எல்லோருக்கும் விதம் விதமான நம்பிக்கைகள்.. பூனை குறுக்கே போவது முதல் "எங்கே போகிறாய்?" என்று கேட்கக் கூடாது என்பது வரை!
ப்ராட்வேயில் இருக்கும் திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்டில் (அப்போது அப்படித்தான் பெயர்) இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து ஏறவேண்டும். முன்னரே முன்பதிவு செய்து சென்று ஏற்றி விட்டு வீடு திரும்புவேன்.
சமயங்களில்
அவர்கள் ஏறிய அந்த பஸ் கண்டக்டரிடம் 20 ரூபாயோ, 30 ரூபாயோ கொடுத்து அதே
பஸ்ஸிலேயே நான் இருக்கும் ஏரியா வந்து இறங்கி விடுவேன். நான் இருக்கும்
இடத்தைத் தாண்டித்தான் பஸ் போகவேண்டும். ஏனெனில் அங்கிருந்து மின்சார
ரயில் வந்து ஏற நடக்கும் நேரம், தூரம், அப்புறம் நான் பிடிக்க வேண்டிய பஸ்
இரவு நேரமாகி விடுவதால் ஒருவேளை வராமல் போனால் ஒரு ஆட்டோ.. இதை எல்லாம்
யோசித்தால் இது வசதியான பிரயாணம். நடத்துனரும் பெரும்பாலும் ஒத்துக்கொண்டு
இறக்கி விட்டு விடுவார். ஓட்டுநரிடமும் அனுமதி வாங்கி விடுவேன்.
நான்
சொல்லும் இந்தச் சம்பவம் முதல் சில பயணங்களில் ஏதோ ஒன்றில் நடந்தது.
நேரம் கழித்துக் கிளம்பும் பேருந்தில் முன்பதிவு செய்தால் விடிந்த உடன்
வெளிச்சத்தில் அந்த ஊர் செல்லும். இவர்களும் பயமின்றி உள்ளூர்ப் பேருந்தோ,
ஆட்டோவோ பிடித்து வீடு சேர முடியும். அன்று அந்த பேருந்துகளில் இடம்
இல்லாத காரணத்தால், கொஞ்சம் முன்னதாகவே கிளம்பும் பேருந்தில் முன்பதிவு
செய்து விட்டிருந்தேன்.
இவர்களை ஏற்றி வீட்டுக்
காத்திருந்தேன். நடத்துநரும், ஓட்டுநரும் வந்தார்கள். ஓட்டுநர் ஏறி
அமர்ந்து வண்டியைக் கிளப்பி உறுமவிடத் தொடங்க, நடத்துநர் சீட்டு போடத்
தொடங்கினார்.
நடத்துநரிடம் "அந்த"க் கேள்வியைக் கேட்டேன்.இதில் என்னங்க தப்பு?
நடத்துநர்
"என்ன கேள்வி கேட்டீங்க.. பஸ் புறப்படப் போவுது.. அடச்சே... என்ன
ஆளுய்யா நீ.." என்று திட்டிக்கொண்டே ஓட்டுநரிடம் சென்று சொல்ல, அவர்
வண்டியை அமர்த்தி விட்டார். அவரும் என்னை டோஸ் விடத்தொடங்க, பயணிகள்
என்னை விரோதத்துடன் பார்த்தார்கள் - என்னவென்று தெரியாமலேயே!
ஓட்டுநர்,
நடத்துநர் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி, அருகிலுள்ள டீக்கடைக்குச்
சென்று விட, என்னால் நடந்த விபரீதத்தைச் சரிசெய்ய, நானும் அவர்களுடனேயே
நடந்தேன். அவர்களுக்கு தேநீர் வாங்கித் தர முயன்றேன்!
"வேண்டாம்...
வேண்டாம்... இப்போதான் குடிச்சுட்டு வந்துதானே வண்டியை எடுத்தோம்?"
என்றவர்கள் தொடர்ந்து எனக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
படங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து...
வித விதமான நம்பிக்கைகள்
பதிலளிநீக்குதம +1
இப்படியும் ஒரு நம்பிக்கையா? ஆச்சரியம் தான்! என்னைப் பொறுத்தவரை சில சமயங்களில் இவை நடக்கின்றன.பல சமயங்களில் எதுவும் நடப்பதில்லை. :)
பதிலளிநீக்குபுதுசா இருக்கு.. இப்பதான் கேள்விப்படறேன்
பதிலளிநீக்குபுதுசா இருக்கு.. இப்பதான் கேள்விப்படறேன்
பதிலளிநீக்கு1961 ல் தஞ்சை போகும் பஸ்ஸில் ஏறி , நான் இதே கேள்வியைக் கேட்டு
பதிலளிநீக்குசெமத்தியா வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
நமது வீடுகளில் கூட, ஒருவர் கிளம்பும்போது எங்கே போறீங்க என்று கேட்கக் கூடாது.
சாதுர்யமாக இப்படி கேட்கலாம்.
என்ன ஸ்ரீராம் வீட்டுக்கா போறீங்க...அவர் இங்கே வரச்சொல்லி இருக்கலாமே !!
அப்ப நமக்கு எங்க போறாரு அப்படின்னு கரெக்ட்டா தகவல் கிடைக்கும்.
"இல்லேடி, ஸ்ரீ ராம் வீட்டுக்கு இல்லை. சூர்ப்பனகை வீட்டுக்கு...."
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
சில நம்பிக்கைகள் .
பதிலளிநீக்குநல்லபடியாக பயணிகளை ஊர் சேர்த்தாரே அதற்கு மகிழ்ச்சி.
ஒரு வேளை நாளைக்காலை அந்த பஸ் அந்த ஊரில் எத்தனை மணி வாக்கில் நிற்கும் என கேட்டு இருக்கலாம்..
பதிலளிநீக்குசரி எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது நாம் டிக்கெட் புக் பண்ணிவிட்டு பஸ்ஸில் போகும் நண்பர் உறவினர் வர சற்று லேட்டாகும் என்று தெரிந்தால் பஸ் டிரைவரிடம் இந்த கேள்வியை பஸ் புறப்படும் நேரத்தில் கேட்கலாம் அவர்களும் உடனே கிளம்பாமல் தாமதிக்கலாம் அதுகுள்ள நம் ஆட்கள் வந்து பஸ்ஸை பிடித்து விடலாமே?
விதம் விதமாய் நம்பிக்கைகள்.....
பதிலளிநீக்குகேட்கப்பட வேண்டிய நுணுக்கம்: ரன்னிங் டைம் எவ்வளவுங்க?
பதிலளிநீக்கு// ....னெனில் அங்கிருந்து மின்சார ரயில் வந்து ஏற நடக்கும் நேரம், தூரம், அப்புறம் நான் பிடிக்க வேண்டிய பஸ் இரவு நேரமாகி விடுவதால் ஒருவேளை வராமல் போனால் ஒரு ஆட்டோ.. இதை எல்லாம் யோசித்தால் //
பதிலளிநீக்குஅதுமட்டுமா...? இன்னும் கொஞ்ச நேரம் உங்கள் உறவினருடன் இருக்கலாம், அல்லவா ?
ஆமாம்.. சார்.. அத மட்டும் கேக்க கூடாது.. செண்டிமெண்ட். வேறு விதமாக கேட்கலாம். 'இங்கிருந்து, அந்த ஊருக்கு செல்ல பொதுவாக எவ்வளவு நேரமாகலாம்...' ( better to ask this, mixing with english..
"இங்கேருந்து அங்க (ஊர் பெயரைச் சொல்லவும்) பொதுவா ரன்னிக் அவர்ஸ் எவ்ளோ சார்" ?
சென்டிமென்ட், நம்பிக்கைகள் எல்லோரிடமும் உண்டு. நான்லாம் பலாப்பழத்தை அப்போதுதான் வெட்டிக்கொண்டிருந்தால், 10 ரூபாய்க்கு மட்டும்தான் வாங்கி, தள்ளிப்போய் சாப்பிட்டுப்பார்ப்பேன். நன்றாக இருந்தால் மட்டும் 50-100 ரூபாய்க்கு வாங்குவேன். கடைக்காரர், நீங்கதான் சார் போணி, பலாப்பழம் எப்படி இருக்கு என்று கேட்டால், சூப்பர், எனக்கு ஷுகர் இருப்பதால் சும்மா ஆசைக்கு 1-2 சுளைதான் சாப்பிடுவேன் என்று எஸ்கேப் ஆகிவிடுவேன் (பழம் நல்லா இல்லாட்டா). உண்மையைச் சொன்னோம்னா, பஜனை உறுதி. அதேமாதிரி பரீட்சைக்குப் போவதற்கு முன்னால், யாரேனும் இடது பக்கம் அடித்துவிட்டாலோ தட்டி விட்டாலோ (பள்ளி, கல்லூரிகளில், என்னடா மச்சான் எப்படிப் படிச்சிருக்க என்று 'நண்பர்கள் தட்டிக் கேட்பார்கள்), பயங்கரக் கோபமாகிவிடுவேன். 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு காரியமாப் போகும்போது பூனை குறுக்க போனால் தயக்கமா இருக்கும். இப்போ அதுக்கு சான்ஸே இல்லை. இங்கு எங்கு பார்த்தாலும் பூனை மயம். அப்புறம் கறுப்புப் பூனைக்குத்தான் இந்த சென்டிமென்ட் என்று நினைத்திருந்தேன். ஆனா இந்து எல்லாக் கலரிலும் பூனைகள் எல்லா இடத்திலும் இருக்கும். இப்போவும், பாஸோட, ஆபீசில் எந்த மீட்டிங்குக்கும் (which I initiate) ராகு காலத்தில் செல்ல மாட்டேன். பாஸும் அதைப் புரிந்துகொண்டு, சனிக்கிழமை (விடுமுறை) மீட்டிங்கெல்லாம் 10 1/2 மணிக்கு மேல்தான் வரச்சொல்லுவார். - என்னைக்கேட்டால் இது எல்லாமே நமது நம்பிக்கைதான். (நாளென் செய்யும் கோளென் செய்யும் என்று நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த சென்டிமென்டெல்லாம் ஒரு பொருட்டே இல்லை)
பதிலளிநீக்கு"நார்மலா இங்கேர்ந்து அந்த ஊரு ரன்னிங் ஹவர்ஸ் எத்தனை சார்?" இதுதான் எப்போதும் நான் கேட்கும் கேள்வி!
பதிலளிநீக்குமிக சுவாரஸ்யம். இப்படி எல்லாம் நம்பிக்கை இருக்கிறதா.இதே தன் தொழிற்சாலைகளில் எது எங்க இருக்கணும் என்பதில் கணவர் கவனமாக இருப்பார். உதவி செய்யும் தொழிலாளர்கள் எந்த வார்ததை பேசலாம் என்பதிலும் கண்டிப்பு.இயந்திரங்களுக்கு காதுகள உணர்சசிகள உண்டு என்பதில்மிக்க் கவனம் செலுத்துவார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குவாங்க கீதா மேடம்..
பதிலளிநீக்குஇது அவரவர்கள் நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த ஓட்டுநரும், நடத்துனரும் ஒரே மாதிரி டியூன் ஆகியிருக்க வேண்டும்!
வாங்க ரிஷபன் ஸார்..
பதிலளிநீக்குநான் கூட அப்புறம் இது மாதிரி அனுபவம் பெற்றதில்லை! அந்த இரண்டு பெரும் அந்த மாதிரி சகுனம் பார்க்கும் ரகம் போல!
வாங்க சுப்பு தாத்தா..
பதிலளிநீக்குசூர்ப்பனகை வீடு எங்கிருக்காக்கும்?!
"எங்கேபோறீங்க" ன்னுதான் கேட்கக் கூடாது என்று சொல்லி, "எங்கிருந்து திரும்பி வருவீங்க?" ன்னு கேட்கலாம் என்று சொல்வார்கள். அப்படிக் கேட்டால், அவர் இரண்டு மூன்று இடங்களுக்குப் போகும் எண்ணத்திலிருந்தால், முதலிரண்டு இடங்களை விட்டு விட்டு, கடைசியில் செல்ல எண்ணியிருக்கும் இடத்தை மட்டும் சொல்லக் கூடும்!
:)))
வாங்க கோமதி அரசு மேடம்...
பதிலளிநீக்குசொல்லப்போனால் நடுவில் பேருந்தை ஓரிடத்தில் சாப்பிட நிறுத்தும்போது எங்கள் வீட்டுக்காரர்கள் பேருந்தை வீட்டுக் கீழே இறங்கவே மாட்டார்கள். இயற்கை உபாதை கழிக்கக் கூட இறங்க மாட்டார்கள். பயம். ஏனெனில், ஒருமுறை இறங்கிச் சென்று விட்டுத் திரும்பி வந்து பார்த்தால் ஒரே மாதிரி நான்கு, ஐந்து பேருந்துகள். எது தங்கள் பேருந்து என்று கண்டுபிடிக்க முடியாமல் பதறி, திண்டாடி விட்டார்கள். எனவே இறங்க மாட்டார்கள். அப்படி இறங்காமல் இருந்தவர்களைக் காரணம் விசாரித்து 'நாங்கள் காத்திருக்கிறோம், உங்களை ஏற்றாமல் போக மாட்டோம்' என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தனர். நடத்துனர் கீழேயே நின்று அடையாளம் காட்டி மறுபடியும் ஏற்றுக் கொண்டாராம்!
பதிலளிநீக்குவாங்க மதுரைத்தமிழன்..
நீங்கள் சொல்வது நல்ல ஐடியாவாக இருக்கிறது. அதுசரி, மற்றவர்கள் பின்னூட்டங்கள் எல்லாம் என் மெயில் பெட்டிக்கு வரும்போது, உங்கள் பின்னூட்டம் மட்டும் ஏன் அங்கு வரமாட்டேன் என்கிறது? தளத்தில் வந்து பார்த்தால்தான் தெரிகிறது. அது எப்படி?
வாங்க வெங்கட்..
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராஜாசுந்தர்ராஜன் ஸார்..
பதிலளிநீக்குஇப்படி ஒரு அனுபவம் வந்த பிறகுதானே கேள்வியை மாற்றிக் கேட்கத் தோன்றுகிறது!
வாங்க மாதவன்,
பதிலளிநீக்குஆங்கிலம் சௌகர்யம்தான். சகுனம் பார்க்க மாட்டார்கள் என்று தைரியமாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை! ஆனால், அப்புறம் நான் இது மாதிரிக் கேள்வியை கேட்கவில்லை!
வாங்க நெல்லைத்ததமிழன்,
பதிலளிநீக்குஜாக்கிரதை உணர்ச்சி உங்கள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது போல! பலாச்சுளையென்று சொல்லியிருப்பதால் என் அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஒன்றல்ல, ஓரிருமுறை! பலாச்சுளை வாங்கப் போனால் டேஸ்ட் பார்க்க ஒரு சுளை தருவார் வியாபாரி. அதை பார்த்து வாங்கி வருவோம். அப்படி வாங்கும்போது எனக்கு சுவைக்காக கொடுத்த சுளை வேறு, கட்டிக்கொடுத்த சுளை வேறு.. ஒரு சுவையும் இல்லாமல் இருந்தது வீட்டில் வந்து நான் சாப்பிட்ட சுளைகள்! கில்லாடிகள்!
வாங்க பெசொவி
பதிலளிநீக்குஉஷாரான ஆள்தான் நீங்க!
வாங்க வல்லிம்மா,
பதிலளிநீக்குஇயந்திரங்களைக் கையாள்பவர்கள் நிறையவே சகுனம் பார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஸாதாரணமாக இரவு நேரத்தில் குழந்தைகள் ஏதாவது கேட்டால் பிழைச்சு கடந்தா பண்ணிக் கொடுத்தால் போகிறது என்று பதில் சொல்லுவார்கள். அதுவும் கர்பிணிகள் ஏதாவது கேட்டால் இந்த பதில்தான் வரும். நாளை என்பது ஸ்திரமில்லாத ஒன்று என்பதால் இதையும் சகுனக்குறைவாகத்தான் நினைத்துப் பதில் இப்படி வரும். ஒத்தைப் பிராமணன், அந்தக்கால வெள்ளைப் புடவை விதவைகள், வண்ணான்,இப்படி ஒரு லிஸ்டே உண்டு.
பதிலளிநீக்குஎங்கே போகிராய் என்று பிறர் கேட்டால், போன காரியம் ஸரிவர ஆகாது என்பது ஒரு நம்பிக்கை. பூனை இடமிருந்து வலம் போனால் பிரசினை வரும். இதெல்லாம் கிராமங்களில் இருந்தது. புறப்படும் போது தவறி இடித்தக் கொண்டு விட்டாலோ,தடுக்கினாலோ உள்ளே வந்து துளி தூத்தம் குடித்து விட்டு உட்கார்ந்து விட்டுப் போ என்று இன்றும் நானும் சொல்கிறேன். குடத்தில் தண்ணீரை நிரப்பி எடுத்துக்கொண்டு வா என்று சொல்லி, அவர்கள் வரும்போது எதிரில் கிளம்பிப்போகும் நல்ல சகுனத்தை ஏற்படுத்திக் கொண்டு போவோரும் உண்டு.
காகா வந்து கத்தறது. விசேஷஸமாசாரமோ,அல்லது விருந்தாளியோ வருவார்கள் என்று எதிர் பார்ப்பதும் உண்டு. ஜி.மெயிலும், வாட்ஸப்பும் சொல்லிக் கொண்டா வருகிறது. இப்படி அநேகம் சொல்லிக் கொண்டே போகலாம். போய்விட்டு வருகிறேன் என்று சொல்வது எதனால். எல்லாம் அவரவர்களின் பெரியோர்களின் செயலையும்,சொல்லையும் கேட்டுப் பழகியதுதான். நீள அடுக்கிக் கொண்டே போகலாம். இதுவே அதிகம் இல்லையா? அன்புடன்
வாங்க காமாட்சிம்மா..
பதிலளிநீக்குபூனை வலமிருந்து இடம் போவதற்கும், இடமிருந்து வலம் போவதற்கும் என்ன வித்தியாசம்? தானாய் அமைந்தால் சகுனம். நாமாய் அமைத்துக் கொண்டால் அது பலிக்குமோ! இதெல்லாம் ஒரு மனத்திருப்திதான்.. இல்லையாம்மா? கிளம்பும்போது தவறி இடித்துக் கொண்டால் என் வாய் "முருகா காப்பாத்து" என்று ஒரு அனிச்சைச் செயலாய் உச்சரிக்கும்! சிறுவயதிலிருந்து பழகியது!
ஒரு சில டிரைவர்கள் வேப்பிலைக் கொத்தை டேஸ் போர்டின் மீது வைத்துக் கொள்வார்கள் !இப்படியும் ஒரு நம்பிக்கை :)
பதிலளிநீக்குவாங்க பகவான்ஜி..
பதிலளிநீக்குநானும் பார்த்திருக்கிறேன். சில ஓட்டுநர்கள் ஊதுபத்தி ஏற்றி சாமி கும்பிட பின்னர்தான் பயணிகளை உள்ளேயே ஏற்றுவார்கள்!
அட! இது இதுவரை கேட்டிராத நம்பிக்கையாக இருக்கிறது அது மட்டுமல்ல தண்ணீரைத் தெளித்துக் கொள்வதும்...ஒரு சிலர் வீட்டை விட்டுக் கிளம்பும் போது தடுக்கிவிட்டால் வீட்டிற்குள் வந்து உட்கார்ந்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்புவது போல்..நீங்கள் கேட்ட கேள்வி அவர்களைத் தடுக்கிவிட்டதோ!!!! அதான் வெந்நீர் குடித்துவிட்டுத் தெளித்தும் கொண்டு அதாவது குளித்ததற்குச் சமானம்??!!!!
பதிலளிநீக்குஇப்படியான நம்பிக்கைகள் உண்டுதான். சின்ன வயதில் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் பெரியவர்களை குறிப்பாக விருந்தாளிகளை 'எங்க போறீங்க' எனக் கேட்கக் கூடாதென வலியுறுத்தப் பட்டிருக்கிறோம். ஆர்வ மிகுதியில் யாராவது கேட்டு வைப்பதுண்டு. உள்ளே வந்தமர்ந்து தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து விட்டுச் செல்வார்கள்.
பதிலளிநீக்குவண்டி எப்போது போய்ச் சேருமென்பது இயல்பாக அனைவரும் கேட்டறிய விரும்பும் ஒன்றே. இது போன்ற நம்பிக்கைகள் பற்றி அறியாத உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். நல்லவேளை சுமுகமாக எடுத்துக் கொண்ட வகையில் பிரச்சனையாகவில்லை:) .
இப்படியான நம்பிக்கைகள் உண்டுதான். சின்ன வயதில் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் பெரியவர்களை குறிப்பாக விருந்தாளிகளை 'எங்க போறீங்க' எனக் கேட்கக் கூடாதென வலியுறுத்தப் பட்டிருக்கிறோம். ஆர்வ மிகுதியில் யாராவது கேட்டு வைப்பதுண்டு. உள்ளே வந்தமர்ந்து தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து விட்டுச் செல்வார்கள்.
பதிலளிநீக்குவண்டி எப்போது போய்ச் சேருமென்பது இயல்பாக அனைவரும் கேட்டறிய விரும்பும் ஒன்றே. இது போன்ற நம்பிக்கைகள் பற்றி அறியாத உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். நல்லவேளை சுமுகமாக எடுத்துக் கொண்ட வகையில் பிரச்சனையாகவில்லை:) .
//கொஞ்சம் குடித்தார்கள். மிச்சத்தை ஒருவர் மேல் ஒருவர் தெளித்துக் கொண்டார்கள். என்னையும் ஒரு வாய் குடிக்கச் சொன்னார்கள். என்மேல் தெளிக்கவில்லை! திரும்பி வந்தோம்.//
பதிலளிநீக்குஹஹ்ஹஹா...
//குறுக்கிடாமல் கேட்டுக் கொன்டு, ஓட்டுநர் கைகளை பற்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். நடத்துநர் கையையும் நட்பாய்த் தொட்டேன். .. //
ஒரு பெரிய சண்டையையும், மன வருத்தத்தையும் சமரசமாக்கிய உங்கள் சாமர்த்தியத்தை நினைத்து வியக்கிறேன்..
// ஆனால் என் மாமியார் மனது கேட்காமல் நடத்துநரிடம் சொல்ல.. //
சபாஷ்!.. ஆயிரம் ரகளைகளுக்கிடையேயும் நம் வேலை நடக்க வேண்டுமே! இந்த மாதிரி நல்ல மனிதர்கள் நிச்சயம் சாதனையாளர்களாக் சுடர் விடுவார்கள்! பிரச்னைகளை வளர்த்தாமல் அதற்கு ஒரு முடிவு கண்டுவிடுவார்கள்!
பொதுவாக பஸ்களில் அந்த ஊருக்கு 'எப்போ போய்ச் சேருன்?' என்பது கேட்கிற கேள்வி தான்! நானும் கேட்டிருக்கிறேன் தான்! இந்த மாதிரி எதிர்வினைகளைச் சந்தித்ததில்லை.. அதுவும் அரசு பஸ்களில்!.. வேடிக்கை தான்!
விரைவு வண்டிகளில் ஏறும் பொழுதே கால அட்டவணைகளை பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், நடு ராத்திரியில் நடுவில் இறங்கும் ஊர்களுக்கு போய்ச் சேரும் நேரத்தைக் கேட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?.. மொத்தத்தில் பயணிகள் பாவம், அவ்வளவு தான்!
திருச்சி தஞ்சாவூர்ப் பக்கம் இந்த நம்பிக்கைகள் சற்றுக் கூடுதலே நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
பதிலளிநீக்குதற்போதும் சிலர் பார்கத்தான் செயுகிறார்கள்!
பதிலளிநீக்குஅவரவர் நம்பிக்கை! வித்தியாசமான அனுபவம்தான்!
பதிலளிநீக்குவிதவிதமான நம்பிக்கைகள்...
பதிலளிநீக்குநம்ம ஊரில் பூனை குறுக்கே போனால் சகுனத் தடை...
இங்கே அலுவலகம் செல்லும் முன் ஆயிரம் பூனைகளைக் கடந்துதான் செல்ல வேண்டும்...
இங்கு செல்லப் பிராணி.... :)