புதன், 29 மார்ச், 2017

புதன் 170329


சென்ற வாரக் கேள்விகளில் ....

முதல் கேள்வி அ ஆ வ எழுதும்போது என் காதில் விழுந்த வார்த்தைகளின் முதல் எழுத்துகள்  அவை! அப்பொழுது ஏதோ ஒரு நகைச்சுவைச் சானலில், யாரோ " அய்யோ ஆ வலிக்குதே ...." என்று கூவினார்கள். சத்தம் மட்டும்தான் பக்கத்து அறையில் இருந்த என் காதில் விழுந்தது. அதற்குள் அந்த சானலை பக்கத்து சானலுக்கு மாற்றிவிட்டார்கள். அடுத்த வார்த்தை, " டாக்டர். / நான் (என்ன பண்ணுவேன்) / உன்னை (சும்மா விடமாட்டேன். ) / இதற்கு (பழி வாங்கியே தீருவேன்) என்று ஏதேனும் இருந்திருக்கும். 
    

முயற்சி செய்த மாதவன், அதிரா, நெல்லைத் தமிழன், பாபு ஆகியோருக்குப் பாராட்டுகள். 

இரண்டாவது கேள்விக்கு 0.00390625 என்று முதலில் கூறிய மாதவனுக்கும், மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள். 


மூன்றாவது கேள்வியான அணி சேரா மனிதர் யார் கேள்விக்கு பதில் அளித்துள்ள நெல்லைத் தமிழனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கின்றோம். ஆம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அணி சேரார். 


இந்த வாரம் வேறு ஒரு வகைக் கேள்வி. 

புத்தி சொல்லுங்கள் பகுதி. 

நம்ம ஊர்ல எப்பவும் கிடைப்பது புத்திமதிகள்தான் ! 

இது உண்மை நிகழ்வு. 

ராமு. வயது நாற்பது. மனைவி குழந்தைகள் உண்டு. கட்டிடம் கட்டும் தொழிலாளி. ஒவ்வொரு நாளும் மதுக்கடையில் புகுந்து, முன்னூறு ரூபாய்க்குக் குடித்துவிட்டு வந்துவிடுகிறார். அவருக்கு வேலை தருகின்ற, வீடு கட்டும் முதலாளியிடம் இன்று வந்தார். "சார்! இப்படிக் குடிச்சிக் குடிச்சி கேவலமா போய்கிட்டு இருக்கேன் என்று எனக்கே சங்கடமா இருக்கு. இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி நிறுத்தலாம் என்று சொல்லுங்க" என்று கேட்டார். 

நீங்கதான் அவருக்கு வேலை தருகின்ற முதலாளி என்றால், அவருக்கு என்ன புத்திமதி கூறுவீர்கள். 

(நல்ல பிராக்டிகல் யோசனை தருபவருக்கு அவர் ஒரு குவார்ட்டர் பரிசு தருகிறேன் என்கிறார்!)

     

15 கருத்துகள்:

  1. கே.ஜி.ஜி அவர்கள் இந்தப் பகுதியில் கேள்வி கேட்பதால் சீரியஸான ஆலோசனை எதிர்பார்க்க மாட்டார் என்றே தோன்றுகிறது. இருந்தாலும், உலகத்தில் சுலபமான வேலை பிறருக்கு அட்வைஸ் தருவதுதானே.

    1. 100 ரூ மட்டும் ராமுவுக்குக் கொடுத்துவிட்டு மீதியை அவருடைய மனைவியிடம் கொடுத்துவிடலாம். இல்லைனா இன்னொரு 100 ரூவை குழந்தைகள் பெயரில் போட்டுவிட்டு, மீதியை அவருடைய மனைவியிடம் கொடுத்துவிடலாம். இது ராமுவே திருந்தணும் என்று நினைப்பதால்.

    2. தன்னிடம் உழைப்பவர்தானே ராமு. அவர் நல்லா இருந்தா தனக்குத்தானே நல்லது என்று, தன் செலவில் குடிகாரர்கள் மறுவாழ்வில் சேர்த்துவிட்டு, பிறகு வேலைக்குச் சேரும்போது மொத்த பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிடலாம்.

    ஆனால், யோசனை சொல்பவருக்கே ஒரு குவார்ட்டர் பரிசு என்று சொல்லும் முதலாளிக்கு, ராமு எக்கேடு கெட்டுப்போனால்தான் என்ன, குடித்துவிட்டால், மறு'நாள் உடம்பு வலி என்று வேலைக்கு வராமலிருக்கமாட்டான் என்றுதான் முதலாளிக்குத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  2. என்னைப் பொருத்தவரை தன்னைத்தானே ஆளவேண்டும் பிறரின் அறிவுரை மட்டும் திருந்திவிட போதுமா ? மனம் இருந்தால் மாற்றம் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. ////(நல்ல பிராக்டிகல் யோசனை தருபவருக்கு அவர் ஒரு குவார்ட்டர் பரிசு தருகிறேன் என்கிறார்!)////
    நோஓஓ நீங்க முதலில் பரிசை மாத்துங்கோ ...நான் சூப்பர் ஐடியா சொல்லுவேன்ன்:)

    பதிலளிநீக்கு
  4. சம்பளத்தை அப்படியே மனைவியிடம் கொடுத்துடணும்!

    பதிலளிநீக்கு
  5. ஹலோ இன்னாது இது! க்வார்ட்டரா பர்சு! நல்ல மொதலாளி! அப்ப அறிவுரை எல்லாம் கொடுத்து வேலைக்காவதுபா...க்வாட்டர நிப்பாட்டுறதுக்கே க்வாட்டரா...இது வேலைக்காவாதுபா...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இங்க எங்க தள கருத்துக் கந்தசாமி அதான் ஸ்ரீராம் சொன்ன சிந்தனையாளர் சொல்லுறாரு...

    துளசி: முதலாளி ராமுவை முதலில் தன் செலவில் மறுவாழ்வு நல மையத்தில் சேர்க்கலாம். அது 12 ஆயிரம் முதல் 15ஆயிரம் செலவாகும். மையத்திலேயே தான் ராமு தங்க வேண்டும். மனைவியை அவ்வப்போது அழைப்பார்கள் கவுன்செலிங்க் என்று. அப்படி முதலாளிக்கு செலவு செய்ய முடியாது என்றால் அதனைக் கடனாகக் கொடுத்து ராமு வேலையில் மீண்டும் சேர்ந்த பிறகு மாதம் இவ்வளவு என்று பிடித்துக் கொள்ளலாம். என்றாலும் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தவர் எல்லோரும் திருந்திவிடுவதுமில்லை. மனக்கட்டுப்பாடு ராமுவிடம் வர வேண்டும். வந்தால் மட்டுமே திருந்த முடியும். இப்படி அறிவுரை வழங்கும் எனக்குக் குவார்ட்டரா...ஐயோ!! இதை நான் எங்கு சொல்வேன். என்னை எல்லாம் அப்படி வீழ்த்த முடியாதாக்கும்....அப்போ பெண்களுக்கும் இதான் பரிசாஆஆஆஆ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இங்க எங்க தள கருத்துக் கந்தசாமி அதான் ஸ்ரீராம் சொன்ன சிந்தனையாளர் சொல்லுறாரு...//


      ஹா... ஹா..... ஹா....

      நீக்கு
  7. பெண்களுக்கும் இதான் பரிசானு கேட்டு துளசி என்னை உசுப்பேத்திவிட்டுவிட்டார். அதிராவும் ஏற்கனவே சொல்லிவிட்டார். எனவே அதிரா, ஏஞ்சல் வாங்கப்பா கேஜிஜி சாருக்கு எதிரா ஒரு கொடி பிடிப்போம் ஹிஹிஹி மதுரைத் தமிழன் கிட்ட மட்டும் போட்டுக் கொடுத்துடாதீங்க...நாம் தர்ணா பண்றது மட்டுமில்ல....பரிசைப் பத்தியும் போட்டுக் கொடுத்துடாதீங்க...

    ச்சே அவர் கும்மி மிஸ் ஆகுதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா..... க்வார்ட்டர்னா ஒரே அர்த்தம்தான் வருமா? கேஜிஜி அப்படிச் சொல்ல மாட்டார். வேறு விளக்கம் வைத்திருப்பார்.

      நீக்கு
  8. சில மையங்களில் இதற்கான பயிற்சி தருகிறார்கள் . என் கூட வங்கியில் வேலை பார்த்தவர் ஒருவர் இது மாதிரியான மையம் சென்று வந்த பின் நிறுத்திவிட்டார்

    பதிலளிநீக்கு
  9. //கீதா..... க்வார்ட்டர்னா ஒரே அர்த்தம்தான் வருமா? கேஜிஜி அப்படிச் சொல்ல மாட்டார். வேறு விளக்கம் வைத்திருப்பார்.//

    ஓ அப்படி வேற இருக்கோ!! கேஜிஜி க்கு ரொம்ப நல்ல மனசாக்கும். பரந்த விசாலமான மனசு! அவர் க்வார்ட்டர்ஸ் என்று அடிக்க அது டைப்போ எரர் ஆகி க்வார்ட்டர் என்று வந்திருக்கிறது அப்படித்தானே கேஜிஜி!!!

    அதிரா பரிசு க்வார்ட்டர்னு தப்பா வந்துருச்சாம் க்வார்ட்டர்ஸ் ஆம் ஸோ வந்து நல்ல அட்வைஸ் சொல்லிட்டுப் போங்கோ....ஒரு வேளை உங்களுக்கு ஒரு க்வார்ட்டர்ஸ் கிடைக்கலாம் இல்லைனா அந்த க்வார்ட்டர்ஸ் க்வாட்டரா பிரிச்சு 4 பரிசாவும் கேஜிஜி கொடுத்தாலும் கொடுப்பார் அப்போ எங்களுக்கும் ஒரு போர்ஷன் உறுதி...ஹிஹீஹி...

    ஸ்ரீராம் நான் சொன்னது கரீக்டா...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஹாங் ஹா :) அது குவார்ட்டர் பவுண்ட் கேக் ஆகவும் இருக்கலாம் ..

    பதிலளிநீக்கு
  11. அது குவார்ட்டர் 1/4 சம்பளமாகவும் இருக்கலாம்

    வருத்தப்படறார்னா அவருக்கு குடி நினைச்சி கில்ட்டி அதனால் கால்வாசி சம்பளத்தை அவருக்கும் மீதி முக்கால்வாசியை மனைவிக்கும் கொடுக்கலாம்

    பதிலளிநீக்கு
  12. எனக்கு உடனே குவார்ட்டர் பவுண்ட் ரெட் வெல்வெட் கேக் அனுப்பி வைக்கவும்

    பதிலளிநீக்கு
  13. ஒரு குவார்ட்டர்=கால் டாலர் சுமாராக ரூ.16.50

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!