கொண்டைக்கடலை வடைகீதா சாம்பசிவம்
ஹூஸ்டனில்
பையர் எங்கேயோ கொண்டைக்கடலையில் வடை சாப்பிட்டிருக்கார். அதிலிருந்து அதைப் பத்தியே
சொல்லிட்டு இருப்பார். எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லைனாலும் ஒரு தரமாவது பண்ணிப் பார்க்கணும்னு
நினைச்சுப்பேன். அதுக்கு இன்னிக்கு வேளை வந்தது. போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில்
வண்டு வர ஆரம்பிக்க, சரிதான், இனியும் இதைக் காபந்து பண்ண வேண்டாம், மத்த சாமான்களுக்கும் வண்டு வர ஆரம்பிச்சுடும்னு
கொண்டைக்கடலையை நன்கு புடைத்து சுத்தம் செய்து விட்டு நிறைய நீர் விட்டு அலசினேன்.
பத்து நிமிஷத்துக்கும் மேல் அலசி அதிலே தூசி, தும்பு, வண்டு இருக்க வாய்ப்பில்லைன்னதும்
அதிலே தேவையான நீரை விட்டு ஊற வைச்சேன். நேத்திக்கே ஊற வைச்சுட்டேன். ஊற வைக்கையில்
வடை பண்ணும் எண்ணமே இல்லை. முளைக்கட்டி எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சப்பாத்திக்குக்
கூட்டு அல்லது சுண்டல் என்று பண்ணிக்கலாம்னு தான் எண்ணம்.
ஊற வைத்த கொண்டைக்கடலை
இன்னிக்குக் காலம்பர மீண்டும் கழுவி நீரை வடிக்கையில்
வடை செய்தால் என்னனு ஒரு எண்ணம்! அதோடு நேத்திலிருந்து
மழை பெய்துட்டு இருக்கா! சூடாகச் சாப்பிட நல்லா இருக்குமேனு ஒரு ஆசை! உடனே ரங்க்ஸிடம்
கேட்டேன். அவருக்கு உள்ளுக்குள்ளே தான் சோதனை எலியாகி விட்டது குறித்து பயம் வந்ததோ
என்னமோ! தெரியலை! இரண்டே இரண்டு வடை தான் எடுத்துப்பேன், சம்மதம்னா பண்ணு, இல்லைனா
வேண்டாம்னு சொல்லிட்டார். எனக்கா வடை பண்ணியே தீரணும்னு. தூக்கமே வராது போல இருந்தது.
ஆகவே கொஞ்சமாகக் கொண்டைக்கடலையை எடுத்து வடைக்குனு
தனியா வைச்சேன். மிச்சத்தை முளைக்கட்ட விட்டுட்டேன். இப்போக் கொஞ்ச நேரம் முன்னால் அதிலே உப்பு, காரம்
சேர்த்து அரைத்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கிப் போட்டுக் கருகப்பிலை, கொ.மல்லி சேர்த்து
வெங்காயம் நறுக்கிப் போட்டு வடையாகத் தட்டி விட்டேன்.
செய்முறை:
ஊறிய கொண்டைக்கடலை ஒரு கிண்ணம்
மி.வத்தல்,
ப.மிளகாய் வகைக்கு இரண்டு
ஒரு சின்னத்
துண்டு இஞ்சி
பெருங்காயம்,
உப்பு தேவைக்கு.
வெங்காயம்
பெரிது ஒன்று
இவற்றைச் சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும். உதிர் உதிராகத் தான் வருது. கொஞ்சம் உளுந்து சேர்த்திருக்கலாமோனு
நினைச்சேன். அப்போத் தான் சேர்ந்து வரும். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் ஒரு
டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன்.
வடைக்கு அரைத்த
மாவு.
இதில் எல்லாமும்
கலந்திருக்கேன்.
=======================================================================================
எண்ணெயில் வேகும் வடைகள்
சுடச் சுட வடைகள் சாப்பிட ரெடி!
சின்னதாய்
ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளே உள்ள விதையை எடுத்துவிட்டுப் பொடிப்பொடியாக
நறுக்கிப் போட்டேன். இஞ்சியும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். அப்போது
தான் வாசனையாக இருக்கும். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, கருகப்பிலை, கொத்துமல்லி
போட்டுக் கலந்து கொண்டு வடையாகத் தட்டினேன். எல்லோரும் வேணும்ங்கற வடைகளை எடுத்துக்குங்க!
=========================================================================================
மனசாட்சியம் - 38
KGY Raman
" தன்னெஞ்சறிவது "
பஞ்சமா பாதகங்கள் என்றால் எவை என்று நான் உங்களுக்குப் பட்டியல் போட்டுச் சொல்ல வேண்டிய தேவையில்லை. தவறு அல்லது பாதகம் அது கூட இல்லை மகாபாதகம் என்று தெரிந்தும் இரண்டு மூன்று பாவங்களைச் செய்யாமல் இருக்க இயலவில்லை என்பதே கசப்பான உண்மை.
சுதந்திரத்திற்கு முன்பாகவே மதுவிலக்கைக் கொண்டு வந்தவர் ராஜாஜி. யாரோ ஒரு ஆள் ஒரு மண் கலயத்தில் கள் எடுத்துப் போவதைப் பார்த்த அவர் அதை வாங்கிப் பார்த்து அப்படி இதில் என்னதான் இருக்கிறது ? மக்கள் ஏன் இப்படி விடாப்பிடியாக குடிக்கிறேன் என்கிறார்கள் " என்று கேட்டு தன் விரலை அதில் தோய்த்து நாக்கில் தொட்டுக் கொண்டாராம். " சே, இதைப் போயா இவ்வளவு ஆர்வமாகக் குடிக்கிறார்கள் " என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம். இன்றைய குடிமகன் யாராவது அப்போது அருகில் இருந்திருந்தால் " நைனா தமத்துண்டு குடிச்சிட்டு இப்படிக் கேட்காதே ! ஜம்முன்னு ஒரு லிட்டர் குடிச்சு பாரு தெரியும் " என்று நிச்சயம் சொல்லி இருப்பார். அது லிட்டர் வராத காலம்.
என்னதான் இருக்கிறது என்று ஒரு ஆவல் காரணமாக குடித்துப் பார்த்து அதில் மூழ்கிப் போனவர்களை எனக்குத் தெரியும். நீங்கள் சாப்பிடும் டானிக்கில் கூடத்தான் ஆல்கஹால் இருக்கிறது என்று அவர்கள் நம்மோடு விதண்டாவாதம் செய்வார்கள். நான் விமானத்தில் குடித்த கதை உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன்.
அலுவலகத்தில் என் மொடாக்குடி நண்பர் ஒருவர் ஜுரம் இருமல் ஜலதோஷம் என்று எந்த உபாதை வந்தாலும் கால் லிட்டர் அரை லிட்டர் என்று மது டோஸ் சாப்பிட்டு அதனால் சரியாயிற்று என்று வாதம் செய்வார். அற்பாயுளில் மறைந்து போனார்.
" தர்மபுத்திரரே சூதாடி இருக்கிறார் " என்று ரம்மி வெறியர்கள் தம் கட்சிக்கு சப்பை கட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்.
பாதகங்களிலேயே மிகவும் லேசானது பொய் சொல்வது தான் போலிருக்கிறது. பொய், புளுகு என்று இதில் இரண்டு வகை. பொய்க்கும் புளுகுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் ரொம்ப நாள் தெரியாமல் தான் இருந்தேன். கெடுதல் விளைவிப்பது அல்லது தீய நோக்கத்துடன் சொல்லப்படுவது பொய். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாது, இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க வேண்டிய காரணத்துக்காக சொல்லப்படுவது புளுகு.
வேலை பார்க்கிற காலத்தில் பொய் அல்லது புளுகு சொல்லாமல் பல விஷயங்களைச் சமாளிக்க இயலாது. " குடும்பத்தோடு சினிமாவுக்குப் போக அரை நாள் லீவு வேண்டும் " என்று கேட்டால் எந்த அதிகாரியும் கொடுக்க மாட்டார். " சில சொந்த அலுவல்கள் " ( some urgent private affairs) என்கிற ஆங்கில சொற்றொடர் இதைச் சமாளிக்க மட்டுமே ஏற்பட்டது. அப்போது கூட அது என்ன சொந்த அலுவல் என்று என் மேல் அதிகாரி குடைந்து குடைந்து கேட்பார். எனவே அவரிடம் அரை நாள் லீவு வேண்டுமானால் கூட ஏதாவது சீக்கு காரணம் சொல்லித்தான் வாங்க வேண்டும்.
அதேபோல " ரேடியோ வாங்க வேண்டும் வைப்பு நிதியிலிருந்து கடன் கொடுங்கள் " என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். " என்னைச் சார்ந்து இருக்கிற ஒருவரது நெடுநாள் தொடர்கிற நோய்க்குச் சிகிச்சை செய்ய " என்று பொய் சொல்லிக் கடன் வாங்க வேண்டும். சில சமயம் டாக்டர் சர்டிபிகேட் கூட கேட்பார்கள். ஐந்து அல்லது பத்து ரூபாய் கொடுத்தால் லட்ச ரூபாய் வரை சர்டிபிகேட் பெற முடியும்.
இன்னொரு தவிர்க்கக்கூடிய ஆனால் தவறுத்திராத பாதகம் திருட்டு. சின்னதானாலும் சொற்பமானாலும் திருட்டு திருட்டுத்தானே ! நான் செய்த சின்ன சின்னத் திருட்டுகளைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருப்பதே நல்லது. இதுவரை பிடிபடவில்லை என்ற நல்ல செய்தியைச் சொல்வதுடன் முடித்துக் கொள்கிறேன்.
கொசு கரப்பான் பூச்சி எலி பெருச்சாளி இவற்றைக் கொல்வது கொலையாகுமா என்று தெரியவில்லை. " உன்னை முட்ட வந்த பசுவைக் கொல்லு " என்று புத்தர் சொன்னதாக நாக நந்தி அடிகள் மூலம் கல்கி நமக்குச் சொல்லுகிறார்.
எல்லாம் யோசித்துப் பார்க்கும் வேளையில் அடுத்த ஜென்மத்திலாவது....
கொண்டைக்கடலை வடை.... வெங்காயம் போன்றவைகளைச் சேர்க்காமல் வடை செய்து, அதனை கபூஸ் எனப்படும் ரொட்டியில், வைத்துத் தருவார்கள் பஹ்ரைனில். ரொம்ப சுவையாக இருக்கும்.
பதிலளிநீக்குமகளும் வீட்டில் செய்திருக்கிறாள். அதில் இலைகளும் வைத்துத் தருவாள்.
நீங்க நம்ம ஊர் மெதட்ல வடையா பண்ணியிருக்கீங்க. இதுவும் ருசியா இருக்கும்.
எண்ணி நாலே நாலு வடை பண்ணி, எல்லோரும் எடுத்துக்கோங்க என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு மட்டும்தான் உண்டு.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தட்டிலே நாலே நாலு வடை இருந்தா அவ்வளவு தான் பண்ணினேன்னு அர்த்தமா என்ன? இன்னும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்து யாரும் விடுப்டலை போல! இன்னிக்கும் யாரையும் காணோமே!
நீக்குஇருந்த இரண்டு மெம்பருக்கு எவ்வளவு பண்ணியிருப்பீங்க என்ற எண்ணம்தான். இதுக்கு அரபு நாட்டில் வேறு பெயர். ஏதோ கீரை சேப்பாங்க வெங்காயம் கிடையாது கபூஸ்ல வச்சு தருவாங்க
நீக்குஅரபு நாடுகளில் இதை ஃபலாஃபல்னு சொல்லுவாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் அது வேறே மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். :)
நீக்குபாருங்க பெயர் எழுத விட்டுப் போயிடுச்சு. ஃபலாபல் ரொம்ப நல்லா இருக்கும்னு கடைசி ஓரிரு வருடங்களில்தான் சாப்பிட்டுத் தெரிந்துகொண்டேன். மகள் அருமையாபண்ணுவாள், ஆனால் அவள் நினைத்தால்தான்.
நீக்குபல நேரங்களில் அற்ப விஷயத்துக்காக பொய் சொல்லவேண்டிவரும். அது பெரிய தவறல்ல என்றே தோன்றும்.
பதிலளிநீக்குபலர், தங்கள் வீட்டில் நடந்த விஷயத்தை உறவு என்றாலும் அப்படியே சொல்லமுடியாமல் பூசி மெழுகி பொய் சேர்த்துச் சொல்வார்கள். சமீபத்தில் தன் மகன் பார்த்துக்கொண்ட பெண் பற்றி பூசி மெழுகி நெருங்கிய உறவினர் சொன்னார். சொன்னதில் பாதிக்கு மேல் பொய் என்று தெரிந்தாலும் கேட்டுக்கொண்டேன். கணவன் மனைவி இருவரும் தனித் தனியாக நம்மிடம் ஒரு சம்பவத்தைச்்சொல்லும்போதும் பொய் சொல்வது தெரிந்துவிடும்.
பொய் சொல்லாமல் இருப்பதன் நன்மை, தேவையில்லாமல் மனதில் நாம் சொன்ன பொய்யை மறக்காமல் இருக்கத் தேவையில்லை.
மிகவும் சரி. கருத்துக்கள் இனிக்கின்றன!
நீக்குநம் பொய், அடுத்தவனுக்கு உலை வைப்பதாகவும், நமக்கு நன்மை தரக்கூடியதாகவும் இருந்தால் அதுதான் தவறு. அதுவே தன்னெஞ்சறிவது.... நாம் சொல்லும் பொய் பிறருக்கு நன்மை செய்யும், யாருக்கும் கெடுதல் செய்யாது என்றால் பொய் சொல்வது சரி. இதைத்தான் பொய்மையும் வாய்மையிடத்து.
பதிலளிநீக்குஇதையேதான் சொல்ல விரும்பினேன். தெளிவாகச் சொல்லவில்லை என்று தெரிகிறது.
நீக்குபாதகங்களில் லேசானது, பொய் என்பது சரியல்ல. நாம் செய்யும் தவறில் எது பிறரைப் பாதிக்கிறது, எந்த அளவுக்கு என்பதே, பாதகத்தின் தன்மையைத் தீர்மானிக்கும்.
பதிலளிநீக்குதனி அறையில் ஒருவன் குடிப்பதும், அதே அளவு குடித்துவிட்டு பேருந்தை ஓட்டுவதும், ஒரே செயலாக இருந்தாலும் ஒன்று பெரிய தவறு.
அலுவலகத்தில் இன்னொருவனைப் பற்றி பொய் சேர்த்து கோள் சொல்லி அவன் முன்னேற்றத்துக்கு உலை வைப்பது பெரிய பாதகமில்லையா? பிறரைப் பாதிக்கும் எதைச் செய்தாலும் அது பாதகம் என்பது என் எண்ணம். பாதகம் செய்பவரை மோதி மிதித்துவிடு எனச் சொல்வதற்கு இதுதான் காரணம்.
நீக்குபொய் சொல்லாமல் இருப்பது கடினம். காதலித்தவர்கள் மற்றவர்களிடத்தும் அவர்களுக்குள்ளேயும் சொல்லும் பொய்களை கணக்கு வைத்துக்கொள்ள இயலுமா?
செயலின் முழு வடிவத்தில் (செய்முறை, விளைவு, செய்ய முனைந்த காரணம் எல்லாம் சேர்ந்து) பிறர்க்கு கேடு இரலாகாது என்பது மிகச்சரி. வழக்கம்போல் நிதானத்துடன் நேர்மையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் எண்ணெய் பலகாரங்கள் ஒத்துக்
பதிலளிநீக்குகொள்வதில்லை...
///பொய் சொல்லாமல்
பதிலளிநீக்குஇருப்பது கடினம்///
எல்லாவற்றிலும் நேர்மை இருப்பின்
பொய் அங்கே இராது...
நேர்மை இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் பொய் அல்லது உண்மை அல்லாததைச் சொல்ல வேண்டியிருக்கும். சொந்த கௌரவம் போன்ற பல காரணிகள்
நீக்குஉண்மை அல்லாதது மிகப் பிடிக்கிறது:)
நீக்குஉளுந்து வடை தவிர்த்த பஜ்ஜி
பதிலளிநீக்குபோண்டா, பருப்பு வடை, கடலைப்
பருப்பு - இவற்றை
விட்டாயிற்று...
வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை
தமிழக உ வடை அதிலும் கும்பகோணம் வெங்கட்ரமணா உ வடை ஆஹா
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநான் ஒரு பருப்பு வடை ரசிகன். செய்முறையை படிக்கும் போதே சாப்பிட்ட திருப்தி வருகிறது. படங்கள் அந்த உணர்வுக்கு மேலும் செறிவூட்டுகின்றன. ரசித்துப் படித்தேன் - நன்றி.
பதிலளிநீக்கு_/\_ Thank You.
நீக்குஇந்தக் கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது என்று வரும்போது வேறு ஆசிரிய பெருமக்கள் யாரோ தான் பார்த்து வேண்டாம் என்று அழித்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - இப்போது வரை. அதைத் திருத்த வேண்டும் என்று நானே அடித்தால் கூட அப்படித்தான் வரும் என்பது இப்போது புரிகிறது.
பதிலளிநீக்குஇன்னிக்கு எ.பியைத் திறந்ததும் முதலில் படிச்சது மனசாட்சியம் தான். "திங்க"ற பதிவுக்கு இதான் வரும்னு முன்னாடியே தெரியும் என்பதால் அதைப் பார்க்கலை. பொய்க்கும் புளுகுக்கும் உள்ள வித்தியாசம் இன்னிக்குத் தான் தெரியும். ஏனெனில் அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு என்பார்கள். ஆகவே புளுகு என்பது ரொம்பப் பெரிய விஷயமா நினைச்சிருந்தேன்.
பதிலளிநீக்கு//ரேடியோ வாங்க வேண்டும் வைப்பு நிதியிலிருந்து கடன் கொடுங்கள் " என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். "//
பதிலளிநீக்குமுழுக்க முழுக்கச் சரி. எங்களுக்கும் இப்படி அடிக்கடி நடக்கும். நடந்திருக்கு. அதிலும் கூட்டுக்குடும்பத்தில் எல்லாச் செலவுகளுமே எங்கள் இருவரை மட்டும் சார்ந்தது என ஒரு எழுதப்படாத சட்டம் அமலில் இருந்தது. ஆகவே கோடை விடுமுறை கழிந்து பள்ளி திறக்கும் நேரம் இரு குழந்தைகளுக்கும், கடைசி மைத்துனனுக்கும் பள்ளிப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், எங்க குழந்தைகளுக்கு ஷூ, அதிலும் குறிப்பிட்ட ஒரு ஷூ தான் போட்டுக்கணும், சாக்ஸ், அதைத் தவிர விளையாட்டு நாட்களுக்குனு வெள்ளை கான்வாஸ் ஷூ என வாங்கணும். அப்போதைய நிலவரத்தில் இவை எல்லாம் சேர்த்து இரண்டாயிரத்துக்குள் வந்துடும். சீருடைகள் தைக்க வேறே கூலி கொடுக்கணுமே. ஆகவே வருங்கால வைப்பு நிதி தான் கை கொடுக்கும். வேறே சேமிப்பும் எங்களுக்கு இல்லை என்பதால் மாதாமாதம் சம்பள பில்லில் இருந்தே பிடிக்கும் மாதிரியாக இதில் தான் அதிகம் முதலீடு செய்வோம். அப்படியே எனக்கு யாராவது வைச்சுக் கொடுக்கும் பணம் இருந்தாலும் அதுவும் குடும்பச் செலவுக்கே போய்விடும். இந்த வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் வாங்க இப்படித் தான் ஏதேனும் சொல்லிட்டு அதற்கான ஆதாரங்களையும் அலுவலகத்திற்குச் சமர்ப்பிப்போம். குடும்பத்தில் நபர்களும் அதிகம் என்பதால் யாருக்கானும் உடல் நலம் சரியில்லாமலும் போயிருக்கும். எப்படியோ சமாளிச்சிருப்போம். இதை இப்போது சொல்லி வருங்கால வைப்பு நிதியில் இருந்து திரும்பக் கொடுக்க வேண்டாம் என்னும் முறையில் பணம் வாங்குவோம். குழந்தைகளுக்கு வாங்கினது போகப் பணம் மீதம் இருந்தால் முன்னர் வாங்கிய கடன்களைப் பணம் கொடுத்து ஒழிச்சுடுவோம். பின்னர் செப்டெம்பர், அக்டோபரில் மறுபடியும், தீபாவளிச் செலவுகள். அதுக்கும் இப்படித் தான் வாங்க வேண்டி இருக்கும். பின்னர் தான் எனக்குத் தோன்றியது கோ ஆப்டெக்ஸ் அல்லது ஹான்ட்லூம் ஹவுஸ் மூலமாகத் துணிகள் வாங்குவது என்பது. அலுவலகத்தில் கொடுக்கும் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்துட்டுத் துணிகள் வாங்குவோம். மாதா மாதம் சம்பளத்தில் பிடிச்சுப்பாங்க. மற்றச் செலவுகளை எனக்குப் பிறந்த வீட்டில் கொடுக்கும் தீபாவளி, நவராத்திரிப் பணத்தைக் கொண்டு செய்துடுவோம். இப்போ எல்லாம் இருக்கு. தீபாவளியோ மற்றப் பண்டிகைகளோ கொண்டாடுவதற்கும் சந்தோஷப்படவும் ஆட்கள் தான் இல்லை. :(
விபரமான கருத்துக்கு நன்றி.
நீக்குஇப்போ எல்லாம் இருக்கு. தீபாவளியோ மற்றப் பண்டிகைகளோ கொண்டாடுவதற்கும் சந்தோஷப்படவும் ஆட்கள் தான் இல்லை. :(''
நீக்குஅன்பு கீதாவின் நிதர்சன உண்மை வார்த்தைகள். பிரமிப்பாக ஆனால் சந்தோஷமாகக் கடத்திய நாட்கள் வருடங்கள்.காலம் நிறைய மாறி விட்டது. எனக்கும் வயதாகி விட்டது. பின் வரும் சந்ததிகளுக்குப் புரிவது கடினம். ஒரு வேளை இறந்தகால ஏமாற்றங்களாகத் தெரியலாம்.
..உன்னை முட்ட வந்த பசுவைக் கொல்லு " என்று புத்தர் சொன்னதாக நாக நந்தி அடிகள் .. //
பதிலளிநீக்குபுத்தர் யார் என ஓரளவாவது (அவரது சித்தாந்தத்திலிருந்து) அறிந்தவர்களுக்குப் புரியும், இப்படி அசட்டுத்தனமான, அடாவடி அட்வைஸ் எல்லாம் செய்வதற்காக அவர் ஜனிக்கவில்லை என்பது. இப்படியெல்லாம் ’புத்தி’மதி செய்ய நிறைய ப்ரஹஸ்பதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருப்பார்கள். தன் சீடர்களிடம்கூட கௌதமர் அதிகம் பேசியதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் மௌன நிலையிலேயே காலத்தைக் கடத்தியவர் எனவே தெரியவருகிறது.
இடையிடையே வந்த திடீர்ஞானப் பெருந்தகைகள்.. அவர்களின் பெயர் நாக நந்தி அடிகள், நந்தி நாக அடிகள் என்றெல்லாம் இருக்கலாம்... தங்களது அதிஞானத்தை புது லேபிள் ஒட்டி, இது புத்தர் சொன்னது, அது யேசு சொன்னது என்றெல்லாம் அடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்போலும். இப்படி நிறையவே வரும் இன்னும் .
@ஏகாந்தன், பெரியவர் ராமன் சொல்லி இருப்பது கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வில்லன் காரக்டராக வரும் புலிகேசியின் இரட்டைச் சகோதரன் ஆன நாகநந்தி அடிகள். :)))))))))
நீக்குஅடியேன் அறியாதவன். வில்லனைத் தெரியாதவன்!
நீக்குநாக நந்தியை மறக்க முடியுமா!!! நாக நந்தி ஏரியில் விழும் சீன் எனக்கு மிகப் பிடிக்கும்:). அதை அப்படியே வரைந்திருப்பார் சந்திரா!!
நீக்குகொண்டைக் கடலை வடை சூப்பர்.
பதிலளிநீக்குகடலைப் பருப்பு வடையை விட கொண்டைக் கடலை வடை மொறு மொறுப்பாக இருக்கும்.
நிறைய செய்யும்போது முன்பெல்லாம் ஊறிய கடலையை உரலில் இடித்து செய்வோம்.
நெல்லைத் தமிழன் கூறியது போல " பொம்மையும் வாய்மையிடத்து என வாழ்தல் சிறந்தது.
முழுமையாக ஆதரிக்கிறேன்.
நீக்குகொண்டக்கடலை வடை - ஆஹா... இங்கேயும் அவ்வப்போது செய்வதுண்டு.
பதிலளிநீக்குமா பாதகம் - சரியான விஷயம். கொஞ்சமாக ஆரம்பித்த பழக்கம் பிறகு போதைக்கு அடிமையாகிப் போன சிலரைப் பார்த்திருக்கிறேன்.
பொய் .பாதகம் செய்யாத வரை நலம். காதலர்களை வாழ வைப்பதில் பொய்க்கு நிறைய சக்தி இருக்கிறது.
பதிலளிநீக்குகொண்டைக்கடலை அறவே ஒத்துக் கொள்வதில்லை. ஏன் என்று காரணம் தெரியாது. சர்க்கரையை ஒதுக்குவதில் பருப்பு வகைகளையும் ஒதுக்கி விடுகிறேன். மது,கள், சாராயம் பொய்யை விடக் கொடியது.
பாதகங்களிலேயே மிகவும் லேசானது பொய் சொல்வது தான் போலிருக்கிறது. பொய், புளுகு என்று இதில் இரண்டு வகை. பொய்க்கும் புளுகுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் ரொம்ப நாள் தெரியாமல் தான் இருந்தேன். கெடுதல் விளைவிப்பது அல்லது தீய நோக்கத்துடன் சொல்லப்படுவது பொய். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாது, இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க வேண்டிய காரணத்துக்காக சொல்லப்படுவது புளுகு.'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' சிறப்பான விளக்கம்.நன்றி ஶ்ரீராம்.
பதிலளிநீக்குபெயர் தவறாகச் சொல்லிவிட்டேன். பதிவிற்கு நன்றி சார்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகொண்டை கடலை வடை நன்றாக இருக்கிறது. படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகொண்டைகடலை அடை, கொடைகடலை தோசை எல்லாம் செய்வேன்.
கொண்டைக்கடலை சாதம், பட்டுராவுக்குச் செய்யும் சனா ஆகியவற்றை விட்டுட்டீங்களே? எனக்கு என்னமோ சுண்டல் தான் ரொம்பப் பிடிக்கும். :))))
நீக்கு
பதிலளிநீக்குமெய் சொல்லல் நல்லதப்பா!
கண்டதைச் சொல்லென்று சொன்னாலும்-நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை உடைத்திட வந்தாலும்-பொருள்
கொண்டுவந்து உன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!
பாரதி தாசன் கவிதை இந்த பாடலை சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய பாட்டு நினைவுக்கு வந்தது.
பள்ளியில், அலுவலகத்தில் விடுமுறை கேட்க உடல் நலம் இல்லை என்றுதான் விடுமுறை கேட்கிறோம். இப்படி நாம் சொல்லும் பொய்யால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் தப்பு இல்லை, நாம் சொல்லும் பொய்யால் பாதிப்பு என்றால் மெளனமாக இருப்பது நல்லது.