வியாழன், 1 ஏப்ரல், 2010

கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன்!

இட்லி வடையைக் கண்டு பிடிச்சேன்!
எங்கே? எப்படி?
ஒவ்வொன்றாகக் கேளுங்க - சொல்றேன்.
எங்கே?
குரோம்பேட்டை - ஹோட்டல் வசந்த பவன்.
ச்சீ! அங்கியா? இருக்காது. சரி போகட்டும். அடுத்த கேள்வி கேக்கறேன், - எப்போ?
இரண்டு வாரங்களுக்கு முன்னால் -
சான்ஸே இல்லே! ஆனாலும் அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்? - எத்தனை மணிக்கு?
மாலை ஆறு மணிக்கு - நிறைய கூட்டம் இருக்கின்ற வேளையில்
ஊம் ஹூம் - நான் நம்ப மாட்டேன். இருந்தாலும் இதோ அடுத்த கேள்வி. அவர் எப்பிடி இருந்தார் ?
சொன்னா நம்ப மாட்டீங்க - நம்பள மாதிரி சாதாரணமாகத்தான் இருந்தார்!
சான்ஸே இல்லே -- கையில என்ன வெச்சிருந்தார்?
ஒண்ணுமே இல்லை.
யோவ் - போய்யா, போ --- போ ஒ ஒ ஓ !!!  (சதா - இதுவே தொழிலா போயிடிச்சு உங்களுக்கெல்லாம்!)
சரி போகட்டும் - இப்போ நீ மாட்டிகிட்டே - எங்கே உட்கார்ந்திருந்தார்?
எனக்குப் பக்கத்திலேதான் - டிபன் ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார்!
அட - அவரு வந்து உங்க கிட்டே - நாந்தான் இட்லி வடைன்னு சொன்னார் - அதையும் நீங்க நம்பிகிட்டு இங்க வந்து கதை விடுகிறீர்?
ஆமாமுங்கோ - அவருதான் இட்லி வடைன்னு ஒத்துகிட்டாரு!
உங்க கிட்டயா?
இல்லைங்க - சர்வர் கிட்டக்க !
எப்பிடி?
அந்த சர்வர் - நான் கேட்ட ஆனியன் ரவாவை - என்னிடம் கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு, 'சார் நீங்க ஆனியன் ரவாதானே கேட்டீங்க?' என்றார். 

நான் "ஆமாம்" என்றேன்.
"ஆமாம் - ஹோட்டல்ல ஆனியன் ரவா கேட்காம ஆனைக் குட்டியா கேட்பாங்க? அப்புறம்?"
அந்த சர்வர், எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப்  பார்த்து, " சார், நீங்க இட்லி வடைதானே?" என்று கேட்டார்.
அந்த மனிதரும், "ஆமாம் " என்று ஒப்புக்கொண்டார்.
(பாத்தீங்களா - நான் சொல்லலை? அவரே இட்லி வடை என்று ஒப்புக்கொண்டுவிட்டார்!)
சர்வர், "சாரி சார் - வடை ரெடியாக கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" என்று சொல்லி, அதன் பிறகு இட்லி வடை கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தார். சர்வர் கொண்டு வந்து வைத்த இட்லி வடையை அவர் ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
ஓஹோ - சர்வர் கொண்டு வந்து வெச்ச இட்லி வடையை அவரு சாப்பிட்டாரா? - இப்போ நாங்க உன் முதுகுல வெக்கறதை நீ சாப்பிடுன்னு என்னைத் துரத்தத் தயாராகும் ருசிகர்களே - காலண்டரைப் பார்த்து மன்னியுங்க, மனச் சாந்தி பெறுங்க!. 

15 கருத்துகள்:

  1. ஐயா, நான் ஏமாறலைங்கோ! இன்னிக்கு தேதியை மாத்தும்போதே தெரியாத்தனமா (நல்லதா போச்சு) ரெண்டா கிழிச்சுட்டேன். அதனால உஷார் ஆயிடேங்கோ!

    பதிலளிநீக்கு
  2. ஆகா இவர் எப்போ இங்கே வந்து படுத்துக் கொண்டாரு ?

    பதிலளிநீக்கு
  3. //ஐயா, நான் ஏமாறலைங்கோ! இன்னிக்கு தேதியை மாத்தும்போதே தெரியாத்தனமா (நல்லதா போச்சு) ரெண்டா கிழிச்சுட்டேன். அதனால உஷார் ஆயிடேங்கோ//

    மீனாக்ஷி எங்களை மாதிரி இல்லாமல் நீங்கள் காலண்டராவது கிழிப்பது கேட்டு மகிழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்1 ஏப்ரல், 2010 அன்று 9:45 AM

    பாஸ்கரன் - அந்த சிவப்பு சட்டை நபர்தான் இட்லிவடை என்று சொல்லாமல் விட்டார்களே 'எங்கள்' மக்கள். அதுக்கு சந்தோஷப்படுங்க.

    பதிலளிநீக்கு
  5. இட்லி, வடை -- ரெண்டு பேருங்க.. நீங்க ஒருத்தர சொல்லுறதுலையே 'உடான்சுன்னு' தெரியாதா..?

    பதிலளிநீக்கு
  6. 'நீங்க போண்டா தானே' என்று என்னை யாராவது கேட்டால் உடனே எழுந்து ட்ரெட் மில்லைப் பார்க்கப் போய் விடுவேன்.

    'நீங்க சாம்பார் வடையா' என்றால் என்னய்யா கிண்டலா என்பேன்.

    நீங்க இட்லி வடையா என்று கேட்டால் அந்த நாளில் என் நண்பர் குழாத்தில் சிலருக்குக் கோபம் வந்து விடும். ஏன்? விடுங்க. அது சுஜாதாவோட ரத்தக்கறை படிந்த கர்சீப் போல கொஞ்சம் விவகாரமான விசயம்.

    வசந்த் பவன் எங்கே இருக்கிறது குரோம்பேட்டையில்?

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை சார், வசந்த் பவன், குரோம்பேட்டை ஜி எஸ் டி ரோடில், மேம்பாலத்திற்கு அருகே, ஆனந்தா திருமண மண்டபத்திற்கு நேரே உள்ளது என்று கூறுகிறார் பதிவாசிரியர்.

    பதிலளிநீக்கு
  8. "நான் ஒரு முட்டாளுங்க - நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க'.

    எதாவது ஒரு நாள் முட்டாளாய் ஏமாற்றபட்டால் கவலை படவேண்டும். அரசியல் வாதிகள் முதல் ஆன்மிக வாதிகள் வரை; அடுக்குளை முதல் அலுவலகம் வரை; நிதி நிறுவனம் முதல் நித்யஆனந்தம் வரை ("ஐயோ வடை போச்சே" மாதிரி - "ஐயோ ரஞ்சிதா போச்சே" என்று என்னை பொலம்ப வைத்ததால் !!); சரி சரி விடுங்க. மதியம் பசிக்குது நியூயார்க் நகரில் இட்லி வடையை தேடி போறேன். வ்வர்ட்டா !

    பதிலளிநீக்கு
  9. கொத்து பரோட்டா பக்கத்தில உட்கார்ந்திருந்தாரே பார்க்கலையா.

    பதிலளிநீக்கு
  10. //மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

    கொத்து பரோட்டா பக்கத்தில உட்கார்ந்திருந்தாரே பார்க்கலையா.//

    சாரி சார், நான் அழகான பெண்களை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன்.

    நேற்று வேறே எங்கள் ஊரில் 22 டிகிரி செல்சியஸ் - அவ அவ போட்ட (போடாத) டிரஸ் பார்க்கவே கண்ணு ரெண்டு பத்தலை. கொத்தாவது - பரோட்டாவது !! ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  11. நன்றி மீனாக்ஷி,

    நன்றி பாஸ்கரன்,

    நன்றி k_rangan,

    மீண்டும் நன்றி மீனாக்ஷி,

    நன்றி சைவக்கொத்துபரோட்டா,

    நன்றி குரோம்பேட்டைக் குறும்பன்,

    நன்றி மாதவன்,

    நன்றி அப்பாதுரை,

    நன்றி சாய்ராம்,

    நன்றி மணி(ஆயிரத்தில் ஒருவன்)

    பதிலளிநீக்கு
  12. very nice post..

    naanga yaarum nambala ;P

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!