Saturday, July 15, 2017

அமர்நாத் யாத்ரீகர்களைக் காத்த சலீம்
1)  ஆச்சர்ய சேவை.  அதிசய சேவை.  உணர்ச்சிகரமான சேவை.  பாராட்டுகள் விஜய் ஜாதவ்.


2) இயற்கையைக் காக்க சேவை செய்யும் ஆட்டோ குமார்.


3)  நல்லவிதமாய்ச் செயல்படும் அரசுப் பள்ளிகளைப் பற்றிப் படித்தாலே ஏற்கெனவே படித்தது போலவே தோன்றும்.  இது புதுசு.  காட்டு யானைகள் நுழையும் கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி சாதனைகள் படைக்கிறது என்றால் அதைப்பற்றிச் சொல்ல வேண்டாமோ!  எங்கே இது? கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஒன்றியத்தில்..... 


4) சமூக வலைத்தளங்களினால் ஒரு நற்செயல்.  இழந்த 14,000 ரூபாயைத் திரும்பப் பெற்றார் திரு சுப்ரமணியன்.5)  சமயோஜிதம், விவேகம், தைரியம்....   இதுதான் அமர்நாத் யாத்ரீகர்களைக் காப்பாற்றிய சலீம் கபூர் ஷேக்


6)  "நான் தயாரித்த காகிதப் பைகளை, தி.நகர், மயிலாப்பூர் மாட வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் கொடுத்த போது, 'இதெல்லாம் வேண்டாம்மா' என்று அலட்சியமாக பேசுவர்.


   நான் அதை கண்டுகொள்ளாமல், காகிதப் பையின் முக்கியத்துவத்தை இரண்டு வரிகளில் கூறி, 'இதற்கு நீங்கள் பைசா தர வேண்டாம். சாமான் வாங்க வருபவர்களுக்கு இதில் பொருட்களை வைத்து இலவசமாகக் கொடுங்கள்' என்று கூறி கொடுப்பேன்; வாங்கி கொள்வர்...."

  பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும், மயிலாப்பூர் மாடவீதியைச் சேர்ந்த, 70 வயதான, கலா சேகர்.

 தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

20 comments:

KILLERGEE Devakottai said...

சவீம் கபூர் ஷேக் டாப் மனிதர்

கரந்தை ஜெயக்குமார் said...

சாதி மதம் கடந்த மனித நேயம்
சவீம் கபூர் போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்
தம ’1

துரை செல்வராஜூ said...

தஞ்சாவூர் கதம்பம் போல அருமை..

நெல்லைத் தமிழன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள். த ம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

விஜய் said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

மாதேவி said...

அனைவரின் பணியையும் போற்றுவோம்.

புலவர் இராமாநுசம் said...

அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி!

ஏகாந்தன் Aekaanthan ! said...

நல்ல மனிதர்களை அவ்வப்போது வெளிச்சத்துக்கு கொண்டுவருவதும் பாராட்டுவதும் நன்று.
அமர்நாத் யாத்ரா ஓட்டுநர் ஷேக் ஸலீம் கஃபூர் (Shiekh Saleem Gafoor) ஒரு அபூர்வ மனிதர்.
கடமையே தெய்வம் என்று வாழ்பவர். உயிர்கள்காத்த அவரது தீரச்செயலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சன்மானம் குறைவு.

விளையாட்டு வீரர்களுக்கு கோடி, 5 கோடி, 10 கோடி என்று அள்ளிவிட்டு மீடியா வெளிச்சத்தில் குளிக்கிறார்கள் நம்நாட்டில். அதுசரி, நமது பாலிவுட் வேஷதாரிகளுக்கு, ஏன் பிற கோடீஸ்வரர்களுக்கும்கூட, இந்த மாதிரி விஷயங்கள் கண்ணில்படுவதில்லையா, காதில் விழுவதில்லையா ..?

மனோ சாமிநாதன் said...

அருமையான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும்மழை

நிஷா said...

எந்த பிரச்சனை எனினும் அதிகளவு விமர்சிக்கப்படுவோரும் பாராட்டப்படுவோரும் முஸ்லிம்கள் தான் அல்லவா? தீவிர வாதம் முதல் , மழை வெள்ள உதவி, நிலச்சரிவு, பூகம்ப உதவி சுனாமி உதவி, இப்போது அமர்னாத் சலீம் உதவி என பிரச்சனைகள் நேரம் உதவுவோராயும் அவர்கள் தான் இருக்கின்றார்கள். பிரச்சனைகளாகவும் அவர்கள் தான் இருக்கின்றார்கள். மத்தளம் போல் இருபக்கமும் இடிபடுவது என்ன விதியோ?

Geetha Sambasivam said...

ஓரிரண்டு செய்திகளைத் தவிர்த்து மற்றவை ஏற்கெனவே அறிந்திருந்தாலும் பாராட்டுக்கு உரியவர்கள்! வாழ்த்துகள்.

ராஜி said...

பாசிட்டிவ் மனிதர்கள் பத்திய பதிவு அருமை.

டிரைவரின் சமயோசித புத்தியும், தைரியமுமே அத்தனை உயிர்களை காப்பாற்றியது. இங்கு மதம் பிரச்சனையில்லை. மதம் பிடித்த மனிதர்கள்தான் பிரச்சனை

Asokan Kuppusamy said...

அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

Thulasidharan V Thillaiakathu said...

1, 2 வியக்க வைக்கும் அற்புதமான மனிதர்கள்!!! 3 காரமடை செய்தி ஆஹா! சூப்பர் போட வைக்கிறது! 4. வாட்சப் வாழ்க!! 5. சலீம் பற்றி அறிந்திருந்தாலும்....எத்தனைமுறை அறிந்தாலும் அவர் செய்த செயல் மாபெரும் செயல் அல்லவா உயிர்களை அதுவும் தீவிரவாதிகளின் தாக்குதலி இருந்து காப்பாற்றுவது என்பது சாதாரண விஷயமா?..! ராயல் சல்யூட்!!! 6. லதா அவர்களைப் பாராட்டுவோம். இந்த வயதிலும் ப்ளாஸ்டிக் ஒழிக்க பேப்பர் பைகளை இனாமாகக் கொடுப்பதற்கு

ராமலக்ஷ்மி said...

போற்றுதலுக்குரியவர்கள்!

Bagawanjee KA said...

மனித நேயம் மதத்தை கடந்தது என்பதை நிரூபித்து விட்டார் சலீம் :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் கொண்ட இந்த மனிதர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

கோமதி அரசு said...

நல்ல மனதிநேய மனிதர்களை போற்றுவோம்.
வாழ்த்துக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!