சனி, 2 செப்டம்பர், 2017

அந்த மழை பெய்த பெங்களூரு இரவில் தனியாக ஒரு பெண், அங்கு வந்த அந்த போலீஸ்காரர்......






1)  பணியை நேசிக்கும் ஜெய பாலாஜி.  சொந்த செலவில் பயணிகளுக்கு வசதி.







2) எல்லா பெண்களும் தங்கள் வாழ்நாள் கனவாக, ஏதாவது ஒரு தொழிலை கற்று, சுயமாக சம்பாதித்து, சொந்த கால்களில் நிற்க வேண்டும். மனம் வைத்தால் வழி பிறக்கும்; தன்னம்பிக்கை இருந்தால், கனவு நிச்சயம் நனவாகும்.  


மோட்டார் பம்ப்களுக்கு காயில் சுற்றுவது, ரீ - வைண்டிங் செய்வது போன்ற கடினமான வேலைகளை செய்து அசத்தி வரும் ஜெயசீலி.







3)  வளரும் காலத்தில் நல்ல பயிற்சி.    பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவ மாணவியரே, காய்கறித் தோட்டம் அமைத்து, காய்கறிகள் மற்றும் கீரைகளை, சத்துணவுக்கு வழங்கி வருகின்றனர்.







4)   இதை குறைக்கும் நோக்கில், மாணவர்களுக்கு அவர்கள் மறந்து போன, விளையாட வாய்ப்பு கிடைக்காத, மரபு விளையாட்டுகளை மாலையில் கற்று கொடுத்து, முழுவதுமாக அதில் ஈடுபடுத்தினேன். இதனால், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் குறைந்தது; அவர்களுக்குள் ஒற்றுமையும் அதிகரித்தது. இந்த விளையாட்டுக்காக, ஒரு முழு நாளை தை மாதத்தில் ஒதுக்கி, மரபுகளை மீட்டெடுக்கும் திருவிழாவாக கொண்டாடி வருகிறோம்.







இப்படி மாலை நேரம் முழுவதும், பள்ளியிலேயே விளையாடுவதை பார்த்து, பள்ளிக்கு வராதோர் மற்றும் சில நேரங்களில் மட்டும் வரும் மாணவர் அனைவரும், வர ஆரம்பித்தனர் விளையாட அனுமதிப்பதால், வகுப்புகளில் நாங்கள் சொல்வதை மாணவர்கள் புரிந்து கொள்கின்றனர்.





கோவை, பெத்தநாயக்கனுார் கிராம அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் பாலமுருகன்.



5)   அரசு பள்ளிகள்என்றாலே 'இப்படிதான் இருக்கும்'என்ற எண்ணத்தை, மதுரை திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியை கண்டால் மாற்றிக்கொள்ள தோன்றும். இதற்கு காரணம் அப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்.



 (இது அந்தப் பள்ளியின் படம் அல்ல.  இணையத்திலிருந்து பொதுவாக எடுத்தது)




6)  அந்த மழை பெய்த பெங்களூரு இரவில் தனியாக ஒரு பெண்,   அங்கு வந்த அந்த போலீஸ்காரர்..   அவர் பெயர் மஹாதேவ்.






7)  .......மாணவர்களின் உயிரை காப்பாற்றும் விதமாக, அந்த வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி, அங்கிருந்து ஓட தொடங்கினார்......  மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிதோரா கிராமத் தலைமை காவலர் அபிஷேக் படேல்.







அவருக்குப் பரிசளித்து பாராட்டி கௌரவித்தார் அம்மாநில முதல்வர்.










தமிழ்மணத்தில் வாக்களிக்க..............  

23 கருத்துகள்:

  1. பெரம்பலூர் பள்ளி பிரமிக்க வைக்கிறது
    அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.
    த.ம. இணைப்பு தவறு.

    பதிலளிநீக்கு
  2. ​நீங்கள் வரும்போது தம இணைப்பு தரப்பட்டிருக்கவில்லை. தம இணைப்பே கண்ணில் படாமல் போராடிக்கொண்டிருந்தேன் நண்பர் கில்லர்ஜி... இப்போது ஓகே!

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  5. இதுதான் கொடுத்ததில் மனதைக் கவர்ந்தது என்று குறிப்பிட முடியாமல் அனைத்தையும் பாராட்டத் தோன்றுகிறது. போலீஸ்கார்ர், மாணவர்களை ஈடுபடுத்தும், முன்னேற்றும் ஆசிரியர்கள் போன்ற அனைத்தும் அருமை.

    பொதுவாக போலீஸ்காரர்களை நாம் அப்ரோச் செய்யும் விதத்தில் அவர்கள் ரியாக்‌ஷனும் உதவிசெய்யும் எண்ணமும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நெல்லை... போனவாரம் நல்ல செய்திகள் குறைந்து வருவது குறித்து நீங்கள் சொன்ன நேரம் இந்த வாரம் சற்றே அதிக செய்திகள்...!

    பதிலளிநீக்கு
  7. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாஸிடிவ் செய்திகள் என் பதிவில் இந்த பதிவை குறிப்பிட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

    குழந்தைகளுக்கு பள்ளியில் முன்பு நீதி போதனை வகுப்பு, தோட்டவேலை, கைவேலை, எல்லாம் உண்டு.
    இப்போது அது கிடையாது, பாட்டு, ஓவியம், கைவேலை , நீதி போதனை வகுப்பு என்று அத்தனைக்கும்
    தனி ஆசிரியர்கள் இருந்தார்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

    பள்ளி விட்டதும் உடற்கல்வி ஆசிரியர் உடற்பயிற்சி, தோட்டவேலை செய்தால்தான் வீட்டுக்கு போக விடுவார். அதில் குழுக்களாக சேர்ந்து வேலை செய்வோம். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, சூழற்சி முறையில் வேலைகள் பகிர்ந்து அளிக்கபடும்.இதனால் ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் ம்னப்பான்மை, எதையும் தாங்கும் மனபக்குவம் எல்லாம் வரும்.

    மறுநாளுக்கு மண்பானையை கழுவி தண்ணீர் எடுத்து வைத்தல், கருபலகை , டஸ்டர் கவனிப்பு எல்லாம் உண்டு. டஸ்டர் கிழிந்து விட்டால் வீட்டிலிருந்து துணிகள் கொண்டு வந்து நாங்களே தைப்போம்.

    ஓவியம் வரைய தெரிந்த மாணவர் கருபலகையில் ரோல் நம்பர் , வருகை பதிவு எண், அப்படியே நான்கு மூலையில் அழகான பூக்கள் படம் எல்லாம் வரைவார்கள் மறு நாள் ஆசிரியரின் பாராட்டுக்கு எதிர்பார்த்து இருப்பார்கள். ஆசிரியர் காலை வந்து பார்த்து பாராட்டினால் மகிழ்ச்சி . டஸ்டர் தைத்தது யார் நன்றாக இருக்கிறது என்றால் உலகத்தை பரிசாக கொடுத்தது போல் ஆனந்தம். இவை எல்லாம் இப்போது மாணவர்களுக்கு கிடைக்கிறதா என்று

    இப்போது படிப்பு மட்டும் தான் வேறு எதிலும் கவனம் போக கூடாது என்கிறார்கள் .


    மற்ற அனைத்து செய்திகளும் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.
    அனைவருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. காவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் எனப் பொதுநலத்தோடு நேரடித் தொடர்புடையவர்கள் கடமை உணர்வோடு பணியாற்றினால், சமூகம் செழிக்கும். குற்றங்கள் மலிந்துகிடக்கும் இக்காலத்தில் நேர்மையாளர்கள் அடையாளம் காணப்படுவதும், பாராட்டப்படுவதும் முக்கியம். அமைப்புகள் இதனைச் செய்யாதபோது, பொதுமக்கள் இதனை அவசியம் செய்யவேண்டும். இவ்வகையில், அந்தக் கோயம்புத்தூர் பெண்ணின் தந்தை காவல் உயரதிகாரிக்கு நன்றிதெரிவித்து எழுதியது கவனத்தில் கொள்ளத்தக்கது. பாராட்டப்படவேண்டிய மிஸ்டர்.பொதுஜனம் அவர்.

    பதிலளிநீக்கு
  10. இத்தகைய நிகழ்ச்சிகளை , காணும் வாய்ப்பை இணையம் மூலம் வெளிக்கொணர்ந்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் பாராட்டுகள் த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
  12. அந்த மழைபெய்த பெங்களூரு இரவில்... துல்லியமான படம். என்னதான் 'The better India'--விலிருந்து எடுத்துப் போட்டிருந்தாலும் பளபளக்கும் ஒளி வெள்ளம் கண்ணில் நிற்கிறது.

    என்ன பொருத்தமான பெயர்?... இறைவனே தந்தையின் பாதுகாப்பு உணர்வோடு கூட இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தது போலிருக்கு.

    பாரி என்று பெயர் கொண்டவர் கருமியாக இருக்கக் கூடாது. செல்வன் என்று பெயர் கொண்டவர் ஏழ்மையில் உழலக்கூடாது.
    ராஜராஜன், கோழையாக இருக்கக் கூடாது--- இப்படியாக சிந்தனை ஓடியது.

    சூட்டப்படும் பெயரின் வரலாறு சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்திருந்தால் போதும். அதுவே ஒரு சக்தி வளையமாக செயல்பட்டு அவர் கொண்ட பெயருக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

    இறைவனின் பெயரையும், மஹான்களின் பெயரையும் அதனால் தான் குடும்பப் பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சூட்டினார்கள் போலிருக்கு.


    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் அருமையான தகவல்கள் ..

    பதிலளிநீக்கு
  14. ////அந்த மழை பெய்த பெங்களூரு இரவில் தனியாக ஒரு பெண், அங்கு வந்த அந்த போலீஸ்காரர்......//

    ஹா ஹா ஹா வரவர ஸ்ரீராமும் கவர்ச்சியாக தலைப்புப் போடப் பழகிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    “இன்று பல தகவல்கள்”.. இப்படி லேபல் போடலாம்போல இருக்கு இப்பகுதிக்கு.. அனைத்தும் நல்ல விசயங்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஒரு முறை நானும் என் மனைவியும் மும்பையிலிருந்து சென்னை வருவதற்காக டாக்ஸியில் தாதர் நோக்கி வந்து கொண்டிருந்தோம். கனமழை காரணமாக, மாதுங்கா வருமுன்னரே சாலையெங்கும் மழைநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. டாக்ஸிக்குள் தண்ணீர் புக ஆரம்பித்தது. கைக்குழந்தையாக இருந்த என் மகளையும், என் மனைவியையும் டாக்ஸியிலேயே அமரவைத்துவிட்டு, இடுப்பளவுத் தண்ணீரில் மாதுங்காவிலிருந்து தாதர்வரை நடந்தே சென்று, சென்னை எக்ஸ்பிரஸ் ரத்துசெய்யப்பட்ட செய்தியோடு திரும்பிவந்தபோது, கொட்டும் மழையில் டாக்ஸிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார் சர்தார்ஜி டாக்ஸி டிரைவர். மனிதர்களில் மாணிக்கங்கள்! :-)

    பதிலளிநீக்கு
  16. தன்னுடைய கடமையை சரிவர செய்த பெங்களூரு காவலர் மஹாதேவ், தன் கடமையை விட ஒரு படி அதிகமாக செய்த தலைமை காவலர் அபிஷேக் பட்டேல், மாணவர்களை சிறப்பாக வழி நடத்தும் பெரம்பலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அதனை பேரையும் பாராட்டி வணங்குகிறேன்.

    சுவாரஸ்யமான தலைப்பு கொடுத்த ஸ்ரீராமுக்கும் ஒரு சிறப்பு பாராட்டு!

    பதிலளிநீக்கு
  17. திருமதி ஜெயசீலியைப் பற்றி சமீபத்தில்தான் ஒரு பெண்கள் பத்திரிகையில் படித்தேன்.

    அரச பணியில் சேர்வதே வேலை செய்யாமல் சம்பளம் வாங்கலாம் என்பதற்காகத்தான் என்று சிலர் நினைக்கும் பொழுது, ராமநாதபுரம் நடத்துனர் ஜெய் பாலாஜிக்கு ஒரு ஜெய்!

    பதிலளிநீக்கு
  18. காவலர் மஹாதேவன் (துளசி: இறைவனின் பெயர் கொண்டவர்!!) அவர்களுக்குப் பாராட்டுகள்! பொக்கே!

    காவலர் அபிஷேக் பட்டேல் மனோதைரியம்!!! மக்களைக் காக்கும் மனிதாபிமானம்!! வாழ்க வளமுடன்!!

    அட பரவாயில்லையே குழந்தைகள் தோட்ட வேலை செய்து காய்கறிகள் சப்ளை பிரமாதம்! குழந்தைகளைப் பாராட்டுவோம் அப்பள்ளியையும்!!அதே போன்று நம் சிறுவயது விளையாட்டுகளை விளையாட வைத்து டிவி நேரத்தைக் குறைத்த தமிழாசிரியருக்கு வந்தனங்கள் பல!!! நிச்சயமாக அக்குழந்தைகளுக்கு நினைவுத் திறன் அதிகரிக்கும்!! மாலையில் நன்கு விளையாடினால்!!

    ஜெயபாலாஜி ஹைடெக்!!!! நல்ல விஷயம்தான்.....

    ஜெயசீலி தன்னம்பிக்கை நிறைந்த பெண்...சிறந்த உதாரணம்! ஆம் பெண்கள் தொழில் செய்வதோ இல்லை ஏதேனும் வேலைக்குச் செல்வதோ மிக மிக நல்ல விஷயம்!

    அனைத்தும் நல்ல நியூஸ்...பாஸிட்டிவ் கூடியிருப்பதும் மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் ஏதோ கதைக்கான தலைப்பு அல்லது கிசு கிசு செய்திக்கான தலைப்பு போல ஹாஹாஹாஹாஹா...கவர்ச்சியாகத்தான் இருக்கு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஜீவி ஸாரின் பெயரிடல் பற்றிய கருத்து செம!! உண்மைதான் இல்லையா! அப்படிப் பெயர் வைத்து அழைக்க அழைக்க நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷனும் வரும் தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்ந்து வாரா வாரம் கண்ணில் படும் நற்செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  22. மனிதத்திலும் மனிதர்களிலும் நம்பிக்கை வளர்க்கும்செய்திகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!