மாங்காய்
எனக்குச் சிறு வயதிலிருந்தே
பிடித்தமானது. வேலை பார்க்கும்காலத்திலும், ஹோட்டல் மதிய உணவு மெனுவில், மாங்காய் ஊறுகாய் அல்லது மோர்க்குழம்பு இருந்தால் எனக்கு Excitingஆ இருக்கும். ஹாஸ்டல்ல இருந்தபோதும் அப்படித்தான். இப்போவும் எங்க நல்ல மாங்காய் பார்த்தாலும், தேவை இருக்கோ இல்லையோ வாங்கிவிடுவேன். ஆனா நான் இதுவரை மாங்காய் சாதம் பண்ணியதில்லை. இந்தத் தடவை கிளிமூக்கு மாங்காய் கிடைத்தது. அதனால் மாங்காய் சாதம் பண்ணலாம் என்று நினைத்தேன்.
பிடித்தமானது. வேலை பார்க்கும்காலத்திலும், ஹோட்டல் மதிய உணவு மெனுவில், மாங்காய் ஊறுகாய் அல்லது மோர்க்குழம்பு இருந்தால் எனக்கு Excitingஆ இருக்கும். ஹாஸ்டல்ல இருந்தபோதும் அப்படித்தான். இப்போவும் எங்க நல்ல மாங்காய் பார்த்தாலும், தேவை இருக்கோ இல்லையோ வாங்கிவிடுவேன். ஆனா நான் இதுவரை மாங்காய் சாதம் பண்ணியதில்லை. இந்தத் தடவை கிளிமூக்கு மாங்காய் கிடைத்தது. அதனால் மாங்காய் சாதம் பண்ணலாம் என்று நினைத்தேன்.
இங்கு,
பாஸ்மதி அரிசி மிகவும் விலை மலிவு. தோசைப் பச்சரிசி, நெல்லூர் பச்சரிசி,
ஆந்திரா கொர்தாலா அரிசி (சன்ன அரிசி) போன்றவற்றைவிட, பாகிஸ்தான் பாஸ்மதி
அரிசி மிகவும் விலை மலிவு.
ஆனால் பாஸ்மதி உடம்புக்கு நல்லதில்லை என்று படித்ததிலிருந்து, 8
வருடங்களுக்கு மேலாக சாதாரண பச்சரிசிதான் வாங்கி உபயோகப்படுத்துகிறேன். ஒரு
தடவை ‘பாலக்காடு மட்டா’ அரிசி வாங்கினேன் (கேரளத்தவர்கள்
சாப்பிடுகிறார்களே.. உடம்புக்கு ரொம்ப நல்லதுதானே என்ற நினைப்பில்).
ஒவ்வொரு அரிசியும் சிறிய நிலக்கடலை அளவு சாதமாகி, சாப்பிட ரொம்பக்
கஷ்டப்பட்டேன். அன்றைக்குச் செய்த மாங்காய் சாதத்துக்கும் நெல்லூர்
அரிசிதான் உபயோகப்படுத்தினேன். நீங்கள் செய்யும்போது பாஸ்மதி
உபயோகப்படுத்தலாம். பாஸ்மதி, குழையாது. அதற்கென்றே ஒரு மணம் உண்டு.
மாங்காய்
சாதத்துக்கு வேர்க்கடலை, கிடைத்தால் பட்டாணி போன்றவை போட்டால் சுவையாக
இருக்கும். பச்சைப் பட்டாணி இருந்தால், உப்பு நீரில் கொஞ்சம்
வேகவைத்துக்கொள்ளவும். மாங்காயைத் தோலுரித்துக்கொண்டு
திருவிக்கொள்ளவும். சாதத்தை உதிர் உதிராக வடித்துக்கொண்டு, அதில் சிறிது
நல்லெண்ணெய் சேர்த்து ஆறவைக்கவும்.
கடாயில்,
நல்ல எண்ணெய் 2 ஸ்பூனில், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, 4
கீறின பச்சை மிளகாய், 1 ஆர்க் கருவேப்பிலை போட்டு தாளிக்கணும். வேகவைத்த
பட்டாணி இருந்தா, அதையும் போட்டுக்கோங்க.
அதோட பெருங்காயப் பொடியையும் சேர்த்துக்கோங்க. அதுல திருவின மாங்காய்
துருவல், மஞ்சப்பொடி சேர்த்து ரொம்ப லைட்டா வதக்கிக்கோங்க.
வதக்கின மாங்காய் துருவலை சாதத்தில் போட்டு, தேவையான உப்பு சேர்த்துக் கையினால் கலந்துகொண்டால் மாங்காய் சாதம் ரெடி.
எனக்கு மாங்காய் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். வடாம் அல்லது வெள்ளரிப் பச்சிடி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
அன்புடன்,
படிக்கும் போதே அதன் சுவை நாவில். ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன மாங்காய் சாதம் சாப்பிட்டு. இங்கே கிடைக்கும் மாங்காயில் செய்து பார்க்க வேண்டும்...
பதிலளிநீக்குஅழகான கண்ணை கவரும் படங்களுடன் மாங்காய் சாதம் அருமை.
பதிலளிநீக்குபாசுமதியில் மாங்காய் சாதம்...! செய்து பார்ப்போம்...!
பதிலளிநீக்குஐ ஆம் மீஸ்ஸீங்க் கிளிமூக்கு மாங்காய் .......மாங்காய்யில் பிடித்தது கிளிமூக்கு மாங்காய் அதில் மிக்ஸ்ர்மாங்காய் போட்டு சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் இப்படி ரிசிப்பி போடுறேன்னு போட்டு என் ஆசையை தூண்டிவிட்டீங்களே ஹும்ம்
பதிலளிநீக்குஇந்த சாதம் நான் பண்ணுவதில்லை இந்த மாதிர் வெரைட்டி சாதம் எல்லாம் என் மனைவியின் கைவரிசையில் வரும்
பதிலளிநீக்குஎப்போது பண்ணினாலும் மாங்காய் சாதம் அருமையாக இருக்கும். சற்று செங்காயாக இருந்தாலும் ருசி அதிகமாய் இருக்கும். குறிப்பும் படங்களும் மிக அருமை!
பதிலளிநீக்குஒரு முறை ஓய்வு பெற்று வரும்போது பெங்களூரில்தான் தங வேண்டி இருக்கும் என்று எழுதியதைப் படித்த நினைவு எல்லாமே யூகிக்க வேண்டி உள்ளது. அடுத்தமுறை சமையல் குறிப்புகளோடுநெல்லைத் தமிழனின் சிறு குறிப்பும் வரைக
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஆஹா யம் யம் :) இங்கே நேற்று கிளிமூக்கு குட்டி பிஞ்சுகளை பார்த்தேன் ..பெரிசு கிடைக்கும் ..நானும் இப்படித்தான் செய்வேன் ..எங்க வீட்ல மிரட்டியே சாப்பிட வைப்பேன் :) அதனால் வாரம் ஒரு கலந்த சாதம் .மாஇஞ்சி மாங்காய் கொத்தமல்லி நெல்லிக்கா இப்படி சாதம் கட்டாயம் இருக்கும் ..
பதிலளிநீக்குமாங்கா சாதத்துக்கு உருளை பொரியல் சேப்பங்கிழங்கு பொரியல் சேனை பொரியல் கூட நல்லா இருக்கும் ..
அதேபோல அரிசி நான் சோனா மசூரி இல்லைனா தஞ்சாவூர் பொன்னி பச்சரிசி யூஸ் செய்றேன் ..
புளி குழம்புகளுக்கு சிவப்பு தீட்டாத அரிசி தேங்காய் மற்றும் சாம்பார் கலவை சாதத்துக்கு மேற்சொன்ன பச்சரிசிகள் தான் நான் பயன்படுத்துவது
//ஒரு தடவை ‘பாலக்காடு மட்டா’ அரிசி வாங்கினேன் (கேரளத்தவர்கள் சாப்பிடுகிறார்களே.. உடம்புக்கு ரொம்ப நல்லதுதானே என்ற நினைப்பில்). ஒவ்வொரு அரிசியும் சிறிய நிலக்கடலை அளவு சாதமாகி, சாப்பிட ரொம்பக் கஷ்டப்பட்டேன்.//
பதிலளிநீக்குஒரு தடவை குடும்பத்தோடு குருவாயூர் கோயிலுக்குச் சென்றோம்.
என் பெரிய பிள்ளை எல்லோருக்குமாகச் சேர்த்து ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் 10 Meals Token வாங்கிவிட்டான்.
என் இலையில் சாதம் வைத்ததும், அதன் கலரையும், சைஸையும் பார்த்த நான் எழுந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டேன். :)
பிறகு நான் மட்டும் வேறு ஒரு ஹோட்டலில் போய் எனக்குப் பிடித்த டிபன் ஐட்டம்ஸ்களாகச் சாப்பிட்டு விட்டு, மற்றவர்களுக்காகவும், VAN னுக்காகவும் அங்கேயே காத்திருந்தேன்.
படங்களுடன் இந்தப்பதிவினைப் பார்த்து படிக்கும்போதே எனக்கு என் நாக்கில் நீர் ஊறுகிறது.
பதிலளிநீக்குஎழுத்தினாலேயே நீர் ஊறவைக்கும் நீர் வாழ்க !
என் அப்பாவும் நானும், புத்தம் புதிதாகப் போடப்பட்ட காரசாரமான தொக்கு மாங்காய்த் தொக்கு, நார்த்தங்காய் ஊறுகாய், கடாரங்காய் ஊறுகாய் போன்றவற்றையே சுடும் சாதத்தில் போட்டு, கொஞ்சம் எண்ணெய் ஊற்றிப் பிசைந்து அப்படியே சாப்பிட்டு விடுவோம். உப்பும் உரைப்பும், புளிப்புமாக ஜோராக இருக்கும்.
பதிலளிநீக்குஇதுவரை நீங்கள் சொல்லும் மாங்காய் சாதம் நான் சாப்பிட்டது இல்லை. மஸக்கைக் காரி போல உடனடியாக சாப்பிடணும் போல ஆசை ஏற்பட்டு விட்டது. :)
//வடாம் அல்லது வெள்ளரிப் பச்சிடி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.//
அதே .... அதே ! சபாபதே !! :)
பகிர்வுக்கு நன்றிகள்.
மிக மிக அருமையான மாங்காய் சாதம், இதுவரை சாப்பிட்டதில்லை. இங்கு கிளி இல்லாத மூக்கும் இல்லாத பூஸ்குட்டி போன்ற குட்டிக் குட்டி மாங்காய்கள் மட்டுமே கிடைக்குது, விரைவில் செய்து பார்க்கோணும்.
பதிலளிநீக்குநன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம்... வெளியிட்டமைக்கு. இதுவும் உங்களுக்குப் பிடிக்காதா?
பதிலளிநீக்குநன்றி வெங்கட். மாங்காய் சீசன் வர ஆரம்பிச்சாச்சே... இப்போ விட்டால் எப்போ செய்துபார்க்கறது?
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன்
//எங்க வீட்ல மிரட்டியே சாப்பிட வைப்பேன் :)///
பதிலளிநீக்குஏஞ்சலின் மிரட்டியா சாப்பிட வைக்கிறீங்க ? ஹும் விரும்பி சாப்பிடும் வண்ணம் சமைக்கனும். பாவம் எங்க அண்ணணும் குழந்தைகளும்
நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். சுலபமாச் செய்யிற உணவு எல்லாம் உங்க வீட்டு எஜமானியம்மாவோட வேலைனு முன்னமேயே சொல்லியிருக்கீங்களே. எனக்கு எப்போதுமே மற்றவங்க செய்து தருவது, சுலபமா பண்ணுவதுபோல் இருந்தால் பிடிக்காது.
பதிலளிநீக்குநன்றி மனோ சாமினாதன் மேடம். எனக்கு கலவை சாதத்தில் ரொம்பப் பிடித்தது, எள்ளுச்சாதம் (இனிப்பு. காரமில்லை), தேங்காய் சாதம். கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். எனக்கு இந்தக் கலவை சாதங்களுக்கு, புதிய மாங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடப் பிடிக்கும்.
பதிலளிநீக்குநன்றி ஜி.எம்.பி சார். ஒரே மூச்சில் உங்கள் பல இடுகைகளைப் படித்துவிட்டேன். நீங்கள் உங்கள் அனுபவங்களை இன்னும் எழுதலாம். நல்லாவும் எழுதியிருக்கீங்க. நீங்கள் பெயிண்ட் பண்ணிய படங்களும் அசத்தலாக இருக்கு.
பதிலளிநீக்குபெங்களூரில் சிறிய இல்லம் (வேற வார்த்தை உபயோகப்படுத்தமுடியலை) இருக்கு. நல்ல ஞாபகம் வச்சுச் சொல்லியிருக்கீங்க. ஓய்வுக்குப் பிறகு பெங்களூரில் தங்க வாய்ப்பு இருக்கிறது. இப்போ வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றி அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின். மாங்காய் இஞ்சி சாதம், நெல்லிக்காய் சாதம் செய்துபார்த்ததில்லை. ஆனால், உடம்புக்கு ரொம்ப நல்லது என்று தெரியும். நீங்கள் சொல்லியிருக்கிற பொரியல்கள் கலவை சாதத்துக்கு நல்லா இருக்கும். நான் உருளைக்கிழங்கு கூட்டு செய்வேன். (அதை சில வாரங்களில் எழுதுகிறேன்)
பதிலளிநீக்குமாங்காய்ச் சாதம் இங்கே போணி ஆகாது! ஆகையால் செய்வதில்லை. பட்டாணி, வேர்க்கடலை இரண்டும் போடுவோம். கொஞ்சம் பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லி அரைத்துச் சேர்ப்பதும் உண்டு!
பதிலளிநீக்குநன்றி கோபு சார். சாப்பாடு எனக்குப் பிடித்தமானதாக இல்லைனா, அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன். பாலக்காட்டில், என்னை உயர் தர உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்க சாப்பிட்ட மதிய உணவு எனக்குப் பிடித்தமானதாகவே இல்லை (பச்சரிசி சாதம் போட்டபோதும்). அப்புறம் நானும் ஹஸ்பண்டும் மாலையில் டிரெடிஷனல் ரெஸ்டாரண்டில் (ஹரிஹரன்? பழைய போட்டோக்களைப் பார்க்கவேண்டும்) அட்டஹாசமான டிஃபன் சாப்பிட்டோம். பத்து நிமிடம் முன்னால் போயிருந்தால் சேவையும் (இடியாப்பம்) கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி கோபு சார். கார எலுமிச்சையை விட்டுவிட்டீர்களே. பாரம்பர்யமாக மாங்காய் வத்தலைக் காயவைத்து, அதை உபயோகப்படுத்திச் செய்யும் மாங்காய் ஊறுகாய் சாதமும் அட்டஹாசமாக இருக்குமே. அதுவும் சுட சாதத்தில், தேவைனா, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக்கொண்டு. (நான் கிடாரங்காய், நார்த்தங்காய் ஊறுகாய் சாதம் சாப்பிட்டதில்லை). பிரஷர் ஏறிடுமே என்ற பயத்தில் கார எலுமிச்சை ஊறுகாய் சாதம் சாப்பிடறதில்லை. என்னோட வைராக்கியத்தைக் கெடுத்துவிட்டீர்களே...
பதிலளிநீக்குநன்றி அதிரா. இந்த மாங்காய்க்கு நீங்கள் என்ன பெயர் சொல்லுவினம் (அட எனக்கும் உங்கள் வார்த்தை வருகிறது?) கீறின பச்சை மிளகாய் பாதி போட்டாலே போதும் (காரம் தெரியாது). உங்களுக்கு சாப்பிட நல்லா இருக்கும். செய்துபாருங்கள்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்... என்ன 'போணியாகாது'ன்னு சொல்லிட்டீங்க. சமீபகாலமாகத்தானா இல்லை எப்போதுமேவா? (கொஞ்சம் வயதாகும்போது, பல் வீக் ஆகும். அப்போ மாங்காய்சாதம்லாம் ரசிச்சுச் சாப்பிடுவது கஷ்டம். அதனால் கேட்டேன்).
பதிலளிநீக்கு@ avargal unmaigal .....அது என்ன மிரட்டல்ன்னு சொல்லலியே :) அதாவது இன்னிக்கு இந்த உணவை சாப்பிடலேன்னா டெய்லி ப்ரேக்பஸ்டுக்கு பொங்கல் வரும்னு சொல்லிவைச்சா இல்லன்னா ஒரு மாசம் ஊருக்கு போயிடுவேன்னு சொன்னாலோ வேகமா இது இறங்கும் ..என் பொண்ணு naughty நாளைக்கு என்ன டின்னர் லஞ்சுன்னு இன்னிக்கே தெரிஞ்சு வச்சிப்பா ..
பதிலளிநீக்குஅப்புறம் குழந்தைகளில் மல்ட்டி 4 கால் குழந்தை மட்டுமே எதை கொடுத்தாலும் சாப்பிடும் .ஜெஸியும் மகளும் ஒரே வகை உணவை 3 வேளைக்கும் கேப்பாங்க
ஆகா
பதிலளிநீக்குசாப்பிட்டே ஆக வேண்டும் என்று மனத துடிக்கிறது
தம +1
ஆகா
பதிலளிநீக்குசாப்பிட்டே ஆக வேண்டும் என்று மனது துடிக்கிறது
தம +1
நன்றி கரந்தை ஜெயக்குமார் சார். காணவில்லையே என்று தோன்றியது.
பதிலளிநீக்குநீங்கள் என்பதிவுகளைப் படித்து வருவது மகிழ்ச்சி. இருந்தாலும் நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கும் பதிவுகளை உஙளுக்குத் தெரிவிக்கஎங்கள் ப்ளாகை நாட வேண்டி உள்ளது. உங்கள் முகவரி கிடைத்தால் தெரிவிப்பதில் சங்கடம் இருக்காது
பதிலளிநீக்குஇது போணியாகாது என்பதால், ஹோட்டலில் போடுவதில்லையோ :)
பதிலளிநீக்குமாங்காய் கடித்துச் சுவைப்போம்
பதிலளிநீக்குமாங்காய் சொதி வைப்போம்
இன்று தான்
மாங்காய் சாதம் பற்றி அறிகிறேன்.
@நெல்லைத் தமிழன், நம்ம ரங்க்ஸுக்கு இந்த மாங்காய் போட்ட அவியல், மோர்க்குழம்பு(புளிசேரிம்பாங்களோ), மாம்பழ சாம்பார், மாங்காய் சாதம் இதெல்லாம் பிடிக்காது. ஆனால் எங்க பிறந்த வீட்டில் செய்வது உண்டு! அங்கே போனால் பண்ணும்போது சாப்பிட்டுப்பேன். :) மாங்காயில் இங்கே ஊறுகாய் மட்டும் தான் பிடிக்கும். மாம்பழங்களைக் கூட அப்படியே சாப்பிடத் தான் பிடிக்கும், ஜூஸெல்லாம் பிடிக்காது. :)
பதிலளிநீக்குநன்றி மீள்வருகைக்கு ஜி.எம்.பி ஐயா.தவறாக எண்ணாதீர்கள். நான் தொடர்புகொள்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி. நீங்கள் எழுதினப்பறம்தான் ஏன் இதை உணவகத்தில் போடுவதில்லை என்று யோசிக்கிறேன். கேரட் சாதம், தேங்காய் சாதம், லெமன் சாதம், புளியோதரை என்றெல்லாம் பார்த்திருக்கிறேன். மாங்காய் சாதம் மெனுவில் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குநன்றி ஜீவலிங்கம். மாங்காய் ஊறுகாய்கூடவா சாப்பிட்டதில்லை? தமிழ் வருடப்பிறப்பில் மாங்காய் பச்சிடி (வெல்லம் போட்டது) பொதுவாக நிறையபேர் செய்வார்கள்.
பதிலளிநீக்குநன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் எழுதியுள்ள கருத்து எனக்கு ஒன்றை எண்ணவைத்துவிட்டது. என் ஹஸ்பண்ட் திருமணமாகி என்னுடன் இருக்கும்போது, ஆரம்பத்தில் புதிது புதிதாக, அதுவும் காம்பினேஷன் என்று நினைப்பவைகளைப் பண்ணினாள். (கண்டதிப்பிலி ரசம், பருப்புத் துவையல் போன்று காம்பினேஷனாக). நான் சமையலில் மூக்கை நுழைத்து என்ன என்ன மெனு என்று எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். எனக்கு ரொம்பப் பிடித்தது அடிக்கடி மெனுவில் வரும். 'மஞ்சப் பொங்கல்' (வெண் பொங்கல் இல்லை. துவரம்பருப்பு வைத்து செய்வது) எனக்குப் பிடிக்காது. அதை நான் பண்ணச்சொன்னதும் இல்லை. ஒரு தடவைக்குமேல் சாப்பிட்டதும் இல்லை. ஒருவேளை, பசங்களே இல்லாமலிருந்தால், வாழ்நாளில், பாவ் பாஜி, புலாவ், அவல் உப்புமா போன்ற பல ஐட்டங்களை பண்ணச் சொல்லியிருக்கமாட்டேன். பசங்களுக்கு பிடிச்ச ஐட்டம் செய்ய ஆரம்பித்தவுடன், ரொம்ப அபூர்வமாக அவைகளை நானும் சாப்பிடுவேன். (அப்போதும், எனக்கு தனி உணவுதான் பண்ணுவாள்). இப்போ அதனை நினைத்து, நான் செய்தது சரியல்ல என்று எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குபாத்தீங்களா... ரங்க்ஸ்லாம் எப்படியோ தங்க்ஸை மாத்திவிடுகிறோம் ஆனால் நாங்கள் மாறாமலிருக்கிறோம்.
@நெல்லைத் தமிழன், நம்ம புக்ககத்தில் நேத்திக்கு, இன்னிக்கு, நாளைக்கு எல்லா நாளும் சாம்பார் தான் வைக்கணும். அதே மாதிரி தேங்காய், பருப்புச் சேர்த்த கறிவகைகள், வதக்கல் கறி வகைகள் தான் பண்ணணும். கூட்டு எல்லாம் என்னிக்கோ அபூர்வமா யாரானும் சாப்பிட வந்தால் அப்போ செய்வாங்க. அதுக்கும் நிறையப் பருப்புப் போடணும். நான் பருப்பே போடாமல் பொரிச்ச கூட்டு, புளி விட்ட கூட்டு பண்ணுவதைப் பார்த்துச் சிரிப்பாங்க! நம்ம ரங்க்ஸுக்கும் நீங்க மேலே சொன்ன பாவ் பாஜி, புலவ், அவல் உப்புமா, ஜவ்வரிசிக் கிச்சடி வகையறான்னால் அலர்ஜி! இத்தனைக்கும் 18 வயசிலிருந்து கல்யாணம் ஆற வரைக்கும் 8 வருடம் புனே வாசம். ஆனாலும் அவருக்கு இந்த மசாலா சேர்த்த சமையல் பிடிக்காது தான்! குழந்தைங்களுக்காகத் தான் நானும் செய்வேன். அதே மாதிரி உங்க ஹஸ்பண்ட் மாதிரி நானும் காம்பினேஷனோடு தான் சமைப்பேன். துவையல் அரைத்தால் டாங்கர் பச்சடி அல்லது மோர்க்கூட்டு, அல்லது வெள்ளரிக்காய்ப் பச்சடி! புளிவிட்ட கூட்டு என்றால் மோர்க்குழம்பு, எலுமிச்சை ரசம்! சாம்பார் பண்ணினால் வேகவைத்துக்கொட்டிய கறி வகைகள் அல்லது ஏதானும் வதக்கல்! வத்தக்குழம்பு என்றால் பொரிச்ச கூட்டு வகைகள், பொரிச்ச குழம்பு பண்ணினால் புளி விட்ட கீரை என்று பண்ணுவேன். பருப்பு உசிலி என்றாலும் மோர்க்குழம்பு அல்லது வெறும் குழம்பு! ஆனால் இங்கே தேங்காய்த் துவையலுக்கு வத்தக்குழம்போ, சாம்பாரோ தொட்டுப்பாங்க! ஒரு வழியா அதை எல்லாம் மாத்தி அமைச்சேன்னு வைச்சுக்குங்க! :)))))) ஆக மொத்தம் இங்கே மாறினது ரங்க்ஸ் தானாக்கும்! ஹாஹாஹாஹா எங்களை என்னனு நினைச்சீங்க? :))))))
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஇதே ரெசிப்பிதான் பட்டாணி எல்லாம் சேர்ப்பதில்லை. இதில் கொஞ்சம் வெந்தயம் ட்ரையாக வறுத்துப் பொடி பண்ணித் தூவினாலும் சுவை நன்றாக இருக்கும். நான் செய்வதுண்டு. இதற்கும், எலுமிச்சம்பழ சாதத்திற்கும் செய்வதுண்டு...நெல்லைத் தமிழன்...
பதிலளிநீக்குகீதா