சுப் பாக்குறா
முகத்தைக்காட்ட வேணுமிடா
   வீட்டுக்கு வாங்க.
தந்திதவால் காரன்வந்தா
   தவிதவிக் கிறா
தாலிச்சரட்ட பாத்துக்கண்ணு
   தண்ணி வடிக்கிறா
அந்திப்பட்டா ஒருயுகமா
   அவ துடிக்கிறா
ஆறுவருச மாச்சுதப்பா
   வீட்டுக்கு வாங்க. 

இந்த நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளன என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு  வரலாற்று நோக்குடன் இப்பாடல்களைப் படிக்கும்போது இவற்றின் கருத்தோட்டத்தையும், சமூகச் சூழ்நிலைக்கேற்பக் கொட்டும் கவிஞரின் கற்பனை, உணர்ச்சி ஊற்றுகளையும் மேலும் ரசிக்க முடிகிறது., உதாரணமாக, 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பியது ; இது யாவரும் அறிந்த விஷயம். ஆனால், இதைப் பற்றி, “ சந்திரனே, சந்திரனே, சௌக்கியமா’ என்ற பாடலில் புதிய கண்ணோட்டத்தில் லைகா, ஸ்டாலின் போன்றோர் பேசுவதுபோல் பேசி 
       
நாயைப்பறக்க விட்டபோதே நன்றிபறந்து போச்சுடா      
நாம்செய்த பாவம் நம்மை நாடுமறந்து போச்சுடா        
மாயப்ரபஞ்மென் றுரைத்தவாக்குப் பலிச்சுப்போச்சுடா        
மானத்திலே ஏறினாலும் மனிசன் மனிசன்தானடா    

என்று நம்மைச் சாடுகிறார்.  

- திண்ணை இணைய வாரப்பத்திரிகை பக்கத்திலிருந்து...

=========================================================================================

குமுதத்தில் வந்த இந்தக் கதை படித்திருக்கிறேனா..  நினைவில்லை...  ஆமாம், யார் இந்த டி. துரைசாமி?  இவரது வேறு கதைகள் படித்திருக்கிறோமோ?


===========================================================================================

ஜெ யின் சங்கீத ஆர்வம்.


1972 - 75 வருடங்களில்  குன்னக்குடி வைத்யநாதனிடம் ஜெயலலிதா விரும்பிக் கேட்டு மூன்று நான்கு வருடங்கள் சங்கீதம் கற்றுக் கொண்டாராம். ஜெ வீட்டுக்குப்போய் குன்னக்குடி சங்கீதம் கற்றுக் கொடுத்தாராம்.  நான்கைந்து வருடங்கள், அல்லது அதற்கும் மேலே கூட இருக்கலாம் என்கிறார் மகள்.  "எல்லாம் கேட்டுக் கேட்டு கத்துக்கறா... அந்தக் குழந்தைக்கு எவ்வளவு ஞானம்?" என்று குன்னக்குடி மனைவியிடம் சொல்லிக் கொண்டிருப்பார் என்கிறார் குன்னக்குடியின் மகள் பானுமதி ராமகிருஷ்ணா. 91 ல் ஜெ முதல்வரானதும் குன்னக்குடியை அழைத்து தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தின் சேர்மேனாக்கினாராம்.  ராக ஆராய்ச்சி மையம் என்று ஒன்று தொடங்கி அதற்கும் குன்னக்குடியை தலைவராக போட்டாராம் ஜெ.  இயலிசை நாடக மன்றத்தில் தூசி படிந்து போய்க் கிடந்த கோப்புகளை எடுத்து எங்கேயோ இருந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை அழைத்து வந்து விருதுகள், உதவிகள் செய்தாராம் குன்னக்குடி.  "நீங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.  உங்களுக்குத் தெரியும்"  என்று அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாராம் ஜெ.  

60 களில் மைலாப்பூரில் TMS வீட்டுக்கு எதிரே TMS கட்டி விட்டிருந்த சின்னஞ்சிறு வீடுகளில் ஒன்றில்தான் குன்னக்குடி குடியிருந்தாராம்.  பத்து ரூபாயோ பதினைந்து ரூபாயோ வாடகையாம்! குன்னக்குடி கிராமத்தில்   வாசித்துக்கொண்டிருந்தவரை "நன்னா வாசிக்கறான் பையன்" என்று சொல்லி சூலமங்கலம் சகோதரிகள் மூவரும்தான் 55 களில் சென்னைக்கு அழைத்து வந்தனராம்.  அப்போது அவருக்கு கல்யாணம் கூட ஆகவில்லையாம்.  'சூலமங்கலம் சகோதரிகளுக்கு கிட்டத்தட்ட 300, 400 பாடல்களுக்கு மேல் பக்தி பாடல்கள் பண்ணி இருக்கார் அப்பா' என்கிறார் பானுமதி.

வலையப்பட்டியுடன் சேர்ந்து அவர் கச்சேரி பண்ண ஆரம்பித்ததற்கு ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகளாம். சரியாக வராது என்றார்களாம்.  கவலைப்படாமல் இருவரும் சேர்ந்து சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், மியூசிக் அகாடமி என்று ஒரே நாளில் இரண்டு கச்சேரிகள்   செய்தார்களாம்.  அப்புறம் அது ரொம்ப பாப்புலர் ஆகிவிட்டதாம்.

சின்ன வயதில் 'குழந்தைல' யாரோ ஒரு ரொம்ப வயசானவர், சந்நியாசி சாமியார் சொல்லிதான் குன்னக்குடி அவ்வளவு பெரிய குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ள  ஆரம்பித்தாராம். ஆறு பகுதிகளாக வைத்துக் கொள் என்று அந்த யாரென்று தெரியாத சாமியார் சொல்லி இருந்ததை அப்படியே கடைப்பிடித்தாராம் குன்னக்குடி.  ஆறு அல்லது ஏழு பையன்தான் அப்போது.  குன்னக்குடி அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து 'யாரோ இப்படி சொல்றாங்கப்பா' என்று காட்டினால் யாருமே அங்கு இல்லை என்பதோடு ரொம்ப நேரமா யாருமே இங்கே இல்லையே என்று அங்கிருந்தவர்களும் சொன்னார்களாம்.  அப்போதிலிருந்து ஆரம்பித்த வழக்கம்.  "ராத்திரில கூட நீட்டா ட்ரெஸ் பண்ணிண்டுதான் படுத்துப்பா" வெளிநாடுகளில் கூட தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டதில்லையாம்.  தன் சொந்த மைக்குடன்தான் எங்கேயும் செல்வாராம்.  யாராவது பொன்னாடை போர்த்தினால் அதையே சட்டையாக தைத்துப் போட்டுக்கொண்டும் அவர்களுக்கும் காட்டுவாராம். 

"அவங்க சந்தோஷப்படுவாங்க"

எப்போதும் இரண்டு பேராவது கூட இருப்பாங்க..  வர்றவங்களை புறப்பட விடாம கொஞ்சம் இருங்க கொஞ்சம் இருங்கன்னு சொல்லியே இருக்க வச்சிடுவார்.  அவர் இட்லிதான் சாப்பிடுவார்.  அம்மா சொல்வா..  முதல்ல  சாப்பிட்ட ஒரு வாய் ஜீரணம்   ஆனதும்தான்  அடுத்த வாய் சாப்பிடுவார்' என்பார்.  அவ்வளவு ஸ்லோ. அவர் ரெண்டு இட்லி சாப்பிடணும்னா அவர் கூட அம்பது பேர் சாப்பிடணும்.  சின்ன வயசுலேருந்தே அப்படிதான் பழக்கம்.  கூட வாசிச்சவங்களுக்கும் ஏஸி ரூம் புக் செய்து வசதியாதான் வச்சுப்பார்.  தம்புரா வித்வானுக்குக் கூட அதிகம் சம்பளம் கொடுத்தவர் அவர்.   அவர் சொல்வார் "உங்கப்பா புண்ணியத்துல ஒரு வீட்டுக்கு ரெண்டு வீடு வாங்கிட்டேன்"ம்பார்.

=======================================================================================


ஆஷிக்கி படப்பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் பாடல்கள் நதீம் ஷ்ரவன் இரட்டையர் இசையில் எல்லாமே சூப்பர் ஹிட்.  குமார் சானுவுக்கு பின்னர் பெரிய மார்க்கெட் உருவானதற்கு இந்தப் படப் பாடல்கள் காரணம்.  நீங்கள் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா, தெரியாது.   கேட்கவில்லை என்றால் நம்பி கேட்கலாம்.  எல்லாமே கஜல் பாணியில் அமைக்கப்பட்ட இனிய பாடல்கள்.  

இதன் ஹீரோயின் அனு அகர்வால்.  சாதாரண உருவம்.  நீங்கள் எதிரே பார்க்கும் ஒரு சாதாரணப் பெண் போல..  ஆனால் ஏதோ ஒரு கவர்ச்சி கண்ணைக் கட்டி நிறுத்தும்.  அப்போது ஹிந்து பத்திரிகையில் வந்த இவரது ஒரு முழுப்பக்க படம் ஏதோ ஒரு விளம்பரத்துக்கு கொடுத்திருந்தது, அதை வெட்டி சென்னையில் என்  அலுவலக அறையில் ஒட்டி வைத்திருந்தேன்.  'திருடா திருடா' என்கிற தமிழ்ப் படத்தில் கூட நடித்திருக்கிறார்.

அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கச் சென்றபோது என்னை அதிர்ச்சி தாக்கியது.  சினிமாக்களில்தான் சாதாரணமாக ஒரு பாடல் காட்சியிலோ, கிளைமாக்சிலோ நினைவு வந்து விடும்.  மீள முடியாத விபத்தில் சிக்கி, ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பி, 29 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டபோது பழைய நினைவுகள் எதுவுமே இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்!  அதை பாஸிட்டிவாக அணுகி, இமயமலை சென்று தவவாழ்க்கை மேற்கொண்டு, அப்புறம் ஒரு நிறுவனம் தொடங்கி...    கிரேட்.   விக்கியிலிருந்து அந்த பகுதியை கொடுத்திருக்கிறேன்.

Anu was born on 11 January 1969 in Delhi and was also raised in New Delhi. She had been acting since her school days. When she was in grade 7, she passed a stiff competition to act in a monologue. Next year, when she was in grade 8, she started a theater group. In grade 9, she both acted in as well as directed a play. In grade 10, she began writing a script, when she had to stop everything due to her board exams.[3] She was a gold medalist in sociology at Delhi University.[4] After a brief stint in modelling, and VJing, and appearance in the Doordarshan serial Isi Bahane (1988), she made her Bollywood debut with the musical blockbuster Aashiqui, following which she was much in demand.[4]

In 1997 she joined Yoga in Bihar School of Yoga and stayed there as a Karmayogi. In 1999 she was back in Mumbai to pack her things when a serious car accident happened. Aggarwal was in a coma for 29 days, which left her with no memory of her earlier life.[5] After that in 2001 she became a monk. She lives in Mumbai and is single.[5] She practices yoga. She stated in one of her interviews: "To feel strong, to walk amongst humans with a tremendous feeling of confidence and superiority is not at all wrong. The sense of superiority in bodily strength is borne out by the long history of mankind paying homage in folklore, song and poetry to strong women".

Aggarwal is a motivational TED featured speaker, runs Anu Aggarwal Foundation for mental health, environmental well-being, stress relief, and discovering joy in the challenged times of today.  After losing her memory and facing a long recovery, she rebuilt her life through yoga and spiritual practices, eventually becoming a mental wellness advocate and autho  

  • She left the glamour industry to become a monk, living in the mountains, and later established the Anu Aggarwal Foundation to teach yoga and meditation.
  • Comeback and Advocacy: She published an autobiography, Anusual: Memoir of a Girl Who Came Back from the Dead, and continues to work in mental wellness and healing 

===========================================================================================

ரா கி ரங்கராஜன் தன் கதை ஒன்று புத்தகமானபோது எழுதிய முன்னுரை.  என்ன கதை?  

"ஒளிவதற்கு இடமில்லை"!

என்னுடைய ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அதை எப்போது எழுதினேன், ஏன் எழுதினேன், என்ன ஆராய்ச்சிகள் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கையில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் ஞாபகம் வரும்.

ஆனால் ஒளிவதற்கு இடமில்லை நாவலை எழுத நேர்ந்த சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது.

அப்போதெல்லாம் வருஷத்துக்கு மூன்று நாலு சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள். ஒவ்வொன்றிலும் ஒரு பிரபல எழுத்தாளருடைய தொடர்கதை ஆரம்பமாகும். அந்த முறை எந்த எழுத்தாளரும் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆகவே அமரர் எஸ்.ஏ.பி, 'நீங்களே எழுதுங்கள்' என்றார் என்னிடம்.

'ஏற்கெனவே ஒரு தொடர்கதை என் பெயரில் வந்து கொண்டிருக்கிறது?' என்றேன். 'சின்னக் கமலா' என்ற தொடர்கதை இருபது இருபத்தைந்து அத்தியாயங்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயம் அது.

'அதனாலென்ன? அது பாட்டுக்கு அது வந்து கொண்டிருக்கட்டும். வேறு பெயரில் நீங்கள் எழுதுங்கள்,' என்றார் ஆசிரியர்.

என்னிடம் நாவல் எழுதுவதற்கான 'ஐடியா' எதுவும் அப்போது இருக்கவில்லை. இருந்தாலும், அவருடைய அன்புக் கட்டளையை எப்படி மீற முடியும்? 'ஒளிவதற்கு இடமில்லை’ என்ற இந்த நாவலை, 'டி. துரைசாமி' என்ற புனை பெயரில் எழுத ஆரம்பித்தேன். டி. துரைசாமி என்று ஏன், எப்படிப் பெயர் சூட்டிக் கொண்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. 'சின்னக் கமலா' தொடர்கதை சுமார் இருபது வாரங்களில் முடிந்தது. அந்த இருபது வாரமும் 'ஒளிவதற்கு இடமில்லை'யும் வந்தது. ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளன் நானாகத்தான் இருக்கும். இந்த இரண்டுக்கும் நடுவில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் முதலானவையும் எழுதிக்கொண்டிருந்தேன். அதெல்லாம் ஒரு பொற்காலம். எப்படி என்னால் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இதைப் படிப்பவர்களும் நம்பமாட்டார்கள். எஸ். ஏ.பி என்ற மகத்தான மனிதரின் மந்திரக்கோல் விளைவித்த அதிசயங்களுள் இதுவும் ஒன்று.

இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுஜாதா ஒருமுறை காரியாலயத்துக்கு வந்திருந்தார். பகல் உணவுக்கு என் வீட்டுக்கு வரும்படி அவரை அழைத்திருந்தேன். வந்தார், புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, 'ஒளிவதற்கு இடமில்லை' என்பது ஒரு பிரமாதமான தலைப்பு! இப்படி ஒன்று எனக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையாக இருக்கிறது!' என்று சொன்னது நேற்றுப்போல் பசுமையாயும் பெருமையாயும் இருக்கிறது. 'டி. துரைசாமி' என்ற பெயர் எந்த வானத்திலிருந்து குதித்ததோ - அதே வானத்திலிருந்துதான் “ஒளிவதற்கு இடமில்லை’யும் குதித்திருக்க வேண்டும்!

இன்னொரு வேடிக்கையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

ஒரு தொடர்கதையைப் பற்றி பேசுவதற்காக என் வீட்டுக்கு வந்த டைரக்டர் கே. பாக்கியராஜ், 'எனக்கு ரொம்ப நாளாய் ஒரு ஆசை. டி. துரைசாமி என்ற ஒரு தொடர்கதை எழுதினாரே, அவரைப் பார்க்க வேண்டும்,' என்றார். இப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்' என்று நான் பதிலளித்ததும் அவர் திகைத்த திகைப்பு! 'ஒளிவதற்கு இடமில்லை' நாவலில் அவருக்கு மகா மோகம். அவருடைய 'பாக்யா' இதழில் மொத்தத் தொடர் கதையையும் வாராவாரம் மறுபிரசுரம் செய்தார்.

- ரா கி ரங்கராஜன் 

=========================================================================================

பாஹே பக்கம்.  

உனக்கு அதெல்லாம் சரிவராது ".  என்னைப்பற்றி அப்பாவின் அபிப்ராயம்...


"என் கடிதங்கள் போல கதை, கட்டுரைகளும் போட்டோ எடுத்து கம்பியூட்டரில் இடம் பெறுமா? (எங்கள் குடும்ப நெட்ஒர்க் க்ரூப் ஒன்று யாஹூ மெயிலில் இருந்தது) ஆம் எனில் கணையாழி, புதிய பார்வையில் வந்ததைச் செய்யலாமே..."--------------" பற்றி எழுதியதில் கடைசி வார்த்தை வரும்வரை திக்திக்! 

தினமலர் இ உ இ  பகுதிக்கு போஸ்ட் கார்ட் வேண்டாம்.  IL or கவர்.  அப்பகுதியில் கீழே விலாசம், e mail முகவரி கூட கொடுக்கிறார்கள்.  Presentation தான் முக்கியம்.  ஆபீஸ் தொடர்பான அரசுப் பணியில் சர்ச்சை ஏற்படுத்துவதை எல்லாம் நீ எழுதக் கூடாது.  பொது விஷயமானாலும் சுஜா  (பாஸ்)பெயரில் எழுதுவது நல்லது.  நான் பணியில் இருந்தபோது நிறைய எழுதி இருக்கிறேன். உனக்கு அதெல்லாம் சரிவராது.

அன்றாட கூத்துகள் எழுதி கட்டுப்படி ஆகாது. இன்று உதிர்க்கப்பட்ட பொன்மொழி - மகனிடம் "நான் சிரமப்பட்டு படித்துதான் இப்போது ஒரு குடும்பத்தையே தாங்குகிறேன்.  4 உயிர்கள் என் கையில்"

ருசி மறந்து, பசி துறந்து, தாகம் நீக்கி என் பொழுதுகளைக் கழிக்கிறேன்.  விட்டெறிய காசு இருக்கிறது.  எறிந்து கொண்டே இருக்கிறேன்.  எதுவும் ஓசி என்பது என் அகராதியில் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, யார் தயவிலும் நானும் இல்லை. சரிதானே!"

=======================================================================================

சாண்டில்யன் பக்கம் 

'விலங்கு பகையல்லாது 
கலங்கு பகையறியாக் 
கொழும் பல் குடிச் 
செழும்பாக்கத்து' 

என்று இலக்கியம் விவரிப்பது போல் கண்ட மாத்திரத்திலேயே அஞ்சி விலகிச் செல்லும் பகைவரைத் தவிர, கலங்கவைக்கும் பகைவரையே அறியாத அந்தப் புகார் நகரம் பல பாக்கங்களை அங்கங்களாகக் கொண்ட வீரர்கள் நிறைந்த பட்டினமாதலால், பகையைப் பற்றிய எண்ணமே சிறிதுமில்லாமல் நகரத்தின் கடற்புறத்தே யிருந்த மணல் திட்டுகளில் கூரை வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்த பரதவர் என்ற வலைஞர்களிற் சிலர், இரவு ஏறுவதைப் பற்றிய எண்ணம் எள்ளளவும் இல்லாமல், ஆட்டுக் கிடாவோடு ஆட்டுக் கிடாவையும், சேவலோடு சேவலையும், கௌதாரியோடு கௌதாரியையும் சண்டை விட்டுக் கூட்டம் கூட்டமாகக் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொம்மாளமிட்டுக் கொண்டிருந்ததாலும், மற்றும் சிலர் இறைச்சியை ஒரு கையால் கடித்துக்கொண்டு மற்றொரு கையில் ஏந்திய மதுக் கிண்ணத்திலிருந்த மதுவைக் குடித்துவிட்டு உளறிக் கொண்டிருந்ததாலும், எங்கும் நானாவிதமான கூச்சல்கள் நிரம்பி இரவைப் பகலாக அடித்துக்கொண்டிருந்தன. 

கலங்கு பகை இல்லாவிட்டாலும் காவலைத் தவிர்க்க விரும்பாத யவன வீரர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு அணி வகுத்து நான்கு நான்கு பேர்களாகக் கடற்கரையோர மாகப் பல இடங்களில் நடந்து கொண்டிருந்ததன் விளைவாக, அவர்கள் பாதங்களில் தரித்துச் சென்ற தோற் செருப்புகளின் 'சரக் சரக்'கென்ற ஒலியும், மார்புகளில் அவர்கள் அணிந்திருந்த கவசங்களில் உராய்ந்த வீரப் பதக்கங்களின் சப்தங்களும் சேர்ந்ததால், புகாரின் கடற்கரைப்பகுதி எதிரிகளை நோக்கி, வீரகர்ஜனை செய்து கொண்டிருந்தது போன்ற பிரமையைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. 

வெளிநாட்டில் மரக்கலங்களுக்கு வழிகாட்டுவதற்காகப் புகார் நகரின் கடற்கரையில் அமைக்கப்பட்டு வானைப் பிளந்து நின்ற கலங்கரை விளக்கத்தில், சுடர் விட்டுப் பிரகாசித்த பெரும் தீப்பந்தங்களுக்கு அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள், மேலிருந்து எண்ணெய் கேட்டுப் போட்ட கூச்சல்களும் அதற்குத் தரை மட்டத்திலிருந்து கிடைத்த பதில்களும் சேர்ந்து, அமைதியைக் கிழிப்பதற்கு உயரம் ஒரு பெரும் தடையல்ல என்பதை நிரூபித்தன.

விண்ணைத் தொட்டு நின்ற அந்தக் கலங்கரை விளக்கத்துக்குச் சற்று அப்பால் தள்ளி வரிசையாகக் கிடந்த மீனவர் சேரியில்,

"துணைப் புணர்ந்த 
மடமங்கையர் பட்டு நீக்கித் 
துகில் உடுத்து மட்டு நீக்கி 
மது மகிழ்ந்து மைத்தர் 
கண்ணி மகளிர் சூடவும்"

என்று 'பட்டினப்பாலை' கூறும் விளக்கத்தின்படியே பரதவர் குல மங்கைகள், இரவு ஏறிவிட்டதன் காரணமாக அதுவரை கட்டிக்கொண்டிருந்த பட்டாடைகளை நீக்கி வெள்ளைத் துணிகளை உடுத்தி, வழக்கமாக உண்ணும் கள்ளை விடுத்துக் காமவெறியில் திளைத்து, சுறாமீன் எலும்பில் மாட்டிக்கிடந்த கணவர் மாலைகளைத் தங்கள் கழுத்திலணிந்து கொண்டும், கணவர்கள் மனைவிமார்களின் மாலைகளை அணிந்து கொண்டும் நிலைமாறிக் கோஷமிட்டு, ஓடிப் பிடித்துக் கட்டிப் புரண்டு விளையாடிய காதல் விளையாட்டின் வெறிக்கூச்சல் வேறு, பூம்புகாரின் கடற்கரைப் பகுதியைப் பீடித்துக் கொண் டிருந்ததால் எங்கும் அமைதியில்லாத நிலையே நிலவிக் கிடந்தது. 

அந்த நிலை அடங்கக் காலம் வந்துவிட்டது என்பதை அறிவுறுத்த இஷ்டப்பட்டதுபோல், புகாரின் மேற்குப் பகுதியான பட்டினப்பாக்கத்திலிருந்த மணி வண்ணன் கோயிலின் இரண்டாம் ஜாம மணி பெரிதாக ஒலித்து நாற்புறங்களிலும் ஊடுருவிச் சென்றாலும், அதையும் லட்சியம் செய்யாமல் புகாரின் கடற்கரைப் பகுதியான மருவூர்ப்பாக்கத்திற்கும் மேற்குப் பகுதியான பட்டினப் பாக்கத்திற்கும் இடையேயிருந்த வர்த்தகச் சாலையில் எகிப்தியர், சீனர், கடாரத்தார், ரோமர், கிரேக்கர் ஆகிய பல நாட்டு வணிகர்களின் பேரக் கூச்சல்கள் பெரிதாகவே கேட்டன. 

நடுநிசி நெருங்கிக் கொண்டிருந்ததற்கு அடையாளமாகப் புகாரில் புத்த விஹாரங்களில் பௌத்தத் துறவிகள் கோஷித்த அமைதி வேதம்கூட, இத்தனைக் கூச்சல்களுக்கிடையே அர்த்தமற்றுப்போய் அமைதிக்கும் வாழ்க்கைக்கும் அதிக சம்பந்தமில்லையென்பதை நிரூபித்தது.

பூம்புகார் ஒரு இரவு நேரத்தின் பற்றிய வர்ணனை யவன ராணி சாண்டில்யன்

===================================================================================== 

இந்த வார குறுக்கெழுத்துப் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன் கைவண்ணம்.

1 2 3
4
5 6
7

மேலிருந்து கீழ்:   

1. அருஉரு   (4)
2. சுவையான சைட் டிஷ் குழம்பியிருக்கிறது (4)  
3. வாள்கள் மோதும் ஓசையில் நகைச்சுவை நடிகர் (3)
 4.  பொடியன்கள் (3)   

இடமிருந்து வலம்: 

1. ஒரு டீ வகை 
5. மணிரத்னம்,ஜெயமோகன் கூட்டணி தோல்வி   (3)
6. மாமா கையில் சமாதானம் (2)  
7. புழக்கத்தில் இல்லாத பைசாவை திருப்பி போடுங்கள் (2)

கீழிருந்து மேல் 

7. கடிதத்தின் கடைசி வரி.  முரளி நடித்த படம்.

===========================================================================================

ஓவியத்தின் அருமை, திறமை.  ஒரு விபத்தின் ஓவியம்.



ஹிஹிஹி.....


அழகான எம் ஜி ஆர் 

விகடன் விலை ஏறிப்போச்சுடோய்....


கொஞ்சம் உபயோகமான ஷேர்தான்..  இல்லை?


========================================================================================

நன்றி JKC ஸார்.


===================================================================================

ஹிந்தியில் 'ஆ கலே லக் ஜா' என்று வந்த படத்தை தமிழில் உத்தமன் என்று கெடுத்தார்கள்.  ச்சே...  எடுத்தார்கள்.  அதில் ஒரு பாடலை அப்படியே ஆர் டி பர்மன் இசையாகவே கொடுத்தார்கள் (கேளாய் மகனே).  ஒரு டியூயட்டை கே வி எம் புதுசாக கொடுத்தார்.  இனிமையான பாடல் அது. கண்ணதாசன் பாடல்.  சிவாஜி மஞ்சுளா.

1976 ல் வந்த இந்தப் படத்தில் சிறு வேடங்களில் பிரபுவும், எஸ் ஏ சந்திரசேகரும் நடித்திருக்கிறார்கள் என்பது அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத செய்தி!

P. சுசீலா  : தேவன் வந்தாண்டி
ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாண்டி

TMS  : தேவன் வந்தாண்டி
ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டாண்டி
மலர் கட்டில் கொண்டாடி

P. சுசீலா : ஆ….இமய மலைச் சாரலுக்கு
நன்றி சொல்லடி

TMS  : யார்க்கும் இந்த வகை முதலிரவு
வந்ததல்லடி

P. சுசீலா : தேவன் வந்தாண்டி
ஒரு தீபம் கொண்டாடி

TMS : காதல் கொண்டாண்டி
மலர் கட்டில் கொண்டாடி

P. சுசீலா : ஆவியோடு கலந்து விட்டான்
கொஞ்சம் முன்னாடி
என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
அழகு கண்ணாடி
ஆவியோடு கலந்து விட்டான்
கொஞ்சம் முன்னாடி
என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
அழகு கண்ணாடி

TMS : காதல் இளம் மங்கை இவள்
கால்கள் தள்ளாடி
காதல் இளம் மங்கை இவள்
கால்கள் தள்ளாடி
என் கைப்பிடியில் சாய்ந்து விட்டாள்
கவிதை பந்தாடி கவிதை பந்தாடி 

P. சுசீலா : தேவன் வந்தாண்டி
ஒரு தீபம் கொண்டாடி

TMS : காதல் கொண்டாண்டி
மலர் கட்டில் கொண்டாடி

P. சுசீலா : பூவை இவள் உடலைச் சுற்றி
பூவை போடடி

TMS : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
புடவை ஏனடி

P. சுசீலா : பூவை இவள் உடலைச் சுற்றி
பூவை போடடி

TMS : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
புடவை ஏனடி

P. சுசீலா : தேடி வைத்த கனியை எல்லாம்
மூடி வையடி
தேடி வைத்த கனியை எல்லாம்
மூடி வையடி

TMS : நல்ல தேன் வழியும்
இதழிருக்க
கனிகள் ஏனடி கனிகள் ஏனடி

P. சுசீலா : தேவன் வந்தாண்டி
ஒரு தீபம் கொண்டாடி

TMS : காதல் கொண்டாண்டி
மலர் கட்டில் கொண்டாடி

P. சுசீலா : தஞ்சம் என்று வந்து விட்டேன்
தழுவச் சொல்லடி
நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
தயக்கமென்னடி
தஞ்சம் என்று வந்து விட்டேன்
தழுவச் சொல்லடி
நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
தயக்கமென்னடி

TMS : தமை மறந்து மயங்குதற்கு
நல்ல நாளடி
தமை மறந்து மயங்குதற்கு
நல்ல நாளடி
என்றும் தனிமையிலே இனிமையுண்டு
கதவை மூடடி

P. சுசீலா : ஆ….இமய மலைச் சாரலுக்கு
நன்றி சொல்லடி

TMS : யார்க்கும் இந்த வகை முதலிரவு
வந்ததல்லடி

P. சுசீலா : தேவன் வந்தாண்டி....
TMS : ஒரு தீபம் கொண்டாடி.....

P. சுசீலா : காதல் கொண்டாண்டி.....
P. சுசீலா, TMS : மலர் கட்டில் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி மலர் கட்டில் கொண்டாடி

146 கருத்துகள்:

  1. இன்றைய வியாழன் கதம்பம் மிகச் சிறப்பாக இருந்தது.

    இவ்வளவு நேரம் படித்தும் இன்னும் சில பகுதிகள், சாண்டில்யன் தொடங்கி, படிக்கவேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

      நீக்கு
    2. வெள்ளிப்பூச்சிதறல்கள் வியாழன் கதம்பமாக்கி விட்டது. எப்படியோ இன்றைய நல்ல நாளில், ஸ்ரீ ராமருக்கு உகந்த நறுமணமுள்ள பூ சூட்டுமாலையாக இங்கு பரிமளித்திருக்கிறது கண்டு மகிழ்வடைகிறேன். நன்றி

      நீக்கு
    3. நெல்லை எங்கே அம்பேரிக்காவில் இருக்காரா? இன்னிக்கு வியாழன்னு சொல்லிண்டு இருக்காரே? அல்லது பதிவுகளின் தொகுப்பு அப்படிச் சொல்ல வைச்சிருக்கோ?
      கமலா அவர்களாவது ஸ்ரீராமரை நினைச்சுண்டது சந்தோஷம்.

      நீக்கு
    4. நெல்லை சென்னையில்!

      நீக்கு
    5. கீதாக்கா அது நெல்லை கலாய்ச்சிருக்கார். சும்மானாலும்!!!

      கீதா

      நீக்கு
    6. சென்னையிலிருந்து நேற்றே காலையில் பெங்களூர் வந்து சேர்ந்துவிட்டேன்.

      கீர சரியா கணிச்சிருக்காங்க.

      கமலா ஹரிஹரன் மேடம், நீங்கள்லாம் ஸ்ரீராமரை நினைக்கத் தடையேது? இராம நவமிலதான் நீங்க கஷ்டப்படாம வெல்லத்தைக் கரைத்து பானகமும், இருக்கும் மோரில் நீர்விட்டு நீர் மோரும் செய்துவிட்டு, இன்று இராமநவமிக்கு எல்லாம் செய்துவிட்டேன்னு சுலபமாச் சொல்லமுடியும். இதுவே பிள்ளையார் சதுர்த்தி, ஜென்மாஷ்டமிலாம் வந்தால், எவ்வளவு வேலைகள் உங்களுக்கு இருக்கும்?

      நீக்கு
    7. வணக்கம் சகோதரரே

      உங்களது "வியாழன் கதம்பம்" என்ற பின்னூட்டத்தைப் பார்த்துதான் நான் அவ்விதம் கருத்தில் கண்டது போல் எழுதினேன் என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லையா? ராமரை நினைக்காத நாளேது.? ஒவ்வொரு அசைவுக்கும் இறைவனை அழைப்பது நம்/என் இயல்பல்லவா..!

      இன்று இருக்கும் மோரில் மட்டும் நீர் மோர் கரைக்க மாட்டேன்.என்னால் முடிந்த அளவு புதிதான மோரில் கரைத்த நீர் மோர், எலுமி.பானகம், சாதம் பருப்பு, சாம்பார், வெண்டைக்காய்கறி, வடை, பாயாசத்துடன் ஸ்ரீராமருக்கு நேவேத்தியம் செய்து சாப்பிட்டோம். இன்று ராமரின் பிறந்த நாள் அல்லவா..! குறிப்பாக இன்று அவரை மறக்க முடியுமா? நீங்களும் சிறப்பாக வீட்டில் கொண்டாடியிருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    8. எங்க வீட்டிலும் பாயசம், வடை, வடைப்பருப்பு அல்லது சுண்டல், தயிர்சாதம், சாதம் பருப்பு, பானகம், நீர்மோர் உண்டு. அதென்னமோ ஸ்ரீராம நவமிக்கு முப்பருப்பு வடைதான் பண்ணுவாங்க. நீர்மோருக்கெல்லாம் தனியாக உறை ஊத்தி வைச்ச தயிரைக் கடைஞ்சு தான் தயாரிப்போம். அதே போல் பானகமும். வடைப்பருப்பு நம்மவருக்குப் பிடிக்காது என்பதால் கொஞ்சமா எனக்கு மட்டும் பண்ணிப்பேன்.

      நீக்கு
    9. இன்று எங்கள் வீட்டில் பானகம், நீர்மோர், பருப்புவடை, திருக்கண்ணமுது...  அஷ்டே...

      நீக்கு
  2. ராகிர பற்றிய பகுதி நன்று. பிறகு யோசிக்கும்போது, எப்படி இதெல்லாம் செய்ய முடிந்தது என்பது பலருக்கும் தங்கள் வாழ்வில் தோன்றும் கருத்து என நினைக்கிறேன்.

    இன்று ஜீவி சார், ராகிர பற்றி எழுதுவது உறுதி

    பதிலளிநீக்கு
  3. KSRTC சம்பவம்.... பணத்துக்காக இயந்திரத்தனமாக வேலை செய்யாமல் அதில் ஒரு ஆத்மார்த்தம், சின்சியாரிட்டி காண்பிப்பதே ஒரு சமூக சேவைதான்.

    படித்ததில் பிடித்த பகுதி இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  குழந்தைகளை வழிதவற விட யாருக்குதான் மனசு வரும்.  புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார்.

      நீக்கு
  4. அப்பா பரமக்குடியில் வேலை பார்த்ததாலும், அங்குதான் முதன்முதலாக ஹெட்மாஸ்டர் அந்தஸ்துக்கு உயர்ந்ததாலும், குன்னக்குடி பற்றிப் பேசும்போது, அவர் பரமக்குடிக்கார்ர்னு சொல்லுவார்.

    வாழ்வில் முன்னேற, எவ்வளவோ எதிர்ப்பை, பழம் தின்று கொட்டை போட்டவர்களிடம் சந்தித்து எதிர் நீச்சல் அடித்து முன்னேறியவர் அவர்.

    அவர் பற்றி நினைக்கும்போது, ராஜராஜசோழன் படப் பாடல்களும், கொட்டாம்பட்டி ரோட்டிலே பாடலும் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வம் பாடல்கள் எல்லாம் அவர்தானே...   'தோடியில் பாட வந்தேன்' என்று சேஷகோபாலன் ஒரு பாடல் பாடுவார்.  

      குன்னக்குடி 'கோடி மலைகளிலே' பாடலுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதியதைப் பற்றி சொன்னதைப் படித்திருப்பீர்கள்.  பனியதி நதியதி கடலாதி சகலமும் உனதொரு கருணையில் வருவது...

      நீக்கு
  5. அனு அகர்வால்.... வாழ்க்கையைப் புரட்டிப்போட ஒரு கணப்பொழுது போதும் என்பதை நிரூபிக்கிறது. இது பற்றி எல்லோரும் எழுத இயலும். அவரவர் வாழ்க்கையிலும் புரட்டிப்போட்ட சம்பவங்கள் இருந்திருக்காதா?

    அதை மீண்டு வந்தவர் அனு அகர்வால், காஞ்சனா போன்ற பலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு அகர்வால் கதையே வேறு நெல்லை.  இன்னமும் அவர் பழைய நினைவுகள் வராமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.  பிரமிக்க வைத்த விஷயம்.

      நீக்கு
    2. இப்போ அவங்க முற்றிலும் புதிய மனுஷி இல்லையா?

      நீக்கு
    3. வார்த்தை மாறாமல்!

      நீக்கு
  6. "தேவன் வந்தாண்டி" இனிமையான பாடல்தான். நான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. டூயட் பாடலில் பின்னால் பத்துப் பேரை டான்ஸ் ஆடச் செய்வது பாரதிராஜா கொண்டு வந்த வழக்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 1976 லியே இந்த வழக்கம் வந்து விட்டதா? யார் இந்த க்ரூப் டான்ஸ் கான்ஸெப்டுக்கு முன்னோடி என்று தெரிந்தால் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா ஸார்..   க்ரூப் டான்ஸ் 'சந்திரலேகா'விலேயே வாசன் கொடுத்திருந்தார் என்பதை பார்த்திருப்பீர்கள்!  நானும் உத்தமன் படம் பார்க்கவில்லை.  அந்தப் படத்தில் இந்தப் பாடலும் 'கேளாய் மகனே' பாடலும் மட்டும் எனக்குப் பிடிக்கும்.

      நீக்கு
    2. கரெக்ட். சந்திரலேகாவிலேயே க்ரூப் டான்ஸ் வந்து விட்டது. ஆனால் நான் கேட்டது வேறு. கதாநாயகனும் கதாநாயகியும் டூயட் பாடும்போது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பேக்ரவுண்டில் ஆடும் வழக்கம் பற்றிக் கேட்டேன்.

      நீக்கு
    3. ஆராய்ந்துதான் பார்க்கவ வேண்டும்.  

      நீக்கு
    4. சமீப காலங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் தனியாக டூயட் பாடுவதைக் காண இயலவில்லை. எப்போதும் பத்து இருபது பேர் கூட ஆடுகின்றார்கள்

      நீக்கு
    5. ரிச் ஆக எடுக்கின்றனர்.  மேலும் இரு கோடுகள் தத்துவமாகவும் இருக்கலாம்!  அதை விடுங்கள்  இப்போதெல்லாம்  டாஸ்மாக் காட்சி இல்லாத படங்களே கிடையாது பார்த்தீர்களா?  அதை ஒரு கடமையாகவே வைக்கிறார்கள்.

      நீக்கு
    6. சூர்யா சார்.. அதுக்குக் காரணம் கதாநாயகன் தூரத்து ஷாட்களில் கதாநாயகிக்கு தொந்தரவு கொடுப்பதால் கதாநாயகிக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்பு, திரையையும் ஆட்களால் நிரப்பலாம் என்ற காரணமோ?

      நீக்கு
  7. "ஒளிவதற்கு இடமில்லை" படித்திருக்கின்றேன். ஆனால் ராகிர "டி. துரைசாமி" என்ற பெயரில் எழுதினார் என்பது நான் இது வரை கேள்விப்படாதது. நல்ல எழுத்தாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரா கி ர பல்வேறு பெயர்களில் எழுதினார் என்பதை அறிந்திருப்பீர்கள்.  அதிகமான மாற்றுப் பெயர்களில் எழுதிய ஒரே எழுத்தாளர் அவராகத்தான் இருப்பார்.

      நீக்கு
  8. /அப்போது ஹிந்து பத்திரிகையில் வந்த இவரது ஒரு முழுப்பக்க படம் ஏதோ ஒரு விளம்பரத்துக்கு கொடுத்திருந்தது, அதை வெட்டி சென்னையில் என் அலுவலக அறையில் ஒட்டி வைத்திருந்தேன்./
    அலுவலக அறையிலா? தைரியந்தான் உங்களுக்கு. உங்கள் (அலுவலக)பாஸோ அல்லது கூட வேலை செய்பவர்களோ கலாய்க்க வில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டோக்ராபிக் அழகுக்குமாகத்தானே வைத்திருந்தேன்..  ஒன்றிரண்டு பேர் கலாய்த்தாலும் அவர்களும் அதை ரசித்தார்கள்.  அதுசரி, ஆஷிக்கி பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா..   "ஆமாம், நானும் கேட்டிருக்கிறேன்..  ஆஹா..  அந்த ----------  பாடல்" என்னும் சிலாகிப்பை யாராவது சொல்வார்கள் என்று காத்திருக்கிறேன்!

      நீக்கு
  9. /" உனக்கு அதெல்லாம் சரிவராது "/
    வடிவேலு சிங்கமுத்து காமெடிதான் நினைவுக்கு வந்தது 😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..  ஆனால் நான் பத்திரிகைகளுக்கு எதுவுமே அனுப்பியதில்லை.  அனுப்புவதில்லை.  அந்த கல்கி கவிதை ஒரு விதிவிலக்கு! தந்தை சொல்மிக்க மந்திரமில்லை!

      நீக்கு
  10. தினமலர் இஉஇ பகுதிக்கு எழுதியுள்ளீர்களா? இஉஇ . இங்கு அவ்வப்போது பகிரலாமே!
    இப்போதெல்லாம் இஉஇ தவறாமல் படிக்கின்றேன். சமயத்தில் எவ்வளவு கற்பனை எவ்வளவு உண்மை என்ற கேள்வி மனதில் எழும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  அனுப்பவில்லை.  அந்தப் பொறுமை எனக்கு அப்போதும் இல்லை. வாரமலரில் வருவதை பெரிய விஷயமாக நினைக்கத் தோன்றவில்லை.  வேறெதற்கும் கூட அனுப்பவில்லை!  பிளாக்..  பிளாக்..  பிளாக்தான்!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. சிலேடையில் ஏதாவது க்ளூ விட்டுப் போய் விட்டதோ? கொடுத்த க்ளூக்கள் எல்லா வெள்ளைக் கட்டங்களையும் நிரப்ப வில்லையே என்பதால் கேட்கிறேன். விடையை எப்படிப் பகர்வது? பின்னூட்டத்தில் போட்டால் மீதிப் பேருக்கு ஸ்வாரஸ்யம் போய் விடுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கொடுத்திருந்த க்ளூக்களை கொடுத்திருக்கிறேன்.  சரியாகத்தான் வருகிறது!  விடைகளை sri.esi89@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலா,ம்.  அல்லது  பானு அக்கா வந்து அவர் ஈமெயில் முகவரி கொடுக்கலாம்.  வெற்றியாளரை அவரே அறிவிக்கலாம்!

      நீக்கு
    2. நீங்கள் இங்கேயே சரியாகக் கேட்டிருக்கிறீர்கள்.  நான்தான் விழித்துக் கொள்ளவில்லை.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி நல்வாழ்த்துகள். ஸ்ரீ ராமரின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன்

    இன்றைய வெள்ளி சிதறல்கள் அனைத்தும் அருமை. நிறைய விஷயங்களை உள்ளடக்கியதாக அமைத்திருப்பதற்கு பாராட்டுக்கள் . எழுத்தாளர் ரா. கி. ர அவர்களின் எழுத்துக்கள், அவரின் திறமை மிக உயர்ந்தது.

    உங்கள் அப்பாவின் எழுத்துக்களையும், திறமையும் கண்டு வியக்கிறேன். அவரின் திறமைகள் அப்படியே வாழையடி வாழையாக தங்களிடமும் பிரதிபலிக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துகளை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி கமலா அக்கா. 

      //அவரின் திறமைகள் அப்படியே வாழையடி வாழையாக தங்களிடமும் பிரதிபலிக்கிறது. //

      ஆனால் நான் வாழைப்பழ சோம்பேறி!

      நீக்கு
    2. கமலா அவர்களாவது ஸ்ரீராமரை நினைச்சுண்டது சந்தோஷம். இங்கே ஸ்ரீராமும் சொல்லி இருக்கார். ராமரோட நக்ஷத்திரத்திலே பிறந்துட்டு அவரை நினைக்கலைனா எப்படி?

      நீக்கு
    3. அட ராமா... இதெல்லாம் கூடவா தப்பாகும்? ராமா.. ராமா...

      நீக்கு
    4. என்னவோ ஆதங்கம் போங்க. மத்தபடி தப்புனு எல்லாம் சொல்லலை. :( உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். :)

      நீக்கு
    5. அட ராமா...   இதுக்கெல்லாமா புண்படுவாங்க?  கவலைப்படாதீங்க..   ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்...

      நீக்கு
  14. இன்று திருமழபாடியில்
    நந்தி கல்யாணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று​. தமிழ் இளங்கோ ஸார் நினைவுக்கு வருகிறார்.

      நீக்கு
    2. அன்பிற்கினிய அற்புதமான நண்பர்.

      நீக்கு
  15. ஒளிவதற்கு இடமில்லை - டி துரை சாமி, அப்புறம் ராகிர அவர்களும்! ஒன்று சிறுகதை மற்றொன்று நாவலோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. உங்க கேள்வி புரியவில்லை.

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம், இரண்டு பேரும் வெவ்வேறு எழுத்தளர்களோ என்று நினைத்தேன். அப்புறம் ஒருவரே என்பதும் புரிந்துவிட்டது. எழுத்து நடை பார்த்ததும் இன்னும் தெளிவானது1

      கீதா

      நீக்கு
  16. ஓ! ஸ்ரீராம் இப்படி அந்தக் கதையை பாதில நிறுத்திட்டீங்களே அடுத்த பகுதிகளை ஸ்கான் செய்து போடாம!!!! சஸ்பென்ஸ்! ஒரு வேளை அடுத்த வெள்ளியில் போடுவீங்களோ!!!? ஒளிவதற்கு இடமில்லை....அந்த ரமணனிடம் உதவி கேட்டு வருகிறாளா? அல்லது இவள் வருங்கால கணவனா? வக்கீலா!!?? நிறைய யோசிக்க வைக்கிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்றா...   அதை எல்லாம் படிச்சுட்டீங்களா..  சரியாப்போச்சு போங்க..

      நீக்கு
    2. தலைப்பே சூப்பரான தலைப்பு, ஸ்ரீராம். ஈர்க்கிறது!

      கீதா

      நீக்கு
    3. ஆமாம், சுஜாதாவே சொன்னாராமே..

      நீக்கு
  17. டி துரைசாமின்ற பெயரைப் பார்த்ததும் எனக்கு நாஞ்சில் பி. டி. சாமி - பேய்க்கதைகள் மர்மக்கதைகளுக்குப் புகழ்பெற்றவர் அவர் நினைவுக்கு வந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கொஞ்சம்.. துரைசாமி என்கிற பெயரிலேயே இன்னொரு எழுத்தாளர் இருந்தாரோ...

      நீக்கு
    2. டி துரைசாமி எனும் பெயரில் ராகிரா எழுதியிருக்கிறார் என்று புரிநு கொண்டேன். எஸ் ஏ பி அவர்கள் சொன்னதால்

      கீதா

      நீக்கு
  18. மருக்கொழுந்து அணிந்துரை - நிறைய விஷயங்களைச் சொல்கிறது. கொ ம சுப்பு அவர்கள் இவ்வளவு அழகா கவிதை எழுதுவார் என்பதும் தகவலே.

    இரண்டாம் உலகப் போருக்கு நம்ம ஊர்லருந்தும் சிப்பாய்கள் எல்லாம் போயிருந்திருப்பது நம்மை ஆங்கிலேயர் எப்படி எல்லாம் பயன்படுத்தியிருக்காங்க என்று புரிய வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை படித்தவர்கள் அதை ஸ்கிப் பண்ணிட்டாங்க...!

      நீக்கு
    2. இது பத்தி நான் பதிவே எழுதினேன்.

      நீக்கு
    3. கொத்தமங்கலத்தின் இந்த புத்தகம் பற்றியா?

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இரண்டாம் உலகப் போரில் இந்திய சிப்பாய்கள் பங்கு பற்றியும் கப்பல் படை வீரர்களின் பணி, ஒத்துழையாமை போன்றவற்றைப் பற்றியும். காந்தி இவங்களை எல்லாம் எப்படி ஏமாற்றினார் எனப் புரிஞ்சுக்கலாம்.

      நீக்கு
    5. முன்னெல்லாம் தீபாவளிக்கு மட்டும் தான் மலர்னு போடுவாங்க. அது கூடக் குமுதம் மலரெல்லாம் போட்டது இல்லை. பெரிய குண்டு குமுதம் ஒண்ணு அல்லது சில சமயங்களில் 2 குமுதங்கள். அவற்றில் குனேகா சென்ட் போட்டிருப்பார்கள். மணக்கும். இந்த விகடன் தீபாவளி மலரையோ அல்லது விகடனின் மற்றப் பண்டிகைகள் சிறப்பிதழிலோ தலையங்கம் அடுத்து வரும் பக்கங்களில் அநேகமாகக் கொ.ம.சுப்புவின் கவிதைகளே இடம் பெறும். ஆவலுடன் வாசிப்பேன். கோபுலுவின் ரசனையான படங்களும் அதுக்கு அழகு சேர்க்கும்.

      நீக்கு
    6. ஓ அப்படியா? கோபுலு படங்கள் பழசு கொஞ்சம் எடுத்து வச்சிருக்கேன்.. அப்புறம் ஷேர் செய்யவா?

      நீக்கு
  19. குன்னக்குடி மற்றும் ஜெஜெ அவரிடம் பாட்டு கற்றுக் கொண்டது எலலம் சுவாரசியமான தகவல்கள். இந்தக் காணொளி பார்த்ததில்லை குறித்துக் கொண்டேன், ஸ்ரீராம் அப்புறமா பார்க்கணும்.

    ஜெ ஜெ க்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. நடனத்திலும் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாகம் இருக்கிறது. நான் ஒரு பாகம்தான் பார்த்தேன்.

      நீக்கு
  20. அனு அகர்வாலின் கதை மிகவும் சோகமான கதை என்றாலும் அதை அவர் இவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார் என்பது மிகவும் வியக்க வைத்த ஒன்று. உங்கள் வார்த்தை கிரேட்!!!! ஐ நானும் சொல்லிக் கொள்கிறேன்! இமயமலைப்பகுதியில் இருக்கிறாரா ஆஹா!!!

    ஓ மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் நடித்திருக்கிறாராஅ?

    ஆஷிக்கி பாடல்கள் கேட்டிருக்கிறேனா? ஏதோ கொஞ்சம் நினைவிருக்கிறதோ? பாடல்கள் வரிகள் வழக்கம் போல் தெரியலை என்றாலும் கேட்டால் நினைவுக்கு வந்துவிடும் கேட்டிருக்கிறேனோ என்றும் தெரிந்துவிடும்.

    திருடா திருடாவில் எங்க வீட்டாண்டை நடந்துச்சே சூட்டிங்....வீட்டுக்கு எதித்தாப்ல எல்லாரும் சுஹாசினி உட்பட நின்றிருந்ததை பார்த்திருக்கிறேன். ஆத்தங்கரை பக்கமும் எடுத்தாங்க. நாரோயில் பகுதிகள் நிறைய வரும் என்று சொன்னாங்க. நான் படம் பார்க்கவில்லை. எங்க வீட்டருகில் எடுத்தசீன் பாடலில் வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஷிக்கியின் நான்கைந்து பாடல்கள் எனக்கு அப்போது மனப்பாடம்.  இப்போதும் விட்டு விட்டு நினைவில் இருக்கிறது.

      நீக்கு
  21. ராகிரா பகுதி ரசித்து வாசித்தேன். தலைவர் கூட பாராட்டியிருக்கிறார் தலைப்பை.

    இந்த வரியை ரொம்பவே ரசித்தேன் - அதே வானத்திலிருந்துதான் “ஒளிவதற்கு இடமில்லை’யும் குதித்திருக்க வேண்டும்!//

    இந்தத் தலைப்பு நான் ஏற்கனவே குறிப்புகள் வைத்திருக்கும் கதைக்குப் பொருத்தமாக இருக்கு என்றும் தோன்றுகிறது. சரி அதுக்கென்ன வானத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பி ராகிராவைத் தொடர்பு கொண்டு, இந்தத் தலைப்பை இரவல் தாருங்க ஆசானே என்று கேட்கலாமோ!!! ஹிஹிஹி

    பாக்கியராஜ் மீள் பிரசுரம் செய்ததெல்லாம் அப்படினா அக்கதை எவ்வளவு நன்றாக இருந்த்திருக்கும் என்றும் தோன்றியது.

    நாவல் வாசிக்கக் கிடைக்குமா என்று தேடிய போது ஸ்க்ரிப்ட் ல் இருப்பது தெரிகிறாது முதல் பாகம். தமிழ் புக்ஸ் பிடிஃப் தளத்தில் இப்ப தரவிறக்கம் செய்ய முடியலை.

    நீச்சல்காரன் தளம் சொல்கிறது அவர் 27ஆயிரம் புத்தகங்களை மின்னூல் வடிவத்தில் தொகுத்து வைத்திருக்கிறார் என்ற தகவல் மற்றும் வாசிக்க சுட்டிகள் தரவிறக்கம் செய்யம் சுட்டிகள் கொடுத்திருக்கிறார்.

    அப்பால போய்ப் பார்க்கணும். இப்ப நேரமில்லை அதுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் Tamil Books ல டவுன்லோட் ஆகவில்லை.  நீச்சல்காரன் தளமா?  அதன் சுட்டி எனக்கு வாட்ஸாப்பில் கொடுங்கள் 

      நீக்கு
    2. நீச்சல்காரன் சுட்டி எனக்கும் கொடுங்க தி/கீதா, கீதா ரங்கன். :))

      நீக்கு
  22. ஓ! அதான் பணியிலிருநப்ப நடந்ததை நீங்க அதிகமெ ழுதலையோ? பாஸ் பெயரில் எழுதச் சொல்லியிருக்கிறாரே அதைத்தான் அதெல்லாம் உனக்குச் சரியா வராது என்று சொல்லியிருக்கிறாரோ? இல்லை, எழுத்தையா? !!!!!!

    நீங்க எழுதத் தொடங்கியதும், அப்பா வாசித்து என்ன கருத்து சொல்லியிருக்கிறார்? ஸ்ரீராம்?

    கடிதத்தில் வாசிக்க முடியலை. ஆனால் நீங்க கொடுத்தது நல்லதாச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கையெழுத்த வாசிக்க தனி திறமை வேண்டும்!  எனக்கே வராது!  நானே ஒரு இடத்துல கோடு போட்டிருக்கேன் பாருங்க..  எனக்கு எழுத வராதுங்கறார்.  ப்ரவோக் பண்ணினாரோ, நிஜமா சொன்னாரோ..  அவருக்கே வெளிச்சம்.  நானெல்லாம் அப்போ டெம்ப்ட் ஆகலை!

      நீக்கு
  23. எதுவும் ஓசி என்பது என் அகராதியில் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, யார் தயவில் நானும் இல்லை/ சரிதானே!"//

    சூப்பர்! சரியேதான்.

    ஆனா நாங்க ஓசில புக் வாங்கி வாசிக்கிறோமே! தப்போ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அவர் மனதில் என்னென்ன வருத்தங்கள் இருந்ததோ..

      நீக்கு
  24. சாண்டில்யன் பகுதி வர்ணனை அசத்தும் நடை. அதையும் கடினமாக எழுதியிருப்பதை ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரசித்துப் படித்துப் பகிர்ந்தேன்! நேற்றுதான் யவனராணி முடித்தேன்.

      நீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. நெல்லையின் முதல் பின்னூட்டம் படித்தவுடன்
    இன்றைய வியாழன் கதம்பம் மிகச் சிறப்பாக இருந்தது.
    இன்று வியாழனா என்ற நினைப்பு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா.. பழகிய மனதின் குழப்பம்! மனமயக்கம்.

      நீக்கு
  27. இந்தியச் சிப்பாய்களின் வீரம், கடமை உணர்ச்சி இவற்றில் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் , சிப்பாயின் குடும்பத்தினரும், அண்டை அயலும் — ஏன், மாடு, கன்றுகளும் தாம் — அவனைப் பார்க்காமல் ஏங்கும் சித்திரம் நம்மை நெகிழவைக்கிறது. போருக்குப் போகும்போது தொட்டிலில் இருந்த குழந்தை –இப்போதோ பள்ளிக்குச் செல்லும் பிள்ளை — ‘அப்பன் எங்கே’ என்று அம்மாவைக் கேட்பது, தந்திதபால்காரன் வந்தால் ‘எங்கே துயரச் செய்தி வந்துவிடுமோ’ என்று தாலியைத் தொட்டுப் பயப்படும் மனைவி, சிப்பாய்க்குப் பேர் இட்ட கிழவி தன் கடைசிக் காலத்தில் அவனைப் பார்க்கத் துடிப்பது ..போன்ற பல மனமுருக்கும் காட்சிகள் நிறைந்த ‘நிறைகுடம்’ இந்தக் கவிதை.//

    போரின் பாதிப்பால் எத்தனை குடுமபங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ! கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கவிதை போரில் பங்கு கொண்டு இருப்பவர்களின் குடும்பம் படும் பாட்டை சொல்லியது.

    போரில்லா உலகம் வேண்டும். அமைதி எங்கும் நிலவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்குமா? பேராசைக்காரர்கள் உலகம் இது.

      நீக்கு
  28. குமுதத்தில் வந்த இந்தக் கதை படித்திருக்கிறேனா.. நினைவில்லை... ஆமாம், யார் இந்த டி. துரைசாமி? இவரது வேறு கதைகள் படித்திருக்கிறோமோ?//

    விடை கீழ் பகுதியில் கொடுத்து விட்டீர்கள். ரா கி ரங்கராஜன் அவர் கதை புத்தகத்தில் எழுதிய முன்னுரையில் சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  29. //முதல்ல சாப்பிட்ட ஒரு ஆனதும்தான் சாப்பிடுவார்'//

    குன்னக்குடி பற்றிய தொகுப்பில் இங்கே கவனிக்கவும். ஸ்ரீராம். தொடர்பே இல்லை. "ஒரு இட்லி தான் சாப்பிடுவார்" என்று வந்திருக்கணுமோ? வார்த்தைகள் விடுபட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி பண்ணிட்டேன் கீதா அக்கா.  அது மட்டுமல்லாமல் மொத்தப் பதிவும் ஒரு பார்வை பார்த்து, ஆங்காங்கே கண்ணில் பட்ட பிழைகளை எல்லாம் சரி செய்திருக்கிறேன்.

      நீக்கு
  30. அனு அகர்வால் கேட்ட பெயர். படித்ததும் மனம் நெகிழ்ந்தது. தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவரை எங்கோ உயரத்துக்குக் கொண்டு போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் இணைத்திருக்கிறேனே...  அடையாளம் தெரியவில்லையா?

      நீக்கு
    2. அவ்வளவெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியறதில்லை ஸ்ரீராம். ரொம்பப் பிரபலங்கள் மட்டும் தான் அடையாளம் தெரியும்.

      நீக்கு
  31. உங்கள் அப்பா சொன்னதை கேட்டதும் எனக்கும் வடிவேல் சிரிப்பு நினைவுக்கு வந்தது.

    வேலை செய்யும் போது அதை பற்றி எல்லாம் எழுதி விட கூடாது என்று எச்சரித்து இருக்கிறார்கள்.

    தான் யார் பொருளாதார தயவிலும் வாழவில்லை என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்கள் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  பிரச்னை வரும் என்று எச்சரித்திருக்கிறார்.

      நீக்கு
  32. ஒளிவதற்கு இடமில்லை. படிச்ச நினைவு தான். ஆனால் நினைவில் இல்லை. ஹிஹிஹி, எப்போப் படிச்சேன்? குமுதத்திலேயா? அல்லது பைன்டிங்கா?

    கொ.ம.சுவைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. சில தெரிந்தவை. பல தெரியாதவை. நம்ம கவிஞர் கண்ணதாசனை அவர் பாராட்டி இருப்பது தெரியும் இல்லையா? எந்தப் பாடலுக்குனும் தெரிஞ்சிருக்கும்.

    "தாழையாம் பூ முடிச்சு, தடம் பார்த்து நடை நடந்து" பாடலுக்கு. தியேட்டரிலேயே பெரிய குரலில் "சபாஷ்" போட்டார் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஹிஹிஹி, எப்போப் படிச்சேன்? குமுதத்திலேயா? அல்லது பைன்டிங்கா? //

      நான் ஏதாவது கேள்வி கேட்பேன் என்று இப்படி சமாளித்திருக்கிறீர்கள் என்கிறேன்!!

      கண்ணதாசன் பாடல் பற்றிய செய்தி எனக்கு புதுசு.

      நீக்கு
    2. //நான் ஏதாவது கேள்வி கேட்பேன் என்று இப்படி சமாளித்திருக்கிறீர்கள் என்கிறேன்!!// எதுக்காக்கும் சமாளிப்ஸ் எல்லாம்? நிஜம்மாவே ஒளிவதற்கு இடமில்லை படிச்சிருக்கேன். அண்ணாவோட கலெக்ஷனோனு நினைவு.

      நீக்கு
    3. அதை ஒத்துக்கொள்கிறேன்.  எங்கே எப்போன்னு சொல்வதில் கொஞ்சம் நழுவிய மாதிரி இருந்தது!

      நீக்கு
    4. இங்க தான்னு சரியாத் தெரியாத போது அடிச்சுப் பேச முடியுமா? :)

      நீக்கு
  33. நினைச்சேன். ஒண்ணு ரா.கி.ர அல்லது புனிதனாக இருக்கும்னு. சொல்ல நினைச்சேன். அதுக்குள் படிச்சுட்டேன்.

    அசாத்திய மனோதிடம். தீர்மானமான உறுதியான கருத்து. என்றாலும் ஓர் அப்பாவின் கோணத்தில் உங்களைப் பார்த்திருக்கார். ஒரு வாசகராக அல்லது எழுத்தாளராகப் பார்த்திருக்கலாமோ? அதனால் என்ன? பரவாயில்லை. எனக்குத் தெரிந்து 2, 3 எழுத்தாளர்கள் இப்படி அரசாங்க உத்தியோகத்தில் இருக்கையில் எழுதினார்கள் எனக் கேள்வி. வேறே புனைப்பெயர் அல்லது மனைவி பெயரில் இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அரசாங்க ஊழியத்திலிருந்து கொண்டே நிறைய எழுத்தாளர்கள் எழுதினார்கள்தான்.  எம் எஸ் பெருமாள், அகிலன், மீ ப சோமு இன்னும் பலர்.

      நீக்கு
  34. சாண்டில்யனின் வர்ணனை அற்புதம். நன்கு ரசித்து எழுதுவார் எப்போதுமே. கிட்டே இருந்து பார்த்தாப் போல் இருக்கும்.

    பானுமதியின் குறுக்கெழுத்தைப் பின்னர் நினைவிருந்தால் பார்க்கணும். அது என்ன விபத்துப் படம்? அதுக்குக் கீழே ஹிஹிஹி?????? என் ம.ம.க்குப் புரியலையே! நீங்க சொல்லி இருப்பது தத்துப்பித்துவம் ஆனாலும் உண்மை அது தானே. யாருங்க இந்த நடிகை? அனுஷ்கா மாதிரி இல்லையே? அவங்க தானோ? எனக்கு இப்போதுள்ள நடிகைகள் முகமெல்லாம் பரிச்சயமே இல்லை. அனுஷ்கா பழைய நடிகை என்றாலும் அவங்க படங்களைப் பார்த்ததில்லை. :) எம்ஜிஆரும் விகடன் விலை ஏறினதும் முகநூலில் (நீங்க தான் போட்டதோ?) பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன, அனுஷ்காவை அடையாளம் தெரியவில்லையா?  என்ன அநியாயம்!  விகடன் விலை ஏறியது பேஸ்புக்கில் போட்டேன்.  அழகான எம் ஜி ஆர் போட்டதாக நினைவில்லை.

      நீக்கு
  35. ப்ளம்பிங் விஷயம் தெரிஞ்சது. அடுத்து வரும் திருவனந்தபுரம் பெண் நடத்துனர் பற்றி வாட்சப்பில் எப்போவோ வந்திருந்த நினைவு. படிச்சிருக்கேன். தமிழில் உத்தமன் என ஜிவாஜி நடிச்சுப் படம்? அதுவும் மஞ்சுளாவுடன்.? ஏன்? அவரை விடச் சின்னவங்க அப்போ இல்லையாமா? கொடுமை என்றால் இது தான் கொடுமை. மனுஷங்களுக்கு என்னென்னவோ விசித்திரமான ஆசைகள் போங்க! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரத்தில் அவரே சின்ன வயசுதானே..  இல்லையா? :P

      நீக்கு
    2. எவரே சின்ன வயசு? ஜிவாஜி? கஷ்டம்! தொந்தி, தொப்பையோடு குழந்தையான மஞ்சுளாவுக்கு ஹீரோவா?

      நீக்கு
    3. மஞ்சுளா குழந்தையா? ஆ.. தெய்வத்துக்கே அடுக்காது. சிவாஜிக்கு ஏதோ சின்ன வயசுலயே கொஞ்சம் பூசின மாதிரி தேகம்...

      நீக்கு
  36. இன்னைக்கு ஸ்ரீராமநவமி பத்தி ஏதேனும் வந்திருக்குமோனு நினைச்சேன். வந்த உடனே சொல்ல நினைச்சுப் பின்னர் பதிவைப் படிச்சுட்டுச் சொல்லலாம்னு முழுசும் பார்த்தால் அதைப் பத்தின குறிப்பே இல்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை எந்த வருடம் ஸ்ரீராமநவமி பற்றியெல்லாம் பதிவில் நாங்க எழுதி இருக்கோம்?!!  வழக்கத்தை மாத்த வேணாமேன்னுதான்...!

      நீக்கு
    2. ஹிஹிஹி...   நியாயமா நடந்துக்கலாம்னு பார்த்தா...

      நீக்கு

  37. சாண்டில்யன் எழுதிய யவன ராணி கதையில் பூம்புகார் இரவு நேர வர்ணனை பகிர்வு முன்பு அந்த கதை படித்த நினைவுகளை கொண்டு வருகிறது.

    ஓவியத்தின் அருமை, திறமை. ஒரு விபத்தின் ஓவியம்.//
    ஓவியம் நன்றாக விபத்தை சொல்கிறது.
    குழந்தையை பாதுகாப்பாய் பெற்றோர்களிடம் சேர்த்த பெண் கண்டக்டருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    உங்கள் தத்துபித்துவத்தை கேட்டு அனுஷா சிரிப்பது அழகு.

    குன்னக்குடியின் மகள் பானுமதி ராமகிருஷ்ணா பேட்டி படித்தேன்.
    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ஹீரோயின் அனு அகர்வால் பற்றி படித்ததும் பழைய நினைவுகள் இப்போது அவருக்கு வரவில்லை என்று படித்ததும் எப்படிஎல்லாம் வாழ்க்கை புரட்டி போடுகிறது மனைதரக்ளை என்று நினைக்க வைக்கிறது.


    பதிலளிநீக்கு
  38. 1. இறைவன்? / கடவுள்?

    2. அவியல்?

    4 - சிறார்

    5. படம்?

    6 புறா

    7. சாபை - பைசா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் கீதா..!!

      நீக்கு
  39. ​ஒன்னும் சொல்ல தோணவில்லை. கவலை எல்லாம் காஸ் புக்கிங்கில் தான். 25 நாள் என்றதும் புக் செய்ய முயன்றேன். 23தேதி தான் பண்ணமுடியும் என்று நிராகரிப்பு. சரி என்று 23 தேதியில் புக் செய்யப்போனால் 35 நாள் கழிந்து இந்த மாதம் 31 மார்ச் அன்று தான் புக் பண்ண முடியும் என்று நிராகரிப்பு. இன்று காலையில் இருந்து இதுவரை கம்ப்யூட்டர், போன், என்று எதிலும் புக் பண்ணமுடியவில்லை. இண்டக்ஷன் ஸ்டவ உபயோகிக்காமல் ரிப்பேர்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்... உங்க கவலை புரிகிறது. இங்கேயும் 12 நாட்களாகியும் வரலை என்று சொன்னார் என் அண்ணா.

      நீக்கு
  40. வெள்ளி பகிர்வு பல தகவல்களையும் தருகிறது.

    பல விடயங்களைப் படித்து அறிந்தோம்.

    விபத்து ஓவியம் நன்றாக உள்ளது.

    பையனை பாதுகாப்பாக ஒப்படைத்த பெண்கண்டக்டர் பாராட்டுக்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  41. தத்துப்பித்துவம் - நீங்க ஹிஹிஹி - நான் ஹாஹாஹா!

    எம் ஜி ஆர் அழகுதான்...ஆனால் கொஞ்சம் வயசான தோற்றமோ?

    விகடன் விலை இப்ப எவ்வளவு? 25/30 ரூ?

    உபயோகமான ஷேர் என்று அந்த பைப் தகவல் நல்ல தகவல்

    அடுத்த பாசிட்டிவ் செய்தி மனதை நெகிழச் செய்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  42. கீதாக்காவுக்குப் பிடிக்காத சிவாஜி பாடலா இன்று!!!!!!

    பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். நல்ல பாடல் இசை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் அநேகமா பிடிச்சிருக்கலாம்..  ஜிவாஜியைதான்...!!

      நீக்கு
    2. பாடலில் அழகான இமயமலைக்காட்சி கஷ்மிர் என்று தெரிகிறது. அப்பல்லாம் ஆ ஊ நா கஷ்மீர் போய்டுவாங்க போல!!!

      பனி சூழ்ந்து பாக்க அழகு!

      கீதா

      நீக்கு
    3. காஷ்மீரா, டார்ஜிலிங்கா?

      நீக்கு
  43. இப்பொழுதெல்லாம் ரா.கி. ரங்கராஜன் அவர்களை நினைத்தாலே அவர் நெற்றியில் பளிச்சென்று துலங்கிய விரல் நுனியால் அழுத்திய வீபூதி தீற்று தான் நினைவுக்கு வருகிறது. இதற்கு காரணமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்... என்ன காரணமோ? ஏதோ விவகாரம் இருக்கும் போலிருக்கே...!

      நீக்கு
  44. டி. துரைசாமி என்ற பெயரில் இவரே குமுதத்தில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அந்த நினைவில் இதே பயரில் வேறு எழுத்தாளர் இருந்திருக்கிறார்களோ என்ற எண்ணம் உங்க்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். எழுத்தாளர் நகுலனின் இயற்பெயர் கூட டி.கே. துரைசாமி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா?  இந்தத் தொடர்கதைக்கு துரைசாமி பெயரில் எழுதிய பிறகு அதன் தொடர்ச்சியாய் அதே பெயரில் சிறுகதைகளும் எழுதினாரா?

      நீக்கு
  45. குறுக்கெழுத்துப் போட்டி  : நண்பர் சூர்யா விடைகளை மெயிலில் அனுப்பி இருந்தார்.  அதைப் பார்த்ததும்தான்  நாங்கள் செய்த ஒரு தவறு தெரிந்தது.  இரண்டு க்ளூக்கள் விட்டுப் போயிருக்கின்றன.  பானு அக்காவும் தரவில்லை.  நானும் கவனிக்கவில்லை.  இப்போது நானே அதையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன்.  தவறுதலுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  46. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் மஹாத்மா மீது அதீத அன்பு கொண்டவர்.
    அதை பூரண பக்தி என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பக்தியின் எழுத்து அடையாளமாய் 'காந்தி மகான் கதை' என்று நாட்டுப்புற பாடல் வகையில் எழுதி காணிக்கை செலுத்தியிருக்கிறார். இதெல்லாம் காந்தி மகான் காலத்தில் வாழ்ந்த அன்பர்களின் சுய அனுபவ பிரதிபலிப்பு.

    அனால் இந்தக் கால அரசியல் சூழலுக்கு ஏற்ப கொத்தமங்கலம் சுப்பு அவர்களை நினைவு கூறும் பதிவில் காந்தியார் படை வீரத்களை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார் என்று புழுஙுகுவது அபத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை எப்போதுமே கசக்கும் தான். ஆனால் இவை எல்லாம் அப்போவே இவை நடைபெற்ற சமயத்திலேயே விமரிசனங்களுக்கு உள்ளானவை. எல்லாத்துக்கும் மேலே பூரண ஆதரவு பெற்றிருந்த சுபாஷ் சந்திரபோஸை ராஜினாமா செய்ய வைத்துப் பட்டாபி சீதாராமனைக் கொண்டு வந்தது. காங்கிரஸின் வீழ்ச்சிக்கு அடித்தளம் இட்டது இந்த நிகழ்வு தான் என்பது என் தனிப்பட்ட கருத்து. காந்தியின் அஹிம்சைக் கொள்கை பலருக்கும் ஹிம்சையாகவே இருந்தது. தன் உண்ணாவிரதங்களால் தொண்டர்களை வற்புறுத்தித் தன் பக்கம் திருப்பினார்னே சொல்லலாம். அவருக்கு இருந்த செல்வாக்குக்கு எப்படியோ நடந்திருக்கணும். நேருவின் மீது உள்ள பற்று, பாசத்தில் தடுமாற்றம். என்ன செய்யலாம்? இந்த நாட்டின் விதி எப்படியோ அப்படித் தானே எல்லாம் நடக்கும்!

      நீக்கு
    2. பி.கு. என் அப்பா, பெரியப்பா எல்லாம் (பிரமசாரி பெரியப்பா தவிர்த்து) எல்லோரும் காந்தியின் தொண்டர்கள். என் அப்பா நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் வரையிலும் கைராட்டையில் அம்மா நூற்றுக் கொடுக்கும் சிட்டத்தைக் கொண்டு போய்க் கதர்க்கடையில் கொடுத்து அதில் வரும் வேஷ்டிகளைத் தான் கட்டிண்டு இருக்கார். பெரியப்பாவும் அப்படியே. இத்தனைக்கும் பிரபலமான வக்கீல். ஆனால் அதே என் தாத்தா (அம்மாவின் அப்பா) காந்தி, ராஜாஜி இருவரையும் பிடிக்காது. பல விஷயங்களை என்னுடன் பேசுவார். ராமநாதபுரம் ராஜா சேதுபதிக்குத் தாத்தா லீகல் அட்வைசர். ஆகவே பல விஷயங்களையும் நன்கு அறிந்தவர்.மதுரை காலேஜ் போர்டில் தாத்தா அங்கம் வகித்ததோடு இல்லாமல் சில வருடங்கள் தலைமைப் பதவியிலும் இருந்தார். அப்போத் தான் என் அப்பாவுக்கு சேதுபதி பள்ளியில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கார்.

      நீக்கு
  47. 'ஒளிவதற்கு இடமில்லை' நாவல் தலைப்பின் பாதிப்பில் தான் 'இருட்டுக்கு இடமில்லை' என்று நான் எழுதிய நாவலுக்குத் தலைப்பிட்டேன். இது தொடராக என் பூவனம் ப்ளாக்கில் வெளி வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  அப்போ இந்த நாவல் உங்கள் மனதில் இடம்பிடித்த நாவல் என்று சொல்லுங்கள்.

      நீக்கு
  48. இன்று வெள்ளிக்கிழமையா என்று பிரமிப்பாய் இருக்கிறது!
    அப்படி ஒரு தலைகீழ் மாற்றம்!
    ரொம்பவும் சிரமப்ப்பட்ட முயற்சிகள்.
    வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்படுவது காணாமல்போய் மகிழ்ச்சி வருவது இந்த மாதிரி கமெண்ட் பார்க்கும்போதுதான் ஜீவி ஸார்...  காலையிலிருந்து காணோமேன்னும் பார்த்தேன்.

      நீக்கு
  49. காலை அடுத்தடுத்த அவசர வேளைகளில் கைப்பேசியில் தட்டச்சு செய்வது கஷ்டமாக உள்ளது ஸ்ரீராம். இந்த நேரம் செளகரியமாகவும் மற்றவர்கள் எதிர்வைனைகளைப் பார்க்கவும் வசதியாக இருக்கிறது, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!