வெள்ளி, 7 ஜூலை, 2017

வெள்ளி வீடியோ 170707 : தயவு செய்து எழுந்து ஆடாமல் பாடலைப் பார்க்கவும்!



     இந்தப் பாட்டுக்கு ஆடி முடித்த உடன் நிச்சயம் அடுத்த ஒரு வாரம் ஆஷா பரேக்குக்கு கால்கள் சுளுக்கிக் கொண்டிருக்கும்! 



     ஒரு உற்சாகப் பாடல்.

     என்னதான் மும்தாஜ், மாதுரி, ஹேமமாலினி ரொம்பப் பிடிக்கும் என்றாலும் ஆஷா பரேக்கின் சில டான்ஸ் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கும்.  கேரவன் படத்திலும், தீஸ்ரி மன்ஜில் (ஆஜா... ஆஜா... மை ஹூம் பியார் தேரா..)  போன்ற பாடல்களையும் சொல்லலாம்.

     இந்தப் பாடலில் ஆர் டி பர்மன் போட்டிருக்கும் துள்ளல் இசைக்கு செம டான்ஸ் போட்டிருக்கார் ஆஷா.  யாரோ ஒரு பாகிஸ்தான் பணக்காரர் சாகும் தருவாயில் தனது சொத்தை எல்லாம் ஆஷா பரேக்குக்கு எழுதி வைத்ததாய் சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.

     அந்தக் காலத்தில் கதாநாயகிகள் Bhaaவம் காட்டுகிறேன் என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு ஆடுவார்கள்.  இதில் ஆஷா அனாயாசமாக ஆடி இருக்கிறார்.  லதாவின் குரலில் பாடலையும், இசையையும், முக்கியமாக ஆஷாவின் டான்ஸையும் பார்க்கத் தவறாதீர்கள்.  காட்சியைப் பார்க்காமல் பாடல் கேட்க வேண்டும் என்கிற விதியிலிருந்து மாறுபட்ட பாடல் இது!
     தங்கமலை ரகசியம் பாடல் போல பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி இருக்கும்!

     வாழ்க ஆர் டி பர்மன்!  வாழ்க லதா மங்கேஸ்கர்!!  வாழ்க ஆஷா பரேக்!!!

 இங்கு க்ளிக் செய்து தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம்.

49 கருத்துகள்:

  1. இப்போதும் மிகவும் பிரபலமான பாடல்...... அதுவும் கான்டா லகா..... என்ற வரியை மட்டுமாவது சொல்லாமல் இருப்பதில்லை பல உதடுகள்! :)

    துள்ளும் இசையோடு ஒரு பாடல் பகிர்வு! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ம்ஹூம்! அதிர்ச்சி ஏதும் தெரியலை! பாட்டு திடீர்னு நின்னது தான் ஓர் அதிர்ச்சி! :) அதோடு இன்னொண்ணு பார்த்தீங்கன்னா, இந்தப் படத்தில் ஆஷா பரேக் போட்டிருக்கும் முதுகில் ஜன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ல் வைத்த ப்ளவுஸ்கள் தான் இப்போ மறுபடி ஃபாஷனாகி இருக்கு! ஆக ஃபாஷன் என்பது புதுசா எல்லாம் ஒண்ணும் இல்லை! 30 வருஷங்களுக்கு ஒரு தரம் சுத்திச் சுத்தி வரும்னு சொல்லுவாங்க! அதான் உண்மை! என்னோட பதின்ம வயதில் குட்டைக்கை வைத்த ப்ளவுஸ்களும் பிரபலம். இப்போவும் அது பிரபலமாக இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல துள்ளல் இசை மழைதான்.
    இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. 20,25 வருடங்கள் முன்னர் விமல் சில்க்ஸில் அறிமுகம் செய்த தாவணி போன்ற அமைப்புடன் கூடிய புடைவை அப்போ அவ்வளவாப் பிரபலம் ஆகலை! அந்த 20 வருஷத்துக்கு முந்தைய புடைவை என்னிடம் ஒண்ணு இன்னமும் இருக்கு! இப்போ எங்கே பார்த்தாலும் அந்த மாதிரிப் புடைவைகள்! பட்டிலே கூட வந்து விட்டன!

    பதிலளிநீக்கு
  5. இதோ இணைப்பிற்குச்செல்கிறேன்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. த ம போட்டாச்சு. பாட்டு பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் பாடல் அருமை.
    கண்களில் அதிர்ச்சி தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம் பாடல் கூட இந்த பாடலின் உல்டா போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  9. இனிய இசையை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  10. RD பர்மனின் இசை 60-70-களில் ரசிகர்களை எழுந்து ஆடவைத்த இசை. பாக் அரசு என்னதான் இந்தியாவோடு நிரந்தர பகைமை கொண்டிருந்தாலும், சாமானிய பாகிஸ்தானி இந்திய சினிமா, இசைக்கு அடிமை. அப்போதும் இப்போதும். 90-களின் இறுதியில் மாதுரி தீக்ஷித்திடம் மயங்கிக் கிறங்கிக் கிடந்தவர்கள் அந்நாட்டவர். ‘காஷ்மீரை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். மாதுரியை மட்டும் இங்கே அனுப்பிவிடுங்கள்!’ என்று இந்தியர்களைக்
    கும்பிட்டுக் கெஞ்சிய சினிமா ரசிகர்கள்!

    பதிலளிநீக்கு
  11. ஆட்டமாடியவரையும் ரசிக்க முடியவில்லை பாடலையும் ரசிக்க முடியவில்லை காரணம் உங்களுக்குத் தெரியும்

    பதிலளிநீக்கு
  12. நன்றி வெங்கட். ஆமாம், காண்டா லகா என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  13. வாங்க கீதாக்கா... பாட்டின் கடைசியில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்குதே அதுதான் அதிர்ச்சி! பெரிய அதிர்ச்சி இல்லைதான். மக்கள் அப்படியாவது முழுசா கேட்டு ரசிப்பாங்களான்னுதான்!

    பதிலளிநீக்கு
  14. வாங்க கீதாக்கா... பேஷன் டிசைன் எல்லாம் அப்படி ரொட்டேஷனில் மாறி மாறி வருவதுதான்! ஆண்களுக்கும் டைட்ஸ், பெல்பாட்டம் என்று மாறி மாறி வருவது போல்! பாட்டை ரசிக்கும் நேரத்தில் நல்ல பேஷன் ஆராய்ச்சி!

    பதிலளிநீக்கு
  15. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க கோமதி அரசு மேடம். //கண்களில் அதிர்ச்சி தெரிகிறது// யார் கண்களில் மேடம்?

    :))

    பதிலளிநீக்கு
  17. வாங்க பகவான்ஜி. நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் அதுபோலத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஏகாந்தன் ஸார்... இந்தப் பாடலுக்கு உங்கள் கமெண்ட் என்னவாக இருக்கும் என்று காத்திருந்தேன். சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறீர்கள். நோ... மாதுரியும் நமக்குத்தான். காஷ்மீரும் நமக்குத்தான்!!!!

    பதிலளிநீக்கு
  20. வாங்க வைகோ ஸார்.. என்ன டிரையல்? மொபைலிலிருந்து ஏற்கெனவே நீங்கள் படிப்பபவர்தானே? ம்ம்ம்? என்ன டிரையலாக இருக்கும் என்று அறிய ஆவல்!

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஜி எம் பி ஸார்...

    // காரணம் உங்களுக்குத் தெரியும் //

    'தமிழ்ப்பாட்டே கேட்க மாட்டேன்.. இதில் ஹிந்திப் பாட்டு வேறா?' அதானே!!!

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் மொஹம்மத் அல்தாஃப்.

    பதிலளிநீக்கு
  23. நானும் போட்டுப் பார்த்தேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. கால் சுளுக்கியிருக்கும்// ஹஹஹஹஹஹ் இதுதான் ஸ்ரீராம்!!!

    பாட்டு செம. மிகவும் ரசித்தேன். இதுதான் முதல் தடவை கேட்கிறேன்.

    டான்ஸ் நல்லாருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் // ஆமாம், காண்டா லகா என்றால் என்ன?// கேட்டுருந்தீங்கல்ல....அது காண்டா என்றால் முள்ளு என்று அர்த்தம்னு நினைக்கிறேன்..லகா குத்திருச்சு...? முள்ளு குத்திருச்சு? இப்படி அர்த்தம் ஆகுமோ பாட்டில்? அதுவும் ஜாலியா துள்ளலோட ஆடுற பாட்டுல.... இல்லைனா வேறு அர்த்தம் இருக்கலாம் நு நினைக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்... சுகம்... சுகம்...

    அடுத்த வரி (ஹம்மிக்) மனதில் பாடக் கூடாது...!

    பதிலளிநீக்கு
  27. "khanta laga" முள் குத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
  28. நன்றி கீதா ரெங்கன்... இங்கு பகிர்ந்த சாக்கில் மறுபடி மறுபடி இரண்டு மூன்றுமுறை நானே அந்தப் பாடலைக் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி டிடி... ஏன் அடுத்த வரியை மனதுக்குள் பாடவேண்டும்?

    பதிலளிநீக்கு
  30. வாங்க கீதாக்கா.. சந்தேகமா இருந்தது.. அதான் நிச்சயப்படுத்திக்கிட்டேன்! ஆஷாவே முதல் முறை பாடும்போது காலில் முள் குத்தி விட்ட மூவ்மெண்ட் தருகிறார்! பங்களாவின் பின்னால் இருக்கும் மரத்தினடியில் முள் குத்தி விட்டது போல!

    "முள் குத்தி விட்டது" என்றால் எனக்கு மூன்றாம் பிறை சில்க் ஸ்மீதா நினைவுக்கு வருகிறார்!

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. // மும்தாஜ், மாதுரி, ஹேமமாலினி ரொம்பப் பிடிக்கும் என்றாலும்..

    ஹேமமாலினியா? நடனமா? ஹேமமாலினியின் நடனம் பற்றி குமுதம் பத்திரிகையில் சுப்புடு விமரிசனம் நினைவுக்கு வருகிறது. 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ' பாட்டுக்கு ஹேமாவின் நடனம் மரத்தை விட்டு குரங்கைக் கீழிறங்கச் சொல்வது போலவே இருந்ததாம்.

    ஹிஹி.. ஹெலன் ஆடினா நடனம். மத்தவங்க எல்லாம் கடினம்.

    பதிலளிநீக்கு
  33. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  34. trialக்கு ஆங்கிலத்தில் இன்னொரு பொருளும் உண்டு. அதைத் தான் சொல்கிறாரோ வைகோ சார்? அப்படியெனில் ஹிஹி நானும் ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. @அப்பாதுரை - ஹேமமாலினியின் நடனம் பற்றி நான் சொல்லவில்லையே... மும்தாஜும் ஹேமாவும் பிடிக்கும். அவ்வளவுதான். நடனத்துக்கு இதுவரை மாதுரிதான்சொல்லியிருக்கேன்!


    ஹெலன் நடனம்? 'ஹக்கா ஹக்கா' என்று விக்கி விக்கி ஆடுவாரே... அவர்தானே?!!

    பதிலளிநீக்கு
  36. //அப்பாதுரை said...

    trialக்கு ஆங்கிலத்தில் இன்னொரு பொருளும் உண்டு. அதைத் தான் சொல்கிறாரோ வைகோ சார்? அப்படியெனில் ஹிஹி நானும் ஆமோதிக்கிறேன்.//

    Trial என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘சோதனை’ அல்லது ‘விசாரணை’ என்ற இரு பொருள் உண்டு என நான் நினைக்கிறேன்.

    கடந்த 2-3 நாட்களாக என்னுடைய BLOGGER இல் VIRUS ஊடுறுவி உள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. கண்ட கண்ட படங்களெல்லாம் வந்து காட்சியளித்து ஹிம்சை செய்து வருகின்றன. அவற்றை எப்படி நீக்குவது என்றே தெரியாமல் தத்தளித்து வருகிறேன். நான் சேமித்து வைத்துள்ள DRAFT பதிவுகளைக்கூட என்னால் திறந்து பார்க்க முடியவில்லை. அங்கு யார் யாரோ பொம்மனாட்டிகள் வந்து எதை எதையோ திறந்து காட்டி வருகிறார்கள்.

    இதுவரை இந்தப்பதிவை நான் படிக்கவோ, காணொளியை பார்க்கவோ இல்லை என்பதை சத்தியம் செய்து சொல்கிறேன்.

    பிறருக்குக் COMMENTS போட்டால் அதுவாவது போய்ச் சேர்கிறதா என்று சோதனை (TRIAL) செய்து பார்த்தேன். அவ்வளவுதான்.

    வேறொன்றும் அடியேன் அறியேன் பராபரமே.

    பதிலளிநீக்கு
  37. வாங்க வைகோ ஸார்...

    //நான் சேமித்து வைத்துள்ள DRAFT பதிவுகளைக்கூட என்னால் திறந்து பார்க்க முடியவில்லை. அங்கு யார் யாரோ பொம்மனாட்டிகள் வந்து எதை எதையோ திறந்து காட்டி வருகிறார்கள்.//

    ஐயோ! பாஸிவர்ட் மாறுங்கள்.

    பதிலளிநீக்கு
  38. //கண்ட கண்ட படங்களெல்லாம் வந்து காட்சியளித்து ஹிம்சை செய்து வருகின்றன.
    இப்படியொரு பலனா? சுழியிலும் அப்படி ஒருமுறை நேர்ந்தது. (மிகச் சிரமப்பட்டுப் பார்த்தேன்)

    விடுங்க.. பரேக்கின் நடனம் சோதனை தான்.

    பதிலளிநீக்கு
  39. //ஸ்ரீராம். said...
    வாங்க வைகோ ஸார்... //நான் சேமித்து வைத்துள்ள DRAFT பதிவுகளைக்கூட என்னால் திறந்து பார்க்க முடியவில்லை. அங்கு யார் யாரோ பொம்மனாட்டிகள் வந்து எதை எதையோ திறந்து காட்டி வருகிறார்கள்.//

    //ஐயோ! பாஸ்வேட் மாற்றுங்கள்.//

    என் வலைப்பக்கம் எப்போதும் திறந்தே இருக்கும். பாஸ்வேட் போட்டு நான் பூட்டுவதே கிடையாது. இப்போது எனக்கு என் பாஸ்வேட் என்ன என்றே மறந்தும் போய்விட்டது. என் எழுத்துலக மானஸீக குருநாதர் ரிஷபன் அவர்களிடம் சொல்லிப் புலம்பியுள்ளேன்.

    அவர் ஒட்டுமொத்தமாக LOGOUT செய்து விட்டு வெளியே வந்து விடுங்கோ. அடுத்த ஒரு வாரத்திற்கு உள்ளே போகாதீங்கோ. நான் எனக்கு ஒழிந்தபோது நேரில் வந்து பார்க்கிறேன்” என ஆறுதல் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.

    மேலும் எனக்கு பாஸ்வேட் மாற்றும் தொழில்நுட்பங்கள் ஏதும் தெரியவே தெரியாது, ஸ்ரீராம். :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!