வெள்ளி, 4 செப்டம்பர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150904 :: விபரீதச் சடங்கு



 பதற வைக்கும் பழக்கம்.  மகாராஷ்டிரா, கிரிஷ்னேஷ்வர் கோவிலில் 50 அடி உயரத்திலிருந்து ஒரு வயது, இரண்டு வயதுக் குழந்தைகளை கீழே எறிந்து பெட்ஷீட்டில் பிடிக்கிறார்கள்.  குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திசாலிகளாகவும் வளர்வார்களாம்.









ஏழு நாள் தொடர்கதை.   वह कौन है?  [ஐந்தாம் நாள்]


5. அவளைக் கண்டு அவன் நடை சற்றே தயங்கியிருந்தாலும், நிற்கவில்லை.  ஆனால் அவன் நடையில் ஏன் இந்தத் தயக்கம் என்றுதான் பாண்டியனுக்குப் புரியவில்லை.

சில வீடுகளின் கதவு அரைவாசி திறந்திருக்க,  பெரும்பாலான வீடுகளின் கதவுகள் மூடி இருந்தன.

கொஞ்சம் அருகில் வந்து விட்ட அவன் பார்வையில் இப்போது பாண்டியன் நின்றிருந்தது தெரிந்தது.  அந்த வீட்டை ஓரப் பார்வை பார்த்த அவன் இவனைக் கண்டதும் சற்றே தயங்கினான்.  அவன் முகத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது.
பின்னர் தனக்குத் தானே தலையாட்டிக் கொண்டவனாய், கால்சராய்ப்  பைக்குள் கைவிட்டான்.


                                                                                                                                                                     நாளை..

21 கருத்துகள்:

  1. அம்மாடி!! இதென்ன பழக்கம்!!! பகீர்னு இருக்கு!

    பதிலளிநீக்கு
  2. கொடுமையான பழக்கமாக அல்லவா இருக்கிறது
    தம+1

    பதிலளிநீக்கு
  3. அதென்ன? இரண்டாவது வீடியோவில் ஒரு வெள்ளைப் பந்து பறந்து வருகிறதே....??

    பதிலளிநீக்கு
  4. இதுக்கெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை.....புரட்சி செய்வதில்லை....வேண்டாத, சில நாட்களே வெளி வரும் சில விசயங்களுக்கு மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கேள்வி கேட்டு, எழுதி புரட்சி செய்கின்றார்கள்....என்ன கொடுமை இது...நாங்கள் வீடியோவை ஒரு குழந்தை பார்த்ததுமே நிறுத்தி விட்டோம்....பார்க்க மனம் இல்லை...பகீர் என்றது...இன்னும் ஏன் இந்தியா இப்படி இருக்கின்றது அதற்கான விடை...

    பதிலளிநீக்கு
  5. கால்சராய்க்குள் என்ன இருந்திருக்கும்? துப்பாக்கி? சே என்ன ஒரு கற்பனை?!!!.....ம்ம் நிறைய துப்பறியும் கதைகள், படங்கள் பார்த்த விளைவில் கற்பனை...ஆனா இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு..அதுக்குள்ள சஸ்பென்ஸ் தெரிஞ்சுரும்....

    கீதா: ஆனந்தவிகடனில் 10 செகன்ட் கதை வருது பார்த்தீங்களா...? ஜஸ்ட் 7 நாளில் அதுவும் இத்துனூண்டு இத்துணூண்டா ஒரு சஸ்பென்ஸ் கொண்டு போக முடியும்னா ஏன் நீங்க அதுக்கும் எழுதக் கூடாது?!!!!!

    முன்னாடி நீங்கள் ஒரு அமானுஷ்யம்/பேய் கதை ஒரு நிமிடக் கதை என்று சுஜாதா பற்றியும் சொல்லி எழுதிய நினைவு....முயற்சி செய்யலாம்...இந்த 10 செகன்ட் கதை பற்றி ஆவிதான் சொன்னார்...அவர் இரண்டு அனுப்பியிருந்தார் அதில் ஒன்று நன்றாகவே இருந்தது. ஆனால் வெளிவரவில்லை. வெளி வந்தவை சில மொக்கை...ஒன்றுமே இல்லை ....

    பதிலளிநீக்கு
  6. கள்ளச் சாராயத்தை ஒழிக்க நல்லச் சாராயம் கொடுத்த கதைான்..அந்த விபரீத சடங்கு.....

    பதிலளிநீக்கு
  7. கள்ளச் சாராயத்தை ஒழிக்க நல்லச் சாராயம் கொடுத்த கதைான்..அந்த விபரீத சடங்கு.....

    பதிலளிநீக்கு
  8. விபரீத வழக்கம்..

    தொடர் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மூட நம்பிக்கை என்று சொன்னால் பக்தகோடிகளுக்கு கோபம் வரும்

    பதிலளிநீக்கு
  10. கொஞ்சம் விலகினாலும்! முட்டாள் தனமான பழக்கம். இப்படியான பழக்கங்களை அரசு தடை செய்ய வேண்டும்! க்ருஷ்னேஸ்வர் கோயிலுக்குப்போயிருக்கேன். ஆனால் இப்படி ஒரு பழக்கம் இருப்பதை அங்கே அறிந்து கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
  11. இந்தக்கொடுமையை நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் காட்டுமிராண்டிகள்

    பதிலளிநீக்கு
  12. நம்ம ஊரிலும் இப்படி முட்டாள்தன சடங்குகள் உண்டே .....மண்ணில் குழந்தையை புதைத்து எடுப்பார்கள் !

    பதிலளிநீக்கு
  13. ஐயோ.. காணொளி கொடுமை!
    தாங்க முடியவில்லை..:(

    தொடரைப் படிக்கவில்லை மீண்டும் வருகிறேன் சகோ!.....

    பதிலளிநீக்கு
  14. கொடுமை! காட்டு மிராண்டித் தனம்!

    பதிலளிநீக்கு
  15. ஆகா! கடவுளை வழிபட்டு அந்த அப்பாவிக் குழந்தையை ஒரு உலுக்கு உலுக்கி எறிகிறாரே! என்ன அற்புதம்! ஆகா! இதல்லவோ அற்புதம்!

    (அவங்களை யாராவது இப்படி எறிஞ்சதுனால தான் இப்படி அறிவுகூடி நடக்கிறாங்களோ?)

    பதிலளிநீக்கு
  16. சன் டிவியில் இந்த கொடுமையைப் பார்த்தேன். காலம் காலமாய் மக்களிடம் சில் நம்பிக்கைகள்.
    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. இந்த விபரீதச் சடங்குகள் பற்றி பேப்பரில் படித்தேன்.கரணம் தப்பினால் மரணம் என்று ஸர்க்கஸ் காரர்களுக்குச் சொல்வார்கள். இது கணம் தப்பினாலும் மரமம்தான் என்ன அசட்டுத்தனமான மூட நம்பிக்கைகள் என்று நினைத்துக் கொண்டேன். அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!