11.5.26

"திங்க"க்கிழமை : சீரக ரசம் வெங்கடேஷ் பட் பாணி

சமையல் செய்யும்போது நாம் சமைப்பதே நன்றாயிருக்கும்தான்.,  ஆனாலும் பிரபலமானவர்கள் சமையல் என்றால் ஒரு மயக்கம்.  செய்கிறோமோ இல்லையோ, பார்த்து விடுவோம்..  வெங்கடேஷ் பட் சொல்வது மாதிரி..   இன்று அவர் பக்குவத்தில் சீரக ரசம் ஒன்று..  ஆனால் சொல்லி இருப்பவர் யார் என்று கண்டுபிடியுங்கள்.   சட்டென தெரிந்து விடும்!

சாப்பிடத் தெரிந்தவர்கள்தான் சமைக்க முடியும்..  ரசனை....


வெங்கடேஷ் பட் பார்ப்பதற்கு மதன்பாப் சகோதரர் மாதிரி இருக்கிறார்.



வெங்கடேஷை பேசவே விடாமல் பாஸ்கி பிளேடு போடுகிறார். 

"நல்லாயில்லைன்னா நல்லாயில்லைன்னு சொல்லிட்டு இது எப்படி நீங்க இம்ப்ரூவ் பண்ணலாம்னு சொல்வேன்.   நல்லாயில்லைன்னு சொல்றது இட்'ஸ் எ பார்ட் ஆஃப் தி சொல்யூஷன்.  நல்லாயில்லாததை எப்படி நல்லா பண்ணலாம்னு சொல்றதுக்கு தகுதி இருந்தா மட்டும்தான் நீங்க நல்லாயில்லைன்னு சொல்லலாம்" என்கிறார் பட்.  இது சமையலுக்கு மட்டும்தானா என்றும் கேள்வி வருகிறது இல்லை?!

பேட்ஸ்மேன் ஒரு பௌண்டரி அடித்ததும் ஒரு கான்ஃபிடண்ட் வருமே, அதுபோல ஒரு டிஷ் செய்து அருமையாக வந்துவிட்டால் சமையலில் ஒரு சுவாரசியம் வரும்.

செய்கிறார்களோ இல்லையோ, பார்க்க எல்லோருக்குமே ஆவல் இருக்கிறது!

எட்டாம் க்ளாஸ், ஒன்பதாம் க்ளாசில் பெயிலானவர் பட்!   வேண்டுமென்றே...

கீதா அக்கா சொல்கிறாரே அலலது செய்கிறாரே...  திப்பிசங்கள்...   அது செய்யத் தெரிய வேண்டும் என்கிறார் பட்.   அதுதான் திறமையாம் என்கிறார்.   சமயங்களில் அதுவே சுவையாகவும் அமைந்து விடும் என்கிறார்.  நம் அனுபவமும் அதுதானே!

ஏதாவது தாளிதமோ ஏதோ கருகிப் போனால் கூட சமாளிக்கத் தெரிய வேண்டும் என்கிறார்.  நெய்  புகை வருமளவு சூடாக்கி அதில் சின்னமன் லவங்கப்பட்டை  குச்சிகளையும் கறுக்கிப் போட்டு விட்டால் சமாளித்து விடலாமாம்.

ராணி எலிசபெத் 98 ல் இந்தியா வந்திருந்தபோது  தாஜில் தங்கியிருக்க, அவருக்கு வழங்கப்பட்ட உணவை அவர் இந்தியன் ஸ்டைலில் கையாலேயே சாப்பிட்டாராம்.  

ரஜினி பற்றி வெங்கடேஷ் பட் சொல்வதைக் கேட்கணும்.  சூப்பர் ஸ்டார், பணக்காரன் என்கிற பந்தா எல்லாம் தன்னை அணுகாமல் அவற்றை ஒரு வெளிவட்டத்தில் நிறுத்தி இருப்பவர் ரஜினி என்கிறார்.   95 ல்  இவர் அவரிடம் ஆர்டர் எடுக்கப் போனால் அவர் எழுந்து நிற்பாராம்.  அவர் எழுந்து நின்றால் அவரைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த், மற்றும் அவரது மகள்கள் எழுந்து நிற்பார்களாம்.  அதைத்தொடர்ந்து பட் ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு சம்பவமும் சொல்கிறார்.

100 ஐட்டம், 130 ஐட்டம் பற்றியும் சொல்கிறார். 

ஒரு பெரிய ஐஸ் பாத்திரத்தில் கல்லுப்பு கொட்டி தயிரைக் கொட்டி, பாலை ஊற்றி கலக்கிக் கொண்டே இருந்தால் ஒரு மணி நேரத்தில் தயிர் தயார்.  அறுசுவை நடராஜனின் திறமை இது. 

"ரவா தோசை தயவு செய்து வீட்டில் ட்ரை பணணாதீங்க...  கரண்டியில் ஊற்றி வார்க்கும் தோசை அல்ல அது.  டபரா அல்லது டம்ளரில்தான் ஊற்றவேண்டும்.   ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுங்க...   ஏன்னா அந்த அளவு டெம்பெரேச்சர் மெயின்டெயின் செய்யும் தோசைக்கல் வேண்டும் ஒன்றரை இன்ச் கல் இருக்கவேண்டும்.   அதற்கு.  பத்து மில்லி மீட்டர் இருக்கற நான்ஸ்டிக் தவாவில் ரவா தோசை செய்தால் கல்லோடு சாப்பிடணும்" என்று ஜோக் அடிக்கிறார்.

2016 ல் செஃப் களுக்கு இருக்கும் சாலரி பேக் பற்றிச் சொல்கிறார்.  நல்ல, சரளமாகப் பேசக் கூடிய, தரமான செஃப் கிடைத்தால் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய்.  

============================================================================================

உணவே மருந்து --சீரகம்!

இப்போ நம்ம வெங்கடேஷ் பட் சொன்ன உடுப்பி ரசம் பத்திப் பார்ப்போம். இதிலும் சீரகம் தான் சேர்க்கிறார். ஆனால் அளவு எல்லாம் இருக்கு! மேலும் இதற்காகப் பயன்படுத்தும் மிளகாய் வற்றலும் மங்களூர் வற்றல் என்றார். அதாவது காய்ந்த மிளகாய் கொஞ்சம் சுருங்கிக் காணப்படுமே அது தேவை! அல்லது காஷ்மீர் மிளகாய் எனப் பெரிய பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும். அதைப் பயன்படுத்திக்கலாம்.  இதுவும் கிட்டத்தட்ட ஜீரக ரசமே! ஆகையால் தான் இங்கே போடுகிறேன். முந்தாநாள் செய்து பார்த்தேன். நல்ல தெளிவாக ரசம் இருந்தது.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இங்கே எழுதுகிறேன்.

காஷ்மீர் மிளகாய் வற்றல் 4

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

ஜீரகம்    ஒன்றரை டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி இவற்றை

வறுக்க தே.எண்ணெய் தேவையான அளவு. மேலே சொன்னவற்றை ஒவ்வொன்றாக நிதானமாக வறுத்துக் கொண்டு ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும்.

தாளிக்க

நெய் அல்லது தே.எண்ணெய்

கடுகு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை

ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

தக்காளி நடுத்தரமாக ஒன்று

புளிக்கரைசல் அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

பெருங்காயம் கால் டீஸ்பூன் அல்லது ஒரு துண்டு பெருங்காயக் கட்டி

பச்சை மிளகாய் தேவையானால் நடுவில் கீறிக்கொள்ளவும். இந்த அளவு ரசத்துக்கு ஒன்று போதும்.

கொத்துமல்லித் தழை

வெல்லம் தூளாக இரண்டு டீஸ்பூன் (நான் வெல்லம் சேர்க்கவில்லை. ரங்க்ஸுக்கு சர்க்கரை என்பதோடு வெல்லம் சேர்த்தால் அந்த ருசியும் பிடிக்கிறதில்லை)

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பெருங்காயம் சேர்க்கவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தே.எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துத் தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்பு பருப்புக் கரைசலைக் கொஞ்சம் ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும். மீதம் இருக்கும் பருப்புக் கரைசலில் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றவும். பொடி போட்டதும் ரசம் அதிகம் கொதிக்கக் கூடாது. கீழே இறக்கியதும் கொத்துமல்லித் தழை தூவவும்.

சாதாரணமாக ரசத்துக்குக் கடைசியில் தான் தாளிதம் சேர்ப்போம். இங்கே ரசம் கொதிக்கையிலேயே தாளிதம் செய்து சேர்க்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் முதலில் தாளிதம் செய்து கொண்டு தான் வெங்கடேஷ் பட் அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்தார்.  இதுவும் ஒரு வகை ஜீரக ரசமே!

==========================================================================================

48 கருத்துகள்:

  1. வடிவேலு ஜோக்கில் வருவது போல, கொண்டை காண்பித்துக்கொடுத்துவிட்டது யார் எழுதினார்கள் என்று.... ரங்ஸ்க்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  எனக்கும் அது நிச்சயம் காட்டிக் கொடுத்து விடும் என்பது தெரியும்.  நான் இதைப் பகிர்வது அக்காவுக்கே தெரியாது.

      நீக்கு
    2. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      நீக்கு
  2. பொதுவா சீரக ரசத்துக்கு கொத்தமல்லித் தழை சேர்ப்பதில்லை.

    இவருடைய முறையில் செய்து பார்க்கணும். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ரசமாயிருந்தாலும் மல்லித்தழை சேர்க்கலாமே 

      நீக்கு
    2. சீரக ரசமனா சுட்ட அப்பளம், அதுவும் அரிசி அப்பளம் தான் நல்ல துணை. கொஞ்சம் பருப்புத் துவையல் வேணா அரைச்சுக்கலாம். மத்தபடி காய்கள் எல்லாம் தேவைனா பண்ணிக்கலாம். நான் இந்த ரசமெல்லாம் நிறைய வைச்சுடுவேன். தேவையானால் இரண்டாம் தரமும் ரசம் விட்டுச் சாப்பிட்டுக்கலாமே!

      நீக்கு
    3. அது சரி, மல்லித்தழை சேர்க்கலாமா கூடாதா?  ஏன் சேர்க்கக்கூடாது?  அதைச் சொல்லவில்லையே நீங்க...!

      நீக்கு
    4. மல்லித்தழை, வேற டாமினண்ட் ஆக இருக்கப்போகும் ரசத்துக்கு ஒத்துவராது. உதாரணம் சீரக ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் கண்டதிப்பிலி ரசம். அவற்றில் சீரகம் மிளகு பூண்டு கண்டதிப்பிலி ஆகியவையே மணத்தில் ராஜா. தக்காளி ரசம் பருப்பு ரசம் போன்றவற்றில் கொத்தமல்லிக்கு வேலை இருக்கிறது.

      நீக்கு
    5. நான் கொத்துமல்லி ரசிகை. ஆகவே சேர்க்கலாம்னு தான் சொல்லுவேன். ஆனால் எங்க மாமியார், மிளகு ரசம், ஜீரக ரசம் இதுக்கெல்லாம் கருகப்பிலை தான் போடணும்னு சொல்லுவார். அதே போல் சாம்பாரில் கருகப்பிலை போடக் கூடாதுனு சொல்லுவார். நான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொண்டே எல்லாத்திலேயும் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்ப்பேன். அடை, வடை போன்றவற்றிற்கும் கருகப்பிலை மட்டும் தான் போடுவாங்க. இங்கே எங்க மருமகள் அடைக்கு இரண்டுமே போடுவதில்லை. நான் எனக்கு மட்டும் போட்டுப்பேன். எங்க வீட்டில் அடைன்னா அரைச்சு எடுக்கும்போதே கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கலந்து எடுத்து வைப்பேன். கூடத்தில் உட்கார்ந்திருக்கும் மாமனார் மாமியாரிடம், "இன்னிக்கு அடையா? அரைக்கறச்சேயே வாசனை தூக்கறதே!" என்பார். மாமியார் கடுப்பாகி, "பெருங்காயம் சேர்க்கிறா, அதான்" என்பார். மாமனார் பதிலுக்கு, "நீ பெருங்காயம் போடாமலேயா பண்ணுவே? நீயும் போடுவே. இதெல்லாம் ஒவ்வொருத்தர் கைமணம்." என்பார். நான் சமையலறையிலிருந்து வெளியே வந்து பால் தூக்கைத் தூக்கிக் கொண்டு பால் வாங்கப் போயிடுவேன். எண்பதுகளின் அந்த நாட்கள். இனி வராதவை. :(

      நீக்கு
  3. நல்ல சீரக ரசம் சாத்த்திற்கு, வெண்டைக்காய் வதக்கலோ இல்லை பொரித்த அப்பளாமோ நல்ல துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் எனக்கு துணைப்பொருள் எதுவுமே வேண்டாம்.  என் அப்பா சொல்வது போல நல்லா நொக்கப் பிசைந்து அனுபவித்து சாப்பிடலாம்.  பாஸ் உறவினர் வீட்டில் ஞாயிறு மதியம் அப்படி ஒரு ரசம் சாதம் சாப்பிட்டேன்!

      நீக்கு
  4. எப்படி நல்லாப் பண்ணலாம் எனச் சொல்ல முடியும். ஆனால் விமர்சகர்களால் பண்ண முடியாது. உதனையும் அவர் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா பண்ணத் தெரிந்தவர்களால்தான் நல்ல விமர்சகர்களாகவும் ஆகமுடியும்!  மற்றவை சும்மா 'நொட்டைச்சொல்லு' வகையறாவில் சேர்ந்து விடும்!!

      நீக்கு
    2. சிவாஜி நடிப்பைக் குறை சொல்றவங்க, திரைக் கதையை குறை சொல்றவங்க, திரைப்படத்தைக் குறை சொல்றவங்க, நல்லா அவங்களைவிட பெர்பார்ம் பண்ணுவாங்களா? தொட்டால் தொடரும் நினைவுக்கு வருது.

      நீக்கு
    3. ஹெஹெஹெ, என்ன இது, நெல்லை மறைமுகமா/ சேச்சே, இல்லை, நேரடியாவே என்னைச் சொல்லுகிறார்? ஜிவாஜியை நான் பாராட்டியும் சொல்லி இருக்கேனே. ஸ்ரீராமைக் கேளுங்க சொல்லுவார். (இதுக்காகவெல்லாம் என்னோட அபிப்பிராயத்தை மாத்திப்பேனா என்ன? ) :D

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.

    இன்றைய திங்கள் பதிவாக வந்த சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் சீரக ரசம் செய்முறை நன்றாக உள்ளது. இதன்படியே ஒருநாள் செய்து பார்க்கிறேன். நல்ல தெளிவாகவும், (அருமையான ரசத்தைப் போலவே) பொறுமையாகவும், விளக்கமாகவும் சொன்ன சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.

    வெங்கடேஷ் பட் அவர்களின் பேட்டியை இனிதான் படிக்க வேண்டும். படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். நன்றி. பின்னர் நேரம் கிடைக்கும்போது காணொளி பார்த்து ரசியுங்கள்!

      நீக்கு
  6. எபியின் தகவல் சுருளில் இன்றும்
    எனது பதிவு பற்றிய
    குறிப்பு வரவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களாகவே நண்பர்கள் பதிவு உடனுக்குடன் இங்கு காட்டப்படுவதில்லை.  மதியத்துக்குமேல் காட்டும்.  இங்கு மட்டுமல்லா எல்லா தளங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது.

      நீக்கு
    2. விவரத்திற்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    3. நம்ம பதிவுகள் மட்டுமில்லை, எ.பியின் பதிவுகளே எனக்கு அப்டேட் ஆவதே இல்லை. இது சுமார் ஒரு மாசத்திற்கும் மேலே இருக்கு. இங்கே உள்ள இணைய இணைப்பினாலோ என நினைச்சேன். இப்போப் பார்த்தால் பலருக்கும் இருக்குனு தெரியுது. :)

      நீக்கு
    4. ஆமாம்.  யாருடைய பக்கத்திலும் அடுத்தவர்கள் பதிவு நேரத்துக்கு அப்டேட் ஆவதில்லை.

      நீக்கு
  7. யாரும் வராததால்
    நேற்றைய பதிவை நீக்கி
    விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று உங்கள் தளத்தில் பதிவு எதுவும் காணப்படவில்லை. முந்தாநாள் பதிவு மாத்திரமே இருந்தது

      நீக்கு
    2. நேற்று எனக்கு கடும் பயண அலைச்சல்!

      நீக்கு
    3. எனக்கும் குற்ற உணர்ச்சி வருது. துரையின் பதிவுகளைப் படிக்கிறதில்லையே எனத் தோன்றும். ஆனால் இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. ஏதேதோ அடுத்தடுத்து இணையத்தில் செய்வதால் பதிவுகளுக்குப் போவதே குறைஞ்சிருக்கு. :(

      நீக்கு
  8. இன்று தளத்தில் பதிவு
    வெளியாகி உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன்..  பார்த்தேன்..  போற்றிப் பாமாலை படித்தேன்..   கமென்ட் இட்டேன்!

      நீக்கு
  9. ஒவ்வாமை வந்ததில் இருந்து - ஐந்து வருடங்களாக
    புளிப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம், நானும் புளி சேர்ப்பதில்லை. தக்காளி சேர்த்தேன். மருத்துவர் அதையும் வேண்டாம் எனச் சொல்கிறார். அசிடிடி அதிகம் ஆகுமாம். பின்னே வேறே என்ன சாப்பிடுவது என மண்டையை உடைச்சுக்கறேன். பொங்கல், எலுமிச்சைச் சாதம், காய்கள் போட்டுக் கலந்த சாதம்னு சாப்பிட்டாலும் தினமும் என்பதால் அலுப்புத் தட்டுகிறது. சப்பாத்தி தாலே பரவாயில்லையோனு நினைக்கிறேன். :(

      நீக்கு
    2. பாஸும் மிக அடிக்கடி புளி சேர்க்காமல்தான் செய்கிறார்.  நான் செய்யும்போது த்த்துளி புளி சேர்ப்பேன்.

      நீக்கு
  10. ​பாரதிதாசன் ரசம் உண்டாக்கிய திப்பிசம் பற்றி படித்தது ஓர்மையில் வந்தது, ஹோட்டலில் சாப்பிடும்போது செர்வரிடம் ரசம் கேட்டார். அவருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடு பிடிக்காது. சர்வர் ரசம் இல்லை என்று கூறினார். பாவேந்தர் உடனே
    கொதிக்கும் நீர், தக்காளி சாஸ், மிளகு பொடி, பூண்டு 4 பல் தட்டியது ஒன்று சேர்த்து கொண்டு வரச்சொல்லி தேவையான உப்பை சேர்த்து திடீர் ரசம் உண்டாக்கிக்கொண்டார் என்று வாசித்ததாக நினைவு,

    பரவாயில்லை கீதா மேடம் அழல் அமுதத்திலிருந்து அடுத்த ஸ்டெப் ரசத்திற்கு பாஸ் ஆகி இருக்கிறார். அடுத்தது பருப்புகறி பற்றி எழுதுவார் என்று நினைக்கிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC சார..   இது அவர் "சாப்பிட வாங்க" தளத்திலிருந்து எப்பவோ எடுத்து வைத்தது.  எப்போதாவது 'திங்க' பதிவு வராத நாளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று வெங்கடேஷ் பட்டுடன் இணைத்து வைத்திருந்தேன்.  சுமார் எட்டு வருடங்களுக்கு முன் என்று நினைவு! அவசரமாக கிளம்ப வேண்டும் என்று அப்படியே எடுத்துக் போட்டு விட்டு கிளம்பி விட்டேன்!!

      நீக்கு
    2. அழல் அமுதம் கூடப்பண்ணத் தெரியாதவங்க உண்டே ஜேகேசி சார். அதை நினைச்சுச் சமாதானப்படுத்திக்குங்க. எனக்கே தெரியாது இன்னிக்கு நான் மாட்டிப்பேன்னு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))) ஸ்ரீராம்!

      நீக்கு
    3. ஹிஹிஹிஹி... ஆபத்துக்கு கைகொடுத்தது கீதாக்கா.

      நீக்கு
  11. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு
    மன உளைச்சலால் நேற்றைய பதிவை
    நீக்கி விட்டேன்...

    பதிலளிநீக்கு
  12. சீரக ரசம் செய்முறை நன்றாக உள்ளது.

    எங்கள் வீட்டில் ரசத்துக்கு உடனே பொடித்துத்தான் செய்வதுண்டு ரசப்பவுடர் சேர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. கீதா சாம்பசிவம் பகிர்ந்த சீரக ரசம் செய்முறை நன்றாக இருக்கிறது.
    இப்போது எல்லாம் ரசம் தான் பிடிக்கிறது. எத்தனை விதமான ரச செய்முறையோ அத்தனையும் செய்யலாம். உடனே பொடித்து உடனே செய்து விடுவேன் ரசம். பச்சைமிளகாய் மட்டும் போட்டது இல்லை.
    தக்காளி சூப் செய்யும் போது மட்டும் தான் பச்சைமிளகாய் சேர்த்து இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  16. வெங்கடேஷ் பட் காணொளி பார்த்தேன் சாப்பிடும் முறைகளை பற்றி வேடிக்கையாய் பேசுகிறார் பாஸ்கி.
    செய்த உணவில் உப்பு கூடி விட்டால், காரம் கூடி விட்டால் சரி செய்ய தெரிந்து வைத்து கொள்வதும் திறமைதான். மிச்சமானதை வேறுவகை புது செய்முறையாக மாற்றுவதும் ஒரு கலைதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!