வெள்ளி, 31 மார்ச், 2017

நம்பினால் நம்புங்கள்! காட்சி + கட்டுரை


தான் கண்ட காட்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கிறார்,

'நெல்லைத் தமிழன்' 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2013ல் லண்டன் சென்றிருந்தபோது, ரிப்ளேயின் ‘நம்பினால் நம்புங்கள்’ காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன். 


அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்ளே என்பவர், ‘நம்பமுடியாத, அதிசயமான’ பொருட்களைச் சேகரித்து, முக்கியமான நகரங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். பெரும்பாலும் ஒரிஜினல் பொருட்கள் இருந்தாலும், உயிர்ப்புடன் கூடிய (life size) பிரதிகளும் உண்டு. அவைகள், ரிப்ளேவின் ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற தலைப்பில் காட்சியகங்களாக இருக்கின்றன. நான் லண்டனில் உள்ள ‘நம்பினால் நம்புங்கள்’ காட்சியகத்தில் எடுத்த சில புகைப்படங்கள்.
 ===============================

திபெத்தியர்களுக்கு, வீடுகளில் இறந்த பெரியவரின் எலும்புகளால் ஆன பொருட்களை உபயோகப்படுத்துவது, இறந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை, மற்றும் அவரது ஆசிகள் தன்னுடனே கூட இருக்கும் என்று நம்புகிறார்கள். அதிலும் கபால எலும்புகளை வைத்துச் செய்யும் முகமூடி, இறந்தவர்களின் அறிவாற்றலைத் தன்னுள் ஒளிரச் செய்யும் என்று நம்புகிறார்கள். அப்படி கபாலத்தை வைத்துச் செய்யப்பட்ட முகமூடி. அடுத்தது, திபெத்தில் உபயோகப்படுத்தப்பட்ட, கபாலத்தைக் கொண்டு அலங்காரமாகச் செய்யப்பட்ட பாத்திரங்கள். இவைகளில் சாராயமோ அல்லது இரத்தமோ ஊற்றிக் குடிப்பது, இறந்தவர்களின் ஆசியை வழங்கும் என்பது இமாலயத்தின் நம்பிக்கை.
12 மைல்கள் நீளமுள்ள நூலினால் (wool) செய்யப்பட்ட ஃபெராரி கார் (actual size). இதைச் செய்தவர், ஹேம்ஷயரின் (இங்கிலாந்து) லாரன் போர்ட்டர். இதில் உள்ள ஃபெராரி குதிரைச் சின்னம், கையினால் நெய்யப்பட்டது.! 
  
  
இந்தப் படத்தை வரைந்தவர், நதாலி ஐரிஷ் என்ற பெண். இதை லிப்ஸ்டிக் கொண்டு வரைந்துள்ளார் அவர். கேன்வாசில் தீட்டப்பட்டதல்ல இந்த ஓவியம். உதட்டுச் சாயத்தினால் முழுவதுமாக முத்தம் கொடுத்து வரைந்த ஓவியம். இதற்கு மூன்று வாரங்கள் ஆனதாம். (யாரோ.. ‘கொடுத்துவைத்த ஓவியம்’ என்று சொல்லுகிறார்ப்போல் கேட்கிறதே).  மெக்சிகோவைச் சேர்ந்த க்ரிஸ்ட்லம் ரமோஸ் என்பவரால் மிட்டாய்களைக் கொண்டு (பெப்பர்மின்ட்) வரையப் பட்ட மைக்கேல் ஜாக்ஸன் ஓவியம். இதில் எந்த பெயிண்டும் பயன்படுத்தப்படவில்லை.

  

பிலடல்பியாவைச் சேர்ந்த அலெக்ஸ் க்ரெல் என்பவரால், தொலைபேசிப் புத்தகத்தைக் கொண்டு வரையப்பட்ட (செதுக்கப்பட்ட) புகழ்பெற்ற ராக்ஸ்டார் ஸ்டிங்கின் சிலை. தொலைபேசிப் புத்தகம் 3 இஞ்சுக்கு மேல் தடிமனாக இருப்பதால், அவற்றைக்கொண்டே பல சிற்பங்களைச் செதுக்கினாராம் அலெக்ஸ்.

 

மனிதனுக்கு என்று குரூரச் சிந்தனைகள் உண்டு. இந்த முகமூடி, ஐரோப்பாவில், ரொம்பப் பேசிக்கொண்டிருக்கும் பெண்களுக்குத் தண்டனையாக அணிவிக்கப்பட்டது. இதை முகத்தில் அணிந்துகொண்டால், அதிலிருந்து வாய்க்குள் செல்லும்படியாக ஒரு அமைப்பு உண்டு. அதனால், அணிந்துகொண்டிருப்பவர், அவருடைய நாக்கை அசைக்க முடியாது. அதுவும்தவிர, ‘கழுதை’ என்பது அவமானச் சின்னமாகக் கருதப்பட்டது. அதனால், இந்த முகமூடியில், கழுதையின் காதுகளைப்போல் அமைத்திருக்கிறார்கள்.  

   

சைனாவில், 10ம் நூற்றாண்டுகளில், கைதியைக் கொடுமைப்படுத்தி உண்மையை வாங்கும் முறையாக இந்த ‘நரக நெருப்பு’ என்ற தூண்போன்ற அமைப்பு உபயோகத்தில் இருந்தது. இதில் கைதியைக் கட்டிவிட்டு, கீழே கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பு வைத்துவிடுவார்கள். சூடு தாங்கமுடியாமல் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கைதான்.

  

கீழே இருக்கும்  படத்தை விளக்கத் தேவையில்லை. மனைவியை நம்பாத கனவான்கள் (?), அல்லது போர் வீரர்கள், பூட்டுப்போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். (இதைப் பற்றிய ஜோக் சொல்லும் இடம் இதுவல்ல), (எனக்கு அந்த ஜோக் தெரியும்; ஆனா நான் சொல்லமாட்டேம்பா ! KGG)  


ஜெர்மனியில் 16ம் நூற்றாண்டில் உபயோகத்தில் இருந்த, கைதியைக் கொடுமைப்படுத்தும் காலணி. இதை அணிந்துகொண்டால், அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கவேண்டியதுதான். நடக்க முயற்சித்தால், பாதச் சதைகள் கிழிபடுவதைத் தவிர்க்க இயலாது.  

    

அடுத்தது மங்கோலியாவைச் சேர்ந்த, குற்றவாளியைப் பட்டினி போட்டுக் கொல்லும் பெட்டி. உயிர் போகும்வரை இதிலேயே இருக்கவேண்டியதுதான்.

   
    
மின்சார நாற்காலி, அமெரிக்காவைச் சேர்ந்த பல் வைத்தியர் ஆல்ஃப்ரட் சௌத்விக் என்பவரால் 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்பு மின்சாரம் பாய்ச்சிக் கொல்லுவதற்காக உபயோகப்பட்டது. இப்போது இரக்க குணத்தால், குற்றவாளிகளுக்கு, ஒரே நேரத்தில் 2000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சி, குறைந்த நேரத்தில் இந்த உலகத்திலிருந்து விடுதலை தரப் பயன்படுகிறது. இப்போதும் மின்சார நாற்காலி அமெரிக்காவிலும், பிலிப்பைன்ஸிலும் உபயோகத்தில் உள்ளது. இதைப் போன்ற மனதை வருத்தமுறச் செய்யும் பலவித கொடுமைப்படுத்தும் ஆயுதங்களையும் அங்கே வைத்திருந்தார்கள். அதில் பெண்களை நல்ல இடையழகோடு ஆக்குவதற்காக இறுக்கமாகக் கட்டிவிடும் உடையும் (விக்டோரியன்), பாதங்களை மிகச் சிறிதாகச் செய்யும் (அதுதான் நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகாம்) சைனாவின் சிறிய காலணியும் இன்னும் பலவும் அடங்கும்.

 
   
இதைத் தவிர, உலகின் மிகச் சிறிய கார், உயரமான மனிதன், 500 கிலோவுக்கு மேல் எடையுள்ள குண்டான மனிதன், உயரமான நாற்காலி, இரண்டு தலை பசுமாடு, ஆடு போன்று ஆயிரக்கணக்கான பொருட்களைக் காட்சிப்படுத்திவைத்திருக்கிறார்கள். எல்லாமே, பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.

அன்புடன்

நெல்லத்தமிழன். 
  

(போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ...... நெ த வுக்கே!)
   

22 கருத்துகள்:

 1. grrrrrrrrrrrrrrrrr ரொம்ப ஆவலோடு வந்தால், படம் பப்படம் தான்! :(

  பதிலளிநீக்கு
 2. செய்திகள் சுவை. சில பயங்கர சுவை. படங்களைத்தான் காணோம்.நன்றி நெ.த.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் சில திகிலூட்டுகின்றன... செய்திகளும்தான் நன்றி நெ.த. அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 4. காரும், ஓவியங்களும் வித்தியாசமாய் ...

  ஆன மற்றது எல்லாம் ஐயோ....பயமா இருக்கே..!

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமானபதிவுக்குமகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 6. நெ.த வும் இவற்றை ரசித்தாரா கொடுமையடா சாமி அதுவும் எத்தனை விதம்

  பதிலளிநீக்கு
 7. அந்த 'முத்தத்தால் வரைந்த பெண் ஓவியம்' சூப்பர்! வரையப்பட்டதே இவ்வளவு சூப்பர் என்றால், வரைந்தவர் எவ்வளவு சூப்பராக இருப்பார் என்ற கற்பனையை நம்ம GMB போன்ற பதிவர்கள் மனத்தில் ஏற்படுத்திவிட்டார் நெல்லைத்தமிழன்!
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 8. @கேஜிஜி! படம் இப்போத் தெரியுது! நாளைக்குப் போட வேண்டியதை இன்னிக்கே போட்டுட்டீங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாட்டிக் கொண்டது நானா?

  பதிலளிநீக்கு
 9. ///
  (போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ...... நெ த வுக்கே!)///

  Haa haa haa கெள அண்ணனும் காமெடீஈஈ பண்ண வெளிக்கிட்டிட்டார்ர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
 10. தேடித் தேடிப் படங்களை 4 வருசத்தால போட்ட நெ த நுக்கும் அதைக் குட்டிக் குட்டியா வெளியிட்ட கெள அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்... அந்த நெருப்பை எரித்து உண்மை வெளிவர வைக்கும் படம்.... ஹையோ நெருப்பெதுக்கு கொஞ்சம் முறைச்சுப் பார்த்தாலே உண்மை எல்லாம் உளறிடுவேன் நான்.

  பதிலளிநீக்கு
 11. நானும் சொல்ல மாட்டேன்ன்ன்ன் நானும் சொல்ல மாட்டேன்ன்ன் அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்.....:).. ஹப்பி ஏப்பிரல் foooooooollllll:).

  பதிலளிநீக்கு
 12. Believe It or Not ஹையோ நான் கொஞ்சமா அரை கண்ணால் மட்டுமே சிலதை பார்த்தேன் ..முழு மியூசியத்தையும் பார்ர்கும் தைரியமில்ல ..ஒரு பெருவியன் பெண்மணி ஸ்கல் கழுத்தெல்லாம் வளையத்தோட இன்னும் கண்ல இருக்கு ..
  லிப்ஸ்டிக்கிலா கேட் சின்ன ராணியம்மாவை செய்தமாதிரி இன்னொருத்தர் டோஸ்ட் அன்ட் மார்மயிட் Marmite ளையும் செஞ்சிருக்கார்
  எனக்கு பிடிச்சது மின்ட் M J :)

  பதிலளிநீக்கு
 13. கெள அண்ணன்... எனக்கொரு யெல்ப் பண்ணுவீங்களோ?:) நெல்லைத்தமிழர் இப்போ எந்த நாட்டில இருக்கிறார் எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்லுவீங்களோ?:) போற வழியில புண்ணியம் கிடைக்கும்:)..

  பதிலளிநீக்கு
 14. படங்கள் அழகாக இருக்கு. ஓவியனள். அதுவும் முத்தத்தால் வரைந்த ஓவியம் அட போட வைக்கிறது. பயம் எல்லாம் இல்லை. ம்யூசியத்த ம்யூசியமாத்தானே பார்க்கணும்!!! படம் ஏன் சின்னதா வந்துருக்கு? கேஜிஜி போற்றுவார் போற்றட்டும்...தூற்றுவார் தூற்றட்டும்....நெத வுக்கே...போற்றுதல்தான்....!!! நல்லாருக்கு நெத...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. நன்றி எங்கள் பிளாக் கேஜிஜி சார். நன்றி கருத்திட்டவர்களுக்கு. நாளை வருகிறேன்.

  இந்தியாவில் கொடூரமான தண்டனைகள் காட்சிப்படுத்தவில்லை. இங்கேயும் கழுவேற்றுதல், தோலுரித்தல் போன்ற தண்டனைகள் உண்டு.

  பதிலளிநீக்கு
 16. படங்களும் அதற்கான தகவல்களும் அருமை....
  ஓவியங்கள் வாவ் போட வைக்க, மற்ற செய்திகள் மனதை வதைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 17. கொடுங்கருவிகள் சிலவற்றைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றேன்..

  எனினும், மேலதிகத் தகவல்களுடன் அருமை..

  பதிலளிநீக்கு
 18. @அதிரா - 'போற வழிக்கு புண்ணியம்' - கே.ஜி.ஜி. சாரை ரொம்ப வயசானவங்களா ஆக்கிட்டீங்களே... உங்களுடைய இடத்துக்கும் கேஜிஜி சார் இருக்கும் இடத்துக்கும் நடுலதான் என்னுடைய இடம். கடைசியா 2014 பிப்ரவரில லண்டன் வந்தேன்.. இனி வரும் வாய்ப்பு இல்லைனு தோணுகிறது.

  பதிலளிநீக்கு
 19. கேஜிஜி சார் - பொருத்தமா பாவ்னா படம் போட்டிருக்கீங்க..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!