கனவுச் சம்பவம்....
சுமார் 25 படிகள் இறங்கி கீழே கதவைப் பூட்டவேண்டும். அபார்ட்மெண்ட்தான். பதினைந்து படி இறங்கியதும் சிறு இடைவெளி. அங்கே இன்னொரு வீடு. அப்புறம் பத்து படி வளைந்து இறங்கி கதவு பூட்ட வேண்டும். இந்த மாதம் இவர், அடுத்த மாதம் இன்னொருவர் என்று எங்கள் ஐந்து வீடுகளுக்குள் ஒப்பந்தம். ஆறாவது வீடு தரைத்தளம். அவருக்கு இதில் பங்கில்லை.
இறங்கிச் சென்றபோது யாரோ என்னைத் தாண்டிச் செல்வது போல இருந்தது. பூட்டும்போது மேலே ஏறிச் சென்றவர் திரும்ப வேண்டுமே.. யார் அது, அவர்கள் பார்த்துக் கொள்வார்களா என்று சிந்தனை வர, திரும்பி பத்து படி ஏறி வளைவில் பார்த்...
அங்கே நின்று கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்ட்ஸ் இளைஞியின் கைகளில் கத்தி. சட்டென சுவரோடு ஒண்டிக் கொண்டாலும் பார்த்து விட்டாள். வேகமாக இறங்க முற்பட, நானும் படபடப்புடன் இறங்கி கதவைத் திறந்து சாலைக்கு வந்தேன். அங்கே ஒருவன் நின்று கொண்டிருக்க, அவன் கண்கள் அவளை பார்த்தது. அடுத்த கணம் நான் ஓடத்தொடங்கினேன். அவர்களும் துரத்தினார்கள்.
இரைக்க இரைக்க ஓடினேன். கண்ணில் படும் தூரம் வரை மக்கள் யாருமே கண்ணில் படாதது ஒரு அபத்திரத்தைத் தோற்றுவித்து பயத்தைக் கூட்ட மக்கள் இங்கிருப்பார்கள், யாராவது இங்கே கண்ணில் படுவார்கள் என்று ஒவ்வொரு இடமாக அங்குமிங்கும் ஓடுகிறேன்.
ஓரிடத்தில் சிலபேர் கண்ணில்பட, அங்கு நின்று காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்துகிறேன். குரலே எழும்பா விட்டாலும் ஓரிருவராக பின்னர் இன்னும் சிலர் என்று கூடுகிறார்கள். நான் யாரைப் பார்த்து பயப்படுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் என்னருகிலேயே நின்று அவர்களும் யாரையோ தேடுவது போல நடிக்கிறார்கள். இருவர் கைகளிலும் சற்றே மறைவாய் ஒரு பெரிய கத்தி.
அவர்களை சுட்டிக் காட்டும் தைரியம் எனக்கில்லை. மேற்கொண்டு ஓடுகிறேன். அவர்கள் என்னைத் துரத்தினால் மக்கள் கண்டு கொள்வார்கள் என்று நினைத்து ஓடுகிறேன். என்ன நடந்தது என்று தெரியாமல் ஓடுகிறேன்.
ஒரு அபார்ட்மெண்ட் படிகளுக்குள் நுழைந்து அங்கிருக்கும் கதவை மூடிவிட்டு அங்கே அதிசயமாக, அகாரணமாக காணப்பட்ட ஒரு திரைச் சீலையினைப் பார்க்கிறேன். சற்று தூரத்தில் நிதானமாக, ஆனால் வேகமான நடையில் வரும் அவர்களை பார்த்தேன். மெல்ல அந்த திரைச்சீலைக்குள் புகுந்து இயற்கையாக அது சுருண்டிருப்பது போல என்னை மறைத்து நின்று கொள்கிறேன். இப்போது கதவைத் திறந்து கொண்டு ஓட முடியாத நிலை.
பக்கத்து எண்ட்ரன்ஸில் நுழைந்த அவன் என் மிக அருகே உள்ள பக்கத்து மாடிப்படி வளைவில் நின்று தேடுகிறான். சிவந்த அவன் முகத்தில் பூனைக்கண்கள் நெருப்பு போல ஜொலிக்க அவை என்னைத் தேடுவதைக் கண்டு முதுகு ஜில்லிட்டது.
என்ன செய்யப்போகிறேன்? எப்படி தப்பிக்கப் போகிறேன்? யார் இவர்கள்? நான் எதையுமே அபாயகரமானதாக பார்க்கவில்லையே... அவர்களிடம் எப்படிச் சொல்ல.. பேசுவதைக் கேட்பவர்கள் போலவே இல்லையே...
அவனைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நான் இருந்த பக்கத்தின் கீழ்க் கதவு திறக்கப்பட்டதையோ, ஒரு உருவம் என்னை, திரைச்சீலையை நெருங்கியதையோ, அதைப் பற்றியதையோ நான் கவனிக்கவில்லை.
கனவுதான். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் இருந்து அதிகாலை மூன்றரை மணிக்குமேல் போனாப் போகு துன்னு வந்த தூக்கத்தைக் கெடுத்த கனவு.
எழுந்து அமர்ந்துவிட்டு திருப்பிப் படுத்தாலும் இதே கனவு தொடர்கிறது. மறுபடி எழுந்து பாத்ரூம் சென்று கால்களை நனைத்துக் கொண்டு வந்து படுத்தாலும் கனவு தொடர்கிறது. மறுபடி எழுந்து 'முருகா முருகா' என்று சொல்லிப் படுத்தாலும் கனவு தொடர்க்கிறது. தூங்கி கொண்டிருந்த பாஸை எழுப்பி "ஏய்.. என்னைக் கொல்ல வர்றாங்க" என்றேன் பாதி உண்மையான கலக்கத்துடன்.
"உம்..." என்று கேட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தார் பாஸ்...
"நேபாளி மாதிரி ஒரு ஆம்பளையும், ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணுமா ரெண்டு பேர் என்னை துரத்தறாங்க, கையில் கத்தியுடன்..",
"உம்..."
அடச்சே...
"முருகா முருகான்னு சொல்லு..."
"முருகா..."
ம்ஹூம்.. என் பிரச்னையை நான்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆமாம், ஏன் துரத்துகிறார்கள்? என்னை ஏன் கொல்ல வேண்டும். யாரையோ தேடித்தானே வந்தார்கள்? நான் பார்த்து விட்டேன் என்பதாலா? அவர்கள் அவர்களைக் கொல்லவே இல்லை போலவே... அப்புறம் என்னை மட்டும் ஏன்...
நிஜம் போலவே சிந்தனைகள் ஓட மறுபடி தூங்கினேன். இந்த முறையும் கிட்டத்தட்ட இதே கனவு வந்தது.. பின்னால் எழுந்த என் சிந்தனைகளுடனும், முருகா முருகா என்ற பிரார்த்தனைகளின் நினைவுகளுடனும் இதே கனவு வேறு வகையில் தொடர..
அட போங்கடா...
எழுந்து விட்டேன்.
===========================================================================================
1980 ; வெளியான படம் மகேந்திரனின் ஜானி. இளையராஜா ராஜாங்கம். இளையராஜா தனது 83 வது வயதில் 1540 வது படத்துக்கு இசை அமைக்கிறார் என்று செய்தி பார்த்தேன். நம்பமுடியாத பேரதிசயம் அவர்.
இந்தப் படத்தில் S P ஷைலஜாவுக்கு ஒரு அற்புதமான பாடல் கொடுத்தார். ஸ்{SPB தன் நண்பன் இளையஜாவிடம் தன் தங்கை ஷைலஜாவை காட்டி நல்ல வாய்ப்பு கொடுக்கச் சொல்லி, சில பாடல்களை அவரும் இவருக்கு கொடுத்து வந்த நேரத்தில் இந்தப் பாடல் சற்றே வித்தியாசமாய் இருந்து, பாட அவர் சற்று சிரமப்பட்டதாய் அண்ணனிடம் பின்னர் சொன்னதாக படித்த நினைவு. கங்கை அமரன் பாடல். திரையில் சுபாஷினி, ரஜினி. முள்ளும் மலரும் பட, 'ராமன் ஆண்டாலும்' காட்சியை நினைவு படுத்தும் நடன அசைவு ஆரம்பம்!
========================================================================================
சேர்க்கை சரியில்லை என்று
குற்றம் கூறும் வழியின்றி,
வாச்சவன் சரியில்லை அதனால்
வாழ்க்கை போனது என்று
வாய்நோக அரற்றும் குறை இன்றி,
நித்தமும் உன் அருளை, உன் பெருமையை
பாடிப்பரவசம் அடைவோரையே எமக்கு
நட்பாக, உறவாகக் கொடு சிவனே..
எதிர்பார்ப்பில்லாமல் இரு
என்று சொல்லி
மற்றவர்கள் அப்படி
இருக்க வேண்டும் என்றே
எதிர்பார்க்கிறோம்!!
======================================================================================
இமேஜ் பார்க்காத சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி பிற்காலத்தில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு தந்தையாக நடித்துள்ளார். ஆனால் அவர் இளம் வயதாக இருக்கும்போது, படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹீரோக்களின் தந்தையாக நடித்துள்ளார்.
அதில் முக்கியமான படம் 'வாழ்விலே ஒரு நாள்'. இந்தப் படத்தில் தன் வயதையொத்த ஸ்ரீராம் என்ற நடிகருக்கு தந்தையாக நடித்தார். செய்த குற்றத்திற்காக தந்தையையே கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக ஸ்ரீராம் நடித்தார். இவர்களுடன் ஜி.வரலட்சுமி, ராஜசுலோச்சனா, வி.கே.ராமசாமி. உள்ளிட்ட பலர் நடித்தனர்.
வி.கே.ராமசாமி வில்லனாக நடித்தார். சிவாஜிக்கும், வி.கே.ராமசாமிக்கும் இரண்டு சண்டை காட்சிகள் கூட படத்தில் உண்டு. அப்போதைய அரசியல் பிரமுகரான ஏவிபி. ஆசைத்தம்பி என்பவர் எழுதிய 'கசப்பும் இனிப்பும்' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது.
தினமலர் பிளாஷ்பேக் 10/1/26
======================================================================================
காந்தியடிகளால் தம் குரு என்று கருதப்பட்ட ருஷ்ய ஞானி டால்ஸ்டாய், 'பல கோடி மக்களை கொண்ட இந்தியாவானது ஒரு பிரிட்டிஷ் கம்பெனிக்கு அடிமைப்பட்டதற்கு இந்திய சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளே காரணம்' என்று கூறுகிறார்
வியாபாரம் செய்ய வந்த ஒரு கம்பெனிக்காரர் 20 கோடி தொகையினரான மக்களை அடிமைப்படுத்தினார்கள்.
மூடநம்பிக்கை சிறிதும் இல்லாத ஒரு மனிதனிடம் இதைச் சொல்லிப் பாருங்கள். இச்சொற்களின் பொருள் என்ன என்பதை அவன் உணர மாட்டான். 30 ஆயிரம் பேர் பெரிய வஸ்தாதுகள் அல்லர். பலம் குறைந்த அந்த மக்கள் வீரமும், ஆற்றலும், சுதந்திர வேட்கையும் மிக்கவர்கள் ஆன 20 கோடி மக்களை அடக்கி பணிய வைத்து விட்டார்கள் என்றால் அதற்கு பொருள் என்ன? 30,000 20 கோடி என்ற எண்களை பார்க்கின்றபோது என்ன தெரிகிறது? இந்தியனை அடிமைப்படுத்தியது ஆங்கிலேயர் அல்லர். இந்தியர் தம்மைத்தானே அடிமைப் படுத்திக் கொண்டனர் என்பது விளங்கவில்லையா? "
இது 'சுதந்திர இந்துஸ்தானம்' என்ற இந்திய பத்திரிகை ஒன்றின் ஆசிரியருக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
'- விடுதலைப் போரில் தமிழகம்' என்ற நூலில் ம பொ சி. -
========================================================================================
இளையராஜாவின் இன்னொரு இசைவிருந்து. இன்னொரு புதிய பாடகிக்கு ஒரு மிக நல்ல பாடல் வழங்கினார் இளையராஜா. உமா ரமணனுக்கு வாய்த்த ஒரு அருமையான பாடல்.
1981 ல் வெளிவந்த பாரதி வாசுவின் பன்னீரபுஷ்பங்கள் படத்தில் வரும் 'ஆனந்தராகம் கேட்கும் காலம்' எனும் பாடல். இதுவும் கங்கை அமரன் பாடல்தான்.
=====================================================================================
சில நகைச்சுவைகளும். நினைவுக்குளத்தில் எறியும் சில கற்களும்!












அந்த 'அட! போங்கடா'வில் தான் அது வரை எழுதிய அத்தனையும் நிற்கிறது.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... எழுத்தில்தான் இவ்வளவு. கனவில் அது சில கணங்கள்தான்!
நீக்குஎத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன?.
பதிலளிநீக்குஅந்தப் பழைய பத்திரிக்கை ப் பக்கங்களைப் பார்ப்பதில் இப்பொழுதும் ஒரு அலாதி இன்பம் நம்மை வசப்படுத்துகிறது.
அதே பத்திரிகையின் இன்றைய பக்கங்கள் பிற்காலத்தில் இதே மாதிரியான உண்ர்வுகளை நம்மில் ஏற்படுத்துமா?
முடிந்தவத்கள் யோசித்துப் பார்க்கலாம்
யோசிப்பவர்களில் பதில் தான் இக்கால தமிழ் பத்திரிகைகளின் எழுச்சியும் அல்லது வீழ்ச்சியும்.
சுகம்தான். அவரவர்களுக்கு அவரவர் இளமை சுகம். இப்போது இருப்பவர்களுக்கு படிக்கும் பழக்கமே இல்லை. இப்போது இருப்பவர்களுக்கு பிற்காலத்தில் வாட்ஸாப் நிலையே மாறி அட்வான்ஸ் டெக் வர, இதைச் சொல்லி பெருமூச்சு விடுவார்களாயிருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது! எழுச்சியும் வீழ்ச்சியும் நம் மனதில் தான். காலம் சென்று கொண்டே இருக்கும்.
நீக்குஅன்றைக்கிருந்த குமுதம் விகடன் சாவி கல்கி குங்குமம் போன்ற பத்திரிகைகளின் பதிப்பை இப்போதும் படிக்கலாம். தற்கால பத்திரிகைகள் அனைத்தும் அவற்றில் பத்து சதம் கூட இல்லை. காரணம் மக்களின் தரம் பத்து சதம்தான்
நீக்குவாங்க நெல்லை. தற்கால பத்திரிகைகள் விஷயம் இல்லாமல் திண்டாடுகிறன்றன. பெரும்பாலும் சினிமா செய்திகளையே வைத்து பக்கங்களை நிரப்புகின்றன. அந்தக் காலத்தில் கதைகள் படிக்க பத்திரிகைகள் மட்டும்தான். ஆனால் இப்போது? அதனால் கதைகள் என்பது அலுத்துப்போகும் அளவு படிக்க முடிகிறதது.
நீக்குஇதே போல தற்கால மேலே குறிப்பிட்ட பத்திரிகளின் பக்கங்களையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா, ஸ்ரீராம்? ஒரு மாறுதலா இருக்குமே என்பதற்காகத் தான்.
நீக்குஅது சரி, எபியை இக்கால இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?
யாராவது சொல்லுங்களேன்.
ஒரே மாதிரியான பின்னூட்டங்களில் மாற்றம் வந்தால் இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும் என்பதால் இந்த ஆசை.
// இதே போல தற்கால மேலே குறிப்பிட்ட பத்திரிகளின் பக்கங்களையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா, ஸ்ரீராம்? ஒரு மாறுதலா இருக்குமே என்பதற்காகத் தான். //
நீக்குமுடியும் என்றுதான் நினைக்கிறேன். பார்ப்போம்.
வலைத்தள பக்கங்களை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது கடினம். ரஷ்ய பனிக்கரடியிடம் கம்பளி விற்பது போல.
// அது சரி, எபியை இக்கால இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?
நீக்குயாராவது சொல்லுங்களேன்.// \
insta வுக்கு மாற்றி வெளியிடுவது!
Jayakumar
அது எப்படி? அதற்கும் இன்ஸ்ட்டாவில் நண்பர்கள் நிறைய இருக்க வேண்டும்!
நீக்குடால்ஸ்டாய் கருத்து நூறு சதம் சரி. பொதுவாக இந்தியர்கள் அதிலும் இந்துக்கள் நல்ல குடிமக்கள் அல்லர். சுயநலவாதிகள். தேசத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் எண்ணாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரை எவன் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. தன் பிழைப்பு ஓடவேண்டும். இவர்களுக்கு ஏற்ற மாதிரி வெளிநாட்டுஊஅ தலைவர்கள் பிற நாட்டிற்கு நல்லது செய்யும் ராகுல் குடும்பம் மம்தா ஸ்டாலின் போன்ற தலைவர்கள் அமைகிறார்கள்
பதிலளிநீக்குஇது நம்நாட்டு மக்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா?
நீக்குஆமாம் ஸ்ரீராம். இந்தியர்கள் முக்கியமாத் தமிழர்களுக்கு இது நூத்துக்கு நூறு சதம் பொருந்தும். மற்ற நாட்டவர் தங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்க வந்தவங்களை எதிர்த்தாங்க எனில் நாம் கம்பளம் போட்டு மலர் தூவி வரவேற்பதோடு அல்லாமல் நமக்குப் பிடிக்காத நம்ம ஊர் மக்களையே காட்டியும் கொடுப்போம். இது தான் தமிழகத்தில் ஒரு காலத்தில் கடற்கரையோர மீனவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியது. கடைசிப் பாண்டியர்கள் காலம் அது. அப்போ நிகழ்ந்தவை இவை எல்லாம். தூத்துக்குடியில் அப்போத் தான் பனிமய மாதாவுக்குக் கோயில் எல்லாம் கட்டினாங்க. இன்றளவும் அங்கே பனிமய மாதாவின் திருவிழா எனில் மக்கள் வெளி ஊர், வெளிநாட்டில் இருந்தெல்லாம் வந்து கலந்து கொள்வார்கள். இதைப் பற்றி நிறையச் சொல்லலாம். மின் தமிழுக்காக இந்த மீனவர் போராட்டம் பற்றியும் அவர்கள் மதம் மாறின வரலாற்றையும் மின் தமிழில் உள்ள மரபு விக்கி தளத்துக்கு எழுதிப் பகிர்ந்திருக்கேன். இப்போ மரபு விக்கியையே திறக்க முடியாதபடி செய்திருக்காங்க. விக்கிபீடியா போன்றதொரு தளம் அது. அதில் என் பங்களிப்பு விஸ்தாரமானது. ஆனால் இன்னிக்கு ஒண்ணைக் கூட நான் எடுக்கவோ பகிரவோ முடியாது. முடியலை. :(
நீக்குகாந்தியே டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லையே
பதிலளிநீக்குகாந்தி வழி தனி வழி. அவர் எண்ணங்களும் செயல்பாடுகளுமே வேறாயிருந்தது.
நீக்குஎன்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் எண்ணங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றா? :))
நீக்குஇல்லை. இரண்டுமே வேறு திசையில் குவிந்திருந்தது. இதைத் தொடர விருப்பமில்லை!
நீக்குகாந்தி பிறருக்கு போதனைகள் செய்வார். தனக்கென வரச்சே அவற்றைப் பின்படுத்தியதில்லை. இதுக்கு அவர் தன் மனைவியை நடத்திய விதமே ஓர் உதாரணம். ஆனந்த விகடனில் முன்னால் அதாவது வாசன் அவர்கள் ஆசிரியராக இருந்த காலமோனு நினைக்கிறேன். பரணீதரன் கஸ்தூரி பாயைப் பத்தி எழுதின ஒரு தொடரில் படிச்சிருக்கேன். மனைவியை வீட்டை விட்டுத்துரத்தியவர் காந்தி. அதே போல் தான் பிரமசரியம் சோதனை என்று சொல்லி இளம்பெண்களைப் படுத்தியவர் காந்தி. மத்தவங்க மனசைப் புரிந்து கொள்ளாதவர் தான் காந்தி. இதைச் சொல்வதன் மூலம் பலரும் என்னைக் குற்றம் சொல்வார்கள்/சொல்லி இருக்காங்க. ஆனாலும் எழுத்து மூலமாக வந்த ஒரு விஷயத்தைச் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? கஸ்தூரிபாயின் கடைசி காலத்தில் அவருக்கு மருத்துவ உதவியை மறுத்தவரும் இதே காந்தி தான்.
நீக்குஇளையராஜா 1500 படங்கள்.. அதில் எண்பது சதத்துக்கு மேல் ஹிட் பாடல்கள். யாராலும் நெருங்க இயலாது
பதிலளிநீக்குநம் மனதில் 80 சதவிகிதம் ஹிட் என்றால் இன்னொருவர் மனதில் நாம் விட்டிருக்கும் 20 சதவிகிதம் சேர்த்து வேறொரு அளவீட்டில் 80 சதவிகிதம் ஹிட். இசையைப் பொறுத்த வரை இளையராஜா யுகபுருஷர்.
நீக்குஉண்மைதான். எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
நீக்கு__/\__
நீக்குஆக மஹாகவி பாரதிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
நீக்குபாரதியார் கவிதைகளுக்கு இசை அமைத்தவர்களை கொண்டாடி மகிழ்வோம்.
ஓ... யுகபுருஷர் வார்த்தை உறுத்துகிறதோ!
நீக்குஇல்லை. இசை அமைத்தவர்கள் என்று பன்மையில் சொல்லியிருக்கிறேன்.
நீக்கு(Y)
நீக்குஅனைவருக்கும் இளங்காலை வணக்கம். அப்பாடி என்ன பயங்கரமான கனவு ஶ்ரீராம். !!! எனக்குத் தொலைந்து போவது போலக் கனவு வரும். எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு நான் பத்திரமாய் இருக்கேன் என்று எனக்கே உறுதிப் படுத்திக் கொள்வேன். திரில்லர் படங்கள் பார்த்துவிட்டுப் படுக்க வேண்டாம். மனசின் குழப்பம் கனவுகளாகின்றன. நல்ல தூக்கம் வரப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க அம்மா.. வணக்கம். த்ரில்லர் படங்கள் நான் மதியம் அல்லது மாலையில் பார்ப்பேன். இரவில் பார்ப்பதில்லை!! கனவுகளுக்கான காரணங்களை கண்டுபிடிக்க முடிவதேயில்லை. முன்னர் எனக்கு என்னை ஒரு யானை துரத்திக் கொண்டே இருந்ததது. பல மாதங்கள் அந்தக் கனவு வந்தது!
நீக்குஉண்மைதான் மா. . கனவுகளுக்கு அர்த்தம் இல்லைதான். இப்போது அதிகப் பயக்கனவுகள் வருவதில்லை. சிங்கம் கனவில் வரமாட்டாரா என்று நினைப்பேன். ஆளைவிடு என்று போய்விட்டார்:)
நீக்குஎதிர்பார்க்கும் எதிர்பார்க்கும் கனவு வந்தால் எப்படி?! சினிமாவா புக் செய்து பார்க்க!! எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராதபடி வருவார்.
நீக்குஆனந்த ராகம் உமா ரமணன் இரண்டையும் மறக்க முடியாது
பதிலளிநீக்குஆமாம். உமா ரமணனுக்கு பெரிய ப்ரேக்கைக் கொடுத்த பாடல். ஆனால் ரமணனால் ஏனோ இவரளவு புகழ்பெற முடியவில்லை!
நீக்குநன்றாகப் பாடுவார். அந்தக் காலங்களில் இவர்களின் இசையை தான் தம்பி திருமண ரிசப்ஷனுக்கு வைத்தோம். இரண்டு மணி நேரக் கச்சேரி.
நீக்குஆமாம். இன்றும் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு புத்தாண்டிரவில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி நன்றாக நினைவிருக்கிறது.
நீக்குஅவர் ஒரு படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் தெரியுமோ.. காதல் காதல் காதல்
சென்னைத் தொலைக்காட்சியில் ஏ.வி.ரமணனின் நிகழ்ச்சிகள் நாங்களும் பார்த்திருக்கோம். எனக்கு கணபதி சச்சிதாநந்த சுவாமிகளின் இசைக்கச்சேரி மிகவும் பிடித்தமான ஒண்ணு. இப்போல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்னு பார்த்தே ஐந்தாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன.
நீக்குசிவாஜி சாரைப் பற்றி எத்தனை பாராட்டினாலும் தகும். சமீபத்தில் கூட, ஏதோ நடிகை அவரது நேர மேலாண்மையைச் சிலாகித்திருந்தார்.
பதிலளிநீக்குபாரதியோ.. அவர்தான் சமீபத்தில் பேட்டியளித்திருந்த அந்தக் கால நடிகை!
நீக்குநான் நேற்று நடிகர் மோகன்ராமின் பேட்டியை கேட்டேன். அதில் படையப்பா படத்தில் ஒரு நாலு வரி வசனத்தை சொல்லி சொல்லி பார்த்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் நாலுவிதமாக சொல்லிக் காட்டினாராம் சிவாஜி, கே.எஸ்.ரவிகுமார், "முதல் வரி இரண்டாவது முறை சொன்ன மாதிரி, இரண்டாவது வரி நாலாவது முறை சொன்ன மாதிரி" என்றதும், "அப்படியா? சரியா சொல்றேனா பாரு" என்று சொல்லிக் காட்டினாராம். இதைப் பார்த்த நடிகை லட்சுமி, "பாரு அவருடைய அனுபவம் எவ்வளவு? இருந்தாலும் என்ன டெடிகெஷன்! அதனால்தன் அவர் அங்க இருக்கார்" என்றாராம்.
நீக்குஅது சிவாஜி! 'என் விருப்பத்துக்கு நடிக்கவில்லை, உன் விருப்பம் சொல்லு' என்று இருந்திருக்கிறார்.
நீக்குமீண்டும் காலை பார்க்கலாம். அனைவருக்கும் நல்ல நாளுக்கான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபார்க்கலாம், குட்நைட்மா..
நீக்குஹாஹாஹா! நல்ல கனவு! எனக்கு நேற்று நான் அண்டர்கவர் ஆஃபிசராக இருக்கிறேன், நான் செல்ல வேண்டிய ஒரு ஆபரேஷனுக்காக என்னோடு வந்திருக்கும் இன்னொரு அண்டர்கவர் ஆஃபிசர் செல்கிறார். எதிராளிகள் என்னை அடையாளம் கண்டுவிடப் போகிறார்கள் என்று எனக்கு பயம் வருகிறது, இத்தனை நாட்கள் என்னை காப்பாற்றிய சாய்ராம் இனிமேலும் காப்பாற்ற மாட்டாரா என்று நினைத்துக் கொள்கிறேன். முழிப்பு வந்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு பார்த்த 'துரந்தர்' தினமும் கேட்கும் சாய்பாபாவின் உரைகள் இரண்டும் கலந்து வந்து விட்டதோ என்ரு தோன்ரியது. ஹஹஹா!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. நான் சமீபத்தில் த்ரில்லர் படம் கூட எதுவும் பார்க்கவில்லை!
நீக்குதுரந்தர் இரண்டு பாகங்களும் பார்த்தேன். அதிலும் துரந்தர் 1 இரு முறை பார்த்தேன். எங்க பையர் கூடச் சிரித்தார். அப்படி என்ன இருக்கு அதிலேனு. ஆனாலும் எனக்கென்னமோ இப்படி எல்லாம் கனவில் வருவதில்லை. அதான் ஏன்னு தெரியலை. நானும் சாதாரணமான ஒரு மனுஷி தானே? ஏன் மத்தவங்க போல் கனவெல்லாம் வருவதில்லை? வந்தாலும் நினைவில் நிற்பதில்லை?
நீக்குகாந்தாராவும், "சாவா"வும் பார்த்துட்டு இருக்கேன். உட்கார்ந்து பார்க்கத் தான் முடியலை. டங்கல் பார்த்தது வேறே அப்படியே நிக்குது. நெட்ஃப்ளிக்ஸ் தினமும் கூப்பிட்டுட்டே இருக்கு. :(
நீக்கு//எதிர்பார்ப்பில்லாமல் இரு
பதிலளிநீக்குஎன்று சொல்லி
மற்றவர்கள் அப்படி
இருக்க வேண்டும் என்றே
எதிர்பார்க்கிறோம்!!//
சபாஷ்!
__/\__
நீக்குஆசைய காத்துல தூது விட்டு.. பாட்டின் ரிதம் எனக்குப் பிடிக்கும்.
பதிலளிநீக்குஆமாம். எனக்கும் அதுவும் பிடிக்கும்!
நீக்குபுஷ்பா தங்கதுரைக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் குமாரி பிரேமலதா. எதிர்பாத்த அளவு ரீச் கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குகுமாரி பிரேமலதா யார் என்று ஜீவி ஸார் சொல்வார்!
நீக்குசுஜாதாவின் கதையை முழுமையாக பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஜோக்குகளை பெரிது பண்ணி படிக்க அலுப்பாக இருக்கிறது. காலையில் பார்க்கிறேன்.
ஓகே.. ஸ்வீட் ட்ரீம்ஸ். நாட் ஸ்வெட் ட்ரீம்ஸ்!
நீக்குமுதல் பகுதியைக் கதையாக்கியிருக்கலாமோ! ஸ்ரீராம்?
பதிலளிநீக்குஎன்ன படம் பார்த்துட்டுப் படுத்தீங்க இல்லைனா சமீபத்தில் உங்கள் மனசுக்குள் உபத்திரவம் விளைவிக்கும் அளவு த்ரில்லர் பார்த்தீங்களா!!
கீதா
வாங்க கீதா.. அப்படிதான் நானும் நினைத்தேன். எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன்!
நீக்குபுரிந்தது, ஸ்ரீராம்.
நீக்குகீதா
:))
நீக்குகதையாகவே தான் இருக்கிறது சூப்பர்! முடிவைச் சொன்னேன், ஸ்ரீராம்....ஹாஹாஹா........கதையில் கனவுகள் வரும். கனவுக்குள்ளும் கதை. நானும் இப்படி ஒரு கனவை கதையாக்கிய நினைவு வருது ஆனா என்ன தலைப்பு கொடுத்தேன் என்று தெரியவில்லை...ஆனால் கனவு என்று சொல்லாமலேயே. எங்கள் தளத்தில்.
பதிலளிநீக்குகீதா
அதுதான் சொன்னேனே.. எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன் என்று!
நீக்குநன்றி கீதா.
கடைசி முடிவு சிரிப்பை வரவழைத்துவிட்டது.
நீக்குநீங்க வம்பென்று விட்டாலும், உண்மைக் கனவை இப்படி எழுதும் போது எழுதிய விதத்தில் கதையின் சாயல்!!!
சில கனவுகள் எழுந்த பிறகும் இப்படி விரிவாக நினைவிருக்கும்.
கீதா
எனக்கு நிறைய அப்படி இருக்கு..
நீக்குசாதாரணமாக கனவுகள் தூங்கி எழும்போது மறைந்துவிடும், மறக்கப்படும். நினைவில் நிற்கும் சிலவற்றையும் ஓரிரு வாக்கியங்களில் கூறத்தக்க விதமாக அமையுமே தவிர விவரமாக நினைவில் நிற்காது. கனவு கட்டுரை எப்படியோ ஒரு கட்டுரை தேர்ந்தது என்ற வகையில் கொள்ளலாம்.
பதிலளிநீக்குசெயல் என்று ஒன்று உண்டேல்
[பயன் என்ற முடிவு உண்டு
என்று எதிர்பார்ப்பதே வாழ்க்கை.
'நாளையும் நான் இவ்வுலகில் இருப்பேன்'
இது எதிர்பார்ப்பா நம்பிக்கையா?
நம்பிக்கையின் எதிர்பார்ப்பா?
எதிர்பார்ப்பு பின்னூட்டம்.
ஜோக்ஸ் பரவாயில்லை.
Jayakumar
வாங்க JKC ஸார்.. நம்முடைய அனுபவங்களை வைத்து இப்படிதான் என்று முடிவு கட்டி விடுகிறோம்! அடுத்தவனுக்கு வேறு அனுபவம் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம். எனவே மறுத்து விடுகிறோம்! கொஞ்ச நாள் முன்பு நான் கிட்டத்தட்ட இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் கங்குலி, சேவாக் ரீல்ஸ் ஒன்று பகிர்ந்திருந்தேன்!
நீக்குஇங்கு எதிர்பார்ப்பு என்பது நம் செயல்களுக்கு எதிர்வினையும் நம்பால் அடுத்தவர்கள் காட்டும் செயல்களும். பிறப்பு இறப்பு இல்லை!!
நன்றி JKC ஸார்.
இளையராஜா தனது 83 வது வயதில் 1540 வது படத்துக்கு இசை அமைக்கிறார் என்று செய்தி பார்த்தேன். நம்பமுடியாத பேரதிசயம் அவர். //
பதிலளிநீக்குஆஹா! புதிய செய்தி. இசையில் ஊறியவர் ராஜா! அந்த இசைதான் அவரை இவ்வளவு ஆக்டிவாக வைத்திருக்கிறதோ ?
கீதா
நானும் சமீபத்தில்தான் படித்தேன்.
நீக்குஆசைய காத்துல தூதுவிட்டு - பாட்டு எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். இசை இசை இசை.....இப்பவும் கேட்டுக் கொண்டே கைப்பிங். ரிதம்....நம்மையும் தலையை அதற்கு ஏற்ப அசைய வைத்துக் கைகள் கால்கள் தாளம் போடும், சின்னதாக நடனம் செய்ய வைக்கும்!!!
பதிலளிநீக்குஇந்தப் பாட்டைக்கேட்டாலோ அல்லது யாராவது சொன்னாலோ, உடனே எனக்கு என் கல்லூரி நினைவு வந்துவிடும். என் சீனியர் இந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு நடனம் ஆடினாங்க. ரொம்ப ஃபேமஸ் அவங்க நடனம். ஆனா பாருங்க அவங்க குடும்பத்தோடு கன்னியாகுமரிக்குப் போயிருந்தப்ப ஒரு பாறை மேல உட்கார்ந்திருந்திருக்காங்க...அலை வந்து அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வைக் கேட்டப்ப மனம் நிலை கொள்ளவே இல்லை நினைத்துப் பார்க்கவும் முடியலை.
கீதா
OMG... சந்தோஷமா ஆரம்பிச்சு பொசுக்குன்னு சோகமா முடிச்சிட்டீங்களே..
நீக்குஎஸ் பி ஷைலஜா நல்லா பாடியிருக்காங்க.
பதிலளிநீக்குகிட்டத்தட்ட இதே போல எக்ஸ்ட்ராஸ் நடன அமைப்புடன் ஆனால் அதில் ரோஹிணியும் ஆடுவாங்க அந்தப் பாட்டில் அதுவும் எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் "ஆசை அதிகம் வைச்சு" அதுவும் செம இசை...ரிதம். இதைக் கேட்டதும் அதுவும் நினைவுக்கு வந்தது. எப்பவும் வந்தும் விடும்.
கீதா
மறுபடியும் - ஆசை அதிகம் வச்சு
நீக்குகவிதைகள் இரண்டுமே அட்டகாசம் ஸ்ரீராம் ரொம்ப ரசித்தேன்.
பதிலளிநீக்குஇடப்பக்கம் உள்ளது ஏதேனும் பதிகத்தை வாசித்ததும் எழுதியதோ?
கீதா
திருப்பாவை திருவெம்பாவை ஏதோ ஒன்றின் பாதிப்பில் டிசம்பரில் கீதா அக்கா அல்லது செல்வாண்ணா தளத்தில் எழுதியது.
நீக்குபார்த்த நினைவு வந்தது அதான் கேட்டேன். ஸ்ரீராம்
நீக்குகீதா
(Y)
நீக்குசிவாஜி பற்றிய செய்தியில் அப்படி ஒரு படம் பெயர் கேட்ட நினைவே இல்லை, ஸ்ரீராம். அவர் நடிப்பை மட்டுமே நேசித்தவர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தன் நடிப்பைவெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்தால் நடித்துவிடுவார் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//இந்தப் படத்தில் தன் வயதையொத்த ஸ்ரீராம் என்ற நடிகருக்கு தந்தையாக நடித்தார். //
ஹாஹாஹா! ஏன் நீங்க நினைவுக்கு வர வேண்டும்!!! சும்மா கற்பனை பண்ணிப் பார்த்தேன்! ஒய் ஜி மகேந்திரா போல இருந்திருப்பீங்களோன்னு தோணிச்சு!
கீதா
ஆமாம். எனக்கும் கூட கேட்ட நினைவு இல்லைதான். சில படங்கள் அப்படி தெரியாமல் இருக்கின்றன.
நீக்குஇந்தியர் தம்மைத்தானே அடிமைப் படுத்திக் கொண்டனர் என்பது விளங்கவில்லையா? "//
பதிலளிநீக்குஇதுதான் உண்மை ஸ்ரீராம். இதை மாஸ் சைக்காலஜி எனும் உளவியல் ரீதியிலும் சொன்னாலும் தனி மனிதனுக்கும் பொருந்தும். நம்மை ஒருவர் சாடுகிறார் இல்லை அடக்க முயல்கிறார் என்றால், அதற்குக் காரணம் நாம் தானே அல்லாமல் அவர் அல்லர். நாம், மனிதர்கள் எப்போதுமே சுட்டிக் காட்டிக் குறை சொல்வதில் வல்லவர்கள். நம்மிடம் என்ன குறை இருக்கு, எதனால் அவர் நம்மை அடக்க முயல்கிறார் அல்லது டாமினேட் செய்கிறார் என்று யோசித்து நம்மை அனலைஸ் செய்தாலே பலவீனம் நம் பக்கம் என்று தெரிந்துவிடும் அப்ப நம்மை மாற்றிக் கொள்ளவும் முடியும்.
இதற்கு மேல் நான் விஸ்தரிக்கவில்லை. அப்புறம் நீங்க சொல்வது போல் வம்பாகிவிடும்!!!!!
கீதா
நம்மை authentic ஆக வைத்துக் கொண்டுவிடலாம். யாரும் நம் ஸ்பேசிற்குள் நுழையாத அளவில்.
நீக்குகீதா
Correct. True.
நீக்குஆனந்த ராகம் - செம பாட்டு. உமா ரமணனுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த பாடல். மிகவும் பிரபலமானது இசையும் குரலும் என்று. ஹை பிச் என்ன அநாயாசமாக வருது அவருக்கு!!!! ரொம்பப் பிடித்த பாடல் இதுவும். ஆரம்ப இசை....சிம்மேந்திரமத்யமம்!! ராகம் interlude ல நல்லா தெரியும்...இந்த ராகத்தை எல்லாம் இப்படியும் handle செய்ய முடியும் என்று ...என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை...
பதிலளிநீக்குரெண்டாவது இன்டெர்லூட் கொஞ்சம் அங்கிங்கும் சென்று மீண்டும் வந்து நிற்கும்.
இதே ராகத்தில், இவன் படத்தில் எனை என்ன செய்தாய் பாடல் - சுதாரகுநாதன் பாடிய பாடல்...செமையா இருக்கும்.
கீதா
இளையராஜா.
நீக்குஎனக்கு பைனாப்பிள் புட்டிங் .......இதில் மற்றவர் பெசரட், வெங்காய பக்கோடா சொல்றாரோ? அது சரியாகத் தெரியலை ஆனால் பெசரட் தெரிந்தது. ...நலல யோசித்திருக்கிறார்...உடையும் தோற்றமும் ஆர்டர் செய்வதும் சர்வரின் முகபாவனையில்...
பதிலளிநீக்குகீதா
புன்னகைக்கவா?
நீக்குஹாஹாஹா இல்லை...அவர் ஆச்சரியப்படுக் குழம்பி...யோசனையில் இருப்பதாக முகபாவம் காட்டுதே!
நீக்குகீதா
நான் புன்னகைக்கவா என்று கேட்டேன்!
நீக்குஜோக்ஸ் இந்த முறை வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருக்கின்றன. விரித்துப் பார்த்தாலும். பழைய புத்தகம் இல்லையா ப்ரின்ட் வேறு மங்கி இருப்பதால் இருக்கும்.
பதிலளிநீக்குஸ்மைல் ப்ளீஸ் - புன்சிரிப்பை வரவழைத்தது.
கீதா
ஆமாம். நானும் பிரித்துத் தனித்தனியாய் போடவில்லை. உண்மையில் ஜோக்ஸ் போடவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். என்னையும் மீறி வந்திருக்கிறது!
நீக்குதபால்காரரை நாய் துரத்துவதால், புலி போன்ற நாயோடு வருகிறாரோ!!
பதிலளிநீக்குஹச்!!! - புன்சிரிப்பு
ஜோக்ஸ் ஒரு சில புன்சிரிப்பு மற்றவை ஓகே!
கீதா
:))
நீக்குதலைப்பு புரிந்துவிட்டது ஸ்ரீராம்!!! அட முதல் பகுதிக்கும் பொருத்தமாக இருக்கிறதே!
பதிலளிநீக்குகீதா
புரிதலுடன் ஒரு புன்னகை புரிகிறேன்!
நீக்குபுத்தகத்தில் அப்பக்கங்களை எடுப்பது உங்கள் விரல்களில் தெரிகிறது.
பதிலளிநீக்குஎல்லாம் வெவ்வேறு கதைகளோ சுஜாதாவின் கதைகள். நான் தொடர்ச்சி என்று வாசிக்கப் பார்த்தேன் தொடர்பில்லாமல் இருந்தது..
கீதா
கதை படிக்க அல்ல என்று அதுதான் நான் ஒரு டிஸ்கி போட்டேன்!
நீக்குகற்றுக் கொள்ளச் சென்றேன் கதையின் கடைசி பாரா முடிவைப் படித்ததும், இதுதான் முதலில் வாசித்தேன்!!ஹிஹிஹி.....கதை என்ன என்று தெரிந்துவிட்டது. வித்தியாசமான கதை நல்லா எழுதியிருக்காங்க குமாரி பிரேமலதா.
பதிலளிநீக்குபிரேமலதா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அந்தம்மாதான் உடனே ஒரு வேளை குமரிப் பருவத்தில் எழுதினாங்களோன்னு!! தாவுது மனசு பாருங்க.
கீதா
எந்தம்மா? அபுரி. ஆனால் அது பெண் அல்ல.
நீக்குஓ குமாரி பிரேமலதா கதை அங்கு முடியலையா? அட! நான் சிறுகதை நல்லாருக்கே முடிவு என்று நினைத்தேன், ஸ்ரீராம்...
பதிலளிநீக்குநான் சொல்லியிருந்தால் தொடரட்டும்னு சொல்லியிருப்பேன்..இல்லை அவரது வேறு கதைகளைப் பிரசுரிக்கலாமான்னு கேட்டிருக்காங்களோ?
நல்ல பிரபலம் போல! ஆனால் இவர் பெயர் எனக்குத் தெரிந்ததில்லை
கீதா
அது வெறும் ஸ்டண்ட்தானே கீதா!
நீக்குகுமாரி பிரேமலதா தைரியமாக எழுதியிருக்காங்க. ஏன்னா வாசகர்களின் கருத்துகளைப் பார்த்திருப்பீங்க ஸ்ரீராம். இன்னமும் இப்பவும் கூட இப்படியான வாசகர்கள் இருக்காங்களே ஸ்ரீராம்....புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....எனக்கெதுக்கு வம்பு ஓடுகிறேன்!
பதிலளிநீக்குகீதா
நானும்!
நீக்குகுமாரி கல்பனா கதை வாசிக்கத் தூண்டுகிறது. கே கே ராமன்....எத்தனை எழுத்தாளர்கள் அப்பவும் இருந்திருக்காங்க!
பதிலளிநீக்குமாருதியின் படம் எதையோ சொல்கிறது கதையையும் கிடைத்தால் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.
சிறுக்தைகள். காமில் இப்படிப் பழைய பத்திரிகைகளில் இருந்துதானே ஸ்கான் செய்து தொகுக்கிறார்கள். தேடிப் பார்க்க வேண்டும் அது போல குமாரி பிரேமலதாவையும் தேட வேண்டும்!
கீதா
ஆக படம் பாருங்கன்னா அதுலேருந்து கதை செலெக்ட் செய்யறீங்க...!
நீக்குஇந்தப் பாடலை இது வரை கேட்டதில்லை. அது சரி, ஜானியில் ஸ்ரீதேவி தானே கதாநாயகி. கொட்டும் மழையில் அவர் பாடுவதாக வரும் காட்சியை மட்டும் அடிக்கடி பார்த்திருக்கேன். ரஜினி இருப்பதும் தெரியும். ஆனால் படம் ஏனோ தொலைக்காட்சியில் வந்தப்போக் கூடப் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள இரு கவிதைகள்(?). இரண்டுமே நன்றாக இருக்கின்றன. ஜிவாஜியின் இந்தப் படம் கேள்விப்படாதது. ஸ்ரீராம் என்று ஒரு நடிகர் இருந்ததும் இன்னிக்குத் தான் தெரியும்.
வாங்க கீதா அக்கா.. ஸ்ரீராம் என்று ஒரு நடிகர் இருந்தார் என்று எனக்கு முன்னரே தெரியும். ஜானியில் நீங்கள் சொல்லும் பாடல் 'காற்றில் எந்தன் கீதம்...'
நீக்குஸ்ரீராமின் கனவு அனுபவங்களைப் பார்த்தால் எனக்கெல்லாம் இப்படியாகக் கனவுகள் ஏன் வருவதில்லைனு தோணுது. அதோடு அவருக்குக் கனவுகள் தொடர்கதையாகவும் வருகின்றன. உதாரணத்துக்கு நேத்திக்கு ராத்திரி வந்த கனவு அவருக்கு இன்னிக்கு ராத்திரியும் வரும். நல்ல கற்பனை வளம் இருந்தால் தான் கனவெல்லாம் வருமோ? புரியலை. ஆனாலும் இது சுவாரசியமாக இருந்தது. நானும் அநேகமாகக் காலை 3 மணி அளவில் தான் தூங்க ஆரம்பிக்கிறேன்/ஆரம்பிப்பேன். ஆனால் கனவெல்லாம் கண்டதில்லை. சரியாக நாலரைக்கு முழிப்பு வந்துடும்.
பதிலளிநீக்குகனவு இருந்தால் முழுமையான உறக்கம் இல்லைன்னு அறிஞர்களெல்லாம் சொல்லி இருக்காங்க.. நான் சரியா தூங்கி பல நாட்களாச்சு!
நீக்கும்ம்ம்ம்ம் இருக்கலாம். நான் தூங்குவது கொஞ்ச நேரம் தான் என்றாலும் கனவுகள் நிச்சயமாக இருப்பதில்லை. அப்படியே கனவுகள் வந்திருந்தாலும் நினைவில் இருப்பதில்லை. ஏனெனில் முன்னெல்லாம் தூக்கத்தில் அடிக்கடி கத்துவேன். நம்ம ரங்க்ஸ் சொல்லுவார். என்ன கனவு கண்டே? என்றும் கேட்பார். ஆனால் எனக்கோ கனவெல்லாம் வரலையேனு தோணும். ஆகவே கனவுகள் நினைவில் இருப்பதில்லைனே நினைக்கிறேன்.
நீக்குஆமாம் அக்கா.. சிலருக்கு அப்படி சிலருக்கு இப்படி...
நீக்குஇந்தியர்களைப் பற்றி டால்ஸ்டாய் சொல்லும் அதே கருத்தையே ஜப்பானியர்களும் சொல்லுவதாக சமீபத்தில் முகநூலில் பலரும் பதிவிட்டிருந்தனர். ஜப்பானியர் எவ்வளவு தான் நெருங்கிப் பழகினாலும் இந்தியர்களை மட்டும் வீடு வரை அழைத்து உபசரிக்க மாட்டார்கள் என்பதாக அந்தப் பதிவுகள் சொல்கின்றன.. டால்ஸ்டாய் சொல்லும் இதே காரணம் தான் அவங்க சொல்லுவதும். இதை எல்லாம் படிக்கையில் கேட்கையில் அவமானமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த மக்களும் இதை உணர்கிறார்களா என்றால் இல்லை. தன் குடும்பம், தன் மக்கள் என்பதைத் தாண்டி நாம் சிந்திப்பதே இல்லை என்பதும் முழு உண்மை.
பதிலளிநீக்குகொடுமை! புதிய தகவல்.
நீக்குஅட? முகநூலில் சுத்திண்டே இருக்குச் சில மாதங்களாகவே. சீதா நாராயணன் என்னும் சிநேகிதியும் பகிர்ந்திருந்தார் சில நாட்கள் முன்னர்.
நீக்குஇந்தப்பாடல் அடிக்கடி கேட்டிருக்கேன். ஆனால் உமாரமணன் என்பதை இன்னிக்குத் தான் தெரிந்து கொண்டேன். அருமையான பாடகி.
பதிலளிநீக்குஹாஸ்யக் களஞ்சியம் என்னும் பெயரைத் தவிர்த்து மற்றவை படிக்க முடியலை. மத்தியானமா (இப்போ இங்கே காலை ஏழே முக்கால்) வெயில் ஜன்னல் வழியா வரச்சே படிக்க முடியுமானு பார்க்கலாம். க்ர்ர்
அடுத்து வரும் கதைகளும் அப்படியே! சுஜாதா கதையும் சரி, குமாரி பிரேமலதாவும் சரி படிக்க முடியலை. சாவி வாராந்தரியின் பக்கங்களோ? விகடனோ, குமுதமோ இல்லை. ஹாஸ்யக்களஞ்சியம் கல்கியோனு நினைச்சேன். யோசிக்க வைச்சது. மாருதியின் படத்தோடு வந்திருக்கும் குமாரி கல்பனாவைப்பார்த்த நினைவு, படிச்ச நினைவெல்லாம் இல்லை. சாவி பத்திரிகை அட்டைப்பட நடிகை யார்? வீட்டு மாப்பிள்ளைனு ஒரு படமா? தெரியாது. "ஸ்மைல் ப்ளீஸ்" ஜோக்கை இதோட நாலைந்து முறை பார்த்துட்டேன். அது ஒண்ணுதான் இவற்றில் நன்றாகத் தெரியுது. :( மற்றவை என் கண் கோளாறு.