Thursday, March 23, 2017

ஒண்ணுக்குப் போகும் மரம்
     பொதுச் சாலைகளில் அடிக்கடி நாம் காணும் காட்சி ஆங்காங்கே சிலர் திடீரென இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்குவது.  


 


     நிறைய பேர்கள், அந்த உபாதை கட்டுப்படுத்த முடியாமல் போகும் நிலையிலும் கொஞ்சம் கூச்சப்பட்டு ஆள் அரவமற்ற சாலை ஓரங்களைத் தேடுவார்கள்.  இன்னும் சிலரோ எந்த இடம் என்று பார்க்க மாட்டார்கள்.  ஆட்கள் நடமாடுவதை லட்சியமும் பண்ண மாட்டார்கள்.  சட்டென ஓரமாக ஒதுங்கி சரக்கென....


     இவர்களுக்கெல்லாம் மொபைல் டாய்லட் வைத்தும் பயனில்லை!


     மேலும் இதற்கு இரவு பகல் பேதமுமில்லை.  


     எங்கள் வீட்டுக்கு எதிரே காம்பௌண்ட் சுவரை ஒட்டி ஒரு மரமிருக்கிறது.  பரபரப்பாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு போக்குவரத்து நடைபெறும் சாலைதான் அது.        தாண்டிச் செல்லும் வண்டிகள் - அது இரண்டு சக்கரமாகட்டும், நான்கு சக்கரமாகட்டும், ஆட்டோ ஆகட்டும் -   இந்த மரத்தைத் தாண்டும்போது வண்டி வேகம் குறையும்.

     எது அவர்களை சரியாக அங்கு நிறுத்துகிறது, இழுக்கிறது, இல்லை இந்த உணர்வுக்குத் தூண்டுகிறது என்று தெரியவில்லை.  நிறுத்தி விட்டு பேண்ட் ஜிப்பை அவிழ்த்துக்கொண்டு முகத்தில் ஒரு சுகமான பாவனையுடன் ஓரமாக வருவார்கள்.

      கொட்டாவி விடுபவரைக் கண்டால் அதைப் பார்க்கும் எல்லோரும் கொட்டாவி விடுவார்கள்.  கொட்டாவி என்கிற வார்த்தையைக் கேட்டாலே, படித்தாலே கூட சிலருக்கு கொட்டாவி வந்துவிடும்.  அதுபோல,


     ஒருவர் சிறுநீர் கழிப்பதைப் பார்த்தால் அதைப் பார்க்கும் அடுத்தவர்களுக்கும் அந்த உணர்வு வரலாம்.  "ஒரு ஆடு மூத்திரம் பெஞ்சா ஒன்பது ஆடு மூத்திரம் பெய்யும்" என்று ஒரு சொல்வழக்குக் கூட உண்டு. ஆனால் இடைவெளி விட்டு வருபவர்களுக்கும் அந்த உணர்வு வருவதெப்படி!      சமயங்களில் அங்கு பால்கனியில் இருக்கும் எங்களில் யாரையாவது கண்டு சென்று விடுவோர் உண்டு.  ஆனால் இது மிகச் சொற்பம்.   சிலர் சுவரை ஒட்டி நின்று எங்களிடமிருந்து உடலோடு முகத்தையும்  மறைத்துக் கொண்டு சங்கடத்தைத் தீர்த்துக் கொள்வார்கள்.  இன்னும் சிலரோ, ஏதோ வீர சாகசம் செய்வது போல எங்களை பார்த்துக் கொண்டே கழிப்பார்கள்.

     நீங்களே சொல்லுங்கள், எரிச்சல் வருமா, வராதா?


      தாண்டிச் செல்லும் மற்ற இடங்களை விட்டு விட்டு இந்த மரம் அவர்களை எந்த விதத்தில் இந்த உணர்வுக்குத் தூண்டுகிறது என்பது பெரும் புதிர்.  சுற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்றாலும் ஒருநாள் அந்தப் பக்கம் சென்று பார்த்தேன்.  அருகாமை மற்ற மரங்களை விட இந்த மரத்தின் கீழ் அதிக நிழலா, சுற்றிலும் புதர் அதிகம் இல்லாமல் "புழங்குவதற்கு வசதியாக" இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்தேன்.  ஊ ஹூம்! ஒன்றும் பிடிபடவில்லை.  உபாதை கழிக்கப்பட்டு அந்த இடமே தடமேறி இருந்தது, அவ்வளவுதான்.

     ஆனால் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்பவர்களுக்கும் இந்த மரம் 'சேவை ஆற்றி'க்கொண்டிருந்தது.     இதைத் தடுக்க வழியுண்டா என்று யோசித்தேன்.  முதலில் தோன்றிய வழி அந்தப் பக்கம் காம்பௌண்ட் சுவர் ஓரமாக பாட்டிலை உடைத்து ஓடுகளைப் போடுவது.  ஆனால் அப்படிச் செய்ய மனம் வரவில்லை.  எனவே பிளான் B யைச் செயல்படுத்த முடிவு செய்தேன்.

     போக்குவரத்துச் சந்தடிகள் குறைந்த ஒரு ஞாயிறின் இரவில் ஒன்பதரை பத்து மணியளவைத் தேர்ந்தெடுத்தேன்.  ஒரு அம்மன் படம், ஒரு பாபா படம் ஒரு  மூன்றையும் எடுத்துக் கொண்டேன்.  மூன்று நான்கு ஆணிகள், ப்ளஸ் ஒரு சுத்தியல்!

     இரண்டு பக்கமும் பார்த்து, தாண்டிச் சென்ற ஒருவர் மெதுவாகக் கடந்து ( என்னை ஒருவித சந்தேகத்துடனேயே பார்த்தபடி ) செல்லக் காத்திருந்து, வெற்றிகரமாக வேலையை முடித்துத் திரும்பினேன்.

     மறுநாள் காலை.  பால்கனியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டே ஆர்வமாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  பழக்க தோஷத்தில் அந்த மரத்தின் அருகே ஸ்லோ ஆனா வண்டிகள், கொஞ்சம் தயங்கி, நின்று, யோசித்து, மெல்ல நகர  ஆரம்பித்தன.

     ஒரு பைக்கர் செல்போனில் ஆவேசமாகப் பேசியபடியே பைக்கை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டவர், உரத்த குரலில் ஆவேசமாகப் பேசியபடியே மரத்தடி வந்தார்.

     'அடப்பாவி...  என்ன தைரியம்!  கடவுள் படங்களை மதிக்கவே மாட்டேன் என்கிறானே..  பார்க்கவில்லையா...'

     கத்திக்கொண்டே 'ஜிப்' பையும் அவிழ்த்தான்.   குனிந்தவன், தீயை மிதித்தவன் போல பின்னால் நகர்ந்து சென்று பைக்கில் முட்டி அதைக் கீழே தள்ளி விட்டவன், செல்போனில் "வைடி ஃபோனை" என்று கர்ஜித்தவன், சுற்றுமுற்றும் "வேறு இடம் தேடிப்போவாரோ" என்று இடப் பரிசீலனை செய்தவன், முடிவை மாற்றிக் கொண்டு பைக்கை நிமிர்த்தி, ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்து சென்று மறைந்தபோது வெற்றிச் சிரிப்பு என் இதழ்களில் பூத்தது.

     கொஞ்ச நாட்களில் இங்கு வண்டிகள் நிற்பது குறைந்து, ஒரு ஸ்டேஜில் நின்றே போனது.     ஒவ்வொரு மரத்திலுமா படங்களை மாட்ட முடியும்?  ஏதோ என் வீட்டுக்கெதிரில் இடத்தைக் காப்பாற்றிக் கொண்டேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.     கொஞ்ச நாட்களில் மறுபடி மக்கள் அவ்வப்போது ஒவ்வொருவராக ஒண்ணுக்குப் போக ஆரம்பிக்க,  திகைத்துப் போய் அந்தப் பக்கம் சென்று பார்த்தால் படங்களைக் காணோம்.

     விசாரித்தபோது 'பாட்ரோல் போலீஸ்' சொல்லி, தெரு முனையில் இருந்த செக்யூரிட்டி "அந்த இடத்தைக் கோவில் போல மாற்றி விடுவார்கள்" என்று படத்தை அப்புறப்படுத்தி விட்டார்களாம்.     அடப்பாவிகளா..  கக்கூஸாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.  அதை லட்சியம் செய்யவில்லை.  கோவிலாக மாற்றி விடுவார்கள் என்று மட்டும் உடனே நடவடிக்கை எடுத்து விட்டார்கள்.  கஷ்டமின்றி, கவலையின்றி மறுபடியும் பாரம் குறைக்கிறார்கள் மக்கள்.  செக்யூரிட்டியிடம் முன்னதாக ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாம்!


     வேறு என்ன செய்யலாம்?  நீங்கள் சொல்லுங்களேன்!

79 comments:

KILLERGEE Devakottai said...

இருப்பினும் இவ்வளவையும் எப்படித்தான் பொறுமையாக செய்தீர்களோ...

முதலில் நம் நாட்டு மக்களுக்கு பொது நாகரீகம் என்பது கிடையாது காரணம் நமது பாரம்பரியமான வளர்ப்பு அப்படி தூய்மை இந்தியாவாக்க மோடி மட்டுமல்ல எந்தக்கொம்பனாலும் முடியாது அது அடித்தட்டு மக்களிடமிருந்து தொடங்க வேண்டும்.

Avargal Unmaigal said...

மரத்தில் விபூதி சந்தணம் குங்குமத்தை நன்றாக தடவிவிடுங்கள் அல்லது அந்த கலரில் பெயிண்ட் அடித்து அடிக்கடி சாமிக்கு போட்ட பழைய மாலைகள் இருந்தால் ஒரு ஆணி அடித்து அங்கு மாட்டுங்கள்

Avargal Unmaigal said...

தலைப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன் மரம் கூட ஒண்ணுக்கு போவுதா என்று

Avargal Unmaigal said...

ஒரு நல்ல ஐடியா பேசாமல் அங்கு கட்டண கழிப்பறை ஒன்றை கட்டிவிடுங்களேன். பால்கனியில் இருந்து பார்க்கும் நேரத்தில் இங்கு சேர் போட்டு பண வசூலில் இறங்கிவிடலாமே

'நெல்லைத் தமிழன் said...

இந்தமாதிரி போன ஜென்மத்தில் செய்த ஒருவர்தான் இந்த ஜென்மத்தில் மரமாகியிருப்பாரோ? தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னால் பரோலில் தப்பிக்க விடுவதுமாதிரி நீங்கள் செய்யப் புகுந்தால் இயற்கை அனுமதிக்குமா?

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.. நல்ல தலைப்பு!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... இவர்களை மாற்றமுடியாது!

athira said...

ஹா ஹா ஹா என்னா ஒரு ரசனை சகோஸ்ரீராம் உங்களுக்கு?:). இதில் பெரிய றிசேஜ் ஏ நடத்திட்டீங்க.
படிக்கும் நமக்கே எரிச்சல் வருது ஏன் இப்படி என, நீங்களும் முடிந்தவரை முயன்றிருக்கிறீங்க திருத்த முடியவில்லை.
ஏன் அது அரசாங்கக் காணியோ, நல்ல முள்ளுக்கம்பி வேலி போடக்கூடாதோ? இல்லையெனில் ஒரு வழிதான் இருக்கு, மரத்தை தறிச்சு வெளியாக்கி விட்டால் கொஞ்சம் குறையலாம்.

athira said...

ஹா ஹா ஹா ஆட்டுப்பழமொழி புதுசா இருக்கு:) கொட்டாவிக்குப் பொருந்தும் இதுக்குமோ?:).

இந்த விசயத்தில் பெண்கள் பாவம், மக்சிமம் அடக்கிக்கொண்டு வீடு திரும்பி விடுகின்றனர்,

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி... ஏதோ செயற்கரிய காரியம் செய்பவர்கள் போல நம்மைப் பார்த்துக் கொண்டே .......அதுதான் இன்னும் கடுப்பேற்றும்!

ஸ்ரீராம். said...

வாங்க மதுரைத்தமிழன்.. விபூதி, சந்தனமா? கடவுள் படத்துக்கே அடங்கவில்லை! பாட்ரோல் போலீஸ் சொல்லவில்லை, அந்த சாலையை ரெகுலராக உபயோகிக்கும் சிலர் சொல்லி அந்த செக்யூரிட்டி அதை நீக்கியிருக்கலாம்!

ஸ்ரீராம். said...

ஹா.... ஹா..... ஹா மதுரைத்தமிழன்... தலைப்பு அப்படிக் குழப்புகிறதா என்று யாராவது சொல்கிறார்களா என்று பார்த்தேன்!

ஸ்ரீராம். said...

கட்டணக்கழிப்பிடமா? அது வேறு தொல்லை! அதற்கு மாமூல் கேட்டு யார் யார் வருவார்களோ! செல்போனில் படம் பிடிப்பதை பார்த்துக் கூடாக கவலைப்படாமல் செல்கின்றனர்!

ஸ்ரீராம். said...

ஹா.... ஹா... ஹா... வாங்க நெல்லைத்தமிழன்... நம்ம மதுரை, நெல்லை நீதிமன்றத் தீர்ப்புகளால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா போல! அதனால்தான் இப்படித் தோன்றுகிறது!

ஸ்ரீராம். said...

வாங்க வெங்கட்... உண்மை. நீங்கள் சொல்வது போல தனிமனித விழிப்புணர்வுதான் தேவை!

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா... "றிசேஜ் ஏ" என்றால் என்ன? எது எப்படியோ, நமக்கு ஒருபதிவு தேறியது பாருங்கள்!

//நல்ல முள்ளுக்கம்பி வேலி போடக்கூடாதோ//

மரம் காம்பௌண்டுக்கு வெளியேதான் இருக்கிறது. யார் வீட்டு மரத்தை யார் வெட்ட! மேலும் மரங்களை வெட்டுவதற்கு நான் எதிரி!

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா.. சில சமயம் பெண்களும் உபாதை நீங்கிச் செல்வதுண்டு. ஆனால் அது ரொம்ப ரேர்! ஆட்டுப்பழமொழி கேள்விப்பட்டதில்லையா? ரொம்பப் பழசாச்சே!

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றாக இருக்கிறது

ADHI VENKAT said...

அடக் கடவுளே!!! எரிச்சல் தான் வரும்.
அன்று ஒருநாள் திருச்சியில் நாங்கள் வீடு திரும்ப பேருந்தை பிடிக்க எண்ணி வந்து கொண்டிருக்கையில், ஒருசில கடைகளில் சாத்துவதற்கு முன் கற்பூரம் காட்டிக் கொண்டிருக்க, அந்தக் கடையின் பெயரை பார்த்துக் கொண்டே வந்தேன்.. ஒரு இடத்தில் பெயரை பார்த்து விட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை!! அது ஒரு கட்டண கழிப்பிடம். காண்ட்ராக்ட் எடுத்தவர் கற்பூரம் காட்டி என்ன வேண்டிக் கொண்டிருப்பார்???

ADHI VENKAT said...

அடக் கடவுளே!!! எரிச்சல் தான் வரும்.
அன்று ஒருநாள் திருச்சியில் நாங்கள் வீடு திரும்ப பேருந்தை பிடிக்க எண்ணி வந்து கொண்டிருக்கையில், ஒருசில கடைகளில் சாத்துவதற்கு முன் கற்பூரம் காட்டிக் கொண்டிருக்க, அந்தக் கடையின் பெயரை பார்த்துக் கொண்டே வந்தேன்.. ஒரு இடத்தில் பெயரை பார்த்து விட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை!! அது ஒரு கட்டண கழிப்பிடம். காண்ட்ராக்ட் எடுத்தவர் கற்பூரம் காட்டி என்ன வேண்டிக் கொண்டிருப்பார்???

Angelin said...

//அதிரா... "றிசேஜ் ஏ" என்றால் என்ன// sriram that's research

athira said...

///
ஸ்ரீராம்.March 23, 2017 at 12:50 PM
வாங்க அதிரா.. சில சமயம் பெண்களும் உபாதை நீங்கிச் செல்வதுண்டு. ஆனால் அது ரொம்ப ரேர்! ///

ஹா ஹா ஹா எவ்ளோ உன்னிப்பா அனைத்தையும் கவனிக்கிறார் மொட்டை மாடியில் இருந்து கர்ர்ர்ர்ர்ர்:) ஸ்ரீராமுக்கு சங்கிலி வரப்போகுது கைக்கு:).

அது research ஆக்கும் ஹா ஹா டமில்ல சொன்னேன்:)

athira said...

கைல கால்ல விழுந்தாவது யாரையாவது கூட்டியாந்து, மரத்தடியில் ஒரு மான் தோலில் இருக்க விடுங்கோ... சாமியார் என... :)

KILLERGEE Devakottai said...

நண்பரே நான் பதிவுக்காக இதைவிட அருமையாக நிற்கும் நபர்களை தமிழ்நாட்டின் பல நகரங்களின் பேருந்து நிலையத்தில் நின்றவர்களை படம் எடுத்து வைத்திருக்கிறேன்.

Angelin said...

motion sensor பொம்மைகள் கிடைக்குமா அங்கே ? அதுக்கிட்ட நடந்து போனா ஒலி எழுப்பும்
கார்டன் gnome மாதிரி விசில் சத்தம் மாடு/பறவைகள் பூனை கத்துற மாதிரி லகலக்கலன்னு சிரிக்கிற சத்தம் இப்படி நிறைய இருக்கு அப்படி ஒரு பொம்மையை மறைவா வச்சி விடலாம் ..
இல்லைனா நீங்க darts அடிக்கலாம் மாடியில் இருந்து அவங்களுக்கு தெரியாம :)

பாம்பு தோல் ஒன்னு எங்கிருந்தாவது வாங்கி மரத்தில் சுற்றி விடலாம்
அந்நியன் ரிட்டர்ன்ஸ் என்று போஸ்டர் ஒட்டி விடலாம் மரத்தில்
இன்னொரு ஐடியா ஒரு தேனீ கூட்டை கட்டி விட ஏற்பாடு பண்ணுங்க ஒரு பெட்டி வச்சா யாரும் நெருங்க மாட்டாங்க :)
அது செலவுன்னா இவ்விடம் குளவி கூடு இருக்குன்னு ஒரு போர்ட் மாட்டிடுங்க
மரத்துக்கிட்ட கொஞ்சம் ரெட் பெயிண்ட் அடிச்சி விட்டா ரத்த காட்டேரி இருக்குனு பயப்பட சான்ஸ் உண்டு ..
ஒரு cctv கமெரா பழையாதுன்னாலும் பரவாயில்லை மரத்தில் மாட்டி வைக்கலாம் :)
வரவங்களுக்கு அது வொர்க்கிங் கண்டிஷனான்னு யோசிக்க டைம் இருக்காது :)

motion சென்சார் லைட் பொருத்தினாலும் அது இரவு நேரத்தில் வெளிச்சம் அடிக்கும் அந்த ஆட்கள் மேலே

மரக்கிளைகள் மேலே குட்டி சலங்கை மணிகளை கட்டி விட்டாலும் அது ஒலி எழுப்பலாம்Angelin said...

இவ்வளவு பெரிய கமெண்டை மூக்கை ஒருகையால் பிடிச்சுகிட்டே போட்டேன் .
எனக்கொரு பிரச்சினை இருக்கு மல்லிப்பூ பற்றி வாசிச்சா என்னை சுற்றி மல்லி வாசம் வரும் பீலிங் மசாலா தோசைன்னா மொறுமொறு வாசனை பீலிங் இதுக்குமேல நான் ஒன்னும் செப்ப மாட்டேன்
ஆனால் பாவம் ஸ்ரீராம் நீங்க ஒருவர் அனுதினமும் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கிறது என்பது ரொம்ப கஷ்டம் .
ஒரு விஷயத்தை கட்டாயம் சொல்லியாகணும் ..எங்க வீட்ல நான் அடாப்ட் செய்த மல்ட்டி அப்புறம் வேறு சில பூனைகளை நான் கவனித்திருக்கிறேன் நைட் டைமில் பெட்றூம் ஜன்னல் வழியா ..இந்த பூனைகள் சரியா மழை நீர் வடிய iron sieve இருக்குமே தண்ணி ஓடறதுக்கு அதில் சரியா ஓட்டைக்குள் டாய்லட் போகுங்க ..பூனைகளுக்கு இருக்கும் அறிவு கூட பாழாப்போன மனுஷனுக்கு இல்லை பாருங்க

G.M Balasubramaniam said...

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்துக்கு முதல்நாளே மன்னார்குடி சென்றிருந்தேன்சந்தியா நேரத்துக்குப் பின் கோவிலைச் சுற்றி வர முடியவில்லை. அத்தனே மோசமாக கோவிலின் சுற்றுச் சுவர் ஓரமாக ஒன்றுக்கும் இரண்டுக்கும் கழிக்கிறார்கள் இங்கு சிறு நீர் கழிப்பவர்கள் நாய்களே என்று எழுதி ஒட்டிப் பாருங்களேன்

கோமதி அரசு said...

அவர்கள் உண்மைகள் சொன்னது போல் மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பள பள பாவாடை துணியை கட்டி வையுங்கள் ஸ்ரீராம். வேப்பமரம் தானே?
அழகாய் மஞ்சளில் முகம் வரைந்து பாருங்கள். நீங்களும் அந்த மரத்தை தினம் வணங்கி வாருங்க்கள். அப்புறம் இந்தமாதிரி நடக்காது என நம்புவோம்.

Anonymous said...

//தலைப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன் மரம் கூட ஒண்ணுக்கு போவுதா என்று// எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்டது. -ஆவி

Avargal Unmaigal said...

கனம் கோர்ட்டார் அவர்களே ஸ்ரீராம் பதிவில் சொன்னதற்கு என்ன ஆதாரம் அவர் இதை இட்டுகட்டி எழுதி இருக்கிறார். அவர் சொல்வது உண்மையென்றால் இங்கே மக்கள் மூச்சா போவதை படம் எடுத்து இங்கே போடாமல் இருப்பது ஏன்?


அடுத்த ஐந்துநாட்களுக்குள் அவர் SLR கேமிராவை கொண்டு மிக தெளிவாக படம் எடுத்து போடவில்லை என்றால் ஏஞ்சல்,அதிரா,நிஷா,கீதா கொண்ட நால்வர் குழு அவருக்கு மிக கடுமையாக தண்டணை தரும்

Geetha Sambasivam said...

ஒரு கல்லைச் சந்தனம், குங்குமம் தடவி மாலை போட்டுச் சிவப்புத் துணி கட்டி அங்கே நட்டு விடுங்கள்! தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றி மிச்சம், மீதியைப் போட்டு வைக்கவும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு அம்மன் படம், ஒரு பாபா படம் ஒரு மூன்றையும் எடுத்துக் கொண்டேன். மூன்று நான்கு ஆணிகள், ப்ளஸ் ஒரு சுத்தியல்!// இன்னுரு படம் எங்கே போச் அது யாரு படம்??!!! உங்க படமா ஹிஹிஹிஹ்

கீதா

Angelin said...
This comment has been removed by the author.
Angelin said...

கர்ர்ர்ர்ர்ர் :) ஸ்ரீராம் இவர் இந்த அவர்கள் உண்மைகள் பேச்சை கேக்காதீங்க ..இவர் எதோ பிளான் செய்றார் :)
உங்களை வம்பில் மாட்டிவிடப்பார்க்கிறார் ..இவர் பேச்சை கேட்டு போட்டோல்லாம் எடுத்தா அவ்ளோதான் நீங்க

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் மூக்கைப் பொத்துக் கொண்டுதானே போய் படம் மாட்டினீர்கள். அது சரி அப்போ இப்படித்தான் பல தெருவோரக் கோயில்கள் முளைத்திருக்குமோ...உங்களைப் போல நலம் விரும்பிகள் எப்போதோ இப்படிச்க் செய்து....அதான் போலீஸ் எடுத்துட்டுப் போயிருச்சு போல....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தலைப்பு முதலில் அட மரம் உச்சா போகுமா என்று குழப்பியது அப்புறம் தோன்றியது ஒருவேளை சில மரங்கள் தாங்கள் எடுக்கும் தண்ணீரை வெயில் அதிகமானால் வெளியேற்றுவது இப்படி ட்ராப் ட்ராபாக விழுமோ என்றும் தோன்றியது...இருவரும் அப்படித்தான் பேசிக் கொண்டோம்...

மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் நல்லது... ஆற்றங்கரைகள் கூட கக்கூஸாகி விட்டதே...உச்சா மட்டுமல்ல நரகலும் சேர்ந்து நடக்க முடியாமல்...

அழகான ஐடியா உங்கள் ஐடியா...பதிவும் அப்படியே

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் அந்த மரத்தின் பக்கம் பேய் இருக்கிறது உலாவுகிறது என்று ஒரு கதை கட்டி புரளி கிளப்பிவிடுங்கள்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அல்லது யாரேனும் பேயால் அடி வாங்கி படுத்திருப்பது போல் ஒரு படம் போட்டு....அதற்கு இருக்கவே இருக்கிறார் நம்ம மதுரைத் தமிழன் அவர் அவ்வப்போது கட்டுடன் படுத்திருபப்து போல் படம் எல்லாம் போடுவாரெ அதையும் யூஸ் செய்து கொள்ளுங்கள்....பேயடி என்று சொல்லி....கதை கட்டுங்கள்...ஒரு நல்ல காரியத்துக்கு மதுரை தமிழன் உதவாமலா போவாரு ....என்ன சொல்றீங்க மதுரைத் தமிழன்!!!!!?ஹஹஹஹ்

இதற்கு ஏஞ்சல், அதிரா ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்...ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மதுரைத் தமிழன் ஸ்ரீராம் போட்டிருக்கும் போட்டோவில் சிலர் ஒதுங்கியிருப்பது தெரிகிறதே!!! நன்றாகப் பாருங்கள்!!!

கீதா

Angelin said...

@ geetha yes I agree and support your idea

Thulasidharan V Thillaiakathu said...

கீதா சாம்பசிவம் அக்கா ஃபோட்டோவையே எடுக்கச் சொன்ன போலீஸ் கல்லையும் அப்புறப்படுத்திவிடுவார்கள் அப்புறம் யார் இங்கே வைத்தது என்று கேள்விகள் வேறு வருமே...பாவம் ஸ்ரீராம்...

ஸ்ரீராம் ரொம்பவே உங்களுக்குக் கஷ்டம்தான் ...தினமும் இதை எல்லாம் பார்க்கும் நிலை மட்டுமின்றி துர்நாற்றமும் வரும் இல்லையோ..

கீதா

athira said...

அச்சச்சோஓஓ ஒரு மனிசர் நிம்மதியாக ஒரு கடன் கழிக்க முடியுதா:) எல்லாரும் ஓட ஓட விரட்டுகினம்:), கொலையா நடக்குது, அடக்க முடியாதபோதுதானே ஓடி வருகிறார்கள் பிழைச்சுப் போகட்டும் விடுங்கோ... நமக்கும் அப்படி ஒரு அடக்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்படும்போதுதான் புரியும் இப்படி ஒதுங்க கிடைக்கும் மரங்களின் அருமை....

பின்னூட்டங்கள் போகும் போக்கைப் பார்த்தால் உசுப்பேத்தி உடுப்பேத்தியே சகோ ஸ்ரீராமை கம்பி எண்ண வச்டிடுவோம் போல இருக்கே:)...

எதுக்கும் ட்றுத் ஒரு அஞ்சு ரிக்கெட் போடுங்கோ நேரில் போய் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்... அஞ்சூஊஉ அந்த பெல்லுகள் மணிகள் எல்லாம் மூட்டை கட்டுங்கோ , ட்றுத் ட லக்கேஜ்ல போட்டிடலாம்....

5 ரிக்கெட்ஸ் = 4 லேடீஸ் + 1 மான் சே சே man:)

athira said...

////
Thulasidharan V ThillaiakathuMarch 23, 2017 at 7:05 PM
மதுரைத் தமிழன் ஸ்ரீராம் போட்டிருக்கும் போட்டோவில் சிலர் ஒதுங்கியிருப்பது தெரிகிறதே!!! நன்றாகப் பாருங்கள்!!!

கீதா/////
Haiyoo ஹையோ சபை நாகரீகம் கருதி காகா போனாலும்(அதாவது காகா என்பது கண்டும் காணாமல் போவதாக்கும்:))..... கீதா விடுவதாயில்லை ஹா ஹா ஹா ஸ்ரீராம் மாமி வீட்டுக்குப் போகப்போவது முக்கால்வாசி கன்போம்ம்ம்ம்ம்:).
ஊசிக்குறிப்பு:- நான் "முருங்கிக்காய்" மாமியைச் சொல்லல்லேஏஏஏஏஏஏ:).

athira said...

////
இதற்கு ஏஞ்சல், அதிரா ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்...ஹிஹிஹி

கீதா///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா மெதுவா பேசுங்கோ... போட்டோ எல்லாம் எதுக்கு ஆளையே நேரில் கொண்டுபோய் இறக்கிடுவோம்ம்:) அதுக்காகத்தானே இந்த ரிக்கெட் ஐடியா:) நாங்க நால்வரும் சகோ ஸ்ரீராமில் பல்கனியில் இருந்து விடுப்ஸ் பார்த்திடலாம்... எதுக்கும் கொஞ்சம் பஜ்ஜி சொஜ்ஜியும் ரெடி பண்ணுவோம்:)

கரந்தை ஜெயக்குமார் said...

டாஸ்மாக் கடை பற்றி எங்கேயே படித்த செய்தி நினைவிற்கு வருகிறது
பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம்நடத்தினார்கள், டாஸ்மாக் கடை காந்தி சிலைக்கு அருகில் இருக்கிறது
எனவே கடையை மாற்றவும் என்று,
ஒரு சில நாட்களிலேயே மாற்றிவிட்டார்களாம்
காந்தி சிலையை
தம +1

Angelin said...

ஹையோ யாரவது இந்த அதிராவையும் அவர்கள் ட்ரூத்தையும் கூண்டில் புடிச்சு போடுங்க :) அதிரா ப்ளீஸ் கிவ் மி எ பிரேக் சிரிச்சி சிரிச்சி உள்ளிருக்கற பார்ட்ஸ் எல்லாம் வெளில வந்துடும்போலிருக்கு எனக்கு ..என் கணவர் வேறு எதுக்கு சிரிக்கிறீங்க எனக்கும் சொல்லுங்கன்னு கேட்டார் ..காட்டிட்டேன் பின்னூட்டங்களை :) அவர் இன்னும் சிரிச்சிட்டிருக்கார்

Angelin said...

//எதுக்கும் கொஞ்சம் பஜ்ஜி சொஜ்ஜியும் ரெடி பண்ணுவோம்:)//


கர்ர்ர்ர் அதிரா அது பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடற situation ஆ :) ha aahaa :) ஒரு போஸ்டை போட்டுட்டு ஸ்ரீராம் படர பாடு இருக்கே பாவம்
March 23, 2017 at 7:25 PM

Angelin said...

//எதுக்கும் ட்றுத் ஒரு அஞ்சு ரிக்கெட் போடுங்கோ நேரில் போய் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்...// நோ nooooo நான் அதெல்லாம் பார்த்து வெறுத்துதான் இப்போ வெளிநாட்டில் ஹாப்பியா இருக்கேன் நான் வர மாட்டேன் நீங்களே பார்த்துட்டு வாங்க :) வேணும்னா படத்தோட வாங்க

Angelin said...

ஸ்ரீராம் இந்த போஸ்டுக்கு ஒரு sequel வேணும் எங்களுக்கு :) நான் கொடுத்த ஐடியா எப்படி வொர்க் அவுட் ஆச்சான்னு தெரியணும்

Bagawanjee KA said...

அந்த இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தால் பிரச்சினைத் தீரும் :)

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

ஸ்ரீராம். said...

நன்றி திருமதி வெங்கட்.

//காண்ட்ராக்ட் எடுத்தவர் கற்பூரம் காட்டி என்ன வேண்டிக் கொண்டிருப்பார்??? //

அதானே! ஹா... ஹா... ஹா... அதே போல இன்னொரு சந்தேகம்! ஒரு மருத்துவர் என்ன வேண்டுவார்?

ஸ்ரீராம். said...

நன்றி ஏஞ்சல்... ( sriram that's research )

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா..

//உன்னிப்பா அனைத்தையும் கவனிக்கிறார் மொட்டை மாடியில் இருந்து//

இல்லை... இந்த மரத்தடியில் இல்லை.. அது பற்றி விளக்கமாகச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

அதிரா... சாமியாருக்கு இதுவே மேல்!

நன்றி நண்பர் கில்லர்ஜி.. பதிவு போட்டாச்சு! என்னவெனி இங்கு அந்தப் படங்களுக்கு வேலை இருக்காது!

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின்.. motion sensor பொம்மைகள் எல்லாம் வைத்தால் அதை வேடிக்கை பார்க்கவே இன்னும் கூட்டம் சேர்ந்து விட்டால்?!!

பாம்புத்தோல், தேன்கூடு, குளவிக்கூடு, மணிகள்... ஐடியாக்கள் சரளமாக வருகின்றன! செயல் படுத்துவதுதான் சாத்தியமில்லை!

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின்..

//இவ்வளவு பெரிய கமெண்டை மூக்கை ஒருகையால் பிடிச்சுகிட்டே போட்டேன் //

ஹா.... ஹா... ஹா...

பூனைகளுக்கு கூடத் தெரிகிறது. நான் வளர்த்த நாய்கள் கூடாப்படித்தான். என்னைக் கூப்பிட்டு வெளியே அழைத்துப் போகச் சொல்லும்.

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது திருக்கடையூர் கோவிலோ? அங்குதான் நானும் அப்படி நிறைய பார்த்தேன்! கோவிலையே மதிக்காத ஜனங்கள் சாலை ஓர மரத்தையா மதிக்கப் போகிறார்கள்!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அரசு மேடம்.. அந்த மரம் இருப்பது எங்கள் காம்பௌண்டுக்கு வெளியே.. சுற்றி வரணும் அதற்கு. அது வேப்பமரம் அல்ல. புங்கை மரம்!

ஸ்ரீராம். said...

ஆ... கோவை ஆவி! நான் காண்பதென்ன கனவா? வாங்க.. வாங்க... தலைப்பைக் குழப்பும் வகையில்தான் வைத்தேன்!

ஸ்ரீராம். said...

மதுரைத்தமிழன்... படம் எடுத்தே போட்டிருக்கிறேனே... இவ்வளவுதான் காட்ட முடியும் ஆதாரம்!

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா.. நீங்கள் சொல்லும் ஐடியா வொர்க்கவுட் ஆகாது! கடவுளையே மதிக்கவில்லையே மக்கள்!

ஸ்ரீராம். said...

வாங்க கீதா ரெங்கன்... முருகன் படம் என்று டைப் செய்தது காணோம்! என் அப்பன் முருகன் என் பெயர் வேண்டாம் என்று காணாமல் போய்விட்டான் போல!

ஸ்ரீராம். said...

நன்றி ஏஞ்சலின் மதுரைத் தமிழன் கேட்டார்னு படம் எடுத்துடுவோமா என்ன!

ஸ்ரீராம். said...

கீதா ரெங்கன்... பேய் உலாவும் மரம் என்று நீங்கள் கொடுத்திருக்கும் ஐடியா ஓகே! யாரிடம் போய் நான் சொல்லிக் கொண்டிருப்பது! முன்பு அமானுஷ்ய அனுபவங்கள் ஒன்றில் ஒரு மரத்து வினோத பூஜை பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது.

ஸ்ரீராம். said...

நன்றி அதிரா..

//பின்னூட்டங்கள் போகும் போக்கைப் பார்த்தால் உசுப்பேத்தி உடுப்பேத்தியே சகோ ஸ்ரீராமை கம்பி எண்ண வச்டிடுவோம் போல இருக்கே:)...//

யார் கிட்ட? நாங்க உசுப்பேறிடுவமாக்கும்!

// "முருங்கிக்காய்" மாமியைச் சொல்லல்லேஏஏஏஏஏஏ:). //

ஹா... ஹா... ஹா... நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு!

//எதுக்கும் கொஞ்சம் பஜ்ஜி சொஜ்ஜியும் ரெடி பண்ணுவோம்//

"இதை"ப் பார்க்கும்போது பஜ்ஜியா? சொஜ்ஜியா? உவ்வே !

ஸ்ரீராம். said...

ஹா... ஹா... ஹா... வாங்க நண்பர் கரந்தை ஜெயக்குமார்... சரிதான்! நான்தான் மாறணும்!

ஸ்ரீராம். said...

ஏஞ்சலின்..

//அவர் இன்னும் சிரிச்சிட்டிருக்கார் //

என் நிலை சிரிப்பா சிரிக்குது இல்லை? ஒரு பதிவு போதாதா? படம் எடுத்து இன்னும் வேறு தொடரணுமா? ஓ எம் ஜி! பதிவு பயங்கரமா ஃபேமஸ் ஆயிடும் போலிருக்கே...!

ஸ்ரீராம். said...

பகவான்ஜி.. மாற்று ஐடியா சூப்பர்! சிகரெட் மணமும் கூடும்!!

Thulasidharan V Thillaiakathu said...

ஆதி வெங்கட் என்ன வேண்டுவார் அவர் ஹஹஹஹஹ்ஹ் நிறைய பேர் இங்கு உச்சா/கக்கா போக வரணும்னுதான் அஹ்ஹஹஹ்

கீதா

Angelin said...

//கைல கால்ல விழுந்தாவது யாரையாவது கூட்டியாந்து, மரத்தடியில் ஒரு மான் தோலில் இருக்க விடுங்கோ... சாமியார் என... :)//

இல்லைன்னா வேற வழியே இல்லை அந்த மான் தோலில் ஸ்ரீராமையே உக்கார வச்சிட வேண்டியதுதான் :))

Avargal Unmaigal said...

என் போட்டோவை மரத்தில் மாட்டுவதற்கு ஆட்செபனை இல்லை இப்பவாவுது ஒன்றுஇரண்டு பேர் தான் மூச்சா போகிறார்கள் என் படத்தை மாட்டினால் ஒரே வந்து அங்கு மூச்சா போகும்

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

என் போட்டோவை மரத்தில் மாட்டுவதற்கு ஆட்செபனை இல்லை இப்பவாவுது ஒன்றுஇரண்டு பேர் தான் மூச்சா போகிறார்கள் என் படத்தை மாட்டினால் ஊரே வந்து அங்கு மூச்சா போகும்

Avargal Unmaigal said...

போட்டோவில் சீலர் தலை தெரிகிறது ஆனால் அவர்கள் மூச்சா போவதற்கான ஆதாரம் இல்லை கணம் கோர்ட்டார் அவர்களே

Avargal Unmaigal said...

டிக்கெட் எப்படி புக் பண்ணுவது கூட உங்களுக்கு தெரியலையே உங்களை எல்லாம் கூட வைச்சுக்கிட்டு நன் படுற கஷ்டம் அட ராமா நீதண்டப்ப என்னை காப்பரணும் சரி சரி க்ரெடிட் கார்ட் நம்பரை எனக்கு அனுப்புங்கோ எல்லாருக்கும் நானே டிக்கெட் புக் பண்றேன்

Avargal Unmaigal said...

இவங்க சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட மாப்பிளை மதுரை தமிழன்தான் கிடைச்சது என்ன கர்ர்ர்ர்ர்

Avargal Unmaigal said...

சாமி படங்களை மாட்டினால் கோயிலாகிவிடும் அது பொது மக்களுக்கு இடைஞ்சல் என்றால் எனக்கு இன்னொரு ஐடியா வருகிறது பேசாம தலைவர்கள் படங்களை மாட்டிவிடுங்கள் அதன் பின் ஒருத்தருக்குறுத்தார் அடிச்சி சாவாங்க அதையே நீங்க வீடியோ எடுத்து போட்டு நல்லா பாப்புலர் ஆகிவிடலாம்

Mathu S said...

ரகளை ...
உங்கள் சங்கடம் புரிகிறது

புகைப்படத்தை அகற்றியவர்களை கண்டு மரத்தினருகே நிற்கப் பணித்தால் போகிறது ..

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பாவரசர் கண்ணதாசன் அவர்கள் "இரண்டடக்கேல்" என ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒண்ணு (சலம்), இரண்டு (மலம்) ஆகிய இரண்டுமே! இச்செயல் நோய் நெருங்காமல் இருக்கவே!
அதற்கு மறைவிடம் தேவை. அதற்கேற்ற சூழல் தாங்கள் சுட்டிய மரநிழல்.

"அடப்பாவிகளா... கக்கூஸாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அதை லட்சியம் செய்யவில்லை. கோவிலாக மாற்றி விடுவார்கள் என்று மட்டும் உடனே நடவடிக்கை எடுத்து விட்டார்கள். கஷ்டமின்றி, கவலையின்றி மறுபடியும் பாரம் குறைக்கிறார்கள் மக்கள்." என்ற நிலை எப்ப மாறுமோ அப்ப தான் நாடு உருப்படும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!