திங்கள், 28 செப்டம்பர், 2015

'திங்க'க் கிழமை 150928 கார பூந்தி. +அன்புள்ள ஆறுமுகம் - ஒன்று

   
தேவையான பொருட்கள்: 
கடலை மாவு : இரண்டு கப் 
அரிசிமாவு : ஒரு கப்.
உப்பு, மிளகாய்த்தூள் : தேவையான அளவு. (அரைத் தேக்கரண்டி என்று சொன்னால் கீதா மேடம் சண்டைக்கு வருவார்கள்) 
சிலர் மிளகுத் தூள் சேர்ப்பார்கள். (மிளகாய்த்தூளுக்கு பதிலாக) 
சன்டிராப் ஆயில் : அரை லிட்டர். 
நிலக்கடலை ஐம்பது கிராம். 
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு. 
     
செய்முறை: 
கடலை மாவு, அரிசிமாவு இரண்டுக்கும் கலப்புமணம் செய்யவும். சாட்சியாக, எடுத்துக்கொண்ட உப்பில், பாதியைச் சேர்க்கவும். (மீதி உப்பு, காரத்தூள் இவை எல்லாம், காரபூந்தி தயாரானதும், கலக்குவதற்கு தேவைப்படும்) மாவுக்கலவையில், தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.  

வாணலியில் எண்ணெயை விட்டுக் காயவைக்கவும். வீடியோவில், காரபூந்தி செய் முறையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.   
     

     

காரபூந்தியை செய்ததும், சுத்தமான டிஸ்யூ பேப்பரில் போட்டு, சிறிது நேரம் வைத்திருந்தால், எண்ணெய் நன்றாக நீங்கிவிடும். 

காசு மிஞ்சி இருந்தால், முந்திரிப்பருப்பை வாங்கி, கால் பருப்புகளாக ஒடித்து, நெய்யில் வறுத்து, காரபூந்தியில் போடலாம். கறிவேப்பிலையைக் கூட, நெய்யில் பொறித்துப் பொடித்துப் போடலாம்!  

இந்த தீபாவளிக்கு காரபூந்தி செய்யுங்கள்! 

==========================================
ஏழு நாள் தொடர்:

அன்புள்ள ஆறுமுகம்  - ஒன்று 
  
ஆறுமுகத்தின் பத்தினி, அஞ்சலை வெளியிலிருந்து, தன வீட்டிற்குள் வருகின்றாள்.

ஆறுமுகம் மும்முரமாக புத்தகம் படித்துக் (பார்த்துக்?) கொண்டிருக்கின்றார்.

அஞ்சு : "என்னங்க தீபாவளி போனஸ் வந்துடுச்சாமே. பங்கஜம் சொன்னா. பங்கஜம் புருஷன் பரந்தாமனும் உங்க ஆபீஸ்தானே? "

ஆறு: (புத்தகத்திலேயே கவனமாக ...)  "உம் ....   உம்."

அஞ்சு : :எனக்கு இந்த தீபாவளிக்கு ஜிமிக்கி வாங்கித் தருவீங்களா?"

ஆறு: "ஜிமிக்கி ?  ஜிமிக்கி!!  ஓ  சரி! அப்புறம்?

அஞ்சலைக்கு ஒரே மகிழ்ச்சி. 'ஆஹா இவர் சந்தோஷ மூடில் இருக்கார். இன்னும் வேண்டியவைகளை நிறைய பட்டியல் போடலாம் போலிருக்கே!'

(தொடரும்)

15 கருத்துகள்:

  1. ரொம்பக் காரமோ? பார்க்கவே செக்கச் சிவந்த நிறத்தில் இருக்கு! ம்ம்ம்ம்ம்? ஒரு டீஸ்பூனுக்குப் பதிலாகக் காரப்பொடியை டேபிள் ஸ்பூனில் போட்டிருக்கீங்களோ? :))))))

    பதிலளிநீக்கு
  2. //அரைத் தேக்கரண்டி என்று சொன்னால் கீதா மேடம் சண்டைக்கு வருவார்கள்) //

    ஹைஹைஹை அஸ்கு, புஸ்கு! நீங்க இப்படிச்சொல்லித் தப்பிச்சா நாங்க விட்டுடுவோமா என்ன? க.வி.எ. ஊத்திட்டு இல்லை தேடுவோம்! :)))))

    பதிலளிநீக்கு
  3. அஞ்சலைக்கு வேண்டியது கிடைக்குமா, கிடைக்காதா, இதான் கதையின் சஸ்பென்ஸா?

    பதிலளிநீக்கு
  4. ஆகா!மொறு மொறு காராபூந்தி!
    காதில ஜிமிக்கியா,பூவா?

    பதிலளிநீக்கு
  5. ஹிஹிஹி, காராபூந்தி போணியே ஆகலை போலிருக்கே! தயிர்வடையோடு சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ! :) என்னோட கருத்தே மூணு! போனால் போகுதுனு சென்னை பித்தன் கருத்திட்டிருக்கிறார். :)

    பதிலளிநீக்கு
  6. ம்ம்காரா பூந்தி மிக்சரில் மட்டுமல்ல அப்படியே சாப்பிடவும், பூந்தி ராய்த்தா செய்யவும் ஏன் சில சமயம் பேல் பூரியில் போடவும் கூட உதவும்..சாதத்திற்குக் குறிப்பாக கலந்த சாதத்திற்குத்.தொட்டுக்கொள்ளவும் கூட
    கீதா...

    அடுத்த பட்டியலுக்கு வெயிட்டிங்க்...

    பதிலளிநீக்கு
  7. மூட் இருக்கும்போது கேட்டது கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  8. சத்தியமாய்ச் சொல்கிறேன்.

    திங்கக் கிழமையின் பொருள் இப்போதுதான் புரிந்தது.

    நன்றி

    பதிலளிநீக்கு
  9. காராபூந்தி மிகவும் பிடித்த நொறுக்குத் தீனி! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பூந்தியும் ஜிமிக்கியும் ரொம்ப நல்லாயிருக்கே அண்ணா...

    பதிலளிநீக்கு
  11. காரா பூந்தி அருமை. கதைநன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. காரா பூந்தி.... எனக்கும் பிடிக்கும்....

    கதை.... தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  13. கொஞ்சம் ஸோடா உப்பு அதிகம் போலத் தோன்றுகிறதே. என் கண்ணிற்குத்தானா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!