வியாழன், 3 செப்டம்பர், 2015

ஏழு நாள் தொடர்கதை. वह कौन है? [நான்காம் நாள்]



4. வருபவன் எதிரில் யாராவது வருகிறார்களா என்று தேடுகிறானா, அல்லது வரக்கூடாது என்கிற வேண்டுதலில் வருகிறானா என்று பாண்டியனுக்கு யோசனையாக இருந்தது.

அவன் கையில் ஒரு சிறு பை இருந்தது. 
 
ஒவ்வொரு வீட்டையும் அவன் அளவெடுத்துக் கொண்டே வருவது போலத் தோன்றியது.

நான்கைந்து வீடுகள் தள்ளி வந்த நிலையில் ஒரு வீட்டிலிருந்து கதவை ஒரு கையால் திறந்தபடி, தனது இரு சக்கர வாகனத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தாள் ஒரு பேரிளம்பெண்.  வண்டியை வெளியில் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டவள், கதவை மூடித் தாழிட்டாள். 






உள்ளே யாரிடமோ ஏதோ சொல்லியபடி சாலையில் இறங்கியவள், இவனைக் கண்டு ஒரு நொடி, ஒரு நொடி மட்டும்தான், தயங்கியவள், இவனைப் பார்க்காதது போல வண்டியை ஸ்டார்ட் செய்து ஏறிப் போனாள்.



                                                                                                                                                       நாளை...

19 கருத்துகள்:

  1. யார் வீட்டுக்கு வேலை செய்ய வந்திருக்கானோ?:)

    பதிலளிநீக்கு
  2. சரிதான் டிவி சீரியலை தோற்கடிச்சுருவீங்களோ....

    பதிலளிநீக்கு
  3. சீரியல் தோத்துடும் போல!! :-))
    போஸ்ட்மேன் தானா?

    பதிலளிநீக்கு
  4. படத்தில் இருப்பவரைப் பார்த்தால் பேரிளம்பெண் போலத் தெரியவில்லை;

    பதிலளிநீக்கு
  5. பார்க்காதது போலா
    காத்திருக்கிறோம் நண்பரே
    ஏன்என்று அறிய

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு மெதுவாகவா போறாங்க...!

    சரி.. தொடர்கிறேன் சகோ!..:)

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம் தொடர்கின்றோம்...இது கடைசில அவன் அந்தத் தெருவைக் கடந்து சென்றான் அப்படினு முடிக்கப் போறீங்களோ./..

    பதிலளிநீக்கு
  8. நான்கு நாள் கதையையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். தொடருகிறேன்.
    திடீரென மகாபாரதம் நடுவில் வருகிறதே. நீண்ட நாட்கள் கழித்து இந்தப் பக்கம் வருவதால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  9. போலியோ சொட்டு மருந்துக்கு பிள்ளைகளை தேடுறாரா :)

    பதிலளிநீக்கு
  10. ப்துமையே, உனக்குப் பெயர் தான் 'எங்கள் ப்லாக்கோ'?

    பதிலளிநீக்கு
  11. ஹி.ஹி.. புதுமையே, அச்சுப்பிழையில் முக்குளித்து பதுவையாகி.......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!