செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க...." - கிரிக்கெட் பதிவு.

                                      
தினமணியில் மதியின் சமீபத்திய இரண்டு கார்ட்டூன்கள் ரசிக்க வைத்தன. இப்போது(ம்) தோற்ற கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்க்சில் தோனி விளையாடும் நாளில் மதி கார்ட்டூன். "அட, தோனி ஐம்பது அடிக்கப் போறாரு....இன்னும் ஒரு ரன் போதும். இதுவரை விளையாடிய இன்னிங்க்சுகளில் மொத்தம் நாற்பத்தி ஒன்பது அடித்திருக்கிறார்.. இன்று ஒரு ரன் எடுத்தால் ஐம்பது.."

அடுத்தது "ராகுல் டிராவிட்டை ஒன் டேயில் விளையாடக் கூப்பிட்ட மாதிரி டெஸ்ட்டில் விளையாட கவாஸ்கர், கபில், மொஹிந்தர், விஸ்வநாத் என்று கூப்பிட்டுப் பார்க்கலாமா " என்று யோசனை சொல்லியிருக்கிறார்!
=============================
             
ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பு முன் காலத்தில் இங்கிலாந்தை இந்தியா ஜெயித்த மேட்சுகள் சிலவற்றைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆறுதல் போலும்.    
கவாஸ்கர் தனது கோபமான பேட்டியில், 'இந்தியாவின் சில ஆட்டக்காரர்கள் உலகக் கோப்பை ஜெயித்துக் கொடுத்ததற்கு இந்தியா தங்களுக்கு கடன் பட்டிருப்பது போல் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்திலிருந்தே இன்னும் அவர்கள் வெளிவரவில்லை. இவ்வளவு நோ பால் போடும் பவுலரை கோச் ஒன்றும் கேட்கக் கூட மாட்டாரா...' என்று கூறி, field placing பற்றியும் தன் கோபத்தை வெளிப் படுத்தினார்.
=====================================

நடுவில் ஒருமுறை பார்த்தபோது கங்குலி, வாசிம் அக்ரம் இருவரையும் பழைய இங்க்லீஷ் `பிளேயர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருக்க, கங்குலி அக்ரம் பௌலிங் பற்றி நினைவு கூர்ந்து ஒரு பழைய மேட்ச் பற்றி சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.

"சட் சட் என்று எல்லா பேட்ஸ்மேனும் அக்ரம் பௌலிங்கில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே போன போது அசாருதீன் கிரீசில் நின்று கொண்டிருக்க, நான் அவரிடம் போய், 'என்ன நடக்கிறது' என்று கேட்க, 'அதுதான் நீயே வந்துட்டேயில்ல, ஆடிப் பாரு' என்பது போலச் சொன்னார். இரண்டு மூன்று பால் விளையாட ஆரம்பித்ததுமே ஒன்றும் புரியவில்லை. உள்ளே ஸ்விங் ஆகி வரும் பாலை இடது புறம் திருப்பிவிட ட்ரை செய்யும்போது அது பேட்டில் பட்டு அபாயகரமாக தர்ட் மேன் திசை நோக்கிச் செல்ல, சமாளிக்க முடியாமல் திணறி, ஓவர் இடையில் அசாருதினிடம் 'என்ன இது' என்று கேட்டபோது அதைத்தான் கடந்த அரை மணி நேரமாக நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார். அக்ரம் பௌலிங் போட வரும்போது பந்தைப் பார்க்க முடியாமல் மறைத்து வைத்து ஓடிவருவார். அப்புறம் நானும் அசாருதீனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். 'நான்- ஸ்ட்ரைக்கர்' எண்டில் யார் நிற்கிறார்களோ அவர்கள் வாசிம் அக்ரம் பந்து வீச வரும்போது பந்தின் ஷைனிங் பக்கம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று பார்த்து அந்தப் பக்கம் (இடது அல்லது வலது) தனது பேட்டைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு அவர் பந்துகளை சமாளித்து ஆடிக் கொண்டிருந்தோம். குழம்பிப் போய் வெறுத்துப் போன அக்ரம் மெல்ல பவுன்சர்கள் போட ஆரம்பிக்க, அப்பாடி என்று எங்களுக்கு ரிலீஃப் வந்தது '

கங்குலி சொன்னதைப் புன்னகையுடன் அருகிலிருந்த வாசிம் அக்கரம் கேட்டுக் கொண்டிருந்தார்!

Interesting!
============================================
    
கன்னா பின்னா உடையணிந்த இங்கிலாந்து ரசிகர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். போட்டியாம்! முதலிடம் ஜெயிப்பவர் வாழ்நாள் முழுக்க அந்த ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சுகளைப் பார்க்க இலவச அனுமதியாம்! ஜட்ஜ் மைக் கேட்டிங்காம்! இந்தியாவில் என் இந்த ஐடியா யாருக்கும் வரவில்லை?!!
=============================================


#டவுட்டு !
பையன்: "அப்பா - ஏ முகுந்த் பி பிராட் அப்படீங்கறவர் எந்த ஸ்டேட்?"    
அப்பா: "என்னது?  ஏ முகுந்த் பி பிராடா? அப்படி யாரும் கிடையாதே!"      
பையன்: "முதல் டெஸ்டுல அவர் அந்தப் பேர்ல ஆடினார். அப்புறம் இரண்டாவது டெஸ்டில் ஏ முகுந்த் பி ஆண்டர்சன் என்று பெயரை மாற்றிக் கொண்டு ஆடினார் 
போலிருக்கு. ஆனால் அப்பவும் அவர் இரண்டு இன்னிங்க்ஸ் சேர்த்து மூன்று ரன்தான் எடுத்தார்! " 
    

=============================================


தோனி பேட்டி...     

     
"......எங்களை ஒரு ப்ளேன்ல அழைச்சிகிட்டு போனாங்கம்மா....அங்க ஒரு பதினோரு பேர் இருப்பாங்க...அவங்களால முடிஞ்சவரை அடிச்சாங்க....பதிலுக்கு அடிக்கலாம்னுதான் பார்த்தோம்...அப்போ... அப்போ.... ஸ்ட்ராஸ் சொன்னாரு இவங்களை எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாங்க....இந்தியா ரொம்ப நல்ல டீம்னு சொன்னாரும்மா...ஆ....ஆ...அவ்வ்வ்வ்" 

கையில் அடிபட்ட பிரவீன் அடுத்து வந்த மூன்று பந்தும் சிக்சர் அடித்ததுமல்லாமல் அப்புறமும் அடித்து விளையாடி வாண வேடிக்கைகள் நிகழ்த்த இந்திய ரசிகர்களுக்குக் கொஞ்சம் கை தட்ட கொஞ்சம் வாய்ப்பு! தோனியும் அடித்து ஆடினார். இதைப் பார்த்ததும் எங்களுக்குத் தோன்றிய ஒரு சில யோசனைகள்:-
  
*அடுத்த மேட்சிலிருந்து பிரவீன் குமாரும் மிஸ்ராவும் இன்னிங்க்ஸ் ஓபன் பண்ணவேண்டும். ஷர்மா ஒன் டவுன். அப்புறம் ஸ்ரீசாந்த். அப்புறம் தோனி, இப்படி பேட்டிங் வரிசை அமைக்கலாம்.
*மதி சொன்ன யோசனையும் நல்ல யோசனை. பட்டோடி, மொஹிந்தர் அமர்நாத் போன்ற பழைய ஆட்களை விளையாட அழைக்கலாம். இவர்கள்தான் ஓய்வு இல்லாமல் விளையாடி அலுத்துக் களைத்துப் போயிருக்கிறார்களே...
*எப்படியும் அவுட் ஆவது, தோற்பது என்று முடிவு செய்து விட்டார்கள். எதற்கு ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டு... சட் சட்டென அவுட் ஆகி விட்டால் உள்ளே வந்து தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்." 

*பி சி சி ஐ இடம் சொல்லி அம்பையர்களை கரெக்ட் செய்ய முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாம்." 

*புதுப் பந்து எடுக்கும்போதெல்லாம் முக்கிய பேட்ஸ்மேன்கள் நைசாய் ரிடையர்ட் ஹர்ட் என்று சொல்லி உள்ளே வந்து விட்டு பந்து பழசானவுடன் சரியாகி விட்டது என்று விளையாடப் போகலாம்!

*பை ரன்னர் வைத்துக் கொள்வது போல (அதையும் இப்போது தடை செய்து விட்டார்கள்) பை பேட்ஸ்மேன் வைத்துக் கொள்ளலாம். சுரேஷ் ரெய்னா, சேவாக் போன்றவர்கள் பை பேட்ஸ் மேனாக பிரவீன், மிஸ்ரா போன்றோரை வைத்துக் கொள்ளக் கேட்டுப் பார்க்கலாம்.

*இடது பக்கம் அடிப்பது போல பாவ்லா காட்டி ஃபீல்டர்களை ஏமாற்றி நைசாய் வலது பக்கம் அடிக்கலாம்!

*நம் பவுலர்கள் பௌலிங் செய்யும்போது பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் நம் ஃபீல்டர்கள் 'நோ பால்' என்று குரல் கொடுத்தால் இங்க்லீஷ் பேட்ஸ்மேன் அலட்சியமாய் விளையாடி அவுட் ஆகிறார்களா என்று முயன்று பார்க்கலாம்!

*ஒரு சூதாட்ட புக்கி எங்களைச் சந்தித்து நிறைய ரன் எடுத்தால் நிறையப் பணம் தருவதாகச் சொன்னார். அதற்கு உடன்படாத நாங்கள் நாட்டுப் பற்றுடன் உடனே அவுட் ஆகி விட்டோம் என்று பேட்டி தரலாம்!"

'இன்னும் என்னென்ன பாய்ண்ட்ஸ் தரலாம் என்று வாசகர்கள் யோசனை சொல்லுங்களேன்!'

'வெற்றியும் தோல்வியும் சகஜம். எங்கள் எண்ணத்தில் ஏதும் மாற்றமில்லை' என்று தோனி சொல்லியிருக்கிறார். ஆகையால், இந்தியா தோற்கப் போகும் அடுத்த டெஸ்ட் ஓவலில் வரும் பதினெட்டாம் தேதி தொடங்குகிறதாம்.
                       

12 கருத்துகள்:

  1. கிரிக்கெட்டிலிருந்து ரிடையரான பிறகு என்ன வேண்டுமானாலும் யோசனை சொல்லலாம். கவாஸ்கர் ஆடிய காலத்தில் எவ்வளவு அசிங்கமாக இந்தியா தோற்றிருக்கிறது. தோனி கூட ரிடையரான பிறகு, அப்போதைக்கு இருக்கும் இந்திய அணியை பார்த்து என்ன விளையாடுகிறார்கள் என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்ட்ராஸ் சொன்னாரு இவங்களை எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாங்க....இந்தியா ரொம்ப நல்ல டீம்னு சொன்னாரும்மா.//


    அடித்து ஆடி பதிவிட்டிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்,

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சிம்பிள்..

    Two options :

    1) நம்ம அணியோட பேரு 'இங்கிலாந்துனு' வெச்சிட்டா நாமதான் வின்.. வின்.. வின்.. வின்னோ வின் ..

    2) இந்தியாதான் ஜெயிக்கணும்னு சொன்னீங்கன்னா.. ..
    ம்ம்ம்.... வேற வழியில்லை... விளையாட்டு வீரர்களை மியூச்சுவல் எக்சேஞ்ஜ் பண்ணிடலாம்..

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இந்த 20 -20 வந்த பிறகு தான் டெஸ்ட் இவ்வளவு மோசமாச்சு….அதுவும் ஐபிஎல் மாதிரி கூட்டு கும்மி ஆட்டங்கள் வந்த பிறகு ஒரு திட ஆட்ட கோட்பாடே இல்லாமல் போச்சு…..
    தோனி மாதிரி கேப்டனுக்கு ஒய்வும் ஊக்கமும் தற்போதய தேவை..

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

    www.tamil10.com

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. //
    ஏன் போஸ்ட் போடலைன்னு யாராச்சும்
    கேப்பாங்கன்னு பார்த்தா.. உஹூம்..
    யாருமே கண்டுக்கற மாதிரி தெரியல..
    //
    :):):)
    மற்றபடி கிரிகெட்டில் அதிகம் ஞானம் இல்லாததால் பாயிண்ட்டுகளை அள்ளி விட முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  8. காவஸ்கர் இன்னும் க்ரிகெட் பேசுறாரா? தோனி இப்போ அந்தோனியா?

    பதிலளிநீக்கு
  9. நான் ஸ்ட்ரைக்கர் எண்ட் வெறுமனே கதையைத் தூக்கிக் கொண்டு நிற்க அல்ல என்பதற்கு உதாரணம் தோனியும்-அசாரும் செய்த அந்த யுக்தி! நல்ல தகவல். நன்றி பகிர்வுக்கு.. :-))

    பதிலளிநீக்கு
  10. அக்ரம் பொளலிங் பற்றி கங்குலி நினைவு
    கூர்ந்த விஷயம் சுவாரசியம். இந்திய கிரிக்கெட்டே வேடிக்கையாகி விட்டது.

    கிரிகெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்திவிட்டு மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. போன வருடம் உலகக்கோப்பை போது இந்தியாவில் இருந்ததால் பார்த்தேன், இல்லையேல் செய்திகளில் கூட அதை நெருங்குவதில்லை.

    எழு வருடங்களுக்கு முன் வரை வாரவாரம் கிரிக்கெட் ஆட பிடிக்கும். இந்த பயலுவள பார்ப்பதை விட சும்மா உட்கார்ந்து சோம்பல் முறிக்கலாம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!