புதன், 30 நவம்பர், 2016

ன் த பு 161130 :: கங்டிபிடுண்க !!

       
சென்ற  வாரப்  புதிர்க்  கேள்விகள்  கேட்டிருந்த  பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. 

அங்கேயே அவர்  வந்து, கருத்துரையாக,  யார்  யார்  சரியான  பதில்கள்  கூறினார்கள்  என்று  கூறி, அவர்களை  சிலாகித்து  நான்கு  வரிகள்  எழுதுவார்  என்று  உங்கள்  எல்லோர்  சார்பிலும்,  நானும்  நினைத்தேன். 

இன்னும்  அவர்  பதில்  அளிக்கவில்லை!  

இன்றைக்கு  அவர்  அந்தப்  புதிர்ப்  பக்கத்தில்  பாராட்டுகளை  அளிப்பார்  என்று  ஆவலோடு  எதிர்பார்க்கின்றேன்!  


திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் தற்சமயம் சென்ற வார புதிர்களுக்கான விடைகளை அனுப்பி இருக்கிறார்.  

சென்ற வார புதிருக்கான விடைகள்:

படங்களில் ஒளிந்திருந்த பதிவர்கள்: நெல்லை தமிழனும், கோமதி அரசுவும். சரியான விடையை முதலில் கூறிய மிடில் க்ளாஸ் மாதவிக்கு பாராட்டுக்கள். 

இரண்டாவது கேள்விக்கான சரியான விடையை முதலில் கூறிய நெல்லை தமிழனை பாராட்டுகிறோம்.

மூன்றாவது கேள்வி கொஞ்சம் கௌதமத்தனமானது. எந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமை துவங்கி சனிக் கிழமை முடிகிறதோ அந்த ஆண்டே ஒரு முழுமையான காலண்டர் இயர் எனப்படும்.

கலந்து கொண்டவர்களுக்கும், என்னையும் குவிஸ் மாஸ்டராக்கிய எங்கள் ப்ளாகுக்கும் நன்றி நன்றி! நன்றி!


இந்த  வாரப்  புதிர்கள்  இங்கே:    

இங்கே ஒளிந்திருக்கும்  ஊர், விஞ்ஞானி, நடிகர் ஆகியோரைக்  கண்டுபிடியுங்கள். 


1)  GINA SAVE JANSI


2) SAMSAN LOVE A THODI


3) AH I AM UR NATPUTHAN RV 


 




18 கருத்துகள்:

  1. புதிர் உள்ள பதிவிற்கு, கருத்துரை நீங்கள் வெளியிடுமாறு செய்யுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. நான் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன் அதற்குள் ராமராவ் சொல்லிவிட்டார். அதுவே எனது பதில்களும்.
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. புதிர்களுக்கான விடையை அடுத்த வாரம்தான் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்கு நன்றி, திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்!
    anagram பெயர்கள்! இந்த வார விடைகள் வந்து விட்டதால், நானும் வந்தேன் என்று பதிவு செய்கிறேன்!! :-)

    பதிலளிநீக்கு
  5. தலைப்பில் நம்பரைத் திரும்பிப் போடலையே? தேதி சரியாத் தெரிஞ்சிடும்னா? :-))

    பதிலளிநீக்கு
  6. எல்லோர் சொன்னதையும் படித்து தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் திரைப்படங்கள், தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றிய வித்தியாசமான புதிர்கள் வாராவாரம் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட link பாருங்கள்.
    http://thiraijaalam.blogspot.in/

    பதிலளிநீக்கு
  8. புதன் புதிர்... அடுத்து வரும் திங்கள் அதாவது ஐந்து நாட்கள் வரையேனும் விடைகளை பப்ளிஸ் செய்யாமல் மற்றவர்களையும் சிந்திக்கும் அவகாசம் தரலாமே?

    முதல் பதிவர் சரியாக சொல்லி அதை நீங்கள் பதிந்த பின் தொடர்பவர்களுக்கு யோசிக்க அவகாசமே இல்லை.

    விடை கவனிக்காமல் தோமஸ் அல்வா எடிசன் என பிரமாண்டமாய் இல்லாத மூளையை கசக்கி கஷ்டப்பட்டு விடையோடு வந்தால்....ஙே தான் என் நிலை.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா... இந்த வாரம் கொஞ்சம் சுலபமான புதிர்! Anagram...

    த.ம.

    பதிலளிநீக்கு
  10. நிஷா அவர்களை நானும் ஆதரிக்கிறேன். விடைகளை வெளியிடாமல் இருக்கச் சொல்லிப் பலமுறை சொன்னேன். :( விடையோடு வந்துட்டு நானும் ஙே தான்! :)))))

    பதிலளிநீக்கு
  11. // எந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமை துவங்கி சனிக் கிழமை முடிகிறதோ அந்த ஆண்டே ஒரு முழுமையான காலண்டர் இயர் எனப்படும்.//

    No such calendar year is possible. B'cos Non-leap years end on the same 'weekday', it started with. Leap years end on the next 'weekday', that it started with.

    An year which has total # of days, perfectly divisible by 7, can only become 'முழுமையான காலண்டர் இயர்', as per your definition. Neither 366(leap year) not 365 (non-leap year) divisible by 7, perfectly.

    பதிலளிநீக்கு
  12. I could find out 'Sivaji Ganesan'. But, before attempting others, I see what Mr. Ramarao, has answered. So, no need to try it further.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!