Saturday, April 3, 2010

கொசு விரட்டி (உபத்) திரவம்.

றிவு வந்தவுடனேயே வழக்கம் போல் கூ[ட்]டம் களை கட்டியது.

"மாமா அந்த சி டி ல இருந்த திவலைகள் விஷம் என்று எல்லோரும் சொல்கிறார்களே..." என்று எல்லோரும் ஒரே குரலில் கேட்க, அறிவு "இன்னும் எனக்கு எதுவும் வயிற்று வலியோ அல்லது வயிற்றுப் போக்கோ வரவில்லை என்பதிலிருந்து என்ன தெரிகிறது?" என்று கேட்டு விட்டுப் பதிலை எதிர் பாராமலே தொடர்ந்தார்.  "இப்போ அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சறோம். எல்லாமுமா ஆவியாகிப் போய்விடுகிறது? முதலில் தண்ணீர் மட்டும் தான் ஆவியாகிறது. அது போல் அல்லெத்ரின் கலந்த பாரஃபின் ஆயில் ஆவியாகும் பொழுது தனித்தனியாகப் பிரிந்து திவலைகள் ஆகும். அப்போ ஆயில் மட்டும் தனியே செட்டில் ஆகிற மாதிரிதான் எனக்குத் தெரிகிறது.  நுனி நாக்கில் தொட்டுப் பார்த்தது அதில் ஏதேனும் ருசி தெரிகிறதா என்று பார்க்கும் குரங்கு புத்திதான்.  இன்னொன்று பார்த்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் நாற்காலிகளில் காலையில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் ஆனவுடன் நம் முழங்கைக்குக் கீழ் நமைச்சல் எடுக்கும். கூர்ந்து பார்த்தால் சின்ன சிவப்புப் புள்ளிகள் ஒன்று அல்லது மேற்பட்ட நேர்க்கோடுகளில் தெரியும். இது கூட கொசு விரட்டித் திரவம் செட்டில் ஆவதால் வருவது தான்.

ஆகையால், குழந்தைகளோ, பெரியவர்களோ, விளையாட்டோ, வேலையோ எதில் ஈடு பட்டிருந்தாலும் கையைக் கொண்டு முகம் துடைப்பது கூட நல்லதல்ல. முகத்திலோ வாயிலோ விரலை வைக்காமல் இருந்து, சாப்பிடப் போகும் முன் கட்டாயம் கையை சோப்புப் போட்டுக் கழுவுதல் நல்லது." என்றார். நாமும் கை கழுவ விரைந்தோம்.  

14 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நானும் கை கழுவிட்டுத்தான்
சாப்பிடுவேன் மாமா.

Chitra said...

ஒரு கொசுவத்தி திரவம் - எத்தனை பதிவுகளில் படிந்து இருக்கிறது? ஹா,ஹா,ஹா,ஹா....
நல்ல பகிர்வுங்க! :-)

தமிழ் உதயம் said...

சளி பிடிக்கும் போது மூச்சு திணறல் ஏற்படும் குழந்தைகளுக்கு இந்த "கொசு விரட்டி (உபத்) திரவம்." தான்

வானம்பாடிகள் said...

அசல் கொசுவத்திப் பதிவு

LK said...

nalla tagaval. tagavalukku nandri

Anonymous said...

கொசுவை நாம பதிலுக்கு கடிச்சமுணு அந்தக்காலத்துலயே பழக்கப்பட்டிருந்தா இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லாம போயிருக்கும்.

எங்கள் said...

சித்ரா, இவ்வளவு பதிவுல கொசுவிரட்டி வந்தும் கூட இன்னும் கொசுக்கடி தாங்க முடியலை...

வாங்க தமிழுதயம், இந்த உப திரவம் நீங்க சொல்றது போல உபத்திரவம்தான்.

நன்றி வானம்பாடிகள்.

LK வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

அனானி, இந்த கருத்தை பதிவுலயே சேர்க்கலாம் போல இருக்கே...

எங்கள் said...

வாங்க சைவக்கொத்துபரோட்டா, நல்ல பழக்கம்தான் மாமா.

Anonymous said...

அறிவு வந்தால் கூடம் என்ன முகத்திலேயே ஒரு களை வரும் என்பர்

ஹுஸைனம்மா said...

விவரங்களுக்கு நன்றி.

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்,
கொசு கொல்லும் திரவம் எவ்வளவு விஷமானது என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் .இருந்தாலும் அதைதான் உபயோகிக்க வேண்டியது ??
நான் முளுக்க முளுக்க மூலிகை கொண்டு கொசு விரட்டி தயார் செயிதுள்ளேன் இதை கொண்டு கண்டுபிடிபளரர்களை உக்குவிக்கும் நிறுவனம் உள்ளது அவர்களிடம் சொல்லி இதை தயார் செய உதவுங்கள் அல்லது இதன் உரிமை யாருக்காவது விற்று தாருங்கள் என்றால் நம்மை மேலும் கீழும் பார்த்து மூலிகை பெட்ரோல் ராமருக்கு கிடைத்த மரியாதை கொடுத்து அனுப்பிவிடுவார்கள் ..இவளவுக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் கோடி கொட்டி தெனிந்தியாவில் இது போன்ற கண்டுபிடிப்புகள் கிடைக்கும் என்று வேறு பெருமை??? ஒரு கண்டுபிடிப்பு by me and my friend.. இருசக்கர வாகனத்துக்கு வண்டி நிறுthதியபின்பும் விளக்கு எரிய ஒரு கருவி ...!!!நீங்க இவ்வளவு உயர்ந்த பொருள் கண்டுபிடிகாதீங்க சும்மா சிரிதா கண்டுபிடிங்க !!!!! இன்னும் பழம் பறிக்க, கழை எடுக்க வீடு சுத்தம் செய ,....இதைவிட பெரிய கொடுமை..... ரயில்வே ஸ்டேசனில் ஏற்படும் மலகழிவு ஏற்படாமல் இருக்க ஒரு கருவி முழுக்க தானியங்கி ...சரின்னு ரயில்வே அமைச்சகத்துக்கு மெயில் அனுப்பி மூன்று மாதம் ஆகிறது ( மிகவும் எளிதானது தயரிக்க செலவு கம்மி பொறுத்த எளிதானது ??? )நமது தேசம் முன்னேற்ற பாதயில் போகிறது ???? எதோ என் ஆற்றாமை கொட்டிட்டேன் பொருதுகொள்க !!!

எங்கள் said...

//எதோ என் ஆற்றாமை கொட்டிட்டேன் //

உழைத்த பயனைக் கொட்டி வீணடிக்காதீர்கள் தொலை பேசி, ஜிப், கணினி எல்லாவற்றுக்கும் சொற்ப வரவேற்பு தான் முதலில். பெரிய அளவில் செய்ய ஆவல் இருந்தாலும் சிறிய அளவில் முதலில் தொடங்கி, உங்கள் ஊரிலோ அல்லது எங்கள் ஊரிலோ அதை முதலில் பரிச்சயம் படுத்துங்கள். எந்த மரமும் முளைக்கும் பொழுது இரண்டு இலைதான் முதலில் என்பதை நினைவில் கொண்டு செயல் படுங்கள்.

ஹுஸைனம்மா said...

//எந்த மரமும் முளைக்கும் பொழுது இரண்டு இலைதான் முதலில் //

அருமையான உதாரணம் சார். நானும் இவ்வாறே நினைத்தேன்.

எல்லா மக்களும், வேறு வழி தெரியாததாலேயே இந்த கொசுவிரட்டித் திரவங்களின் பின் செல்கிறோம். உண்மையிலேயே பயனளிக்கும், அதுவும் விலைகுறைவாக, இயற்கை கொசுவிரட்டி கிடைக்குமெனில், நிச்சயம் பயன்படுத்துவர். ஆரம்பகால சிரமங்கள் எல்லாவற்றிலும் இருக்கத்தானே செய்யும்.

சற்றே சிரமப்பட்டு முயற்சி எடுத்தால், எங்களை இத்திரவங்களின் பாதிப்பிலிருந்து காத்த புண்ணியமும் கிடைக்கும்.

(வயதில் பெரியவராக இருக்கிறீர்கள், நான் அறிவுரை கூறுவதாக நினைக்க வேண்டாம். ஒரு ஆதங்கமே.)

hamaragana said...

அன்புடன் சகோதரி ஹுசைனம்மவுக்கு ஒரு விபரம் கூறுவதில் பெரியவன் சிறயவன் என்ற பேதம் இல்லை .... நீங்கள் கூறியது பொன்மொழிகள் ...சகோதரி மட்டுமல்ல ..மேலும் சில நண்பர்களும் இது போன்ற ஐடியா கொடுத்துள்ளனர் எனது நண்பர்NIBARRA COSMETICS., தயாரிப்பாளர் அவர் இதை மார்க்கெட் செய உதவுகிறேன் என்றுள்ளார் இறைவன் சித்தம் ....தங்களுக்கு எனது நன்றிகள் ...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!