3.11.09

முக(மில்லா) வரிகள்!

அது ஆண்டு 1975. டிசம்பர் மாதம்.
சென்னையில், பிரிட்டிஷ் கவுன்சிலில் - நான் ஒரு பகுதி உறுப்பினன். பகுதி உறுப்பினன் என்றால் என்ன? சந்தா தொகை அந்தக் காலத்தில் என் பைக்கு அடங்காதது என்பதால் - நண்பர் பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தியுடன் கூட்டு சேர்ந்து - சந்தாவைப்  பிரித்து, புத்தகங்களையும் பிரித்து எடுத்துப் படித்துவந்தோம். 
அந்த நாட்களில், எனக்கு பி ஜி வோட்ஹவுசை ( P G Wodehouse) புத்தகங்களில் அறிமுகம் செய்து வைத்தவர் - என் தம்பி தியாகுவின் தோழர் - வழக்கம் போல் பெயர் மறந்துவிட்டது - முகம் ஞாபகம் உள்ளது - ஒருவர்.
அப்போ நான் பிரிட்டிஷ் கவுன்சிலில் நிறைய விரும்பி எடுத்துப் படித்த புத்தகங்களில் - பி ஜி வோட்ஹவுஸ் புத்தகங்கள் நிறைய உண்டு. ஒரு புத்தகத்தில் (பி ஜி வோ - புத்தகம்தான்).
கடைசி பக்கத்தில் யாரோ ஒருவர் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்:
16.2.1975
"What a sad day for us, the Wodehousian lovers - even Pelham had to hand-in his dinner pail "
இந்த வரிகளுக்கு முகம் இல்லை - அதாவது யார் எழுதினார்கள் என்று தெரியாது. ஆனாலும், இதை என்னால் மறக்க முடியவில்லை. 

5 கருத்துகள்:

  1. இது போன்ற புத்தக வரிகள் ஆசிரியரால் எழுதப்படாது என்னினைவிலும் நிறைய

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் குழு3/11/09 12:49 PM

    புலவன் புலிகேசி அவர்களே - நன்றி.
    நினைவில் உள்ளவைகளை 'எங்களு'டனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்களும் சுவைத்து, மற்றவர்களுக்கும் - அளிக்கிறோம், உங்கள் பெயருடன்.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம் அந்த ஆங்கில வரிகளைத் தமிழில் தந்தால் முழுமையாக ரசிக்க முடியும் எல்லோராலும்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4/11/09 6:22 AM

    hand in dinner pail என்றால் என்ன பொருளோ தெரியவில்லை. kicked his bucket மாதிரி இதுவும் ஒரு idiom போலும். அது இந்த idiot க்கு புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா6/11/09 8:02 PM

    // 16.2.1975
    "What a sad day for us, the Wodehousian lovers - even Pelham had to hand-in his dinner pail "//
    " என்ன ஒரு வருத்தமான - நாள் - வோட் ஹவுசின் நேசர்களாகிய நமக்கு இன்று! பெல்ஹாமும் உயிரை விட்டுவிட வேண்டியதாகிவிட்டதே!"
    சரியா ஸ்ரீராம்?
    The touching word in the sentence is "even".

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!