கவாஸ்கர், ரிச்சர்ட்ஸ் என்று பழைய கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் அவர்களின் ஸ்டைல்களையும் அறிந்தவர்களா நீங்கள்? அப்போது நிச்சயம் இந்த வீடியோவை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
11.10.13
வெள்ளிக்கிழமை வீடியோ 131011 - கிரிக்கெட் மிமிக்ரி
கவாஸ்கர், ரிச்சர்ட்ஸ் என்று பழைய கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் அவர்களின் ஸ்டைல்களையும் அறிந்தவர்களா நீங்கள்? அப்போது நிச்சயம் இந்த வீடியோவை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்.
9.10.13
உறவு என்றொரு சொல்லிருந்தால்...
வாழ்க்கையில் கடினமான முடிவுகள் எடுப்பது என்பது சோதனைக் காலம். ஆனால் சில முடிவுகள் சட்டென்று எடுக்கப்பட்டும் விடுகின்றன.
சில பிரிவுகள் வேதனையைத் தொடர்ந்து கொடுப்பதும் உண்டு. சில பிரிவுகள் சந்தோஷத்தைத் தருவதும் உண்டு. ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது என்பது பழமொழி.
சில பிரிவுகள் வேதனையைத் தொடர்ந்து கொடுப்பதும் உண்டு. சில பிரிவுகள் சந்தோஷத்தைத் தருவதும் உண்டு. ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது என்பது பழமொழி.
பதினெட்டு வருடப் பழக்கம். சரியாக ஒரு ஜனவரியில் எங்களுடன் இணைந்த சொந்தம்.
பிரிவதென்பது எளிதானதா என்ன? அதுவும் நிரந்தரப் பிரிவு....
இணைந்த நாளில் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. 'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்பார்கள். ஆனால் இங்கு....
இணைந்த நாளில் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. 'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்பார்கள். ஆனால் இங்கு....
13 வருடங்கள், 9 மாதங்கள்...
விட்டுப்
பிரிய முடியாமல் போன பந்தம். ஒருநாள் பார்க்காவிட்டாலும்
பைத்தியமாகிவிடும் மனம். எல்லோருக்கும் அமையும் சொந்தம்தான். எல்லார்
வீட்டிலும் அனுபவிக்கும் இன்பம்தான். எங்கள் வீட்டிலும் கிடைத்த சுகம்.
வெளியில் சென்று தேடிக் கொண்டிருந்த சுகங்களை முதன்முதலாக வீட்டுக்குள்ளேயே அள்ளித்தந்த சொந்தம்.
வெளியில் சென்று தேடிக் கொண்டிருந்த சுகங்களை முதன்முதலாக வீட்டுக்குள்ளேயே அள்ளித்தந்த சொந்தம்.
அப்படிப்பட்ட
சொந்தம் கடந்த ஞாயிறன்று எங்களை விட்டுப் பிரிந்தது. பிரிந்தது என்று
சொல்வதைவிட எங்களால் பிரிக்கப் பட்டது என்று கூடச் சொல்லலாம்.
இந்த நிலைக்கு உண்மையில் நாங்கள் காரணமல்ல. நாங்கள் சபல புத்தி கொண்டவர்களும் அல்ல.
இந்த நிலைக்கு உண்மையில் நாங்கள் காரணமல்ல. நாங்கள் சபல புத்தி கொண்டவர்களும் அல்ல.
எந்த விஷயத்துக்கும் அதற்கேயுரிய பெருமைகள் உண்டு. 95 ஜனவரியில் இந்தச் சொந்தம் எங்களுடன் இணைந்த போது நாங்கள் மகிழ்ச்சிக் கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை. சுற்றுப்புற நட்புகளின் இணைந்த வாழ்த்துகளுடன் எங்கள் உறவுப்பாலம் தொடங்கியது இனிமையாக.
ஆரம்பத்தில்
இருக்கும் சலனங்கள் இருக்கத்தான் செய்தன. நாட்பட நாட்பட சலனக் கோடுகள்
மறைந்து தெளிவானது. அப்புறம் நாங்கள் பெற்ற சந்தோஷங்கள் அளவிட
முடியாதவைதான்.
நாட்கள் ஓடியது தெரியவில்லை. கணக்கு பார்க்காமலேயே வருடங்கள் ஓடின.
இசைபட வாழ்ந்தோம்.
எந்த சந்தோஷங்களுக்கும் எல்லை இருக்கிறது என்பது தெரியாமல் போயிற்று. சமீப காலங்களில் இந்தச் சொந்தத்தின் குணங்கள் மாறின. நிறைய குரங்கு குணங்கள் வந்தன. சொல்பேச்சு கேளாமை பழக்கமானது. எவ்வளவோ திருத்த முயற்சித்தும் முடியாமல் போனது. எங்களின் வேண்டுதலின் பேரில் சரிபண்ண நினைத்தவர்கள் தோற்றுப் போனார்கள். சில விஷயங்கள் அவர்களின் கை மீறியதாக இருந்ததும் ஒரு காரணம்.
அதனாலோ என்னவோ எங்களின் முறையீடுகளும் அலட்சியபடுத்தப்பட,
அப்போதுதான்
அந்தக் கடினமான முடிவை எடுத்தோம். பழகிய சொந்தத்தைத் துறந்து புதிய சொந்தம்
தேட முடிவெடுத்து விட்டோம். மறுபடி சொல்கிறேன். எங்களை சபல புத்தி
கொண்டவர்கள் என்று எண்ணி விடாதீர்கள். ஆயினும் எளிதில் நிகழவில்லை அது.
பொருத்தம் பார்த்து, ஒத்து வருமா என்று பார்த்து, கடந்த ஞாயிறு அன்று புதிய
சொந்தம் முடிவு செய்ததோடு, பழைய இந்தச் சொந்தத்தை வெட்டியும் விட்டோம்.
புதிய சொந்தம் பழகுவதற்கு இளமையாய், இனிமையாய், புதிய சந்தோஷங்களை பற்பல வகைகளில் தருகிறது. பழகிய பிறகு தெரியலாம் இதன் குறைகள்.
புதிய சொந்தம் பழகுவதற்கு இளமையாய், இனிமையாய், புதிய சந்தோஷங்களை பற்பல வகைகளில் தருகிறது. பழகிய பிறகு தெரியலாம் இதன் குறைகள்.
வெட்டியதன் மிச்சங்கள் ஜன்னலிலும், மொட்டை மாடியிலும் பழைய இனிமை நினைவுகளின் எச்சங்களாய்..
95 ஜனவரியிலிருந்து நாங்கள் வைத்திருந்த அனலாக் கேபிளைக் 'கட்' செய்து விட்டு 'வீடியோகான் டிஷ்' டிவிக்கு மாறி விட்டோம்.
[குழப்பம் தாங்காமல் கடைசி வரியை முதலிலேயே படித்தவர்களை சுஜாதாவின் பசித்த புலி தின்னட்டும்]
7.10.13
சில பழைய நினைவுகள்
"கோலமாவு" என்று கூவிக் கொண்டு போன வியாபாரியின் குரல் சில பழைய வியாபாரக் குரல்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.
70
களில் திருவாரூர் ரயில் நிலையத்தில் அதிக வயதான ஒரு மனிதர் தோள்பட்டையின்
பின்புறம், அல்லது பின் கழுத்தில் கூடையைச் சுமந்து "வடை வடை முறுக்கு"
(சொல்லும்போது "வட வட முறுக்கு") என்று விற்றுக் கொண்டே போன கம்மிய குரல்.
தஞ்சையில்
70 களில் காய்கறி விற்கும் ஒரு பெண்மணி "கோய்கறி" என்று ஒற்றை
வார்த்தையில் விற்றுக் கொண்டு வருவார்! வலது கை முட்டி வளைந்த ஒரு வியாபாரி
காய்கறியும் விற்பார், கருவாடும் விற்பார், ஒன்றும் குரல் கொடுக்காமலேயே
தாண்டிச் செல்வார்! அவரிடம் காய்கறி வாங்கத் தொடங்கிய என் அம்மா, அவர்
கருவாடும் விற்பார் என்று தெரிந்தபின் அவரிடம் காய்கறி வாங்குவதைத்
தவிர்த்து விட்டார்!
"ஆங்க்ரீவாலயா நானாஹாதாயிலா நாய்னா
மூய்னா சாம்பில் பாபுஜியா...பாரனபா " என்று நீளமாகச் சொல்லிக் கொண்டு வரும்
வியாபாரி விற்றது என்ன தெரியுமா? சோன்பப்படி. இப்போது கிடைக்கும் 'ஹல்டிராம் சோன்பப்டி' போல இல்லை இது.
இன்றும் இதை கே ஜி
கெளதமனும் அவர் அண்ணனும் அதே ராகத்தில் சொல்வார்கள். இதை விசுமாமாவிடம் சொல்லச்
சொல்லி ரெகார்ட் கூடச் செய்து வைத்திருந்தேன். காணாமல் போய் விட்டது! இதைப் படித்துப் பார்ப்பதைவிட, அவர்கள் சொல்லிக் கேட்பது சுவாரஸ்யமாய் இருக்கும்!
இதையே தஞ்சைப் பக்கங்களில் "பம்பே (பாம்பே) மிட்டாய்" என்று கூண்டு போலக் கண்ணாடி மூடிய வண்டிகளில்
கோவில்மணி போல மணியடித்துக் கொண்டே வருவார்கள். அது தனி ருசி. 50
பைசாவுக்கு சலூனில் கீழே கொட்டிக் கிடக்கும் முடி போல (அதுவும்
நரைத்தமுடி!) பேப்பரில் கட்டித் தருவார்கள்!
"சர்க்கும்த்ம்வென்மாகும்தம்" என்று திருச்சி பஸ் நிலையத்தில் அருகில் வந்து அடிக்குரலில் உறுமுபவர் கேட்பது "சார்... குமுதம் வேணுமா குமுதம்..."
நாகையில் "குடைகள் பழுது பார்ப்பது குடை ரிப்பேர்" ஒரு ராகமாக டெஃபனிஷன் கொடுப்பது போல வருவாராம் குடை ரிப்பேர்க்காரர் . வீட்டுக்குள் இருக்கும் கே ஜி ஜி குறிப்பிட்ட இடைவெளியில், அவர் ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்குமுன் "குடை ரிப்பேர் என்றால் என்ன?" என்று கேட்பதும், அதற்கு பதில் சொல்வது போல வியாபாரி தெருவில் இந்த வரியைப் பேசுவதும் வேடிக்கையாக இருக்குமாம். இந்த வியாபாரியின் குரலையும் கே ஜி பிரதர்ஸ் இப்போதும் அதே ராகத்தில் சொல்லிக் காட்டுவார்கள்!
சில
பேர் என்ன விற்கிறார்கள் என்று வெளியில் சென்று பார்த்தால்தான் தெரியும்.
சிலசமயம் அருகில் சென்று நிறுத்தி என்ன என்று பார்த்தால்தான் தெரியும்! கவுண்டமணி-செந்தில்-புளி வியாபாரி ஜோக்
நினைவிருக்கிறதா?
மதுரையில் "புவனேஸ்வரி ஆண்டாள் ஸ்நான
மஞ்சள்தூள், வாசனைப்பொடி..." என்று சிறிய குரலில் சொல்லி வரும் பெரியவர்
பற்றி 'சந்தோஷங்கள்' பதிவில் சொல்லியிருந்தேன்!
"அம்மா...பூவு"
என்று பூ விற்கும் பாட்டி, அம்மாவுக்கும் பூவுக்கும் நடுவில் விடும்
குழைவு, 'பூவு' சொல்லும்போது ஒரு ராகம்! "மல்லீயப்" என்று ஷார்ட்டாக
மல்லிகைப்பூ விற்கும் பெண்மணி...
பிரெட், பன், பிஸ்கட்
வகையறாக்கள் விற்றுக் கொண்டு வருவார் ஒருவர். அவற்றை ஒரு கண்ணாடி மூடிய
வண்டியில் வைத்து 'டிங் டிங்' என்று பெல் அடித்தபடியே வருவார்.
எங்கள்
செல்லம் மோதி அந்தச் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே டென்ஷன் ஆகிவிடும்.
வாசலுக்கு ஓடும். வண்டி எங்கு வருகிறது என்று பார்க்கும். உள்ளே ஓடிவந்து
நம்மிடம் செய்தி சொல்வது போல பரபரப்பாய் நின்று, வாலாட்டி, மேலே ஏறி நின்று குழைவான குரலில் சத்தமெழுப்பி, சிறிய சிறிய குரைப்புகளாக குரைத்தபடி தன் விருப்பம் சொல்லும்!
வண்டி தாண்டிச் செல்லும் நிலை வந்து விட்டால் வண்டிக்குக் குறுக்கே ஓடி வழிமறித்து நின்று, நிறுத்தி விட்டு செல்லமாய், அல்லது வேண்டுதலாய்க் குரைத்துக் கொண்டே உள்ளே எங்களிடம் வந்து விருப்பம் சொல்லும் அழகு கண்ணிலேயே நிற்கிறது.
வண்டிக்காரருக்கும் இது புரியும். வியாபாரம் நடக்குமா என்று காத்திருப்பார். இப்படிக் கேட்கும் மோதியை ஏமாற்ற முடியுமா? செலவுதான்!
வண்டி தாண்டிச் செல்லும் நிலை வந்து விட்டால் வண்டிக்குக் குறுக்கே ஓடி வழிமறித்து நின்று, நிறுத்தி விட்டு செல்லமாய், அல்லது வேண்டுதலாய்க் குரைத்துக் கொண்டே உள்ளே எங்களிடம் வந்து விருப்பம் சொல்லும் அழகு கண்ணிலேயே நிற்கிறது.
வண்டிக்காரருக்கும் இது புரியும். வியாபாரம் நடக்குமா என்று காத்திருப்பார். இப்படிக் கேட்கும் மோதியை ஏமாற்ற முடியுமா? செலவுதான்!
6.10.13
5.10.13
சென்ற வார நல்ல செய்திகள்...
1) ஏழை தச்சுத் தொழிலாளி சாலையில் தவறவிட்ட 50,000 ரூபாயை கண்டெடுத்து காவல்துறையில் ஒப்படைத்த சென்னை, அயனாவரம் டெய்லர், அப்துல் முஸ்தாக்.
2) இந்த கண்டுபிடிப்புகள் நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என்று
(இப்போது) தெரியா விட்டாலும் இது மாதிரி கண்டுபிடிப்பு ஒன்றை
நிகழ்த்தியிருக்கும் மாணவனைப் பாராட்டலாம்! தண்ணீரில் இயங்கும் பைக், மற்றும் சோலார் சைக்கிள்.3) தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா பற்றி தமிழ் இந்து செய்தி.மரங்களை சக உயிரியாகவே நினைக்கிறார். அவற்றோடு பேசுவாராம்.
4) சட்டைக்குள் கருணை. ரயிலில் அடிபட்டு இறக்கும் அன்கிளேயிம்ட் உடல்களை சிரத்தை எடுத்து,சகல 'காரியங்களுடன்' அடக்கம் செய்வது, வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர் சிறுமிகளை அவரவர் வீட்டில் ஒப்படைப்பது என்று மனிதம் நிறை ரயில்வே காவலர் சுப்புராஜ் பற்றி தினமலரில்
5) தன்னம்பிக்கை மனிதர் சேலம் எஞ்சினியர் சிவானந்தம்.
6) 'வாஷ்பேசி'னிலிருந்து வீணாகும் கழிவுநீரை, குறைந்தபட்ச மறுசுழற்சி மூலமே நன்னீராக மாற்றி, மீண்டும் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்த மாணவர். இதை எவ்வளவு பேர்களால் செய்ய முடியும், பின்பற்றமுடியும் என்று தெரியவில்லை என்றாலும் கண்டுபிடித்த இந்த மாணவர் லயோலா பி எஸ் சி வேதியியல் படிக்கும் வைஷ்ணவ் இதற்காக மேயரிடமிருந்து பரிசு பெற்றிருக்கிறார்.
7) மதுவினால் சீரழிந்துகொண்டிருந்த ஒரு கிராமத்தையே, அந்த மக்களின் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஊட்டி, தடுத்து நிறுத்தி, மது இல்லாத கிராமமாக மாறவைத்த தங்கமான மனிதர் தங்கவேலின் சாதனை.
8) சிலசமயம் கடமையைச் சரிவரச் செய்தாலே கூட நல்ல செய்திதான். அப்படி ஒருவர். கூடுதலாக ஏழை மாணவர்களின் படிப்புக்கும் உதவி. விஜயராகவன்.
9) சின்னஞ்சிறு பெண்ணின் ஞாபகசக்தி.
10) திருநங்கைகளுக்கு வீடு வாங்கிக் கொடுத்த சுஜாதா.
11) அலைபேசியை வைத்துக் கொண்டு 'கேம்ஸ்' விளையாடும் சிறுவர்களுக்கிடையே 7வது 9வது வகுப்புகளில் படிக்கும் சிறுவர்கள், அதன் மூலமே இன்று இளம் தொழிலதிபர்களாக இருக்கும் செய்தி.
12) உலகிலேயே மிக சிறந்த, குட்டி 'உளவு விமான'த்தை கண்டுபிடித்த தமிழன், செந்தில் குமார்
13) நெய்தலில் ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்து பரிசு வாங்கியிருக்கும் பானுமூர்த்தி.
4.10.13
2.10.13
நிற்க இடம் கிடைக்குமா?
1919-ஆம் ஆண்டு இரவு எட்டு மணி. லாகூர் ரயில் நிலையத்திலிருந்து தில்லி செல்லும் ரயில் புறப்பட இன்னும் ஒரு நிமிடம்தான் இருக்கிறது. அங்கும் இங்கும் ஆட்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, அவசரம் அவசரமாக ஒரு மனிதர் ஓடி வந்தார்.
அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. வியர்த்துக் களைத்திருந்தார். மூன்றாம் வகுப்புப் பெட்டிகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தார். எந்தப் பெட்டியிலும் இடம் இல்லை. பெட்டிகளில் எல்லாம் ஒரே கூட்ட நெரிசல். உள்ளே இருந்தவர்கள் கதவுகளைப் பூட்டிக்கொண்டார்கள். 'கதவைத் திறங்கள்' என்று அந்த மனிதர் கெஞ்சிக் கேட்டும் யாரும் இரக்கப்படவில்லை. கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள்.
அப்போது, சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார். ரயிலில் ஏற இடம் கிடைக்காமல், அந்த மனிதர் தவித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். அவர், அந்த எளிய மனிதரிடம் சொன்னார்:
"ஐயா, நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் எனக்கு முக்கால் ரூபாய் கொடுங்கள். நான் உங்களை ஏற்றிவிடுகிறேன்.''
அந்த மனிதர் சற்று யோசித்தார். இந்தத் தொழிலாளி செய்யும் உதவிக்கு முக்கால் ரூபாய் கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று அவருக்குத் தோன்றியது. எனவே, அவர் சொன்னார்:
"சரி, நான் முக்கால் ரூபாய் தருகிறேன். என்னை எப்படியாவது இந்த ரயிலில் ஏற்றிவிடுங்கள். நான் அவசியம் தில்லி சென்றே ஆகவேண்டும்.''
அந்தத் தொழிலாளி இடம் ஒன்றும் பிடித்துக் கொடுக்கவில்லை. ரயில் பெட்டி ஒன்றிற்குள் எப்படியோ அவரைத் திணித்துவிட்டார் அவ்வளவுதான்.
உள்ளே மிகவும் நெருக்கடியாக இருந்தது. சரியாக கால் வைத்து நிற்கக்கூட இடமில்லை. ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டுதான் எல்லோரும் நின்றார்கள். வியர்வை நாற்றமும், சுருட்டுப்புகை நெடியும் சேர்ந்து மயக்கம் வருவது போலிருந்தது. அந்த மனிதர் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நின்றிருந்தார்.
வண்டி புறப்பட்டு ஒரு மணி நேரம் கடந்தது. அந்த மனிதர் நின்றுகொண்டே பயணம் செய்தார். அவர் மிகவும் பொறுமையுடன்தான் இருந்தார். ஆனால், அவர் முகத்தில் எல்லையற்ற சோர்வு தெரிந்தது. உடன் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மனம் இரங்கி அவரைப் பார்த்துக் கேட்டார்:
"நீ யாரப்பா? உன்னைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்த நெரிசலில் பயணம் செய்து நீ எப்படித்தான் ஊர்ப்போய்ச் சேரப்போகிறாயோ! உன் பெயர் என்ன?''
அந்த மனிதர் தன் பெயரைக் கூறியதும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவருக்கு இடம் கொடுப்பதற்காக அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்.
அந்த மனிதர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














