4) கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவ பெண்கள் வாழ்வு உயரவும் பாடுபட்ட, பாம்பன்
மீனவ பெண்ணுக்கு, அமெரிக்க தொண்டு நிறுவனம், 6.60 லட்சம் ரூபாய் பரிசுடன்
கூடிய விருது வழங்க உள்ளது. பாம்பன், சின்னபாலம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி.
5) நடத்துனரைப் பாராட்டி, அவரை வெளிப்படுத்தி இருக்கும் ஷஷான்க் பாராட்டுவோம். நடத்துனருக்கும், அவருக்கு உதவிய மற்றவர்களுக்கும் பாராட்டுகள். (நன்றி எல்கே)
10) நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி குறிப்பிட வேண்டும். கோடி கோடியாக ஊதியம் வாங்க வைக்கும் தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு கோடி ரூபாய் தர நினைத்து, "மனித பலவீனத்தால் தள்ளிப் போட்டேன்" என்று அதையும் ஒப்புக்கொண்டு, காஞ்சனா படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் ஒரு கோடியை ஒரு விழாவாக வைத்து, அனைவர் முன்னிலையிலும் நல்ல காரியங்களுக்கு வழங்கியதை 'ஆனந்த விகடனி'ல் சொல்கிறார். அவருடன் விஜய் டிவி திவ்யதர்ஷினி உட்பட பல நன்மனம் கொண்ட இளைஞர்கள் கை கோர்க்கிறார்கள். விகடன் இணைப்பு தர முடியவில்லை. மன்னிக்கவும்.
======================================================================
ஏழு நாள் தொடர்கதை. वह कौन है? [ஆறாவது நாள்]
6. அவன் கை கால்சராய்ப் பாக்கெட்டுக்குள் பார்த்த பாண்டியன்,
அதிலிருந்து என்ன எடுக்கப் போகிறான் என்று ஒரு வினாடி திகிலடைந்தான்.
ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டான்.
"இன்னா வோணும் ஒனக்கு? இன்னாத்தப் பார்க்கறே நீயி?" என்றான் கரகரப்பாக.
"இன்னா வோணும் ஒனக்கு? இன்னாத்தப் பார்க்கறே நீயி?" என்றான் கரகரப்பாக.
அவன்
பதில் சொல்லாமல் இன்னும் பாண்டியனை நெருங்கி அருகில் வந்தான். அவன் கை
மெல்ல பாக்கெட்டுக்குள் எதையோ கவனமாகத் தேடுவது தெரிந்தது.
[அப்பாடா....நாளை முடியும்!]
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
வாழ்த்துவோம்
நன்றி நண்பரே
தம +1
தனராஜ் அவர்கள் அசத்தி விட்டார்...
பதிலளிநீக்குஅனைத்துச் செய்திகளும் அருமை. சில நெகிழ வைத்தன.
பதிலளிநீக்குஅனைவரும் போற்றத் தக்கவர் ஆவர்! வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவரும் போற்றுதலுக்குறியவர்கள் வாழ்த்துவோம்
பதிலளிநீக்குஅனைவரும் வாழ்த்துக்கள்!!! தங்களுக்கு நன்றி!!
பதிலளிநீக்குஅனைவரும் வாழ்த்துக்கள்!!! தங்களுக்கு நன்றி!!
பதிலளிநீக்குபாசிடிவ் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவரும் முன் மாதிரிகளே பாராட்டுக்கள்/கசங்கலாக மடிக்கப்பட்ட காகிதம் / ஏதாவது முகவரியோ?
பதிலளிநீக்குஎல்லாம் நல்ல செய்திகள்...
பதிலளிநீக்குலாரன்ஸ் அந்த நிகழ்ச்சி யூடிப்பில் பார்த்தேன்... மிகப்பெரிய மனம் வேண்டும்...
எல்லோரும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குநாளைப் பார்ப்போம் என்ன என்று?
பேய் படம் என்றாலே எனக்கு பிடிக்காது ,ராகவாவின் நல்ல மனதுக்கு காஞ்சனாவை பார்க்கலாம் போலிருக்கு :)
பதிலளிநீக்குஎல்லாமே அருமையான செய்திகள்! சிகப்பி பற்றி 'தோழி'யும் வெளியிட்டிருந்தது. ' வெள்ளையப்பம் ' பதிவில் பின்னூட்டத்தில் பாஸிடிவ் செய்திகளுக்கான ஒரு இணைப்பைக் கொடுத்திருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன்!
பதிலளிநீக்குஅற்புதமான நிகழ்வுகள். ஷஷாங்க் என்பவர் பகிர்ந்திருக்கும் பேருந்து நிகழ்ச்சி கலியுகம் என்பது பிரமை என்று புரிந்துவிட்டது. வாழ்க
பதிலளிநீக்குஅந்த டிரைவரும் கண்டக்டரும். எத்தனை பாராட்டினாலும் தகும்.,
கௌசல்யா ராமசாமியின் தீரம் பிரமிக்க வைக்கிறது. பார்க்கப் பார்க்க
படிக்க படிக்க ஆச்சர்யம் தீரவில்லை.
மிக மிக நன்றி ஸ்ரீராம். உண்மையாகவே பாசிடீவ் செய்திகள்.
மனம் நிறைந்த நன்றி.
இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெற்றோரில் ராகவா லாரன்ஸ் பற்றி அவ்வப்போது நிறைய செய்திகள் வரும் தெரிந்துகொண்டது உண்டு.
பதிலளிநீக்குகௌசல்யா பற்றி சகோதரி மனோ அவர்களின் தளத்தில் அறிந்து கொண்டொம்...மற்றவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டொம்..
கீதா : இவர்கள் எல்லோரைப் பற்றியும் தெரிந்து கொண்டாலும், குறிப்பாக நான் சொல்ல விரும்புவது தனராஜ் குறித்து. எனக்கு நன்றாகப் பரிச்சயமானவர். அடையார் ஸ்ரீனிவாசமூர்த்தி அவென்யூ ஆட்டோனிருத்தத்தில் இருப்பவர். கணவரின் சகோதரியின் மருமகள் சோலார் எனர்ஜி பற்றி கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர் செய்யும் சோலார் உபகரணங்களை விற்க பெண்களை அதில் ஈடுபடுத்த சில கிராமங்களுக்குப் பயணப்பட்ட போது எங்களுடன் தனராஜ் வந்தார். மிகவும் உதவியாக இருந்தார். ஆட்டோ கட்டணம் மீட்டர் போட்டுத்தான் வாங்குவார். அவரது ஆட்டோவின் மேல் தளத்தில் செஞ்சிலுவை சங்கம் குறித்த புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அப்போது ஆம் ஆத்மி கட்சித் தொண்டராக இருந்து அந்தத் தொப்பி அணிந்து அந்தச் சின்னத்துடன், ஆட்டோவில் கொடியுடன் ஓட்டுவார். லண்டனிலும் 10 வருடங்கள் இருந்தவர். இவரது சேவைகள் குறித்து அவரிடம் பேசிய போது அறிந்ததால் இவரைப் ஃபோட்டோ எடுத்து வைத்துள்ளேன். எங்கள் தளத்தில் இவரைக் குறித்து எழுத....தாங்களே இங்கு கொடுத்து விட்டீர்கள்....மிக மிக நல்ல மனிதர்...மிக்க நன்றி...
கசங்கிய காகிதமா..ஆஆஆஆஆ.....சே அப்போ துப்பாக்கி எதுவும் இல்லையா....ம்ம்ம் நாளை எப்படி முடியப் போகுதோ....காத்திருக்கின்றோம்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
போற்ற வேண்டியவர்கள்... பகிர்வுக்கு நன்றி த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான அறிமுகங்கள். அனைவரும் பாசிடீவ் சிந்தனைக் கொண்டவர்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!
த ம 11
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதொடர்: ஆயுதமல்ல.. காகிதம் :)! முடிவுக்குக் காத்திருக்கிறோம்.
குறை மட்டுமே கூறிக் கொண்டிருக்காமல் நடத்துனரைப் பாராட்டியது வரவேற்கத் தக்கது.கௌசல்யா ராமசாமிக்கு வாழ்த்துகள். லாரன்சின் கொடை பாராட்டத் தக்கது.அந்த பேட்டியை நானும் படித்தேன். 100 பேரை தேர்ந்தேடுத்து ஆளுக்கு ஒருலட்சம் ஒப்படைக்க இருப்பதாக அறிந்தேன்.டிடி யும் அதில் ஒருவர் டிடிக்கு ஏழ்மை வறுமை பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. நல் செய்திகள் தொடரட்டும்
பதிலளிநீக்குதொடர்கதையைப் படிச்சேன். சிகப்பி அருணாசலம், லாரன்ஸ் மற்றும் கௌசல்யா ராமசாமி குறித்துத் தெரியும். மற்றவை பின்னர்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையான தகவல்கள் .உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !
பதிலளிநீக்குபசிப்பிணி போக்கும் வீரர்கள் மனதை தொட்ட பகிர்வு !
நல்ல மனங்களின் அடையாளம் காட்டிய பகிர்வு அருமை.
பதிலளிநீக்குதொடர்கதை அருமை. கத்தி அல்ல பேப்பர் என்றும் சப் இருந்தாலும் அதிலும் வெடி இருக்கலாம்.