வெள்ளி, 2 செப்டம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ :: 160902 ( + நேற்றைய பதிவின் தொடர்ச்சி) எலி ஒரு தொடர்கதை!

                 

                               
====================================================================


எலியும் நானும்... நானும் எலியும்..  

Image result for rat images

(நேற்றைய பதிவின் தொடர்ச்சி...)


     இந்தத் தலைப்பு உங்களில் எத்தனை பேருக்கு சமீபத்திய பாடல் ஒன்றினை நினைவு படுத்தியது?
 




     புத்தகங்கள் உட்பட அவ்வளவு அடைசல் இருக்கும் அந்த எங்கள் வீட்டில் சில சமயங்களில் குஞ்சும் குளுவானுமாக எலிகள் பெருகி விடும்.  அப்போது இந்தப் பொறியில் வைக்கப்பட்ட வடையை எலிகள் அசைத்ததும் கதவு அறைந்து சாத்திக் கொண்டாலும் கூட, எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பிகளின் இடுக்கு வழியாக இந்த சின்னஞ்சிறு எலிகள் ஓடி, ஓடித் தப்பித்து விடுவதோடு, மறுபடியும் அந்த இடுக்குகளில் வழியாகவே உள்ளே சென்று ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டு அங்குள்ள வடையைத் தின்னும் பாருங்கள்...  அப்பாவுக்குப் பற்றிக் கொண்டு வரும்!  அது ஒட்டும் அட்டை வராத காலம், அல்லது நாங்கள் அதை அறியாத காலம்!








     அப்புறம் நான் குடும்பத்தலைவன் ஆனதும் எனக்கும் இந்த வேலை வந்து சேர்ந்த விவரங்களை ஓரளவு நான் சுட்டி கொடுத்துள்ள பதிவுகளில் சொல்லியுள்ளேன்.  








     கொசுவர்த்தி சுற்றி பின்னே சென்று மறைய, நிகழ்காலத்துக்கு வருவோம் - வருகிறேன்!


     சென்ற வாரத்தில் ஒருநாள் முதலில் என் பாஸ் கண்ணிலும், பின்னர் பையன் கண்ணிலும் சற்றே பெரிய சைஸில் இந்த எலி கண்ணில் பட்டது.  வழக்கமான பயங்கள் மனதை வாட்ட வீட்டுக்குள் பார்த்து விட்ட இந்தப் பெரிய எலியைப் பிடிக்க முதலில் ஒரு மசால்வடை வாங்கப்பட்டது.  அதை பொறிக்குள் வைத்து, எங்கள் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டுக் காலை 11.30 முதல் காத்திருந்தோம்.  ஊ.. ஹூம்..  வெளியில் எங்காவது முக்கிய வேலையாய்ச் சென்றிருந்ததோ என்னவோ, ஆளையே காணோம்.


                                                               


     எதற்கும் இருக்கட்டும் என்று இந்த ஒட்டும் அட்டையையும் வாங்கி வைத்திருந்தோம்.  இதில் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் எலி இதில் வந்து ஒட்டிக்கொண்டபின், அதை அதிலிருந்து பிய்த்து எடுக்கும் வேலை.  மகா கடுப்ஸான வேலை அது.  







ஒருமுறை ஒரு பெரிய எலி, தான் ஒட்டிக்கொண்ட அட்டையோடு நகர்ந்து நகர்ந்து ஓடியதும்,  அதை பிடிக்க பின்னாலேயே ஓடியது, பிடிக்கப் போனால் முகத்தை என் கைகளை நோக்கி அது திருப்பியதும் நடுக்க அனுபவமாக மனதில் நின்றிருந்தது.  சிறு எலிகளாயின் சந்தேகமில்லாமல் இந்த அட்டை மூலம்தான் பிடிக்க வேண்டும்.  ஆனால் அவற்றை அந்த அட்டையிலிருந்து நீக்குவதற்குள் வெறுப்பாகிவிடும்!   ஃபோர்ஸ் அப் கொண்டு அதை அட்டையிலிருந்து தள்ளி விடும்போது அதன் சதைகள் சமயங்களில் கிழிந்து விடும்.  அட்டையோடு தூக்கிப் போடவும் மனம் வராது. சிறிய அட்டை 45 ரூபாய்.  பெரிய அட்டை 90 ரூபாய்!







     ஏன் இன்னும் எலி வரவில்லை?  தெரிந்து கொண்டு விட்டதோ?  வடை வாசம் வரவில்லையோ?  நேரமானால் வடை ஊசிப்போகுமோ?  எவ்வளவு நேரத்தில் வடை ஊசிப்போகும்?  ஒருவேளை வடை ஊசினால்தான் எலி வருமோ?  கேள்விகள் மனதில் சுற்ற, எலியை மட்டும் காணோம்.  மாலை வந்தது.  இரவும் வந்தது.  சாப்பிட்டுப் படுத்தும் விட்டோம்.  பொறியின் கதவு மூடிக்கொள்ளும் "டப்' சத்தத்துக்காகக் காத்திருந்து தூங்கிப் போனோம்.








     காலை எழுந்து வரும்போது ஒரு ஆவல்.  ''மாட்டியிருக்கும்!"








     ஊஹூம்.  பொறியின் கதவு அலிபாபா குகை போல திறந்தே இருந்தது.  சந்தேகப்பட்டு உள்ளே பார்த்தேன்.  வடை அங்குதான் இருந்தது!  சமயங்களில் கதவு மூடாமல், எலி வடையைத் தள்ளிக் கொண்டு போயிருக்கும் அனுபவமும் உண்டே..   மதன் ஜோக் என்று நினைவு...  இப்படி வடைப்பொறி வைத்துள்ள கூண்டுக்குள்ளிருந்து வடையை எடுக்க இரண்டு எலிகள் ஒரு நீண்ட கம்பியைக் கொண்டு வரும்.  அது வேறு நினைவுக்கு வந்தது!









     இன்னும் யாரும் எழுந்திருக்காத நிலையில் குளிக்கப் போனேன்.  பாத்ரூமில் இருக்கும்போது அந்த ஆனந்தச் சத்தம் காதில் விழுந்தது.  குளித்து முடித்து, வெளியில் வந்து பார்த்தேன்.  ஆம்! ! எலி மாட்டி விட்டது.  




     அதே சமயம் உள்ளே பார்த்தால், கம்பியில் மாட்டியிருந்த அந்த அரை வடையைக் காணோம்!  வாழ்வு நிலைக்குமா என்ற கேள்விக்கு நடுவே, மிச்சம் வைக்காமல் அதையும் சாப்பிட்டு முடித்திருந்தது எலி!







     நிதானமாக அதை வெளியில் வைத்து, புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.  வெளிச்சத்தைக் கண்டு முதலில் மிரண்ட எலியார், முகத்தைத் திருப்பி அமர்ந்து, முதுகைக் காட்டினார்.  பின்னர், 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக் கூண்டிலிருந்தே விடுதலை கொடுத்து விடுவான்' என்று நினைத்ததோ என்னவோ, என் முகமும், கேமிராவும் அருகே இருந்தாலும் கம்பியைக் கடித்து அறுக்கப் பார்த்தது!









     ஒரு சிறு வீடியோ கூட எடுத்திருக்கலாம் என்று பின்னர் தோன்றியது.

     விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுத்த பின் அதை எடுத்துக்கொண்டு காம்பவுண்டுக்கு வெளியே பொறியை நீட்டி, பொறியின் கதவைத் திறந்து ரிலீஸ் செய்தேன்.  பொத்தென்று கீழே விழும் என்று நான் எதிர்பார்த்திருக்க, ஊ..ஹூம்..  அது விழவில்லை! 


     என்னவென்று எட்டிப் பார்த்தால், பற்களாலும், சிறிய விரல்களாலும் அந்தக் கம்பியைப் பிடித்தபடி தொங்கி கொண்டிருந்தது!  என்ன ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி!  பயம் போலும்!  அதை புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தோடு ஒரு தட்டுத் தட்டி குலுக்கினேன்.


     இந்த முறை கீழே குதித்து புதர்களில் ஓடி மறைந்தது!




     அவ்ளோதான்!  அப்புறம் இன்னொரு எலிப் பதிவில் சந்திக்கும் வரை, வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்வது........






இன்றைய படங்கள் யாவும் நான்..... நான்...... நானே என் செல்லில் எடுத்தது!
 

26 கருத்துகள்:

  1. அருமையான அனுபவம்
    எலியாரின் வித விதமாக புகைப்படங்கள்அருமை

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இப்போதுதான் முதல் பதிவை பார்த்து அதற்கு கருத்திட்டேன். 2ம் பதிவிலும், தங்கள் அனுபவங்களுடன், பொறியில் மாட்டிய எலிகளின் அருமையான புகைப்படங்களுடன் கூடிய நகைச்சுவை எழுத்துக்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தன. காணொளியில் எலிகள்தான் எவ்வளவு புத்திசாலிதனமான வேலைகளை செய்கிறது..அதைபார்க்கும் போது நமக்குத்தான் அதை வளர்த்து அதன் புத்திசாலிதனத்தை காண பொறுமையில்லையோ எனத் தோன்றுகிறது. (ஒரு ஜோக்குகாக மனதில் பட்டதைச் சொன்னேன். இரண்டு எலிகளைப்பிடித்து இங்கு அனுப்பி விடாதீர்கள்.)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. எலி, சுப்புக்குட்டியார்(பாம்பார்), பெருச்சாளி, மூஞ்சுறு போன்றவற்றோடு நமக்கும் பல அனுபவங்கள் உண்டு. சிலவற்றைப் பதிவாக்கி இருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  4. // ஏன் இன்னும் எலி வரவில்லை? தெரிந்து கொண்டு விட்டதோ? வடை வாசம் வரவில்லையோ? நேரமானால் வடை ஊசிப்போகுமோ? எவ்வளவு நேரத்தில் வடை ஊசிப்போகும்? ஒருவேளை வடை ஊசினால்தான் எலி வருமோ? //

    எத்தனை கேள்விகள்.... பதிலறிவார் யாரோ ?

    Holding the iron stick to prevent falling.... that cud be a learned one, how to overcome gravity... Ha ha ha

    பதிலளிநீக்கு
  5. எலி என்றாலே கிலிதான். ஓட்டு வீடுகளில் தவிர்க்க முடியாது எலியின் வரவை. ஒட்டியவீட்டில் எலி வரும் வழிகளை கொஞ்சம் கவனமாய் அடைத்து விட்டால் வராது.

    படங்கள் எல்லாம் அருமை. சாகப்போகிறோம் என்று வடையை சாப்பிடவில்லை, எப்படியும் சாதுமிரண்டால் படத்து கதாநாயகன் போல் நம்மை தப்பிக்க வைத்துவிடுவார் என்று வடையை ஆசையாக சாப்பிட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
  6. எலி வீடியோவும், படங்களும், அனுபவமும் என பதிவு பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  7. எலி வீடியோவும், படங்களும், அனுபவமும் என பதிவு பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  8. ஓடிப் போன எலி . நண்பர்களிடம் 'சுண்டெலி நானும் ,ஸ்ரீ ராம் சாரும் 'என்று தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும் :)

    பதிலளிநீக்கு
  9. ஓடிப் போன எலி . நண்பர்களிடம் 'சுண்டெலி நானும் ,ஸ்ரீ ராம் சாரும் 'என்று தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும் :)

    பதிலளிநீக்கு
  10. கவலை வேண்டாம். இரண்டு மாசம் போகட்டும். மழை காலம் வரட்டும். ஸ்ரீராம் ஒட்டு மொத்த எலி வேட்டையாளர்களிடமிருந்தும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம்...என்ன ஸ்ரீராம் நீங்கள் ரொம்ப மோசம் உங்களுக்கு எலி சைக்காலஜி தெரியவில்லை... உங்கள் வீட்டில் விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடும் போது அது நன்றாக மோப்பம் பிடித்திருக்கிறது அதான் வந்து நீங்கள் அதற்கு நீங்கள் சமைப்பது ஏதேனும் கொடுப்பீர்களோ என்று எதிர்பார்த்து...நீங்கள் கடையிலிருந்து மசால் வடை வாங்கி வைத்தால் "ஹும் இது யாருக்கு வேண்டும்...இவரு மட்டும் வீட்டுல நல்லதா சமைச்சு சாப்பிடுவாராம்" அப்படினு போயிருக்கும்...அதானே!! அப்படிப் போடுங்க எலியாரே!

    ஸ்ரீராம்..சரி விடுங்க ரொம்ப வருத்தப்படாதீங்க. அடுத்த வாட்டி வரும் போது நல்ல விருந்து சாப்பாடு வைச்சுருங்க..அது வெளிய போயிடும் தானாவே. அப்புறம் மீண்டும் உங்கள் விருந்திற்கு வரும்...சாப்பிடும் போகும்...அத விட்டுப்புட்டு...ஹிஹிஹி...(எல்லாம் சொந்த அனும்பவம்தான்..ஹஹ)

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. எலியார் செம போஸ்!!! சினிமாக்காரங்க பார்த்தாங்கனா...மௌஸ் ஹன்ட் படத்த தமிழ்ல எடுக்க முயற்சி செஞ்சாங்கனா உங்க வீட்டுக் கதவ தட்டுவாங்க...வீடியோவுல வர எலி வளர்க்கப்படும் எலி போல..செல்ல எலி...நாங்கலாம் வளர்க்காமலேயே தானாவே செல்ல எலியா வளர்ந்துக்கும் ...இதெல்லாம் ஃபாரின் காரங்களுக்குத் தெரியல..ஹும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. காணொளியில் கண்ட மாதிரி எலியைப் பழக்க முயற்சிக்கலாமே

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அழகு அண்ணா....
    எலி பிடிக்கும் வேலை ரொம்பக் கஷ்டம்தான்...

    பதிலளிநீக்கு
  16. அகப்பட்டுக் கொண்டாரா? கடைசி சர்க்கஸை படம் எடுக்க முடியாத உங்கள் வருத்தத்தை இரசித்தேன்:). எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. எலியை இவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்து உயிரோடு விட்டுவிட்டீர்கள் ரொம்ப இளகிய மனசு உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  18. அடுத்துப் புலியைப் பிடித்ததைப் பற்றிய பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்ச்

    பதிலளிநீக்கு
  19. க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... ஆனாலும் இப்படி கையில் ஒரு கேமரா மொபைல் இருக்கிறது என்பதற்காக, இத்தனை படங்கள் எடுத்து எங்களைத் துன்புறுத்தியிருக்கக் கூடாது!!

    ஹேமா சொன்னது போல, அடுத்த ப்ராஜக்டான புலியைப் பிடிக்கும்போது, இப்படி நிறைய ஃபோட்டோக்கள் எடுத்துப் போட்டு, உங்கள் வீரத்தைக் காட்டுங்க!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!