வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150918 & சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7

           


                  
சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7  


இந்த ஊரில் தமிழ் பேசுபவர்கள், தமிழ் தெரிந்தவர்கள் அதிகம். அதனால இதுல விசேஷமா எதுவும் இல்லை.
           
கட்டிடத் தொழிலாளர்கள் தொடங்கி காய்கறிக் கடைக்காரர் வரை எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள்.
             
ஏதேனும் கல்யாண மண்டபத்தில் உறவினருக்கு நண்பர் அல்லது நண்பருக்கு நண்பர் என்று பார்த்துப் பேசி இருப்பேனோ? ஊஹூம் - உறவினர்களிடமே அதிகம் பேசாதவன் என்று எனக்குப் பெயர்.
       
ஏதாவது ரயில் சிநேகமாக இருக்குமோ? சான்ஸ் இல்லை. 
    
(இது என் படம் இல்லை!) 


ரயிலில் நான் தனியாக வரும்பொழுதெல்லாம்  ஒன்று புத்தகம் படிப்பேன் அல்லது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பேன். இல்லையேல் கண்ணை மூடிக்கொண்டு ஆத்மவிசாரம் பண்ணிக்கொண்டு வருவேன்! (திருமதியுடன் வரும்பொழுது திருமதியின் பேச்சு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கும்!)
             
எனக்கு அவரைத் தெரியவில்லை என்று இருக்கும் பொழுது, அவருக்கு மட்டும் எப்படி என்னைத் தெரிந்திருக்கும்?

(தொடரும்)
       

12 கருத்துகள்:

 1. அட, சிரிக்கிறதுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கணுமா என்ன? மேல்நாடுகளில் சும்ம்ம்ம்மா தெருவில் நடைப்பயிற்சிக்குப் போனாலே பார்த்துச் சிரிச்சு நல்வரவு, காலை வணக்கம் எல்லாம் சொல்வாங்க. :)

  பதிலளிநீக்கு
 2. காணொளி மிகவும் அருமையான குறும்படம்
  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. இப்போத் தான் வீடியோவைப் பார்த்தேன். அருமை! :)

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே.

  குறும் படம் நன்றாக உள்ளது. "சொல்லாதே "தொடர் முன் பகுதிகளையும் சேர்த்து படித்தேன். விறுவிறுப்பாக நகர்கிறது. அவர் யார் என தெரிந்து கொள்ள நானும் ஆவலாய் உள்ளேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. இன்னிக்கும் சஸ்பென்ஸ் தொடருகிறதா?

  பதிலளிநீக்கு
 6. காணொளி மிக அருமை. அந்தப் பிள்ளை என்ன ஆச்சோ.4

  பதிலளிநீக்கு
 7. குறும்படத்தினை ரசித்தேன்....

  கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா
  படத்தை பார்த்தேன்... கதையின் முடிவை தெரிந்துகொள்ள தொடருங்கள் ஐயா.த.ம6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. “சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7 “--ஒங்க தல மேலஅடிச்சு சொல்றேனுங்க.. சத்தியமா சொல்ல மாட்டேனுங்க.....

  பதிலளிநீக்கு
 10. குறும்படம் நன்றாக இருந்தது. கதை...தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!