30.3.26

"திங்க"க்கிழமை :: உப்புமா கொழுக்கட்டை --- ஸ்ரீராம்

பச்சரிசி - நாலரை மான்பிடி  (அப்படீன்னா எவ்ளோன்னு தெரியும்தானே?!)

து.பருப்பு - பெரிய கரண்டியால் ஒன்று அல்லது சிறிய கப் ஒன்று 

மிளகு - மூன்று டேபிள் ஸ்பூன் 

சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் 
மிளகாய் வத்தல் 6 
கறிவேப்பிலை கொஞ்சம் 
பெருங்காயம் 
தேங்காய்த்துருவல் ஒரு சிறிய மூடி 
உப்பு 

சரியாகச் செய்ய வேண்டுமென்றால் அரிசியைக் களைந்து, உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் நாங்கள் இங்கே அரிசியைக் களைந்து (உலர்த்த நேரமில்லாமல் - பசி நேரம்) எடுத்துக் கொண்டு அரிசி, மிளகு சீரகம் எல்லாவற்றையும் சேர்த்துப்போட்டு ஒன்றுக்கு இரண்டாய் மிக்சியில் அரைத்துக் கொண்டோம்.


நாங்கள் குக்கரில் வைத்தாலும், வெங்கலப்பானையில் வைப்பது விசேஷம்.  அல்லது வாணலியில் செய்வார்கள்.  குக்கரில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை தேங்காய்த்துருவல் ஆகியவற்றை (அடுப்பை ஆன் செய்து விட்டீர்களா என்று பார்த்துக் கொள்ளவும்!) அதனதன் வரிசையில் தாளித்துக்கொண்டு, அரைத்த அரிசிக் கலவையையும் போட்டுக்கொண்டு கண் திட்டமாய் ஐந்து சொம்பு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்தோம்.  தேவையை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்க்கலாம். குக்கரை மூடி,  இரண்டு அல்லது மூன்று விசில் உங்கள் குக்கர் வழக்கத்தை வைத்து வந்ததும் இறக்கி வைத்து விசில் அடங்கியதும் திறந்து, லேசாகக் கிளறி, 





அதை ஆறுவதற்கு முன் தட்டில் கொட்டி, கை சூடு பொறுப்பதற்காக கொஞ்சம் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு உருண்டை பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, அடுப்பில் ஏற்றி, ( அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன!) எட்டு அல்லது பத்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் உப்புமா கொழுக்கட்டை ரெடி.  






தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது உங்கள் விருப்பம்போல. 

வெறும் உப்புமாவாக சாப்பிட வேண்டுமென்றால்,  குக்கர் அல்லது வாணலி அல்லது வெங்கலப்பானையிலிருந்து எடுக்கும் முன் ஒரு பதம் இருக்குமே..  அங்கேயே இன்னும் கொஞ்சம் பிரட்டி எடுத்து அப்படியே சாப்பிடலாம்.

நாம்தான் கொழுக்கட்டை வடிவத்துக்கு வந்திருக்கிறோமே.. அதை அவரவர் அளவு, தேவைக்கேற்ப தட்டிலிட்டு சூடு ஆறும் முன் உண்டு களியுங்கள்!


எதையும் ஒரு புதிய வடிவத்தில் பார்க்கும்போது ஒரு உற்சாகம் வருகிறது.  நாக்கின் சுவை நரம்பு மீட்டப்படுகிறது.  சூடாகச் சாப்பிட்டால் சொர்க்கம்தான்.  உப்புமா பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்தால் சாப்பிடும் ஆவல் வரும். 

சரிதானே!

=========================================================================================

ஆட்டோகிராஃப் சொல்லும் கதை.  ஏதோ ஒரு பழைய பைண்டிங்கிலிருந்து எடுத்தது.  விகடன் என்று நினைக்கிறேன்.  நடிகை சரோஜாதேவியின் தீபாவளிகள்!

ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கு எங்கிருந்தாவது சொல்லி வைத்தாற்போல் ஒரு ஆபத்து வந்து விடும்.  அந்த தீபாவளி எனக்கு "கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி"யாகி விடும்......!

ஒரு வருடம் பரிசு வாங்க டெல்லிக்குப் போயிருந்தேன்.  தீபாவளிக்குச் சென்னை  திரும்பலாம் என்று நினைத்து, டெல்லி விமான நிலையத்தை நெருங்கும்போது நான் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. காரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் தலைக்கு மேலே நான் செல்ல இருந்த விமானம் சென்னைக்குப் பறநதது.

வேறு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு ரயிலில் மூன்றம் வருப்பில் ஏறினேன். அந்த வருட தீபாவளி ரயிலில் கழிந்ததது.

மறு வருடம் தீபாவளிக்கு சில வருடங்கள் முன் பூனாவில் ஒரு ஹிந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.  படப்பிடிப்பில் கதாநாயகன் கதாநாயகியின் தலையில் குறும்பாக ஒரு கல்லை வீசி அடிக்க வேண்டும். இது காட்சி.  குறும்பாக அவர் அடிக்கப்போக, அது பெரிய வம்பாகப் போய் விட்டது.  என் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு விட்டது.  அந்த வருட தீபாவளி தலைக்கட்டுடன் கழிந்தது.

திருமணம் ஆன பின் எங்கள் தலை தீபாவளி வந்தது.  எனக்கு ஏதாவது விபத்து நேரக்கூடாதே என்று பயந்து கொண்டே இருந்தேன்.
பெங்களுருவிலிருந்து என் கணவரின் பெற்றோர், உறவினர், பலரும் வந்து விட்டனர்.  அவர்தான் பாக்கி.

பெங்களூரில் பிளேனை என் கணவர்  தவற விட்டு விட்டார்.  எப்படியும் தலை தீபாவளிக்கு' வந்தாக வேண்டுமே என்று, கையில் எனக்காக வாங்கிய பரிசுப்பொருள்களுடன் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி அவஸ்தைப்பட்டு வந்து சேர்ந்தார்.

இந்த வருட தீபாவளியாவது ஒழுங்காக நடக்க வேண்டுமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன்.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போன என் தந்தையாரால் அவரைப் பார்க்க முடியவில்லை.  அவரும் 'டக்'கென்று ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்.அரை நேருக்குநேர் பார்த்துத்தான் எனக்கு உயிர் வந்ததது.  அவர் எனக்கு பரிசாகக் கொண்டு வந்த  ஜிமிக்கியையும், பட்டுப் புடவையையும் என்னிடம் கொடுத்து மகிழ்ந்தார்.  நானும் அவற்றைப் போட்டு மகிழ்ந்தேன்.  தன் கையிலிருந்த ஜெர்மன் காமிராவினால் என்னை பல படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.  அதில் ஒன்றுதான் இது. 

அவருக்கு அந்தக் காமிரா என்றால் ரொம்பப் பிரியம்.  நாங்கள் அயல் நாடுகளுக்குப் போயிருந்தபோது அதை ரஷ்யாவில் தொலைத்து விட்டார்.  மிகவும் கவலைப் பட்டார்.  பாவம்!  எதையோ பறிகொடுத்தது போல் கலங்கிப் போனார்.  பிறகு எப்படியோ லண்டனில் எங்கள் கையில் அது கிடைத்தது.  யாரோ நல்லவர் அதை எடுத்து லண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தார். 

அவருக்கு அது மிகவும் ராசியான காமிராவாம்.

B. சரோஜா தேவி ஸ்ரீஹர்ஷா.

==========================================================================================


ஒரு கையறுநிலை கணவனின் கண்ணீர்க் கடிதம்!





மன்னிக்கவும் விடைகள் எடுத்து வைத்திருந்த படம் தொலைந்து விட்டது.  முகங்களை கண்டுபிடிக்க வேண்டுமாம்.  அதாவது எது யார் என்று.   என்னால் நான்கு பேர்களைதான் அடையாளம் காண முடிகிறது!


அப்பவும் இதே நிலைதானா?!!

110 கருத்துகள்:

  1. அரிசி உப்புமா, நாங்கள் வாணலியில் கிளறி, உருண்டை பிடித்து இட்லி தட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு வேகவைப்போம்.

    வெறும்னவே சாப்பிடலாம். எனக்கு மிபொடி எண்ணெய் தொட்டுச் சாப்பிடப் பிடிக்கும்.

    படத்தில் பெருங்காயம் கவர்கிறது. என்ன பிராண்ட்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  ஆமாம் நானும் சொல்லி இருக்கிறேன்.  இபப்டி சாப்பிட்டால் உப்புமா என்னும் எண்ணம் மறந்து ஏதோ புதிய பண்டம் என்று சாப்பிடலாம்.  இதை பிடி கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்.  பதிவில் இணைக்க மரனது விட்டேன்!  வெங்கலப்பானையில் செய்தால் விசேஷம்.

      வெறுமனே ஒன்று சாப்பிடலாம்.  அப்புறம் ஒரு மிளகாய்ப் பொடியாவது வேண்டும்!!!  

      நீக்கு
    2. பெருங்காயம் நல்ல பிராண்ட்.  நாங்கள் LG யை டிவோர்ஸ்  கன நாட்களாகிறது! இந்த பிராண்டின் பெயர் பாஸைக் கேட்டுச் சொல்கிறேன்.  எனக்கு சட்டென பெயர் மறந்து விட்டது.  ரொம்ப நல்லா இருக்கும்.  ஹோசூரில்தான் தயாரிக்கிறார்கள்.

      நீக்கு
    3. P C பெருங்காயம். இப்படி சிறு கட்டிகளாகவும் கிடைக்கும்.  தூளாகவும் கிடைக்கும்.  எனக்கு இந்தக் கட்டிப் பெருங்காயம்தான் முதல் சாய்ஸ்.  நிச்சயம் பெங்களுருவில் கிடைக்கும்.  ஹோசூரில்தானே தயாரிக்கிறார்கள்...

      நீக்கு
    4. Yessu. Me also using this one only. Good flavour.

      நீக்கு
  2. சட்னு பார்த்து ஐந்து முகங்களைக் கண்டுபிடித்துவிட்டேன். நாலைவிட ஐந்து பெரிதல்லவா?

    பதிலளிநீக்கு
  3. பிரபலஸ்தர்கள் என்ன எழுதினாலும் பத்திரிகையில் இடம் உண்டு. அவர்கள் படம் ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்ளும்.

    துபே ஏசி மூன்றாம் வகுப்பில் ஊருக்குச் சென்றதே நியூஸ். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புப் பெட்டி. உங்களுக்கு கரி எஞ்சின், மூன்றாம் வகுப்புப் பெட்டி நினைவிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக நினைவிருக்கிறது. பிரபலங்கள் - அதுவும் கன்னடத்துப் பைங்கிளி எதை மிழற்றினாலும் அந்தக் காலத்தில் ரசித்திருப்பார்களே...

      நீக்கு
  4. மனைவி ஊருக்குப் போனா இரண்டு மூன்று நாட்கள் சுவர்கம்தான். மூணாவது நாள் வீடு அமைதியா இருப்பது தெரியும். பிறகு சாப்பாட்டுப் பிரச்சனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  சமீபத்தில் என் பேஸ்புக் நண்பர் சரவணா கூட சென்ற வாரம் அவர் மனைவி ஊருக்குப் போன் அனுபவத்தை இப்படிதான்  எழுதி இருந்தார். 

      நீக்கு
  5. எனக்கு அரிசி உப்புமாக்கு தேங்காய் துவையல். இன்று செய்யச் சொல்லலாமா இல்லை வெயிட் கார்பினால் ஏறிடுமான்னு யோசிக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக்கடவுளே..  நான் பிடித்ததைச் சாப்பிட தயங்குவதே இல்லை நெல்லை!

      நீக்கு
  6. அந்த '74 வருட ஆ.வி. அட்டைப்பட விளாசலை (ஜோக் அல்ல0 எங்கே தேடி கண்டுப்பிடித்து உபயோகப்படுத்திக் கொண்டீர்கள்? இந்த நாட்களுக்கும் பொரித்தமானது, அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..   அதனால்தானே அதைப் பகிர்ந்தேன்!  இப்போது வாட்ஸாப்பில் வந்தது!

      நீக்கு
    2. நான் திருநெல்வேலியிலிருந்து மனோகரம் முதலியன தருவிப்பேன். இரண்டு நாட்கள் முன்பு விலை ஏற்றிவிட்டீர்களா காஸ் பிரச்சனைனால என்று கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் எப்போதும் விறகடுப்புதான் உபயோகிக்கிறோம் என்றார்கள். ஆஹா என்று தோன்றியது.

      நீக்கு
    3. எரிவாயு அறிமுகம் ஆன புதுசில் கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் ரீஃபில் சிலின்டர் வாங்கணும். ஒரு வாரமாவது காத்திருக்கணும். எண்பதுகளில் சுத்தமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டு மாதக்கணக்காக சிலிண்டர் வராமல் நாங்கல்லாம் விறகு அடுப்பிலும் குமுட்டியிலும் சமைத்திருக்கோம். அப்போல்லாம் கூட்டுக் குடும்பம் வேறே. தினம் குறைந்தது பத்து பேர் நிச்சயமா (பின்னர் வருபவங்க கணக்கில் சேர்க்கலை) பதினைந்து பேருக்காவது சமைச்சு, டிஃபன் பண்ணி, இரவு சமைத்துனு பண்ணணும். மண்ணெண்ணெயும் கிடைப்பது சிரமம் என்பதால் ஸ்டவ் காஃபி மட்டும் போட வைச்சுப்போம். ரேஷனில் தான் மண்ணெண்ணெய். அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி ரேஷன் எண்ணெய் வாங்க வரிசையில் நிற்போம். வீட்டு வேலைகளோடு இதெல்லாம் அதிகப்படியான வேலைகள். எனினும் சமாளிச்சிருக்கோம்.

      நீக்கு
    4. இதைப்பற்றி நாம் வெகு முன்னரேயும்,   சற்றே முன்னரேயும் பேசி இருக்கிறோம்!

      நீக்கு
  7. உ கொ ரொம்பப் பிடிக்கும். சூப்பரா வந்திருக்கு ஸ்ரீராம்.

    விவரமான படங்கள் காணொளியும்...நானும் சிலப்போ நேரம் இல்லைனா ஈர அரிசியையே பொடித்துவிடுவேன்.

    நான் அளவுக்கு ஏற்ப வெங்கல பானையில் கிளறிவிட்டு உருட்டி குக்கரில் ஸ்டீமரில் வைத்து

    இன்னொன்னு நான் இட்லி தட்டில் வைக்காமல் (பின்ன நிறைய தட்டுகள் ஆகிடுமே...தேய்க்கணுமே!!! அதனால் குக்கர் பாத்திரம் வட்ட பாத்திரம் இருக்கும் இல்லையா அதில் வைத்து எடுத்துவிடுவேன். வெயிட் போடாமல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  நல்ல ஐடியாதான்.   வெங்கலப்பானை தற்சமயம் எங்கள் வீட்டில் இல்லை..  என் அம்மா உபயோகித்தது அண்ணன் வீட்டில் இருக்க வேண்டும்.  ஆனால் அவர்களுக்கு உபயோகிக்கத்தெரியாது.  அவர்கள் குக்கர்தான் உபயோகிக்கிறார்கள்.

      நீக்கு
    2. என்னோட ஓட்டு எப்போவுமே வெண்கலப்பானைக்குத் தான். அதில் தான் இன்றளவும் கிளறி வருகிறேன். கொழுக்கட்டை பிடிச்சு வைப்பதும் இட்லிப்பானையில் தான். சீனாச்சட்டியில் தான் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ஏழு குழி இட்லித் தட்டை வைச்சுக் கொழுக்கட்டைகள் பிடிச்சு வைப்பேன். எங்க வீட்டின் தற்போதைய செலவுக்கு அதில் ஒரு தட்டில் வைச்சாலே போதுமானது.

      நீக்கு
    3. முதல் விஷயம் இங்கே இப்போ வீட்டுல ஆளுங்க அதிகம்!  இரண்டாவது விஷயம் பார்த்தீங்கன்னா வெங்கலப்பானை இல்லை.  பழைய இட்லிப்பானையும் இல்லை.

      நீக்கு
    4. இரண்டாவது மருமகளும் வந்தாச்சா? அதைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சீங்க. சேலம் தானே? அவங்க அனுப்பின ஃபோட்டோவைப் பகிர்ந்ததோடு சரி. அப்புறமா அந்தத்தொடரே விட்டுப் போய் வேறே என்னென்னவோ எழுத/பகிர ஆரம்பிச்சீங்க.

      நீக்கு
    5. விரைவில் தாத்தா பதவி, பாட்டி பதவி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். நானெல்லாம் 46/47 வயதுக்குள் பாட்டி ஆகியாச்சு. :))))))

      நீக்கு
  8. அதில் ஒன்றுதான் இது. //

    அந்தப் படத்தைக் காணவில்லையே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி பாதி தெரிகிறது பாருங்கள்...  மேட்டரை காபி பண்ணும் ஷோக்கில் படத்தை விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது.  இப்போது தேடியும் பலனில்லை!  எங்கே எதிலிருந்து எடுத்தேனோ...!

      நீக்கு
    2. சரோஜா தேவி செய்தியில் இணைத்திருக்கும் படத்தில் சரோஜா தேவி படம்.  வலது பக்கம் பாதி தெரிகிறது.

      நீக்கு
  9. ஆடி மாசம் - புன்சிரித்தாலும், ஏன் ஆண்கள் எப்பவுமே இப்படி மனைவியைச் சொல்கிறார்கள் என்பது எனக்கு எப்பவும் எழும் கேள்வி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பிறந்தது அன்று.. நல்ல பதில் கிடைப்பது என்று?

      நீக்கு
    2. என்னவோ தெரியலை. கல்யாணம் ஆகும்வரை மனைவிக்காகவும் ஒரு பெண்ணின் உறவுக்காகவும் ஏங்கும் ஆண்கள் கல்யாணம் ஆகிச் சில நாட்கள்/மாதங்களிலேயே இப்படி மாறுகிறார்கள்? அது அந்தப் பெண்ணின் தவறா? அல்லது புரிதலில் கோளாறா?

      நீக்கு
    3. எதிர் சைடில் குற்றமே சொல்ல முடியாதா கீதா அக்கா?

      நீக்கு
    4. தெரியலை ஸ்ரீராம். எனக்குத் தெரிந்து இரண்டு பக்கமும் புரிதல் குறைபாடு தான் என நினைக்கிறேன்.

      நீக்கு
  10. உப்புமா கொழுக்கட்டை வித் தேங்காய் சட்னி மிகவும் பிடிக்கும்.
    குக்கரில் ஐந்து விசில்கள் விட்டால் நன்றாக வெந்து விடுமே? அதை ஏன் மீண்டும் இட்லி தட்டில் வேகவைக்க வேண்டும். நன்றாக வேக விடாமல் முக்கால் பதத்திற்கு வேக விட்டு, பிறகு இட்லி தட்டில் வேக வைக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...   பிடி கொழுக்கட்டையை செய்வதற்காக, அது உதிராமல் நிற்பதற்காக கொஞ்சம் முன்பதமாய் இறக்கி, அதை பிடித்து கொழுக்கட்டை வடிவுண்டாக்கி , இட்லி குக்கரில் வைத்து எடுக்கணும்.   உதிராமல் இருந்தால்தான் சுவாரஸ்யம்...  

      நீக்கு
  11. 9 ராமகிருஷ்ண பரம ஹம்ஸர், 10 சாரதா தேவியார், 15 விவேகானந்தர்
    14 இந்திராகாந்தி, 7 மதர் தெரேசா 12 காந்தி

    இன்னும் தெரியுது பெயர்கள் டக்குனு வர மாட்டேங்குது...நேரமும் இல்லை கூர்ந்து நிதானமாகச் சொல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​-----------------------, ------------------------------- ல்லாம் தெரியலையா?!!

      நீக்கு
  12. காஸ் விஷ்யாம் ஜோக் முன்னரே வந்திடுச்சோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேற மாதிரி இல்லை?

      நீக்கு
    2. முன்னர் படிச்சது தான். அதே போல் மனைவி ஊருக்குப் போகும் விஷயமும். :(

      நீக்கு
  13. ௳றைந்திருக்கும் முகங்களில் 15 கணித்திருக்கிறேன். அது சரி என்னுடைய குறுக்கெழுத்து விடைகளை எப்போது போடப் போகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போடலாம்.  அதுசரி..  நீங்கள் ஏன் அந்தப் பதிவில் கமெண்ட்ஸ் - குறைந்த பட்சம் உங்கள் குறுக்கெழுத்து பற்றியாவது எதுவும் சொல்லவில்லை.  ஒரு நன்றி நவிலல், விளக்கத்துடன் எஸ்கேப் ஆகி விட்டீர்கள்?!!

      நீக்கு
    2. அடக் கடவுளே! பதிவை ரசித்தேன், பதில் கொடுத்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு விட்டேன். மன்னிக்கவும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்கிறேன்.

      நீக்கு
    3. அதைத் தவறு என்று சொல்ல மாட்டேன் பானு அக்கா.. என் ஆதங்கம் அது, அவ்வளவுதான்! நான் உங்களிடம் சொன்ன மாதிரி உங்கள் அபிப்ராயம் என்ன என்றும் படிக்க ஆவலாக இருந்திருப்பேன் இல்லையா?

      நீக்கு
  14. சர்வ காலமும் பிறர் முகங்களையே பார்த்தும் அவர் பற்றிப் பேசியும் நம் முகத்தை நாமே இழந்து விடும் இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ல...  என்னென்று சொல்ல!  "என்னென்பதோ..  ஏனென்பதோ..."

      நீக்கு
    2. ​ஜீவி சார். காரணம் நம் முகத்தை நாம் பிரதிபலிப்பாய் காணமுடியுமே தவிர நேரடியாக பார்க்கமுடியதால் தான்.

      Jayakumar

      நீக்கு
    3. கண்ணாடியில் நம் முகத்தை நாமே பார்த்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக்கணும். இல்லைனா நம் முகத்தைப் பார்க்கும் மத்தவங்க சொல்லுவது தான். :)

      நீக்கு
  15. மறைந்திருக்கும் முகங்களில் என்ரு வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  16. . Dr.ராதாகிருஷ்ணன்
    7. மதர் தெரசா
    10. சாரதா தேவி
    9. ராமகிருஷ்ண பரமஹம்சர்
    14. இந்திரா காந்தி
    12. மகாத்மா காந்தி
    19. கோபாலகிருஷ்ண கோகலே
    20. கணித மேதை ராமானுஜம்
    18. சார்லி சாப்ளின்
    11. திப்பு சுல்தான்
    15. சுவாமி விவேகானந்தர்

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவைக்கு டைமிங் முக்கியம். நீங்கள் பகிர்ந்திருப்பது நல்ல டைமிங் காமெடி.

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  19. கொழுக்கட்டை பிடிக்கும். பச்சரிசி வாசம் பிடிக்காததால் புழுங்கல் அரிசியில் (இட்லி அரிசியில்) ஆட்டுக்கல்லில் அரைத்து வாணலியில் கிண்டி கொழுக்கட்டை பிடித்து வேக வைப்பது தான் எங்களுக்கு பழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..   நாங்கள் பச்சரிசிதான். 

      நீக்கு
    2. அதே அதே ஜேகேசி சார். என் அம்மா அப்படியும் பண்ணி இருக்கார். புழுங்கலரிசியின் வாசனையோடு மிருதுவாகவும் இருக்கும். சொல்ல இருந்தேன். நீங்க சொல்லிட்டீங்க.

      நீக்கு
    3. அரிசிப் புட்டு கூட என் அம்மா புழுங்கலரிசியில் பண்ணுவார். எங்களோடு குடி இருந்த ஒரு திருநெல்வேலி மாமி மூலம் புழுங்கலரிசியில் முறுக்கு, தட்டை எல்லாம் பண்ணக் கத்துண்டோம். (எனக்குச் சின்ன வயசிலேயே பழக்கம் ஆனவங்க மூலமா) நல்லா இருக்கும். நானும் ஒரு மாறுதலுக்காகப் புழுங்கலரிசியை கிரைண்டரில் அரைச்சு வெள்ளைத் துணியில் மாவைக் கொட்டிக்கட்டி வைத்து நீரெல்லாம் எடுத்துட்டு முறுக்கு, தட்டை எனப் பண்ணி இருக்கேன்.

      நீக்கு
    4. ஒரு தரம் புழுங்கலரிசில பண்ணிட்டா போச்சு.

      நீக்கு
    5. including sevai. Mostly I make Boiled idli rice sevai only.

      நீக்கு

  20. சரோஜாதேவி எழுதியது என்றவுடன் கல்லூரி காலத்தில் ரகசியமாக பார்த்த/படித்த சரோஜாதேவி புத்தகம் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி சொல்லணுமா?  ஹா ஹா ஹா சொல்லணுமா?!!

      நீக்கு
  21. கொழுக்கட்டை அருமை....
    சிறப்பான செய்முறை..

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான உ. கொழுக்கட்டை நன்றாக வந்துள்ளது உங்கள் செய்முறையான படங்களும், பக்குவங்களும் மிக அருமையாக உள்ளது. நானும் இதேப் போல்தான் அடிக்கடி செய்வேன். எங்கள் வீட்டில் இந்த டிபன் அனைவருக்கும் பிடித்தமானது நானும் கொஞ்சமாக செய்தால், வாணலியில் முக்கால் பதத்திற்கு கிளறி கொண்டு பின் இ. தட்டில் உருண்டை வைத்து குக்கரில் வைத்தெடுப்பேன். நிறைய செய்ய வேண்டி இருந்தால், குக்கரில் அதே போல வெயிட் ஏதும் போடாமல் கிளறிக் கொண்டு இ. தட்டில் உருண்டைகளாக வைப்பேன். அவரவர்கள் வீட்டு பாத்திரங்களின் சௌகரியபடிதானே செய்ய இயலும். ஆயினும் ஒன்றுக்கு இரண்டாக இருக்கும் வெ. பானையிலும் வெறும் உப்புமா செய்வேன்.

    என் பதிவாக உ. கொழுகட்டைகள் என் வலைத்தளத்திலும், எ. பியிலும் வந்திருக்கிறது. (உங்கள் அனைவருக்கும் அது நினைவிருக்கலாம்.)

    இன்று உலக இட்லி தினம். ( இதற்காக என் வலைப்பூவிலும் இட்லிகள் பதிவு எழுதி உள்ளேன்.) இன்று அதன் நினைவாக தங்கள் பதிவில் இட்லி தட்டுக்களை கண்டதும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. (ஏனெனில் இட்லி எனக்கு மிகவும் பிடித்த உணவு.)

    இதுவும் இட்லிக்கு இணையான ஒரு உணவுதானே ..! வயிற்றுக்கு எந்த கெடுதலும் தராத இந்த மாதிரி அரிசியும், பருப்பும் கலந்த உணவை நம் முன்னோர்கள் அந்த காலத்திலிருந்தே நமக்கு அறிமுகப்படுத்திய விதங்களே ஒரு சிறப்புத்தான்.(ஆனால், இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு அரிசி பருக்கை அன்றாட சாப்பாட்டில் கூட சேர்த்துக் கொண்டாலும், கெடுதல் என சொல்வது வழக்கமாகி விட்டது..)

    காலே மான்படி அரிசியை வைத்து சுவைபட உ. கொழுக்கட்டைகளை செய்து இன்றைய காலை நேரத்துப் பசியை தூண்டிய/போக்கிய தங்களது பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...  விளக்கமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.  பானு அக்கா கேட்டிருக்கிறார் பாருங்கள், எதற்கு இட்லித்தட்டில் வைக்க வேண்டும் என்று!  எனவே நீங்களும் அப்படிச் செய்கிறீர்கள். 

      நானும் இன்று உலக இட்லி தினம் என்று பார்த்தேன்.  யதேச்சையாக இட்லித் தட்டுகள் இடம் பெற்றுவிட்டன பதிவில்.

      சமயங்களில் இப்படி எனக்கு நேர்கிறது...

      நீக்கு
  23. அந்தக் கால ஆனந்த விகடனின் அட்டைப்படம் அழகு .

    பதிலளிநீக்கு
  24. //விகடன் என்று நினைக்கிறேன். நடிகை சரோஜாதேவியின் தீபாவளிகள்!//

    இல்லை ஸ்ரீராம், அது விகடனில் வரலை. பேப்பரையும் ப்ரின்டிங் தரத்தையும் வைச்சுப்பார்க்கையில் குமுதம் கூட இல்லை. வேறே ஏதோ குங்குமம், சாவி, தாய் வகைப் புத்தகங்களில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..     இதயம் பேசுகிறது பத்திரிகையோ?  விகடன் பழைய விகடன் கொஞ்சம் இப்படிதான் இருக்கும்.

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம், பேப்பரின் தரத்தைப் பார்க்கையில் விகடனாகவோ குமுதமாகவோ இருக்காது. இதயம் பேசுகிறாது என்பது ஓரளவுக்கு சரியாய் இருக்கலாம்.

      நீக்கு
    3. அதிலும் அந்த சரோஜாதேவி படம் இடம் பெற்றிருக்கும் பக்கம் பார்த்தால் விகடனின் பக்கமாகத் தெரியலை. புத்தகத்தின் அளவுகளில் கூட மாறுபாடுகள் இருக்குமோனு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. நல்ல அவதானிச்சிருக்கீங்க..  ஃபாஸ்​டா பதில் கொடுத்துட்டு போறீங்க...  பின்னாலேயே ஓடியாறேன்!

      நீக்கு
    5. இதயம் பேசுகிறது,குங்குமம் எல்லாம் 1978 ல் தான் தொடங்கப்பட்டன. சுஜாதாவை அப்போது நடித்தாரா என்ன? ஸ்ரீதேவி காலம் தொடங்கி விட்டதே?

      நீக்கு
    6. Sujatha? where did she come from? Here it is only Saroja Devi. சரோஜா தேவி அறுபதுகளிலேயே கல்யாணம் பண்ணிண்டார்னு நினைக்கிறேன். அப்போ இதயம் பேசுகிறது, குங்குமம் எல்லாம் ஆரம்பிச்சிருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் விகடன் எனத் தோணலை. ம்ம்ம்ம்ம் பார்ப்போம்.

      நீக்கு
    7. Sujatha? where did she come from? Here it is only Saroja Devi. சரோஜா தேவி அறுபதுகளிலேயே கல்யாணம் பண்ணிண்டார்னு நினைக்கிறேன். அப்போ இதயம் பேசுகிறது, குங்குமம் எல்லாம் ஆரம்பிச்சிருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் விகடன் எனத் தோணலை. ம்ம்ம்ம்ம் பார்ப்போம்.

      நீக்கு
    8. இடது ஓரத்தில் தலைப்பாக ஆட்டோகிராஃப்/ஃபோட்டோ கிராஃப் எனப் போட்டிருக்கு அந்தப் பக்கத்தில். ஆகவே நிச்சயமாக இது அப்போதைய விகடன் வைக்கும் தலைப்புகளில் வந்திருக்காது. குமுதமாகவே இருக்கலாம். அவங்க தான் கொஞ்சம் வித்தியாசமாகத் தலைப்பு வைப்பார்கள்.

      நீக்கு
    9. இது ஒன்று குமுதம், அல்லது விகடன்.  இரண்டில் ஒன்றுதான்!  இனி போட்டோ எடுக்கும்போது கவனமாக இருக்கிறேன்!

      நீக்கு
  25. //மறு வருடம் தீபாவளிக்கு சில வருடங்கள் முன் பூனாவில்// சில நாட்கள் முன்னர்னு வந்திருக்கணுமோ?

    பதிலளிநீக்கு
  26. உப்புமா கொழுக்கட்டையை ஸ்ரீராம் ஏதோ புதிய உணவு போலச் சொல்லி இருக்கார். தென் மாவட்டங்களில் முக்கியமாக மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் மாவட்டங்களில் இது ஒரு கட்டாய உணவு. வாரம் ஒரு நாளாவது இடம் பெறும். பொதுவாகக் கொழுக்கட்டனு சொன்னாலே இதைத் தான் சொல்வார்கள். எங்க வீட்டில் அம்மாவும் அடிக்கடி செய்வார். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஊற வைத்து மி.வத்தல் போட்டு அரைத்துப் பொடித்த அரிசி ரவையைப் போட்டுக் கிளறும்போதே சேர்த்து விடுவார். சாதாரணமாக அரிசி உப்புமா பண்ணினாலே இவற்றைத் தேங்காய்த் துருவலுடன் அரைச்சு விடுவாங்க எங்க வீட்டில். நான் இன்றளவும் அரிசி உப்புமா அப்படித் தான் பண்ணி வருகிறேன். இந்த அரைச்ச விழுதைக் கொழுக்கட்டையாகவும் பிடிச்சு வைக்கலாம். வெண்கலப்பானை அல்லது உருளியில் தே. எண்ணெய் விட்டு அடை மாதிரித் தட்டிப் போட்டு மூடி வைத்து வேக வைத்துப் பின்னர் திருப்பிப் போட்டு வேக வைத்துத் தவலை அடையாகவும் சாப்பிடலாம். இரண்டுமே நான் பண்ணி இருக்கேன். ஆனால் மாமாவுக்குக் கொழுக்கட்டையிடம் அத்தனை பிரியம் இல்லை என்பதால் அதிகம் தவலை அடை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்ணிச்சுக்கோங்க கீதா அக்கா..  புதிய உணவு போல சொல்லலை.  நான் எப்பவும் கொடுக்கற டிஸ்கி கொடுக்க மறந்துட்டேன்.  "இது யாரும் செய்யாதது இல்ல..  யாருக்கும் தெரியாதது இல்லை..  நான் இதை இப்படி செய்தேன்" என்று! 

      சட்டென பார்த்தால் திங்களுக்கு ஒன்றும் இல்லை அங்கே..   சமாளிபிகேஷன்!

      நீக்கு
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrஅட? தப்பாய்ச் சொல்லிட்டேனோ? பரவாயில்லை. விடுங்க. முகநூலில் வேறே கேட்டிருந்தீங்களா, அதனால் உங்களுக்குத் தெரியலையோனு நினைச்சுட்டேன். அம்புடுதேன். :))))

      நீக்கு
    3. முக நூலிலா...  கேட்கவில்லையே... அங்க ஜவ்வரிசி மோர்க்களி பற்றி வித்தியாசமா ப்ரசண்ட் பண்ணியிருந்தேன்.

      நீக்கு
    4. கொழுக்கட்டையும் சில நாட்கள் முன்னர் வந்ததே. காலம்பரவே பார்த்த நினைவு. என்னிக்குனு தெரியலை.

      நீக்கு
    5. மோர்க்களியும் வந்தது. சிறுதானிய மாவுகளான கேழ்வரகு, தினை, சோள மாவுகளில் கூட மோர்க்களி பண்ணுவேன்.

      நீக்கு
  27. எனக்குத் தெரிந்த ஒரு மாமி குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பதால் கொழுக்கட்டை பிடிக்கும் முன்னர் அதனுள் கொட்டை நீக்கிய ஒரு பேரிச்சம்பழத்தை வைத்துக் கொழுக்கட்டை செய்து வேக வைத்துக் கொடுப்பார்கள். நன்றாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று நானும் கூட வேறு மாதிரி யோசித்தேன்!

      நீக்கு
  28. உப்புமா கொழுக்கட்டை சூப்பராக வந்திருக்கிறது.

    காஸ் ஜோக்ஸ். .... "அம்மாவை வரச்சொல்லுங்கள்" செம சிரிப்பு.

    முகங்களை கண்டுபிடியுங்கள் இதுவெல்லாம் நமக்கு சரிவராது ...மூன்றும்தான் முடிந்தது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, சாளிசப்ளின்தான்.

    திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி.. நன்றி உங்கள் கருத்துக்கு

      நீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. உப்புமா கொழுக்கட்டை சுடாய் சாப்பிட வர முடியவில்லை. தம்பி இருமுடி கட்டி ஐயப்பன் மலைக்கு போகிறான் அதனால் ஐயப்பன் கோயில் போய் இருந்தோம்.
    உப்புமா கொழுக்கட்டை செய்முறை காணொளி விஷ்ணு சகஸ்ரநாமம் பின்னனியுடன் அருமை. கொஞ்சம் சொன்னீர்கள் நீங்கள் அப்புறம் சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  இந்த சீசனில் சபரிமலையா?  

      // கொஞ்சம் சொன்னீர்கள் நீங்கள் அப்புறம் சொல்லவில்லையே! //

      என்ன அது?

      நீக்கு
    2. பங்குனி உத்திரம் ஐயப்பனுக்கு ஜன்ம நக்ஷத்திரம். சபரிமலையில் விசேஷமாக இருக்கும்.

      நீக்கு
  31. உப்புமா கொழுக்கட்டை சூடாய் சாப்பிட வரமுடியவில்லை

    பதிலளிநீக்கு
  32. நடிகை சரோஜாதேவியின் தீபாவளிகள்! , மருமகன் எழுதிய கடிதம் மற்றும் ஆனந்தவிகடன் பகிர்வுகளை படித்தேன்.
    முகங்கள் யார் என்று பானுமதி வெங்கடேஸ்வரன் சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  33. சமையல் குறிப்பு நன்று.

    சிலிண்டர் ஜோக் எனக்கும் WhatsApp இல் வந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!