14.8.26

ஆடி வெள்ளி - வண்ண விழியழகி



வியாழன் பதிவுக்கும், வெள்ளி பதிவுக்கும் வித்தியாசம் காண்பது சிரமமாக இருக்கிறது என்று பல வாசகர்கள் அபிப்பிராயப்பட்டதால், ஸ்ரீராம், இந்த வெள்ளிப் பதிவை தயாரிக்கும் வேலையை எனக்குக் கொடுத்துவிட்டார். 

இன்று ஆடி வெள்ளி - இந்த வருடத்து கடைசி ஆடி வெள்ளி. 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அந்தக் காலத்தில் என் மனைவி விரதம் இருந்து கொண்டாடியது உண்டு. 

ஆடிவெள்ளி - சிறப்புகள் : 

  • அம்மனின் அவதாரம்: உலகத்தில் அமைதியை நிலைநாட்ட அன்னை பராசக்தி பல வடிவங்களில் (மாரிமுத்து, காளி, கன்னியம்மன்) பூமிக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 
  • நோய் நீக்கும் வழிபாடு: ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசும். இதனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். முற்காலத்தில் நோய்களைத் தவிர்க்க அம்மனை வேண்டி கூழ் வார்த்தல் மற்றும் மூலிகைக் கஞ்சி வழங்கினர். 
  • பெண்களின் பிரார்த்தனை: கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், குடும்ப வளம் பெருகவும் விரதம் இருக்கின்றனர். 
  • நிற்க! 

    நான் முதன் முதலில் வீடியோ பிளேயர் வாங்கிய சமயத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் : ஆடிவெள்ளி.
அந்தப் படத்தின் புத்தம் புதிய காபி அலுவலக குழு மூலம் எனக்குக் கிடைத்தது. 

அந்தப் படத்தையும்  அதில் வரும் பாடல்களையும் அப்போது மிகவும் இரசித்துப் பார்த்தேன். புது பிளேயர், புது அனுபவம்! இன்றும் மறக்க முடியவில்லை - அந்தப் படமும் பாடல்களும். 

தகவல்கள் : 

இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன்.ராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசீதா
நிழல்கள் ரவி
வெளியீடு1990
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே: 

1) 


வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன்
மரகத மூக்குத்தி

வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்

 
சங்கம் வெச்ச
பாண்டியனின் செல்லப் பொண்ணு
சொக்கனுக்குக் காத்திருக்கும்
சொக்கப் பொண்ணு
தெப்பம் போல் அம்மாடியோ
தண்ணீரில் தள்ளாடுது
அடியே பவள கொடியே
பருத்திச் செடியே மேனி சுகமா

குளிக்கும் திருப்பாவை நானும்தான்
களிக்கும் நாளல்லவா
எனக்கும் துணையாக மீனும்தான்
இருக்கும் நதியல்லவா
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்

தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன்
மரகத மூக்குத்தி

வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
 
கள்ளழகர் தங்கச்சிதான்
மெல்ல மெல்ல கூச்சமின்றி
நீச்சலிட்டு துள்ள துள்ள
எண்ணம்தான் என்னென்னவோ
வண்ணங்கள் கொண்டாடுது
மயிலே மாலை வெயிலே
சோலைக் குயிலே மோகம் வருதா
விளக்க முடியாமல்
ஏதேதோ மயக்கம் உருவாகுது
மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும்
மனதில் கொதிப்பேறுது


வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன்
மரகத மூக்குத்தி

வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்

என் மனைவி பெயர் மீனாக்ஷி என்பதால் இந்தப் பாடலை அடிக்கடி பாடி, அவரை கேலி செய்தது உண்டு! 

2) 

பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா

பெண் :
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ

பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா

பெண் :
நீதானே ஒரு ஆண் யானை
பெண்பிள்ளை போலே அழக்கூடாதய்யா
இடிச்சாலும் புயல் அடிச்சாலும்
ஆகாயம் மண்ணில் விழக் கூடாதய்யா

பெண் :
ரெண்டு பேரும் வேண்டுவோம் அம்மனிடம்தான்
நிச்சயமா வாங்கலாம் நல்ல வரந்தான்
ஆத்தா கண்ணு பாத்தா துன்பம் தானா விலகும்
பாரு இங்கு பாரு இன்பம் பூவா மலரும்

பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ

பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா

பெண் :
நாள்தோறும் அன்பு தேனூறும்
பூவாட்டம் இங்கே எங்க அம்மா மனம்
யாராச்சும் துன்பம் ஏதாச்சும்
பட்டாலே போதும் அது வாடிவிடும்

பெண் :
என் பெத்த தாய் மனம் சொக்கத்தங்கம்தான்
எப்பொழுதும் சேர்ந்திடும் அத்த பக்கம்தான்
சோகம் விட்டு போக நல்ல காலம் வரலாம்
சேதி நல்ல சேதி நம்ம காதில் விழலாம்

பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ

பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா

நான் சொன்னதை கேட்காமல் எதிர்த்துப் பேசினால், நான் இந்தப் பாடலைப் பாடி மனைவியை சிரிக்கவைத்தது உண்டு. 

= = = = = = 
அடுத்து நவராத்திரி படத்திலிருந்து நான் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்து இரசிக்கும் ஒரு காட்சி : இரண்டு திலகங்களின் அற்புத நடிப்பு. 



இன்றைய பதிவு பிடித்திருந்ததா? 
நன்றி. 

= = = = 

61 கருத்துகள்:

  1. பதிவின் ஆரம்பத்திலேயே 'எனக்கு'க்கு சொந்தமானவர் யாரென்று கித்தாப்பாக சொல்லி இருக்கலாம். அது யாரென்ற யோசனையிலேயே வாசித்தது மனதில் படியாது அழும்பு பிடித்தது.

    பதிலளிநீக்கு
  2. ,'வண்ண விழி அழகி' பாடலை மேலோட்டமாக பார்த்த பொழுதே இப்படியெல்லாமா --அதுவும் சினிமாவுக்கு -- பாட்டெழுதுவார்கள் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன குற்றம் கண்டீர் எம் பாட்டில் - சொல்லில் குற்றமா அல்லது பொருளில் குற்றமா - (என்று சிவாஜி பாணியில் படிக்கவும்!)

      நீக்கு
  3. பாடல் வரிகளைத்தான் படித்தேன். பிறகு காணொளிகளைப் பார்க்கணும்.

    பதிவைப் படித்தபின், இம்சை அரசன் படத்தில் வரும் "இதற்கு அது விடை இல்லையே" என்பது போல, அந்த வெள்ளிக்கு மாற்று இது இல்லையே என்ற எண்ணம் வந்தது.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஆடி வெள்ளி வாழ்த்துகள். ஆடி வெள்ளியின் சிறப்பை உணர்த்தும் பதிவு நன்று.இப்படத்தின் பாடல்கள் இதுவரை கேட்டதில்லை. இந்தப் படம் கேள்விபட்டுள்ளேனே தவிர பார்த்ததில்லை. . கடைசி நவராத்திரி படத்தின் காட்சி நன்றாக இருக்கும். நானும் முன்பு ரசித்திருக்கிறேன். இப்போதும்பார்த்து ரசித்தேன். பாடல்களின் காட்சிகளை பிறகு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  6. ஆடி வெள்ளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. பலதரப்பட்ட செய்திகளுடன் பதிவு சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. வண்ண விழியழகி பாடலை இன்று தான் கேட்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  9. அந்த நவராத்திரி திரைப்படத்தின் நாடகக கூத்துப் பாடல் அருமையிலும் அருமை...

    சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகமும் பின் பாட்டுக் கலைஞர்களின் நடிப்பும் அடடா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி கூத்து நாடகங்களை 65 களில் விடிய விடிய பார்த்திருக்கின்றேன்...

      நீக்கு
    2. ஆஹா - இனிமையான நாட்கள். dhoordarshan தமிழ் ஆரம்பித்த காலங்களிலும் கொஞ்சம் காணக் கிடைத்தன.

      நீக்கு
    3. 65ல் நான் பிறந்திருந்தேனா என்பதை என் அப்பாவிடம் கேட்கணும்.

      நீக்கு
    4. Doordarshan Chennai ஆமாம், இல்ல, அப்போ அந்தத் தெருக்கூத்துப் பிரபலமான ஒரு குழு கூத்துப்பட்டறையோ என்னவோ கொஞ்சம் கம்யூனிசம் சார்ந்ததோனு நினைவு. அது ரொம்பவே பிரபலம். அதைத் தவிரவும் ஒரு சில தம்பிரான்கள், புரிசை தம்பிரான்னு ஒருத்தர் மட்டும் லேசாக நினைவில் மிதக்கிறது. மத்தவங்க நினைவில் வரலை. முத்துசாமினோ என்னமோ ஒருத்தர் இருந்த்தாகவும் நினைவு.

      நீக்கு
    5. கலைஞர்கள் பெயர் ஞாபகம் இல்லை.

      நீக்கு
  10. நல்ல பசியோடு வந்து உட்கார்ந்தால், ரவா உப்புமாவை, சர்க்கரை தொட்டுக் கொண்டு சாப்பிடச் சொல்வது போல இருக்கிறது. எனிவே, கை கொடுத்த நிலைய வித்வானுக்கு பாரட்டுகளும், நன்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவா உப்புமா எனில் நல்லெண்ணெய் விட்டுக்கிளறணும். அரிசி உப்புமா எனில் தே.எண்ணெய் தான். வேறே கிட்டே வரக்கூடாது. ஜவ்வரிசி உப்புமா (சாபுதானா கிச்சடி) போஹா எனில் கடலை எண்ணெய்தான் வேறே எண்ணெயில் பண்ணினால் சுவை மாறிடும். நல்ல நல்லெண்ணெய் விட்டுக் கிளறிய ரவா உப்புமாவைக் கீழே இறக்கும் முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் நல்ல நெய்யை விட்டுக் கிளறிவிட்டுச் சூடாக இருக்கும்போதே தட்டில் போட்டுக் கொண்டு மேலே சர்க்கரையைத் தூவிக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள் பானுமதி. ரவா உப்புமா அடிக்கடி பண்ணிச் சாப்பிடுவீங்க. எனக்கும் சரி, நம்ம ரங்க்ஸுக்கும் சரி இது ரொம்பப் பிடித்தது.

      நீக்கு
    2. சாபுதானா கிச்சடி பிராக்கெட்டுக்குள் எழுதிட்டுப் பக்கத்தில் மற்றும் போஹானு வந்திருக்கணும். எப்படியோ மற்றும் என்பது விட்டுப் போயிருக்கு! :(

      நீக்கு
    3. இன்றைக்கு என் வீட்டில் காலை டிஃபன் அரிசி உப்புமாதான்.

      நீக்கு
    4. எல்லாம் ஶ்ரீராம் செய்த தவறு. வெள்ளி பாடல்கள் என்று அந்த அந்தக் கிழமைகளுக்கு இருந்ததை மாற்றியதால் இப்போ கீசா மேடம் கன்ஃப்யூஸ் ஆகி, இன்று திங்கட்கிழமைனு நினச்சுட்டாங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
    5. எங்க ஹாஸ்டல்களில் (10ப்பு, +2, கல்லூரி) உப்புமாவில் ஜீனி தூவியிருக்கும். கொஞ்சம் உதிர்உதிரா இருக்கும். பொதுவா விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் காலை டிபன் அதுதான். ஆஹா ஓஹோன்னு இருக்கும். (முதுநிலைக் கல்லூரி படிக்கும்போதுதான் தெரிந்தது, அந்த உப்புமாவிற்கு நான் ஒருவன் மாத்திரமே ரசிகன் என்று)

      நீக்கு
    6. ரவா உப்புமா வித் சர்க்கரை எனக்கு பிடிக்கும் கீதா அக்கா.

      நீக்கு
  11. கௌதமன் சார் தான் இன்னிக்குப் பதிவின் ஆ"சி"ரியர் என்பது ஆடி வெள்ளி வீடியோ ப்ளேயரில் இருந்து புரிந்து விட்டதே! இஃகி,இஃகி,இஃகி, அப்புறமாக் கீழே வந்து சரி பார்த்துக் கொண்டேன்.. ஜேகேசியாக இருக்க மாட்டார் என்பது தெரிந்தாலும் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் மனைவி பெயர் மீனாக்ஷி என்பதில் போய்விட்டது. :)))))

    பதிலளிநீக்கு
  12. நானும் இந்தத் தெருக்கூத்து மதுரையில் இருந்தப்போ வடுகக்காவல் கூடத் தெருவில் குடியிருந்தோம். அங்கே தெருமுனை உச்சினிமாகாளி அம்மன் கோயிலின் பங்குனித் திருவிழாவில் தெருக்கூத்து இடம் பெறும். அப்போப் பார்த்திருக்கேன். விளையாட்டுப் போட்டி எல்லாம் இருக்கும். எங்களை எல்லாம் அதெல்லாம் சேரக்கூடாதுனு சொல்லிட்டு அப்பா எல்லா விளையாட்டுக்களிலும் பங்கேற்பார். சிலவற்றில் அவர் விளையாடிய குழு வெற்றியும் பெற்றிருக்கிறது. பரிசாக அப்போது எவர்சில்வர் கிண்ணம், சோப்பு டப்பா(எவர்சில்வர்) எனக் கொடுப்பாங்க. :)))) நினைவுகளைக் கிளறி விட்ட தெருக்கூத்து.

    பதிலளிநீக்கு
  13. வெள்ளிக்கிழமையை சிறப்பித்த
    நிலைய வித்வானுக்கு பாரட்டுகள்..

    பதிலளிநீக்கு
  14. படம் நன்றாக இருந்திருக்கும். இந்த ஒரு காட்சியே போதுமே. தேடிப்பிடிச்சுப் பார்க்கும் ஆவல் வந்திருக்கு. முடிஞ்சால் கிடைச்சால் பார்க்கணும். :))))

    பதிலளிநீக்கு
  15. ஆடிப்பூரம் இன்னிக்கு என்பதைப் பலரும் மறந்து விட்டார்கள். திருவாடிப்பூரத்து ஜெ(செ)கத்துதித்தாள் வாழியே! திருப்பாவை முப்பதும் செப்பினாய் வாழியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் இருக்கட்டும் கீசா மேடம்... திருவாடிப்பூரத்துக்கு என்ன ஸ்பெஷலா பண்ணினீங்க?

      நீக்கு
    2. ப்திலை இங்கே கொடுக்காமல் கீழே கொடுத்திருக்கேன். ஒரு தரம் நசிராபாதில் எங்களுக்கு மவுன்ட் அபுவில் இருந்தோ உதயபூரிலிருந்தோ ஒரு தென் தமிழகத்து ஐயங்கார்த் தம்பதிகள் வந்திருந்தனர். அன்னிக்கு அவங்க (என் வயசு தான். ஆனால் கல்யாணம் அப்போத் தான் ஆகி இருந்தது) நான் சமைக்கறேன்னு ஐயங்கார் வீட்டுப் பண்டிகை சமையல் சமைச்சுப் போட்டாங்க. திருக்கண்ணமுது, பச்சடி, ஒரு கறி, பூஷணிக்காய்ப் புளிக்கூட்டு, தயிர் வடை, கேசரி, சேனை வறுவல், மோர்க்குழம்பு, சாம்பார், ரசம், ஊறுகாய்னு அசத்தல். கடைசியில் மோர் சாதத்துக்குத் தயிர்சாதமாகக் கலந்து வைச்சிருந்தாங்க. அதுக்கு முன்னேயோ, பின்னேயோ யாரும் ஆடிப்பூரத்துக்குனு சமைச்சுப் போட்டுச் சாப்பிட்டதில்லை.

      நீக்கு
    3. அதான் மெனுவை செய்முறையோடு சொல்லிக்கொடுத்துட்டாங்களே. இனி என்ன... யார் திருவாடிப் பூரத்துக்கு உங்க வீட்டுக்கு வந்தாலும் செய்து கொடுத்துவிட வேண்டியதுதானே

      நீக்கு
    4. ஆடிப் பூரம் மிக விஷேஷமாக கொண்டாடப்படுவது நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோவிலில்தான். 1956 முதல் 1970 வரை அந்தக் கொண்டாட்டங்களைக் கண்டு இரசித்து திருவிழா கடைகளில் பல பொருட்கள் வாங்கி மகிழ்வோம்.

      நீக்கு
  16. சற்றுமுன் தான் என் மனைவி பஞ்சாங்கத்தை உருட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு.. என்ன பார்க்கறே.. என்று கேட்டுவைத்தேன்-அவள் பஞ்சாங்கத்தைப் புரட்டுவது ஆச்சர்யமான விஷயம் அல்ல என்றபோதிலும். ’இன்னிக்கு ஆடிப்பூரம்.. ஆண்டாள் ஜென்மநக்ஷத்திரம்’ என்றாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. நாகை நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.

      நீக்கு
  17. இன்றைய இரு பாடல்களையும் முதல் முதலாக இன்று கேட்டேன். ஓகே

    நவராத்திரி தெருக்கூத்து.... எனக்கு ரசிக்கலை என்பதால் என்னை Gen Zல் சேர்த்துவிடாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ வெகு இயல்பான நடிப்பு. ம்-ஹூம் அதுவும் ஜிவாஜியை நானே பாராட்டறேன். உங்க ரசனையே புரியலை போங்க. :))))) ஒருவேளை நிஜமான தெருக்கூத்துப் பார்க்காத காரணத்தால் இதன் பரிணாமம் புரியலையோ?

      நீக்கு
    2. அப்படித்தான் இருக்கும்!

      நீக்கு
  18. ஆடிப்பூரத்துக்குனு நான் தனியால்லாம் பண்ணினதில்லை. பெண் கல்யாணம் ஆகிப் போகும் முன்னர் கன்யாப் பெண் எனக் கொஞ்சம் மஞ்சப்பொங்கல், தாளகக் குழம்புனு பண்ணி விநியோகம் இருக்கும். இப்போல்லாம் அவ்வளவெல்லாம் பண்ணுவதில்லை. கு.கு. சர்க்கரைப் பொங்கலையே சாப்பிடாது. அதுக்குப் பிடிச்ச இந்தியன் ஸ்வீட் எனில் கோதுமை ரவையில் பண்ணும் வெல்லக் கேசரி மட்டும் தான். மத்தது எதுவும் சாப்பிடாது. பொதுவாக அது இனிப்பாக இருந்தாலே வேண்டாம்னு சொல்லிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வீட்டுக்கு வந்தால், நான் இனிப்பு பண்ணலை, குகுக்குப் பிடிக்காது என்பதால்னு, ஒரு ஸ்டாண்டர்ட் சாக்கு சொல்லிடுவீங்க போலிருக்கிறதே

      நீக்கு
    2. இனிப்பு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் அபூர்வம்தான்!

      நீக்கு
  19. அனைவருக்கும் ஆடி வெள்ளி வாழ்த்துகள்.

    ஆடி வெள்ளி பற்றிய சிறப்பான பகிர்வு. அம்மன் அருள் சகலரையும் காக்க வேண்டுவோம்.

    பாடல்கள் இரண்டுமே எமக்குப் புதியவை..

    பதிலளிநீக்கு
  20. 'நவராத்திரி' படக்காட்சி அருமை! சிவாஜியும்,சாவித்திரியும் பிளந்து கட்டியிருக்கிறார்கள். சிவாஜி.. என்னா ஸ்டைல்! அதே நேரத்தில் அசல் நாட்டுப்புற கலைஞரை கண்முன் கொண்டு வந்து விட்டார். அனாயாசம் thy name is Savitri! இதில் நான் ரசித்த இன்னொரு விஷயம் பாடலின் துவக்கத்தில் மேல் ஸ்தாயியில் சஞ்சாரித்த டி.எம்.எஸ்.ஸின் ஆலாபனை! அதே சுருதியில் பேசியிருக்கும் சிவாஜி, என்ன கலைஞனடா நீ! சுசிலா குரல் சாவித்திரியே பாடுவது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. ஆடிவெள்ளி பாடல்கள் நன்றாக இருக்கிறது.
    நவராத்திரி பகிர்வு அருமை.
    பாடல் பகிர்வுகளுடன் வாழ்க்கை துணையின் நினைவு பகிர்வும் அருமை.
    அன்பை சொல்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!