Tuesday, January 24, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அதிர்ஷ்டக்காரி


     கேட்டு வாங்கிப்போடும் கதை பகுதியில் இந்த வாரம் பதிவர் ஸாதிகாவின் கதை இடம் பெறுகிறது.
     அவரின் தளம் எல்லாப்புகழும் இறைவனுக்கே.
      சமீப காலமாக பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை.  கணினி சரியில்லை என்பது அவர் மெயிலிலிருந்து தெரிகிறது.  அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கம் வருகிறார்!  அவர் முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு தொடர்கிறது. 

==================================================================


சிறுகதை பெயர் அதிர்ஷ்டசாலி

இவள் புதியவள் மாத இதழில் வெளிவந்தது.

கதை பிறந்த கதை.

இது உண்மையில் நடந்த சம்பவம்.சில பல கற்பனைகளையும் கோர்த்து எழுதினேன்.  =====================================================================================


அதிர்ஷ்டக்காரி
ஸாதிகா  


கையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.
ஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.
உடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.
”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..?”
“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”
“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.?”
“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”
“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா?”
“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”
“அப்ப அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”
அலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.
முகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.
“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”
“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”
“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”
”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”
“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”
“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.
ஆயிற்று
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.
பெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.
அலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.
“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா?”
“எதுக்கு அத்தே திருஷ்டி..”
“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”
“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”
“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.
ஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”
“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”
“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே?”
“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்கறார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா? அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே
நாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”
அலமேலு வாயடைத்து நின்றாள்.

47 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

சில நாட்களில் மாறி விடும்...

Geetha Sambasivam said...

நல்லவேளையா மாப்பிள்ளை நல்லவராய் அமைந்தாரே! நான் முடிவை வேறு விதமாய் எதிர்பார்த்திருந்தேன். :) இது சரியாய்ப் போயிடும். அமெரிக்க வாழ்க்கை அந்தப் பெண்ணை மாற்றி விடும். :)

KILLERGEE Devakottai said...

அமெரிக்கா சென்ற பிறகு மாறிவிடும்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.

'நெல்லைத் தமிழன் said...

எதுவுமே முழுமையான நல்லதாக இருக்காது. ஒருவருக்கு நல்லது, மற்றவருக்குக் கெடுதல். இதுதான் உலகியல் நீதி. நல்ல கதை

Avargal Unmaigal said...

அந்த பெண்னிற்கும் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை பற்றி அதிகம் மதிப்பு இருக்கலாம் அது போல பெண்னிற்கும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம் ஆனால் அமெரிக்க வந்த் பின் அந்த பெண் உணர்வாள் இங்குள்ள மற்றவ்ர்களை தன் கணவருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அவனை தன்னை போலவே உருவக் குறைபாடு உள்ளவன் என்று புரிந்து தாழவு மனப்பாண்மை நீங்க வாய்ய்ப்பு உண்டு

Nagendra Bharathi said...

அருமை

Bagawanjee KA said...

கொண்டவனே சரி என்றபிறகு இந்த வருத்தம் எதுக்கு :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனித மன உணர்வுகளை, அவரவர்களின் பார்வையில், உணர்ச்சி மேலிட அழகாகச் சொல்லிப்போன விதம் மிகவும் அருமையாக உள்ளது.

கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

இங்கு இதனைப் பகிர்ந்து வெளியிட்டு அனைவரும் படிக்க வாய்ப்பளித்துள்ள ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள்.

rajalakshmi paramasivam said...

போகப்போக சரியாகி விடும். இது வெறும் ஆரம்ப தயக்கமே. மிக விரைவில் தன்னம்பிக்கை வந்து சேரும்.
பாராட்டுக்கள் சாதிகா!
பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம் சார்.

G.M Balasubramaniam said...

சில சமயங்களில் இப்படி ஜோடிகள் அமைவதுண்டு எனக்குத் தெரிந்த ஒருவரிடம் ஏன் இவ்வளவு லட்சணக் குறைவான பெண்ணைத் தேர்ந்தெடுத்தாய் எனக் கேட்டதற்கு “ எனக்குப் பிடிசது நான் கட்டினேன் “ என்றுபதில் சொன்னான் சாதிகா முன்பெல்லாம் என் பதிவுகளுக்கு வருவார்

athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் இது எங்கட ஸாதிகா அக்காவோ.. ஹையோ நேக்குக் லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல... ஸாதிகா அக்கா எப்படி இருக்கிறீங்க நலம்தானே.. ஏன் புளொக் பக்கம் வருவதில்லை வாங்கோஓஒ....

சகோதரர் ஸ்ரீராம் எப்பூடி ஸாதிகா அக்காவைத் தேடிப் பிடிச்சு வந்தார் இங்கு.. அதுக்கு முதலில் நன்றி..

Angelin said...

ஹை !! ஸாதிகா ..வருக வருக ....இங்கே பிளாக்ஸ் பக்கம் அழைத்து வந்த எங்கள் பிளாக்குக்கு நன்றி

athira said...

இது நான் ஏற்கனவே ஸாதிகா அக்காவிடம் படித்துவிட்ட கதைதான், சோட் அண்ட் சுவீட்டாக அழகா எழுதியிருக்கிறீங்க....
இனியும் ஒளிக்கக்கூடாது ஸாதிகா அக்கா உடனடியா மேடைக்கு வரோணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:)

athira said...

///இங்கே
பிளாக்ஸ் பக்கம்
அழைத்து வந்த
எங்கள்
பிளாக்குக்கு நன்றி/// ஹா ஹா ஹா அஞ்சூ சூப்பர் கவிதைபோல சொல்லியிருக்கிறீங்க.... எங்கே அவர்கள் உண்மைகள் போயிட்டார்ர் உடனே அழைச்சு வாங்கோ இங்கு.. அஞ்சுவின் கவிதைக்குப் பரிசு கொடுக்க:)...
உண்மையில் இந்த வசனம் என்னை ரசிக்க வச்சுது அஞ்சு..

athira said...

////இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று///
இப்போ எதுக்கு பூஸ் ஐக் கூப்பிடுறீங்க, ஸாதிகா அக்கா வெளியே வாங்கோ...

Angelin said...

அருமையான கதை ... மனசுக்கு கஷ்டமா இருக்கும்ல இப்படிலாம் எல்லாரும் அழகை முன்னிறுத்தி பேசினால் ..அந்த பெண் மனசு எவ்ளோ பாடுபட்டிருக்கும் ..அவளுக்கு தெரியல அழகு என்பது தூய இருதயத்தில் தான் இருக்கும் ..அழுக்குபுடிச்ச மனசு இருக்கும் பொறாமை பிடிச்ச மனிதர்கள் அனைவரும் அழுகிய மனிதர்களே ..
அமெரிக்கா போனா சரியாகிடுவா அந்த பெண் ..

Angelin said...

//அஞ்சுவின் கவிதைக்குப் பரிசு கொடுக்க:)...
உண்மையில் இந்த வசனம் என்னை ரசிக்க வச்சுது அஞ்சு//

அவ்வ்வ் இப்போ அவரை எதுக்கு கூப்பிடறீங்க ..பரிசு கையில் இல்லாததால் மாமி கொடுத்த பூரிக்கட்டை அடில நாலு எனக்கு ஷேர் பண்ணப்போறார் :)

athira said...

///அவ்வ்வ் இப்போ அவரை எதுக்கு கூப்பிடறீங்க ..பரிசு கையில் இல்லாததால் மாமி கொடுத்த பூரிக்கட்டை அடில நாலு எனக்கு ஷேர் பண்ணப்போறார் :)///
ஹா ஹா ஹா இல்ல இல்ல அவர் இப்போ மாமிக்கு முன்னால ரொம்ப அப்பாவியா நடிச்சுக்கொண்டிருக்கிறாராம்ம்:)... பரிசுடன் வருவார் வெயிட் அண்ட் சீ:).. ஒருவேளை ட்ரம்ப்:) அங்கிளிடம் கேட்டு ஏதும் வாங்கி வந்து தரலாம்.. கொஞ்சம் அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருங்கோ அது வரைக்கும்:)))

Angelin said...

உளவியல் மனோ ரீதியா ..இந்த கதையின் கதாநாயகி எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார் ...அசிங்கம் அழகு என்பது மாயை மண்ணுக்குள் போனா நாமும் மண்ணே :( இதை புரிந்தோர் ஒரு நாளும் பிறரை வார்த்தைகளால் எள்ளி நகையாட மாட்டார் ..பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் அண்ட் வாழ்த்துக்கள் ஸாதிகா ..மீண்டும் வலையுலகில் சந்திப்போம்

Angelin said...

@ஸ்ரீராம் ..வாராவாரம் ஒரு கதை ..அதுவும் சஸ்பென்ஸா யார் எழுதறானே தெரியாம ரிலீஸ் செய்றீங்க ..சந்தோஷத்துடன் ஆவலுடன் கியூரியாசிட்டியுடன் தொடர்ந்து பயணிக்கிறோம்

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கதை! இப்படித்தான் பல திருமணங்கள் மாற்றி அமைவதுண்டு. எல்லாம் புரிதலில் சரியாகிவிடும்..நாளடைவில் சரியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதிர்ஷ்டம் என்று பேசுவோரும் மாப்பிள்ளை அல்லது அந்தக் குடும்பத்தில் ஏதேனும் குறை கண்டுபிடித்துத் தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள்...ஏனென்றால் இப்படிச் சொல்லுவோருக்கு அவள் சென்ற பிறகு மெல்லு வாய் பிளப்பதற்கு வேறு எதேனும் டாப்பிக் கிடைக்காமலா போய்விடும்??!!

கீதா: மேலுள்ள துளசியின் கருத்துடன்... அமெரிக்கா அப்பெண்ணை மாற்றிவிடும்! அதிருக்கட்டும்...எனக்கு இன்னொரு உளவியல் ட்ரிக் இது என்று தோன்றும். நான் கூடக் கையாளும் ட்ரிக்...ஹிஹி அதாவது நமக்கு அந்தக் குறையைப் பற்றியத் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் தன்னம்பிக்கை இருந்தாலும், அவர்கள் சொல்லுவதையே ஒத்துக் கொண்டு அப்படி வாய்பிளப்பவரின் வாயை மூட வைக்க இந்த டெக்னிக் உதவும்!!! என் அனுபவம்!!! நல்ல கதை சாதிகா. மிக்க நன்றியும் எனக்கு ஒரு பதிவுக்கு மேட்டர் கிடைத்தது! அதற்கு எங்கள் ப்ளாகிற்கும் மிக்க மிக்க நன்றி!!!

athira said...

சகோ ஸ்ரீராம் க்கு...
ஃபோனில் பார்க்கும்போது, ஒவ்வொரு கொமெண்ட்க்கும் கீழே reply இருக்குது, ஆனா கொம்பியூட்டருக்கு வந்தால் அப்படி இல்லை, மொத்தமா முடிவில்தான் கொமெண்ட் போட முடியுது, ஏன் அப்படி இருக்கு? இது எனக்கு மட்டும்தானா இல்லை எல்லோருக்குமோ???

Angelin said...

@அதிரா ..ஹையோ வேணாம் மதுரை தமிழன் என்ன செய்வார்னு நேக்கு தெரியும் ../அந்த ட்ரம்ப் அங்கிளையே எனக்கு பரிசா வச்சிக்கோங்கன்னு சொல்வார் ..யூ know ட்ரம்ப் ஸ்கொட்டிஷ் அதனால் அவர் தந்தா உங்களுக்கு fwd பண்ணிடறேன் பரிசை

Angelin said...

@ athira miyyyyav :)

its because you are a feline ..catttt
we are humans :))

athira said...

////Angelin said...
@அதிரா ..ஹையோ வேணாம் மதுரை தமிழன் என்ன செய்வார்னு நேக்கு தெரியும் ../அந்த ட்ரம்ப் அங்கிளையே எனக்கு பரிசா வச்சிக்கோங்கன்னு சொல்வார் ..யூ know ட்ரம்ப் ஸ்கொட்டிஷ் அதனால் அவர் தந்தா உங்களுக்கு fwd பண்ணிடறேன் பரிசை////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூச்சப்படாதீங்கோ அஞ்சு:) வெள்ளைமாளிகையில் பாதியை எழுதிக்கூடத் தரலாம், வெயிட் அண்ட் சீ:)

Avargal Unmaigal said...


ஹலோ அதிரா & ஏஞ்சல் இங்க என்ன சத்தம் ஒரு மனுஷன் மயக்கம் தெளிஞ்சு வருகிறதுக்குள்ள ( சரக்கு அடிச்சு அல்ல மாமியிடம் வாங்கிய அடியால் மயக்கம் அடைந்து ) நீங்க பண்ணிய ரகளையால் ஸாதிகா அக்கா ( எனக்கு அவங்க அக்காவா தங்கையா என்று தெரியவில்லை ஆனால் இங்கே எல்லோரும் அக்கா என்பதாலும் எனக்கு என்றும் வயது 16 என்பதாலும் அவரை அக்கா என்று அழைப்பதில் தவ்று இல்லைதானே) பயந்து ஒளிஞ்சு இருக்காங்க...


டோனல்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற அடுத்த நாள் உலகில் உள்ள பெண்கள் எல்லாம் அவருக்கு எதிராக கோஷம் போடுகிறார்கள் அமெரிக்காவில் அவருக்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் கூடிய பெண்களின் கூட்டம் அமேரிக்க வராலாற்றிலே இல்லாத ஒன்று அவ்வளவு பெரிய கூட்டம். அப்படிப்ட்ட ஆள்தான் எனக்கு பரிசாக வேண்டும் என்று அதிரா & ஏஞ்சல் போட்டி போடுறாங்க இவங்களில் யாருக்கு பரிசாக தருவது என்று தெரியவில்லை அதனால் இவர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று இருக்கிறேன் அது ரொம்ப சிம்பிள் அவர்கள் கிச்சன் பக்கம் போனதற்கு ஆதாரமாக ஒரு போட்டோ ஒன்ரை முதலில் அனுப்பும் ஒருவருக்கு டோனல்ட் டை பரிசாக வெல்லாம்.

Avargal Unmaigal said...

@athira

//வெள்ளைமாளிகையில் பாதியை எழுதிக்கூடத் தரலாம், வெயிட் அண்ட் சீ:)//

ட்ரம்பிடம் பேசினேன் அவர் வெள்ளை மாளிகையை இரண்டாக பிரித்து உங்கள் இருவருக்கும் தருவதாக் ஒப்புக் கொண்டார் ஒரு கண்டிஷனுடன் பரிசை பெறும் இவர்கள் தினமும் பெருக்கி துடைத்து க்ளினாக அவைத்து கொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பு என்றும் சொன்னார்...

சரி சரி அதிரா & ஏஞ்சல் சீக்கிரம் வந்து பரிசை பெற்று வேலையை தொடங்குங்கள்

Bhanumathy Venkateswaran said...

திருமணத்தில் தோற்றப் பொருத்தம் என்பது பெரும்பாலும் அமையாது. சுமார் தோற்றத்தில் இருக்கும் பெண்கள் பலர் திருமணத்திற்குப் பிறகு பொலிவு பெறுவதை பார்த்திருக்கிறேன்.

அழகான பெண்கள் சுமார் மூஞ்சி குமார்களை மணக்கும் பொழுது எதுவும் சொல்லாத சமூகம் (ஆம்பிள்ளைக்கு என்ன அழகு?,உத்யோகம் புருஷ லட்சணம்) அழகான ஆண்கள் அழகாக தோற்றம் அளிக்காத பெண்களை மணக்கும் பொழுது இப்படித்தான் பேசும். சரளமான நடையில் எதிர்பாராத முடிவோடு நன்றாக எழுதப் பட்டிருக்கும் கதை. நான் வேறு விதமாக யோசித்தேன். ஆசிரியருக்கு பாராட்டுக்கள்! சிறுகதை காவலருக்கு நன்றி!

athira said...

ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஊஊ அவர்கள் உண்மைகள் அவர்கள் சொன்னபடியே பரிசோடு களமிறங்கிட்டார்ர்ர்.. ஓடியாங்கோ ட்ரம்ப் அங்கிள் உங்கழுக்கு:)) வெள்ளை மாளிகை நேக்கூஊஊஊஊ:))... ஹா ஹா ஹா கிச்சின் படம்தானே பண்டில் பண்டிலா எங்கட புளொக்குகளில் இருக்கு அனுப்பி வைக்கிறோம்:))...

ஊசிக்குறிப்பு:
திங்கட்கிழமைகளில் நீங்க ஓவ் எனச் சொன்னீங்களே... ஏன் அந்த ஒருநாள் மட்டும் வெள்ளைமாளிகையில் நீங்க வேர்க் பண்ணக்கூடாது?? வித் மாமி பெர்மிஷன்:)).. எண்டெல்லாம் நான் கேட்கவில்லை.. யூ நோ .. மீ ரொம்ப நல்ல பொண்ணு:).. இதை அஞ்சுதான் கேட்கச் சொன்னா.. அவ 10 கிலோவாவது மெலியோணும் எனக் கங்கணம் கட்டி.. வோக் போயிருக்கிறா:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

athira said...

///ஸாதிகா அக்கா ( எனக்கு அவங்க அக்காவா தங்கையா என்று தெரியவில்லை ஆனால் இங்கே எல்லோரும் அக்கா என்பதாலும் எனக்கு என்றும் வயது 16 என்பதாலும் அவரை அக்கா என்று அழைப்பதில் தவ்று இல்லைதானே) பயந்து ஒளிஞ்சு இருக்காங்க...///

ஸாதிகா அக்கா.. உங்களை அக்கா என்றிட்டார்ர் மதுரைத் தமிழர்:)) ஓடியாங்கோ விடாதீங்கோ பொயிங்கிடுங்கோ:))..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா பத்த வச்சிட்டேன்ன்..:))

அதில என் யொந்த வேர்ட்டைக் களவெடுத்திட்டார்ர்:) தானும் 16 ஆமே:)) அஞ்சூ இதைத் தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ?:)) இங்கு மீ மட்டும்தானே சுவீட் 16:) இவர் எப்போ 16 ஆனார்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்:)).

Avargal Unmaigal said...

அட என்னம்மா வெயிட் குறையனும் என்றால் வாக் செய்யனும் என்று சொன்ன ஆளை கட்டி வைச்சு உதைக்கணும் வெயிட் குறைய வேண்டுமென்றால் வாயில் பொடும் உணவின் அளைவை குறைக்கனும்

இங்க நாங்கள் இருவரும் கொஞ்சமாக சாப்பிட்டு ( நான் மாமியை விட கொஞ்சம் அதிகமாக சாதம் சாப்பிடுவேன் ) நிறைய் வெயிட் போடனும் என்ரு முயற்சி செய்கிறோம் ஆனால் ஏஞ்சல் நிறைய சாப்பிட்ட்டு நிறைய எடை குறையனும் என்று முயர்சிக்கிறார்கள் இரண்டுமே நடக்காது ஹும்ம்

ஞா. கலையரசி said...

நானும் முடிவை வேறு விதமாக யூகித்தேன். பானுமதி அவர்கள் சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகின்றேன். அழகான பெண்கள் அவலட்சணமான ஆண்களைத் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் சமூகம், மாறி நடந்தால் மட்டும், பெண்கள் மனதைப் புண்படுத்துவதேன்? கதாசிரியர் ஸாதிகா அவர்களுக்குப் பாராட்டுக்கள். படிக்கத் தந்த எங்கள் பிளாக்குக்கு நன்றி!.

Avargal Unmaigal said...


இங்கே நாம் பெண் அழகை பற்றி பேசும் பொது அழகில்லாத பெண்னை பலரும் மறைமுகமாக கிண்டல் செய்வதாகவே நினைக்கிறோம் பொதுவாக அழகில்லாத பெண்ணை பார்க்கும் போது முதல் இம்பரஷன் எல்லோருக்கும் நான் உள்பட சற்ரு குறைவாகத்தான் இருக்கும் ஆனால் அந்த பெண்களிடம் பேசி பழகும் பொது அவர்களிடம் நல்ல குணங்கள் இருந்தால் அந்த அழ்கு என்று விஷயம் நம் கண்ணிற்க்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை

Avargal Unmaigal said...

ஞா. கலையரசி & பானுமதி

//நானும் முடிவை வேறு விதமாக யூகித்தேன்.//

அப்படி நீங்கள் வேறு விதமாக என்ன யூகித்தீர்கள் என்பதை இங்கே பின்னுட்டமாக பதிந்தால் நன்றாக இருக்குமே நேரம் இருந்தால் எழுதுங்கள்

athira said...

அழகில்லாதவர்கள் என்று யாருமே இல்லை, "எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்" , ஒருவருக்கு அழகில்லாதது போல இருப்பவர் இன்னொருவருக்கு பேரழகாகத் தெரிகிறார்....
"அழகானவற்றை நாம் விரும்புவதில்லை, நாம் விரும்புபவை அழகாக இருக்கிறது"...

Avargal Unmaigal said...

சரி சரி வேலைக்கு நேரமாச்சு வீட்டில் மிளகாய் அரைத்தது போல வேலைக்கு சென்று அங்கு வரும் கஸ்டமர் தலையில் மிளாகாய் அரைத்தால்தான் மீண்டும் என் வீட்டில் மிளகாய் அரைக்க முடியும் நான் சேல்ஸ் மேன் வேலையில் இருப்பதால் எனக்கு நிறைய ஏமாளிகள் கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள் ஏஞ்சல் & அதிரா

Avargal Unmaigal said...

ஆகா ஒன்று சொல்ல மறந்துட்டேன் இங்கே அழகில்லாத பெண்னிற்கு அழகான கணவன் கிடைத்திருக்கிறான் என்று இந்த கதையில் படித்திருக்கிறோம் ஆனால் உண்மையில் அழகில்லாத ஆணிற்கு அழகான மனைவி கிடைத்திருக்கிறார் அவர்தான் எங்கள் நாட்டை ஆள வந்த ட்ரம்ப் ஹீஹீ நான் இப்படி சொன்னேன் என்று அவரிடம் சொல்லிவிடாதீர்கள் உடனே இந்தியாவிற்கு அனுப்பி விடுவார் இந்தியா வந்தா அண்னன் மோடி என்னை நாடு கடத்திவிடுவார் ஹும்ம்ம்

மனோ சாமிநாதன் said...

ஸ்ரீராம் உபயத்தால் ஒருவழியாக வலைப்பக்கம் வந்து விட்டீர்களா ஸாதிகா? வாழ்த்துக்கள்!! இனியாவது உங்களின் எழுத்தென்ற ஆயுதத்தை துருப்பிடிக்க விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்!!

athira said...

ஹா ஹா ஹா எனக்கும் ட் ரம் ஆன்ரியை நல்லாப் பிடிச்சுப் போச்சு , சூப்பரா இருக்கிறா. சொன்னால் இந்தியாக்கு அனுப்ப மாட்டார் அவருக்கு ஹார்ட் அட்டாக்தான் வரும் ஹா ஹா பாவம் கொஞ்சக்காலம் வைட் ஹவுஸ்ல இருக்கட்டும்...
ஓல் த பெஸ்ட் for மிளகாய் அரைக்க:).

Angelin said...

யாரோ இங்கே மெலனியா ட்ரம்ப் பத்தி பேசினது மாதிரி இருக்கே எனக்கு இங்கிலாந்த் வரைக்கும்கேட்டுது ..அநேகமா நம்ம பூரிக்கட்டை புகழ் சகோதானிருக்கும் :)
நல்ல கேட்டுக்கோங்க மெலனியா உங்களுக்கு அக்கா ட்ரம்ப் வந்து அங்கிள் :)
இப்போ பீட்ரூட் பிரியாணி செஞ்சிட்டிருக்கேன் பிறகு வந்து கமெண்ட்டறேன்

Angelin said...

கர்ர்ர்ர்ர்ர் .இது அதிராவுக்கு
கர்ர்ர்ர்ர்ர்கர்ர்ர்ர்ர்ர் இது நியூ ஜெர்சிக்காரருக்கு

athira said...

///Angelin said...
இப்போ பீட்ரூட் பிரியாணி செஞ்சிட்டிருக்கேன் பிறகு வந்து கமெண்ட்டறேன்///
மஸ்ரூம் பிர்ர்ர்ராணி + எண்ணெய்க் கத்தரிக்காய் + புதினா சம்பல் செய்த நானே ரொம்ப அடக்கொடுக்கமா:) அமைதியா நல்ல பிள்ளையா:) இருக்கிறேன்ன்:) ஒரு பீட்றூட் பிறியாணிக்கு இவ்ளோ சவுண்ட் குடுத்திட்டுப் போறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தான் கிச்சினில் நிண்டு சமைக்கிறாவாவாஆஆம்ம்ம்ம்ம்:))..
எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) ஹையோ நான் வந்து போனதா டெல்லிடாதீங்கோ அஞ்சுக்கு:))

Anuradha Premkumar said...

மிகவும் நெகிழ்வான கதை.. அருமை...


கதையை போல் பின்னூட்ட கிளைக் கதைகளும் (மதுரைத் தமிழர், ஏஞ்சல் & அதிரா ) அருமை...

Babu said...

//விஜய் மற்றும் ஜீ (ZEE) தொலைக்காட்சி சானல்கள் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இரு சானல்களின் உரிமையையும் ரத்து செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.//
வழி மொழிகிறேன். மிகவும் அவசியமான கோரிக்கை.

Anuradha Premkumar said...

அருமை

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!