இளையராஜாவின் இசையும், எஸ் ஜானகியின் குரலும்தான் இந்தப் பாடலுக்கு உயிர். அதற்கு துணை கொடுப்பது யேசுதாஸின் குரல்.
இந்தப்
பாடலுக்கு காட்சியுடன் பாடல் இணைத்தாலும், காட்சியைப் பார்க்காமல் பாடலைக்
கேட்பது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். காட்சியில் ஸ்ரீதேவி
வருவார். நெல்லைத்தமிழன் கவனிக்கவும்! ஆனால் காட்சியைப் பார்த்துக்கொண்டே பாடலைக் கேட்பது வீண்!
'அனிதா - இளம் மனைவி' என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய மர்மக்கதையைத் திரைப்படமாக எடுத்துக் கெடுத்தார்கள்! ஜெய் தான் லாயர் கணேஷ்! மேஜர் சுந்தர்ராஜன் வில்லன்! (திருத்தத்துக்கு நன்றி பால கணேஷ்)
எஸ்
ஜானகியின் ஆரம்ப ஆலாபனையே குயில்களையும் மற்ற பறவையினங்களையும் அழைப்பது
போல இருக்கும். நிறைய பாடல்களில் இளையராஜாவின் இசை காதுகளில் ஒலிக்கும்போது
அவை நம்மை ஒரு காட்சி உலகுக்கு அழைத்துச் செல்லும். இந்தப் பாடலில் கூட பாடலையும் இசையையும் கேட்கும்போது
மலைச்சாரல்களிலும், வனங்களிலும் நாம் ஆனந்தமாகத் திரியும் உணர்வு, ஓடைகளின்
ஓரத்தில் அமர்ந்து தவழ்ந்தோடும் நீரினை கைகளால் அளையும் உனர்வு, கோவிலுக்குள் நடக்கும் உணர்வு என்று வரும்.
இணைத்திருக்கும் காணொளிக் காட்சியில் ஆங்காங்கே ஏகப்பட்ட கட் ! ஆனால் இங்கே திரைப்படக் காட்சி இல்லாமல் வரும் காணொளியில் பாடலின் தரமும் நன்றாயிருக்கிறது. அதிகமாக வெட்டும் இல்லை! இங்கு க்ளிக் செய்து பாடலை ஓடவிட்டு விட்டு, வேறு வேலை பாருங்கள். உங்கள் அனுபவம் என்ன, சொல்லுங்கள்.
விரைவில் இங்கு இளையராஜா 80 களில் அளித்த பேட்டி ஒன்றை வெளியிட முயற்சி செய்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான பேட்டி அது. என்ன கஷ்டம் என்றால் பக்கம் உடையாமல் இருக்கவேண்டும், தட்டச்சு செய்யும் பொறுமை எனக்கு வேண்டும்!!!
இது சுஜாதாவின் "ப்ரியா" இல்லையோ! அதில் தான் ஜெய்சங்கர் கணேஷா வருவார்.
பதிலளிநீக்குஅனிதா இளம் மனைவியைப் படமா எடுத்ததா நினைவில் இல்லை. தேடிப் பார்க்கணும்! ஆனால் இங்கே படத்தின் பெயர் இது எப்படி இருக்கு? அப்படினு போட்டிருக்கோ! ப்ரியா கதை ப்ரியா என்னும் பெயரிலேயே படமா வந்தது.
பதிலளிநீக்குஅனிதா இளம் மனைவி தான் இது எப்படி இருக்கு? என்ற பெயரில் படமாக்கப்பட்டது.
நீக்கு16 வயதினிலே எனும் புயல் அடித்ததனால் இந்தப்படம் தோல்வி அடைந்தது.
இளையராஜா அவர்களின் பேட்டியை விரைவில் எதிர்பார்க்கின்றேன் - ஆவலுடன்!..
பதிலளிநீக்கு‘அனிதா இளம் மனைவி’ நாவல் ‘இது எப்படி இருக்கு?’ ஆக பெயர் மாற்றம் பெற்று வந்து தோல்வி அடைந்தது. தலைப்பை வைத்து இதில் ரஜினி நடித்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டீரோ..? ஜெய் கணேஷாக, ரஜினி வில்லனாக நடித்த படம் ‘காயத்ரி’ தான். இதில் மேஜர் சுந்தரராஜர்தான் வில்லர். கேட்டோ..?
பதிலளிநீக்குஆமாம் கணேஷ். நன்றி. ரஜினி பற்றிய தகவலை மாற்றி விடுகிறேன்.
பதிலளிநீக்குtha ma +1
பதிலளிநீக்குபாட்டு எப்போதும்போல் சுகம். அந்தக்கால ஶ்ரீதேவி ஜெய்சங்கர், சிவாஜி போன்றவர்களுடன் இந்தமாதிரி பாடல் காட்சியில் நடிக்கும்போது, ஶ்ரீதாவிமீது பரிதாபம் வருவது என்னவோ நிஜம் (சிவாஜி முதல்மரியாதையில் ராதாவுடன் நடித்தபோது அப்படித் தோன்றியதில்லை)
பதிலளிநீக்குஇரண்டு காணொளியும் கண்டேன்ஸ்ர
பதிலளிநீக்குபதிவில் ஸ்ரீதேவி வருவார் நெல்லைத் தமிழன் "கவனிக்கவும்" என்ற வார்த்தையின் அர்த்தம் தேடி அலைகிறேன் நான்.... பட்டிணத்தார் போல...
அருமையான பாடல் பகிர்வு.
பதிலளிநீக்குஇளையராஜாவுக்காக வெயிட்டிங்க்
பதிலளிநீக்குஇதெல்லாம் ஒரு பாட்டா?!
பதிலளிநீக்குஇதெல்லாம் ஒரு ரசனையா?
நீக்குத ம 8
பதிலளிநீக்குநமக்குத்தான் நல்ல இசை என்ன வென்றே தெரியாதே
பதிலளிநீக்குகாணொளி காண மீண்டும் வருகிறேன்.இப்ப மொபைல்..கணினியில் பார்க்கணும் அதான்...
பதிலளிநீக்குநெல்லை! ஸ்ரீதேவி உங்க favourite ஆ....கனவுக் கன்னி!?? ஹஹஹ
கீதா
ஒரு பாடல் நம்மை நாற்பது வருடங்கள் எளிதாகப் பின்னோக்கித் தள்ளிவிட்டுவிடுகிறது! இளையராஜா மேஜிக்..நீங்கள் சொன்னபடி ஆடியோவைத் தனியாகக் கேட்பதில் ஆனந்தம்தான். இருந்தாலும் கறுப்பு-வெள்ளை ஸ்ரீதேவியைப் பார்க்காமல் இருந்துவிடமுடியுமா? சுஜாதாவின் ’அனிதா இளம் மனைவி’-யின் படமாக்கம் இது என்று இப்போதுதான் தெரிந்தது. வழக்கம்போல், பாடலாசிரியரைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்க் கவிஞர்கள் மேல்கவிந்த சாபம்!
பதிலளிநீக்குStill, can't understand Ilaiyaraaja's obsession with Janaki! - as if there was no other female voice at that time. Just can't get it. இளையராஜாவின் நேர்காணலில் ஏதேனும்
கிடைக்குமா எனப் பார்ப்போம்..
கீதா ரங்கன் - உங்களுக்காகச் சொல்லுகிறேன். ஆண்களுக்கு "கனவுக் கன்னி" பதின்ம வயதிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஶ்ரீதேவி, ...., ரம்பா, சிம்ரன், ....தமன்னால வந்து நிக்குது. அத நம்பி இப்போ உள்ள ஶ்ரீதேவி படத்தையோ, சிம்ரன் படத்தையோ காண்பித்தால் நான் அம்பேல்.
பதிலளிநீக்குஇங்கு ஒரு தடவை, கணவன் மனைவி எவ்வளவு தூரம் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்ற போட்டியில், என் மனைவியிடம் என் கனவுக்கன்னி யாருன்னு கேட்க, அவள் ரம்பா என்று சொல்லியிருக்கிறாள். அதற்குள் உள்ளத்தை அள்ளித்தா மயக்கத்திலிருந்து விடுபட்டு சிம்ரனுக்கு மாறிவிட்டிருந்தேன்.
இதுதான் ஆண்களின் Loyalty
ஏகாந்தன் - இளையராஜா தன் இசையிலும் பாடல்களிலும் வேறுபாடு காண்பிக்க முயன்றார். அதனால்தான் டி.எம.எஸ், சுசீலாவுக்கு வாய்ப்புகள் கொடுக்கலை. ஜானகி அவர்கள் மிக மிகத் திறமைசாலி. பல குரல்களிலும் பாடுவார், இயல்பான உணர்ச்சிகளை பாடலில் பிரதிபலிப்பார் (நேத்து ராத்திரி, நிலாக்காயுது நேரம் நல்ல, போடாப் போடா புண்ணாக்கு, இன்னும் கிழவி போன்று, குழந்தை போன்று). சிலசமயம் இளையராஜா ஜானகி அவர்கள்மீது சிறு சண்டை போட்டபோது ஜென்சி, வாணிஜெயராம், ச்சிரேகா போன்றோரையும் பாடலுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். ச்சிரேகா பாடல்கள் பயங்கர ஹிட், சொந்தப் பிரச்சனைகளால் அவர் தொழிலைத் தொடர இயலவில்லை. உமா ரமணன் சில பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சித்ரா, மனோ ஆகியவர்களை அதிகமாக உபயோகப்படுத்தினார். அதேபோல டி.எம.எஸ் வாய்ஸ் போலத் தேவைப்பட்ட இடங்களுக்கு மலேஷியாவை உபயோகப்படுத்தினார். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும்.
பதிலளிநீக்குஅருமையான காணொளி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
ஹிஹிஹி, சுஜாதாவின் "ப்ரியா" படத்தில் ரஜினி தான் கணேஷாக வருவார்னு நினைக்கிறேன். இங்கே சினிமா வல்லுநர்களும், வல்லுநிகளும் இருக்கிறச்சேத் தப்புத் தப்பா உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கேன்! மீ ஜூட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! காயத்ரி படமும் பார்த்தேன். அதிலே கமல் தானே வில்லன்????????????????
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
பதிலளிநீக்குஜென்ஸி, வாணி பாடியதெல்லாம் நான் கவனித்திருக்கவில்லை. எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளில் நான் இந்தியாவுக்கு வெளியே
சுற்றிக்கொண்டு, கிட்டத்தட்ட தமிழ்த் தொடர்பு அவ்வளவாக இல்லாத நிலையில் இருந்தேன். மலேஷியா பாடியதையும், சசிரேகாவின் இனிய சில பாடல்களின் அனுபவமும் அவ்வபோது கிடைத்திருந்தது. Anyway, Raja wanted the scene to be entirely different from what was played earlier. I agree.
மிக நன்றி. ஜெய்ஷங்கரைப் பார்த்து எத்தனை நாட்களாச்சு.
பதிலளிநீக்குஅருமையான இசை. இனிமை. ஸ்ரீராம்.
நல்லாத் தான் இருக்கு...!
பதிலளிநீக்குநல்ல பாடல். காட்சி இல்லாத பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இணைத்திருக்கும் காணொளியில் ஏகப்பட்ட தடங்கல்கள்!
பதிலளிநீக்குத.ம. 12.
இனிமையான பாடல்
பதிலளிநீக்குகாணவும் கேட்கவும் இனிமை :)
பதிலளிநீக்குதமன்னால வந்து நிக்குது. அத நம்பி இப்போ உள்ள ஶ்ரீதேவி படத்தையோ, சிம்ரன் படத்தையோ காண்பித்தால் நான் அம்பேல்.// ஹஹஹஹ்..அது தெரியுமே!! ஆண்கள் கனவுக்கன்னி!! அது போல பெண்களும் தான்....மோகன் ஒரு காலத்தில் கனவு நாயகனாய் இருந்தார். கமல்....சுரேஷ்...அப்புறம் மாறி சூர்யா வந்தார்.சாக்லேட் பாய் அப்பாஸ் ..இப்போ நிறையபேர் இருக்கான யாருனு தெரியல...சின்னப் பொண்ணுங்களைக் கேட்கனும்..
பதிலளிநீக்கு// என் மனைவியிடம் என் கனவுக்கன்னி யாருன்னு கேட்க, அவள் ரம்பா என்று சொல்லியிருக்கிறாள். அதற்குள் உள்ளத்தை அள்ளித்தா மயக்கத்திலிருந்து விடுபட்டு சிம்ரனுக்கு மாறிவிட்டிருந்தேன்.// ஹஹாஹஹ்ஹ ஐயோ தாங்கலை சிரிச்சு முடிலப்பா....நெல்லை..
அது சரி ஹன்ஸிகா இல்லையா...நயன் இல்லையா இபப் கூட நயன் தான் டாப்பாமே...கீர்த்திசுரேஷ்...ஐயோ அனுஷ்காவை விட்டுட்டீங்களே!! தமனா தான் இப்பவுமா இல்லை மாறிடுச்சா!!!?
கீதா
சிலசமயம் இளையராஜா ஜானகி அவர்கள்மீது சிறு சண்டை போட்டபோது ஜென்சி, வாணிஜெயராம், ச்சிரேகா போன்றோரையும் பாடலுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார். ச்சிரேகா பாடல்கள் பயங்கர ஹிட், சொந்தப் பிரச்சனைகளால் அவர் தொழிலைத் தொடர இயலவில்லை. உமா ரமணன் சில பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சித்ரா, மனோ ஆகியவர்களை அதிகமாக உபயோகப்படுத்தினார். அதேபோல டி.எம.எஸ் வாய்ஸ் போலத் தேவைப்பட்ட இடங்களுக்கு மலேஷியாவை உபயோகப்படுத்தினார். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும்.// ஆமாம் நெல்லை புதிய வார்ப்புகள் படத்தில் கூட ஜென்சியும் ராஜாவும் பாடிய பாடல் இதயம் போகுதே...ரொம்ப நல்லாருக்கும்...அப்புறம் ஆயிரம் மலர்களே மலருங்கள் ஜென்ஸி வாய்ஸ் நல்லாருக்கும்...ப்ரியாவில் என் உயிர் நீதனே பாடல்,,,செமையா இருக்கும்...
பதிலளிநீக்குஸ்வர்ண லதாவை விட்டுட்டீங்களே! அருமையான பாடகி. அவங்களையும் ராஜா நிறைய பாட வைச்சுருக்கார்...ஸ்வர்ணலதா பரிதாபமான மரணம்..
கீதா
அருமையான பாடல் ஸ்ரீராம்! மோகனத்தில் அமைந்துள்ள பாடல்!!! மோகனத்தை இப்படியும் கையாளலாம் என்று ஆஹா!! மோகனம் இடையில் கொஞ்சம் ஸ்வர பேதம் செய்து சிவரஞ்சனியைத் தொட்டுவிட்டு என்று அருமையான பாடல்...பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன் ஸ்ரீராம். மிக்க நன்றி பகிர்விற்கு..
பதிலளிநீக்குகீதா