செவ்வாய், 14 மார்ச், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அம்மா



     எங்களின் செய்வாய்
ப் பதிவான "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இந்த வாரம் பதிவர் கே. அசோகன் அவர்கள் எழுதிய சிறுகதை இடம்பெறுகிறது.


     அவரின் தளம் "இனிய கவிதை உலா - கவிதைகள் - சிறுகதைகள்".


     மிகச் சமீபத்தில்தான் நண்பரின் தளம் எங்களுக்கு அறிமுகம். கதை பற்றிய அவர் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய கதை தொடர்கிறது.


============================================================




அம்மா-சிறுகதை- முன்னுரை

”சுட்டெரிக்கும் வெயிலையும், கொட்டுகின்ற மழையையும் பொருட்டாக நினைக்காமல் இருப்பவர்கள் இந்த உலகத்தில் யாரென்றால் உடனே அனைவருமே சொல்லிவிடுவார்கள் அவர்கள் காதலர்கள் என்று. இந்த உலகத்தையே மறக்க வைக்கும் உன்னத உணர்வாக காதல்

…. அந்த உணர்வை எவர்தான் விரும்பாது இருப்பார்கள்.

அப்படிப்பட்ட காதலர்கள் திருமணமான பின்பு வாழ்க்கை ஓட்டத்தில் யதார்த்த்த்திற்கு திரும்பும்போது நடைபெறும் நிகழ்வுகளை படம்பிடித்து
காட்டினால் என்னவென்று தோன்றியதுதான் ”அம்மா” என்ற சிறுகதை.

இந்த கதையின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து கருத்துக்களாக பின்னூட்டம் அளித்தால், அடுத்துவரும் கதைகளில் இன்னும் சிறப்பாக அமைத்திட முயற்சிப்பேன்

கவிஞர் கே. அசோகன் "."


http://kavithaigal0510.blogspot.com



==================================================================


அம்மா-
கவிஞர் கே. அசோகன்

                     ”டேய் விஐய், நான் காதலிச்சுதானே கல்யாணம் கட்டிக்கிட்டேன் நிம்மதியே இல்லேடா”  நண்பனிடம் விரக்தியாக புலம்பினான் புஷ்பராஜ்.

               ”போடா நீயும்…. ஒன் பிரச்னையும், வீட்டுக்கு வீடு அப்படித்தான்டா. பதிலடி கொடுத்தான் விஜய்.


                  இல்லேடா,  தொட்டதுக்கெல்லாம் கோபப்படுறா!”


                   என்னது ?  தொட்டதுக்கா?


        என்னடா ! ஜோக் அடிக்கிற ஜோக்என்று கேட்டுவிட்டு அதுக்கும்தான்டாஎன்றான் புஷ்பராஜ்.


                      சரி, ”ஒன் மனைவியிடம் பேசட்டுமா”?


                 ”வேண்டாம்டா சாமீ….நாலு சுவத்துக்குள்ள இருக்கிறத... சந்தி சிரிக்க வெக்கிறீயா?-ன்னு அதுக்கும் சண்டை போடுவாடா


                     ”நிம்மதியாய் இருக்க வழி சொல்லுடா” 


                 ”சரி...சரி…. நீ காதலிக்க என்னவெல்லாம் செய்து அவளை இம்ப்ரஸ் பண்ணே. தைச் சொல்லு என்றான் விஐய்


               ”தெல்லாம் நினைச்சா வானத்துல பறக்குற மாதிரி இருக்கும்டா


                ”தான்...அதான்அதையே சொல்லு பார;ப்போம்.


           ”வ சொல்ற இடத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாலேயே போய் காத்து கிடப்பேன்.


                  அப்புறம்….


                 போகும்போதேவித்தியாசமாய் ஏதாவது கிஃப்ட் வாங்கி போவேன்


                  அப்புறம்...


                   ன்னடா…?  கதையா கேட்கிற? 


                  ”சொன்னாத்தானே பிரச்னைக்கு தீர்வு கெடைக்கும்.


               “பார்க்குல ஒக்காந்தா, நேரம் போறதே தெரியாதுவாட்ச்மேன் வந்து விரட்டினாதான் உண்டு. ஒலகத்தையே மறந்து ...போடா...  சொர்க்கத்தில இருக்கிற மாதிரி”   அது இப்ப கிடைக்காதுடா.


                 அப்புறம்….


                ”நல்ல     ரெஸ்ட்ரெண்டா பார;த்து ...அவளுக்கு பிடிச்சதா பார்த்து.. பார்த்து, காசைப் பத்தி கவலைப்படாம வாங்கி குடுத்து, அவ சாப்பிடற அழகைப் பார;க்கிறதுக்கு ஆயிரம் கண்ணு வேணும்டா


                   அப்புறம்


         ”அவளை வீட்டுக்கு கொண்டுபோய் விடுகிற வரையில் ஒரு பாடிகார்டாஇருந்து பத்திரமாய் அவளை வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்


                     ம்ம்....     


               ”அப்பத்தான் வீட்டுக்குள் நுழைவாள்...அடுத்த அரை நிமிடத்தில், ஒரு போன் போட்டு விசாரிப்பேன்.


                    ம்ம்ம்...           

                
              போடா…”.இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. நீதான் காதலிக்கல, அதனால ஒனக்கு தெரியாதுடாஎன்றான் புஷ்பராஜ்.



              ”அப்படி வாமாப்ளே! ல்லாமே நீ சொன்னதுதான்.



       நான் சொல்றத கவனமா கேளுமுதலாவது, தொட்டதுக்கு கோபப்பட்டாள்.      



        காதலிக்கும் போது தொடுறதுக்கும்…. இப்போ தொடுறதுக்கும் வித்தியாசம் இருக்குடா. காதலிக்கும் போது,  ஒருவித அச்சத்தோடு மென்மையா பட்டும்படாமலும் இருக்கும். இப்போ உரிமை இருக்குங்கறதால, தொடுறதல ஒரு அழுத்தம இருக்கும். அதான் கோபப்படுறா    

  

                 ”இரண்டாவது, வித்தியாசமான கிஃப்ட் வாங்கி தந்ததாய் சொன்னாய். இப்போது எதுவுமே இல்லாமல் கை வீசிக் கொண்டு போகிறாய். டேய் மல்லிப்பூவும், அல்வாவும் வாங்கி கொடுப்பதைக்கூட நிறுத்தி விட்டாய் போலிருக்குது.


                     ”மல்லிப்புவுல நுகரும்போது ஒருவித பரவச உணர்வு  இருக்குடா. அது தம்பதிகளுக்கிடையே ஒரு நெருக்கத்தை உண்டாக்கும். ஒரு கால்கிலோ அல்வாவில் ஏகப்பட்ட கலோரிகள் கிடைக்கும்-டா. நீ அதுகூட வாங்கி போகமாட்டேன் என்கிறாய்.


                         ”ஆபிஸ் முடிஞ்சதும், சீக்கிரம் வாங்க என கூப்பிட்டால், இரவு ஒன்பது மணிக்கு போய் ஆபிஸ்ல எக்கச்சக்க வேலைஎன நிற்பாய். வீட்டுக்கு போனதும் ஆபிஸ்ல வேலை செஞ்ச அசதில ஒரு குட்டித்தூக்கம் போடுவே. மனைவிகிட்ட மனசுவிட்டு பேசமாட்டே


              வாரத்துல ஏழுநாளும்... வீட்டுச் சாப்பாடுதான். ஒருநாள் கூட வெளியில ரெஸ்ட்ரெண்ட கூட்டீ போய் மனைவிக்கு அசைப்பட்டதை வாங்கி தருவதில்லை..... கேட்டா விக்கிற விலைவாசில கட்டுப்படி ஆகலன்னு சொல்றே


                          சரி... .

                 
                   ”அவங்க அம்மா வீட்டுக்கோ, இல்லே தோழி வீட்டுக்கோ போனால் துணைக்கு போகாமல் தனியே அனுப்பி, ஒனக்குத்தான் வழி தெரியுமே. நீ போய்ட்டு வாயேன்என்று அனுப்பி விடுகிறாய்.   

 

                 ”டேய்...டேய்.....எப்படிடா இது என் வீட்ல நடக்கறதை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறே. என் மனைவி ஏதாச்சிலும் ஒன்கிட்ட புலம்பினாளா? கேட்டான் புஷ்பராஜ்.


                         ” இது என்ன உலகமகா ரகசியமாக்கும்.. எல்லோரும் செய்யுற தப்புத்தானேடா இது.


                   ”முதல்ல நீ  சொன்னதுக்கும்இ இப்ப நான் சொன்னதுக்கு முடிச்சு போட்டு பாரு விடைக் கிடைக்கும்டா என்றான்.


                      ”என்னடா புதிர் போடுறே ? பதில்  சொல்லுடா!


                     பதிலா ? உன் மனைவி மனதளளவில் இன்னும் காதலியாகவே இருக்காள்டா. அதுதான்டா பிரச்னை.


                     ஒரு குழந்தை பிறந்த பிறகாவது…. காதலிங்கிற நினைப்புல இருந்து மீண்டு வருவாளா? அப்புறம் என்கிட்ட ஒட்டுவாளா? ன்னு கேட்டான் புஷ்பராஜ்.


                        குழந்தை பிறகு ஒண்ணை மொத்தமா சீண்டவே மாட்டாடா


                         டேய்... டேய்  என்னடா சொல்றே? ” பதறினான் புஷ்பராஜ்.


                   ”அவ அம்மா-ங்கிற பெரிய அந்தஸ்துக்கு போயிட்டதுக்கு அப்புறம் நீயாவது....காதலாவது......என்றான் விஜய்.                                                                                                                                                                                

50 கருத்துகள்:

  1. எனக்கு இது கதையாக தோன்றவில்லை ஒரு பிரச்சனையை சொல்லி அதற்கு விடை தரும் ஒரு கட்டுரை போலத்தான் இருக்கிறது...என்னிடம் உண்மையாக கேட்டால் இது ஒரு பயனுள்ள கட்டுரை என்றுதான் சொல்லுவேன்....

    நீங்கள் இப்படி கேட்டதால்தான் ///இந்த கதையின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து கருத்துக்களாக பின்னூட்டம் அளித்தால், அடுத்துவரும் கதைகளில் இன்னும் சிறப்பாக அமைத்திட முயற்சிப்பேன்.//

    என் கருத்தை சொல்லி இருக்கிறேன். அது உங்களுக்கு தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  2. காதலன் (புஷ்பராஜ்), குழந்தையாக மாறினால் சரியாய் போச்...(!)

    பதிலளிநீக்கு
  3. உளவியலான அலசல் நன்று கவிஞர்.கே.அசோகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை.
    இப்போது மிகவும் தேவையான கதை. கருத்து வேறுபாடுகளை களைய ஓற்றுமையாக வாழ உதவும் கதை.
    அம்மாவை நேசிக்க ஆரம்பித்தால் எல்லாம் நலமே.

    கவிஞர் .கே. அசோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கேட்டு வாங்கி போட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

      நீக்கு
  5. நல்லதொரு பகிர்வு. காதலி மனைவியானால்..... :) மனைவியை காதலிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  6. கதை பதிவு க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றி

    பதிலளிநீக்கு
  7. அடடா என்னால் நம்ப முடியவில்லை... ல்லை... ல்லை....
    என்னில் ஒரு பழக்கம் இருக்கு, என்பக்கம் வருவோர்தவிர வேறு யார் புளொக்குக்கும் போய் ஒளிச்சு நின்று படிக்க மாட்டேன்ன், வேறு எங்கும் போகவும் மாட்டேன், யாராவது இதைக் கொஞ்சம் படியுங்கள் என சொன்னால் போய் படித்ததுண்டு.

    ஆனா 3 நாட்களின் முன்னர், தமிழ்மணத்தில் "கொய்யாக்கனி" தலைப்பு பார்த்ததும் , படிக்க தோன்றியது, படிச்சதும் ... ஏனோ தெரியவில்லை கொமெண்ட் போடச் சொல்லியது மனம், போட்டுவிட்டு வந்தேன், இதுவரை என் வாழ்நாளில் இப்படி தெரியாத இடம் போய் கொமெண்ட் போட்டதே கிடையாது.
    இன்று அவர் கதை இங்கு பார்த்ததும் ஷாக்ட்ட்ட்ட்ட் ஆகிட்டேன்ன்ன்ன்... வாழ்த்துக்கள் கவிஞர் அசோகன் அண்ணன்.
    இப்படி தேடித் தேடி க் கேட்டுக் கதைகள் வாங்கிப் போட்டு அனைவரையும் பிரபல்ய படுத்தும் சகோ ஸ்ரீராமுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. காதலி மனைவி ஆகும்போது அந்த 'த்ரில்' (காதலிக்கும்போது இருந்த) போயிடுமோ?

    பதிலளிநீக்கு
  9. Avargal UnmaigalMarch 14, 2017 at 6:27 AM
    என் கருத்தை சொல்லி இருக்கிறேன். அது உங்களுக்கு தவறாக இருந்தால் மன்னிக்கவும்//////

    ஹையோ ட்றுத்... நீங்க கடசி வரைக்கும் கருத்தைச் சொல்லவே இல்லயே.... ஹா ஹா ஹா

    நேற்றைய சமையல் பகுதியில் முடிவில் என் கருத்திருக்கு கொஞ்சம் போய்ப் பாருங்கோ ட்றுத்.... இதை அஞ்சுதான் சொல்லிவிடச் சொன்னா:). நானில்ல மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

    பதிலளிநீக்கு
  10. இப்போதான் கதையைப் படிச்சேன்... உலகில் நடக்கும் பாதிப்பேரின் பிரச்சனையை அப்படியே கதையாக்கி இருக்கிறீங்க, இதில் புதிய விசயம் ஏதும் இல்லை எனினும்... மிக சூப்பராக சொல்லிகிருக்கிறீங்க... எழுதியுள்ள ஒவ்வொரு வசனமும் ரசிக்க வைக்குது, இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என எண்ண வைத்தது. மிக அருமைமிகவும் ரசித்தேன்....

    காதல் என்பது றிலே போல தோன்றுது... காதலிக்கும்போது ஆண் மட்டும் ஓடுவார்ர் பெண் ஏதொ லெவலடித்துக்கொண்டிருப்பார்:), ஆனா திருமணமானதும் ஆண் , பொல்லை மனைவி கையில் கொடுத்துவிட்டு ஓய்வெடுப்பார், மனைவி அப்போதான் ஓடத் தொடங்குவார் .. அங்குதான் பிரச்சனை ஆரம்பமாகும்:)...
    எப்பவும் இருவரும் சேர்ந்தே ஓடினால் பிரச்சனை இல்லை....:).

    பதிலளிநீக்கு
  11. கதையை ரசித்தேன். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி. கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. குட்டி கதை ஆனா கருத்து மிகவும் உண்மை ..

    ரெண்டு பேர் மேலேயும் தப்பிருக்குங்க ..பெண் என்பவள் எப்போதும் அன்பை யாசிப்பவள் எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்னு விரும்புவர் ..நம்ம ஊர் காதலன் எங்கே காதலி விட்டு போயிடுவாளோ மிஸ் பண்ணிடுவோமோன்னு இருக்க பிடிச்சு வைப்பர் .திருமணம் முடிந்ததும் இனி தன்னுடையவள் மனைவி அதனால் இனி இவள் பின்னே ஓட வேண்டாம்னு நினைக்கிறார் கதையில் ..இதெல்லாம் இங்கே வெளிநாட்டினரிடம் இல்லை ..எந்த வயதிலும் அன்பை வெளிப்படுத்த தயங்க மாட்டாங்க வருடம் இருமுறை கட்டாயம் பயணம் செய்வாங்க ..ஆகவே வாழ்க்கை போரடிக்காம போகும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

      நீக்கு
  13. காதலிக்கும் போது இருக்கும்மனநிலை திருமணத்துக்குப் பின்னும் தொடர வாய்ப்பில்லை காதலிக்கும் போது எல்லாமே காதல் ஆனால் மண வாழ்வில் காதலும் ஒரு பங்கு/ எப்படியானாலும் இருவருக்கும் அன்பு இருக்கிறது என்றுதெரியப்படுத்த வேண்டும் அது எப்படி என்பதைப் பொதுவாக்க முடியாது

    பதிலளிநீக்கு
  14. காதலைப் பற்றித் தெரியாது. ஆனால் கணவன், மனைவி இருவருமே யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கனவுலகிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். குழந்தை பிறந்ததுமாவது மாறட்டும்! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றி

      நீக்கு
  15. கவிஞர் கே.அசோகன் அவர்களை
    வலைப்பூ வழியே நன்கறிவேன்.
    சிறந்த படைப்பாளி - அவரது
    கதையைப் பதிவு செய்து
    வாசகரை மகிழ்வூட்டியுள்ளீர்கள்!
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

      நீக்கு
  16. இனி கணவனுக்கு கிட்டாது,குழந்தைக்குத் தான் முத்தம் .....என்று புஷ்பராஜ் பாட வேண்டியதுதான் :)

    பதிலளிநீக்கு
  17. காதலிப்பவர்கள் மணம் புரியும் போது யதார்த்தத்தை ஃபேஸ் செய்ய முடியாமல்...காதலிக்கும் போது கண்ணில் படாதது எல்லாம் கல்யாணம் ஆகி யதார்த்த வாழ்க்கையை மேற்கொள்ளும் போது கண்ணில் படும்...காதலிக்கும் போது குறையாகப் படாதவை எல்லாம் குறையாகப் படும்...காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் காதலிக்க வேண்டும். திருமணம் ஆன பின்னும்..காதலுக்கு முடிவே இல்லை மரணம் வரையும் காதலிக்கலாம்......குழந்தை பிறந்தாலும் கூட காதலிக்க முடியும்! அது ஒவ்வொருவரின் மனதையும் பொருத்து. உண்மையான காதலாக இருந்தால்...

    யதார்த்தத்தில் நடப்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்!

    இதுவரை அறிந்திராத ப்ளாக் மற்றும் பதிவர் பற்றி இங்கு அறியத் தந்த எங்கள்ப்ளாகிற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

      நீக்கு
  18. ய‌தார்த்தங்களைப்பொதிந்த அருமையான சிறுகதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

      நீக்கு
  19. பிளீஸ்ஸ்ஸ் வெளியே கொஞ்சம் வந்து பாருங்கோ சகோ ஸ்ரீராம்ம்ம்... இதைத்தான் நான் எப்பவோ கேட்டேன்ன் நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டீங்கள். இன்று பாருங்கோ... உங்கள் கொமெண்ட்ஸ் செட்டிங் ஐ மாத்துங்கோ... அதாவது மொபைலில் பார்க்கும்போது, அழகழகா ஒவ்வொரு கொமெண்ட்டுக்குக் கீழும்.. அசோகன் அண்ணனின் பதில் தெரியுது.. ஆனா கொம்பியூட்டர் வந்து பார்க்க... ஒன்றுக்கு கீழே ஒன்று அடுக்கி விட்டதுபோல இருக்கு.. யாருக்கு எந்த பதில் எனவே தெரியவில்லை.

    இதனால்தான் இங்கு பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடும்போதெல்லாம்.. கொப்பி பேஸ்ட் பண்ணி அல்லது பெயர் குறிப்பிட்டே போட வேண்டி இருக்கு.....

    நான் சொன்னதில் ஏதும் தப்பு தெரியுதோ?.. ரொம்ப களைச்சுப் போயிட்டேன்ன்ன்.. இன்று முழுவதும் பிளைட்டில வேறு:) இருந்தேனா:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஊஉ சூடா ஒரு கப் மங்கோ ஊஸ் பிளீஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  20. காதலித்த அனுபவம் இல்லாததால் முழுமையாக ரசிக்கமுடியவில்லை....என்றாலும் காதல் தகவல்கள் சுவையாக உள்ளன.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  21. யதார்த்த கதை. அருமையாக உள்ளது. அன்பு வாழ்த்துகள் கவிஞருக்கு. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

      நீக்கு
  22. காதல் என்பது பொழுதுபோக்கு. கல்யாணம் என்பது வாழ்நாள் ஒப்பந்தம். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இந்த சண்டை. மனதளவில் காதலர்களாக திருமணத்திற்குப் பின் இருக்கலாம், தவறில்லை. ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.
    பெரிய விஷயத்தைச் சுருக்கமாகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். திரு அசோகனுக்கு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. எதார்த்த வாழ்வியலை அழகா சொல்லி இருக்கீங்க...ரொம்ப நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றி

      நீக்கு
    2. தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றி

      நீக்கு
  24. நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!