காத்திருந்த கண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காத்திருந்த கண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.1.17

வெள்ளிக்கிழமை வீடியோ 170106 :: ஒரு காட்சி ; இரு பாடல்கள்



     பாடல்களை மட்டும்தான் காப்பியடிக்க  வேண்டுமா என்ன?  சில காட்சிகள் கூட பிறமொழித் தயாரிப்பாளர்களைக் கவர்ந்து விடும்.  அமெரிக்கத் திரைப்படமான 'சிங்கிங் இன் தி ரெயின்' படத்தில்தான் மழையில் நனைந்தபடியே பாடும் காட்சி படமாக்கப்பட்டதாம்.  
 
 
     அவ்வளவுதான், அதைத் தொடர்ந்து உலகப் படங்களில் எல்லாம் மழையில் நனைந்தபடி வரும் பாடல் காட்சி பிரபலமானதாம்.  இந்தியாவிலும் ஹிந்தியில் ஸ்ரீ 420, அப்னாதேஷ்  தொடங்கி தமிழிலும் தொடர்ந்தது.  மௌனராகம், புன்னகைமன்னன் வழியாக இந்த நனையல் காட்சிகள் உங்கள் நினைவிலும் இருக்கும்.

     ஜாக்கி சான் அறிமுகமாகி, பிரபலமான நேரம்.  சுட்டுக்கொண்டே மறைவிலிருந்து வெளிப்பட்டு பாய்ந்து விழும் காட்சி போலீஸ் ஸ்டோரி என்னும் அவர் படத்தில் இடம்பெற்ற காட்சி.  அப்புறம் அது பல தமிழ்ப்படங்களில் இடம்பெற்றது.

     இன்றைய பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.  'குஷ்பூ' என்னும் ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காட்சி!  குல்ஸார் படம்.  அவர் படங்களின் கதாநாயகர்கள் தோற்றத்திலும் அவரைப் பிரதிபலிப்பது வழக்கம்.  குல்ஸார்எழுதிய இந்த அருமையான பாடல் இடம்பெறும் காட்சி அமைப்பைப் பார்த்தீர்களா?  பாடலையும் ரசியுங்கள்.  கிஷோர் குரலில், ஆர் டி பர்மன் இசையில் மிக அருமையான பாடல்.







     இந்தக் காட்சி பிடித்துப்போன 'காத்திருந்த கண்கள்' படக் குழுவினர் தங்கள் படத்தில் இதே காட்சி அமைப்புடன் ஒரு தத்துவப் பாடலை வைத்து விட்டனர்.  சீர்காழியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஹிந்திப் பாடலின் சாயல்கூட லேசாகத் தெரிகிறதோ என்கிற ஐயம் வருகிறது.  விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் அந்தப் பாடல்....