சனி, 19 செப்டம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம் + சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7




1)  மாணவர் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் படிப்பு மட்டும் அல்லாமல் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து அசத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையில் பல வித பொருட்களை கண்டுபிடித்து தங்கள் தனி திறமைகளை வெளி காட்டுகின்றனர்....  பிளஸ் 1 மாணவன் அஜய் விஷால்.
 


2)  முன்பு தமிழ்நாட்டுக்குள் வந்த செய்தியாக விஸ்ராந்தி பற்றிப் பார்த்தோம்.  இப்போது மீண்டும் சாவித்திரி வைத்தி பற்றி அகில இந்திய அளவில்.
 


3) T3K.  சென்னையை அழகாக்க முயற்சிப்பவர்கள்.
 



4)  கல்வித்தரம், கட்டமைப்பு வசதி மற்றும் சுகாதார வசதிகளில் தன்னிகரற்ற வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.  தலைமை ஆசிரியரின் முயற்சியில், தனியார் பங்களிப்புடன்.
 


5)  ஜாலி ஹோம்.
 



6)  திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை படைத் துள்ளார்.  சாதனை மனிதர் வாகரை பஞ் சாயத்து தலைவர் கே.சின்னான்,  அனைவராலும் பின்பற்றப் படவேண்டியவர்.
 



7)  ஈக்களும் புழுக்களும் குடியிருக்கும் சூழலில், கால்கள், கைகள், மர்ம உறுப்புகள் அழுகிய நிலையில், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்றுக் கிடப்போரை மீட்டு இல்லங்களில் சேர்க்கிறார், 'அகல் பவுண்டேஷன்' வெங்கடேஷ்.
 


8)  விளையும் பயிர்.  ஆனால் இது எந்த அளவு சாத்தியம், தலையை அசைத்தாலே ஆன் ஆகி,  ஆஃப்  ஆகி விடும் என்றால் பயனிருக்குமா என்றெல்லாம் தோன்றினாலும் தெரியாமலா விருதுக்குத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்? முயற்சிக்குப் பாராட்டுகள்.
 


9)  குறை சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, செயலில் நாமே இறங்கி விடுதல் நல்லது!  ரிசர்வ் வங்கியிலிருந்து ஒய்வு பெற்ற 65 வயது அஜித் லக்ஷ்மிரத்தன்.
 



10)  பேராசை இல்லை.  வாழ்க்கையை நடத்தத் தேவையான அளவு பணம், இல்லை, இல்லை, காசு போதும்!  அதற்குமேல் வேண்டாம்.  வரதராஜன், 75 - ஆதிலெட்சுமி,72 தம்பதியர்.
 



11)  தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான டிரைவர்கள் லோடு ஏற்றி வந்தாலும், அதில் நான் மட்டும் தான் பெண் என்பது, ரொம்ப பெருமையாக இருக்கும். இப்போது, டிரைவராக மட்டுமே, மாதம், 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சொந்த லாரி என்பதால், கிடைக்கும் கூடுதல் லாபம் தனி. கஷ்டம்னு நினைத்தால், வீட்டை விட்டு வெளியே வர முடியாது; முடியும்னு நினைத்தால் எந்தச் சுமையும் சுகமாக மாறிவிடும்.  'கல்பனா சாவ்லா' விருது பெற்ற, லாரி ஓட்டுனர் ஜோதிமணி
 


12)  எத்தனை தடைகள்!  அத்தனைத் தடைகளையும் உடைத்தது தன்னம்பிக்கை மற்றும் முயற்சி என்னும் நேர்மறை எண்ணங்கள்தானே...  பாவன் கௌர்.
 



13)  இந்த 'பைக்கிற்கு' தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.  ஒருமுறை 'சார்ஜ்' செய்தால் 60 கி.மீ., செல்லும். மின்சாரமின்றி இடையில் நின்றாலும் 5 நிமிடங்கள் கழித்து இயங்கினால் கூடுதலாக 5 கி.மீ., வரை செல்லும்.   
 
 
மாற்றுத் திறனாளிகளால் தங்கள் பைக்கை 'ரிவர்சில்' இயக்க முடியாது. இதற்கு பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'இ பைக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல் பேராசிரியர் ராஜவேல் தலைமையில் மாணவர்கள் முகமது ஷகில், சப்தகிரி, நவீன்குமார், சரண்பாண்டியன், அஸ்வின்பாபு, நிஷாந்த் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.  


 


================================================================


சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7  
    
எனக்கு அவரைத் தெரியவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது.

எப்படி ?

என் முகம்?......   முகம் ........!    

அட! இப்போ தெரிஞ்சிடுச்சு. முகநூல்.

நான்தான் என்னுடைய முகத்தை முகநூலில் ஆதிகாலம் முதல்  மாற்றாமல் அப்படியே போட்டு வைத்திருக்கின்றேனே!
      
(யாருங்க இந்த இளிச்சவாயன்?)  
      

ஃபேஸ்புக்கில் இருக்கின்ற என்னுடைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு என் முகம் நன்கு பரிச்சயம் ஆகி இருக்குமே!

இவர் என் படத்தை facebook ல பார்த்திருப்பார். அதனால்தான் என்னைத் தெரிந்திருக்கின்றது!

இதோ இந்த ரவுண்டில் அவரை நெருங்கினேன்.

அவர் பெஞ்சிலிருந்து எழுந்து, என்னிடம் பேசத் தயாராக நின்றுகொண்டிருந்தார்.

(தொடரும்)

7 கருத்துகள்:

  1. கே. சின்னான் மிகவும் பாராட்டுக்குறியவர்
    ஹாஹாஹா தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. இன்னிக்குக் க்தை முடிஞ்சிருக்க வேண்டாமோ? பாசிடிவ் செய்திகள் அனைத்தும் புதியது, தெரியாதது.

    பதிலளிநீக்கு
  3. உழைக்க வயதில்லை என்ற வரதராஜன் ஆதிலட்சுமி தம்பதிகளுக்கும், , சமூகசேவை செய்யும் வெங்கடேஷ் தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.


    என்ன பேச வருகிறார் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான செய்திகள்! தொடரைத் தொடர முடியவில்லை! நேரம் கிடைக்கையில் சேர்த்து வாசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தொடரப்பட்டால் நல்லது. பெரும்பாலும் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்புகளாகவே நின்று விடுகின்றன....மார்க்கெட்டிற்கு வருவதில்லை...

    அகல் ஃபௌண்டேஷன் வாழ்க....
    அனைத்துச் செய்திகளும் பாசிட்டிவ்...

    ம்ம்ம் முகநூல் நட்பு?!! தொடர்கின்றோம்....என்ன பேசியிருப்பார்..?!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!