முன்னுரை வெளியிட்டு
சற்று நாட்களாகி விட்டது. ஃபிப்ரவரி 27 சுஜாதா நினைவு நாள். அதை ஒட்டி
இந்தப் பதிவு என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நீண்ட நாட்களாய்
டிராஃப்டில் தூங்கி கொண்டிருந்த பதிவு!
தன்னுடைய
இந்தக் கதைகள் பற்றி சுஜாதா "சம்பிரதாயமான பழைய காலச் சிறுகதைவைடிவம்.
முடிவில் ஒரு சொடக்கு அல்லது
துடிப்பு இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை
இலக்கியமா இல்லையா என்று கவலைப்பட வேண்டியதில்லை. உற்சாகமாக, சுலபமாகப்
படிக்க முடியும்" என்று சொல்லியிருந்தாலும் அப்படி ஒரு சொடக்கை, துடிப்பை
பெரும்பாலும் இவற்றில் பார்க்க முடியவில்லை. இதைவிட, அவர் இப்படி எந்தத்
தலைப்பும் வைக்காமல் முன்னர் எழுதிய சிறுகதைகள் இதைவிட அற்புதமாய் இருந்தன.
முன்னுரையில்
குமுதம் பற்றி இவர் குறிப்பிடும் வரிகளை படிக்கையில் குமுதத்தை இவர்
பாராட்டுகிறாரா, பாராட்டுவதுபோல நைஸாக சில கருத்துகளை சொல்கிறாரா என்று
தோன்றும். உதாரணமாக "பத்துப்பக்கம் ஒரு கதாசிரியர் மாய்ந்து மாய்ந்து
எழுதியதை ஒரு பக்க
அளவுக்கோ அல்லது ஒரு படக்கதையாகவோ சுருக்க குமுதம் தயங்கவில்லை. அவற்றின்
தலைப்புகள் மாறின. பெயர்கள் மாறின. வருணனைகள் மாயமாய் மறைந்தன. அத்தனை
சிதைவுகளை கதைகளை எழுதியவர்கள் மௌனமாகத் தாங்கி கொண்டிருந்ததற்கு
காரணம்..."
"இப்படி ஒரு கதை மூலம் மற்றொரு கதைக்கு இழுத்ததாலோ என்னவோ இவைகளுக்கு "தூண்டில் கதைகள்" என்று குமுதம் பெயரிட்டது.." என்று இவர் குறிப்பிடும் அளவு ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை! நைலான் கயிறு , பாதி ராஜ்ஜியம் போன்ற கதைகளின் சுவாரஸ்யம் இதில் இல்லை என்றே சொல்லலாம் என்றாலும் சுஜாதா சுஜாதாதான் என்று சொல்லுமளவு சில கதைகள் உண்டு.
சரி.. இனி முன்னுரை...
இந்த இடத்தில் இதுதான்
தரவேண்டும் என்கிற புனிதத்தை மாற்றி, வாராவாரம் ஒரு எதிர்பாராத அம்சத்தை
எதிர்பார்க்கும் புதுமையைக் கொண்டு வந்தது. சினிமா விமர்சனம், ஆறு
வித்தியாசம், அரசு பதில்கள், சாண்டில்யன் சரித்திரக் கதைகள் போன்ற சாகாத
விஷயங்கள் உட்பட எல்லாம் வாராவாரம் இடம் மாறின. வடிவம் மாறின, விடுபட்டு,
மீண்டும் புத்துயிர் பெற்றன, சுருங்கின, விரிந்தன. இந்த வெட்டுவதும்,
ஒட்டுவதும் சேர்ப்பதுமே ஒரு பத்திரிகைப் பணியாக மாறி, குமுதத்திற்குப் பின்
வந்த அத்தனைப் பத்திரிகைகளும் அதே ஃபாரமாய் அமைப்பைக் கடைப்பிடித்து
"வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை" என்ற சொல்லுக்கேற்ற குமுதம்
ஃபார்முலா அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்பத்திரிகை ஃபார்முலாவாகியது.
என் ஆரம்ப கால கதைகள் சற்று இந்த
இம்சைகளுக்கு உட்பட்டாலும், ஒரு காலகட்டத்திற்குப் பின் எஸ் ஏ பி யம்,
ரா.கி. ரங்கராஜனும் என்னிடம் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டு சும்மா விட்டு
விட்டார்கள். ஒருவேளை நான் செய்த கோணங்கித் தாங்களே போதும் என்று
விட்டிருக்கலாம். அதனால் என்னால் குமுதத்தில் பலவிதமான சோதனைகளை செய்து
பார்க்க முடிந்தது. ஒரு கதையில் இரண்டு கதை எழுதினேன். ஒரு முடிவைச்
சுற்றி வளைத்து ஆரம்பத்தோடு ஒட்ட வைத்தேன். சில எழுத்து விசித்திரங்கள்
பண்ணிப்பார்த்தேன்.அனைத்தையும் குமுதம் அனுமதித்தது. சுவாரஸ்யமாக கதை
சொல்ல வேண்டும் என்கிற ஆதார குறிக்கோளிலிருந்து நான் விலகாமல் இருந்ததால்,
இந்த மாதிரி வேறுபாடுகளையெல்லாம் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.
அனுமதித்தார்கள் என்று சொல்லலாம். நாட்பட நாட்பட சிறுகதைப் பழக்கமே
பத்திரிகைகளில் மருகி துணுக்கு என்னும் பொட்டலச் செய்தி ஆக்கிரமிக்கது
துவங்கியது. இதற்கும் குமுதம் ஒருவாறு காரணம். இன்றைக்கு துணுக்குகளை
முழுவதும் நம்பியே மூன்று நான்கு பத்திரிகைகள் இருப்பது
தமிழ்ப்பத்திரிகையுலகின் பிரத்தியேக விந்தை.
அப்புறம் தொடர்கதை. தொடர்கதை
என்னும் புதிய வடிவம் இதுவும் தமிழ்ப்பத்திரிகையுலகின் தனிப்பிள்ளை.
நாவல் அல்ல, தொடர்கதை. வாராவாரம் எழுதப்பட்டு ப்ளாட் அலையும் வினோத
நாடோடிக்கதை. இதன் முக்கியக் குறிக்கோள் ஒரு கெட்ட பழக்கம் போல வாசகரோடு
ஒட்டிக்கொண்டு, வாராவாரம் பத்திரிகையை வாங்க வைக்க வேண்டும். வார
இறுதியில் ஏதாவது ஒரு உச்சக்கட்டம் வேண்டும். குறிப்பிட்ட வ்ருஷப்
பிறப்பில் தீபாவளி, சுதந்திர தின இதழ் என்று ஆரம்பிக்க வேண்டும். மற்றொரு
சிறப்பிதழில் முடிவு பெற வேண்டும். அதற்குப் படம் போடவென்று நான்கு
சித்திரக்காரர்கள் உண்டு. யார் படம் போடுகிறார்கள் என்று வாசகர் போட்டி
கூட இருக்கலாம். கதை வருமுன் 'ஓ என் அபிமான எழுத்தாளர் எழுதுகிறாரா, ஜெ
படம் போடுகிறாரா பேஷ் பேஷ் விலையை ஏற்றுங்கள். தாங்கி கொள்கிறோம்' என்று
வாசகர் கடிதம் எல்லாமே தமிழ் கூறும் நல்லுலகத்தின் இலக்கியச் சிதனைகள்
மங்கி ஒரு அவசரப் போக்கும் மேம்போக்கும் எங்கும் பரவிக் கொண்டிருப்பதற்கான
அடையாளங்கள்.
இதையெல்லாம் பற்றி யோசித்துக்
கொண்டிருக்கையில் எனக்கு சட்டென்று ஏன் பழைய மாதிரி கிளாசிக்கல் பாணியில்
ஜெஃப்ரே ஆரச்சர் போல பல இடங்களை வைத்து பல விதமான பாத்திரங்களை அமைத்து ஒரு
வகையில் சிறுகதை வடிவாகி சிதைவுகளுக்கு பிராயச்சித்தமாக விஸ்தாரமாக ஒரு
பத்து பன்னிரண்டு கதைகள் எழுதக்கூடாது என்று தோன்றியது. ஆசிரியர் எஸ் ஏ பி
அவர்களுக்கு போன் செய்து சொன்னபோது, அவர் தாராளமாகச் செய்யுங்கள்
என்றார்.
அந்த வகையில் நான் எழுதிய கதைகள் இவை. சம்பிரதாயமான பழைய காலச்
சிறுகதைவைடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இவைதான் இந்தக்
கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா என்று
கவலைப்பட வேண்டியதில்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்க முடியும். இந்தக்
கதைகளைக் குமுதத்தில் நிறுத்தாமல் வெளியிட்டாலும், ஒரு கதை முடிய, மற்றொரு
கதை துவங்கும்படியாக பகுதி பகுதியாகப் பிரித்துத்தான் வெளியிட்டார்கள்.
அதற்கு காரணம் தொடர்கதை கதை தோஷம் என்றுதான் சொல்வேன். இப்படி ஒரு கதை
மூலம் மற்றொரு கதைக்கு இழுத்ததாலோ என்னவோ இவைகளுக்கு "தூண்டில் கதைகள்"
என்று குமுதம் பெயரிட்டது. புத்தக வடிவில் இப்போது வந்து விட்டதால்,
நீங்கள் விரும்பிய கதையைத் தேர்ந்தெடுத்து விரும்பிய நேரத்தில் படிக்கலாம்.
வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை - என்னவொரு அருமையான "மந்திரம்..!"
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குவிரும்பிய கதையை விரும்பிய நேரத்தில் படிக்கலாம். என்ன ஒரு தன்னம்பிக்கை. நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநாளைக்கே லைப்ரரி போகணும் ரொம்பா நாளாச்சு சுஜாதா கதைகள் படித்து :)
பதிலளிநீக்குநெஞ்சில் ஒர்ர் ஆலையம் என்னும் படத்துக்காகவந்த போட்டி விமரிசனம் ஒன்று பெண்களுக்கானது, அதற்காக நான் அப்போதைய என் வருங்கால மனைவி பெயரில் எழுத வெளிவந்து பரிசும் வாங்கிக் கொடுத்ததே என் படைப்பு ஒன்று குமுதம் பத்திரிக்கையில் வந்த வரலாறு அதிலும் சில வெட்டுகள் இருந்தன.
பதிலளிநீக்குஎழுதத் தொடங்கிய போது , குமுதத்தில் என் ஜோக்ஸ் வந்தது !அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :)
பதிலளிநீக்குதூண்டில் போட்டு இழுத்து இருக்கீங்க! கதைகளைப் படிச்சால் தான் நினைவுக்கு வரும், ஏற்கெனவே படிச்சதா இல்லையானு! :) இப்போ ஒண்ணும் நினைவில் இல்லை!
பதிலளிநீக்குநான்காம் பதிப்பாக வந்தது அக்டோபர் 2006 இல். //
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
அறிந்து கொண்டேன். நன்றி.
இவ்ளோ இருக்கா சுஜாதா அவர்களின் பின்னால். அவரின் கதைகள் பிடிக்கும் ஆனா புத்தகங்கள் கிடைத்ததில்லை. தூண்டில் கதைகள் ... முயற்சிக்கிறேன், அதுக்கு முன் என்னிடம் இருக்கும் "பொன்னியின் செல்வனை" முடிக்கோணும்.....
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் இது அஞ்சுட ஐல பட்டிடக்குடா:).
AngelinMarch 2, 2017 at 4:09 PM
பதிலளிநீக்குநாளைக்கே லைப்ரரி போகணும் ரொம்பா நாளாச்சு சுஜாதா கதைகள் படித்து :)////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கொண்ணும் புகையேல்லை சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்:)
தூண்டில் கதைகள் - சில கதைகள் குமுதத்தில் வந்த போது படித்திருக்கிறேன். புத்தகமாக படித்த நினைவில்லை.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கதை எப்படியிருந்தாலும் சுஜாதா இருக்கிறார் என்பதற்காகவே படிக்கலாமே!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி
இவ்ளோ நேரமும் ஃபோன் இல் பார்த்ததனால் வோட் போட முடியவில்லை, இப்போ கொம்பியூட்டர் திறந்து வோட் போடுவமே என றீஈஈஈஈஈஈஈஈஈப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிரெஸ் பண்றேன் பண்றேன்ன்ன்... தமிழ்மண வோட்டைக் காணல்ல.. ஆரோ களவெடுத்துப் போட்டினம்.... இங்கதானே இருந்துது..:)
பதிலளிநீக்குவெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை - என்னவொரு அருமையான // அட!!!
பதிலளிநீக்குபல கதைகள் வாசித்த நினைவு இருக்கிறது குமுதத்தில் வெளியான போது. ஆனால் இப்போது நினைவில்லை. (இனி வாசிக்க முடியுமா தெரியவில்லை.---..துளசி)
கீதா: மேற் சொன்ன எங்கள் இருவரின் கருத்துடன்.....மீண்டும் தலைவரின் கதைகளை வாசிக்க வேண்டும் என்று தூண்டில் போட்டுட்டீங்க. இதையும் வாசிக்க வேண்டும். அப்போது நினைவுக்கு வந்துவிடும்...என்று நினைக்கிறேன்...மிக்க நன்றி...இணையத்தில் இருக்குமில்லையா...தேடிப்பார்த்துவிட்டால் போச்சு....
ப்போட்டிட்டேன்ன்ன்ன்ன்:)
பதிலளிநீக்குஒரு காலத்தில் சுஜாதா சுஜாதா என்று அலைந்திருக்கிறேன்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம +1
இயல்பான நடையில்
பதிலளிநீக்குசிறுகதையின் போக்குகள் குறித்துச்
சொல்லியவிதம் அருமை
படிக்காத விஷயம் ஆகையால்
படிக்க கூடுதல் சுவாரஸ்யம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
எழுதத் தான் முயன்றாலும்
பதிலளிநீக்குசுஜாத்தாவின் கருத்துகளை
எடுத்தாள்வோர் வெல்வாரே!
தூண்டில் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் இந்த கதைதான் என்று குறிப்பிட்டு சொல்லும்படி ஞாபகம் இல்லை. முதல் பாராவை படித்தால் நினைவிற்கு வந்து விடும். அவர் எழுதிய 'மத்தியமர்' கதைகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன. Sujatha is a great writer!
பதிலளிநீக்குசொல்லப்போனால் சுஜாதாவே ஒரு தூண்டில் தான.
பதிலளிநீக்குவசமாக ஒரு சுக உணர்வோடு மாட்டிக்கொள்ளும் மீன்கள் வாசகர்கள்.