advantage cell phone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
advantage cell phone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.1.10

அலைபேசி - சில சௌகரியங்கள்

அலைபேசி வாரத்தை அதனால் ஏற்படும் சௌகரியங்களுடன் ஆரம்பிப்போம்.
இன்றைய பதிவில், ஆரம்ப நாட்களில் வந்த - அடிப்படை அலைபேசி பற்றி 



*அலை பேசியில் பேசும்பொழுது,  இஷ்டத்துக்கு ரீல் விடலாம் -  உதாரணம் : "ஆமாம் சார் நான் இப்போ ஆபீஸ் தான் வந்துகிட்டு இருக்கேன் - டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டு இருக்கேன்". (இதை டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு சொன்னால் கூட பாஸ் நம்பிவிடுவார் - யாருக்குத் தெரியும் - அவர் கூட உங்க சுபாவம் தெரிந்து, டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு 'ஏனையா இன்னும் ஆபீஸ் வரவில்லை?' என்று உங்களைக் கலாய்த்துக் கொண்டிருக்கலாம்!) - 'அப்படியா? டிராபிக் சத்தமே இல்லையே? ' - 'அதான் சொன்னேனே சார் - டிராபிக் ஜாம் - எல்லோரும் எஞ்சின் ஆப பண்ணி வெச்சிட்டாங்க' - நான் ஏ / சி காருக்குள்ள உக்காந்துகிட்டு இருக்கேன் - அதனாலதான் உங்களுக்கு சத்தம் கேட்கலே ... ' அப்பா வரிசையா எவ்வளவு பொய்கள் வாயில வருது! 
-- மேலும் சில :
- ஆமாம் நான் இப்போ கோயம்புத்தூருல தான் இருக்கேன். இது, 'டுப்பு'ன்னு நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டால் - சுலபமாக - 'அடேடே நான் கோயம்பேடுல என்றுதானே சொன்னேன், உனக்கு கோயம்புததூருன்னு கேட்டுச்சா?' 
- அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி  பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம்.  அதற்கு அவர்கள் அயரவில்லை என்றால், 'இப்போ என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் - நான் நிதி அமைச்சகத்துடன் கான்ஃபரன்ஸ்ல இருக்கேன்' என்று சொல்லலாம். - பாத்தீங்களா - ஒரு அலைபேசி இருந்தால் நமக்கு எவ்வளவு கற்பனைத் திறன், ஃபாண்டஸி எல்லாம் வருதுன்னு.
* பிறகு நம் அலைபேசியில், நமக்குப் பிடித்தவர்கள் / பிடிக்காதவர்கள் எல்லோருக்கும் நிக் நேம் கொடுத்து - அதை சேமித்துவைக்கலாம். என்னுடைய அலைபேசியில் - நான்சென்ஸ் 'அ' தொடங்கி, நான்சென்ஸ் தொன்னூற்றொன்பது வரை - நிறைய நம்பர்கள் உள்ளன - தினமும் ஒவ்வொரு நம்பர் இதில் சேர்ந்து கொண்டிருக்கும்!


எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆசிரியர்களின் அலை பேசியில் காணப்பட்ட சில அழைப்பாளர் விவரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவையாவன :
கனவுக் கன்னி.
கிழக் கோட்டான்.
ஜொள்ளு எண் ஒன்று 
ஹூம் பேசித் தொலை.
மிஸ் பண்ணாதே 
டைம் பாஸ்.
கடலை 
ஆயுள் தண்டனை.
ரீல் மாமா 
ராக்ஷஷி 
பேசுடா செல்லம் 
குயில் 
நிக்காதே ஓடு 
அன்புத் தொல்லை 
ரம்பன்   
சொறியன் 
சொறிநாய் 
சோம்பி  
எந்தப் பெயர்கள்  யாருடைய அலைபேசியில் காணப் படுவது என்ற விவரங்களை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறோம்!