கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன்:
தண்ணீருக்குப் பதில் பெரும்பாலும் பயணங்களில் கோக் போன்றவைகளைச் சாப்பிடுபவர்களுக்கும் டாஸ்மாக் சரக்கு சாப்பிடறவங்களுக்கும் வித்தியாசம் உண்டா? இருவரும் அடிக்ட்தானே?
# தண்ணீர் சில பயணங்களில் சுத்தமாக இருக்காதோ என்ற ஐயம் வந்தால் இது ஒரு மாற்று. தினசரி குடிக்க வேண்டும் என்று பறந்தால் அதுவும் தவிர்க்க வேண்டிய அடிக்ஷன்தான்.
& வெறும் தண்ணீர் போதை வஸ்து அல்ல. கோக் பெப்சி பொவோன்டோ சமாச்சாரம் சரியாகத் தெரியலை! போதை வராது என்றே நினைக்கிறேன்!
இப்போ ஐஸ்வர்யா (உலக அழகியாக பட்டம் பெற்றவர்) வைப் பார்த்தால் பாவமா இருக்கே கன்னம்லாம் தொங்கிப் போய். இப்படி வேறு எந்த எந்த நடிகைகளைப் பற்றி நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்?
# என் கண்களுக்கு அப்போவும் அவர் பேரழகாகத் தெரியவில்லை. எனினும் நடிகரின் வயது மூப்பு நம் கண்களை நடிகையர் அளவுக்கு உறுத்துவதில்லைதான். அரைக் கிழவர்கள் காலேஜ் மாணவர்களாக நடித்து நம்மை மூளை மழுங்கச் செய்துவிட்டார்கள்.
பத்மினி வைஜயந்திமாலா இருவரை மட்டுமே அவர்களது 50+ வயதில் பார்த்திருக்கிறேன். இருவருமே அதிக பவுடர் கவசமின்றி லட்சணமாக இருந்தார்கள். நான் படத்தில் அழகி என்று பார்த்த அஞ்சலி தேவி நேரில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு சாதாரணமாக இருப்பார் என்று உறவினர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
& ஹூம் எதிர்காலத்தில் தமன்னா என்ன ஆவாரோ என்று நினைத்து ஒரே கவலையா இருக்கு!
கதாநாயகனாக 75 வயது நடிகர் நடித்தாலும் இருபது வயதுப் பெண்ணைத்தான் கதாநாயகியாக ஆக்குகிறார்களே. பெண்களுக்கு 30 வயது ஆகிவிட்டால் என்ன மேக்கப் போட்டாலும் 20 வயதாகக் காண்பிக்க முடியாது என்பதாலா?
# இளம் பெண் கவர்ச்சி, படத்தை ஓரளவு கொண்டு செல்லும் என்ற மூட(?) நம்பிக்கை ஒரு காரணம். அண்மையில் தாத்தாக்கள் ஸ்டண்ட் படங்களில் பன்மொழி ஹீரோக்களை குறுக்கே ஓடவிட்டு படத்தை ஓடச் செய்வது போல இதெல்லாம் ஒரு சென்டிமென்ட்.
வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?
# ஹில்லாரி க்ளிண்ட்டன் மற்றும் பலர் வைத்துக் கொண்டு இருக்கிறார்களே. இதுவும் ஆங்கிலேயரைப் பார்த்து நாம் கற்றுக் கொண்டது.
பெண்களை ஒரு பொருளாகத்தான் இன்றும் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் வெளியே சொல்வதில்லை.
& சமீப காலங்களில் பல பெண்கள் படித்து முடித்து வேலைக்கும் சேரந்தபின்தான் திருமணம் என்பதால், சர்டிபிகேட் புக் தொடங்கி ஆதார் , பான் கார்ட் எல்லாவற்றிலும் பெயர் மாற்றவேண்டி உள்ளது என்பதால், அப்பா பெயரையே சர்நேம் ஆக தொடர்கிறார்கள்.
ஒரு சங்கடமான கேள்விதான். கானக்குயில் ஜானகி உயிர் மகனைத் தேடிச் சென்றது என்று எஸ்.ஜானகி மறைந்த அன்று யூடியூபில் போட்டிருந்தார்கள். ஒரு பெண்ணுக்கு கணவன் முக்கியமா இல்லை மகன்/மகளா? யார் மேல் அவள் அதீத அன்பு செலுத்துவாள்? (ஆசிரியர்கள் எல்லோரும் ஆண்கள். எங்களுக்கு என்னா தெரியும் இதைப்பற்றி என்று மாத்திரம் சொல்லாதீர்கள்)
# சங்கடம் ஏதுமில்லை. இது மாதிரி எழுதுபவர்கள் ஏதோ தம் சாமர்த்தியத்தைக் காட்டுவதற்காக எழுதுகிறார்களே தவிர அவர்கள் மனப்பூர்வமாக அப்படியெல்லாம் நினைத்து எழுதுவதில்லை.
எல்லாரும் யார் மேல் பிரியமாக பற்றாக பாசமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நியமங்கள் செய்ய முடியாது. சாத்தியமாக இருக்குமானால் இங்கிருந்து செல்லும் ஆத்மா தனக்குப் பிடித்த பலர்களோடு சேர்ந்து இருக்கும் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.
நம் சாத்திரங்கள் பெண்ணுக்கு கணவன் தான் கண்கண்ட தெய்வம் என்று சொல்லுகின்றன. தன் மனைவியை முற்று முழுதாக கணவன் மட்டுமே பார்த்துக் கொண்டால் கூட ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு அது பொருந்துமா - பொருந்தியாக வேண்டுமா என்பதே சந்தேகம்தான்.
ஒருவருக்கு யார் மேல் அன்பு அதிகம் இருக்கிறது என்பது பல விஷயங்களைச் சார்ந்திருக்கும் . இதற்கு எளிதான பதில் இல்லை.
& இவரைப் பொருத்த மட்டில், முதலில் காலமானவர் கணவர். பிறகு பல வருடங்கள் கழித்து காலமானவர் மகன். மகன் காலமான பிறகு இவர் காலமானதால் மகனைத் தேடி அவர் உயிர் சென்றது என்று எழுதுகிறார்கள். கணவர் காலமான ஓரிரு வருடங்களுக்குள் இவர் உயிர் பிரிந்திருந்தால், கணவரின் உயிரைத் தேடிச் சென்றது என்று எழுதியிருப்பார்கள்.
ஒரு பெண்ணுக்கு யார் முக்கியம் கணவனா அல்லது மகன் / மகளா என்று கேட்டால் என் பதில் : மகன். மகன் இல்லை என்றால் மகள். இது என் அனுபவபூர்வமான பதில்.
ஜீவி :
பிரதமர் மோதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசின் கீழிருந்த அரசு நிருவனங்கள் என்னன்ன?
மோதி ஆட்சிக்கு வந்த பின்னர் இப்பொழுதிய நிலையில் மத்திய அரசின் கீழிருக்கும் அரசு நிருவனங்கள் என்னன்ன?
# மூன்று மட்டும் தான். எட்டு நிறுவனங்களில் பெரும்பாலான அரசு பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன.
& என் பதில் சுருக்கமாக :
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசின் கீழிருந்த அரசு நிறுவனங்கள் (முழுப் பட்டியல் மிகவும் நீளமானது) 2014-ல் மட்டும் 290-க்கும் மேற்பட்ட செயல்படும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) இருந்தன. சில நிறுவனங்கள் மட்டும் கீழே ( விவரங்கள் வேண்டாதவர்கள் கருப்பு நிற எழுத்துகளை கடந்து செல்லவும்)
பெட்ரோலியம்
- Indian
Oil Corporation (IOC)
- Bharat
Petroleum (BPCL)
- Hindustan
Petroleum (HPCL)
- ONGC
- Oil
India
- GAIL
- Chennai
Petroleum
- Numaligarh
Refinery
மின்சாரம்
- NTPC
- NHPC
- Power
Grid Corporation
- NLC
India (அப்போது Neyveli
Lignite Corporation)
நிலக்கரி
- Coal
India
- Singareni
(மத்திய-மாநில கூட்டு நிறுவனம்)
எஃகு மற்றும் உலோகம்
- SAIL
- NMDC
- Hindustan
Copper
- MOIL
- NALCO
- KIOCL
- Rashtriya
Ispat Nigam (Vizag Steel)
பாதுகாப்பு
- HAL
- BEL
- Bharat
Dynamics
- Mazagon
Dock
- Garden
Reach Shipbuilders
- Goa
Shipyard
- Mishra
Dhatu Nigam
கனரக தொழில்
- BHEL
- BEML
- HMT
- HEC
தொலைத்தொடர்பு
- BSNL
- MTNL
- ITI
Limited
போக்குவரத்து
- Air
India
- Pawan
Hans
- Shipping
Corporation of India
- Container
Corporation of India
- IRCON
- RITES
- RailTel
- Konkan
Railway
உணவு மற்றும் வேளாண்மை
- Food
Corporation of India
- Central
Warehousing Corporation
- National
Seeds Corporation
வர்த்தகம்
- MMTC
- STC
- PEC
மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் கீழ் உள்ள உள்ள அரசு நிறுவனங்கள் (2025 ஆம் ஆண்டு மார்ச் 01 கணக்குப்படி) செயல்படும் CPSE-கள் 450-க்கும் மேல் உள்ளன (இவற்றில் துணை நிறுவனங்களும், புதிய பாதுகாப்பு நிறுவனங்களும் அடங்கும்) ஆக, 160+ நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
சில நிறுவனங்கள் விவரம் கீழே: (விவரம் வேண்டாதவர்கள் கடந்து செல்லவும்!)
2014-க்குப் பிறகு ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்
பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன, சில
மூடப்பட்டன, சில ஒன்றிணைக்கப்பட்டன, சில புதிதாக உருவாக்கப்பட்டன.
தனியார்மயமாக்கப்பட்டவை
- Air
India → Tata Group (2022)
- Neelachal
Ispat Nigam
- Hindustan
Zinc (மத்திய அரசின் கட்டுப்பாடு முன்பே
குறைந்தது)
- BALCO
(ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டிருந்தது)
ஒன்றிணைக்கப்பட்டவை
- பல
எண்ணெய் நிறுவனங்களில் துணை நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.
- Ordnance
Factory Board கலைக்கப்பட்டு புதிய நிறுவனங்கள்
உருவாக்கப்பட்டன.
புதிதாக
உருவான பாதுகாப்பு நிறுவனங்கள்
- Munitions
India Ltd.
- Armoured
Vehicles Nigam Ltd.
- Advanced
Weapons & Equipment India Ltd.
- Yantra
India Ltd.
- Troop
Comforts Ltd.
- India
Optel Ltd.
- Gliders
India Ltd.
= = = = = = = =
படமும் பதமும் :
இன்று ஒரு முக்கியமான தகவல் - படமும் பதமும் மூலமாக அளித்தருப்பவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். அவர் அனுப்பியுள்ள இந்தத் தகவல் மிகவும் பயனுள்ள புதிய தகவல். பாவனா சார்பில் (!) அவருக்கு நன்றி.
சென்ற புதனன்று நான், எ.பி. பதிவு ஆடியோவாக வருகிறது என்பதை பற்றி கேட்டிருந்தேன், வேறு யாருக்கும் அந்த அனுபவம் இல்லையென்று தெரிந்தது.
அதைப் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் குடைந்தேன். ரொம்ப சிம்பிள்.
மொபைல் போனில் எ.பி.பைத் திறந்தால், மேலே வலது ஒரத்தில் மூன்று புள்ளிகள் தெரிகிறதா? அதை அழுத்துங்கள்.
படம் இரண்டில் வருவதைப் பல ஆப்ஷன்கள் வரும், அதில் 'listen to this page' என்பதை தொட்டால் அத்தனை கவர்ச்சியாக இல்லாத பெண் குரல் அந்த பக்கத்தை படிக்கிறது. உச்சரிப்பு சுமார்தான்.
அந்தக் கோட்டையில் சமீபத்தில்தான் அரச குடும்பத்தினரின் கல்லறை இருக்கிறது. எவ்வளவு பெரியவராக இருந்தாலும் ஆறுக்கு மூன்றடி கல்லறைதான். அதில் இன்னார் என்ற மார்க்கிங்கே இருக்காது. இறந்த அன்றே வெகு சீக்கிரமாக புதைத்துவிட்டு அடுத்த அரசர் பதவி ஏற்றுக்கொள்வார். கல்லறைகளின் முன்பு நான் எடுத்துக்கொண்ட புகைப்படம். என் குடும்பத்தினரோடு இந்த இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். (ஆமாம் அப்போ இரண்டு ஆள் சைஸுக்கு இருக்கிறேனே என்று நினைக்கிறீர்களா? எடை கான்ஷியஸ்னஸ் எனக்கு எப்போதுமே இருந்தது என்றாலும் கலோரி, அதன் தாக்கம் என்று ஒன்றைப்பற்றியும் எனக்கு அப்போது தெளிவு இல்லை. இந்தப் புகைப்படம் எடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கன் மிஷன் ஹாஸ்பிடலுக்கு ஒரு தடவை சென்றிருந்தபோது-சும்மா..பொழுதுபோகாமல்..அதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன், என் எடை 97 கிலோ என்று காண்பித்தவுடன் அதிர்ச்சி ஆகிவிட்டது. அதன் பிறகு வி.எல்.சி.சி. என்ற எடை குறைப்பு நிறுவனத்தில் நிறைய செலவழித்து எடை குறைத்து, பிறகு எடை கான்ஷியஸ் ஆக ஆகிவிட்டேன். 2010லிருந்து இன்று வரை என்னுடைய அதிகபட்ச எடை 84க்குப் போயிருக்கிறது.
பகுதி 06 : பாவனா நீ எந்திரி! நானாவின் வீட்டிற்கு வரும் பாபாவை வரவேற்பது, பாவனா என்னும் கம்ப்யூட்டர் பிம்பம். அதுதான் நானாவின் அந்தரங்கக் காரியதரிசி. பாவனாவால் படிக்க முடியும், கேட்க முடியும், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், யோசனைகள் சொல்லவும் முடியும்.
பகுதி 07 : அறுஷ்கா & தமெனா !! 😄பாவனா வைத்த குறும்புப் பெயர்கள். நாநாவும் பாபாவும் ஹோட்டல் சென்று டிஃபன் சாப்பிட்டு வந்தபின் நாநா ச தே மெ கார்ட் உபயோகித்து அருவ நிலை அடைவது எப்படி என்று காட்டுகிறான்.
இனி
பகுதி 08 : நானே நாநா, யாரோதானா !





காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு2014 முன்னான காலகட்டத்தில் பாரதமாதாவிற்கு அணிகலனாய் தேசத்தி ற்கு சொந்தமாக இருந்த பொதுத்துறை நிருவனங்கள்,
நீக்குஅதற்கு பின்னான காலகட்டத்தில் தமியாருக்கு சொந்தமான நிருவனங்கள் இவற்றைப் பற்றிய விவரங்களை சேகரித்து பட்டியலிட்டுத்
தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கு மிக்க நன்றி, கேஜிஜி ஸார்
தனியாருக்கு சொந்தமான -- என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.
நீக்குநிருவனங்கள் என்பதையும் நிறுவனங்கள் என்று வாசிக்க வேண்டுகிறோம்... ஹிஹிஹி... குட் ஈவினிங் ஜீவி ஸார்!
நீக்குபாரதமாதாவிற்கு அணிகலனாயிருந்த -- ரசிக்கவில்லையா ஸ்ரீராம்?
நீக்குஎங்களுக்கு இப்பொழுது இரவு 09.10.
நீக்குரசித்தேன் ஜீவி ஸார். Good Night!
நீக்கு// 2014 முன்னான காலகட்டத்தில் பாரதமாதாவிற்கு அணிகலனாயிருந்த// பழைய மாடல் நகைகளை விற்று, புது மாடல் நகைகள் வாங்குவது இந்தக் காலத்து இல்லத்தரசிகள் செய்வதுதானே! 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு 290 பொதுத்துறை நிறுவனங்கள் - தற்போது 450+ பொதுத்துறை நிறுவனங்கள் - இதை நீங்கள் ரசிக்கவில்லையா ஜீவி சார்?
நீக்கு
நீக்கு//2014 முன்னான காலகட்டத்தில் பாரதமாதாவிற்கு அணிகலனாய் தேசத்தி ற்கு சொந்தமாக இருந்த பொதுத்துறை நிருவனங்கள்,//
//(2025 ஆம் ஆண்டு மார்ச் 01 கணக்குப்படி) செயல்படும் CPSE-கள் 450-க்கும் மேல் உள்ளன (இவற்றில் துணை நிறுவனங்களும், புதிய பாதுகாப்பு நிறுவனங்களும் அடங்கும்) ஆக, 160+ நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன! //
அதே, அதே!
நீக்குஇந்த வாரம் கேள்விகள் குறைவு தான்.
பதிலளிநீக்கு//எ.பி. பதிவு ஆடியதாக வருகிறது என்பதை// என்னது பதிவு ஆடியதாக வருகிறதா என்று சற்றே குழப்பம் வந்தது. தொடர்ந்து படித்ததில் புரிந்தது அது ஆடியோவாக என்று புரிந்து கொண்டேன். :)
////எ.பி. பதிவு ஆடியதாக வருகிறது என்பதை// ஹி ஹி! இப்போதுதான் கவனிக்கிறேன். இந்த ஆட்டோ கரெக்ஷன் படுத்தும் பாடு இருக்கிறதே.. சரியாக நாம் அடிப்பதை தப்பாக மாற்றி விட்டு, ஆட்டோ கரெக்ஷனாம். correction என்பதையே தப்பாக அடிக்கிறது. கர்ர்ர்ர்!
நீக்குலேட் ஆனாலும் லேடஸ்ட் ஆக திருத்திவிட்டேன்!
நீக்குநெல்லை பகிர்ந்திருக்கும் பஹ்ரைன் கோட்டையைப் பார்த்ததும் ஓமானில் நிஸ்வா(Nizwa) என்னும் இடத்தில் இருக்கும் கோட்டையின் படம்தான் பகிர்ந்திருக்கிறாரோ என்று நினைத்தேன். இப்படியேதான் இருக்கும். அதன் டெரஸில் ஓமானி ஹல்வா கிளறுவதற்கு கேரள கோவில்களில் இருக்கும் உருளி போன்ற பெரிய உருளிகள் இருந்தன.
பதிலளிநீக்குசுவையான தகவலுக்கு நன்றி.
நீக்குநல்லா இருக்கே! வெண்கல உருளிகளா? ராஜஸ்தான் ம்யூசியங்களில் நிறையப் பார்க்கலாம்.
நீக்குஒரு பெண்ணுக்கு கணவன் முக்கியம்தான், ஆனால் அதீத அன்பு குழந்தைகளிடம்தான் என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. மகாபாரதத்தில் ஒரு கிளைக் கதையில்,"குழந்தைகள் பெற்ற பெண் கணவனை மதிக்க மாட்டாள்" என்பது நீதியாக சொல்லப்பட்டிருக்கும்.
பதிலளிநீக்குஅதே, அதே!!
நீக்குபிள்ளைக்குழந்தை பெற்ற பெண் எனத் திருத்தி வாசிக்கலாமோ? எனக்கு இது இன்றளவும் ஆச்சரியத்தை ஊட்டும் ஒரு விஷயம். ஏனெனில் எனக்கெல்லாம் அப்படிக் குழந்தைகள் தான் உயர்த்தி, கணவன் பின்னர் தான் என்னும் எண்ணம் இன்னிக்கு வரையிலும் இல்லை. குழந்தைகளுக்கு எதிரே கணவரைக் குறைத்துப் பேசும் எண்ணம் வந்ததில்லை.
நீக்குநான் கர்நாடகா யாத்திரை சென்றபொழுது, அந்த டூர் கண்டக்டர், அவ்வப்பொழுது கதைகள் சொல்லி, எங்களிடம் கேள்விகள் கேட்டார். ஒரு முறை சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் சொக்கட்டான் ஆடினார்கள், அதற்கு நடுவர் பார்வதி. போட்டி ட்ராவில் முடியும் போல் இருந்தது. யார் ஜெயித்தது என்று பார்வதிதான் தீர்ப்பு கூற வேண்டும்.." இந்த இடத்தில் அவர் நிறுத்தி விட்டு, "உங்கள் கணவரும், சகோதரருக்கும் போட்டி வந்து, நீங்கள்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்றால் யாருக்கு சார்பாக தீர்ப்பு கூறுவீர்கள்?" என்று கேட்டார். பஸ்ஸில் இருந்த பெண்கள் அணைவரும், "அண்ணா(ஸகோதரர்) சார்பாகத்தான் சொல்லுவோம்" என்றோம். உடனே அந்த கைட், "நானும் இந்தக் கேள்வியை ஒரு ஐநூறு பெண்களிடம் கேட்டிருப்பேன், இதுவரை எல்லாப் பெண்களுமே, சகோதரன் சார்பாகத்தான் பேசுவோம் என்கிறார்கள். என்றைக்காவது, யாராவது ஒரு பெண் கணவன் சார்பாக பேசுவேன் என்று சொல்கிறாளா என்று பார்க்க வேண்டும்" என்றார்.
பதிலளிநீக்குஹா ஹா ! சகோதரர் என்பதுதான் சற்று வித்தியாசமாக உள்ளது! கல்யாணம் ஆன புதிது என்றால் - குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லை என்றால் ஓ கே.
நீக்குயார் பக்கம் நியாயம் இருக்கோ அவங்க தான் ஜெயிப்பாங்க. இதான் சரியான விடை. சகோதரன் என்பதால் நாம் கணவரை விட்டுட்டு அவருக்குச் சாதகமாகச் சொல்லுவது சரியில்லை என்பதே என் கருத்து. அதுக்காகப் பிறந்த வீட்டைக் குறைத்துச் சொல்வதாக அர்த்தம் இல்லை. பிறந்தகத்து மனிதர்களை மதிக்காமலும் இருந்தது இல்லை. :)
நீக்குபொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது கொஞ்சம் சோகம்தான். ஆனால் நஷ்டத்தில் இயக்கி மேலும் மேலும் அரசின் பளுவை அதிகரிப்பது சரியா என்றும் கேள்வி வருகிறது. கொரோனா காலத்தில் மிகக்கடுமையான பொருளாதார சிக்கலை சந்தித்தோம். கஜானா அலமோஸ்ட் காலி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்றுதான் தீர வேண்டும் என்ற நிலை. பசியைத் தீர்க்க வீட்டில் இருக்கும் பொருள்களை விற்க வேண்டிய நிர்பந்தம் வருவது போன்ற சூழல்.
பதிலளிநீக்குநல்ல கருத்து.
நீக்குyessoooo yessu.
நீக்குமுருகா சரணம்..
பதிலளிநீக்குசரணம் முருகா !
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குநலமே விளைக.
நீக்குகதாநாயகனாக 75 வயதிலும்
பதிலளிநீக்குஅந்தக் கொடுமைகள் முடிந்து விட்டனவா?..
இல்லையே ! அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று கூப்பிட்ட மீனா ஜோடியாக நடித்து அடுத்து ரஜினிக்கு அம்மாவாக நடிக்கும்வரை முடியாது. நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு அம்மாவாக நடிக்கவில்லையா!
நீக்குஇதுக்குத் தான் தேடிப் பிடிச்சு நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாகப் பார்க்கணும் என்பது. :)
நீக்குஎன்னைப் பொறுத்தவரையிலும் கூட ஐஸ்வர்யா ராய் அழகோடு சேர்த்தி இல்லை. இவரை விட சுஷ்மிதா சென் முக அழகு, உடல் அழகு, எழில் நிறைந்தவர்.
பதிலளிநீக்குபொதுவாக நான் வெளியே போனால் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் தண்ணீர் தான். 2,3 பாட்டில்கள் 2 லிட்டர் கொள்ளளவு கொண்டது எடுத்துட்டுப் போயிடுவேன். இந்த கோக், பெப்சி, ஃபான்டா, தம்ஸ் அப், பொவன்டோ இதெல்லாம் கண்ணாலே கூடப் பார்ப்பது இல்லை. இளநீர், எலுமிச்சைச் சாறு அல்லது நல்ல பைனாப்பிள் ஜூஸ்(வடக்கே எல்லாம் இதோடு பம்ப்ளிமாஸ் ஜூஸும் சேர்ப்பாங்க) மாதுளைச் சாறு ஆகியவை தான். பிரச்னை என்னன்னா, வடக்கே எல்லாம் இந்தப் பழங்களின் சாறு கிடைப்பது போல் ஆந்திராவைத் தாண்டினால் தமிழ்நாட்டில் கிடைக்காது. அதிலும் எங்க குடியிருப்பு வளாகத்தின் கீழே உள்ள கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒண்ணும் இருந்தது. அங்கே ஜூஸ் ஸ்டாலில் ஒரு தரம் மாதுளை ஜூஸ் வாங்கப் போனால் மாதுளை விதைகளை எடுத்து அதோடு பாலையும் விட்டு, (உவ்வேக்) ஜூஸாக அடிச்சுக் கொடுத்தாங்க. வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனால் காசு மட்டும் நினைவாக வாங்கிண்டாங்க.அதுக்கப்புறமா இங்கெல்லாம் ஜூஸ் எனில் ஆத்துக்குடி, எலுமிச்சை ஜூஸ் அல்லது ஜிகர் தண்டா போன்றவையே. ஜிகர் தண்டா கூட எல்லாக் கடைகளிலும் நல்லா இருப்பதில்லை.
சாத்துக்குடி தான் ஆத்துக்குடினு வந்திருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்கு