Breadப்ரெட் பணியாரம் - இது சுலப டிபன் வகை.
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
இன்றைய காலை உணவாக ப்ரெட் பணியாரம்.
என் மாமியார் சொல்லிக் கொடுத்ததைச் செய்தேன்.
மாடர்ன் ப்ரெட் வந்த புதில், ஒரு பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்கிய நினைவு இருக்கிறது. பிறகு நீல்கிரியில் (ஸ்டொர்ஸ்). 2 ரூபாய்க்கு பெரிய அளவில் கிடைத்தது.
வாங்கின அன்றே தீர்ந்து விடும். சிலசமயம், கணவரும் வாங்கி வந்து நானும் வாங்கி இருந்தால் உடனே அதை உபயோகிக்க வேண்டிய அவசியம் நேரும்.
இல்லாவிட்டால், ஒரு மாதிரி மஞ்சள், பச்சை நிறம் எல்லாம் வந்துவிடும்.
இந்த ஊரில் ஷெல்ஃப் லைஃப் இரண்டு வாரமாவது இருக்கிறது. குளிர்ச்சியின் காரணமாக இருக்கலாம்.
இப்போது பணியாரத்துக்கு வரலாம்.
மீதி இருக்கும் ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொண்டு, அத்துடன்,
(கண்ணளவுக்கு) சமமான கோதுமை மாவும், அரிசிமாவும், தயிரும் சேர்த்து மாவாக்கி அரைமணி நேரம் வைக்க வேண்டும்.
இந்தக் கலவையில் வழக்கம் போல் ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு கலந்து கொண்டு, பணியாரக் குழிகளில் போட்டு எடுக்க வேண்டும்.
எளிமையான, மொறு மொறு பணியாரம் தயார்.
கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, விண்ணில் உள்ள SVOM என்ற செயற்கைக்கோள் ஒரு சக்திவாய்ந்த 'காமா கதிர் வெடிப்பை' (Gamma-ray burst) பதிவு செய்தது. வெறும் 10 வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த ஒளிக்கீற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர். ஏனெனில், இது பிரபஞ்சம் உருவான (Big Bang) வெறும் 730 மில்லியன் ஆண்டுகளிலேயே நிகழ்ந்த ஒரு சூப்பர்நோவா (Supernova) வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒளியின் தன்மையை உறுதிப்படுத்த நாசாவின் ஜேம்ஸ் வெப் (JWST) தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. 1300 கோடி ஆண்டுகாலப் பயணத்தால் இந்த ஒளி 'அகச்சிவப்பு கதிர்களாக' (Infrared) மாறியிருந்தது.
பொதுவாக ஆதி காலத்து நட்சத்திரங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வியப்பளிக்கும் விதமாக, இந்த ஆதி காலத்து சூப்பர்நோவா, இன்று நாம் பார்க்கும் நவீன கால நட்சத்திர வெடிப்புகளைப் போலவே (Type II Supernova) அப்படியே அச்சுப்பிசகாமல் இருந்தது. இதுவரை கண்டறியப்பட்டதிலே மிகத் தொலைதூர சூப்பர்நோவா இதுதான். மேலும், இவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் தாய் விண்மீன் திரளை (Host Galaxy) ஜேம்ஸ் வெப் வெற்றிகரமாகப் படம்பிடித்துள்ளது இதுவே முதல் முறை.
ஆதி காலத்து நட்சத்திரங்களும், இன்றைய நவீன நட்சத்திரங்களைப் போலவே வெடிப்பதை ஜேம்ஸ் வெப் நிரூபித்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பிரபஞ்சம் தோன்றிய ஆரம்ப காலத்திலே விண்மீன் திரள்கள் நாம் நினைத்ததை விட மிக வேகமாக வளர்ந்து, பல தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
காமா கதிர் வெடிப்புகள் என்பவை பிரபஞ்சத்தின் ஆழமான ரகசியங்களைத் தேடும் ஒரு டார்ச் லைட் போன்றவை. 1300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ஒரு சிறிய ஒளிக்கீற்று, பிரபஞ்சத்தின் இளமைக் காலத்தைப் பற்றிய மனிதர்களின் புரிதலையே மாற்றியமைக்கத் தொடங்கி உள்ளது.

படங்களுக்கு மிக நன்றி ஶ்ரீராம்.:) ரொம்ப சுவையாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்கம்மா... படங்கள் கீதாவின் கைவண்ணம்.
நீக்குநட்சத்திர பயணம் மிக மிகப் புதிய செய்தி. பிரமிப்பாக இருக்கிறது.1300 கோடி ஆண்டுகள். மூச்சே நின்றுவிடும் அதிசயம். பிரபஞ்ச நிகழ்வுகள் கண்டு பிடிப்பவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். கடவுளின் செய்கைகளை உணர்த்தும் விக்னான அதிசயம். மிக மிக நன்றி மா.
பதிலளிநீக்குஆமாம். இதுபோல தகவல்கள் எப்பவுமே சுவாரஸ்யம்தான்!
நீக்குஎபி யில் வந்த ரெசிப்பியிலியே மிகச் சின்னதான பதிவு.:)
பதிலளிநீக்குஇல்லை அம்மா! இதைவிட சின்ன பதிவு நான் போட்டு இருக்கிறேன் .மிளகுப்பொடி சுண்டைக்காய் வத்தல் சாதம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா! வணக்கம்! இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களது ப்ரெட் பணியாரம் செய்முறை மிக அருமையாவும், எளிதாகவும் உள்ளது. வெறும் ப்ரெட் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான உணவு. இதைப்போலவே ஒருநாள் நானும் செய்து பார்க்கிறேன். அதை இங்கு பகிர்ந்த சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. பதிவுகேற்ற படங்களை பொருத்தமாக தேர்ந்தெடுத்த தந்த சகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கும் என் அன்பான நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்கள் உணவைச் சாப்பிடத் தூண்டுகின்றன. நல்ல ரெசிப்பி
பதிலளிநீக்குஅது ப.ரெட்தானே. ஏன் கீதா ரங்கன் அக்காவிற்கு சந்தேகம்? இரண்டு தடவை லேபிள் போட்டிருக்கிறாரே
பதிலளிநீக்குவல்லி சிம்ஹனை இங்கே பார்த்ததில் சந்தோஷம். நாளை செவ்வாய்க்கிழமையும் வந்து விடுங்கள். பழைய நினைவுகளை
பதிலளிநீக்குபுரட்டிப் பார்த்து மகிழ செவ்வாயும் வியாழனும் ஏதாவது இருந்து கொண்டே தான் இருக்கும். இதுவே எபி--யின் சிறப்பு.
நன்றி ஜீவி ஸார்.. நான் உங்களையும் தினம் வந்து கருத்து சொல்ல அழைக்கிறேன்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அம்மா அவர்களை
பதிலளிநீக்குஇங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி....
வாழ்க நலம்..
மைதா மாவு பிரச்னையால் ரொட்டிகளின் பக்கம் செல்வதில்லை....
பதிலளிநீக்குஆஹா! எத்தனை நாட்களுக்குப் பிறகு வல்லி அக்காவை பார்க்கிறேன்(றோம்) ரொம்ப சந்தோஷம்! எளிய, சுவையான குறிப்பு. படங்கள் பிரமாதம்!
பதிலளிநீக்கு1300 ஆண்டுகள் பயணம் செய்த ஒளிக்கீற்று பற்றிய தகவல் பிரமிப்பு! யாராவது நேரில் பார்த்தீர்களா?
பதிலளிநீக்குசில நட்சத்திரங்களின் ஒளியே பல ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியது எனச் சொல்கிறார்கள். நிலாச் சோறு சாப்பிட்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்த்த காலம் இப்போதைய தலைமுறைக்கு எங்கே தெரியப்போகிறது?
நீக்குசில நாட்களாக எனது தளம் பற்றிய
பதிலளிநீக்குசெய்தி இங்கே தெரிகின்றது...
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்...
ப்ரெடில் இதெல்லாம் பண்ணினதில்லை. அதிகம் கட்லெட், ப்ரெட் உப்புமா, ஆலு டிக்கி, ப்ரெட் பகோடா ஸ்டஃப் வைத்து, ஸ்டஃப் இல்லாமல் ப்ளெயின் பண்ணி இருக்கேன். அதிகமா நம்மவருக்கு ப்ரெட் பகோடாவே பிடிக்கும். ராணுவ அலுவலகங்கள் ஆடிட் போகும்போதெல்லாம் இவருக்காகவே அங்கே கான்டீனில் செய்து தருவாங்கனு சொல்லுவார்.
பதிலளிநீக்குபிரமிப்பு ஊட்டிய நக்ஷத்திரப் பயணம். கண்ணுக்குத் தெரியாத அல்லது நம்மால் கண்டு பிடிக்க முடியாததொரு சக்தி இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
பதிலளிநீக்கு