புதன், 2 செப்டம்பர், 2015

ஏழு நாள் தொடர்கதை :: वह कौन है?



 3. யாரும் இல்லை என்று அவன் நினைத்திருந்தது தவறு என்பதை அவன் சீக்கிரமே உணருவான்.  மேலேயிருந்து கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நான் சொல்லப் போகிறேன் என்று கற்பனை செய்தால் உங்கள் கற்பனையை ஒரு அறுபது அல்லது எழுபது வருடங்களுக்குச் செப்பனிட வேண்டும்!

அவன் அந்தக் கோடியில் உதயமானது முதலே பாண்டியனின் பார்வையில் அவன் இருந்தான்.  அவனது நடையின் தயக்கம் பாண்டியனை உஷார் படுத்தியது.  அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  ஆனால் பாண்டியன் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது வந்தவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால் நன்றாக அடர்ந்திருந்த மரங்களின் அடர்வில் இருந்த ஒரு கூண்டுக்குள் எப்போதும் அமர்ந்திருக்கும் பாண்டியன், அப்போதுதான் வெளியில் வந்து அங்கு இருந்த ஒரு மரத்தினடியில் நின்றிருந்தான்.  இருந்தபோதிலும் அந்த இடத்தின் அமைப்பினால் அந்தத் தெருவின் முழு அமைப்பையும் அங்கிருந்தே அவனால் பார்க்க முடிந்தது.  வருபவனால் பாண்டியனைப் பார்க்க முடியாமல் மரம் மறைத்தது.  



பாண்டியன் - ஒரு செக்யூரிட்டி.



                                                                                                                                                நாளை.....

15 கருத்துகள்:

  1. அடுத்து என்ன நடந்தது. ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் சில மணித்தியாலங்களில் தொடர் தொடரப் போகிறது!
    நானும் ஆவலில்....!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை.தம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -நன்றி-

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன்...அடுத்து.........

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன்...அடுத்து.........

    பதிலளிநீக்கு
  6. ஹிந்தியில் அது யார் என்று எழுதி இருக்கிறது. அது யார்.?

    பதிலளிநீக்கு
  7. வஹ் கோன் ஹை? நல்ல சஸ்பென்ஸ் ...தொடர்கின்றோம்...கடைசில மொக்கையா, சப்புனு முடிச்சு எங்கள் பல்பு வாங்க வைச்சுடாதீங்க....அஹ்ஹஹஹ்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!