சனி, 2 ஜூலை, 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்





          இன்றைய இளைஞர்களின் சமூகப் பார்வை அபாரமாய் மாறிக் கொண்டு வருகிறது.  உதவும் எண்ணம் என்பது அவர்களிடம் அதிகம் என்பதை சமீபத்து சென்னை வெள்ளத்தில் பார்த்தோம்.  தமிழ் நாடு மட்டும் அல்ல, நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இது மாதிரி இளைஞர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டி இருக்கிறது.  ஒருவர் தொடங்கி வழி காட்டினால், அந்தப் பாதையைச் செம்மைப்படுத்தி இன்னும் சிறப்பாகச் செய்ய பலர் வருவார்கள்.




          நாம் சம்பாதிக்கும் பணத்தைப் பலவகையிலும் செலவு செய்து மகிழலாம்.  எது அதிக மகிழ்ச்சியைத் தரும்?  அடுத்தவர் கஷ்டத்தைத் தீர்த்து வர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிப் புன்னகையைப் பார்க்கும்போது உண்டாகும் சந்தோஷம்..  





          பசியை விடக் கொடியது தாகம்.  அந்த தாகத்தைத் தீர்க்க ஸ்ரீகாந்த் ஜாதவ் தனது குறைந்த வருமானத்திலிருந்து செய்யும் முயற்சிகள் உண்மையிலேயே மனதை நெகிழ வைப்பதாய் இருக்கின்றன.  அவர் தந்திருக்கும் விளம்பரத்தைப் பாருங்கள்..



His number is displayed on the card that he distributes in slum areas; the card says, “If you are struggling for drinking water then just make one call to get free drinking water.”



          இந்தச் செய்தி கடைசியில் கிடைத்தாலும், இன்றைய பாஸிட்டிவ் செய்திகளின் முதலிடத்தைப் பெறும் செய்தியாய் என் மனதில் தங்கி விட்டது.  


        

           அந்த இளைஞனின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை?  உங்களுக்குள்ளும் ஒரு சந்தோஷப் புன்னகையை மலர வைக்கவில்லை?




1)  நன்றி சைதை அஜீஸ், princes' of hell, குங்குமம்!




2)  ஆங்கோர் ஏழைக்கு...



3)  ஆளில்லா நூலகம்.  கே ஆர் மகேந்திர குமார்.





4)  "மரங்களை நட்டு பூமியைப் பாதுகாப்போம், ஏனெனில் பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது' என்ற வாசகத்தை முன்னிறுத்தி குப்பை கொட்டும் இடத்தை பசுஞ்சோலையாக மாற்றியுள்ளனர் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் மக்கள்.






 

5)  அறியாத ஜீவன்களுக்கு இல்லம் வேண்டும்!

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி திருத்தி, குளிப்பாட்டி, உடையும், உணவும் கொடுத்து, மறுவாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வராஜ்.





6)  "......இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டினரிடமும் இருந்து நன்கொடையாக வசூலித்த மொத்தம் ரூ.5.50 லட்சத்தில் 2 வகுப் பறைகளிலும் ஏ.சி., மின்விசிறி களைப் பொருத்தினோம். சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளை ஏற்படுத்தியதுடன், கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினோம்...."





புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசுப் பள்ளியை புதுப்பித்து, மாணவர் சேர்க்கையில் ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிக் காட்டியுள்ளனர்.


16 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம் வாழ்த்துவோம்
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. கே.ஆர். மகேந்திர்குமார் மிகவும் அதிசய மனிதர்தான் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான செய்திகள்...
    தொகுப்புக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. நல்லோர்கள் ஒருசிலர் ஆங்காங்கே வாழத்தான் செய்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் அவர் 'தெய்வ 'ராஜ்தான் !

    பதிலளிநீக்கு
  7. தவித்த வாய்க்குத் தண்ணி தரும் ஸ்ரீகந்த் ஜாதவ் வாவ்!!

    தெய்வராஜ் உண்மையிலேயே தெய்வ ராஜ்தான்...

    மரங்களின் தாயும், அத்தப்பகவுண்டன்புதூர் மக்களுக்கும் பொக்கே..
    புதுக்கோட்டைக்கார வலைப்பதிவர்கள் பெருமை கொள்ளலாம் புதுக்கோட்டை கிராமம் வல்லம்பக்காட்ட்டு கிராமமக்களின் செயலுக்கு!!

    அருமை அனைத்தும்

    பதிலளிநீக்கு
  8. இன்று ஓட்டுப்பெட்டி வந்துவிட்டதே

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் அருமையான செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அனைத்துமே அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து செய்திகளும் அருமை, தவித்தவாயுக்கு தண்ணீர் தருபவர், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகமாக்கிய ஆசிரியர்களும், அந்த ஊர் மக்களும் , குப்பை கிடங்கை பசுஞ்சோலையாக ஆக்கியவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அனைத்து செய்திகளும் அருமை, தவித்தவாயுக்கு தண்ணீர் தருபவர், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகமாக்கிய ஆசிரியர்களும், அந்த ஊர் மக்களும் , குப்பை கிடங்கை பசுஞ்சோலையாக ஆக்கியவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் அருமையான செய்திகள்! அரசுப்பள்ளியை தனியார் பள்ளி அளவிற்கு மாற்றிய புதுக்கோட்டை கிராம மக்கள் பாராட்டுக்குரியவர்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!