எங்கே? எப்படி?
ஒவ்வொன்றாகக் கேளுங்க - சொல்றேன்.
எங்கே?
குரோம்பேட்டை - ஹோட்டல் வசந்த பவன்.
ச்சீ! அங்கியா? இருக்காது. சரி போகட்டும். அடுத்த கேள்வி கேக்கறேன், - எப்போ?
இரண்டு வாரங்களுக்கு முன்னால் -
சான்ஸே இல்லே! ஆனாலும் அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்? - எத்தனை மணிக்கு?
மாலை ஆறு மணிக்கு - நிறைய கூட்டம் இருக்கின்ற வேளையில்
ஊம் ஹூம் - நான் நம்ப மாட்டேன். இருந்தாலும் இதோ அடுத்த கேள்வி. அவர் எப்பிடி இருந்தார் ?
சொன்னா நம்ப மாட்டீங்க - நம்பள மாதிரி சாதாரணமாகத்தான் இருந்தார்!
சான்ஸே இல்லே -- கையில என்ன வெச்சிருந்தார்?
ஒண்ணுமே இல்லை.
யோவ் - போய்யா, போ --- போ ஒ ஒ ஓ !!! (சதா - இதுவே தொழிலா போயிடிச்சு உங்களுக்கெல்லாம்!)
சரி போகட்டும் - இப்போ நீ மாட்டிகிட்டே - எங்கே உட்கார்ந்திருந்தார்?
எனக்குப் பக்கத்திலேதான் - டிபன் ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார்!
அட - அவரு வந்து உங்க கிட்டே - நாந்தான் இட்லி வடைன்னு சொன்னார் - அதையும் நீங்க நம்பிகிட்டு இங்க வந்து கதை விடுகிறீர்?
ஆமாமுங்கோ - அவருதான் இட்லி வடைன்னு ஒத்துகிட்டாரு!
உங்க கிட்டயா?
இல்லைங்க - சர்வர் கிட்டக்க !
எப்பிடி?
அந்த சர்வர் - நான் கேட்ட ஆனியன் ரவாவை - என்னிடம் கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு, 'சார் நீங்க ஆனியன் ரவாதானே கேட்டீங்க?' என்றார்.
நான் "ஆமாம்" என்றேன்.
"ஆமாம் - ஹோட்டல்ல ஆனியன் ரவா கேட்காம ஆனைக் குட்டியா கேட்பாங்க? அப்புறம்?"
அந்த சர்வர், எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்து, " சார், நீங்க இட்லி வடைதானே?" என்று கேட்டார்.
அந்த மனிதரும், "ஆமாம் " என்று ஒப்புக்கொண்டார்.

(பாத்தீங்களா - நான் சொல்லலை? அவரே இட்லி வடை என்று ஒப்புக்கொண்டுவிட்டார்!)
சர்வர், "சாரி சார் - வடை ரெடியாக கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" என்று சொல்லி, அதன் பிறகு இட்லி வடை கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தார். சர்வர் கொண்டு வந்து வைத்த இட்லி வடையை அவர் ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
ஓஹோ - சர்வர் கொண்டு வந்து வெச்ச இட்லி வடையை அவரு சாப்பிட்டாரா? - இப்போ நாங்க உன் முதுகுல வெக்கறதை நீ சாப்பிடுன்னு என்னைத் துரத்தத் தயாராகும் ருசிகர்களே - காலண்டரைப் பார்த்து மன்னியுங்க, மனச் சாந்தி பெறுங்க!.