கேள்வி பதில்கள் :
கீதா சாம்பசிவம்:
1.இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நல்லதா? நாட்டின் மக்கள் தொகை பெருகாமல் இருக்க உதவலாம். ஆனால் மற்ற விஷயங்களுக்கு இது பொருந்துமா?
# நாம் அச்சப்படும் அளவுக்கு இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து போகாது என்றும், இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் அது மிகவும் குறைந்து போனால் அது பற்றி நாம் இப்பொழுது கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை என்றும் நான் நினைக்கிறேன்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஒரு மதம் எந்த காரணங்களுக்காகவும் அடியோடு அற்றுப் போய்விடாது.
2. சமீபத்திய சென்னை உயர்நீதிமன்றம் "அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் கொடுப்பதால் தட்டில் விழும் காசுகளுக்கு உரிமை கோரக்கூடாது." என்பது சரியானதா?
# அடுத்த பதிலைக் காணவும்.
3 அர்ச்சகர்கள்/பட்டாசாரியார்கள்/பூசாரிகள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 7500 ரூ தான் கொடுக்கிறார்கள். இதை நான் எங்க பூர்விக ஊரான பரவாக்கரையிலும் பார்த்தேன். அதுக்கும் அவங்க யார் மூலமாவது பிணைத்தொகை குறைந்த பட்சம் 10,000/- ரூயிலிருந்து அதிக பட்சம் 50,0000/- ரூ வரை பிணைத்தொகை கட்டணும். அப்படிக் கட்டினால் தான் அரசு சம்பளமே கொடுக்கும். அப்படி இருக்கையில் அர்ச்சகர்களுக்குக் கோயில் சம்பளம் கொடுப்பது என்பது அவங்களுக்கு எந்த விதத்திலும் உதவியாய் இருப்பதில்லை. ஆகவே அரசின் தலையீடு நியாயமானதா?
# சரி அல்ல என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஏராளமாக தட்டில் காசு விழும் அர்ச்சகர்களுக்கு வேண்டுமானால் சில நிபந்தனைகள் தேவையாக இருக்கலாம். பெரும்பாலான அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு தட்டில் விழும் சொற்பப் பணம் அவசியத் தேவையாகக் கூட இருக்கும்.
4. இந்த ரீல்ஸ் என்னும் பெயரில் முகநூலில் பகிரும் வீடியோக்கள் அனைத்துமே வன்முறையை முக்கியமாகக் குடும்ப வன்முறையைத் தூண்டுவதாகவே இருக்கின்றன. இதை எப்படி அனுமதிக்கிறார்கள்?
கணவன், மனைவியையோ, அல்லது மனைவி கணவனையோ துன்புறுத்துவதாக வரும் வீடியோக்கள்.
# சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளுக்கு கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சற்று தாராளமான உரிமைகள் இருக்கின்றன. அதுபோக லட்சக்கணக்கான பதிவுகள் ஒவ்வொரு நிமிடமும் வருவதால் இதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் சிரம சாத்தியமான காரியம். மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் வரும் பதிவுகளுக்கு மட்டும் யாரேனும் முயற்சி எடுத்தால் தடை கொண்டு வர முடியும். இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
5. மாமனார் அல்லது மாமியாரை மருமகள்கள் துன்புறுத்துவ்தாக வரும் வீடியோக்கள்.
மருமகளைத் துன்புறுத்தும் மாமியார் அல்லது மாமனார். இப்படியே வருகின்றன. அல்லது பொதுமக்கள் அவர்களுக்குள் போட்டுக் கொள்ளும் சண்டைகள், கூச்சல், கூப்பாடுகள், வன்முறைகளைத் தூண்டும் விதமாகப் பேசும் பேச்சுக்கள். இதை எல்லாம் அனுமதிக்கும் முன்னர் கொஞ்சமானும் யோசிக்க வேண்டாமா?
# முந்தைய கேள்விக்கான பதிலைக் காணவும்.
6. வன்முறை முன்னை விட இப்போது அதிகமாக இருக்கோ என்னும் நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியலை. இதுக்கு மக்கள் காரணமா? ஆட்சியாளர்கள் காரணமா?
# மக்கள் தான் காரணம். ஆனால் மக்களுக்கு மலிவான சந்தோஷங்களை எளிதில் காட்டி அவர்களைக் குற்றவாளிகளாகவும், காமாந்த காரர்களாகவும் ஆக்குவதில் அரசு அனுமதிக்கும் பல விஷயங்கள் துணை போகின்றன.
நெல்லைத்தமிழன் :
1. ஒரு திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நீங்கள் செல்லும்போது, வித விதமாகச் சாப்பிடமுடியும் என்பது சந்தோஷத்தைத் தருமா இல்லை உறவினர்கள் பலரையும் ஒரே இடத்தில் பார்த்து அளவளாவ (இது என்ன வார்த்தை?) முடியும் என்பது சந்தோஷமா? இல்லை சிலர் போல, உணவுப் படங்கள் எடுத்து பதிவிடலாமா, காதையும் கண்ணையும் தீட்டிவைத்துக்கொண்டிருந்தால் பதிவில் எழுதலாம் என்று தோன்றுமா?
# எல்லாம் தான் என்றாலும் , என் வரை, உறவுகளைச் சந்தித்து பேசுவதற்கு முதலிடம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் புதிது புதிதாக இந்த கான்ட்ராக்டர்கள் செய்யும் சில அம்சங்களை ரசித்துப் பார்ப்பதும் வெறுத்துப் பார்ப்பதும் உண்டு.
சாப்பாடு பெரும்பாலும் மூன்றாம் பக்ஷம் தான். என்றாலும் அதிலும் சில சமயம் சில புதுமைகள் விசேஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
2. எதனால் இரயிலில் தரும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது?
# ரயில் உணவு இப்போது சற்றுப் பரவாயில்ல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் -- நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள்.
நிச்சயமாக விலை போகும் என்கிற நிர்ப்பந்தம் இருப்பதால் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்தான்.
3. தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், நீச்சல் என்று தரம் பிரித்து அதில் மாத்திரமே சிலருக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் வெற்றிபெறச் செய்வது போல, ஏன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை மாத்திரம் தரம் பிரித்துக் கொடுப்பதில்லை? ஸ்வீட் கடை வைக்கப்போகிற பையனுக்கு எதுக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியத்தில் பயிற்சி அளிக்கணும்? 12 வருடங்கள் எதற்கு பல்வேறு பாடங்களில் பயிற்சி?
# படிக்கிற மாணவன் எதிர்காலத்தில் என்னவாக இருக்கப் போகிறான் என்பது தெரியாமல் இருக்கும்போது எல்லாவற்றிலும் கொஞ்சம் பயிற்சி கொடுத்து வைப்பது தானே முறை ?
4. உங்கள் அம்மா செய்முறைகளை நீங்கள் எழுதிவைத்துக்கொண்டுள்ளீர்களா? செய்முறைகளை ஆவணப்படுத்தாவிட்டால் வழி வழியாக வரும் செய்முறைகள் மறைந்துவிடும் அல்லவா?
# எழுதி வைத்துக் கொள்ளவில்லை.
என் அம்மா பல விஷயங்களை மிகவும் நன்றாகச் செய்வார்கள் என்பது உண்மை என்றாலும் தனித்துவமாக வேறு யாருக்கும் தெரியாத பக்குவத்தில் எதையும் செய்ததில்லை என்பதால் எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை.
என் சகோதரிகள் ஏதாவது எழுதி வைத்துக் கொண்டிருக்கலாம் . அது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது.
5. மிஞ்சின காய்கறிகளைச் செலவழிக்க 'அவியல்' என்ற முறை மூலம் வழி கண்டுபிடித்ததுபோல, தனித்தனியாக ஒவ்வொரு பாத்திரத்தில் வைக்க பாத்திரம் இல்லாமல் காராபூந்தி, ஓமப்பொடி, வறுகடலை, ரிப்பன் பகோடா போன்றவற்றை ஒரே பாத்திரத்தில் வைத்து, பிறகு அந்த ருசி பிடித்துப்போய்தான் மிக்சர் என்ற ஒன்று வந்திருக்குமா?
# நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் பட்சணங்களுக்கும் அது பொருந்துமோ என்னவோ.
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
நான் வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக சில நாட்களுக்குச் செல்லும் வழக்கம் அங்கிருந்தபோது இருந்தது. சில பயணங்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அமைந்துவிடும். செல்லுமிடங்களில் நான் பழத்தையும், காலை உணவில் ப்ரெட் மற்றும் நான் கொண்டுபோயிருக்கும் எலுமிச்சை கார ஊறுகாயையும் வைத்துச் சமாளித்துக்கொள்வேன். ஆனால் பஹ்ரைன் திரும்பியவுடன், எவ்வளவு நேரமானாலும் (சில சமயங்களில் இரவு 9 மணிக்குத்தான் வீடு வந்து சேருவேன்), உடனே சுடச் சுட சாதம், வெந்தயக் குழம்பு மற்றும் அவசரத்துக்கு உருளை ரோஸ்ட் செய்து சாப்பிடுவேன். அப்புறம்தான் உயிர் வந்தமாதிரி இருக்கும்.
எனக்கு உணவில் காம்பினேஷன் இருந்தால்தான் பிடிக்கும். மனைவியும் ஒரு காம்பினேஷன் வைத்திருக்கிறார் (கண்டதிப்பிலி சாத்துமது, பருப்புத் தொகையல் என்பது போல). ஆனால் நான் என்னுடைய காம்பினேஷன் மாத்திரமே செய்யச் சொல்லுவேன் (ஏனென்றால் நான் ஜனநாயகவாதி). வெண்பொங்கல் செய்தால் முள்ளங்கி சாம்பார். ஒருவேளை முள்ளங்கி இல்லை என்றால், புதிதாகத் தயார் செய்த எலுமிச்சை கார ஊறுகாய். மோர்க்குழம்பு செய்தால், கத்தரி புளிக்கூட்டு, உருளை அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட், வெந்தயக் குழம்பு என்றால், கீரைக்கூட்டு... என்று ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன். அப்படித்தான் வீட்டில் தயார் செய்வார்கள். மனைவி வீட்டில் வெண்டைக்காய் புளிக்கூட்டு, கத்தரி வதக்கல் போன்றவை தயார் செய்வார்கள். ஆனால் நான் அவற்றை விரும்புவதில்லை. கத்தரிக்காய்னா, பாசிப்பருப்புக் கூட்டு, புளிக்கூட்டு அல்லது பொடி அடைத்த-தூவிய இல்லை கரேமது. இப்படி ஜனநாயகவாதியா இருந்திருக்கிறேன்.
KGG பக்கம் :





சிறிய தொடர் என்றாலும் நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க.
பதிலளிநீக்குடேட்டா திருடர்களைப் பற்றிய தொடர் போலிருக்கிறது. பொருத்தமான படம்.
நன்றி!
நீக்குகேள்விக்கும் பதிலுக்கும் நிற வித்தியாசம் கொடுக்க மறந்துவிட்டீர்களா?
பதிலளிநீக்குஅட! ஆமாம்! சரோஜா தேவி சிந்தனையாகவே இருந்துட்டேன்! இப்போ மாத்திட்டேன்! நன்றி!
நீக்குகேஜிஜி சார் சொன்னதற்கு இரண்டு அர்த்தங்கள் வருகின்றனவே
நீக்குஇரண்டுதானா?
நீக்குதேவலோக எஃபெக்ட் வருவதற்கு உபயோகிக்கும் டிரை ஐஸில் வரும் புகை குளிர்ச்சியாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நடுக் கூடத்தில் எதற்கு பொங்கல் பானை எஃபெக்ட் கொடுத்திருக்கிறார்கள்? ஶ்ரீராம் விளக்குவாரா?
பதிலளிநீக்குசித்தூர் கல்யாண மண்டபத்தில் ..
நீக்குஅர்ச்சகர்கள் பட்டாச்சாரியார் சம்பளம்... இதில் மதமாற்ற அரசியல் இருக்கிறது. எம்பிக்கள், எம் எல் ஏக்கள், கவுன்சிலர்கள், மந்திரி மேயர் முதலான பணிக்ளில் இருப்பவர்கள் ஊழல் செய்கிறார்கள், அதனால் அவர்களுக்கு மாதம் பத்து ரூபாய்தான் சம்பளம் என அரசு அறிவிக்கலாமே.
பதிலளிநீக்குதாசில்தார்கள் முதற்கொண்டு அரசுப் பணியில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்குவதால் ஓய்வூதியம் கிடையாது, மாதச் சம்பளம் இரண்டு ரூபாய்கள் என அரசு அறிவித்தால் பொதுமக்கள் சந்தோஷப்படுவரே.
பழைய முதலமைச்சருக்கு மாத்திரம் சம்பளம் கொடுக்கலாம். அவர் ஏழை. மொத்தமே இந்த எழுபது வருட மக்கள் பணியில் ஐம்பதாயிரம் ரூபாய்தான் சேர்த்திருக்கிறார். வீடு நிலம் வாகனம் என எதுவும் இல்லாத ஏழை.
:)))) நல்ல யோசனை!!
நீக்குகுழந்தைகளின் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டியது முதலில் பெற்றோர். ஒரு மத்த்தைச் சார்ந்தவர்கள், எல்லாம் மேலே உள்ளவன் பாத்துக்குவான்னு பெத்துக்கறாங்க. ஒரு மத்த்தைச் சார்ந்தவர்கள், நமக்கு ஏன் கஷ்டம், நாட்டுக்கும் வீட்டிற்கும் நம் சொந்த சௌகரியத்துக்கும் கஷ்டம் என ஓரிரண்டோடு நிறுத்திவிட்டு, பிறகு நாட்டைப் பற்றி, சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுகிறோம்.
பதிலளிநீக்குஇதற்கு தீர்வு, சிறுபான்மையினர் என்ற பெயரில் இருக்கும் எல்லாச் சலுகைகளையும் ஒழிப்பதுதான். அரசின் உதவி சரிசம்மாக எல்லாக் குடும்பத்திற்கும் போகணும். பத்து குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு என்ன கொடுக்கிறதோ அதையே குழந்தைகள் இல்லாத ஓரிரு குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கும் கொடுக்கணும்.
யூகேயில் அரசின் நலத் திட்டங்களால் விளைந்த அனர்த்தங்களை அங்கு முதல் முறையாகச் சென்றிருந்தபோது உள்ளூர் பத்திரிகையிலும், பிறர் சொன்னதைக் கேட்டும் தெரிந்துகொண்டேன்.
நல்ல யோசனை - ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?
நீக்குநம் நாட்டில் ஜனத்தொகையை இப்போதுதான் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறோம், இதில் அரசியல், மதம், மருத்துவம் போன்ற காரணங்களை காட்டி அதிகம் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் எ ன்கிறார்கள். சம்பந்தபட்ட இளைய தலைமுறையோ திருமணம் செய்து கொள்ளவே யோசிக்கும் பொழுது குழந்தைகளுக்கு எங்கே போவது?
பதிலளிநீக்குஅதானே !!
நீக்குகவலையே அதனால் தான் பா.வெ. குழந்தை பெற்றுக்கொள்ளவும் இளைய தலைமுறை பயப்படுவதோடு இல்லாமல் வளர்ப்பதையும் பெரிய சுமையாக நினைக்கின்றனர். இதைப் பார்க்கையில் எண்பதுகளுக்கு முன்னர் இருந்த தாய்மார்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லலாம். நாலைந்து குழந்தைகளாக இருந்தாலும் வளர்த்து ஆளாக்கினார்கள்.
நீக்குஆனால் வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் குறைந்த பக்ஷமாக 3 குழந்தைகள் இருப்பாங்க. தமிழ்நாடு போல் இப்போதெல்லாம் பரவலாகச் சொல்லப்படும் ந்யூக்ளியர் குடும்பம் அங்கெல்லாம் காண முடியாது. தற்போதைய நிலவரம் தெரியலை. வெங்கட் போன்றவர்கள் தான் சொல்லணும்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குகேள்விகள் மற்றும் பதில்கள் நன்று..... Reels - சுதந்திரம் தவறாக பயன்படுத்த உதவும் என்பதற்கான சாட்சி. அரசு முயன்றாலும் எல்லா reels ஐயும் வெளியிட தடை செய்ய முடியாது. Democratic நாடுகளில் இது சாத்தியமல்ல. North Korea மற்றும் China போன்ற நாடுகளில் மட்டும் நடக்கும்.
இரயிலில் உணவின் தரம் - லாபம் மட்டுமே வேண்டும், அதுவும் செலவு அதிகம் (ஊழல்) எனும்போது லாபம் ஈட்ட ஒரே வழி தரத்தைக் குறைப்பது மட்டுமே.
ஆம், சரிதான்.
நீக்குவட இந்திய ஷதாப்தி ரயில்களில் பயணம் செய்தால் உணவு ருசியாகக் கொடுப்பார்கள். இப்போல்லாம் தெரியலை. ஆனால் உணவு விஷயத்தில் வட மாநிலங்களில் சமரசம் செய்து கொள்வதில்லை. நல்ல உணவாகவே தருகின்றார்கள். நாங்க கோலாப்பூர் போயிருந்தப்போவும் அப்படித் தான் நல்ல உணவாகக் கிடைச்சது. இரவில் "பெண்ணே தோசா" நல்ல சுடச் சுடச் சூடாகக் கொடுத்தார்கள். கொஞ்சம் நேரம் ஆகும். காத்திருந்து தான் சாப்பிடணும். அதுக்காக அவசரமாகவெல்லாம் பண்ணிப் போடுவது இல்லை.
நீக்குகதை - பெயர் கொஞ்சம் விவகாரமாக இருந்தாலும் தொடக்கம் நன்றாகவே இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவெளியூரிலிருந்து திரும்பினால் எந்நேரம் ஆனாலும் சமைத்து சாப்பிடுவது - நல்லது. பல சமயங்களில் நாக்கு செத்துப்போய் திரும்பி வந்து வீட்டில் சுடச் சுட சாதம், வெத்த குழம்பு, சுட்ட அப்பளம் கிடைத்தால் கூட தேவாமிருதமாக இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம் ! அதே, அதே!
நீக்குநாங்க சூடாகச் சாதம் வடிச்சுட்டுத் தெளிவாக கடைசிவரை ஒரே மாதிரியாக இருக்கும்படி மிளகு ரசம், சுட்ட அரிசி அப்பளத்தோடு சாப்பிடுவோம். தயிர் விட்டுக்காமல் கடைஞ்ச மோர், துண்டம் மாங்காய்(எப்போவும் இருக்கும்) தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம். இந்த விஷயத்தில் எங்க ரெண்டு பேருக்குமே ரசம் வேணும். :)
நீக்குநான் சமீபத்தில் கலந்து கொண்ட திருமணத்தில் மணமகளை மாலை மாற்ற அழைத்து வந்த பொழுது இப்படி டிரை ஐசினால் புகை வரச் செய்தார்கள். பார்க்க நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஇங்கும் அதே கதைதான்!
நீக்குகதை நன்றாக துவங்கி இருக்கிறது இருந்தாலும் பெயரை மாற்றுங்கள், எ.பி.க்கு என்று ஒரு தரம் இருக்கிறது. மேலும் பெண்கள் சரோஜா தேவி படிக்கிறேன் என்று சொல்ல முடியுமா?
பதிலளிநீக்குசரோஜா தேவி படம் பார்க்கிறேன் என்று சொல்வது ஏடாகூடமாக இருக்காதா?
நீக்குஇந்தப் பெயருக்கு வேறு ஒரு விளக்கம் வர உள்ளது! பொறுத்திருந்து பார்க்கவும்!
நீக்குஅது என்ன சரோஜா தேவின்னா ஸ்பெஷலா?
நீக்குரீல்ஸில் வன்முறையா? என் கண்ணில் அப்படி ஏதும் படவில்லையே? காமெடிதான் நிறைய பார்க்க கிடைக்கிறது.
பதிலளிநீக்குநம்முடைய சமீப கால தேடல்களின் அடிப்படையில்தான் நமக்கு ரீல்ஸ் காட்டும். சமீபத்தில் செல் ஃபோன் - சாம்சங் கேலக்ஸி பற்றி amazon தளத்தில் தேடினேன். அப்பொழுதிலிருந்து சாம்சங் ரீல்ஸ் அடிக்கடி எனக்குக் காட்டுகிறது. கொஞ்ச நாட்கள் அதை கிளிக் செய்யாமல் விட்டால் அதன் பின் வராது.
நீக்குநான் ரீல்ஸை எல்லாம் தேடிப் பார்ப்பதில்லை. சொல்லப் போனால் அது தான் ரீல்ஸ் என்றே முதல்லே எல்லாம் தெரியவே இல்லை. பின்னர் தற்செயலாக ஒண்ணைப் பார்த்தால் இப்படினு தெரிஞ்சது. ஆனால் அதிகமா முகநூலில் இவைதான் வருகின்றன. ரீல்ஸ் என்று போட்டே பார்த்ததுமே புரியறாப்போல் வன்முறையோடு தான் ஆரம்பிக்கின்றன. அதை எல்லாம் டெலீட் செய்யவே முடியலை. :( நான் இப்போல்லாம் பார்ப்பதில்லை என்றாலும் வரத்தான் வருகின்றன.
நீக்கு//உங்கள் அம்மா செய்முறைகளை நீங்கள் எழுதி வைத்துக் கொண்டுள்ளீர்களா?// எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நெல்லை? எழுதி வைத்துக் கொள்ளும் காலமெல்லாம் மலையேறி விட்டது, இது யூ டியூப் யுகம்.
பதிலளிநீக்குஅம்மா காலத்தில் யு ட்யூப் இல்லையே!
நீக்குஎன்ன அநியாயமா இருக்கே. பாவெ மேடத்தின் அம்மா ரெசிப்பிகள் எங்கே இருக்கின்றன?
நீக்குஅதை சொல்லுங்க.
நீக்குஎல்லாம் பா.வெ. அவர்களோட மனதில் பத்திரமாக இருக்கின்றன. அவ்வப்போது தேவையானால் வெளியே வரும்.
நீக்குஎதிர்பார்ப்போம்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குமுதல்ல பதிவைத் திறந்ததும், கண்ணில் பட்டவை நெல்லையும் சாப்பாடு படங்கள். ஆ! இன்று திங்களா புதனா என்று ஒரு சிறு குயப்பம் அப்புறம் தெரிந்தது....நெல்லை தான் செய்ததை இங்கு பகிர்நிருக்கிறார் படமும் பதமும் என்று...புரிந்தது
பதிலளிநீக்குஅடி பொளி!!
கீதா
இந்த மாதிரி, வாசகர்களுக்கு குழப்பம் வரக்கூடாது என்பதற்காக ஶ்ரீராம், தினங்களுக்கு உண்டான காம்பினேஷனையே தூக்கிட்டார். விட்ட குறை தொட்ட குறையா வியாழன் அவர் அனுபவம் வருகிறது
நீக்கு:))))
நீக்குஎனக்கு வட இந்திய ஜிலேபி ரொம்பப் பிடிக்கும் புளிப்புடன் சூடாக மொறு மொறு என்று....ஆனால் இனிப்பாச்சே...அதனால் சாப்பிட முடியாமல்...ம்ம்ம்
பதிலளிநீக்குபடம் ஜிலேபியா? ஜாங்கிரியா நெல்லை? நீங்க ஜாங்கிரினு எழுதியிருப்பதால் அது தென்னக ஜாங்கிரி என்றே நினைக்கிறேன்
கீதா
இமர்த்தி.. ஜாங்கிரி. சூடான ஜிலேபி-வட இந்திய, அதிலும் நெய்யில் பொரித்திருந்தால்... ஆஹா... தனக்கு தன் குடும்பத்துக்கு டயபடீஸ் என்றால், விருந்தினர்களுக்கும் இனிப்புகள் கிடையாதா? நாங்கள் காபி பவுடர் வைத்துக்கொள்ளாத்து போன்று?
நீக்குஅதே, அதே, நெல்லை குழப்பி இருக்கார். இமர்த்தி என்பது உளுந்தை அரைச்சுச் சுத்துவது. ஜிலேபி எனில் மைதாமாவைப்புளிக்க வைத்துப் பண்ணுவது. ஜிலேபி நல்லா மொறு மொறுனு சூடாகச் சாப்பிட நன்றாக இருக்கும். இமர்த்தி வாங்கிக் கொஞ்ச நாட்கள் வைத்துக் கொண்டும் சாப்பிட்டுக்கலாம். தமிழகத்தில் பல கல்யாணங்களில் காலை முஹூர்த்தம் முடிஞ்சதும் சாப்பாட்டில் இடம் பெறுவது இந்த இமர்த்தி என்னும் ஜாங்கிரியே. நான் கூடச் சுத்துவேனாக்கும். ஆனால் இந்த மைதா ஜிலேபி தான் ரொம்ப சுலபம்னு நினைச்சிருந்தது சரியாவே வரலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஅநேகமாக இந்த மைதா ஜிலேபி மட்டும் அன்றாடம் சூடாகக் காலை வேளையில் பண்ணுவார்கள். ராஜஸ்தான், குஜராத், மத்யப்ரதேஷில் எல்லாம் காலை உணவில் முதலில் இந்த ஜிலேபிகள் தான் இடம் பெறும் போட்டுட்டே இருப்பாங்க. சூடாகப் பொரித்து வர வர கொஞ்சம் கூடச் சுணக்கமே இல்லாமல் போடுவாங்க. இதிலெல்லாம் தமிழ்நாடு சுமார் தான். கொடுக்கும் மனசே வராது.
நீக்குஎன்ற்குத் தெரிந்து, குஜராத்திகள் போல உணவை உபசரித்துப் போடுபவர்கள் ஈரேழு பதினாலு லோகத்திலும் இல்லை. இன்னும் போட்டுக்கொங்க என்று கழுத்து வரை சாப்பிட வைப்பார்கள். பொதுவா தமிழகத்தில் சாம்பார் கேட்டா கண்டுக்காம ரசத்தை ஆரம்பிப்பாங்க. காய் கேட்டா வரமாட்டாங்க. கடைசில எழுந்துக்கும் சமயம் நீங்க கேட்ட சாம்பார் வேணுமானுவாங்க.
நீக்கு:))))
நீக்குஆனால் இரண்டாவது படம் வட இந்திய ஜாங்கிரி என்று தெரிந்தது. இமர்த்தி....உளுந்து மாவில் ...ஜலேபி மைதாவில் செய்வது.
பதிலளிநீக்குகீதா
நெல்லை உங்க காம்பினேஷன் பாரா வாசித்துச் சிரித்துவிட்டேன்!!! என்ன ஒரு ஜனநாயகம்.....ஜனநாயகன் அப்படின்னு!!!!!!!!!!!!!!!இது அந்த ஜனநாயகன் இல்லையாக்கும்!!
பதிலளிநீக்குகீதா
என்னைவிட ஜனநாயகமா வீட்டில் இருக்க முடியுமா? இன்றுகூட, மஞ்சப் பொங்கல், நிறைய வெண்டைத் தான்கள் போட்ட வெந்தயக்குழம்பு சொல்லியிருக்கிறேன். காலையில் பருப்புருண்டைக் குழம்பா அல்லது சுண்டைக்காய் பருப்புசிலிக்கு ஏற்றவாறு சொல்லலாமா என்ற யோசனை.
நீக்குஎனக்கு ஒரு குணம் உண்டு. சொன்ன மெனுவை எதிர்பார்த்துதான் தட்டைப் போடுவேன். மெனு மாறி இருந்தால் பிடிக்காது. ஹா ஹா ஹா. மனசால் சாப்பாட்டை எதிர்பார்ப்பேன்.
பருப்புருண்டைக்குழம்பெல்லாம் அம்மாவோடு போச்சு. கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து பருப்புருண்டை மோர்க்குழம்பு தான். முதலில் எல்லாம் பிடிக்காமல் இருந்தது. பின்னர் உருண்டைக்காகச் சாப்பிட ஆரம்பிச்சேன். பருப்புருண்டைக் குழம்பு எப்போவானும் அதிசயமாப் பண்ணுவேன். அன்னிக்கு என்னமோ விருந்த சாப்பிட்டமாதிரி ஓர் உணர்வு வரும். :)
நீக்குபருப்புருண்டை மோர்க்குழம்பா... கேள்விப்பட்டதே இல்லையே. என் அம்மா வடை மோர்க்குழம்பு பண்ணுவா. அதெல்லாம் அம்மாவோட போச்சு.
நீக்குபுக்ககத்தில் பருப்புருண்டை மோர்க்குழம்பு தான். குஜராத்தில் கூடக் கடி செய்கையில் கடலைமாவில் மசாலா சாமான்கள் சேர்த்துக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு " Ghகட்டே" என்னும் பெயரில் உருண்டை தயாரித்துக் கடியில் போடுவாங்க. Ghகட்டே கி சப்ஜி என்றும் பண்ணுவாங்க. குஜராத் "உந்தியாவில்"(நம்ம அவியல் மாதிரி) கட்டாயமாய் இந்த "Ghகட்டே இடம் பெறும்.
நீக்குபருப்புருண்டை மோர்க்குழம்பு, வடை மோர்க்குழம்பு எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
நீக்குவடை மோர்க்குழம்பு அடிக்கடி பண்ணுவேன். ரசவடையும் பண்ணுவேன். சாம்பார் வடை அதிகம் பண்ணினதில்லை. ரசவடைக்கான வடை தயாரிப்பும் சரி, ரசமும் சரி தனியாக இருக்கும். பட்டாணிப் பருப்பு என்னும் சின்னதாகக் கடலைப்பருப்புப் போலிருக்கும் பருப்பில் தான் ரசவடைக்கான வடை பண்ணுவோம். இதை என் அம்மா அப்பாவின் நண்பர் திரு தாணுமாலயன் அவர் மனைவியிடம் கற்றுக் கொண்டு பண்ணினார். அம்மாவிடமிருந்து எனக்கு வந்தது. இப்போல்லாம் (நான் பார்த்தவரை) ரசவடை ரசத்தில் பூண்டு சேர்த்துடறாங்க என்றார்கள். ஆகவே ரசவ்டை மட்டும் வீட்டில் பண்ணுவது தான்.. எங்க வீட்டில் ரங்க்ஸுக்கு மோர்க்குழம்பு வடை பிடிக்கும். ரசவடைனா ஒண்ணோ ரெண்டோ தான். ஆனால் என்னிடமிருந்து வந்ததுனு நினைக்கிறேன். எங்க பையர் ரசவடை சாப்பிடுவார். இங்கே கூட சரவண பவன், வசந்த் பவனில் ரசவடை வாங்குகிறார்.
நீக்குஸ்ரீராம் படங்கள் சூப்பர். இப்படி சொர்கம் நு காட படங்கள்ல ஐஸ் புகை போல செய்வாங்களே அப்படி...அதுதானே?
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் இப்ப வைக்கிறாங்க பாருங்க.
நான் ஒரு கதையில் ஒன்றில் இப்படி எழுதியிருக்கிறேன், ....கல்யாணத்தின் முதல்நாள் சமீபத்திய வழக்கம் ரிசப்ஷன். பெண்ணையும் மாப்பிள்ளையையும் தேடினேன். அதோ என்றார்கள். ஸ்டேஜில் ஒரே புகை. புகை மறை மறைய பெண்ணும் மாப்பிள்ளையும் தெரிந்தார்கள். புகையினிடையே ஃபோட்டோ வீடியோ ஷூட் marriages are made in heaven என்று ஒரு banner! வைக்கப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். ........
கீதா
துட்டுக் கொழுப்பு என்று சொல்லக்கூடாது. நிறைய கூந்தல் இருக்கிறது.. அள்ளி முடியறாங்க. ஆனால் எனக்கு ஆடம்பரம் கசக்கும்.
நீக்கு2021 நவம்பரில் தம்பி பையர் கல்யாணம் தான் நான்/நாங்க கடைசியாக் கலந்துண்ட கல்யாணம். அதிலே இப்படித்தான் புகை போட்டாங்க. அதே போல் என் பெரிய நாத்தனாரின் பேத்தி கல்யாணத்திலும் ஒரே புகை மண்டலம். சிலருக்கு இதில் ரொம்பப் பெருமை. ஆனால் எனக்கெல்லாம் ரசிக்கலை. வெளியே காட்டிக்கலை.
நீக்குஆம். அது ஒரு ரசனை! இளைய தலைமுறையினர் ரசிக்கிறார்கள்!
நீக்குகௌ அண்ணா சூப்பர் தொடக்கம்.
பதிலளிநீக்குபா பா வுக்கே அல்வா கொடுத்திருக்கானோ அந்த நபர்!!! பா பா உடனே பேங்க் அக்கவுன்டை செக் பண்ணினானா? துப்பறிபவனுக்கே ஒரு துப்பறிவாளன்!
கீதா
:)))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குபொதுவாகவே யுட்யூப், சமூக வலைத்தளங்களுக்கு ஊடகங்களுக்கு ஒரு சென்சார் கொண்டு வந்தால் நல்லது. யுட்யூப் அப்படி ஒன்றைக் கொண்டு வருவதாக அறிவித்தது. செயல்பாட்டில் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. வந்ததாகத் தெரியவில்லை. மேமாதத்திலிருந்து என்று சொல்லியிருந்தது.
பதிலளிநீக்குகீதா
வந்தால் நல்லது.
நீக்குஅதே போல் பெண்ணை மேடைக்கு அழைத்து வருகையில் வட இந்தியாவில் டோலியில் அமர்ந்திருக்கும் பெண்ணின் மேல் பந்தல் போல் பட்டுத்துணியைப் போர்த்திக் கூட்டி வருவாங்க. அதே போல் தான் என் தம்பி பையர் கல்யாணத்திலும். பெண்ணின் தம்பி, மாமாக்கள் அது மாதிரி அழைத்து வந்தார்கள். தென்னிந்திய பிராமணர்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு பிராமணர்களின் சம்பிரதாயக் கல்யாணங்களே முற்றிலும் மறைந்து விட்டதுனு சொல்லலாம். இந்தக் கல்யாணச் சம்பிரதாயங்கள் பற்றி நான் என்னோட வலைப்பக்கம் எழுதிய தொடர், "என்ன கல்யாணமடி கல்யாணம்" கின்டிலில் வெங்கட் என்னோட கணக்கில் சேர்த்திருக்கார் ஓரிரு வருடங்கள் முன்னரே. இப்போத் தான் பார்க்க நேர்ந்தது. முடிஞ்சவங்க போய்ப் பார்க்கவும். பெண் பார்த்தலில் தொடங்கி சப்தபதி அதன் பின்னர் லாஜ ஹோமம் வரை எழுதி இருக்கேன்.
பதிலளிநீக்குபார்க்கிறோம்.
நீக்குதொடர் அட்டகாசமாகத் தொடங்கி இருக்கு. மேலும் தொடரக் காத்திருக்கேன்.
பதிலளிநீக்குஇவை ஸ்ரீராம் "பெண்"களூர் வந்தப்போ எடுத்த படங்களா? அல்லது சித்தூர் கல்யாணத்திலா?
நெல்லையின் உணவுப் பொருத்தங்கள் எனக்கும் பிடித்தமானவை. ஆனால் மோர்க்குழம்புன்னா கட்டாயமாய்க் கத்திரிக்காய்ப் புளிவிட்ட கூட்டுத் தான். அநேகமாக இது எங்க வீட்டு ஜீன்லேயே இருக்குனு நினைக்கிறேன். ஒரு தரம் இதைப் பத்திச் சொன்னப்போ என்னோட மாமா பெண்கள், பையர்கள் எல்லாம், "அக்கா, எங்களுக்கும் இதான் விருப்ப உணவு" என்றார்கள். அதே போல் மோர் சாதத்துக்கு (தயிர் கூடாது. கடைஞ்ச புளிக்காத மோர்) துண்டம் மாங்காய் தான் சரியான துணை. வத்தக்குழம்புன்னா அரைக்கீரை மசியல் அல்லது முளைக்கீரை மோர்க்கீரையாகப் பண்ணினது. ஆனால் இது எதுவுமே புக்ககத்தில் வழக்கம் இல்லாததால் எப்போவானும் நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கையில் பண்ணச் சொல்லுவார். சாப்பிடுவோம். புக்ககத்தில் தினமும் சாம்பார், தேங்காய் பருப்புப் போட்ட கறி அல்லது வதக்கல் கறிதான். கூட்டெல்லாம் எப்போவானும் யாரானும் அதிகப்படி சாப்பிட வந்தால் துணைக்குப் பண்ணுவாங்க. சாம்பாரை மாத்திட்டா என் மாமனார் அழுதே விடுவார். :))))
வெண்டைக்காய்ப் புளிக்கூட்டு நானே நிறையத் தரம் பண்ணி இருக்கேன் கல்யாணத்துக்கு முன்னால். மோர்க்குழம்பு பண்ண முடியலைனா மோர்ச்சாறுனு கெட்டி மோரில் அரிசி மாவு, ஓமம் சேர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்துக் கொண்டு வாணலியில் தே. எண்ணெயில் கடுகு, துவரம்பருப்பு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் கரைத்த மோரை ஊத்திக் கொதிக்கும் முன்னர் கீழே இறக்கிடுவோம். இதை எங்க வீட்டில் மோர்ச்சாறுனு சொல்லுவோம். இது அடிக்கடி பண்ணுவோம். துவையல் சாதம், சில சமயங்களில் பிசைந்த சாத வகைகள்னு தொட்டுக்கப் பண்ணுவோம். அது சரி, இன்னிக்கு என்ன கிழமை?
பதிலளிநீக்குகேள்விகளுக்கான எல்லா பதில்களும் நன்றாக இருக்கின்றன. அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதோடு அவங்களைப் பார்த்துப் பொறாமையும் படுகின்றனர். என்ன செய்வது? எல்லாம் காலத்தின் கோலம்.
பதிலளிநீக்குநெல்லை சொல்லி இருப்பது போல் கல்யாணங்களில் உணவு ரொம்பவும் வீணடிக்கப்படுகிறது. ஆடம்பரம் காட்டுவதில் முனைப்போடு இருப்பவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.