அறிவு வந்தவுடனேயே வழக்கம் போல் கூ[ட்]டம் களை கட்டியது.
"மாமா அந்த சி டி ல இருந்த திவலைகள் விஷம் என்று எல்லோரும் சொல்கிறார்களே..." என்று எல்லோரும் ஒரே குரலில் கேட்க, அறிவு "இன்னும் எனக்கு எதுவும் வயிற்று வலியோ அல்லது வயிற்றுப் போக்கோ வரவில்லை என்பதிலிருந்து என்ன தெரிகிறது?" என்று கேட்டு விட்டுப் பதிலை எதிர் பாராமலே தொடர்ந்தார். "இப்போ அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சறோம். எல்லாமுமா ஆவியாகிப் போய்விடுகிறது? முதலில் தண்ணீர் மட்டும் தான் ஆவியாகிறது. அது போல் அல்லெத்ரின் கலந்த பாரஃபின் ஆயில் ஆவியாகும் பொழுது தனித்தனியாகப் பிரிந்து திவலைகள் ஆகும். அப்போ ஆயில் மட்டும் தனியே செட்டில் ஆகிற மாதிரிதான் எனக்குத் தெரிகிறது. நுனி நாக்கில் தொட்டுப் பார்த்தது அதில் ஏதேனும் ருசி தெரிகிறதா என்று பார்க்கும் குரங்கு புத்திதான். இன்னொன்று பார்த்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் நாற்காலிகளில் காலையில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் ஆனவுடன் நம் முழங்கைக்குக் கீழ் நமைச்சல் எடுக்கும். கூர்ந்து பார்த்தால் சின்ன சிவப்புப் புள்ளிகள் ஒன்று அல்லது மேற்பட்ட நேர்க்கோடுகளில் தெரியும். இது கூட கொசு விரட்டித் திரவம் செட்டில் ஆவதால் வருவது தான்.
ஆகையால், குழந்தைகளோ, பெரியவர்களோ, விளையாட்டோ, வேலையோ எதில் ஈடு பட்டிருந்தாலும் கையைக் கொண்டு முகம் துடைப்பது கூட நல்லதல்ல. முகத்திலோ வாயிலோ விரலை வைக்காமல் இருந்து, சாப்பிடப் போகும் முன் கட்டாயம் கையை சோப்புப் போட்டுக் கழுவுதல் நல்லது." என்றார். நாமும் கை கழுவ விரைந்தோம்.