எல்லோருக்கும் விதம் விதமான நம்பிக்கைகள்.. பூனை குறுக்கே போவது முதல் "எங்கே போகிறாய்?" என்று கேட்கக் கூடாது என்பது வரை!
ப்ராட்வேயில் இருக்கும் திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்டில் (அப்போது அப்படித்தான் பெயர்) இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து ஏறவேண்டும். முன்னரே முன்பதிவு செய்து சென்று ஏற்றி விட்டு வீடு திரும்புவேன்.

சமயங்களில்
அவர்கள் ஏறிய அந்த பஸ் கண்டக்டரிடம் 20 ரூபாயோ, 30 ரூபாயோ கொடுத்து அதே
பஸ்ஸிலேயே நான் இருக்கும் ஏரியா வந்து இறங்கி விடுவேன். நான் இருக்கும்
இடத்தைத் தாண்டித்தான் பஸ் போகவேண்டும். ஏனெனில் அங்கிருந்து மின்சார
ரயில் வந்து ஏற நடக்கும் நேரம், தூரம், அப்புறம் நான் பிடிக்க வேண்டிய பஸ்
இரவு நேரமாகி விடுவதால் ஒருவேளை வராமல் போனால் ஒரு ஆட்டோ.. இதை எல்லாம்
யோசித்தால் இது வசதியான பிரயாணம். நடத்துனரும் பெரும்பாலும் ஒத்துக்கொண்டு
இறக்கி விட்டு விடுவார். ஓட்டுநரிடமும் அனுமதி வாங்கி விடுவேன்.
நான்
சொல்லும் இந்தச் சம்பவம் முதல் சில பயணங்களில் ஏதோ ஒன்றில் நடந்தது.
நேரம் கழித்துக் கிளம்பும் பேருந்தில் முன்பதிவு செய்தால் விடிந்த உடன்
வெளிச்சத்தில் அந்த ஊர் செல்லும். இவர்களும் பயமின்றி உள்ளூர்ப் பேருந்தோ,
ஆட்டோவோ பிடித்து வீடு சேர முடியும். அன்று அந்த பேருந்துகளில் இடம்
இல்லாத காரணத்தால், கொஞ்சம் முன்னதாகவே கிளம்பும் பேருந்தில் முன்பதிவு
செய்து விட்டிருந்தேன்.
இவர்களை ஏற்றி வீட்டுக்
காத்திருந்தேன். நடத்துநரும், ஓட்டுநரும் வந்தார்கள். ஓட்டுநர் ஏறி
அமர்ந்து வண்டியைக் கிளப்பி உறுமவிடத் தொடங்க, நடத்துநர் சீட்டு போடத்
தொடங்கினார்.
நடத்துநரிடம் "அந்த"க் கேள்வியைக் கேட்டேன்.இதில் என்னங்க தப்பு?
நடத்துநர்
"என்ன கேள்வி கேட்டீங்க.. பஸ் புறப்படப் போவுது.. அடச்சே... என்ன
ஆளுய்யா நீ.." என்று திட்டிக்கொண்டே ஓட்டுநரிடம் சென்று சொல்ல, அவர்
வண்டியை அமர்த்தி விட்டார். அவரும் என்னை டோஸ் விடத்தொடங்க, பயணிகள்
என்னை விரோதத்துடன் பார்த்தார்கள் - என்னவென்று தெரியாமலேயே!
ஓட்டுநர்,
நடத்துநர் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி, அருகிலுள்ள டீக்கடைக்குச்
சென்று விட, என்னால் நடந்த விபரீதத்தைச் சரிசெய்ய, நானும் அவர்களுடனேயே
நடந்தேன். அவர்களுக்கு தேநீர் வாங்கித் தர முயன்றேன்!
"வேண்டாம்...
வேண்டாம்... இப்போதான் குடிச்சுட்டு வந்துதானே வண்டியை எடுத்தோம்?"
என்றவர்கள் தொடர்ந்து எனக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
படங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து...

































