கேழ்வரகு சேமியா / சேவை இட்லி
பெங்களூருக்கு
வந்த புதிதில் இருந்த வீட்டிலும், கொரோனா சமயத்தில் இருந்த வேறொரு வீட்டிலும் தனிவீடுகள்
என்பதால் மொட்டை மாடி வசதி உண்டு. எனவே வற்றல், வடாம், மரச்சீனி அப்பளம், ஊறுகாய் என்று
மகனுக்கு அனுப்ப முடிந்தது. கூடவே ரெடி மேட் சாமான்கள் வீட்டிலேயே தயாரித்து அனுப்ப
முடிந்தது.
அவனுக்கு
சேவை ரொம்பப் பிடிக்கும். எனவே புழுங்கலரிசி ஊற வைத்து அரைத்து கிளறி வேக வைத்து (வற்றல் வடாமுக்குச் செய்வோமே அப்படி), சேவைநாழியில் பிழிந்து, நீட்டமாகவோ வட்டமாகவோ பிழிந்து வெயிலில் நன்றாகக் காய வைத்து,
அவனுக்கு instant சேவையாக / இடியாப்பமாக அவன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்
என்று அனுப்பியதுண்டு. அதிலும் இப்படி இட்லி செய்திருக்கிறேன்.
இப்போது
அவனும் என்னைப் போல் இனியவன் என்பதால், வற்றல் வடாம், ஊறுகாய், அரிசி எதுவும் பயன்படுத்துவதில்லை.
சரி, கேழ்வரகு, கம்பு, சோள மாவில் சேவை / இடியாப்பம் செய்கிறோமே அப்படி செய்து காய
வைத்து அவனுக்கு அனுப்பினாலோ என்று கேழ்வரகு மாவில் முதலில் செய்து பார்த்தேன். மாவை கொஞ்சம் வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் எந்த அளவு மாவு எடுக்கிறோமோ அந்த அளவு அல்லது ஒரு அரை கப் கூடுதலாக, கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக வேகும் அளவு கிளற வேண்டும். மாவு தளர இருக்கக் கூடாது. பின்னர் (சேவை / இடியாப்பம்) அச்சில் பிழிந்து நன்றாகக்
காய வைத்து ஒரு பரிசோதனை செய்தேன். கொஞ்சமாகத்தான். சரியாக வந்தது.
நீங்கள்
கடையில் வாங்கும் கேழ்வரகு சேவை என்றால் அதைப் பயன்படுத்தலாம். கேழ்வரகு சேவை பாக்கெட்தான்
என்றில்லை, அரிசி சேவை, எந்த சேவையாக இருந்தாலும் பயன்படுத்தலாம். நான் இரண்டும் பயன்படுத்தியிருக்கிறேன்.
நெல்லை
இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்த ரெடி சேவை, முன்பு சேவை நாழியில் பிழிந்து காயவைத்து கொண்டதில் செய்தது. சமீபத்திய மெஷின் அல்ல கேட்டோ! ஆனால் அதில்தான் இப்ப செய்ய நினைத்திருக்கிறேன். ஆனால் மழை பெய்யத் தொடங்கிவிட்ட்தே!
"அட்சரலட்சம் கொடுக்கும்படியான ஐந்து பாட்டுகளைப் பாரதியார் மகாத்மா காந்தியின் பேரில் பாடியிருக்கிறாரே, அவ்விருவரும் சந்தித்து உறவாடியதாக இதுவரையிலும் தெரியவில்லையே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பாரதியாரும் மகாத்மாவும் சந்தித்தார்கள்; பேசினார்கள்; ஒரே தடவையில், ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொண்டார்கள்.
1919 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ரௌலட் சட்டம் என்ற அநியாயச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதற்குத் தலைமை வகித்து அதைக் காந்தி நடத்த வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்த பிரமுகர்களில் பலர் காந்தியை வேண்டிக்கொண்டார்கள். காந்தி இசைந்தார்.
ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம்போலத் திண்டு மெத்தையில் சாய்ந்துகொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருப்பதைப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகாதேவ தேசாய் எழுதிக்கொண்டிருந்தார்.
காலஞ்சென்ற சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்துநின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்துகொண்டு நின்றிருந்தார்கள்.
நான் வாயில் காப்போன். 'யாரையும் உள்ளேவிடக் கூடாது' என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு. நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.
அறைக்குள்ளே பேச்சு நடந்துகொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; "என்ன ஓய்!' என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்துவிட்டார்.
காந்தி: 'அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?"
பாரதியார்: 'முடியாது. நான் போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி!தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்."
பாரதியார் வெளியே போனதும், 'இவர் யார்? என்று காந்தி கேட்டார்.
தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்துசொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.
இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?" என்றார் காந்தி.
எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள்.
இந்தச் சம்பவத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மகாத்மா காந்தியிடம் பாரதியார் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கப்படாது என்று சிலர் எண்ணலாம்.
நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்றுகொண்டு விண்ணப்பம் செய்துகொள்கிறதா?
ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும், அவரை அழகாக, காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மௌனத்திலிருந்தும், அநாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமானவரையில் சரியாகப் பாரதியாரை மதிப்பிட்டு விட்டார்...."
முதலில், மேற்கண்ட வ.ரா. வின் வர்ணனையிலுள்ள ஓட்டை உடைசல்களைப் பார்ப்போம்.
1. வ.ரா., காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்ததாகச் சொல்கிறார். பிப்ரவரி மாதம் எந்த நாள் காந்தி வருகை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
2. "வாழ்க நீ எம்மான்" என்று காந்தியடிகளைக் காணாமலே வாழ்த்திப் போற்றிப் பாடிய பாரதி, காந்தியடிகளைத் துடுக்காக,"மிஸ்டர் காந்தி" என்று அழைத்திருப்பாரா என்பதை யூகம்கூடச் செய்ய முடியவில்லை.
3. வ.ரா.வால் விவரிக்கப்பட்டுள்ள இந்த பாரதி காந்தி சந்திப்பு, தேதி விவரமில்லாதது மட்டுமல்ல; தான் மிக மதித்துப் போற்றிவரும் காந்தியடிகளிடம் பாரதி, காரணம் ஏதுமில்லாமல் துடுக்குத்தனமும் அலட்சியமும் காட்டி, பொன்னான சந்திப்பை அரை நிமிடத்திலேயே கத்தரித்துக்கொண்டு, சரேலென்று காற்றாய் வெளியேறியதுபோல உருவாகியுள்ளது.
4. தான் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் பத்திரிகையின் உரிமையாளர் ரங்கசாமி அய்யங்கார், கடலூர் சிறையிலிருந்து தான் விரைந்து விடுதலையாக உதவியதாக அறியப்படும் சத்தியமூர்த்தி, மற்றும் ராஜாஜி போன்றவர்கள் முன்னிலையில் வ.ரா. குறிப்பிட்டிருப்பதுபோலப் பாரதி இங்கிதமில்லாமல் நடந்திருப்பாரா?
அவரது நூலில் உள்ள துல்லியக் குறிப்புகளின்படி, வ.ரா. சொல்வது போலப் பிப்ரவரியில் காந்தி சென்னை வரவில்லை. காந்தி 18-3-1919 தான் சென்னை வந்து 23-3-1919 மாலைவரை தங்கியுள்ளார்.
23-3-1919 இரவு தஞ்சாவூருக்குக் கூட்டம் பேச ரயிலேறிச் சென்றுவிடுகிறார்.
ஐயகோ, தமிழகத்தில் காந்தியின் பெரும்பாலான நிகழ்வுகளைத் துல்லியமாக தேதி, நேர விவரங்களோடு அளித்திருக்கும் அவரும் பாரதி -காந்தி சந்திப்பு நிகழ்ந்த தேதியைக் குறிப்பிடவில்லையே. "காந்திஜியின் இந்த விஜயத்தின்போது பாரதியும் அவரும் சந்தித்தார்களென வ.ராமசாமி (வ.ரா.) கூறுகிறார். ராஜாஜியும் இதை ஊர்ஜிதம் செய்கிறார்" என்று அச் சந்திப்பு பற்றித் தான் எதுவும் குறிப்பிடாமல், வ.ரா கூறியுள்ளதாக மட்டுமே அ.ராமசாமி குறிப்பிட்டுள்ளார் (''தமிழ்நாட்டில் காந்தி" பக். 248).
வ.ரா.வின் கூற்றுப்படி, மற்றவர்களெல்லாம் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கையில் பாரதி திடீரென நுழைந்து அண்ணலுக்குச் சரிசமமாய்ப் படுக்கையில் அமர்ந்தது அங்கிருந்த பலருக்குத் திகைப்பை அளித்திருக்கக் கூடும். மேலும், காந்திஜியை "மிஸ்டர் காந்தி" என விளித்து அவருடைய ஒத்துழையாமை இயக்கத்துக்கு பாரதி ஆசீர்வாதம் செய்ததும் அங்குள்ளோருக்கு விசித்திரமாகப்பட்டிருக்கலாம். காந்தி அதனைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் 'யாரிந்த மின்னல்?' என்பதுபோல அங்கிருந்தவர்களைக் கேட்டது காந்தியும் அவ்வருகையால் திகைப்படைந்தார் என்பதை நாம் யூகிக்க முடிகிறது.
இந்நிகழ்வு, "காந்தி - பாரதி சந்திப்பின்போது "பாலபாரதா' ஆசிரியர் என்பது நினைவுகூரப்பட்டு, அறிந்துதான் காந்தி மதித்து உரையாடினார் எனவும் கருதலாம்" என ய.மணிகண்டன் குறிப்பிடுவதை (தினமணி, 11 டிசம்பர் 2024) கேள்விக்கு உட்படுத்துகிறதல்லவா?
இவைபோக, இன்னொரு பக்கம், பாரதியார் காந்தியடிகளை அவரது 1919 வருகையின்போது சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாலாசா வல்லவன் மறுத்து நிற்கிறார் (திராவிட இயக்கப் பார்வையில் பாரதி).
காந்தி சென்னைக்குப் பிப்ரவரியில் அல்லது மார்ச்சில் வந்திருந்தால்கூட
பாரதி அவரைச் சந்தித்திருக்கவே முடியாது எனும் அவரது வாதத்திற்கு,பேராசிரியர் கோ. கேசவன் அவர்களது முனைவர் பட்ட ஆய்வு நூலில் (பாரதியும் அரசியலும், பக்கம் 214) கண்டுள்ள ஆதாரமுள்ள முடிவைச் சான்றாகக் காட்டுகிறார்.
"கடலூர் சிறையில் இருந்து, அரசு விதித்த கடுமையான நிபந்தனைகளை 1918 டிசம்பர் 14 இல் விடுதலை பெறும்போது பாரதியார் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுத்த ஒப்பந்தப்படி பாரதி அரசியல் ஈடுபாடுகளை அறவே கைவிட்டுக் கடையத்தில் வாழ்ந்து வந்தார். 1919 மே மாதத்தில்தான் பாரதிக்கு அரசிடமிருந்து நிபந்தனை தளர்வு கிடைத்தது. அதற்குப் பின் தான் பாரதி சென்னை சென்றிருக்க முடியும்" என்பது கோ. கேசவனின் ஆய்வுத் தரவு.
பாரதி காந்தி சந்திப்பு நிகழ்ந்ததா? எந்த ஆண்டு, மாதம், நாள்? ஆதாரமென்ன? பாரதி காந்தி சந்திப்பு, நேரிலிருந்ததாகச் சொல்லும் வ.ரா. வர்ணித்துள்ளவாறுதான் நடந்ததா?
காந்தியோ, பாரதியோ தமது எழுத்தில் எங்கும் அவர்களது சந்திப்பு பற்றிக் குறிப்பிடவில்லை என்பதும் நெருடலாக உள்ளது.
நமக்கு இதில் உண்மை தெரிந்தாகனும், பாரதியை நாம் நன்கறிய.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்!

கேழ்வரகு ரெடிமேட் சேவை இட்லி.... இதை நான் எதிர்பார்க்கலை. ரொம்ப நன்றாக வந்துள்ளது.
பதிலளிநீக்குஎன் வீட்டில் அணில் சேமியா இருக்கு. அதை வைத்து இப்படி இட்லி பண்ணிப் பார்க்க வேண்டும்.
நன்றி நன்றி நெல்லை. அணில் சேமியாலயும் செய்யலாம். நான் அப்படி கடையில் வாங்கும் இன்ஸ்டன்ட் சேமியா / சேவையிலும் செய்திருக்கிறேன்.
நீக்குஅப்படி ரெடிமேட் ரவை சேவை பாக்கெட் வருது தெரியுமோ. ஆனால் நான் ஏற்கனவே அதுவும் வீட்டிலேயே சிரோட்டி ரவையில் கிளறி செய்துவிட்டேன் கோவிட் சமயத்தில். அப்ப சேவை நாழியில். இப்பமெஷினில்.
கீதா
சிரோட்டி ரவைல சேவையா? சேவை நாழியின் துளைகளின் வெளியே எது வந்தாலும் அதை வைத்து சேவை செஞ்சிடுவீங்க போலிருக்கே
நீக்குஇல்லை நெல்லை அந்த ரவை கொஞ்சம் தண்ணி விட்டாலே உருவேட் தெரியாமல் மாவாகிவிடும்.
நீக்கு//சேவை நாழியின் துளைகளின் வெளியே எது வந்தாலும் அதை வைத்து சேவை செஞ்சிடுவீங்க போலிருக்கே//
ஹையோ தாங்கலைப்பா நெல்லை...சிரிச்சு சிரிச்சு...
கீதா
இன்று வித்தியாசமான செய்முறை.
பதிலளிநீக்குநீங்க அந்த மெஷின் உபயோகித்து சேவை செய்வதையும் பதிவாக்கியிருக்கலாம்.
வரும் நெல்லை. எங்கள் வீட்டு தங்கைகள், மகனுக்காக எடுத்ததில் நான் பேசியபடி நானும் தெரிவேனே....அதனால் இப்ப நானே நான் தெரியாமல் எடுக்க முயற்சி செய்து ஒன்று எடுத்திருக்கிறேன். பார்ப்போம் காணொளி எப்படி வந்திருக்கு என்று தெரியவில்லை. இனிதான் ஓட்டிப் பார்க்கணும். எனக்குப் படங்கள் எடுப்பது ஈசி ஒரு கையில் வைத்துக் கொண்டு வலக்கையால் செய்வதை. காணொளிகள் எடுப்பதற்குச் சிலதிற்கு கூட ஒருவர் வேண்டும். அது பல சமயங்களில் முடியாது. நானே ஒரு கையில் வைத்துக் கொண்டு எடுத்திருக்கிறேன் ஆனால் இரு கையால் செய்ய வேண்டியதை எடுப்பது சிரமமாக இருந்தது. ஓட்டிப் பார்த்து எவ்வளவு தூரம் சரியாக வந்திருக்கு என்று எடிட் பண்ணி, கோர்த்து.....பார்க்கிறேன் நெல்லை.
நீக்குகீதா
காணொளில நீங்க இருந்தாத்தான், நிஜமாகவே இவங்க செஞ்சு பார்த்திருக்காங்க, மண்டபத்துல யாரோ கொடுத்ததை வைத்து பதிவு எழுதலைனு தெரியும். சரிதானா?
நீக்குஹாஹாஹாஹஹ்ஹாஹஹ சிரித்து முடியலை நெல்லை....நோ நோ நான் வந்தா அப்புறம் அது அந்த மெஷினுக்கு விளம்பரம் போல ஆகிடும்!!!!! ஹிஹிஹிஹி...இன்னிக்கு எடுத்திருக்கிறேன். செஞ்சதை...இனிதான் பார்க்கனும் வீடியோஸ். இப்ப ரொம்ப பிஸி தமிழ்நாடு நிலவரத்தைப் பார்த்துக்கிட்டிருக்கேன்..
நீக்குகீதா
இப்போல்லாம் நான் நல்லவங்களா நினைச்ச யூடியூபர்கள் பலரும் விளம்பர மோஹத்துல (காசு தேத்த) கண்ட கண்டதையும் விளம்பரப் படுத்தறாங்க. இதுக்கு வெங்கடேஷ் பட்டும் விலக்கல்ல. அதனால அந்த யூடியூபுகளுக்கு ஒரு கும்பிடு.
நீக்குநானும் இனி தி.பதிவுக்கு எழுதினால், ப்ரெஸ்டிஜ் ப்ரெஷர் குக்கர்லதான் உருளை வேக வைக்கணும், சாந்தா வெட் கிரைண்டர்லதான் உளுந்துவடைக்கு மாவரைக்கணும், கடுகு இந்த பிராண்டுதான் வாங்கணும்னுலாம் எழுதப் போறேன்.
நான் யூ ட்யூபெல்லாம் பார்ப்பதே இல்லை. அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி. கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் தவிர்த்து. எப்போவானும் "ராகேஷ் ரகுநாதனின்" "அம்மாவும் நானும்" பார்ப்பேன். அதை மட்டும் கூகிளில் தேடிப் பார்ப்பேன். இப்போல்லாம் ஆர்வமே இல்லை. :(
நீக்குஉதயம் உளுந்தில் தான் வடை நல்லா வரும்னு சொல்லுவாங்க. இதயம், மந்திரா கடலை எண்ணெய் தான் வடை தட்ட. இஃகி,இஃகி,இஃகி. அது சரி ஸ்ரீராம் எங்கே? சேலத்திலிருந்து இன்னும் வரலையா? மூத்த பிள்ளை கல்யாணத்தின் போதெல்லாம் நான் சரியாக் கவனிக்கலை. அந்தச் சமயம் வரிசையா மூன்று நெருங்கிய நண்பர்கள் வீட்டுக் கல்யாணங்கள். மாமாவோ ஆஸ்பத்திரியில். டிஸ்சார்ஜ் ஆகவில்லை. முதுகுத் தண்டில் டிஸ்கில் அடிபட்டுப் படுக்கையில் இருந்தார். ஆகவே இதெல்லாம் கவனிக்கவே இல்லை.
நீக்குநெல்லை அதனாலதான், விளம்பரம் இல்லாம இருக்கணும்னு. நெல்லை யுட்யூபர்ஸ் பின்ன சும்மா எங்களை மாதிரி வெங்கட்ஜி மாதிரி போடுவாங்களா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம?! அதுவும் ஆள் வைச்சுல்லா வீடியோ எடுக்கறாங்க. அதனாலதான் ப்ரமோ பண்றாங்க.
நீக்குமெட்ராஸ் சமையல்னு யொரு யுட்யூபர் பேர் மறந்து போச்சு அவங்க சொன்னாங்க, ப்ரொமோக்கு அவங்களை கான்டாக்ட் பண்ணாங்களாம் பலர். ஆனா இவங்களுக்கு அதுல உடன்பாடில்லைன்னு சொல்லி அதனால இடையில் கேப் ஆகிடுச்சுன்னு போட்டிருந்தாங்க.
நெல்லை அவங்க ஒழுங்கா போட்டு ப்ரொமோ பண்ணி காசு பாத்தா பாத்துக்கட்டும். ஆனா கன்டென்ட் நல்லாருக்கணும்.
வெங்கடேஷ் பட் அவரோட ப்ராடெக்ட்ஸ் ப்ரொமோ பண்றாரு. பயங்கர விலை. நான் எல்லாம் யோசிச்சுகூடப் பார்க்க முடியாது. சமீபத்துல தேங்காய்த்துருவி ப்ராடெக்ட் போட்டிருந்ததை ஒரு பெண்மணி வாங்கிட்டு அது பத்தி ரிவ்யூ கொடுத்திருந்தாங்க. கொஞ்சம் நெகட்டிவ் ரெவ்யூ.
கீதா
எனக்கு சின்ன வயதிலிருந்தே சேவையில் மிக விருப்பம்.
பதிலளிநீக்குஇப்போல்லாம் (கடந்த நாலு வருடங்கள்) கடையில் வாங்குகிறேன். இடையில் எப்போதாவது மனைவி செய்வாள். ஆனால் அது கஷ்டமான வேலை என்று தோன்றும்.
ஹைஃபைவ் நெல்லை. எனக்கும் சேவை என்றால் போதும் ஒரு நாளை ஓட்டிவிடுவேன். சிறுவயதிலிருந்தே. வீட்டில் சேவை என்றால் நிறைய பிழிய வேண்டுமே. அதைப் பற்றி பதிவு கூட எழுதியிருந்தேன் எங்கள் தளத்தில்.
நீக்குஇல்லை நெல்லை, எளிதுதான். அவங்க செய்யும் போது உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. சேவை நாழியில் செய்தப்ப கூட நான் அடிக்கடிச் செய்துவிடுவேன். ஆவியில் வேக வைப்பது என்பதால் வயிற்றிற்கு எதுவும் பண்ணாது என்று.
என்ன, சேவை நாழியை ஊறப்போட்டு கழுவணுமே அது ஒன்றுதான். ஊரில் இருந்தவரை கிணற்றடியில் உள்ள தொட்டியில் நீர் இரைத்து விட்டுப் போட்டுவிடுவோம். இப்போதைய வாழ்க்கை முறையில் தேய்க்கும் இடத்தில் அதைப் போட்டு ஊற வைத்துப் பைப்படியில் கழுவுவது கொஞ்சம் சிரமம் அது நாம் இருக்கும் வீட்டில் இருக்கும் பைப்பும் தொட்டியும் பொருத்து.
ஆனால் இந்த மெஷின் ரொம்ப வசதியாக இருக்கு. சுத்தம் செய்வது உட்பட.
கீதா
மாவு தயார் பண்ணணும், கிளரணும், கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேக வைக்கணும், பிழியணும், பிறகு சேவை நாழியை அலம்பணும். இதில் கடைசிதான் பெரிய வேலை.
நீக்குஆனால் உங்க மெஷின் சூப்பர்.
ஆமாம் நெல்லை கழுவுவதுதான் கொஞ்சம் சிரமம் சேவை நாழியை.
நீக்குமெஷின் நல்லாருக்கு எளிதாகவும் இருக்கு
இன்று கம்பு மாவில் சேவை செய்தேன்
கீதா
தி/கீதா ! எங்கே வாங்கினீங்க மிஷின்? அமேசான்?
நீக்குஇல்லைக்கா, இங்கு, ஜெயநகர்ல ஒரு ஹோல்சேல் கடையில். Pigeon Brand. USB operated. USB charge ல மொபைல் போல போட்டுட்டு வயர் எதுவும் இல்லாம பிழியலாம். துப்பாக்கி மாதிரி இருக்கும்.
நீக்குஜெயநகர் மெட்ரோ ஸ்டேஷனல் அதை ஸ்கான் பண்ணிட்டு தனியா கூப்பிட்டுக் கேட்டாங்க அது என்னன்னு? ஹாஹாஹாஹா எக்ஸ்ப்ளேயின் பண்ணி....அதுவும் அந்த நபர் வடகிழக்கு மாநிலம்!!! டக்குனு நூடுல்ஸ்னு வரமாட்டேங்குது நம்ம டெர்மினாலஜி சேவை இடியாப்பம்தான் சொல்ல வருது. அப்படிச் சொல்லி கடைசில நூடுல்ஸ்னுசொல்லி மொபைல்ல படத்தைக் காட்டி....ஹாஹாஹஹ அதனால என் மகனுக்கு இதைக் கொடுக்கலாம்னு நினைச்சா கொண்டு போக முடியுமான்னு யோசனை.,
ஆன்லைன்ல கிடைக்குதுக்கா. அமேசானில். ஆனா விலை கொஞ்சம் கூடுதல்.
இந்த மெஷின் கூட எனக்கு ஏதேச்சையாக அமைந்ததுதான். நான் . என் சேவை நாழி உடைஞ்சு போக, அதைப் போட்டு வேற வாங்கலாம்னு போனேன். எனக்கு நாழியின் அடியில் திறந்து அச்சு போட்டு பிழிந்தால் சௌகரியமா இருக்குமேன்னு சுத்தம் பண்ண எளிதாக இருக்குமேன்னு தேடினேன் அது ஹிண்டாலியம்ல இருந்தது ஆனால் எவர்சில்வர்ல இரும்புல இல்லை. ஸோ அப்படித் தேடி அடுத்தடுத்த கடைக்குப் போனப்ப, அவரிடமும் இல்லை சரின்னு கிளம்பினப்ப, உடனே அவர் ஒன் மினிட் மேடம் (வடமாநிலத்தவர்) இதப் பாருங்க என்று...pigeon மெஷினைக் காட்டினார். நம்மவரும் ஓகேன்னு சொல்லிட வாங்கிட்டோம். 2100 ரூ. ஏப்ரல் 29க்குப் பிறகு கொஞ்சம் விலை கூடும் என்றார். நான் கேட்கவில்லை இன்னும்.
அப்பப்ப யூஸ் பண்ணச் சொன்னார் அந்த கடை ஆள். நமக்கும் வீட்டில் சேவை அடிக்கடி செய்வோமே அதனால் பிரச்சனை இல்லை.
இன்னும் வேறு வேறு ப்ரான்ட்களில் இருக்கின்றன ஆன்லைனில்.
IBELL Electric Idiyappam Maker, எல்லாமே ஒரே விலைதான் 3, 238. ஒரு சில ...3500 வரை இருக்கின்றன. இதுவும் சார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான். துப்பாக்கி ஷேப்பில்தான். கிட்டத்தட்ட இதே விலைதான் pigeon machine உம் ஆன்லைனில்.
pigeon machine - kitchenmart website la 2229 rs.
Amazon ல AJS Automatic Noodle Maker with 5 Moulds | Cordless Type-C - 2,590
Summer Snow Electric Idiyappam & Murukku Maker - Reliable Corded Power (No Battery Needed) - 7-in-1 Automatic String Hopper, Sev, Farsan & Pasta Press, Potato Ricer - இது வயர் இணைப்போடுதான் பிழிய முடியும். கார்ட்லெஸ் இல்லை. விலை 3800
அமேசான்ல பீஜியன் தற்போது இல்லை என்று சொல்கிறது. இந்த மெஷின்களுக்கு குறிப்பாக எனக்குத் தெரிந்து Pigeon க்கு இன்னும் மார்க்கெட்டிங் சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. இப்ப விலை கூடப் போகுது என்று சொன்னதால் ஆன்லைனில் இல்லையோ என்று தெரியவில்லை.
அக்கா நிறைய வகைகள் வந்திருக்கின்றன இப்ப. அன்று பார்த்த போது கூட இவ்வளவு இல்லை இப்ப நிறைய. எனவே ஆன்லைனில், எலக்ட்ரிக் இடியாப்பம் .நூடுல்ஸ் மேக்கர்னு போட்டாலே வருது.
நான் வைத்திருக்கும் மெஷினில் தேங்குழலும் பிழிந்து பார்த்தேன். நன்றாக வந்தது ஆனால் முள்ளுத்தேங்குழல் பிழிய முடியாது. மெல்லிய, சற்று தடியான ஓமப்பொடி போல பிழியலாம். நாடா பிழியலாம்.
கீதா
உங்க மெஷினில் வேலை சுலபம். இருந்தாலும் கார்போ அதிகம் என்பதால் நான் சேவை வாங்குவதோடு சரி. சாப்பிடுவது அபூர்வம்.
பதிலளிநீக்குஉங்களுக்கு நல்ல ஆர்வம். பாராட்டுகள்.
நான் செய்யும் சேவையில் carb, gluten இல்லாமல்தானே பெரும்பாலும். எப்போதாவதுதான் அரிசியில்.
நீக்குநன்றி நெல்லை.
கீதா
ஒரு காலத்தில் நான் எவ்வளவு சேவை (அளவு) சாப்பிடுவேன் என எண்ணிப் பார்த்து மலைக்கிறேன். என் அம்மாக்கும் ரொம்பப் பிடிக்கும். சேவை பிழிவது எவ்வளவு கடினம் என இப்போது எண்ணம் வருகிறது. பஹ்ரைனில் சேவை பிழிய மாத்திரம் நான் வருவேன். பிறகு தாஜா பண்ணி பசங்களை பிழியச் சொல்லியிருக்கேன்.
நீக்குகமலா ஹரிஹரன் மேடத்தை சேவை பிழியச் சொல்லிட்டாங்களா? இரண்டு மூன்று நாட்களாக்க் காணோமே
நெல்லை அந்த மெஷின் முடிஞ்சா வாங்கிக்கோங்க. யாரையும் நீங்க கஷ்டப்படுத்தாம நீங்களே செஞ்சுடலாம். புழுங்கலரிசில கொஞ்சமா செஞ்சுக்கோங்க. 4 கொழுக்கட்டை வராப்ல ஒரு கப் அரிசில செஞ்சா உங்க ரெண்டுபேருக்கும் ஆச்சு. அதிகம் வராது.
நீக்குகீதா
நானும் சென்ற சனியன்று ஒரு பரீட்சார்த்தமாக ஞாயிறன்று சேவை இட்லி செய்யலாம் என்று மனைவியிடம் கூறி செய்யச் சொல்லியிருந்தேன். வழக்கம்போல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் அல்லாமல் வெயிலுக்கு பழைய சோறு மோர் வெங்காயம் ப மிளகாய் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள் என்று பழைய சோறு தான் கிடைத்தது.
பதிலளிநீக்குராகி சேமியா அணில் பிராண்ட் கிடைக்கிறது. சேவை செய்ய கஷ்டம் இல்லை.
கோஸ் போட்டது சரியில்லை. அது கடுக்கும். காரட் பீன்ஸ் கேப்ஸிகம் மல்லி இவற்றை அரிந்து இட்லி தட்டில் முதலில் கொஞ்சம் பரத்தி அதன் மேல் சேவை பரத்தி மீண்டும் கொஞ்சம் சேவை பரத்தி (புட்டு செய்வது போல்) வேவித்து எடுக்க பார்க்க அழகாக இருக்கும்.
சோதனை செய்தீர்கள். சாப்பிட்ட எலி ஏதாவது கூறியதா?
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
Jayakumar
திருவனந்தபுரத்தில் வெளியே கிடைக்காத சேவையா? அணில் சேமியா எதற்கு?
நீக்குதிருவனந்தபுரத்துக்காரர்கள் இடியப்பம் தான் சாப்பிடுவார்கள். சேவை என்றால் சமூக சேவை, ஆசிரம சேவை பார்ட்டி சேவை என்பவை தான், பிரபந்த சேவை கூட கிடையாது.
நீக்குவெயிலுக்கு பழைய சோறு மோர் வெங்காயம் ப மிளகாய் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள் என்று பழைய சோறு தான் கிடைத்தது.//
நீக்குஜெ கே அண்ணா இங்கும் காலையில் வாரத்தில் ஒரிரும்முறைகள் இருந்துவிடும்.
ஜெ கே அண்ணா, திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் போனால் அதுவும் பத்மநாபர் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் மாமிகள் செய்து கொடுக்கிறார்கள் இப்போது அதிகமாக இருக்கின்றன. என் தங்கை அங்குதான் வாங்கிக் கொள்கிறாள். ஆனால் உங்கள் பகுதியில் கிடைக்காது சேவை.
கோஸ் துருவிப் போட்டால் தெரியாது. நானும் கேப்ஸிகம் சேர்த்திருக்கிறேன், பீன்ஸ் மட்டும் சேர்க்கவில்லை அன்று இல்லாததால். அப்புறம் பீன்ஸ் போட்டால் அதைத் தனியயக வேக வைத்துப் போட வேண்டும் இல்லைனா வேகாது சில சமயம்.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
இட்லி தட்டில் முதலில் கொஞ்சம் பரத்தி அதன் மேல் சேவை பரத்தி மீண்டும் கொஞ்சம் சேவை பரத்தி (புட்டு செய்வது போல்) வேவித்து எடுக்க பார்க்க அழகாக இருக்கும்.//
நீக்குஅண்ணா செய்திருக்கிறேனே புட்டுக் குழலிலேயே. படம் எடுக்கலை. அடுத்த முறை செய்யும் போது படம் எடுத்துப் போடுகிறேன். இட்லி தட்டில் ரொம்ப அடுக்க முடியாது அண்ணா. புட்டுக் குழல் இல்லைனா பெரிய வட்ட பாத்திரத்தில் அப்படிப் பரப்பி அடுக்கி ஆவியில் வைத்து எடுத்தால் கேக் போன்று. அதுவும் செய்திருக்கிறேன்.
சோதனை செய்தீர்கள். சாப்பிட்ட எலி ஏதாவது கூறியதா?//
ஹாஹாஹா....பிடித்திருந்தது. சோதனை எலிகளுக்கும். எங்க வீட்டில் புதுமையை புது ருசியை ரசிப்பவர்கள் என்பதால் எனக்கு முழு சுதந்திரம் அதில். புகுந்து விளையாட! ஹிஹிஹி நான் செய்வதுதான் குறைவாகிவிட்டது.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
//திருவனந்தபுரத்துக்காரர்கள் இடியப்பம் தான் சாப்பிடுவார்கள்.// ஜெயகுமார் சார்... நான் திருவனந்தபுரத்துக்காரன். கோவில் பக்கத்துல பல கடைகள்ல சேவை, மோர்குழம்பு கிடைக்கும். அதுவும் தவிர வீடுகளில். (பிராமணர்கள்). மற்றபடி கேரள இடியாப்பம் பஹ்ரைனில் கிடைக்கும் (50 ஃபில்ஸ் 1 இடியாப்பம்). என் குழந்தைகளுக்குப் பிடிக்கும், எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் ஒல்லியாக இருப்பதால். திருவனந்தபுரத்துக்கு வந்தால் சேவை மோர்குழம்பு கிடைத்தால் வாங்குவேன்.
நீக்குசரித்திரம் என்பது எழுதுபவரின் கண்ணோட்டம். அது எப்போதும் மாறுபடும். முகலாயர் நோட்டத்தில் எழுதிய சரித்திரமும் வெள்ளைக்காரன் எழுதிய சரித்திரத்தின் சாரமும் வித்தியாசமாக இருக்கும். அவ்வகையில் இன்றைய 'பாரதி காந்தி சந்திப்பு' பற்றிய செய்தியில் கட்டுரை ஆசிரியர் மாறுபட்ட கோணத்திலெழுதியிருக்கிறார். அது அவருடைய உரிமை.
பதிலளிநீக்குசரி விசயத்திற்கு வருவோம். இச்சந்திப்பினால் என்ன பயன் ஏற்பட்டது என்பதேமுக்கியம். அது தெரிவிக்கப்படவில்லை.
இதுதான் பரவலாக அனைவராலும் சொல்லப்படுவது. இந்த இடுகையை முன்னரும் எங்கேயோ படிச்சிருக்கேன். திரு சீனி விஸ்வநாதன் எழுதிய வரலாற்றிலும் இது சரியான தரவுகளுடன் சொல்லப்படவில்லை. சீனி விஸ்வநாதன் புத்தகம் ஹூஸ்டனில் இருந்தப்போ நூலகத்திலிருந்து வாங்கிப் படிச்சிருக்கேன்.
நீக்குகேழ்வரகு சேமியா/சேவை இட்லி ரொம்பவும் நன்றாக வந்திருக்கிறது கீதா! இப்போது தான் எல்லா சிறுதானிய வகைகளிலும் சேமியா வந்திருக்கிறதே! செய்து பார்த்து விடலாம்! தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியா?
பதிலளிநீக்குசேவை என்றாலும் இடியாப்பம் என்றாலும் சந்தகை என்றாலும் எல்லாம் ஒன்று தானே?
வாங்க மனோ அக்கா. எல்லாத்திலும் செய்யலாம். மிக்க நன்றி மனோ அக்கா.
நீக்குதேங்காய்சட்னி நன்றாக இருக்கும். கடலைச் சட்னியும் நன்றாக இருக்கும்
அக்கா, சேவை இடியாபம் சந்தகை எலலம் ஒன்றுதான் என்று சொல்லப்பட்டாலும்...
பொதுவாகச் சேவை என்பது புழுங்கலரிசியில் செய்வது ஊற் வைத்து அரைத்து, வாணலியில் விட்டுக் கிளறி, கொழுக்கட்டை போல உருட்டி ஆவியில் வேக வைத்துச் சேவை நாழியில் பிழிவது. இதில் கொழுக்கட்டை செய்யாமல் அப்படியே மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லியாகவும் செய்து பிழிவதும் உண்டு.
எங்கள் ஊர்ப்பக்கம் இதற்கு திருநெல்வேலி மோர்க்குழம்பு, பப்படம் அல்லது வற்றல் வைத்துக் கொண்டு சாப்பிடும் வழக்கம். இல்லை என்றால் கலந்த சேவை.
இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்வது. பச்சரிசி ஊற வைத்து களைந்து உலர்த்தி ஈரம் இருக்கும் போதே அதை மாவாகத் திரித்து சலித்து, அதை ஆவியில் வேட்டில் வைத்தோ அல்லது மணல் போன்ற பக்குவம் வரும் வரை வருத்தோ வைத்துக் கொண்டு இடியாப்பம் செய்யும் போது, பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு மாவில் கொதிக்கும் நீர் விட்டுக் கொண்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் தண்ணீர்) கிளறி கொஞ்சம் மூடி வைத்து அப்புறம் அதை நன்றாகக் கையால் பிசைந்து ரொம்ப சூடு ஆறிவிடும் முன் இடியாப்ப அச்சில், இடியாப்பத் தட்டிலோ இட்லி தட்டிலோ பிழிந்து ஆவியில் வைத்து எடுப்பது. இடியாப்பம் என்றால் எங்கள் வீட்டில் வெல்லம் போட்ட தேங்காய்ப்பால் அலல்து சிலோன் சொதி.
கீதா
அருமையாய் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்!
நீக்குஇடியாப்பத்தை தஞ்சைப்பகுதியில் பச்சரிசியில் செய்வார்கள். பச்சை மாவு தயார் செய்து கொண்டு பின் ஆவியில் வேக வைத்து ஆற வைத்து பதமாக சலித்து வைத்தால் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும். எல்லோர் வீட்டிலும் இந்த இடியாப்ப மாவு ரெடியாக இருக்கும். மயிலாடுதுறை, திருச்சி என்று சில பகுதிகளில் பச்சை மாவை கோலம் போடுமளவு மெல்லிய தீயில் வறுத்து ஆற வைத்து சேமித்து வைத்துக்கொள்வார்கள். கோவை பகுதியில் தான் இந்த சந்தகையை பார்த்துள்ளேன். அதுவும் புழுங்கலரிசியில் நீங்கள் சேவை செய்வதைப்போலத்தான்! என் சினேகிதி பொள்ளாச்சியில் வசித்தவர் இப்படித்தான் சேவை நாழியில் பிழிந்து தாளித்து சந்தகையைக்கொடுத்தார். இன்னும் சம்பா கோதுமையை வறுத்து மாவு தயார் செய்து கொண்டு சந்தகையை செய்யலாம். இது கோவையில் ஒரு இயற்கை மையத்தில் செய்து போட்டார்கள். அத்தனை ருசி!!
ஆமாம் அக்கா. இடியாப்பம் மாவை பச்சை மாவை வேட்டில் என்று சொன்னது ஆவியில் என்று அர்த்தம். நம்ம வீட்டில் வேட்டில் வைத்து எடுப்பதுன்னு சொல்வதுண்டு,
நீக்குஆமாம் அப்படியும் என் அம்மா செய்வாங்க அதாவது கோலம் போடும் பதத்திற்கு வறுத்து வைத்துக் கொண்டுவிடுவாங்க,
கொந்குநாட்டில் சந்தகை என்று சொல்கிறார்கள் அதை புழுங்கலரிசியில்தான் செய்வாங்க. பேர்தான் வித்தியாசம் மனோ அக்கா.
நான் சம்பா கோதுமைதான் பயன்படுத்துகிறேன் அதிலும் செய்வதுண்டு மனோ அக்கா. அது செம வாசனையா இருக்கும் அக்கா சம்பா கோதுமையில் செய்தால். சம்பா கோதுமை மாவில் சப்பாத்தி, செய்தாலும் நன்றாக இருக்கும். நான் அந்த மாவுதான் பயன்படுத்துகிறேன். இனிப்புக்காரர்களுக்கும் அது நலல்து. ஹிந்தியில் கப்லி கோதுமை என்கிறார்கள் ஆங்கிலத்தில் எம்மர் என்று
நன்றி மனோ அக்கா
கீதா
சம்பாகோதுமையில் நாம் அரிசியில் செய்யும் பதார்த்தங்கள் அனைத்தும் பண்ணலாம். இட்லி, தோசை முதற்கொண்டு. நான் அதிகம் அடை பண்ணுவேன். சேவை எல்லாம் பிழிஞ்சதும் ரொம்பவே கவனமாக எடுத்துத் தாளிச்சு வைக்கணும். சில சமயங்கள் போய் ஒட்டிக்கும். அதுவும் வடாம் பிழிஞ்சாக் கிட்டக்க பால்கனியிலேயே காய வைச்சு எடுப்பேன். மேலே மொட்டை மாடியில் வைச்சால் காக்கையார் எல்லாத்தையும் ஒண்ணாக்கிட்டுப் போயிடுவார்.
நீக்குஆமாம் கீதாக்கா அரிசியில் செய்வது போல் எல்லாமே செய்யலாம். சம்பா கோதுமை ரவை, உடைச்ச சம்பா கோதுமை சாதம் என்று. தோசை இட்லி...எல்லாமே
நீக்குகீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குசிறுதானிய வகைகளில்
பதிலளிநீக்குஉணவு முறை....
சிறப்பு...
வாழ்க நலம்..
வாங்க துரை அண்ணா, மிக்க நன்றி துரை அண்ணா.
நீக்குகீதா
கேழ்வரகு சேமியா பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கு. நாங்க 2009- மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பாரத் தர்ஷன் சிறப்பு ரயிலில் சென்றபோது தினமும் காலை உணவில் இடம் பெறும். பின்னர் நானும் வாங்கிச் சமைச்சிருக்கேன். பெரும்பாலும் தேங்காய், வெல்லத்தூள் சேர்த்தோ அல்லது எலுமிச்சம் சேவையாகவோ பண்ணினேன். மற்றதும் பண்ணலாம்னாலும் மாமாவுக்கு இதான் பிடிக்கும்.
பதிலளிநீக்குசேவை எல்லாம் எனக்கு ஜூஜூபி. நான் புழுங்கலரிசியை அரைச்சு இட்லியாக வார்த்தே பண்ணுவேன். ஆனாலும் என் அம்மா, மாமியார் எல்லோரும் பச்சரிசி மாவிலும் சேவை பிழிவார்கள். பச்சரிசியை ஊற வைச்சு நீரை வடிகட்டி நிழல் உலர்த்தலாக உலர்த்திப் பின்னர் கையால் அரைக்கும்/சுற்றும் இயந்திரத்தில் போட்டு அரைச்சு வைப்பார் அம்மா. முதல்நாளே மாவு தயார் பண்ணிடுவார். மாமியாருக்கோ கிராமத்தில் இடிக்க ஆள் இருந்ததால் சேவை பண்ணும் அன்னிக்கு வேலை செய்யும் பெண்மணி வந்து இடித்துத் தருவார். இதைத் தான் மாவாக்கிப் பின் கிளறிக் கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து எடுப்பார்கள். கொழு க்கட்டை போல் ஆவியில் வேக வைச்சுப் பார்க்கவில்லை. பின்னர் அந்தக் கொதிக்கும் நீர் சேவை மாவுகள் கலந்து இருக்கும் இல்லையா? அதில் கடைசியில் மிஞ்சும் மாவில் உருட்டிப் போட்டோ அல்லது சேவை போலவோ பிழிந்து வெல்லம், தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க வைச்சுப் பாயசம் போல் தருவாங்க. சேவையை விட இதுக்காகவே காத்திருப்போம்.
வாங்க கீதாக்கா. இடியாப்பத்துக்குக் கொழுக்கட்டை செய்து வேகவைப்பதில்லையே கீதாக்கா.
நீக்குசேவைக்குத்தான் என் பிறந்த வீட்டில் கிளறி கொழுக்கட்டை போலச் செய்து வேக வைத்து அப்புறம் பிழிவது. இட்லி வார்த்துச் செய்தாலும் பிழியலாம்தான் ஆனால் இந்தக் கொழுக்கட்டை சமாச்சாரம் பழகிவிட்டது.
புகுந்த வீட்டில் சேவை என்பதே கிடையாது. இடியாப்பமும் கிடையாது. நான் வந்த பிறகு செய்து கொடுத்ததுதான்
கீதா
இடியாப்பம் இல்லை. இது பச்சரிசி சேவை. என் மாமியார் கடைசி வரைக்கும் நான் புழுங்கலரிசியில் பண்ணும் சேவையை ஒத்துண்டதில்லை. ஆனாலும் பச்சரிசியில் அவர் பண்ணுகிறாப்போல் பண்ணினாலும் சரியா வரலி. எல்லாமே போய்ச் சேர்ந்துக்கும். கொழுக்கட்டை போல் வேக வைப்பதில்லைனு தான் நானும் சொல்லி இருக்கேன். பச்சரிசியிலும் சேவை உண்டு.
நீக்கு//சேவை எல்லாம் எனக்கு ஜூஜூபி. // ம்ம்ம் எனக்கு மாத்திரம் தோசை வார்த்துப் போடுகிறீர்கள்.
நீக்குபச்சரிசி சேவை நல்லா இருக்காது. புழுங்கரிசி சேவைதான் சூப்பர். சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்குத்தான் தெரியும் இதன் அருமை. ஹா ஹா
புழுங்கலரிசி சேவைக்குக் கன்னாபின்னாவென நானும் ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால் என் மாமியார் என்னமோ ஒத்துக்கவே மாட்டாங்க. அம்மா பெண் பண்ணுகிறாளே என்பதாலோ என்னமோ சரினு பேசாமல் இருந்தா. :))))
நீக்கு//ம்ம்ம் எனக்கு மாத்திரம் தோசை வார்த்துப் போடுகிறீர்கள்.//கடவுளே! நீங்க சாப்பிட்டதே ஒரே ஒரு முறை. அதுவும் இலுப்பச்சட்டி தோசை என்பதால். நீங்க நம்ம வீட்டிலே சாப்பிடுவீங்கனு முன்னரே தெரிஞ்சிருந்தால் மாமாவும் சரி, நானும் சரி பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருப்போம். நாலைந்து முறை வந்தீங்க தான். ஆனால் ஒரே தரம் தான் சாப்பிட்டீங்க. மனைவியோடு ஜீயரைப் பார்க்க வந்தப்போனு நினைக்கிறேன்.
நீக்குகீசா மேடம்... சும்மா கலாய்த்தேன்... பிறகு வந்த சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உடல்நிலை அவ்வளவா சரியில்லை. நீங்களே வெளியில் சாம்பார் போன்றவை வாங்க ஆரம்பித்திருந்தீர்கள்.
நீக்குநீங்க எழுதினதைப் படிக்கும்போது, முன் பின் தெரியாவிட்டாலும் தென்காசி நாடி ஜோதிடம் பார்க்கச் சொல்லி நிறைய பேசிய மாமா நினைவுக்கு வருகிறார். பார்த்து வந்தபின்பு என்ன ஆச்சு என்று அக்கறையாகக் கேட்டது நினைவுக்கு வருது.
ரவா இட்லி மட்டும் எப்போதாவது பண்ணுவேன். மத்தபடி சேமியா இட்லியெல்லாம் பண்ணியது இல்லை. பண்ணினாலும் நான் தான் சாப்பிடணும். :)))) சேமியா உப்புமா பண்ணுவதே பெரிய விஷயம். அநேகமாக நான் மட்டும் சாப்பிடும் அன்னிக்கு மட்டும் சேமியா உப்புமா பண்ணிப்பேன். மத்தபடி சேமியா வாங்கினால் பாயசம் மட்டும் தான். ரவா உப்புமா பிடிக்கும் என்பதால் அதுவும் ரவா தோசையும் அடிக்கடி இருக்கும். இப்போ ரவா தோசையெல்லாம் சாப்பிட்டே ஒரு வருஷத்திற்கும் மேல் ஆயிடுத்து. :)))) நடமாடுவதற்காக ஏதோ கிடைச்சதைச் சாப்பிடணும் என ஆயிடுத்து. உணவின் மீது விருப்பம் குறைந்து வருகிறது.
பதிலளிநீக்குஅக்கா இது சேமியா இல்லை. அப்படி பாக்கெட்டில் வருவது சொல்லப்படுவதால் தலைப்பில் கொடுத்தேன். வீட்டில் நான் செய்து உலர்த்தி வைத்ததில்தான் செய்தேன் அக்கா
நீக்குகீதா
நீங்க சொல்றாப்போல் பிழிஞ்சு அம்மா காய வைப்பார். பின்னர் அதை வெந்நீரில் போட்டு ஓமம், உப்புச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குழந்தைக்கு மத்தியானமாய்க் கொடுப்போம். இதெல்லாம் எழுபதுகளில் பண்ணியவை. . :)))))) எங்க பெண்ணுக்கு இப்படி எல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கோம்.
நீக்குஅதேதான் என் அம்மாவும், அப்பாவின் பாட்டியும் செய்திருக்காங்க. ஓமப் போட்டுக் கொடுப்பாங்க. இன்னொன்றும் செய்திருப்பீங்க. புழுங்கலரிசியை ஊற வைத்து அரைத்து அதிலும் ஓமம் போட்டுக் காய வைச்சு பாளம்ப் பாளமாக,எடுத்து சின்ன சின்னத் துண்டுகளாக வைத்துக் கொண்டு அப்புறம் கஞ்சி போட்டுக் குழந்தைகளுக்குத் தருவது. என் மகனுக்குச் செய்திருக்கிறேன்.
நீக்குகீதா
எல்லா சிறுதானியங்களிலும் சேவை வருகிறது. அதோடு ஓட்டல்களிலும், காடரர்களும் சேவை ஒரு நாள் கட்டாயமாகக் கொடுத்துவிடுகிறார்கள். நினைச்சால் சேவை பண்ணியது ஒரு காலம். இப்போ சேவை நாழியே இல்லை. இடியாப்பம் நாழியும் என் மாமா பையர் ஒரு தரம் வந்தப்போ அதை வாங்கணும்னு சொன்னதால் அவரிடம் கொடுத்துட்டேன். அநேகமாகச் சின்னத் தேன்குழல் சொப்பு மட்டும் (சேங்காலிபுரம் தயாரிப்பு) வீட்டில் இருக்குனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅக்கா உங்கள் விவரங்கள் தகவல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டேன். இப்பவும் இடியாப்ப நாழி, சேவை நாழி உடைந்ததால் மெஷின் வாங்கி வைச்சிருக்கேன் காரணம் நான் அடிக்கடி சேவை செய்வேன் நாழி இருந்தப்பவே. எங்க ஊர்ப்பக்கம் டொப்பி அரிசி புழுங்கல் அரிசியில் /ஐ ஆர் 20 அரிசியில ஊரில் செய்வதுண்டு அதில்தான் முறுக்கும் செய்வதுண்டு வீட்டில்.
நீக்குதமிழ்நாட்டை ஆர்வத்தொடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்!!! ஹிஹிஹி...
கீதா
Will pray God to save TN. No other go. :((((
நீக்கு//Will pray God to save TN. No other go. :((((// கடவுள்ட நிறைய பணம் வரணும்னு வேண்டறோம். சரி போனப் போகுதுன்னு 50,000 ரூ கொடுக்கறார். உடனே நாம, அதுல 500 ரூபாய் நோட்டே இல்லையே என்று வருத்தப்படலாமா? தீயசக்தி ஒழிஞ்சதுக்கு சந்தோஷப்படுவீங்களா.
நீக்குOK. Trying to convince myself. But if Annamalai in the limelight definitely some dynamic changes would have happened. We people of Tamilnadu people are not blessed. :(
நீக்குகீதக்கா, என்னைப் பொருத்தவரை இப்ப இருக்கும் இரு கட்சிகள் இல்லாமால் ஒரு மூன்றாவது புதிய மாற்றம். கொடுத்துப் பார்ப்போம்....இளையவர்கள் வராங்க. அவங்களுக்கும் அனுபவம் கிடைத்தால்தான் புரியும் இல்லையா அரசியல் வெளியிலிருந்து பார்பப்தற்கும் நடைமுறைக்கும். ஒரு வேளை நலல்தும் நடக்கலாம் Who knows!
நீக்குஅண்ணாமலை இல்லாதவரை எதுவும் நடக்க சான்சே இல்லை. அவரும் இளைஞர்தான். பல ஆதரவாளர்கள் இருக்காங்க ஃபேன் க்ளப்., இளையவர் முதல் பெரியவர்கள் வரை. இருக்காங்க. ஆனால் அவங்களே சொல்லிட்டாங்க அவர் இல்லாதப்ப நாங்க அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்னு.
சரி அதிகம் வேண்டாம் அரசியல் இங்கு அதனால நான் கப்சிப்
கீதா
கேழ்வரகு சேமியா இட்லி நன்றாக இருக்கிறது. சத்தானதும் கூட.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குகீதா
காந்தி பாரதி சந்திப்பு நிகழ்வு இதுதானே நமக்கு வாசிக்கக் கிடைத்தது. வ ர வெர்ஷன்.
பதிலளிநீக்குஆனால் வரலாற்றில் இப்படித்தான் ஒரிஜினலாக பாரதியாராலோ, காந்தியாலோ பதியப்படாதது மத்தவங்க வழியா வரும் போது அவங்கவங்க பார்வைல சொல்லும் போது விருமாண்டி மாதிரிதான்
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகேழ்வரகு சேமியா / சேவை இட்லி நன்றாக இருக்கிறது கீதா.
பதிலளிநீக்குநான் அணில் ராகி சேமியாவில் இட்லி செய்து இருக்கிறேன்.
சேமியா இடலி செய்தாலும் முன்பு போல கடலைப்பருப்பு எல்லாம் போட்டு தாளிப்பது இல்லை இப்போது.
செய்முறை குறிப்பும் படங்களும் நன்றாக இருக்கிறது கீதா.
கேழ்வரகு சேமியா இட்லி - குறிப்பு நன்று.
பதிலளிநீக்கு