Wednesday, July 12, 2017

நேருவும் தவீஸும்

  பழைய பைண்டிங் கலெக்ஷன்


 ========================================================================================


 
     1960 க்குப் பிந்திய சில ஆண்டுகளில் திடீரென்று டில்லியில் ஒரு ஜோஸ்யருக்குக் கீர்த்தி ஏற்பட்டது.  அவரை அன்றைய ராஷ்டிரபதி ராஜேந்திர பிரசாத் ஆதரித்ததுதான் காரணம்.


     நேருவின் உயிருக்கு அபாயம் ஏற்படும் என்று ஒரு சமயம் ராஜேன் பாபுவிடம் அந்த ஜோஸ்யர் எச்சரித்து விட்டார்.  ராஜேன் பாபு திகிலடைந்தார்.  ஜோஸ்யரையே பீடா பரிகாரம் கேட்டார்.  ஜோஸ்யர் ஒரு 'தவீஸ்' (தாயத்து) அளித்தார்.  "இதைய நேரு தமது புஜத்தில் கட்டிக் கொண்டால், இது அவரைக் காக்கும்" என்று கூறினார்.


     இதற்குப்பின் நேரு பார்க்க வந்தபோது, ராஜேன் பாபு மிக்க அந்தரங்கமாய் அவருக்கு ஜோஸ்யரின் ச்சரிக்கையைத் தெரிவித்தார்.  தவீஸையும் வெளியே எடுத்து நேருவிடம் கொடுத்து அணியச் சொன்னார்.  நேரு சிரித்துக் கொண்டே அதை அப்பாலே போட்டார்.  விடை பெற்றார்.


     ராஜேன் பாபு மனம் சோரவில்லை. அந்த ஜோஸ்யரை மீண்டும் அழைத்தார்.  நடந்த விஷயத்தைச் சொன்னார்.  "இனி என்ன செய்வது?"  என்று கேட்டார்.  "பரவாயில்லை;  நான் இன்னொரு தவீஸ் தருகிறேன்.  அதை நேரு அணியவேண்டியதில்லை.  அவருக்காக வேறு யாராவது அணிந்தாலே போதும்.  அது நேருவைக் காப்பாற்றும்"  என்று ஜோஸ்யர் அபயம் அளித்தார்.


     மகா பக்தி சிரத்தையுடன் இரண்டாவது தவீஸைத் தம் புஜத்தில் ராஜேன் பாபு அணிந்து கொண்டார்.  ஒரு மாதத்துக்கெல்லாம் என்ன நடந்தது தெரியுமோ?  நாகபுரியில் நேருவை ஒரு ரிக் ஷாக்காரன் கொல்லப் பார்த்தான்.  நல்லவேளையாக அது பலிக்கவில்லை.


     இந்த விதமாக ராஷ்டிரபதி அணிந்த தவீஸ் பிரதம மந்திரியின் உயிரைக் காப்பாற்றியது!


 - படித்ததன் பகிர்வு. -
====================================================================================
      


     நாகபுரியில் நேருவை ஒரு ரிக் ஷாக்காரன் கொல்லப் பார்த்தான் என்பது எந்த அளவு நிஜமான தகவல் என்று தெரியவில்லை.  ஆனால் கட்டுரை ஆரம்பித்தது ஜோசியர்கள் எப்படி எல்லாம் பிழைப்பை வளர்த்துக் கொள்கிறார்கள் என்கிற தொனியில்...  படித்தபோது அது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டதோ என்று கூடத் தோன்றியது.


1963 - மஞ்சரி 

தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டியது இங்கே...

32 comments:

நெல்லைத் தமிழன் said...

த ம +1. ஆமாம் ராஜேந்திரப் ப்ரசாத் சொல்கிறார் என்று ஒரு தாயத்து கட்டிக்கொண்டால், எல்லோரும் நல்லபேர் எடுக்க ஆளுக்கொரு தாயத்தோடு வந்தால் நேரு எங்கேதான் கட்டிக்கொள்ள இயலும்?

உடம்பு சரியில்லாதவருக்கு, பழைய புத்தகங்களைப் புரட்டி, தூசிகள் மூக்கினுள் போய்த் தும்மலும் வந்திடப்போகுது.

G.M Balasubramaniam said...

எனக்கு ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது அதில் கோழையான ஜெமினி கணேசன் ஒரு தாயத்து அணிந்ததும் வீரமிக்கவர் ஆகிறார் ஒரு சமயம் அந்த தாயத்து தொலைந்த போது மீண்டும் கோழையாகிறார் இந்தக் கதை இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது என்று கூறவே நேரு ஒரு அக்னொஸ்டிக் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன்

ராஜி said...

தாயத்து நேருவையும் விடலியா?!

Geetha Sambasivam said...

@ஶ்ரீராம், உடம்புக்கு என்ன? கவனமாக இருக்கவும். இந்தத் தகவல் புதுசு!

KILLERGEE Devakottai said...

தாயத்து மகிமை கல்தோன்றி மண்தோன்றா காலத்தே உள்ளதோ...

நெல்லைத் தமிழன் said...

கீதா மேடம்--அது கே.ஜி.ஜி சார்னு நினைத்து எழுதினேன். ஸ்ரீராமாக இருந்தால், பழைய புத்தகங்களைப் புரட்டுவதால் தூசு மூலம் வரும் தும்மல்தான். இப்படி 1963ம் வருஷத்து மஞ்சரியைத் தேடிப்பிடித்துப் படித்து ஒரு இடுகை இட்டால்?

திண்டுக்கல் தனபாலன் said...

மூடநம்பிக்கை எல்லா காலத்திலும்...

காமாட்சி said...

மஞ்சரி என்றால் தேர்ந்தெடுத்த விஷயங்கள்தான் அதிலிருக்கும். தாயத்து எல்லாக் காலங்களிலும் முன்னணிதான் போலும். எதற்கும் மந்திரிச்சு ஒரு தாயத்தும் கட்டிக் கொண்டால் எல்லாம் ஸரியாகிவிடும் என்ற ஒரு பொதுவான அட்வைஸ் கொடுப்பவர்கள் இந்தக்காலத்திலும் உண்டு. நம்பினவர்களுக்குதான் இந்த விஷயங்கள் பலன் தரும். தவீஸ் என்றால் தாயத்தா. அன்புடன்

ஜீவி said...

பழைய விஷயம் என்றாலும் சுவாரஸ்யத்திற்குக் குறைச்சலில்லை.

ஜோஸ்ய நம்பிக்கைகளையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.

நேருவின் மீதான ராஜேந்திர பிரசாத்தின் அன்பு தான் எனக்குப் பிரதானமாகப் பட்டது. அது ஒரு காலம்.

கரந்தை ஜெயக்குமார் said...

நேரு மூட நம்பிக்கை அற்ற மனிதர் அல்லவா
தம+1

துரை செல்வராஜூ said...

ஓ.. இப்படியும் நடந்திருக்கிறதா?..

ஸ்ரீராம். said...

ஹா... ஹா... ஹா... நீங்கள் சொல்வதும் சரிதான் நெல்லைத்தமிழன்! எவ்வளவு தாயத்துகளைக் கட்டிக்கொள்ள முடியும்? மேலும் அவர் நாஸ்திகர் வேறு!

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்.. ஜெமினி மட்டும் அல்லாது வேறொரு நடிகரும் இதேபோல நடித்திருப்பதாக நினைவு!

ஸ்ரீராம். said...

வாங்க ராஜி.. எல்லாம் ஒரு அன்புதான்!

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா... எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. வீண் வதந்திகளை நம்பாதீர்கள்!! அது சரி, தம்பிக்கு உடம்பு சரியில்லை என்றதும் அதைப்பற்றி மட்டும் கவலை தெரிவித்து விட்டு பதிவு பற்றிக் கருத்துக் சொல்ல விட்டு விட்டீர்களே!!

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி... தாயத்து மட்டுமா?

ஸ்ரீராம். said...

@நெல்லைத்தமிழன்.. தூசு எனக்கும் ஆகாதுதான். ஆனால் என்ன செய்ய? இலக்கிய தாகம் எடுக்கிறது! எட்டு திக்கும் சென்று உங்களுக்கெல்லாம் அந்தப் பொக்கிஷங்களைக் கொடுக்க வேண்டுமே என்கிற கடமை உணர்ச்சி ஒருபக்கம் வாட்டுகிறது!

ஸ்ரீராம். said...

வாங்க டிடி.. மூடநம்பிக்கை எப்போ இல்லாதிருந்தது? எங்க அப்பா கூட கொஞ்ச காலம் தாயத்து கட்டியிருந்தார். துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து கொண்டு வருவோம். ஆனால் அப்புறம் அவர் அதைத் தொடரவில்லை!

ஸ்ரீராம். said...

வாங்க காமாட்சி அம்மா. தவீஸ்என்றால் தாயத்து என்று நானும் இதைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். ஆமாம் அம்மா... மஞ்சரி நல்ல தரமான பத்திரிக்கை.

ஸ்ரீராம். said...

வாங்க ஜீவி ஸார்.. நீங்கள் சொல்வதுபோல எனக்கும் ராஜேன் பாபுவுக்கு நேரு மேல் இருந்த அக்கறையும் அன்பும்தான் முதலில் மனதில் பட்டது.

ஸ்ரீராம். said...

வாங்க கரந்தை ஜெயக்குமார். ஆம், நேரு மூட நம்பிக்கைகள் இல்லாத மனிதர்.

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார்.. நீங்க நம்ப மாட்டீங்கன்னுதான் கீழே மூலத்தையும் சாட்சியாகக் கொடுத்திருக்கிறேன்! சும்மா தமாஷுக்குச் சொன்னேன். நன்றி ஸார், வருகைக்கும் கருத்துக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

அட சுவாரஸ்யமான தகவல். ஜோஸ்யர்கள் எல்லாக் காலத்திலும் பிழைப்பை நடத்துபவர்கள்..வியாபாரிகள்..ஆனால் பாபு என்ன ஒரு சின்சியர் டிவோட்டட் மனிதராக இருந்திருக்கிறார்...நேருவிடம்!!!!....அவர் அதைத் கடாசினாலும், இவர் விடாமல் அவரது உயிருக்காகத் தாயத்தைக் காட்டிக் கொண்டு...இப்படியும் உண்மையான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது வியக்க வைக்கிறது.ஜோஸ்யத்தை நம்பிய..சகோதரிகள், தோழிகள் என்றவர்களும்...இப்போதைய தமிழ்நாட்டு அரசியலும் நினைவுக்கு வந்துவிடுகிறதே....

கீதா

ஸ்ரீராம். said...

வாங்க கீதா.. அந்தத் தோழர்களையும் இந்தத் தோழிகளையும் இணைத்து ஒரே இடத்தில் சேர்த்து நினைவு கூர்வது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா? நியாயமா!

:))))

Bagawanjee KA said...

தாயத்தை இந்த பகவான்ஜீயே அணிந்து கொள்ள மாட்டார் நேருஜி அணிவாரா :)

ஸ்ரீராம். said...

வாங்க பகவான்ஜி... எம் ஜி ஆர் ஒரு படத்தில் "தாயத்து... தாயத்து.." என்று ஒரு பாடலுக்கு ஆடி நடித்திருப்பார். நினைவிருக்கிறதா?

கோமதி அரசு said...

இந்த விதமாக ராஷ்டிரபதி அணிந்த தவீஸ் பிரதம மந்திரியின் உயிரைக் காப்பாற்றியது!//

சில நம்பிக்கைகளை அவ்வளவு சீக்கிரம் உடத்துவிட முடியாது.
ரஜினி, எம். ஜி.அர். சிவாஜி போன்றோர் தாயத்து கட்டிக் கொண்டு நடித்து இருக்கிறார்கள்.
ஜீவிசார் சொனது போல் செய்தி பொய்யோ. மெய்யோ அதில் உள்ள அன்பு தான் பேசப்படுகிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாயத்து எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும் போலுள்ளது.

புலவர் இராமாநுசம் said...

இன்று பரிகாரம் செயயாத சீரியலே இல்லை! பகுத்தறிவின் வழி வந்த சன் டி.வி செய்யும் அநியாயம்!

விஜய் said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

Asokan Kuppusamy said...

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு மகிழ்ச்சி

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அறிவாளி நேருஜி அவர்களுக்கு
தாயத்து சம்பந்தம் இருக்காதே
இது என் கருத்து

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!