வெள்ளி, 3 மே, 2019

வெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி

புதிய சங்கமம்.  சாருஹாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம்.  சுஹாசினி, பிரபு, சந்திரசேகர் நடித்த திரைப்படம்.




இதைத்தவிர வேறு விவரம் எதுவும் தெரியாது.  சுஹாசினி ஆரம்ப காலங்களில் எல்லா விதமான படங்களிலும் நடித்திருக்கிறார்.  கலைப்படம் என்று சொல்லக்கூடிய படங்களாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கல்யாண காலம்,புதிய சங்கமம் (இது அவர் தந்தையே இயக்கிய படம்), மருமகள், ஆகாய கங்கை என்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்!



பாடல் அப்போது கேட்டிருக்கிறேன்.  மறுபடியும் சில நாட்களுக்கு முன் நினைவு வந்தது.  வெள்ளி வீடியோவில் இணைத்து விடலாம் என்று எடுத்து விட்டேன்.



சற்றே கிராமத்து வாசனை வீசும் பாடல்.  காட்சியில் சந்திரசேகரும் சுஹாசினியும்.  அவர்கள் காதல் ஒரு சிறு பெண்ணுடைய சாட்சியில் அரங்கேறுகிறது.  பின்னணி இசை கவர்கிறது.



பாடல் எழுதியவர் யார் என்று தெரியவில்லை.  இசை கங்கை அமரன். பாடலையும் அவரே எழுதி இருக்கக்கூடும்.

முக்கியமான குறிப்பு :  காட்சியாக காணாமல் பாடலைக் கேட்டால் குறை சொல்ல மாட்டீர்கள்.



எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை 
இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை 

இது அரியசம்பவம் உன் அழகு மங்கலம் 
தரும் மஞ்சள் குங்குமம் புதிய சங்கமம் 

உன்னால் வந்தது என்னால் வந்தது உலகில் நமது சொந்தம் 
உனைக் கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும் கனிந்துவிட்டது ஞ்சம்..

இங்கு நேத்திருந்தது  பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி 
ஒரு காலம் வந்தது  நேரம் வந்தது மலர்ந்து விட்டது குறிஞ்சி  

உன் அன்பு எனது இல்லம் அது இனிக்கும் சர்க்கரை வெல்லம் 

இது எந்தன் பாக்கியம் இனிய காவியம் 


நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும் நடந்து விட்டது இன்று 
இங்கு கொஞ்சி நிற்குது குலுங்கி நிற்குது நெறஞ்ச மனசு ரெண்டு 

எப்படி எப்படி நடக்குமென்று எவருக்கிங்கே தெரியும் 
எல்லாம் வல்லவன் போடும் முடிச்சை யாரால் அவிழ்க்க முடியும் 

அந்த விதியின் வலிமை பெரிசு சொந்த மதியின் வலிமை சிறிசு 

ஒரு தெய்வம் வந்தது உறவைத் தந்தது...



60 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார் மற்றும் இனி வரப்போகும் அனைத்து நண்பர்களுக்கும்....

      நீக்கு
    2. நல்வரவு அளித்த துரைக்கும் மற்றும் வரவேற்ற/வரவேற்கப் போகும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
  2. பாடல் நன்றாகத்தான் இருக்கிறது..

    ஆனாலும் இது கேட்டதாக நினைவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எஸ் பி பியும் ஜானகி அம்மாவும் ரசித்துப் பாடியிருப்பதாகத் தோன்றும் எனக்கு.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. பலமுறை கேட்டு ரசித்த நல்ல பாடலே...
    படம் தெரியும் ஆனால் பார்த்த ஞாபகம் இல்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படம் பார்க்கவில்லை கில்லர்ஜி. என்ன கதை என்று கூட தெரியாது. இணையத்திலும் பெரிய அளவில் கிடைக்கவில்லை! ஆனாலிந்தப் பாடல் அப்போதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும்!

      நீக்கு
  5. சாருஹாசன் படங்களை இயக்க வேறு செய்திருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்!​

      நீக்கு
  6. பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. சுஹாசினி நடிக்க வந்த புதிதில் முதுகை கூன் போட்டுக்கொண்டு ஒரு மாதிரி தமாஷாக நடப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... மேலும் ரொம்பவே ஒல்லியாய் இருப்பார்!

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      பாடல் கேட்க இனிமையாக இருந்தது.
      வரிகளும் அருமை. அனைவருக்கும் இனிய நாளாக
      அமைய வாழ்த்துகள்.
      @ பானுமா, சிரிப்பு வருகிறது அந்தக் கால சுஹாசினியை நினைத்தால்.
      கரெக்டா சொல்லிவிட்டீர்கள்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...

      இனிய காலை வணக்கம்.

      பாடலை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  7. இப்படி ஒரு படம் வந்ததோ அதில் சுஹாசினி நடிச்சதோ தெரியாது! பாடலை எங்கே கேட்டிருக்கப் போறேன்! தி/கீதா வந்தா ராகங்களை அக்குவேறு ஆணி வேறா அலசித் துவைச்சுக் காயப் போடுவாங்க! ரொம்பவே பிசி! அதனால் போயிட்டுப் பின்னர் முடிஞ்சா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை ..
      இன்னிக்கு அவர் தப்பிச்சார்!...

      நீக்கு
    2. கீதா பாடலை ரசித்ததாக தகவல் அனுப்பி இருக்கிறார். பாடல் ரேவதி ராகமாம்.​

      நீக்கு
  8. பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. சுஹாசினி நடத்த ஒரு படம் தவிர வேறு பார்த்த ஞாபகமும் இல்லை. சந்திரசேகரின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம்.

    பாடல் கேட்டதுண்டு. இனிமையாக இருக்கிறது கேட்க! காட்சி பார்க்காமல் கேட்டேன்! பார்க்கும் அளவுக்கு தைர்யம் இல்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட். பாடலை ரசித்ததற்கு நன்றி. நல்ல பாடல்.

      நீக்கு
  10. பாடல் கேட்ட நினைவு இல்லை.
    இன்று தான் கேட்டேன்.
    இரண்டு பேரும் குரலும் நன்றாக இருக்கிறது.
    சுஹாசினிக்கு குரல் கொடுக்க முயன்று இருக்கிறார் கொஞ்சம் குரலை மாற்றி ஜானகி அவர்கள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இதுவரை இந்த பாடலும், படமும் கேட்டதில்லை. கேள்வியும் பட்டதில்லை. சுஹாசினி நடிப்பு நன்றாக இருக்கும். இன்று பாடலை கேட்டேன்.எஸ்.பி.பி, ஜானகி அவர்களின் இனிமையான குரலில் பாடல் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி

    சகோதரி கீதாரெங்கன் அவர்களை காணவேயில்லயே.!இன்று வரையிலான ஒருவார பதிவுகளுக்கு வந்த கருத்துக்களின் அலசலிலும், அதனை பதி(உரு)வாக்கும் தயாரிப்பிலும், பிஸியாக உள்ளார் என நினைக்கிறேன். சரியா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      கீதா ரெங்கன் சற்றே பிஸியாக இருக்கிறார். திங்கள் முதல் வருவார் என்று....

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஹா ஹா ஹா "வருவார் என்று..." என நீங்கள் நினைக்கும் போது என் யூகம் "நீ நினைப்பது சரிதானென்று" மெய்பிக்கிறது.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஹா..... ஹா...​ ஹா... லெட் அஸ் வெயிட்!

      நீக்கு
  12. கேட்ட பாட்டாக இல்லை, எனக்கு இதில் பாட்டை விட வீடீயோ கண்ணுக்கு இதமாக இருக்கு.
    பாலைவனச் சோலையிலும் இவர்கள் தானே ஜோடி.... அழுதழுது மூக்கடச்ச படங்களில் அதுவும் ஒன்று ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ மியாவ் நீங்க டி ராஜேந்தர் அங்கிளின் பழைய படங்களை பாருங்களேன் :) மூக்கு என்ன மூச்சே அடிக்கிற மாதிரி இருக்குமாம் :)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா தங்கைக்கோர் கீதம் பார்த்து மூச்சடைத்ததுதான்:)
      ஆனா ரயில் பயணங்களில் ... பார்த்து ... அன்று சாப்பிடவேயில்லை:)

      நீக்கு
    3. வீடியோ கண்ணுக்கு இதமாக இருக்கா... ஆ... ஆ.... அதிரா!

      நீக்கு
    4. Angel... டி ராஜேந்தர் படம் பார்க்கவே தனி இதயம், தனி தைரியம் வேண்டும் - நான் எனக்குச் சொன்னேன். எனக்கு அந்த தைரியம் இருந்ததில்லை.

      நீக்கு
    5. அவ்வ்வ்வ் ஹாஹாஆ :) அவர் ஒரு பாடல் காணொளி பார்த்தேன் வியந்து விழுந்து புரண்டு சிச்சேன் :) எல்லாரும் டூயட்டுக்கு மாட்டு வண்டில போவாங்க குதிரை வண்டில போவாங்க கார்ல கூட போவாங்க இவர் ஆட்டு வண்டியில் போறார் :))

      நீக்கு
    6. ஒரு தலை ராகம் தவிர நான் வேறு டி ஆர் ஆர் படம் பார்த்ததில்லை என்பதால் தெரியவில்லை.

      நீக்கு
    7. அந்த பாட்டு பாக்க காரணமே நீங்க தான் கர்ர்ர்ர் உங்க வெள்ளி பாடல் பார்க்கும்போது ஆட்டோ பிளேவில் வந்து :) அப்ப்போதான் பார்த்தேன் ஆட்டுவண்டி ஓட்டிட்டு போறார் :)))

      நீக்கு
  13. அவ்வ்வ் சுஹாசினியை பார்த்ததும் :) அவர் பரதம் ஆடிய போட்டோ ஒன்னு கௌதமன் சார் fb ல போட்டார் அது நினைவுக்கு வருது :) இந்த பாட்டில் சந்த்ரு அங்கிள் வேஷ்டி கழுத்தில் துண்டு சகிதம் ராம்ப் வாக் ஸ்டைலில் நடந்து வரார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அந்தப் பாடல் ரொம்...............பப்பிடிக்கும் ஏஞ்சல்... பகிரும் லிஸ்ட்டில் இருக்கும்பாடல் அது...

      நீக்கு
    2. எந்த பாட்டு ??????????? சிவா அங்கிள் பாட்டா nooo :)) அப்படின்னா ஒரு request ஆடியோ மட்டும் போடுங்க :))

      நீக்கு
    3. ஹா.... ஹா.... ஹா.... முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  14. இது பாட்டும் படமும் கேள்விப்படலை .ஆனா இதே பாட்டு மெட்டு மாதிரி இல்லம் சங்கீதம்னு ஒரு பாட்டு வருமேன்னு தேடி பார்த்து மயங்கினேன் அது அது அது :) ஸ்ரீராமின் பிரிய ஹீரோ சிவா அங்கிள் பல்வேறு எக்ஸ்(ட்ரா)ப்ரெசென்ஸ் காட்டி நடிச்சிருக்கார் அதை பார்த்துதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லம் சங்கீதம் மாதிரி இருக்கா? ஒருவேளை அதுவும் ரேவதி ராகமோ என்னவோ!

      நீக்கு
  15. உண்மைதான். காட்சியையும் கானத்தையும் இணைத்துப்பார்க்கும்போது மிகவும் ரசனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  16. என்ன ஶ்ரீராம் இன்று சுஜாதாவின் பிறந்த நாளை எப்படி மறந்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் லேட்டாக நினைவுக்கு வந்தது. வெளியான பதிவில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன்! நேற்றே சொல்லி இருக்கலாம் என்றும் தோன்றியது... எப்படி மறந்தேன்...

      நீக்கு
  17. இரண்டு நாட்களுக்கு முன் ஏதோ ஒரு சேனலில் உத்தரவின்றி உள்ளே வா படம் போட்டார்கள். அழகான காஞ்சனா, அருமையான பாடல்கள். ஶ்ரீராமின் கலக் ஷனில் இல்லையா என்று நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய எல்லோருக்கும் தெரிந்த பாடல்களை முடிந்தவரை தவிர்த்து மற்ற இனிமையான பாடல்கள் என்று நான் நினைப்பதைப் பகிர்கிறேன்.

      நீக்கு
    2. //முடிந்தவரை தவிர்த்து// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வெள்ளி பதிவைச் சாக்கிட்டு இன்னும் ஒரு தடவை கேட்டு இனிமையில் நாங்கள் திளைத்தால் நல்லதுதானே.... இல்லை, மிக அருமையான காட்சிக்குப் பொருத்தமான அல்லது தத்துவப் பாடல் வரிகள், ஆனால் பாடல் நினைத்த அளவு ஹிட் இல்லை என நினைத்தால் பகிரலாம், தெரியாததைத் தெரிந்துகொண்டோம், இல்லை கவிதையை அனுபவித்தோம்னு தோணும்.

      நானும் ஊதுற சங்கை ஊதிக்கொண்டே இருக்கிறேன்...ஹாஹா

      நீக்கு
    3. கேட்ட பாடலையே கேட்டுக் கொண்டிருந்தால் இந்தப் பாடல்களை எல்லாம் எப்போ கேட்பது நெல்லை?!!!! அதுதான்...

      நீக்கு
  18. ஸ்ரீராம் கொஞ்சம் பொறுமையாகத் தேடியிருந்தால் இதே படத்தில் மலேஷியா வாசுதேவன் பாடிய பாடல் ஆடியோ மட்டும், கேட்க இதை விட நன்றாகவே இருந்ததும் கிடைத்திருக்குமோ? #டவுட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கிருஷ் ஸார்... இந்தப் பாடல் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பாடல் எதுவும் கேட்ட நினைவில்லை. லிங்க் கொடுங்களேன்... கேட்கிறேன்.

      நீக்கு
    2. https://mio.to/album/Ramakrishna+Raja/Puthiya+Sangamam+%281982%29

      இந்த லிங்கில் முதல் பாடலே மலேசியா வாசுதேவன் பாடிய எம் பேரு காத்த முத்து காணிநிலம் எந்தன் சொத்து படத்திலுள்ள 4 பாடல்களும் ஆடியோவாக

      நீக்கு
  19. சிறந்த பாவரிகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  20. இந்தப் படம் பற்றி தெரியும் படமும் நாகர்கோவிலில் இருந்ததால் பார்ட்த நினைவு ஆனால் கதை நினைவில்லை. பாடல் படம் பார்க்கும் போது கேட்டதோடு சரி அப்புறம் அவ்வளவாகக் கேட்ட நினைவில்லை. இப்போதுதான் கேட்கிறேன். பாடல் நல்ல பாடல். ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. நான் இந்தப்பாடலைக் கேட்டதே இல்லை ஸ்ரீராம் இப்பத்தான் கேட்கிறேன். பாட்டு நல்லாருக்கு.

    ராகம் ரேவதி. ரேவதி ராகம் ஆரம்பித்து இடையில் ராகம் அப்படியே இல்லை என்றாலும் ரேவ்தி பேஸ் பாடல்தான்.

    படம் பற்றி எல்லாம் இப்பத்தான் தெரியுது ஸ்ரீராம். எனிவே படம் முக்கியமல்ல பாட்டுத்தான்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!