திங்கள், 25 ஜனவரி, 2010

அலைபேசி - சில சௌகரியங்கள்

அலைபேசி வாரத்தை அதனால் ஏற்படும் சௌகரியங்களுடன் ஆரம்பிப்போம்.
இன்றைய பதிவில், ஆரம்ப நாட்களில் வந்த - அடிப்படை அலைபேசி பற்றி *அலை பேசியில் பேசும்பொழுது,  இஷ்டத்துக்கு ரீல் விடலாம் -  உதாரணம் : "ஆமாம் சார் நான் இப்போ ஆபீஸ் தான் வந்துகிட்டு இருக்கேன் - டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டு இருக்கேன்". (இதை டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு சொன்னால் கூட பாஸ் நம்பிவிடுவார் - யாருக்குத் தெரியும் - அவர் கூட உங்க சுபாவம் தெரிந்து, டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு 'ஏனையா இன்னும் ஆபீஸ் வரவில்லை?' என்று உங்களைக் கலாய்த்துக் கொண்டிருக்கலாம்!) - 'அப்படியா? டிராபிக் சத்தமே இல்லையே? ' - 'அதான் சொன்னேனே சார் - டிராபிக் ஜாம் - எல்லோரும் எஞ்சின் ஆப பண்ணி வெச்சிட்டாங்க' - நான் ஏ / சி காருக்குள்ள உக்காந்துகிட்டு இருக்கேன் - அதனாலதான் உங்களுக்கு சத்தம் கேட்கலே ... ' அப்பா வரிசையா எவ்வளவு பொய்கள் வாயில வருது! 
-- மேலும் சில :
- ஆமாம் நான் இப்போ கோயம்புத்தூருல தான் இருக்கேன். இது, 'டுப்பு'ன்னு நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டால் - சுலபமாக - 'அடேடே நான் கோயம்பேடுல என்றுதானே சொன்னேன், உனக்கு கோயம்புததூருன்னு கேட்டுச்சா?' 
- அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி  பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம்.  அதற்கு அவர்கள் அயரவில்லை என்றால், 'இப்போ என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் - நான் நிதி அமைச்சகத்துடன் கான்ஃபரன்ஸ்ல இருக்கேன்' என்று சொல்லலாம். - பாத்தீங்களா - ஒரு அலைபேசி இருந்தால் நமக்கு எவ்வளவு கற்பனைத் திறன், ஃபாண்டஸி எல்லாம் வருதுன்னு.
* பிறகு நம் அலைபேசியில், நமக்குப் பிடித்தவர்கள் / பிடிக்காதவர்கள் எல்லோருக்கும் நிக் நேம் கொடுத்து - அதை சேமித்துவைக்கலாம். என்னுடைய அலைபேசியில் - நான்சென்ஸ் 'அ' தொடங்கி, நான்சென்ஸ் தொன்னூற்றொன்பது வரை - நிறைய நம்பர்கள் உள்ளன - தினமும் ஒவ்வொரு நம்பர் இதில் சேர்ந்து கொண்டிருக்கும்!


எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆசிரியர்களின் அலை பேசியில் காணப்பட்ட சில அழைப்பாளர் விவரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவையாவன :
கனவுக் கன்னி.
கிழக் கோட்டான்.
ஜொள்ளு எண் ஒன்று 
ஹூம் பேசித் தொலை.
மிஸ் பண்ணாதே 
டைம் பாஸ்.
கடலை 
ஆயுள் தண்டனை.
ரீல் மாமா 
ராக்ஷஷி 
பேசுடா செல்லம் 
குயில் 
நிக்காதே ஓடு 
அன்புத் தொல்லை 
ரம்பன்   
சொறியன் 
சொறிநாய் 
சோம்பி  
எந்தப் பெயர்கள்  யாருடைய அலைபேசியில் காணப் படுவது என்ற விவரங்களை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறோம்!    

13 கருத்துகள்:

 1. இவ்வளவு சவுகரியங்களா!!
  (இனிமே முடியாது வீடியோ கால் வசதி கொண்ட அலைபேசிகள் வந்திருச்சே...)

  பதிலளிநீக்கு
 2. சை கொ ப சார் - வீடியோ கால் வசதி இருந்தாலும், அதிலே பேசுபவர் எந்தக் காட்சியை ஃபோகஸ் செய்கிறாரோ அதைத்தான் மறு முனையில் இருப்பவர் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. அலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை படித்ததும் அலைபேசியை miss பண்ணுகிறேனே?!

  பதிலளிநீக்கு
 4. முதல் பாரா, காமெடியான உண்மை.

  குஜராத் பூகம்பத்தின் [26th Jan 2001, ooops exactly 9 years back, I was in Gujarat ] போது தரைவழி இணைப்புக்கள் செயலிழந்து, இந்த அலைபெசியைக் கொண்டே எனது உறவினர்களுக்கு என்னால் பேச முடிந்தது. அப்போது அவுட் கோயிங் கால், STD சார்ஜ் தவிர ரூ.8 / நிமிஷம். மேலும் இன்கமிங் சார்ஜ் ரூ.4 / நிமிஷம். [Service provider, 'Cellforce (not cellone)' later it became 'Hutch' now merged & called as 'Vadofone']

  //அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம் //
  இது கொஞ்சம் ஓவராத் தெரியல?

  நூற்றுக் கணக்கான கவசங்களை(அலைபேசியின்) காண்பித்ததற்கு பதிலாக ஒன்றிரண்டு அலைபேசியையே காட்டியிருக்கலாமே.

  பதிலளிநீக்கு
 5. அப்பாதுரை - அலை இல்லாமல் அவ்வளவு நாட்களா !! அதிசய துரையாக இருக்கீங்களே! எங்கள் கையில் அலைபேசி இல்லை என்றால் நேரமே போவதில்லை. அப்போதைக்கப்போது வருகின்ற குறுஞ்செய்திகளை அழித்துக் கொண்டிருந்தால்தான் - எங்களுக்குப் பொழுதே போகிறது!

  பதிலளிநீக்கு
 6. மாதவன் - எனக்குத் தெரிந்த ஒருவர் - சார் லோன் வேண்டுமா என்று அலையில் கேட்ட பெண்ணிடம், 'ஆமாம் - ஐந்து கோடி வேண்டும் என்றார்!'
  மற்றொருவர் அயம் காலிங் ஃபிரம் சிட்டி பேங்க் என்றவுடன் - " என்னம்மா உனக்கு லீவு வேணும்னா உன் மானேஜேர் கிட்ட கேளு, எதுக்கு இப்படி ஜெனெரல் மேனேஜரை எல்லாம் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றே? என்று கேட்டு
  - கால் செய்தவரைத் திகைக்க வைத்தார் !! இது எல்லாம்தான் ஓவர். (ஹி ஹி !!)

  பதிலளிநீக்கு
 7. The bad part of few gujarathis is, though they are the caller (intended to call a particular person), once the line is picked up @ the other end(as soon as 'hello' is heard) they ask 'Kon bolosho' (who is speaking?).. This is completely against the phone-culture that only the receiver first asks who the caller is. It is actually obvious when a person calls another, he knows who he calls for. It is expected from the caller to say who he is and whom he wants talk to.

  I received several wrong calls (& the called asks 'who is speaking?') when I was in Gujarat & got irritated. Though I thought of saying "This is 'PM', 'CM', etc.. but never said so (somehow).

  பதிலளிநீக்கு
 8. //அப்பாதுரை said...
  அலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.//

  I am waiting for a day like that without Blackberry, Blueberry and all berries in my life !! It has become a Kavasham for little over 15 yrs for me now and has become a nuisance.

  நீங்கள் கொடுத்த பெயர்கள் ஊகம் பண்ணிட்டேன் ஆனாலும் வேண்டாம் !! ஆனாலும் எனக்கு "ஜொள்ளு எண் ஒன்று" கொஞ்சம் ஜாஸ்தி தான் !!

  இருந்தாலும் ஏதாவது ஆபத்து காலங்களில் (accident etc) உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள நம்பரில் இருந்து யாரிடம் கூப்பிட்டு சொல்லுவது என்பதை எளிதாக புரிய வைக்க பல வருடங்களுக்கு முன்பு "ICE - In Case of Emergency" என்று போடும்படி ஈமெயில் வரும் ! நான் என் கைத்தொலைபேசியில் அப்படி தான் போட்டு இருக்கின்றேன் !

  எவ்வளவு பேர் இன்னும் ராக்ஷாஷி , கடன்காரன், குடிகாரன், மொள்ளைமாரி, முடிச்சவுக்கி, சாவுகிராக்கி என்று போட்டு வைத்தாலும் - இதையும் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும் !

  பதிலளிநீக்கு
 9. // ஆனாலும் எனக்கு "ஜொள்ளு எண் ஒன்று" கொஞ்சம் ஜாஸ்தி தான் !!
  //
  சாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவர் தவிர மீதி எல்லோரும் சிரிக்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. //எங்கள் said... சாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவர் தவிர மீதி எல்லோரும் சிரிக்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.//

  மஹா ஜொள்ளன் எனக்கு இதில் எவன் இன்னும் போட்டி ?

  உதிரி: ஏ.பி. நாகராஜன் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் !

  பதிலளிநீக்கு
 11. ஒருவேளை - அந்த 'ஜொள்ளு எண் ஒன்று' என்ற அழைப்பாளர் ஐடென்டிடியை அவருடைய அலை பேசியிலிருந்து, ஒற்றறிந்த சொ.நா. எது என்ற சிந்தனையில் சிரிக்காமல் இருக்கிறாரோ என்னவோ? ஆனால் ஒன்று - அவருடைய அலைபேசிக்கோ அல்லது அவருக்கோ சாய்ராமின் அலைபேசி எண் தெரியாது. எனவே அது சாய்ராம் இல்லை நிச்சயமாக.

  பதிலளிநீக்கு
 12. எங்கே என் தோழி மீனு.காணோம்.
  அலை பேசியில் சுகம் சொல்லிடுங்க ஸ்ரீராம் PLS.

  பதிலளிநீக்கு
 13. ஹலோ ஹேமா, நான் இங்கு சுகம், சுகம், பரம சுகம். நன்றி ஹேமா! "மீனு" mail id.-la இதான் என்னுடைய பெயர். பாருங்க, நான் சொல்லாமலே நீங்க தெரிஞ்சுண்டு இருக்கீங்க. இதான் நட்பு!:)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!