சனி, 3 செப்டம்பர், 2016

600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ்



1)  ஒரு அரசுத்துறை நிறுவனம் இப்படிச் செயல்படும்போது சந்தோஷம் வருகிறது.  அது அவர்கள் கடமை என்றாலும் இப்படி செயல்படுவதே அரிய செயலாக்கி விடுவதால்!   'முகம் மாறிய'  தோப்பூர் அரசு மருத்துவமனை: கைத்தொழிலுடன் 'டிஸ்சார்ஜ்'

 
 
 
2)  600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ் காப்பாற்றியது, தாங்கள் தேடிப்போன ஒரு பெண்ணை மட்டுமல்ல, மூன்று மைனர் பெண்களை.  சபாஷ் எஸ் ஐ பியாலி கோஷ், கான்ஸ்டபிள் மதுமிதா தாஸ்.

 
 

 
3)  பணியில் சிறப்பு.  தமிழகத்திலிருந்து விருது பெறும் ஒரே அதிகாரி.  மதுரை கூடுதல் கலெக்டர் ரோகிணி.

 
 
 
4)  "....இயந்திரத்தை இடைவிடாமல் இயக்கலாம். இதில், 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க, 30 காசுகள் மட்டுமே செலவாகிறது...." ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி நாகநாதன்.  (இது மாதிரிக்கு கண்டுபிடிப்புகள் பற்றி நிறைய செய்திகள் வந்தாலும் பயன்பாட்டுக்கு எத்தனை வருகின்றன என்பது கேள்விக்குறி.  ஒருவேளை அரசு போதுமான அளவு ஆதரவு தருவதில்லையோ?)


 
 

 
5)  "நேரடி கலெக்டர் தேர்வு எழுத முடியாத நிலையில் குரூப் 1 தேர்வு எழுதி துணை கலெக்டராகிவிட்டால் பிறகு சில வருடங்களில் கலெக்டராகும் முடியும் என்பதால் குரூப் 1 தேர்வு எழுதுவதில் உறுதியாகும் முனைப்போடும் இறங்கினார் சதா அதே சிந்தனையோடு இயங்கினார். இப்போது துணை கலெக்டராகி விட்டார்.
எத்தனையோ லட்சம் பேர் முயற்சிக்கிறார்கள் அதில் நாம் எங்கே என்று நினைக்காமல் நமது லட்சியம் என்னவோ அதை நினைத்து படிக்கவேண்டும்..."  வித்யா.

 
 
 
6)  நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சி.  முயற்சிக்குப் பாராட்டுகள்.  மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள சிறுவன் கிர்தின் நித்தியானந்தம்.

 
 

 
7)  அரிய சேவை.  கருங்கல் அருகே வடக்கன்கரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், 1988-ம் ஆண்டு நூலக அருட்பணி இயக்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் இது வரை 153 இலவச நூலகங்களைத் திறந்துள்ளார்..

 
 
 
8)  "காசில்லாட்டி என்னங்க..?  ஆட்டோக்குக் காசு தரவேண்டாம்.. நீங்கள் திரும்பிப் போவதற்கும் நான் காசு தருகிறேன்..."  மும்பை ஆட்டோ டிரைவர் ஷுக்லாஜி.





9)  "....... ஆங்கே டாய்லெட் கட்டித் தருவதாம் நட்பு!"    நண்பன் அகத்தியனுக்காக காசு கலெக்ட் செய்து காட்டித் தந்த வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ்.  நாகப்பட்டினம் அருகே நட்புகள்.



19 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. அரசு அதிகாரி என்று கடனுக்கு வேலை செய்யாமல் ஆக்கபூர்வமான வேலை செய்யும் தோப்பூர் மருத்துவ அதிகாரி காந்திமதிநாதன் பாராட்டுக்குரியவர் ,வாழ்த்துகள் !
    மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்...
    எத்தனை எத்தனை முகங்கள்.....

    பதிலளிநீக்கு
  4. நல்ல செயல் செய்த அனைவருக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. போற்றுதலுக்குரியவர்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைவரையும் பாராட்ட வேண்டும்.
    வாழ்த்துக்கள்.
    நல்லதை தேடி கொடுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சிலது ஏற்கெனவே தெரிந்தாலும் பலது தெரியாது! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பாராட்டுக்குரியவர்கள்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. பாசிட்டிவ் மனிதர்களுக்கு எனது பாராட்டுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நல்ல செயல் செய்த அனைவருக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  11. கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வந்தால் மகிழ்ச்சி அதிகமாகும்

    பதிலளிநீக்கு
  12. 'நல்ல 'நேர்மறைச் செய்திகளைப் படிக்கும்போது, பொது'நலம் கொண்ட நிறைய நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் அடிக்கல்லில் வெறும்ன 'உயர் திரு கே.காமராஜ்' என்று போட்டுள்ளதைப்பார்த்து, கடந்துபோன அந்த நல்ல காலத்தை நினைத்து ஏக்கம் வந்தது.

    பதிலளிநீக்கு
  13. இந்த மாதிரி பாசிட்டிவ் செய்திகளைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. அரிய பணி செய்தவர்களைப் பாராட்டும் தங்களின் பாணி அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. அனைத்தையும் வாசித்தாயிற்று. அனைவருக்கும் பாராட்டுகள். விரிவாக எழுத முடியவில்லை..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!