Monday, March 13, 2017

"திங்க"க்கிழமை :: மாஇஞ்சி நெல்லித் தொக்கு - ஹேமா ரெஸிப்பி
     திங்கற கிழமையில் இன்று "ஆரோக்கிய சமையல்" ஹேமாவின் கைவண்ணம்!  இவரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.  இவர் செய்வதெல்லாம் ஆரோக்கியச் சமயலாகவே இருக்கும்.  நான் இவரிடம் சொல்வேன்..  "நீங்கள் ஆரோக்கியச் சமையல்.. நான் அயோக்கியச் சமையல்" என்று..  


 

     என்னுடைய சமையல் சோதனைகள் எண்ணெய்களாலும், கிழங்குகளாலும் ஆனது!  அவபத்திய மயம்!   ஹேமாவிடம் நீண்ட நாட்களாய் அவர் அடிக்கடி இப்படி செய்யும் சோதனைகளைப்  "படங்களுடன் விவரம் சொல்லுங்கள், எங்கள் ப்ளாக்கில் போடுகிறேன்" என்பேன்.  ஒவ்வொன்றும் நல்ல சுவையாக இருக்கும்.  ஆனால் படம் எடுக்கும் பொறுமை அவரிடம் இருக்காது.   இந்த முறை வற்புறுத்தி ஒன்று வாங்கியிருக்கிறேன்.  

     முதலில் படங்கள் அனுப்பினார்.  பின்னர் தேவையான பொருட்கள் என்று பட்டியலிட்டு வாட்ஸாப்பில் அனுப்பினார்.  அப்புறம் வாய்ஸ் மெசேஜில் செய்முறை அனுப்பினார்.  

     அவர் குரலை அப்படியே பதிவேற்றம் செய்யலாம் என்றால், மிக மெதுவாகப் பேசியிருந்தார்.  அது மட்டுமின்றி தினசரி எங்கள் ப்ளாக் படிக்கிறாராக்கும்!  மறுநாள் அவரிடம் யார் அடி வாங்குவது!!  எனவே கீழே உள்ள செய்முறையை அவர் சொல்லியபடியே டைப்பியிருக்கிறேன்.  அவர் குரலிலேயே (ஹிஹிஹிஹி) படிக்கவும்!  

தேவையான பொருட்கள் :


மாங்காய் இஞ்சி - 250 கிராம்.

நெல்லிக்காய் - 4 அல்லது 5

எலுமிச்சை - அரை மூடி 

மிளகாய்த்தூள்  -  இரண்டு முதல் இரண்டரை டீஸ்பூன் (அவரவர் தேவைக்கேற்ப).

வெந்தயத்தூள் - அரை அல்லது ஒரு டீஸ்பூன்.

நல்லெண்ணெய் - 50 அல்லது 100 எம் எல் 

கடுகு, பெருங்காயம்  - தாளிக்க 
"மாங்காய் இஞ்சியை நல்லா வாஷ் பண்ணிட்டு, தோல சீவிட்டு, துருவி வச்சுக்குங்க - கேரட் துருவல்ல...  நெல்லிக்காவை பாயில் பண்ணி லேசா கொஞ்சமா தண்ணி விட்டு வேகவைச்சு, அதை வந்து நல்லாத் துருவிக்கலாம், இல்லை மிக்சில கொஞ்சமா லேசா உதிர்த்தா மாதிரி இது பண்ணி விட்டுக்கணும்... மிளகாய் வத்தல் பொடி எடுத்து வச்சிட்டு கடாய்ல எண்ணெய் ஊற்றி, பெருங்காயம், கடுகு போட்டுட்டு மாங்கா இஞ்சி துருவலைப் போட்டு நல்லா வதக்கி, நெல்லிக்காய்த் துருவலையும் சேர்த்துப் போட்டு வதக்கணும்...  நல்லா வதங்கி வர்ரச்சே  மஞ்சள்பொடி, காரப்பொடி போட்டுட்டு, நல்லா சுருள வரச்சே வெந்தயத்தூள் -  வறுத்து பௌடர் பண்ணி வைச்ச - வெந்தயத்தூளையும் போட்டுட்டு எலுமிச்சம்பழம் அரை மூடி பிழிஞ்சி இறக்கி வச்சுக்க வேண்டியதுதான்.... 
தொக்கு பதத்துக்கு நல்லா சுருள வதக்கி இறக்கணும்...
"

41 comments:

மோகன்ஜி said...

படிக்கும் போது மனசில் ஒலித்த குரல் லதா மங்கேஷ்கர் குரலாட்டம் இருந்தது. ராத்திரி பூரா பழைய ஹிந்திபாட்டுகள் கேட்ட எஃபெக்ட்!
I love Maanga Inji !!

Geetha Sambasivam said...

மாங்காய் இஞ்சியில் நெல்லிக்காய் சேர்த்துத் தொக்குச் செய்ததில்லை. இந்தியா வந்ததும் ஒரு முறை முயன்று பார்க்கணும். இங்கேயும் மாங்காய் இஞ்சி கிடைக்குது! பொண்ணு வீட்டில் வெஜிடபுள் ஊறுகாயில் மாங்காய் இஞ்சி சேர்த்துச் செய்தேன். மாங்காய் இஞ்சி, மஞ்சள், இஞ்சி சேர்த்துத் தொக்கும் பண்ணினேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

சாப்பிடத் தூண்டுகிறது நண்பரே
தம +1

Avargal Unmaigal said...

கூடிய விரைவில் செஞ்சு பார்க்கப் போறேன் ஆனால் என்ன நெல்லிக்காய் இங்கே frozen ஆகத்தான் கிடைக்கும் அதை வேகவைக்காமல் அப்படியே இஞ்சியோட லேசாக அரைத்து செய்துவிட வேண்டியதுதான்

Avargal Unmaigal said...

நானும் இப்படி ஒரு பதிவு அனுப்பலாம் என்று நினைப்பேன் ஆனால் படம் எடுத்து அப்லோடு பண்ண மட்டும் நேரம் இல்லை

KILLERGEE Devakottai said...

குரலில் சொன்னது அருமை

'நெல்லைத் தமிழன் said...

மாங்காய் இஞ்சி வாசனையோட தொக்கு நல்லாருக்கு. செய்முறை சொன்னவிதமும் நிறையபேரை நினைவுகூற வைத்துவிட்டது. இதை சுடுசாத்த்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு தொக்கையும் கலந்து சாப்ட்டா நல்லா இருக்கும்

Bagawanjee KA said...

தொக்கு ...டக்குன்னு பண்ண முடியாதோ ?இவ்வளவு தயாரிப்பு வேண்டியிருக்கே :)

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்ஸ்... சூப்பர்...!

அடுத்த முறை ஆடியோ இணைப்பை இணைத்து விடுங்கள்...

அன்பே சிவம் said...

படிக்கும் போதே ஸ்.ஸ்.ஸ், ஊறுகிறதே..

அன்பே சிவம் said...

படிக்கும் போதே ஸ்.ஸ்.ஸ், ஊறுகிறதே..

athira said...

மிக அருமையான தொக்கு, மாங்காயிஞ்சி இதுவரைபடமாகத்தான் பார்த்து வருகிறேன் நேரில் பார்த்ததில்லை. எங்கள் தமிழ்க் கடையில் சொல்லி வைத்திருக்கிறேன், எடுத்து தருவதாக சொல்லிகிருக்கினம், பார்ப்போம் கிடைச்சால் தொக்கு செய்திடலாம்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா மாங்காய் இஞ்சி - கூடவே நெல்லிக்காய்... படிக்கும்போதே செய்யும் ஆர்வம் உண்டானது. ஆனால் மாங்காய் இஞ்சிக்கு எங்க போறது! அடுத்த தமிழகப் பயணத்தில் செய்து பார்த்துடலாம்!

Asokan Kuppusamy said...

ருசியாஇருக்கு

Angelin said...

மா இஞ்சி தொக்கு செய்திருக்கேன் ஆனா இதுவரைக்கும் நெல்லிக்கா சேர்த்ததில்லை ..
இங்கே எல்லாம் கிடைக்குதே இந்த வாரம் செய்திடறேன் ..

Angelin said...

@அதிரா
@அவர்கள் ட்ரூத் @வெங்கட்நாகராஜ்
இப்போகூட வீட்லயே 4 மாங்கா இஞ்சி இருக்கு :) நான் க்ரீன் ஸ்மூத்தில அடிக்கடி போட்டு குடிப்பேனே

Angelin said...

@ஹேமா ..வேகவைத்த நெல்லி சேர்ப்பதால் தொக்கை குளிர்சாதனபெட்டில வைக்கணுமா ?

Ardhanareeswarar paramasivam said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

இரண்டுமே தனித்தனியாகத் தொக்காகச் செய்ததுண்டு....இது சேர்த்து!! புதுசு!! செய்து பார்த்துட வேண்டியதுதான்...இரண்டுமே மிகவும் பிடிக்குமே...நெல்லிக்காயும் மாங்காயும் சேர்த்துத் தொக்கு செய்வதுண்டு. அதே போன்று மாங்காயும், இஞ்சியும் அல்லது மாங்காயும் மா இஞ்சியும் சேர்த்துத் செய்ததுண்டு....இதையும் செய்துவிட வேண்டியதுதான்....நல்ல ரெசிப்பி மிக்க நன்றி எங்கள் ப்ளாக் மற்றும் ஹேமாவுக்கும் நன்றியைச் சொல்லிவிடுங்கள் ஸ்ரீராம்..

ஆரோக்கிய சமையல் ....அயோக்கியச் சமையல்...ஹஹஹஹஹ்ஹ் இதை ரசித்தேன்...

கீதா

மன்னிக்கவும் என் உறவினரின் ஐடி ஓபன் ஆக இருந்ததைக் கவனிக்காமல் கமென்ட் போட்டுவிட்டேன்....அதனால்தான் நீக்கிவிட்டு மீண்டும் கொடுத்திருக்கிறேன்...

Nagendra Bharathi said...

அருமை

athira said...

////AngelinMarch 13, 2017 at 2:51 PM
@அதிரா
@அவர்கள் ட்ரூத் @வெங்கட்நாகராஜ்
இப்போகூட வீட்லயே 4 மாங்கா இஞ்சி இருக்கு :) நான் க்ரீன் ஸ்மூத்தில அடிக்கடி போட்டு குடிப்பேனே////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*234576 .... என் கண்பட்டே டயரியா வரப்போகுதூஊஊஊஊ:).

Anuradha Premkumar said...

ம்ம்...நல்லா இருக்கு..

புலவர் இராமாநுசம் said...

அருமை!

G.M Balasubramaniam said...

மாங்காய் இஞ்சி பிடிக்கும் நெல்லிக்காய் பிடிக்காது சிறுவயதில் அரை நெல்லிக்கனி தின்றிருக்கிறேன் ஆனால் எனக்கு இதில் நேர் எதிர் மனைவி

காமாட்சி said...

நெல்லி,மாஇஞ்சி,எலுமிச்சை சாறு மூன்று கலவைகள், இயற்கையாகப் பதம் சொல்லிக் கொண்டே போகும் விதம்,மஞ்சள் மறந்தது ஏனோ என்று நினைக்கத் தூண்டியது. அருமை. மணக்கமணக்க மாங்கா இஞ்சித்தொக்கு. நானும் வரப் பாரக்கிறேன். அன்புடன்

காமாட்சி said...

மறக்காதது மஞ்சள். படித்ததை மறந்தது நான்.அன்புடன்

ஸ்ரீராம். said...

காமாட்சி அம்மா.. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. நலம்தானே?

Angelin said...

நீண்ட நாட்களுக்குப்பின் காமாட்சி அம்மாவின் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம் .நலமா அம்மா

ஸ்ரீராம். said...

//நானும் இப்படி ஒரு பதிவு அனுப்பலாம் என்று நினைப்பேன் ஆனால் படம் எடுத்து அப்லோடு பண்ண மட்டும் நேரம் இல்லை //

அனுப்புங்கள் மதுரைத்தமிழன்... போட்டுடலாம்!

athira said...

///ஸ்ரீராம். said...
//நானும் இப்படி ஒரு பதிவு அனுப்பலாம் என்று நினைப்பேன் ஆனால் படம் எடுத்து அப்லோடு பண்ண மட்டும் நேரம் இல்லை //

அனுப்புங்கள் மதுரைத்தமிழன்... போட்டுடலாம்!//// ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்.. எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோஓஓஓஓ:)..


புதுப் படம் தியேட்டருக்கு வரமுன்.. போஸ்டர் ஒட்டுவார்களே:) அப்படி ஒரு சின்ன நோட்டீஸ் ஆவது ஒட்டிடுங்கோ ஸ்ரீராம் பிளீஸ்ஸ்ஸ்:)) எப்போ ட்றுத் ட ரெசிப்பி வரும் என:).. நான் ஸ்கூலுக்கு 2 கிழமை லீவு கேட்கோணும்... அந்தாட்டிகா பயணம் போக:) நாட்டில் இருக்காமல்ல்ல்:)... ஹையோ படிச்சதும் கிழிச்சு... டாலிங்குஜி கடல்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))

கோமதி அரசு said...

அருமையான தொக்கு.
செய்து பார்க்கிறேன்.
நன்றி.

ராஜி said...

எச்சி ஊறுது. செஞ்சி பார்க்குறேன்

Avargal Unmaigal said...


/// ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்.. எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோஓஓஓஓ:)..//////

@அதிரா ஸ்ரீராம்கிட்ட எல்லாம் "தண்ணி" இருக்காது எங்கிட்டமட்டும் பாட்டில் பாட்டிலா இருக்கு

athira said...
This comment has been removed by the author.
athira said...

@truth :- ஹஆ ஹாஆ ஹாஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

Avargal Unmaigal said...


//////சின்ன நோட்டீஸ் ஆவது ஒட்டிடுங்கோ

@அதிரா சின்ன நோட்டீஸ் ஒட்டினா உங்களால் படிக்க முடியாதே வேண்டும் என்றால் டிவியில் விளம்பரம் கொடுத்துடலாம் ஆனால் என்ன பணம் சற்று அதிகம் செலவாகும் சரி சரி அதற்கான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுவீர்கள் என்று தெரியும் உங்களுக்கு மிகவும் நல்ல மனசு

athira said...

பிரச்சனையே வாணாம் ட்றுத் ... வாங்கோ சொல்வதெல்லாம் உண்மைக்கு போய் ... லக்ஸ்மி ஆன்ரியிடம் சொல்லி ஒரு முடிவுக்கு வருவோம்ம்.....:)

ஹையோ இப்போ எல்லோரும் என்னை தேம்ஸ் இன் நடுவில் தூக்கி வீசப்போகினமே... லூட்ஸ் மேரி மாதாவே பிளீஸ்ஸ் சேவ்வ்வ்வ் மீஈஈஈஈஈஈஈஈ:).

காமாட்சி said...

என் நலம் விசாரித்து எழுதிய உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி. மிக்க நிதான நிலையில் இருக்கும் ஆரோக்கியம்தான். எல்லோரையும் இங்கு பார்ப்பதில் ஒரு ஸந்தோஷம் அளவிடமுடியாது. மிக்க நன்றி யாவருக்கும்.அன்புடன்

Geetha Sambasivam said...

காமாட்சி அம்மா, உடல் நலம் பூரண குணம் தானே? உங்களை இங்கே கண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

காமாட்சி said...

எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. நன்றி உங்களுக்கு. இந்த வயதில் இழந்ததைப் பெறுவது அதாவது, பலம் கடினம். வயோதிகம் ஆட்சி செய்கிறது. அதை உணர்ந்து கொண்டு, பலவிதங்களில் பாடம் கற்றுக்கொள்ளும் காலமிது. நீங்கள் அமெரிக்காவில். அன்பிற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சுவையான சமையல்
நாவூறுது ஐயா!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!