குழந்தை மனம் யாருக்குதான் இல்லை? உங்களுக்கு இல்லையா? எனக்கில்லையா? காமிக்ச் ஆகட்டும், அம்புலிமாமா, ரத்னபாலா ஆகட்டும் அந்த நாட்களை ம4ரக்க முடியுமா? எப்போது பார்த்தாலும் ஜெயகாந்தன், அம்பை, அநுத்தமா தி ஜா என்றுதான் படிக்க வேண்டுமா. அதுதான் பொக்கிஷமா? நம் பால்யம் நமக்கு பொக்கிஷம் இல்லையா? அதனால்...
இந்த விக்ரமாதித்தன் எதற்கு அந்த மரத்தின் மீதேறி ஏறி அந்த உடலை வீழ்த்தி எடுத்துச் செல்ல முயல்கிறான் என்பதற்கே ஒரு முன் கதை உண்டு. ஆரம்ப காலங்களில் அதையும் பிரசுரித்து வந்தார்கள் என்று நினைவு. ஆனால் அந்தக் கதைதான் என்ன!
அதென்ன, எப்போது பார்த்தாலும் "இக் கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் பதில் கூறாவிட்டால்" என்றே வேதாளம் கூறுகிறது? தெரியாவிட்டால்தானே பதில் சொல்லாமல் இருப்பார்கள்! அதேபோல அதென்ன "மௌனம் கலையவே"
எனக்கென்னவோ இந்தக் கதை உட்பட, விக்ரமாதித்தன் வேதாளத்துக்குச் சொல்லும் பதில்கள் வழவழகொழகொழா என்று தான் இருப்பதாகத் தோன்றும்.
காஞ்சனபுர மன்னன் காந்திவர்மனுக்கு ஒரு புதல்வியும் ஒரு புதல்வனும் இருந்தனர். புதல்வி புஷ்பலதா மூத்தவள். அவள் வளர்ந்து விவாக வயதை அடைந்ததும் மன்னன் அவளுக்குத் திருமணம் செய்ய எண்ணினான். அதை அவளிடம் கூறவே புஷ்பலதாவும் "தந்தையே! நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. யார் ஒரு பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து எனக்குக் கொடுக்கிறாரோ அவரைத்தான் நான் மணந்து கொள்வேன்" என்றாள்.
தன் மகளின் பிடிவாதத்தைத் தகர்க்க முடியாதெனக் கண்ட "மன்னன் பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து தன் மகள் முன் நிறுத்துபவருக்குத் தன் மகளை மணம் செய்து வைப்பதாக நாடெங்கும் பறைசாற்றுவித்தான். இதனை அறிந்து பல அரசகுமாரர்கள் பறக்கும் குதிரை எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு அது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவர்கள் தம் முயற்சியைக் கை விட்டு விட்டார்கள். இப்படியே ஒரு வருடம் கழிந்தது.
அந்த நாட்டில் கோவிந்தன் என்ற இளைஞன் இருந்தான். அவன் நல்ல அழகன். ஆனால் தாய் தந்தையற்ற அனாதை. அவன் அவ்வூர் பெருமாள் கோவில் அர்ச்சகர் நரசிம்மபட்டரிடம் வேலைக்கு அமர்ந்து பூமாலைகள் தொடுத்து கோவிலுக்குக் கொடுத்து கோவிலில் கிடைக்கும் பிரசாதமான உண்டக்கட்டியை வாங்கி உண்டு வாழ்ந்து வரலானான். அவன் மன்னனின் அறிவிப்பைக் கேட் டதும் “நான் பறக்கும் குதிரையைத் தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து அரசகுமாரியின் முன் நிறுத்தி அவளை ஏன் மணந்து கொள்ளக் கூடாது?" என்று எண்ணினான். எனவே அவன் கோவில் அர்ச்சகர் நரசிம்மபட்டரிடம் விஷயத்தைக் கூறி "பறக்கும் குதிரை எங்கே கிடைக்கும்?" என்று கேட்டான்.
மதுமதி சற்று நேரம் ஊஞ்சலாடி விட்டுக் கீழே இறங்கிப் புறப்படலானாள் அப்போது கோவிந்தன் ஓடி வந்து அவள் முன் நின்று " நான் கட்டி வைத்த ஊஞ்சலில் இவ்வளவு நேரம் ஆடினீர்களே. அதற்கு பதில் உதவியாக எனக்கு ஏதாவது செய்யாமல் போவது நியாயமா?" என்று கேட்டான். மதுமதியும் அவனை வியப்புடன் பார்த்து, “நீ யார்? உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதைக் கொடுக்கிறேன்" என்றாள். கோவிந்தனும் தன்னைப் பற்றிக் கூறி ''எனக்குப் பறக்கும் குதிரை வேண்டும். அதைக் கொண்டு போய் அரசகுமாரி புஷ்பலதாவிடம் கொடுத்து விட்டு அவளை நான் மணக்கப் போகிறேன்" என்றான்.
மதுமதியும் "ஓ! பறக்கும் குதிரையா? அதை என்னால் கொடுக்க முடியாதே. உனக்கு நீ கேட்பதைக் கொடுப்பதாக வாக்களித்து விட்டேன், அதனால் உன்னை என் கந்தர்வ லோகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு பல பறக்கும் குதிரைகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கொண்டு செல்வது உன் பொறுப்பு" என்றாள். கோவிந்தன் அதற்குச் சம்மதிக்கவே மதுமதி அவனை ஒரு முத்து மாலையாக மாற்றித் தன் கழுத்தில் அணிந்து கொண்டு கந்தர்வ லோகத்திற்குச் சென்றாள்.
அன்று கந்தர்வ மன்னனின் பிறந்த நாள். அன்று அம்மன்னன் தன் லாயத்திருந்து ஒரு நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்து அந்த ஆண்டு முழுவதும் அதன் மீது அமர்ந்து சவாரி செய்வது அவன் வழக்கம். அந்த வழக்கப்படியே அந்த ஆண்டும் குதிரையைத் தேர்ந்தெடுத்தான் அது பறக்கும் குதிரை. அதற்கு அந்த கௌரவம் கிட்டியதற்கு கந்தர்வர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள்.
அன்றிரவு கோவிந்தன் மன்னனின் லாயத்திற்குச் சென்றான். அக் குதிரையும் ''எனக்கு ஒரு ஆண்டு காலம் மன்னனின் சவாரிக் குதிரையாக இருக்க வழி செய்தாய். இதற்குக் கைமாறாக உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டது. கோவிந்தனும் தன்னைப் பற்றி விவரமாகக் கூறி, தான்
விக்கிரமனும் "கோவிந்தன் அதிகம் படிக்காதவன். பட்டர் சொன்ன பிறகே பறக்கும் குதிரை பூலோகத்தில் கிடையாது என்றும் கந்தர்வ லோகத்தில் அல்லது தேவலோகத்திலோ இருக்கும் என்று தெரிந்து கொண்டான். சுந்தர்வ லோகக் குதிரை அவன் மிகவும் ஏழை என்பதையும் அரசகுமாரி பணக்காரி என்றும் எடுத்துக் கூறிய போது தான் அவனுக்குத் தன் நிலையும் அந்தஸ்தும் என்ன என்று தெரிந்தது. அதுவரை அவன் தன் படிப்பு பற்றியோ பணம் பற்றியோ நினைத்துப் பார்த்தது கூட இல்லை. பறக்கும் குதிரை அவனது ஆசை சரியல்ல என்று கூறியது அவனது சிந்தனையைக் கிளறி விட்டது. அதன் முடிவுதான் அவன் அரச குமாரியை மணக்காமல் செய்து விட்டது. இது அவனது சரியான முடிவே" என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டது.
- பழிவாங்கும் தாந்திரிகன்: விக்ரமாதித்தன் அரசவைக்கு தினமும் ஒரு முனிவர் (சாந்திசீலன்) வந்து ஒரு பழத்தைக் கொடுத்துச் செல்வார். விக்ரமாதித்தன் அதைத் தன் கருவூலத்தில் வைப்பார். ஒருநாள் தவறுதலாக ஒரு பழம் உடைந்து, உள்ளே விலைமதிப்பற்ற மாணிக்கம் இருப்பதைக்கண்டு, அத்தனை பழங்களையும் உடைத்துப் பார்த்தபோது அனைத்துப் பழங்களிலும் ரத்தினங்கள் இருந்தன.
- சதித் திட்டம்: காரணம் கேட்டு முனிவரை அழைத்தபோது, "வேறொரு சக்திவாய்ந்த தாந்திரிகன் உன்னைக் கொன்று, அந்தப் பழத்தைக் கொண்டு உலகம் முழுவதும் ஆளக்கூடிய சக்தியைப் பெற நினைப்பதாகவும், அதனால் விக்ரமாதித்தன் மயானத்தில் இருக்கும் ஒரு உடலைக் கொண்டு வந்து தன்னுடைய யாகத்திற்கு உதவினால், அந்தத் தாந்திரிகனைப் பழிவாங்கலாம்" என்றும் முனிவர் கூறுகிறார்.
- வாக்குறுதி: அந்தத் தாந்திரிகனைப் பழிவாங்கவும், தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும், விக்ரமாதித்தன் மயானத்தில் இருக்கும் மரத்தில் தொங்கும் வேதாளத்தின் உடலை எடுத்து வந்து, அந்தத் தாந்திரிகனிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளிக்கிறான்.
சிவனின் சாபம் கைலாயத்திலிருந்து திரும்பி வந்த புட்பதத்தன் பல நாட்கள் நிம்மதியின்றி தவித்து வந்தான். அவன் மனைவி பல முறை கேட்டும் காரணம் என்னவென்று சொல்லாத புட்பதத்தன் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் அந்த தேவ ரகசியத்தை தன் மனைவியிடம் கூறிவிட்டான். இது உடனே ஈசனுக்கு தெரிந்துவிட்டது. தன் பேச்சை மதிக்காத புட்பதத்தனை வேதாளமாக மாறி பூமியில் முருங்கை மரத்தில் தொங்கும்படியும், ரகசியத்தை காக்க முடியாத நீ இனி கேள்விகள் கேட்டுக்கொண்டே உன் வாழ்நாளை கழிப்பாய் என்றும், ரகசியத்தை கேட்ட தேவதத்தை வனத்தில் இரவு முழுவதும் வீணை வாசித்து மற்றவர் உறக்கத்தை கெடுத்து கொண்டே இருப்பாய் என்றும் சாபமளித்தார்.
முனிவரின் சூழ்ச்சி பல ஆண்டுகளாக வேதாளமாக புட்பதத்தன் சுடுகாட்டில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் முனிவன் ஒருவன் வேதாளத்தை தன் அடிமையாக்கி அதன் சக்திகள் மூலம் உலகத்தை ஆள நினைத்தான்.அதற்காக தவமிருந்த போது காளி தேவி 1000 அரசர்களின் தலையை தனக்கு காணிக்கையாக அளித்தால் உன் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். அந்த கொடூர முனிவனும் பல அரசர்களை ஏமாற்றி காளி கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களை பலிகொடுக்க தொடங்கினான். இப்படியே 999 அரசர்களின் தலையை காளிக்கு பலிகொடுத்தான்.
விக்கிரமாதித்தன் ஆயிரமாவது பலியாக விக்கிரமதித்தனை பலி கொடுக்க நினைத்த முனிவன் விக்கிரமாதித்தனின் அரசவைக்கு சென்று காட்டுக்குள் ஒரு காளி கோவில் இருப்பதாகவும், அங்கு வேண்டினால் உங்கள் நாடு வளம்பெறும் எனவும் கூறினான். விக்கிரமாதித்தனும் முனிவனின் பேச்சை நம்பி அவனுடன் செல்ல சம்மதித்தான்.
வீணை இசை முனிவனுடன் காளி கோவிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அன்று இரவு அந்த கோவில் மண்டபத்தில் தங்க முடிவெடுத்தான். முனிவனும் பூஜை முடிந்தவுடன் விக்கிரமாதித்தனை பலியிட முடிவெடுத்தான். அப்பொழுது தூரத்திலிருந்து கேட்ட மனதை மயக்கும் வீணை இசை அவனை ஈர்த்தது. இசை வந்த திசைநோக்கி நடந்தான். அங்கே ஒரு அழகிய பெண் இருட்டில் அமர்ந்துகொண்டு வீணை வாசித்து கொண்டிருந்தாள். அவளிடம் நீ யார் ஏன் வனத்திற்குள் அமர்ந்து வீணை வாசித்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் அவனிடம் கதை சொல்ல தொடங்கியது. விக்கிரமாதித்தனும் கதை கேட்க தொடங்கினான். இறுதியாக வேதாளம் கதையிலிருந்து ஒரு கேள்வி கேட்டது. அதற்கான விடை விக்கிரமாதித்தனுக்கு தெரிந்தே இருந்தது. பதில் கூறினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றுவிடும். பதில் கூறவில்லை என்றால் தலை வெடித்து சிதறிவிடும், என்ன செய்யலாம் என்று யோசித்த விக்கிரமாதித்தன் பதிலே கூறிவிடலாம் என்று வாய்திறந்து பதில் கூறிவிட்டான். தான் இட்ட நிபந்தனையை விக்கிரமாதித்தன் மீறிவிட்டதால் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். இதேபோல 24 முறை கதை சொல்லி மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம்.
சாப விமோசனம் மீண்டும் வேதாளத்தை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் விக்கிரமாதித்தன். இம்முறையும் வேதாளம் கதை சொல்ல தொடங்கியது. ஆனால் விக்கிரமாதித்தன் வாயை திறந்து பேசவில்லை. கேள்விக்கு பதில் கூறுவது போலவே பாசாங்கு செய்துகொண்டு கோவில் வரை வந்துவிட்டான். விக்கிரமதித்தனையே கவனித்து வந்த வேதாளம் கோவில் வந்துவிட்டதை உணரவில்லை. சிவன் கூறியபடி கோவிலுக்கு புட்பதத்தனும், தேவதத்தையும் சேர்ந்து வந்தததால் அவர்களின் சாபம் நீங்கியது.
முனிவரின் மரணம் சாபம் நீங்கிய புட்பதத்தன் விக்கிரமாதித்தனுக்கு நன்றி கூறியதோடு முனிவனின் உண்மையான எண்ணத்தை பற்றியும் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் அந்த முனிவரின் தலையை காளி தேவி முன் வெட்டி வீழ்த்தினான். அப்போது அங்கு தோன்றிய காளி தேவி " விக்கிரமாதித்தா நீ கொடுத்த பலியில் என் மனம் குளிர்ந்தது உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள் " என்று கூறினார். அதற்கு விக்கிரமாதித்தன் முனிவனால் கொல்லப்பட்ட அணைத்து அரசர்களும் உயிர்பெற வேண்டும் என்று வரம் கேட்டார். காளி தேவியும் விக்கிரமாதித்தன் கேட்ட வரத்தை தந்ததோடு அவனையும், அவன் நாட்டு மக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார்
Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2018/unknown-story-of-vikramadithyan-and-vedhalam-022533.html






ரொம்ப வருடங்களுக்குப் பிறகு செவ்வாய் கதையை, அதே சிறுவனின் ஆர்வத்தோடு படித்தேன்.
பதிலளிநீக்குவிக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கிச் செல்ல இதுதான் காரணமா?
நல்ல பகிர்வு. எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது
வாங்க நெல்லை... நன்றி. நான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்ததில் மகிழ்ச்சி.
நீக்குபறக்கும் குதிரை... ப்ளாட் எளியது என்றாலும் நல்லா எழுதியிருக்காங்க. சிறுவர்களை மனதில் வைத்து ஒரு பத்திரிகை நடத்தியிருக்காங்களே.. அது நம் தலைமுறையோடு போச்சு. இப்போ பிறந்த குழந்தை கையில் மொபைலைக் கொடுத்து வாழ்க்கையின் இனிய தருணங்களைப் பறித்துவிடுகிறார்கள்.
பதிலளிநீக்குஅதேதான் எனக்கும் வருத்தம். அம்புலிமாமா தமிழில் இந்தப் பெயரிலும் மற்ற மொழிகளில், முக்கியமாக தெலுங்கில் சந்தமாமா என்றும் மலையாளத்தில் அம்பிளி அம்மாவான் என்று நாகி ரெட்டியாரால் July, 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நீக்குஅம்புலிமாமா, கோகுலம் (கல்கி நிறுவனம்) பாலமித்ரா, ரத்னபாலா போன்ற புத்தகங்கள் இன்றும் வருகின்றனவா தெரியாது!
வேதாளத்தின் வரலாறும் இன்டரெஸ்டிங். தேர்ந்தெடுத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஆமாம் இருபத்தி நாலு கதைகள்தானா? முடிவுப் பகுதியை இதுவரை படித்ததில்லை.
ஆஹா! விக்கிரமாததித்தன், வேதாளம் கதை! மிகச் சிறிய வயதிலேயே தொடர் கதைகள் வாசிக்கத் தொடங்கி விட்டதால் அம்புலிமாமாவெல்லாம் நிஷித்தமாக இருந்தது எனக்கு. ஆனாலும், இந்த விக்கிரமாதித்தன் கதை மட்டும் அதில் படிப்பேன். தொலைகட்சியிலும் விக்ரம் அவுர் வேதாள் என்று வந்தது.
நீக்குஇல்லை நெல்லை. வேதாளம் கதைகளுக்கு முடிவே கிடையாது. அல்லது குறிப்பிட்ட 24 கதைகள் விக்ரமாதித்தன் கதைகளில் இருக்குமோ என்னவோ... என்னிடம் புத்தகம் இருக்கிறது. தேடி எடுத்து, தேடிப்பார்க்கிறேன்! இவர்கள் அதை தொடரும் கதையாக்கி விட்டார்கள்!
நீக்குநிஷித்தமாக? வாங்க பானு அக்கா... ஆமாம் தொலைக்காட்சியிலும் தொடராக வந்தது.
நீக்குஸ்ரீராம் எனக்கும் இக்கதையில் பதில்கள் ஷார்ப்பா இல்லாதது போலத்தான் தோன்றும்..
பதிலளிநீக்குகதை fantasy கதைகள் எப்பவுமே சுவாரசியம்தான். யோசிக்கவும் வைக்கும்
இதிலும் கேள்விகள் வந்தாலும், தகுதிக்கேற்ப என்பதுதான் முக்கியமான பாயின்ட்!
கீதா
வாங்க கீதா.. ஒருவேளை சிறு வயதில் குழந்தைகளுக்கு சிறிய நீதிகளை, நல்ல வழக்கங்களை சொல்லிக்கொடுக்கவோ என்னவோ.. ஆனாலும்...
நீக்குவேதாளத்தின் மூலமும் தெரிந்தது. இதுவரை அறியாதது, ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
முதலில் 'உடன் இணைப்பா'க அந்த சிறு விவரம் மட்டும் வைத்து அதனுடன் வேறு பகிர்ந்திருந்தேன். தேடிக்கொண்டிருக்கையில் இது கிடைத்ததும் அதையே பெரிய, முக்கிய துணையாக்கி விட்டேன்!
நீக்குவேதாளம் கூறிய கடைசி கதையில் ஒரு ராஜாவும் அவன் மகனும் காட்டிற்குச் செல்வார்கள். அதில் காட்டுப் பாதையில் இரண்டு பெண்களின் காலடிகள் தென்படும். ஒரு காலடி சிறியதாகவும், மற்றொன்று பெரிதாகவும் இருக்கும். பெரிய காலடி உள்ள பெண்ணை ராஜாவும், சிறிய காலடி கொண்ட பெண்ணை இளவரசனும் மணந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, அந்த காலடிகளை தொடர்ந்து செல்வார்கள். அவை முடியும் இடத்தில் ஒரு குடிசை இருக்கும், அதில் ஒரு தாயும், மகளும் வசிப்பார்கள், ஆனால் தாயின் பாதம் சிரியதாகவும், மகளின் பாதம் பெரியதாகவும் இருக்கும். தங்கள் உடன்படிக்கையின்படி மகளை தந்தையும், தாயை மகனும் மணந்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் என்ன உறவு? என்று வேதாளம் கேள்வி கேட்க, விக்கிரமாதித்தனுக்கு பதில் தெரியாது. சரி ஏதோ திரைப்படம் நினைவுக்கு வறுகிறதா?
பதிலளிநீக்கு*நினைவுக்கு வருகிறதா?
நீக்குஅட.. நினைவு வைத்திருக்கிறீர்கள். ஆனால் திரைப்படம் ஒன்றும் எனக்கு நினைவுக்கு வரவில்லையே....
நீக்குவிஜய் மனைவியை சிம்பு காதலிக்க, அவன் அப்பாவாக படத்தில் இருக்கும் கமல் லவட்டுவாரே அந்தத் திரைப்படத்தைச் சொல்றாங்களோ?
நீக்குஹா. ஹா.. ஹா... அவங்க வந்துதான் சொல்லணும்.
நீக்கு//மகளை தந்தையும், தாயை மகனும் மணந்து கொண்டால்//இதுதான் க்ளூ. வேறு யாராவது கண்டு பிடிக்கிறார்களா என்று பார்க்கலாம்.
நீக்குவிஜய், சிம்பு, கமல்.. மூன்று பேரும் இருக்கும் படம் எது என்று எனக்குத் தெரியவில்லை., ஆனால் நான் சொன்ன படத்தில் கமல் உண்டு. விஜை, சிம்புவெல்லாம் அப்போதுபிறந்தே இருக்க மாட்டார்கள்.
அப்போ அபூர்வ ராகங்கள்.
நீக்குநான் திருஷா கமல் சிம்பு நடித்த வந்தவுடன் பெட்டிக்குள் போன படத்தைச் சொன்னேன். மணிரத்நம் டைரக்ஷனா?
நீக்குவிக்ரமாதித்தனா இல்லை விக்ரமாதித்யனா?
பதிலளிநீக்குஏது சரி?
விக்ரமாதித்தன் தான் சரி என்றால் ஏன் அந்தக் கவிஞர் விக்ரமாதித்யன் என்று பெயர் கொண்டார்?...
வாங்க ஜீவி ஸார்... பூவ பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்னும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னு செந்தில் சொல்வது போலதான்!
நீக்குதித்யன் சோழனாக இருக்கலாம். இவன் தித்தனாக இருக்கலாம். பட்டி பார்த்திருக்கிறேன் பாருங்கள்!
கவிஞர் பற்றிய சந்தேகத்தை அவரிடமல்லவா கேட்கவேண்டும்!
ஆதித்யா என்பது வடமொழி. தமிழில் ஆதித்தன்.
நீக்குஆதித்ய மண்டலே த்யாயேத் பரமாத்மானம்.... மந்திரம் நினைவுக்கு வருதா?
'ஆதித்யாய ஸோமாய மங்களாய' வும் நினைவுக்கு வருகிறது!
நீக்குசிறப்பு நெல்லை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஅம்புலி மாமா கதைகள் சிறப்பு...
பதிலளிநீக்குதொடரட்டும் பணி...
முயல்கிறேன். நன்றி.
நீக்குஇப்போதெல்லாம் கைத்தலபேசியில் வாசிக்க முடிவதில்லை.,
நீக்குதட்டச்சு செய்வதும் சிரமமாக உள்ளது...
வேதனை...
உடல் நலனில் கவனம் வையுங்கள்.
நீக்குதுரை செல்வராஜ் அவர்களின் உடல் நிலை பரிபூரண குணம் அடையப் பிரார்த்தனைகள்.
நீக்குதுரை செல்வராஜு சார்.... உங்கள் கண் நலம் விரைவில் சரியாக பிரார்த்தனைகள். படிக்கும்போது, நமக்குத் தெரிந்தவர்களுக்கு கஷ்டம் என்றால் நமக்கு மன வருத்தம் வருகிறது
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வு அருமை. வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள் எப்போது படித்தாலும் சலிப்பு தட்டுவதில்லை. சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். நாங்கள் இந்த தொடர் தொ. கா. வில் வரும் போதும் பார்த்துள்ளோம். கதைகளாக நூலகத்தில் முன்பு புத்தகமாக வாங்கி படித்துள்ளேன்.அம்மா வீட்டிலும் அந்த காலப்புத்தகமாக பெரிய எழுத்து விக்ரமாதித்தன் என்று இருந்த குண்டு புத்தகமும் நினைவுக்கு வருகிறது. . கோடை விடுமுறை என்று வந்து விட்டால், மதிய நேரத்தில் அம்மா படித்து கதைகள் கூறுவார்கள். கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கும். விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தின் புதுமைகள் கதைகளும் நினைவுக்கு வருகிறது. இப்போது அந்த புத்தகமெல்லாம் நொறுங்கிப் போயிருக்கும். இவையெல்லாம் படிக்கும் போது பழைய சந்தோஷங்கள் மனதுக்குள் வருகிறது
ஒரு குடும்பத்தில், இருக்கும் தாயை வேறொரு குடும்பத்தின் மகனும், அந்த தாயின் மகளை அந்த மகனின் அப்பாவும் மணக்க விருப்பப்படும் "முறை தெரியாத கதையை" ஒட்டி எடுத்த அந்த திரைப்படத்தைப் போல இப்போதும் பல வந்து விட்டன. விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகளில் வரும் பழைய சம்பவங்கள் இப்போதும் பல கதைகளுக்கு வித்திடுகின்றன. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. நாளை பயண ஏற்பாடுகள் முடிந்து விட்டனவா?
நீக்குஅம்புலிமாமா - சந்தாமாமா என்ற பெயரில் ஹிந்தியிலும் இந்த புத்தகம் வந்து கொண்டிருந்தது. சிறு வயதில் தெரியாது என்றாலும், தில்லி சென்ற பிறகு பார்த்திருக்கிறேன். ஹிந்தியிலும் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வந்தன. அது ஒரு கனாக்காலம். இப்போதும் படிக்க ஆர்வம் இருக்கிறது.
பதிலளிநீக்குதற்போது குழந்தைகளுக்கான புத்தகங்கள் வெளிவருவதே இல்லை என்றே தோன்றுகிறது. கார்ட்டூன்கள் என்ற பெயரில் காணொளிகளில் வருவது எல்லாமே வெளிநாட்டுக் கதைகள் தான். ஒரு சில ஹிந்தி மொழி கார்ட்டூன்கள் வந்தாலும் அந்த அளவிற்கு ஈர்ப்பதில்லை - உதாரணத்திற்கு மோட்டு - பத்லூ - இதை தமிழிலும் வெளியிட்டு படுத்தினார்கள்! ஹாஹா....
என்னிடம் விக்ரமாதித்தன் கதைகள் புத்தகமாக இருந்தது - யாருக்கு கொடுத்தேன் என்பது நினைவில் இல்லை. தில்லியிலிருந்து வரும்போது என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன்.
வாங்க வெங்கட்... சந்தா மாமா பற்றி நானும் சொல்லி இருக்கிறேன். நான் வைத்திருந்த நிறைய ஒரிஜினல் முத்து காமிக்ஸ் புத்தகங்களை இழந்ததை நான் இப்போது பெரிய இழப்பாகக் கருதுகிறேன்!
நீக்குவிக்கிரமனுக்கு வேதாளத்தைக்கட்டுப்படுத்தி அழைத்துச் செல்வதே முக்கிய வேலை. அப்போது வேதாளம் சொன்ன நிபந்தனை, நான் நீ தூக்கிச் செல்லும்போதெல்லாம் ஓர் கதை சொல்லி அதற்கு ஒரு புதிரும் போடுவேன். அந்தப் புதிருக்கு நீ பதில் சொல்லிவிட்டால் உன் மௌனம் கலைந்து விடுவேன். நான் திரும்ப மரத்துக்குப் போய் விடுவேன். பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்." இதுவே அந்த நிபந்தனை. அதனால் தான் விக்கிரமன் தன்னைக் காத்துக்கொள்ள பதில் சொல்லி விடுகிறான்.
பதிலளிநீக்குபுரிகிறது.
நீக்குஇன்னும் முழுசும் படிக்கலை. முதல் பகுதிக்கான கருத்து இது. மத்தது படிச்சுட்டு வரேன்.
பதிலளிநீக்குபா.வெ. சொன்ன படம் அபூர்வ ராகங்கள். மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதா, உலக்கை நாயகர், ஸ்ரீவித்யா
ஆம். நானும் சொல்லி இருக்கிறேன்.
நீக்குஆர்யன் செகண்டரி ஸ்கூலில் படிக்கும்போது மதிய இடைவேளையில் அம்புலி மாமாவுக்காக போட்டியிட்டு வாசித்தது நினைவில் வந்தது. நல்ல பகிர்வு. சிறுவர்களுக்கு பிடிக்கும் ஒரு ஊர்லே கதை.
பதிலளிநீக்குJayakumar
வாங்க JKC ஸார்.. நன்றி. இன்னும் மாயாஜாலக் கதை இருந்தால் ரசிக்கலாம்.
நீக்குசின்ன வயசிலேயே கல்கி, குமுதம் (தெரியாமல்) விகடன், கலைமகள், கல்கண்டு எனப் படிக்க ஆரம்பித்தாலும் என்னளவில் கண்ணன், மஞ்சரி, அம்புலிமாமா படிப்பதை நிறுத்தவே இல்லை. அநேகமாகக் கல்யாணம் ஆகி ராஜஸ்தான் போனப்புறமாக் கூட அம்புலி மாமா வாங்கின நினைவு இருக்கு. பின்னர் சிகந்திராபாத் வந்தப்போத் தான் விட்டுப் போச்சுனு நினைக்கிறேன். கல்கி குழுமத்தின் கோகுலமும் சிறுவருக்கான புத்தகம் தான் என்றாலும் அதில் கொஞ்சம் உயர்தரமான ஸ்டான்டர்டில் இருக்கும். என் மாதிரி சாதாரணமானவர்களுக்குக் கொஞ்சம் அந்தப் புத்தகம் படிக்கத் திறன் வேண்டும். கோகுலம் எனக்குத் தெரிந்து 2015/16 இல் கூட வந்து கொண்டிருந்த நினைவு. ஆனால் அதற்கும் முன்னாலேயே வாராந்தரி, மாதாந்தரி வாங்குவதை நிறுத்திட்டபடியால் சரியாக நினைவில் இல்லை.
பதிலளிநீக்குஅம்புலிமாமா 1947 லிருந்தே வருகிறது என்பது வியப்பு.
நீக்குஇந்த விக்ரமாதித்தன் தான் விக்ரம சஹாப்தம் ஆரம்பிக்கக் காரணமானவன் என்பார்கள். சந்திரகுப்த விக்ரமாதித்தன். (முதலாம் சந்திர குப்தன்) மௌரிய அரசன். இவன் மந்திரிதான் பட்டி எனவும் இவனும் பட்டியுமாகத் தான் காடாறு மாதம் நாடாறு மாதம் இருந்ததாகவும் சொல்லுவார்கள். சரியான வருடம் தெரியலை. தெரிஞ்சால் இவன் மௌரிய அரசனா, குப்தச் சந்திர குப்தனா எனத் தெரிஞ்சுக்கலாம். ஆனால் குதுப்மினாரில் இந்த விக்கிரம சஹாப்தம் பற்றிய குறிப்புப் பலகை இரும்பில் இருப்பதால் யாரானும் டெல்லி வாழ் தமிழர்கள் பார்த்துச் சொல்லலாம். எதுக்கும் நான் என் சிநேகிதியும் பிரபல பதிவரும் ஆன ஜெயஸ்ரீ சாரநாதன் பதிவுகளையும் பார்க்கணும். அவர் தெளிவாகச் சொல்லி இருக்கார். போய்ப் பார்க்கணும்.
பதிலளிநீக்குபட்டி விக்ரமாதித்தன் என்பதை நானும் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். வீட்டில் விக்ரமாதித்தன் கதை புத்தகம் எங்கோ இருக்கிறது. அதில் அநேகமாக ஒரிஜினலாக 24 கதைகள்தான் இருக்கும். முடிந்தால் அவற்றை எடுத்துக் போடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
நீக்குவிக்ரமாதித்தனை வென்றவன் சாலிவாஹனன். ஆதிசேஷனின் மகன் என்றொரு கருத்து உண்டு. அவனால் தான் சாலிவாஹன சகாப்தம் ஆரம்பித்தது. விந்தியத்துக்குத் தெற்கே சாலிவாஹன சஹாப்தம், வடக்கே இன்றும் விக்கிரம சஹாப்தம் தான் செல்லுபடி. நம் பஞ்சாங்களில் எல்லாம் சாலிவாஹன சகாப்தம் என்றே சொல்லி இருக்கும்.
நீக்குவிக்கிரமாதித்தனை ஒருத்தர் ஜெயிச்சார் என்பதே படிக்க வேதனையா இருக்கு!
நீக்குஇங்கே காட்டில் விக்ரமன் பூஜித்து வந்த காளியைத் தான் உச்சிமாகாளி என்னும் பெயரில் சமயபுரம் அருகிலுள்ள கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொன்னார்கள். நாங்களும் 2,3 முறை சமயபுரம் போகும்போதெல்லாம் போய்ப் பார்த்திருக்கோம். பிரதிஷ்டை எல்லாம் பண்ணலை. தனியாக வைத்துப் பூஜிக்கின்றனர். உஜ்ஜையினி மஹாகாளி தான் உச்சிமாகாளி எனத் திரிச்சுச் சொல்றாங்க.
பதிலளிநீக்குவிக்ரமாதித்தன் நாடாறு மாதம் காடாறு மாதம் வசிப்பதற்கும் ஒரு சாபம் காரணம். அதற்கும் ஒரு காரணம் ஆண்டு. இந்த யோசனையை விக்கிரமாதித்தனுக்கு மந்திரி பட்டிதான் சொல்வான்.
நீக்குYes. I know. and also read so many times.
நீக்குபெரிய எழுத்து விக்ரமாதித்தன் புத்தகம் சென்னை லஸ் கார்னரின் புத்தக வியாபாரி ஆழ்வார்? மூலம் வாங்கினேன். ரயிலில் படிக்கனு யாரோ சொந்தக்காரங்க வாங்கிட்டுப் போய்த் திரும்பக் கொடுக்கலை. அது மாதிரி போன பல புத்தகங்கள் மணியனின் இதயம் பேசுகிறது/அமெரிக்கப் பயணத் தொகுப்பு, முதல் பாகம். வேங்கையின் மைந்தன் சித்தப்பா கொடுத்திருந்த வாழ்விலே ஒரு முறை போன பல புத்தகங்கள்.
பதிலளிநீக்குவருத்தமாகத்தான் இருக்கும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஎங்கள் வீட்டில் அம்புபிமாமா வாங்கி விடுவோம். குழந்தைகள் எல்லாம் விரும்பி படிப்பார்கள் . அதை பைண்ட் செய்து கவினுக்கு கொடுத்து இருக்கிறேன். பேத்திக்கும் கொடுத்து இருக்கிறேன்.பேத்திக்கு கதைகள் மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குவேதாளம் மூலம் விடாமுயற்சி, விட்டுக் கொடுத்தல் , ரகசியத்தை காப்பாற்றுதல் எல்லாம் சொன்னார்கள் கதையில்.
வேதாளத்தின் வரலாறு அருமை.
பெரிய எழுத்து விக்ரமாதித்தன் புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது தேட வேண்டும்.
பதிலளிநீக்குசெவ்வாய் வெறும் வாயாக இல்லாமல் சுவையானதாகக் கொண்டு வந்ததுக்குப் பாராட்டுகள். இந்த யோசனையைச் சொன்னவருக்கும் என் பாராட்டுகள். பழைய நினைவுகளை மீட்டு எடுத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்கு