மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் மறைந்த நாள் இன்று. இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர் நினைவாக இந்தப் பாடலைப் பகிர்கிறேன்.
அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடருக்கு அக்கரையில் இச்சை..
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
1 சம்சாரியின் ஆசை சன்யாசம்
அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம் (2)
கானலுக்கு மானலையும் கண்கண்ட காட்சி
கண்முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம் (2)
கானலுக்கு மானலையும் கண்கண்ட காட்சி
கண்முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
2 கடல்மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீதி விழுந்தோர்கள் உண்ணுங்கள்.
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் - போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா
காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா..
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
கனி மீதி விழுந்தோர்கள் உண்ணுங்கள்.
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் - போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா
காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா..
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
3 மழைநாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எதுவந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எதுவந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
இல்லாத பொருள்மீது எல்லாருக்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
தமிழ்மணம் வாக்களிக்க இங்கே க்ளிக்கி வாக்களிக்கலாம்!
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
தமிழ்மணம் வாக்களிக்க இங்கே க்ளிக்கி வாக்களிக்கலாம்!
அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
காணொளிக்காட்சி முதல் பாரா மட்டுமே இருக்கிறது ஏன் ?
பதிலளிநீக்குஇப்போது சரி செய்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குஓகே ஸ்ரீராம் ஜி
நீக்குமலையாளிக்கே உரித்தான பச்சே என்ற உச்சரிப்பு கடைசிவரை மாறவில்லை அவர்கள் "பச்சை" என்று சொல்ல மாட்டார்கள் "பச்ச" என்பது மலையாளம்
கடை"யை "கட" என்பது போல் மலையாள கட இதோ- (കട)
இசைமேதை திரு. எம்மெவீ அவர்களுக்கு எமது புஷ்பாஞ்சலிகள்.
அருமையான பாடல் பகிர்வு.
பதிலளிநீக்குமெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நல்லதோர் அஞ்சலி.
அருமை!
பதிலளிநீக்குகாலைலேர்ந்து வெள்ளி வீடியோ வரலையேன்னு பார்த்தேன். அருமையான பாடல், ஆளுமையான குரல்வளம். எம் எஸ் வி என்ற நல்ல மனிதனை நினைவுபடுத்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஎனக்கு இதுவரை இந்தப் பாட்டுப் பத்தித் தெரியாது! பச்சை என்பதற்கு பச்சே! என்று பாடுகிறார். என்ன படம்? படம் பேரும் அக்கரைப்பச்சை தானா?ஜிவாஜி?
பதிலளிநீக்குகூடவே பாடல் வரிகள் good...!
பதிலளிநீக்குஅருமையான பாடல்...
பதிலளிநீக்குதுளசி: எம் எஸ் வியின் அருமையான குரல் வளத்தில் பாடல் அருமை! கேட்டதுண்டு. இப்போது மீண்டும்.
பதிலளிநீக்குகீதா: அருமையான பாடல்...வரிகளும் செம!!! எம் எஸ் வி பச்சே (ஆனால் பச்சையை, பச்ச என்றுதான் கேரளத்தவர் உச்சரிப்பார்கள்) என்று பாடுவது அவர் அடிப்படையில் கேரளத்தவர், அங்கேயே பிறந்து வளர்ந்தவர், மற்றும் இளம்வயதில் தமிழ் உச்சரிப்பு முழுவதும் வந்திருக்காது என்பதால் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே போன்று அக்கர.....இக்கரை சரியாகத்தான் சொல்லுகிறார். அருமையான பகிர்வு.
எம் எஸ் விக்கு எங்கள் அஞ்சலிகளும். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் மனது மிகவும் வேதனைப்படும். எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார் மனிதர்! ஆனால் அந்தக் கஷ்டங்கள் அவரை நன்றாகவே புடம் போட்டிருக்கிறது எனலாம். அவர் மனம் மிகவும் மென்மையான மனது. கஷ்டப்பட்டவர்களுக்கு பணத்தாலும் உதவியிருக்கிறார். நண்பர் சந்திரபாபுவை அவரது இறுதிக் காலத்தில்தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவருக்கு உதவியிருக்கிறார் என்ன ஒரு பெரிய மனம்!!! மாமனிதர்!!!
இனிய பாட்டுடன் தத்துவங்களும் மனதில் ஆழமாகப் பதிகிறது. நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டு.குரலினிமை,பொருளினிமை, அலுக்காத சொல்லினிமை. நன்றி .ஸ்ரீராம். அன்புடன்
பதிலளிநீக்குநம் தலைமுறையை இசையால் ஆட்டிப் படைத்த msv யை மறக்க முடியுமா :)
பதிலளிநீக்குசில தினங்களுக்கு முன் தான் இந்தப் பாடலில் ஆழ்ந்திருந்தேன்...
பதிலளிநீக்குஇந்தப்பாடல் சொல்லாத விஷயங்கள் இல்லை.. கவியரசருடைய பாடல் என நினைக்கின்றேன்..
மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..
அருமையான பாடல்களை நினைவூட்டுவதற்கு மகிழ்ச்சி
பதிலளிநீக்குதெரிந்தே தான் பச்சே என்கிறார். பச்ச என்பது தமிழிலும் (சென்னை) தெருவழக்கு தானே? இச்சை பிச்சை என்பதைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்தருவருக்கு பச்சை தெரியாதா? சரியான உச்சரிப்புக்கு பாடகர்களை சோதித்துத் தொலைத்தவர் எம்எஸ்வி. யேசுதாஸ் தவிர அனைவரையும் பெண்டு வாங்கியிருக்கிறார்.
பதிலளிநீக்குமெல்லிசை மன்னருக்கு எஸ்.டி.பர்மனின் தாக்கம் அதிகமுண்டு என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ‘காஹே கோ ரோயே’வை ‘எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகளே’ என்று பாடியபோது, தமிழிலும் ஒரு பர்மன் இருக்கிறார் என்று பெருமிதப்பட்டதுண்டு.
பதிலளிநீக்கு‘அக்கரை பச்சை’ பாடல் பிரபலமானதற்கு ஒரு முக்கியமான காரணம் - எம்.எஸ்.வி குரலுடன் கவியரசு கண்ணதாசனின் வரிகளும் கூட!
சூப்பர்